ராக்கிங் எனப்படும் பகிடிவதையால் இலங்கையிலும் இந்தியாவிலும் வரப்பிரகாஷ், நாவரசு என்ற இரண்டு இளம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். வரப்பிரகாசின் மரணத்தின் பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகங்களில் குறைந்திருந்த பகிடி வதை மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது.
இரண்டு நாட்கள் முன்னர் ஒரு நண்பரைச் சந்தித்தேன், அவர் இலங்கையின் பிரபல பல்கலைக் கழகம் ஒன்றிற்குத் தெரிவாகியுள்ளார். அவர் அங்கே தற்போது நடக்கும் கொடுமைகளை கூறும் போது பகிடி வதை இன்னும் நிறுத்தப்படவில்லையோ என எண்ணத் தோன்றுகின்றது.
இதில் கொடுமை என்னவென்றால் பெரும்பான்மை சிங்கள மாணவர்கள் பகிடிவதை செய்வதில்லை, எங்கடையாட்கள் தான் பட்ட கஷ்டம் துயரங்கள் போதாது என்று மீண்டும் இந்த காட்டுமிராண்டித் தனத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
முதலாம் ஆண்டு மாணவர்களின் கூச்சத்தையும், புதிய சூழலிற்க்கு பழக்கப்படுவதையும் போக்கவே இந்தப் பகிடி வதையை ஆரம்பித்தார்கள், ஆனால் இன்று மாணவர்களை அடிப்பதும், தூசணங்களால் ஏசுவதும், மாணவிகளுடன் தரம் குறைந்து நடப்பதும் பகிடி வதை என்ற பெயரில் அரங்கேறுகின்றது.
மண் நிலத்தில் அமர்ந்து ஒரு பார்சல் உணவை அப்படியே உண்ணச் சொல்கின்றார்கள், சைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அசைவம் திணிக்கிறார்கள். நவீன தொழில்நுட்பம் காரணமாக விடுமுறையில் தங்கள் சொந்தப் பிரதேசத்தில் நிற்கும் மூத்த மாணவர்கள் தொலைபேசியில் தொல்லை கொடுக்கின்றார்கள். இப்படிப் பல பிரச்சனைகள் மீண்டும் தொடர்கின்றது.
இதிலும் இன்னொரு கொடுமை மூத்த ஆண் மாணவர்கள் ஆண், பெண் என இருபாலரையும் பகிடி வதைக்கு உற்படுத்தலாம், ஆனால் மூத்த பெண் மாணவிகள், புதிய பெண்களை மட்டும் தான் பகிடி வதை செய்யமுடியும். ஏனென்றால் மூத்த பெண்கள் இளைய ஆண்களைப் பகிடி வதை செய்தால் அது பெண்ணாதிக்கமாம். செய்வதோ காட்டுமிராண்டித் தனம் இதில் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம்.
இன்றைய காலத்தில் பல பல்கலைக் கழகங்களில் நிறுத்தப்பட்ட பகிடி வதையை இவர்கள் மட்டும் தான் இப்போ தொடங்கியுள்ளார்கள். அதிலும் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான் இதில் மும்முரமாக நிற்கின்றார்களாம். எத்தனையோ துன்பங்களையும் மனக் கஸ்டங்களையும் பட்டவர்கள் இன்று அதனைத் தங்கள் சகோதரர்கள் மேல் காட்டுகின்றார்கள் போலத் தெரிகின்றது.
நானும் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்புப் படித்தவன். எங்கள் மூத்த மாணவர்கள் எங்களுக்கு வரவேற்பு விழா(Welcome Party) கொடுத்த போது கூச்சம், அச்சம் போன்றவை தெளிய, சிறிய பத்திரிகை ஒன்றில் ஆடுதல், ஒரே குளிர்பானப்போத்தலில் இரண்டு குழல்கள் போட்டு ஒரு ஆணும் பெண்ணும் குடித்தல்( அந்த குழல்கள் மெழுகால் அடைக்கப்பட்டிருக்கும்), பலூன் ஒன்றை இரண்டு பேர் நெஞ்சுக்கிடையில் வைத்து நெஞ்சினால் அதனை உடைத்தல், போன்ற சில முஸ்பாத்தியான விளையாட்டுகளை விளையாடவிட்டு எம்மிடையே பிணைப்பை ஏற்படுத்தினார்கள்.
மேற்குலகில் இல்லாத இந்தக் கொடுகை தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இலங்கையிலும் இந்தியாவிலும் வேர் விட்டுப் படர்ந்துள்ளது. இலங்கையில் சில காலம் இல்லாமல் இருந்தது. மீண்டும் துளிர்விட ஆரம்பித்துள்ளது முளையிலே கிள்ளி எறியாவிட்டால் இன்னொரு வரப்பிரகாஸ் உருவாகக்கூடும்.
அல்கராஸை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்
-
அவுஸ்திரேலிய ஓபன் 2025 10வது நாள் ஆட்டத்தில் ஆடவர் ஒற்றையர் காலிறுதி
ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை எதிர்த்து சேர்பியாவின் நோவக்
ஜோகோவிச் எதிர...
3 hours ago
34 கருத்துக் கூறியவர்கள்:
ராகிங் செய்த சீனியர்கள் நல்ல நண்பர்களாக இருந்ததும் உண்டு. ஏனென்றால் மனம் குன்றிப்போகும் வதை இருந்ததில்லை.
'சீனியரைப்பார்த்தால் வணக்கம் சொல்லணும்' இது மாதிரியான சீண்டல்களே இருந்தது.
நான் நேரே சொல்லுிுறேன்..
மொறட்டுவையில் மிகவும் கடுமையக லெக்சரர்ஸ் இருப்பதால் அங்கே எதுவும் செய்யமுடியாது.. எளிய பரதேசி சீனியர் சிலர் , இப்போது கோயிலுக்கு வரச்சொல்லி வதைக்கிறார்கள்.. உந்த நாய்கள் படிக்கும் காலத்தில் எள்ளளவுக்கும் பிரயோசனமற்றவர்கள் என்று சொல்லியும் புரியாமல் juniorsபோகிறார்கள்.. பேராதனை யாழ்ப்பாணம் சொல்லொணாக் கொடுமைகள்..
வவுனியா கிழக்கு பிரதேச மற்றும் மன்னார் மாணவர்களில் பலர் ( சில சிறந்த ஒழுக்கமுடையவர்களையும் கண்டுளளேன்..) மனித தன்மையற்று நடந்து கொள்கிறார்கள் என நான் எந்த பயமுமின்ற கூறுவேன்.. ஏனெனில் நானும் அந்த நாய்களால் அனுபவப்பட்டவன்.. இதையும் பிரதேசவாதம் என்றார்களானால் உதுகள் பன்றிகள்..
தமிழ் சமூகத்தின் சாபங்களில் இதுவும் ஒன்று.. எத்தனை உயிர்ப்பலி நேர்ந்தும் திருந்த மாட்டார்களா?
புல்லட்டின் கோபம் மிகத் தெளிவாக அவர் பட்ட கஷ்ட கொடிய அனுபவங்களைக் காட்டுகிறது..
கஷ்டப்பட்டு பல்கலைக்கு வரும் மாணவர்களின் எதிர்காலம் பற்றி இந்த அரக்கர்கள் கொஞ்சமும் யோசிக்க மாட்டார்களா?
கொடுமைகள்..
http://kavikilavan.blogspot.com
இங்கே பேராதனையிலும் இதே நிலைமைதான். சகோதர மொழி மாணவர்களை விட நம்மவர்கள்தான் இதில் அதிகம் ஈடுபடுகின்றனர். இவர்கள் அதிகமுள்ள ஒரு குறிப்பிட்ட விடுதிக்கு கீழே உள்ள பாதையில் செல்ல மாணவிகள் ரொம்ப பயப்படுவர். காரணம் நம்மவர்கள் மிகவும் அசிங்கமான வார்த்தைகளில் மாணவிகளை வர்ணிப்பதாலாகும். பகிடிவதை தேவைதான், ஆனால் அது ஒரு வரைமுறைக்குள் இருக்க வேண்டும்.
//உந்த நாய்கள் படிக்கும் காலத்தில் எள்ளளவுக்கும் பிரயோசனமற்றவர்கள் என்று சொல்லியும் புரியாமல் juniorsபோகிறார்கள்.. பேராதனை யாழ்ப்பாணம் சொல்லொணாக் கொடுமைகள்..
//வவுனியா கிழக்கு பிரதேச மற்றும் மன்னார் மாணவர்களில் பலர் ( சில சிறந்த ஒழுக்கமுடையவர்களையும் கண்டுளளேன்..) மனித தன்மையற்று நடந்து கொள்கிறார்கள் என நான் எந்த பயமுமின்ற கூறுவேன்.. ஏனெனில் நானும் அந்த நாய்களால் அனுபவப்பட்டவன்.. இதையும் பிரதேசவாதம் என்றார்களானால் உதுகள் பன்றிகள்..
புல்லட்டினை நானும் ஆமோதிக்கின்றேன்.. நல்ல பதிவு வந்தியத்தேவன்..
தமது மனதில் உள்ள வக்கிரங்களைத் தீர்க்க இலகுவான வழி தான் இந்த ராகிங்.. மனதில் உள்ள பொறாமைகளை நேரடியாகப் போக்க வழியில்லாமல் இந்த ராகிங் என்னும் வழியைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் இந்த மன நோயாளிகள்..
மொறட்டுவைப் பல்கலைக்கழக்திலும் பார்க்க பேராதனையில் நடக்கும் கீழ்தரங்கள் ஏராளம்.. என்னால் நிட்சயமாகச் சொல்லமுடியும் இப்படியான கீழ்கத்தரமான ராகிங் செய்யும் மூடர்களால் எந்தவிதமான பயனும் யூனியர்களுக்குக் கிடைக்கப்போவதில்லை..
//இங்கே பேராதனையிலும் இதே நிலைமைதான். சகோதர மொழி மாணவர்களை விட நம்மவர்கள்தான் இதில் அதிகம் ஈடுபடுகின்றனர். இவர்கள் அதிகமுள்ள ஒரு குறிப்பிட்ட விடுதிக்கு கீழே உள்ள பாதையில் செல்ல மாணவிகள் ரொம்ப பயப்படுவர். காரணம் நம்மவர்கள் மிகவும் அசிங்கமான வார்த்தைகளில் மாணவிகளை வர்ணிப்பதாலாகும். பகிடிவதை தேவைதான், ஆனால் அது ஒரு வரைமுறைக்குள் இருக்க வேண்டும்.
ராகிங் அது ஒரு வரைமுறைக்குள் இருக்க வேண்டும்...!
நான் ராகிங்குக்கு யார் கூப்பிட்டாலும் போவதில்லை.. ஆனால் எதிர்பாரதா விதமாக ரே ஒரு முறை மாத்திரம் அகப்பட்டுவிட்டென்.. அதுவே எனக்குள ஒரு காயத்தை ஏற்படுத்தி விட்டது.. இரு சீனியர்கள் என்னை வெள்ளவத்தை ப்ரெஞச் கொனர் ( தற்போதைய நோலிமிட்) முன்னால் வைத்து கன்னத்தில் அடித்துவிட்டார்கள். தூசணத்தால் பலமாக கத்த சொன்ன போது மறுத்து விடவெ இது நடந்தது.. என்னால் திருப்பி எதுவுமு் செய்யமுடிய வில்லை.. ஆனால் ஆத்திம் ஆத்திரமாக வந்து இன்று வரையும் குமுறிக்கொண்டுள்ளேன்.. உதற்கும் கண்ணை கட்டி முதுகில் சுடுவதற்கும் எதுவித வித்தியாசத்தையும் நான் காணவில்லை..
ராகிங் செயபவர்களால் படிக்கும் காலங்களில் பிரயோசனம் என்பார்கள.. ஆனால் எனக்கு அடித்தவர்கள் 4 5 பாடங்கள் கையில் வாங்கி கஷ்டப்பட்டுதான் பாஸ் பண்ணினர்கள். 5 சத பிரயோசனம் இல்லாத குடி கூத்தடிப்புக்கு கூட்டணியாக வரக்கூடிய கீழ்க்குல மக்களே ராகிங்கில் ஈடுபடுவதால்தைரியமாக எதிர்க்கலாம்.. பொலீசில் மறையிடலாம்.. நர்வாகத்தில் முறையடலாம்.. ஒரு மட்டையும் ராகர்ஸ் ஆல் புடுங்கமுடியாது..
இது எனக்கு புரியும் பொது காலம் கடந்து விட்டிருந்தது.. இதனால் புதியதாக பல்கலைக்கு போவபர்களுக்கு என்னாலியன்ற அட்வைசுகளை வழங்க தயாராயுள்ளேன்..
ஓகோ.. இதுக்குப் பிறகு தான் புல்லட் ஜிம்முக்குப் போய் நெஞ்சை நிமிர்த்தி கைகளை கும்மென்றாக்கி இருக்கிறாரோ?
இனி யாராவது எங்கள் புல்லட்டை ராகிங் செய்து பாருங்கோ பார்ப்போம்.. ;)
இனி யாராவது எங்கள் புல்லட்டை ராகிங் செய்து பாருங்கோ பார்ப்போம்.. ;)
கடந்த இரண்டு நாளாக புல்லட்டுக்கு நடந்து கொண்டிருப்பது ராகிங் இலும் மோசமானது; கேவலமானது.
அந்தக் கொடூரத்தின் கோபங்கள் புல்லட்டின் பின்னூட்டத்திலே எதிரொலிப்பதைக் காண்கின்றேன். :)
சிங்கள மாணவர்களுக்கு ராகிங் குறைவு என்பதும் ஒப்பீட்டளவில் மிகவும் உண்மையே. என்னிடமே பல சிங்கள மாணவர்கள் இது குறித்து கேட்டிருக்கிறார்கள்.
//5 சத பிரயோசனம் இல்லாத குடி கூத்தடிப்புக்கு கூட்டணியாக வரக்கூடிய கீழ்க்குல மக்களே ராகிங்கில் ஈடுபடுவதால்தைரியமாக எதிர்க்கலாம்..//
நிச்சயமான உண்மை.... ராகிங் போகாத மாணவர்கள் யாரும் அந்த காரணத்தினால் கல்விரீதியா பின்னாளில் பாதிக்கப்பட்டாதா இதுவரை இல்லை.
{இங்கு இன்னொரு விசயம் புல்லெட்டும் ஆதிரையும் எனக்கு நேரடி சீனியர்கள்... :)}
நானும் கேள்விப் பட்டேன்...
சில விடயங்களை கேட்கும் போது வெறுப்பாகவும் இருந்தது.
ஆபாசமான சில விடயங்களையும் கேள்விப் பட்டேன்...
தங்களுக்கு ததாங்களே ஆப்பு வைத்க் கொள்வதில் தமிழர்களுக்கு நிகர் தமிழர்களே...
(இதுக்கு தான் நான் பல்கலைக்கழகம் போகிற அளவுக்கு பரீட்சை எழுதிறதில்ல...)
ஃபேஸ் புக்கில் என்னிலும் இளைய ஹாட்லியில் படித்து மொறட்டுவவுக்கு தேர்வான ஒருவருடன் சின்னதாக ஒரு சண்டை நடந்தது.... அது எங்கே ஆரம்பித்து எங்கே போனது என்று விரைவில் பதிவிடுகிறேன்... ஆதிரை அண்ணா மற்றும் பால்குடி, அடையாளம் கண்டால் புல்லட் அந்த விஷயம் பற்றித் தெளிவுபடுத்துங்கள்...
வந்தி அண்ணா,
நீங்கள் பட்டம் பெற்ற அந்தத் தனியார் கல்வி நிலையம் எது.. உங்களுக்குத் தரப்பட்ட ராகிங்குக்காக இன்னொரு முறை படிக்க நான் ரெடி..
இது பற்றி நான் பதிவிட நினைத்திருந்தேன்...ஆனால் தற்போது பகிடிவதை குறைந்திருக்கும் என்று நினைத்து மறந்துவிட்டிருந்தேன்...ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால்...? ஹ்ம்ம்ம்
நான் கொழும்பு பல்கலைக்கழகம் (சில நாட்கள் தான்,) சரியான மோசம். சிங்களவர்கள் கூட தன்மையாக நடந்து கொண்டார்கள். ஆனால் நம்மவர்கள்....எமக்கு நடந்த வதையைப் பார்த்து சிங்கள பெற்றோர்களே கதிகலங்கினர்....
இஞ்ச வெளிநாடுகளில் நீங்கள் சொன்னமாதிரி...அஜால் குஜால் ஒன்று கூடல் தான். ஆனாலும் இந்தியர்கள் சிலர் பகிடிவதையை தொடக்கி அட்டகாசம் செய்து, பல்கலைக்கழகத்துக்கு தெரிந்து எச்சரிக்கப்பட்டதால்....அடங்கி இருக்கிறார்கள்..
என்னுடைய நண்பர்கள் சிலர் ஏற்கனவே பல்கலைக்கழகத்திற்குப் போய்விட்டார்கள் (எனக்கு இன்னும் தொடங்கவில்லை) மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் படிக்கிற என்னுடைய நண்பர்கள் சொன்ன விஷயமும் முன்பு பின்னூட்டங்களில் எழுதப்பட்டிருந்த விஷயமும் ஒனடறுதான் ஆனால் கொழும்புப் பொடியங்களோட பெரிசா சேட்டை விடுறதில்லையாம். பாவம் ஊரில இருந்து வாற பொடியங்களைத் தான் அங்க வா இங்க வா எண்டு ஃபோன் போட்டுக் கூப்பிட்டு கரச்சல் குடுக்குறாங்களாம்.
புதிய மாணவர்கள் இது போன்ற கொடுமைகளை சகித்தக்கொண்டு இருக்க வேண்டாம். இவர்கள் எல்லாம் மனோவியாதியால் அவதிப்படுபவர்கள் - இதுவும் ஒருவகை சைகோ தான். பயப்படாமல் பொலிஸில் முறையிடவேண்டும். தமிழ் மாணவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது தமிழ் இனத்துக்கே கேடு. அடித்தல் (assault) என்பது சட்டப்படிக்குற்றம், அத்தோடு தூசனம் பேசுதல், அவமானப்படுத்துதல், உளவியல் ரீதியான துன்புறுத்தல் எல்லாமே குற்றம் தான். அளவு மீறுகின்ற பட்சத்தில் அவை கொலைமுயற்சியாகவும் கருதப்படும். மாணவர்கள் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மொறட்டுவையில் மிகக் கடுமையான நிர்வாகம் இருப்பதனால்தான் பகிடிவதை குறைவு என்பதையும் எங்கட தமிழ் பொடியள்தான் சிங்களவர்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இதுகளுக்கு முன்னுக்கு நிற்கிறார்கள் என்பதையும் இதில் அதிகமாகப் பாதிக்கப்படுவது வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே என்பதையும் அதிகமாக ஈடுபடும் சிரேஷ்ட மாணவர்களும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே என்பதையும் அறியக்கூடியதாக இருக்கிறது.
கீத், தங்களுடைய பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
//சின்ன அம்மிணி said...
ராகிங் செய்த சீனியர்கள் நல்ல நண்பர்களாக இருந்ததும் உண்டு. ஏனென்றால் மனம் குன்றிப்போகும் வதை இருந்ததில்லை.
'சீனியரைப்பார்த்தால் வணக்கம் சொல்லணும்' இது மாதிரியான சீண்டல்களே இருந்தது.//
அது ஒரு காலம் சின்ன அம்மிணி ஆனால் இப்போ சீனியர்களை மதிப்பதைவிட அவர்கள் மேல் கோபத்தையும் ஒரு வெறுப்பையும் வரச் செய்கின்றார்கள். நீங்கள் சொல்வது போல் அடுத்த வருடம் ராகிங் செய்த சீனீயரும் ராகிங் பண்ணுப்பட்ட ஜூனியரும் சேர்ந்து அடுத்த ஜூனியருக்கு ராகிங் செய்வார்கள்.
//புல்லட் said...
நான் நேரே சொல்லுிுறேன்..
மொறட்டுவையில் மிகவும் கடுமையக லெக்சரர்ஸ் இருப்பதால் அங்கே எதுவும் செய்யமுடியாது.. எளிய பரதேசி சீனியர் சிலர் , இப்போது கோயிலுக்கு வரச்சொல்லி வதைக்கிறார்கள்.. உந்த நாய்கள் படிக்கும் காலத்தில் எள்ளளவுக்கும் பிரயோசனமற்றவர்கள் என்று சொல்லியும் புரியாமல் juniorsபோகிறார்கள்.. பேராதனை யாழ்ப்பாணம் சொல்லொணாக் கொடுமைகள்..
//
புல்லட்டின் வார்த்தைப் பிரயோகங்களில் இருந்த அவர் பட்ட வேதனைகள் புரிகின்றது. ராகிங் செய்த சீனியர்கள் பலர் உருப்படாமல் போன கதையையும் நாம் அறிவோம். மொரட்டுவை கொழும்பு பல்கலைக் கழகங்களில் இப்போது பகிடிவதை இல்லையென்றே சொல்லலாம்.
இனியும் திருந்தவில்லையென்றால் அவர்களை காட்டுமிராண்டிகள் என அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
// LOSHAN said...
தமிழ் சமூகத்தின் சாபங்களில் இதுவும் ஒன்று.. எத்தனை உயிர்ப்பலி நேர்ந்தும் திருந்த மாட்டார்களா? //
இல்லை லோஷன் இவர்கள் திருந்தவதாக இல்லை காரணம் சிலரிடம் இருக்கும் மிருக குணம் வெளிவரும் இடங்களில் பல்கலைக் கழகமும் ஒன்று. பகிடிவதைக் கொடுமையால் படிப்பையே இடைநிருத்தியவர்களும் உண்டு.
//கஷ்டப்பட்டு பல்கலைக்கு வரும் மாணவர்களின் எதிர்காலம் பற்றி இந்த அரக்கர்கள் கொஞ்சமும் யோசிக்க மாட்டார்களா?//
ஆமாம் எத்தனையோ வருடக் கனவை ஒழுங்காக நிறைவேற்ற விடுகிறார்கள் இல்லை. சிலருக்கு வீட்டில் பொருளாதார ரீதியான கஸ்டங்கள் இருந்தும் கஸ்டப்பட்டு படித்து படிக்க வந்தால் பகிடிவதைக் கொடுமையாலும் அவரைப் பொருளாதார ரீதியாக சீண்டுவதாலும் மன அழுத்ததிற்க்கு உள்ளாக்குகின்றார்கள். இதுவே பகிடிவதை பண்ணப்பட்ட ஒருவர் மீண்டும் அடுத்தவருடம் தன் ஜூனியர்களை தான் பட்ட கஸ்டம் படட்டும் என பகிடிவதை செய்யசொல்கின்றது.
// Yalavan said...
கொடுமைகள்..//
அதே தான் வேறு வார்த்தைகள் இல்லை.
//யோ வாய்ஸ் said...
இங்கே பேராதனையிலும் இதே நிலைமைதான். சகோதர மொழி மாணவர்களை விட நம்மவர்கள்தான் இதில் அதிகம் ஈடுபடுகின்றனர். //
ஆமாம் யோ சகோதரமொழி மாணவர்கள் அவர்களின் கூச்சத்தைப்போக்க ஆடுதல் பாடுதல் போன்ற சிலவற்றைச் செய்வார்கள் மற்றும் படி அவர்கள் ஆபாசமாகவோ இல்லை பாலியல் ரீதியாகவோ தொந்தரவு செய்ததாக இதுவரை அறியவில்லை. ஆனால் நம்மவர்கள் தான் இப்போது மோசம்.
// சுபானு said...
தமது மனதில் உள்ள வக்கிரங்களைத் தீர்க்க இலகுவான வழி தான் இந்த ராகிங்.. மனதில் உள்ள பொறாமைகளை நேரடியாகப் போக்க வழியில்லாமல் இந்த ராகிங் என்னும் வழியைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் இந்த மன நோயாளிகள்..//
சரியாகச் சொன்னீர்கள். இவர்கள் மனநோயாளிகள் எனப் பொருள் படித்தான் நான் தலையங்கள் வைக்க யோசித்தேன் ஆனால் உங்களைப்போன்ற முன்னாள் பல்கலைக் கழக மாணவர்களையும் குறிக்கும் என்பதால் செய்யவில்லை.
//புல்லட் said...
இது எனக்கு புரியும் பொது காலம் கடந்து விட்டிருந்தது.. இதனால் புதியதாக பல்கலைக்கு போவபர்களுக்கு என்னாலியன்ற அட்வைசுகளை வழங்க தயாராயுள்ளேன்..//
புதியவர்களுக்கு உங்கள் அறிவுரைகளை ஒரு பதிவின் மூலம் வழங்குங்கள்.
இதில் என்ன கொடுமை என்றால் என் மேல் ஒரே பம்பல் பதிவுகள் போடுகின்றார் காத்திரமாக எதுவும் எழுதவில்லை என சில குற்றச்சாட்டுகள் வந்தன ஆனால் இந்தப் பதிவிற்க்கு வந்த கூட்டத்தின் எண்ணிக்கை ஏனைய பம்பல்ப் பதிவுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு.
//LOSHAN said...
ஓகோ.. இதுக்குப் பிறகு தான் புல்லட் ஜிம்முக்குப் போய் நெஞ்சை நிமிர்த்தி கைகளை கும்மென்றாக்கி இருக்கிறாரோ?//
அதே தான் எல்லாம் கண்கெட்டபின்னர் சூரிய நமஸ்காரம் கதைதான்.
//ஆதிரை said...
கடந்த இரண்டு நாளாக புல்லட்டுக்கு நடந்து கொண்டிருப்பது ராகிங் இலும் மோசமானது; கேவலமானது.
அந்தக் கொடூரத்தின் கோபங்கள் புல்லட்டின் பின்னூட்டத்திலே எதிரொலிப்பதைக் காண்கின்றேன். :)//
என்ன பிரச்சனை என்று எமக்கும் சொன்னால் நாமும் எதாவது உதவி செய்யலாம். பாமன் கடை பஸ் பிரச்சனைக்கு யாரும் பிரச்சனை எடுத்திருக்கமாட்டினம், அப்படி எடுத்திருந்தால் அவர்கள் பிரச்சனைக்குரிய ஆட்களாக இருப்பினம்.
//நிமல்-NiMaL said...
சிங்கள மாணவர்களுக்கு ராகிங் குறைவு என்பதும் ஒப்பீட்டளவில் மிகவும் உண்மையே. என்னிடமே பல சிங்கள மாணவர்கள் இது குறித்து கேட்டிருக்கிறார்கள்.//
உண்மை. யோ வாய்ஸ்க்கு கொடுத்த பதில் தான் உங்களுக்கும். எத்தனையோ சிங்கள மாணவர்கள் ராகிங் கொடுமையில் இருந்து தமிழ் மாணவர்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.
//இங்கு இன்னொரு விசயம் புல்லெட்டும் ஆதிரையும் எனக்கு நேரடி சீனியர்கள்... :)//
அவர்கள் உங்களை ராகிங் செய்தார்களா? இல்லையா?
//கனககோபி said...
தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்க் கொள்வதில் தமிழர்களுக்கு நிகர் தமிழர்களே...//
சரியான பதில். நிறைய உள்குத்துகள் இருக்கின்றது.
//இதுக்கு தான் நான் பல்கலைக்கழகம் போகிற அளவுக்கு பரீட்சை எழுதிறதில்ல...//
நானும் இந்தப் பட்டியலில் இணைகின்றேன்.
//Kiruthikan Kumarasamy said...
ஃபேஸ் புக்கில் என்னிலும் இளைய ஹாட்லியில் படித்து மொறட்டுவவுக்கு தேர்வான ஒருவருடன் சின்னதாக ஒரு சண்டை நடந்தது.... அது எங்கே ஆரம்பித்து எங்கே போனது என்று விரைவில் பதிவிடுகிறேன்..//
கீத் அதனை எழுதுங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றோம். ஹாட்லி மாணவர்கள் மேலும் ஒரு சிலர் குறைபட்டுக்கொண்டார்கள். இன்னும் விபரமாக எழுதலாம் ஆனால் என் நண்பர்கள் பார்த்தால் நான் அவ்வளவுதான் காரணம் பாதிக்கப்பட்டவர்களும் என் நட்பு வட்டத்தில் இருக்கின்றார்கள். பாதிப்பு ஏற்படுத்தியவர்களும் அதே வட்டாரத்தில் இருக்கின்றார்கள்.
//வந்தி அண்ணா,
நீங்கள் பட்டம் பெற்ற அந்தத் தனியார் கல்வி நிலையம் எது.. உங்களுக்குத் தரப்பட்ட ராகிங்குக்காக இன்னொரு முறை படிக்க நான் ரெடி..//
அதெல்லாம் சொல்ல முடியாது. இன்னொரு பென்சில் ராகிங்கூட நடந்தது. கொஞ்சம் கிளுகிளுப்பானது எழுதினால் இந்தப் பதிவு 18+ என்ற வகைக்குள் அடங்கிவிடும் அதனால் சென்சார்.
// ’டொன்’ லீ said...
இது பற்றி நான் பதிவிட நினைத்திருந்தேன்...//
பதிவிடுங்கள் காத்திருக்கின்றோம்,
//நான் கொழும்பு பல்கலைக்கழகம் (சில நாட்கள் தான்,) சரியான மோசம். சிங்களவர்கள் கூட தன்மையாக நடந்து கொண்டார்கள். ஆனால் நம்மவர்கள்....எமக்கு நடந்த வதையைப் பார்த்து சிங்கள பெற்றோர்களே கதிகலங்கினர்....//
உம் இதைத்தான் பலரும் சொல்கின்றார்கள்.
//இஞ்ச வெளிநாடுகளில் நீங்கள் சொன்னமாதிரி...அஜால் குஜால் ஒன்று கூடல் தான். ஆனாலும் இந்தியர்கள் சிலர் பகிடிவதையை தொடக்கி அட்டகாசம் செய்து, பல்கலைக்கழகத்துக்கு தெரிந்து எச்சரிக்கப்பட்டதால்....அடங்கி இருக்கிறார்கள்..//
அதே தான், தமிழர்களும் இந்தியர்களும் பல பகிடிவதை அனுபவங்களைச் சந்தித்தும் திருந்தவில்லை.
//என்.கே.அஷோக்பரன் said...
ஆனால் கொழும்புப் பொடியங்களோட பெரிசா சேட்டை விடுறதில்லையாம். பாவம் ஊரில இருந்து வாற பொடியங்களைத் தான் அங்க வா இங்க வா எண்டு ஃபோன் போட்டுக் கூப்பிட்டு கரச்சல் குடுக்குறாங்களாம். //
உண்மைதான் ஆனால் சிலவேளை கொழும்புப் பக்கம் இருந்து ஒரு அப்பாவி மாட்டுப்பட்டால் அவ்வளவுதான் ரின் கட்டிவிடுவார்கள்.
//புதிய மாணவர்கள் இது போன்ற கொடுமைகளை சகித்தக்கொண்டு இருக்க வேண்டாம். இவர்கள் எல்லாம் மனோவியாதியால் அவதிப்படுபவர்கள் - இதுவும் ஒருவகை சைகோ தான். பயப்படாமல் பொலிஸில் முறையிடவேண்டும். தமிழ் மாணவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது தமிழ் இனத்துக்கே கேடு. அடித்தல் (assault) என்பது சட்டப்படிக்குற்றம், அத்தோடு தூசனம் பேசுதல், அவமானப்படுத்துதல், உளவியல் ரீதியான துன்புறுத்தல் எல்லாமே குற்றம் தான். அளவு மீறுகின்ற பட்சத்தில் அவை கொலைமுயற்சியாகவும் கருதப்படும். மாணவர்கள் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.//
நல்ல ஆழமான கருத்துகள். சட்ட நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் பெரும்பாலும் மாணவர் சீனியர்களின் நன்மை கருதிச் செய்வதில்லை. பூனைக்கு ஒருத்தன் மணி கட்டினாலும் போது மொத்தப்பேரும் அடங்கிப்போவார்கள்.
//பால்குடி said...
மொறட்டுவையில் மிகக் கடுமையான நிர்வாகம் இருப்பதனால்தான் பகிடிவதை குறைவு என்பதையும் எங்கட தமிழ் பொடியள்தான் சிங்களவர்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இதுகளுக்கு முன்னுக்கு நிற்கிறார்கள் என்பதையும் இதில் அதிகமாகப் பாதிக்கப்படுவது வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே என்பதையும் அதிகமாக ஈடுபடும் சிரேஷ்ட மாணவர்களும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே என்பதையும் அறியக்கூடியதாக இருக்கிறது.//
பால்குடி உங்கள் உயரத்தைப் பார்த்தே சீனியர்கள் மிரண்டிருப்பார்கள். அனைவரும் ஒரே கருத்தைத் தான் ஒருமிப்பாகச் சொல்கின்றீர்கள். பார்ப்போம் யார் பூனைக்கு மணி கட்டுகின்றீர்கள் என.
நல்ல கருத்துக்கள் உங்கள் வேதனைகள் எனக்கும் இருக்கு !!
நானும் ஒரு பல்கலையில் வேலை செய்கின்றேன்.
முக்கியமான பிரச்சனை இம்முறை நன்றே வாங்கியவர்கள் (தற்போது புலம்பினாலும் ) தன்னுடன் நின்று போகட்டும் என்று யோசிக்காமல் அடுத்த முறை குடுக்கிறார்களே.
இதுதான் பிரச்சனையே.
ஏலுமென்றால் பார்ப்போம் Batch Meeting போட்டு எனி இந்த batch இல் யாரும் குடுக்க மாட்டோம் என்று சத்தியம் பண்ணி தரட்டும். கடைசி வரை நடக்காது நண்பரே !!!!
எத்தனை அட்வைஸ் செய்தும் திருந்த மாட்டார்கள் இந்த தமிழ் மாணவர் சமுதாயம்.
//
ஏனென்றால் மூத்த பெண்கள் இளைய ஆண்களைப் பகிடி வதை செய்தால் அது பெண்ணாதிக்கமாம்.//
குடுக்கிறார்கள் ஆனால் வக்கிரம் இல்லாமல் !!!
வேலை செய்யும் நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்க போனால் அது அரசியல் ஆகி , குறிப்பாக இந்த மாணவர் ஒன்றியம் தலையிட்டு விரிவுரையாளர்களையே மட்டம் தட்டி விடுகிறதே. அதனால் யாரும் ( குறிப்பாக தமிழ் விரிவுரையாளர்கள்) இந்த ராகிங் விஷயத்தில் இறங்குவதில்லை. நல்ல அனுபவங்கள் தான் இதற்கு காரணம்.
ஆனாலும் கிடைக்கும் தகவல்கள் கொண்டு ஒரளவுக்கு எதாவது செய்ய முயற்சி செய்வது உண்டு.
அப்புறம் எதாவது திக்கு முக்கா செய்ய போனால் மாணவர் ஒன்றியம் கடிதம் அனுப்புகின்றது உபவேந்தருக்கு, இந்த விரிவுரையாளரால் இந்த மாணவனின் கல்விக்கு இடையூறு வந்தால் அதற்கு பல்கலைக்கழகம் தான் பொறுப்பு கூற வேண்டும் என்று. அப்புறம் நாங்கள் தமிழ் என்றதும் உபவேந்தர் கூட்டத்தில் சொல்லுவார் எனி அப்படி ஒன்றும் செய்யதையும் என்று. ( நான் எனது சொந்த அனுபவத்தில் சொல்லுகிறேன்) . அப்புறம் என்ன தான் செய்யலாம்.
சிலர் விரிவுரையாளர்கள் மீது பழி போடுவது உண்டு, நான் ஒரு பெரும்பான்மை இன விரிவுரையாளர் என்றாலும் பரவாய் இல்லை. தொழிலுக்கே ஆபத்து வரும் விதத்தில் அரசியல் ஆடுகின்றதே..
யாரும் மீது பழி போடுவது வீண் வேலை. சொந்தமாக சிந்திச்சு ஒவ்வொரு மாணவனும் உறுதி கொண்டால் அது இந்த கணமே அற்று போய் விடும். அதுதான் நடக்காதே :(
எனது நண்பர் ஒருவர் பல்கலைக் கழகத்தில் இருக்கிறார் அண்மையில் சந்தித்தேன் அவரது இரு முழங்கால்களும் காயமாக இருந்தது என்ன என்று கேட்டேன் ஒவ்வொரு நாளும் காலையில் கிரவல் தரையில் முழங்காலில் ஓட வேண்டுமாம். என்று சொன்னார். அவர் அங்கே நடக்கும் பகிடி வதைகளைச் சொல்லிவிட்டு சொன்னார் பல்கலை கழகத்துக்கு ஏன் போனோம் என்று தோன்றுகின்றதாம் என்று.
இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது நல்லதே.
பகிடிவதையால் மாணவர் சமூகம் படும் அவஸ்த்தைப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கின்றது, இதனை தடுத்து நிறுத்த முடியாமல் இருப்பது வேதனையே!
கடந்த 21 ஜூலை 2009 இல் "களுத்துறை கல்வியற் கல்லூரியில் பகிடிவதை எனும் பெயரில் மனித சித்திரவதை" எனும் தலைப்பில் கட்டுரையொன்றைப் பதிவு செய்திருந்தேன்.
மீள் வாசிப்புக்கு: http://kalamm.blogspot.com/2009/07/blog-post_21.html
"மீண்டும் துளிர்க்கும் விஷச் செடி - பகிடிவதை" அருமை பாராட்டுக்கள்.
வந்தி, சர்ச்சைக்குரிய பதிவு, நன்றாக எழுதியுள்ளீர்கள்.
நானும் மூன்று மாதங்கள் இந்த பகிடி வதையை அனுபவித்தவன் என்ற வகையில்,
இது ஒரு மன நோய் தான். தங்கள் ஆளுமையால் பிறரை கவரமுடியாதவர்கள்,
வக்கிரமாக , கட்டாயப்படுத்தி , தங்களின் கீழ்த்தரமான இச்சைகளை திணிப்பது மட்டுமே இங்கு நடக்கிறது.
ஏன் தமிழ் மாணவர்களுக்கு மட்டும் அதீத உணர்வு இருக்கிறது என்று யாராவது சமூகவியலாளர்கள் ஆய்வு செய்யலாம். ஒருவேளை ஆயுத பின்னணி , வன்மம் நிறைந்த காட்ச்சிகள் /அனுபவங்கள் இப்படியான மனநிலைக்கு மாற்றியிருக்கலாம்.
என்ன கொடுமை என்றால் இது போன்ற மனப்பிறழ்வு அடைந்தவர்களே முன் நின்று பகிடி வதைகளை நடத்துவதால் மற்றைய மாணவர்கள் தமக்கு ஏன் சோலி என்று விலகிவிடுகிறார்கள். அப்படி விலகி போகிரவர்களால் தான் உள்ளிருந்தே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
Post a Comment