கர்னாடக சங்கீத்தில் தமிழ் ஏன் புறக்கணிக்கப்படுகிறது?
தலைப்பை பார்த்ததும் சிந்துபைரவி படம் ஞாபகத்திற்கு வருகிறதா? விடயமும் அதில் வந்த சிந்துவின் கேள்விதான்?
பல சங்கீதமேடைகளில் தெலுங்குகீர்த்தனைகளைத்தவிர வேறு ஏதும் பாடுவதில்லை. அப்படிப் பாடினாலும் அவை துக்கடாக்களாத்தன் இருக்குமே தவிர ஒரு முழுமையான கீர்த்தனையாய் இராது. இந்த இசை ஜாம்பவாங்கள் அனைவரும் ஏதோ கர்னாடக சங்கீதம் தெலுங்கில் இருந்து பிறந்தது என எண்ணிக்கொண்டிரிக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல தமிழில் தான் அது முதலில் உருவானது பின்னர் கால் ஓட்ட்த்தில் அது தெலுங்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சிலர் சொல்லுகிறார்கள் தமிழில் போதிய பாடல்கள் இல்லையென்று ஐயா மேதாவிகளே நமது முண்டாசுக் கவிஞனின் பாடல்களே பல தலைமுறைக்கு போகும் அதனை விட நமது தேவாரதிருவாசகங்கள் பல நூறு தலைமுறைகளுக்கு போதும் பின் ஏன் நீங்கள் தமிழில் பாடாமல் தெரியாத மொழியில் பாடுகிறீர்கள்.
எனக்கு தெரிந்து ஒருமுறை கொழும்பில் சீர்காழி சிவசிதம்பரமும் பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதியும் மட்டும் முழுக்க முழுக்க தமிழில் பாடி சபையைமெய்மறக்கசெய்தார்கள்.கம்பன் விழா இசை வேள்வியில் திரு,ராஜ்குமார் பாரதி
பாடினார். சீர்காழி சிவசிதம்பரம் வேறு ஒரு நிகழ்ச்சியில் பாடினார். இதுவரை கம்பன் கழகம்( கன்னித் தமிழ் வளர்ப்பவர்கள்) ஒரு இசை வேள்விக்கேணும் சீர்காழி சிவசிதம்பரத்தை அழைக்கவில்லை. ராஜ்குமார் பாரதியும் ஒரே ஒரு தடவை மட்டும்தான்.
எனையோர் வழமைபோல் சுந்தரத் தெலுங்குக்கு அடிமையாகி தங்கள் தலைகளை மட்டும் ஆட்டி சபையை விட்டு மெல்ல மெல்ல வெளியேறினார்கள்
ஏன் இந்த அடிமைதனம்?
எமது முத்தமிழை ஒழிக்க பலர் பல்வேறு வடிவங்களில் அலைகிறார்கள் என்னை பொறுத்தவரை இவர்களிடமும் இருந்து எம் மொழியை காக்கவேண்டிய அவசியம் தேவை. சும்மா சினிமா படங்களின் தலைப்பை மாத்தசொல்லி போராடும் தமிழ்குடிதாங்கிகள் இதைப்பற்றி கவலைப்பட்டதாய் தெரியவில்லை. சில வேளை இது மேல்தட்டு மேல்ஜாதி மக்களின் துறை என நினைத்து சும்மா இருக்கிறார்களா?
இது பற்றியும் சற்று சிந்திபோம்.
ஸ்பெயினின் தங்க மகன் ரஃபெல் நடால் ஓய்வு பெற்றார்
-
மலகாவில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை போட்டியில் ஸ்பெயின் தோல்வி அடைந்ததை அடுத்து
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஓய்வு பெற்றார் டென்னிஸ் ஜாம்பாவன் களிமண் ராஜா
ரஃ...
23 hours ago
7 கருத்துக் கூறியவர்கள்:
இந்த நிலையில் சற்று மாற்றம் ஏற்படுகிறது.எனினும் இதை ஒழுங்குசெய்பவர்கள், பணம் கொடுப்பவர்கள் கேட்டுக் கொள்ளத்தவறக் கூடாது.பணத்தால் சாதிக்கமுடியாதது எதுவும் இல்லை.
பாரிசில் தெல்லிப்பளை மகாஜனா பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்த பம்பாய் ஜெயஸ்ரீ கச்சேரி வேண்டுகோளுக் கிணங்க தமிழ் அம்மன் பாடல்களே பாடினார்.
இதேவேளை வேற்று மொழிக் கீர்த்தனைகளையும் அதன் பொருள் அறிய முற்படுவோம். தியாகராஜ கீர்த்தனைகளும் புரிந்தால் பொருட் செறிவு மிக்கவை.
ஆகவே தமிழைச் சேர்ப்போம், அதே வேளை வேற்றுமொழியை விரட்டாதிருப்போம்.
பாரிஸ் கம்பன் விழாவில் பேசிய சுகி சிவம்...இந்த அவலங்களைக் குறிப்பிட்டு..தமிழ் தேவை அதற்காக வேற்றுமொழியை விரட்டுவோம் என்பது உடன்பாடில்லை. என்றார்.
அவருடன் சிறு இசை ரசனையுடையவன் (அறிவல்ல) என்றவகையில் நான் உடன்படுகிறேன்.
கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்.
தரவில்லையா?திறக்கவில்லையா? பணம் கொடுத்து ஒழுங்குசெய்வதை நிறுத்துங்கள்.
யாபரும் வழிக்கு வருவார்கள்.
வந்தியத்தேவன்,
இது நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வர்களின் கையிலேயே தங்கியுள்ளது என நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக, சென்ற வருடம் தமிழகத்தில் இருந்து O.S. அருண், நித்தியசிறீ போன்ற தமிழகத்தவர்கள் இங்கு ரொரன்ரோவிற்கு வந்திருந்த போது முழுப் பாடல்களும் தமிழ்ப் பாடல்களையே பாடினார்கள்[தேவாரம், பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் பாடல்கள்]. காரணம் நிகழ்ச்சி ஒழுங்காளர்கள் அவர்களுக்கு முதலிலேயே சொல்லிவிட்டார்கள். அதுபோல நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வோர் கண்டிப்பாகச் சொன்னால் வருபவர்கள் செய்வார்கள். செய்ய வேணும்.
சும்மா தமிழ் வளர்க்கிறோம் எண்ட பெயரிலை விளம்பரம் தேடுபவர்கள், பணம் கறக்க நினைக்கிறவர்கள் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தால் இப்படியான சிக்கல்கள் எழ வாய்ப்பிருக்கிறது என நினைக்கிறேன்.
/* பாரிசில் தெல்லிப்பளை மகாஜனா பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்த பம்பாய் ஜெயஸ்ரீ கச்சேரி வேண்டுகோளுக் கிணங்க தமிழ் அம்மன் பாடல்களே பாடினார்.*/
யோகன் அண்ணை,
தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவன் எண்ட வகையில் உங்களின் செய்தி மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்ள வைக்கிறது.
ஈழ தமிழ் இலக்கியத் துறையில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியின் பங்களிப்பும் கணிசமானது.
இங்கும் அதே பல்லவிதான்...புரியாத மொழியில் தான்..
ஜோகன் அண்ணா, வெற்றி மற்றும் தூயா வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//தமிழ் தேவை அதற்காக வேற்றுமொழியை விரட்டுவோம் என்பது உடன்பாடில்லை.//
எனக்கும் உடன்பாடில்லை. சில நல்ல சாகித்தியங்கள் தியாகராஜ கீர்த்தனைகளாகவும் முத்துசுவாமி தீட்சிதரின் பாடல்களாகவும் இருக்கின்றன. அவற்றைப் பாடலாம் அதே நேரம் முழுக்க முழுக்க வேற்றுமொழிக் கீர்த்தனைகளைப் பாடும் சிலரில் தான் எனக்கு கோபம்.
அத்துடன் ஜோகன் அண்ணா வெற்றி சொல்வது போல் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கட்டுப்படுத்தலாம். இங்கே பொதுவாக கம்பன் கழகத்தினர் தான் இசை வேள்வி என ஒவ்வொரு வருடமும் சில நாட்கள் நிகழ்ச்சி நடாத்துவார்கள். இவ்வேளைகளில் வெளிவருகின்ற தினக்குரல் தினகரன் போன்ற ஊடகங்களிலும் ஒரு முறை மல்லிகையிலும் தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என எழுதுவார்கள். அதற்க்கு விழா அமைப்பாளர்கள் ஓம் என தலையாட்டுவதுடன் சரி பின்னர். துக்கடா பாடல்களில் மட்டும் தமிழிசை. நான் இந்திய நாட்டுப் இசைப்பேரறிஞர்களை மட்டும் குறை சொல்ல வில்லை, நம் நாட்டு இசைஅறிஞர்களும் தெலுங்குப் பாடல்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களின் பெயர்க்ளை நான் குறிப்பிட விரும்பவில்லை.
வளார்ந்து வரும் கலைஞர்கள் கூட இந்த மாயைக்குள் விழுந்துவிடுகிறார்கள் என்பதுதான் வேதனை.
நிகழ்ச்சியை அமைப்பவர்கள்..பாடகர்களை அழைக்கையில் தமிழில் பாடுமாறு சொல்லியே அழைக்க வேண்டும். அந்த அடிப்படை அறிவு அவசியம். நடுவில் ஒன்றிரண்டு தெலுங்குப் பாட்டு பாடினால் பாடட்டும். ஆனால் நிகழ்ச்சி தமிழ் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். தமிழில் பாடினால்தான் காசு என்று சொன்னால் பாடி விட்டுப் போகிறார்கள்.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கையில்தான் இருக்கிறது. இங்கு வெலிங்டனிலும் பாம்பே ஜெயச்ரி கச்சேரி நடந்தது. தமிழ்ப்பாடல்கள் மிகக்குறைவே. கடைசியில் ரசிகர்கள் கேட்ட போதுதான் கச்சேரியில் நிறைய தமிழ்ப்பாடல்கள் பாடினார். ஆனால் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அவ்வளவாகத்தமிழ்தெரியாதே. எல்லாரும் பம்பாயிலும் தில்லியிலும் இருந்தவர்கள். ரசிகர்கள் தமிழில் பாட சொல்லி வற்புறுத்தினாலொழிய இந்நிலை மாறப்போவதில்லை.
பாடுவபவர்களுக்கு கேட்போர் இருக்கும் வரை தான் அவர்களுக்கு மதிப்பு. சென்னையில் கானா சபாக்களில் தெலுங்கு கீர்த்தனைகளை பாடி வாழுபவர்களை பாட அழைக்கும் போது, எங்கள் எதிர்பார்ப்புகளை தெரிவிப்பது அவசியம். எதை பாடுவது சரி என்று வாதிப்பதை விடுத்து, எங்கு பாடுகிறார்கள், எப்படியான பார்வையாளர்கள் என்பதை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.
"நுகர்வோரே சந்தையை நிர்ணயிப்பவர்கள், உற்பத்தியாளர்கள் தான் விலையயும் தரத்தையும் நிர்ணயிப்பவர்கள்" இது இதற்கும் பொருந்தும்.
My 2 Cents
Post a Comment