கலைக்கு பொன்விழா
இன்று உலக நாயகன் கலைஞானி பத்மஸ்ரீ கமலஹாசன் திரையுலகிற்க்கு "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே" என களத்தூர் கண்ணம்மா மூலம் காலடி எடுத்து வைத்து 50 வருடங்கள்.
திரையுலகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கே இந்த பெருமை கிடைக்கும். அந்த வகையில் கமலுக்கு தன்னுடைய 56ஆவது வயதில் இந்தப் பெருமை கிடைத்துள்ளது.
இலங்கையிலுள்ள வானொலிகள் தொலைக்காட்சிகள் கமலுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் செய்யும்போது அவரது பாடல்களையும் படங்களையும் ஒளிபரப்பி வியாபாரம் செய்கின்ற இந்திய தொலைக்காட்சிகள் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை. சிலவேளை அவர் எந்தக் கழகத்திலும் இல்லாத காரணமோ.
ரம்பாவுக்கும் சுயம்வரம்
பல ஆண்டுகளாகவே மாப்பிள்ளைத் தேடிக்கொண்டிருக்கும் ரம்பாவும் ஹிந்தி நடிகை ராக்கி ஷாவந்த் போல் தனக்கும் சுயம்வரம் நடத்தி மணமகனைத் தெரிவு செய்யப்போகின்றாராம்.
இந்தச் சுயம்வரத்தை ஒரு தனியார் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புச் செய்யவிருக்கபோவதாகவும் தகவல்.
தன்னுடைய சமகாலத்தவர்களாகிய மீனா, சங்கவி எல்லோரும் திருமணம் முடித்துவிட்டார்கள் ஆனால் தனக்கு இன்னமும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் ரம்பாவின் தொடைகூட இளைத்துவிட்டதாம்.
வீட்டில் வாஸ்து சாந்தி எல்லாம் செய்தார்களாம் அதன் பின்னர் தன் சுயம்வரம் நடத்த அவரது குடும்பத்தவர்கள் தீர்மானித்தார்களாம்.
ம்ம்ம் யாரந்த அதிர்ஷ்டசாலியோ தைரியம் உள்ள வலைப்பதிவாளர்கள் களத்தில் இறங்கலாமே!!!
இலங்கைத் தொலைபேசிகள்
இலங்கையில் நிலையான தொலைபேசிகள் கையடக்கத் தொலைபேசிகள் என மொத்தமாக ஒரு கோடியே 50 லட்சம் உபயோகப்படுத்தப்படுகின்றன என்ற தகவலை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அத்துடன் கையடக்கத் தொலைபேசி தொழில்நுட்பத்தில் இலங்கை உலக நாடுகள் அனைத்தையும் முந்தி நிற்கிறதாகவும், ஆயினும் செய்மதித் தொடர்பாடல்களை பயன்படுத்துவதில் வெகுவாகப் பின் நிற்பதாகவும் சொல்கின்றார்கள்.
அதே நேரம் அண்மையில் வெறும் 171 நாட்களை கடந்த ஒரு கையடக்கத் தொலைபேசி வழங்கும் நிறுவனம் ஒன்று தாங்கள் இந்த குறுகிய காலத்தில் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றிருப்பதாக விளம்பரம் செய்கிறது. நம்பமுடியவில்லை ஏனென்றால் பெரும்பாலானவர்கள் அந்த சேவையப் பாவிப்பதுபோல் தெரியவில்லை. சிலவேளை சிம் இலவசமாக கொடுத்ததால் அனைவரும் வாங்கி பொக்கெட்டில் வைத்திருக்கிறார்களோ தெரியாது.
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு
மிகவும் குறுகிய காலத்தில் நாங்கள் ஏற்பாடு செய்த இலங்கை வலைப்பதிவர் சந்திப்புக்கு கிடைத்த வரவேற்பும் பங்குகொள்ள விருப்பம் தெரிவித்த நண்பர்களின் எண்ணிக்கையும் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கின்றது. நன்றிகள் வலைப்பதிவு நண்பர்களே.
நிகழ்ச்சி நிரல் தயாரித்துக்கொண்டிருக்கின்றோம். இதுவரை எம்முடன் தொடர்புகொள்ளாத நண்பர்கள் அல்லது தங்கள் வருகையை உறுதிப்படுத்தாத நண்பர்கள் உடனடியாக எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் வருகையை வைத்துத்தான் சில விடயங்களை நாங்கள் சரியாக ஒழுங்குபடுத்தவேண்டும்.
நண்பர்களே இந்த சந்திப்பின் வெற்றி உங்கள் கைகளில் தான் இருக்கிறது.
கொழும்பு வைத்தியசாலையில் பேய்
எனக்கு வந்த மின்னஞ்சலில் வந்த செய்தி இது. சில நாட்களாக கொழும்பு அரசாங்க வைத்தியசாலையில் ஐசியூவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு குறிப்பிட்ட கட்டிலில் காலை பதினொரு மணிக்கு அந்த நோயாளி எந்தவித மருத்துவ காரணங்களும் இன்றி இறந்துவிடுகிறார்.
இந்த சம்பவம் வைத்தியர்களுக்கும் ஏனையவர்களுக்கும் பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது. அவர்கள் இது ஒரு அமானுஷ்ய சம்பவம் என அவர்கள் எண்ணினார்கள்.
ஆகவே என்ன நடக்கின்றது என்பதனை ஒருமுறை துப்பறிந்து கண்டறியவேண்டும் என வைத்தியர்கள் குழு தீர்மானித்தது. ஆகவே அவர்கள் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு 10 நிமிடங்கள் முன்னர் அந்த கட்டிலை தீவிரமாக கண்காணிக்க தொடங்கினார்கள்.
கொஞ்சம் பயந்த சுவாவம் உள்ளவர்கள் வெளியே சென்றுவிட்டார்கள் ஏனையவர்கள் ஒருவரை ஒருவர் பிடித்தபடியும் கையில் மரக்கட்டைகளை வைத்தபடியும் சிலர் பிரார்த்தனையுடனும் கலக்கமாக காணப்பட்டார்கள்.
நேரம் சரியாக 11 மணி அடித்தது. அனைவரும் கட்டிலையே உற்று நோக்க அங்கே?!!!.....
அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை ஊகித்துச் சொல்லுங்கள் விடையை இன்றிரவு சொல்கின்றேன். அதுவரை அருந்ததீயை ரசியுங்கள்
Box Office- July 30- 2025
-
Box Office: Thalaivan Thalaivi, Mareesan, Maha Avatar Narashimha,
6 Day Collection- Mahaavathar Narasimha- All Language- 36 Cr (Approx) Hindi
and Telugu ...
16 hours ago
9 கருத்துக் கூறியவர்கள்:
வணக்கம் வந்தி......
தங்களின் பதிவு அற்புதம்....... ஒரு பதிவில் எத்தனை விடயங்கள்.
அதுசரி ரம்பாவின் தொடை இழைத்துவிட்டதா????? இதுவெல்லாம் எவ்வளவு முக்கியம். இதைத்தான் முதலில் சொல்லியிருக்க வேண்டும்.
அதுசரி அருந்ததியின் நல்ல படம் ஒன்றும் கிடைக்கவில்லையோ!!!! இந்தப் படத்தைப் பார்த்தால் வேறு உணர்வுதான் ஏற்படும்..... ஆனாலும், நல்லாயிருக்கு.
அதுசரி; திரையுலகில் பொன் விழாக்கணும் கமலஹாசன் குறித்து தங்களிடமிருந்து முழுமையான பதிவை எதிர்பார்திருந்தேன்.... ஏனென்றால், நீங்கள் கமலின் பரம விசிறியாயிற்றே..... என்ன நடந்தது.
ஏக்கத்தில் ரம்பாவின் தொடைகூட இளைத்துவிட்டதாம்.
இதுக்கு என்னால் ஏதும் உதவிகள் செய்ய முடியுமா? எப்படி அந்த சுயம்வரத்தில் கலநந்த கொள்வது. எனக்கு மட்டும் சொல்லவும்.
அந்த தனியார் தொலைபேசி நிறுவனம் இலவசமா தாறாங்களே என்று 2 சிம் வாங்கினேன். அப்புறம் அதை பயன்படுத்துறப்ப தான் தெரிஞ்சது அதை பயன்படுத்துறது சொந்த செலவுல சூனியம் செய்றதுக்கு சமன் என்று, அவங்க எண்ணிக்கைல என் 2 சிம்மும் இருக்குமோ?
யாரந்த புதுக் கடைக்காரர்????
இன்று நான் சைவம் ... ஹொட் அன்ட் சவர் சூப்பில சிக்கன் பீசை ஏன் போட்டீர்கள்? அருந்ததீ படத்தில முழுசா தோலோட பாத்தது.. உரிச்சா இப்பிடித்தான் இருக்குமோ? நல்லா வைக்கிறாங்கய்யா சூப்பு...
நீங்க ரெண்டு சிம்தானே வச்சிருக்கீங்க .. மில்லியனில அரைவாசி எயாட்டெல் மனேச்சற்ற மனிசி குசினிக்க உள்ளி டப்பாவுக்க போட்டு வைச்சிருக்கு..
மருதமூரான் வருகைக்கு நன்றிகள். ரம்பாவின் தொடை இளைத்ததை கிண்டல் செய்கிறீர்களே இலங்கையின் ஒரு பிரபல பத்திரிகை குஷ்பு கர்ப்பம் என்ற செய்தியை முற்பக்கத்தில் போட்டார்களே அவர்களை என்ன செய்வதாக உத்தேசம்.
//யோ (Yoga) said...
இதுக்கு என்னால் ஏதும் உதவிகள் செய்ய முடியுமா? எப்படி அந்த சுயம்வரத்தில் கலநந்த கொள்வது. எனக்கு மட்டும் சொல்லவும்.//
இதுபற்றிய தகவல்களைத் தான் நானும் தேடுகின்றேன் இன்னமும் கிடைக்கவில்லை.
//அந்த தனியார் தொலைபேசி நிறுவனம் இலவசமா தாறாங்களே என்று 2 சிம் வாங்கினேன். அப்புறம் அதை பயன்படுத்துறப்ப தான் தெரிஞ்சது அதை பயன்படுத்துறது சொந்த செலவுல சூனியம் செய்றதுக்கு சமன் என்று, அவங்க எண்ணிக்கைல என் 2 சிம்மும் இருக்குமோ?//
உங்கடை இரண்டு என்ரை இரண்டு என 4 சிம் இங்கேயே இருக்கிறது. இதாலை ஒரு பிரயோசனமுமில்லை. விரைவில் கடையைப்பூட்டுவார்கள்.
//Kiruthikan Kumarasamy said...
யாரந்த புதுக் கடைக்காரர்????//
ஒரு இந்தியன் கொம்பனி. கண்டுபிடிக்கவும்?(டன்டன டன்டன் டனடன டன்டன்)
///புல்லட் said...
இன்று நான் சைவம் ... ஹொட் அன்ட் சவர் சூப்பில சிக்கன் பீசை ஏன் போட்டீர்கள்? அருந்ததீ படத்தில முழுசா தோலோட பாத்தது.. உரிச்சா இப்பிடித்தான் இருக்குமோ? நல்லா வைக்கிறாங்கய்யா சூப்பு... //
சரி சரி எப்போ அடுத்த சனிக்கிழமை உங்களுக்கு சிக்கன் பீஸ் தரலாம். அருந்ததியை இதைவிட இளையதளபதியின் வேட்டைக்காரனில் உரிக்கிறார்களாம்.
//நீங்க ரெண்டு சிம்தானே வச்சிருக்கீங்க .. மில்லியனில அரைவாசி எயாட்டெல் மனேச்சற்ற மனிசி குசினிக்க உள்ளி டப்பாவுக்க போட்டு வைச்சிருக்கு..//
அப்படித்தான் இருக்கும் எதற்க்கும் குசினியைச் செக் பண்ணினால் சரி.
இந்திய தொலைக்காட்சிகள் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை. //
கண்டிக்க வேண்டிய விஷயம்..
அவர்கள் வெட்கப் படவேண்டிய விஷயம்..
//ரம்பாவுக்கும் சுயம்வரம் & ரம்பாவின் தொடைகூட இளைத்துவிட்டதாம்.//
நாம் வேதனைப்பட வேண்டிய விஷயம்..
//உங்கடை இரண்டு என்ரை இரண்டு என 4 சிம் இங்கேயே இருக்கிறது//
நீங்களுமா? நாங்க ஓசியிலேயே எடுத்து பாவிச்சிட்டு பத்திரமா வீசிட்டம்..
//இதைவிட இளையதளபதியின் வேட்டைக்காரனில் உரிக்கிறார்களாம்.//
அப்ப வேட்டைக்காரன் ஒரு இருபது நாளாவது ஓடும்.. ;)
Post a Comment