இன்றைக்கு ஸ்ரீலங்காவிலை விடுமுறை நாள். ஒவ்வொரு மாதமும் வருகின்ற பூரணை(பறுவம்) நாட்கள் இங்கே போயா என்ற பெயரால் அழைக்கப்பட்டு அரசாங்க, வங்கி, வர்த்தக விடுமுறையாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. காரணம் வைகாசிப் பூரணையில் கெளதம புத்தர் அவர்கள் ஞானம் பெற்றதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொருமாத பூரணையும் பெளத்தர்களால் மத ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
இன்றையதினத்தில் மதுபானக் கடைகளும் இறைச்சிக்கடைகளும் தியேட்டர்களும் மூடப்படும். ஆனால் மதுப்பிரியர்களும் இறைச்சிப் பிரியர்களும் முதல்நாளே வாங்கி வைத்துவிடுவார்கள். பொதுவாக பெளத்தர்களில் அறியா வயசுக் குழந்தைகளும், சகலதும் அனுபவித்து ஓய்ந்த முதியவர்களும் மட்டும் விகாரைகளுக்கு வழிபாட்டுக்குச் செல்வார்கள். இளைஞர்களை விகாரையில் காண்பது அரிதாகும்.
இந்த விடுமுறையால் இலங்கையில் வாழும் இந்து, இஸ்லாமிய, கிறீஸ்தவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. ஒரு நாள் வீட்டில் இருந்து தொலைகாட்சி பார்ப்பது அல்லது ரோட்டில் கிரிக்கெட் விளையாடுவது இதனைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாது.
கெளதம புத்தர் பூரணை தினத்தில் ஞானம் அடைந்த பின்னர் எத்தனையோ பூரணைகள் வந்தன வருகின்றன ஆனால் புத்தர் வழிவந்தவர்கள் பலர் ஞானம் அடைவதாகக் காணவில்லை.
கொழும்பு வலைப்பதிவர் சந்திப்பு
இரு நாட்களுக்கு முன்னர் வலையுலக டுமீல் தம்பி புல்லட்டையும் தம்பி ஆதிரையையும் (கடலேறி) பிரபல உணவகம் ஒன்றின் முன்னால் சந்தித்தேன். விரைவில் இலங்கை வலைப்பதிவாளர்களை ஒருங்கிணைத்து ஒரு சந்திப்பை நடத்திவிடவேண்டுமென்பதில் புல்லட் உறுதியுடன் இருந்தார்.
இலங்கைப் பதிவர் என்பதனை விட கொழும்புப் பதிவர் என கூறுவது பொருத்தமாக இருக்கும் என தீர்மானித்தோம். காரணம் இலங்கைப் பதிவர் என்றால் இலங்கையிலிருக்கும் பதிவர்கள் அனைவரையும் குறிப்பிடுவதுபோலாகும். ஆகவே கொழும்பிலிருக்கும் பதிவர்கள் சந்திப்பாக இதனை நடத்த முடிவுசெய்யப்பட்டது. ஆனால் வசதியிருந்தால் ஏனையோரும் கலந்துகொள்ளலாம்.
காலம், இடம் என்பன ஒரு சில பதிவர்களுடன் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்படும். இந்தமாதத்தின் மூன்றாவது அல்லது நான்காவது ஞாயிறாக இருக்ககூடும். கிட்டத்தட்ட 50 பேருக்கு மேல் கொழும்பிலிருந்து பதிவு எழுதுகின்றார்கள். அதில் பலர் தங்களை எந்த திரட்டிகளிலும் இணைக்காதபடியால் அவர்களைப் பற்றி பலருக்குத் தெரியாமல் இருக்கிறது.
இந்த சந்திப்பு பற்றி மேலதிக விபரங்களை புல்லட் விரைவில் வெளியிடுவார்.
சிறுகுறிப்பு : புல்லட்டின் பதிவுகள் போலவே அவரும் புன்னகையுடன் காணப்பட்டார். பார்க்கும்போதே எதையும் தாங்கும் இதயம் இருப்பது தெரிந்தது. இல்லையென்றால் வில்லுக்கு முதல் நாள் காட்சிக்கு செல்வாரா. ஆதிரை மிகவும் அமைதியாக காணப்பட்டார். சிலவேளைகளில் நான் படித்த பாடசாலையிலே படித்தவர் என்பதால் என்னைப் போல் அமைதியாக இருக்கின்றாரோ தெரியவில்லை.
மானாட மயிலாட
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊடகத்துறை நண்பன் ஒருவரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் மானாட மயிலாட நாட்டிய தாரகைகள் சிலர் பங்குபற்றிய நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஊடகத்தின் ஏனைய சில நிகழ்ச்சிகளுக்கும் முன்னர் சென்றிருந்தபடியால் அவர்கள் சொதப்பமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் ஆறுமணிக்கே மண்டபத்திற்க்கு நானும் நண்பரும் சென்றுவிட்டோம். ஆறரை மணிக்குத் தொடங்கவேண்டிய நிகழ்ச்சி 7மணி 15 நிமிடத்தில் தான் தொடங்கியது.
ஏற்கனவே கதிரேசன் மண்டபத்தின் மேடை நடன நிகழ்ச்சிகளுக்கு அவ்வளவு காணது. அதிலும் அன்றைக்கு மேடைக்கு மேல் மேடை ஒன்றைப்போட்டு நாலு சிறிய தூண்களையும் சில வண்ண விளக்குகளுடன் அமைத்திருந்தார்கள். அந்த மேடையை அறிவிப்பாளர் பிரமாண்டம் என்னவே எனக்கு விளங்கிவிட்டது. சொந்தச் செலவில் ஆப்புத்தான் என்று.
ஒரு நம்மவர்களின் நடனம் அடுத்து ஒரு மானட மயிலாடக் கலைஞர்களின் நடனம். அதிலும் நம்மவர்கள் சிலம்பாட்டம் படத்தின் வைச்சுக்கவா உன்னை மட்டும் பாடலுக்கு ஆடியது ஆபாசத்தின் உச்சம் எனலாம். அமர்ந்திருந்தவர்கள் பலர் முகம் சுளித்தார்கள்.
அகால நேரத்தில் உலாவருவது சிக்கல் என்பதால் இடைவேளை வரை மட்டும் நிகழ்ச்சி பார்த்தோம். சன் மியூசிக் சுகுணா, தர்சினி, கிருத்திகா, நேத்ரன் மற்றும் ராஜ்கமல் ஆகியோர் வந்திருந்தார்கள். அழைப்பிதழிலும் விளம்பரத்திலும் போட்டிருந்த ஒரு சிலர் வரவில்லை.
நேத்ரன் நன்றாக ஆடினார். கிருத்திகாவும் ஆடினார். தர்சினி ஓரளவு ஆடினார். ஏற்கனவே மானாட மயிலாடவில் முதல் சுற்றுடன் வெளியேறிய சுகுணா தான் வெளியேறியது சரி என்பதை தன் ஆட்டத்தின் மூலம் நிரூபித்தார்.
ராஜ்கமல் கேம்ஸ் ஷோ செய்கின்றேன் என கிச்சுகிச்சு மூட்டினார். சில இடங்களில் கொஞ்சம் ஏ தரமாக பேசினார்.
வழக்கமாக கதிரேசன் மண்டபத்தில் நிகழ்ச்சி என்றால் மண்டபம் நிறைந்து வழியும் அரைவாசி கூட நிறையவில்லை. இதிலிருந்தே நிகழ்ச்சியின் தரத்தை அறிந்துகொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியின் சோகத்தை மறக்க நண்பர் என்னை பாகிஸ்தான் இலங்கை அணிகள் விளையாடும் ரி20 ஆட்டத்திற்க்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்துள்ளார்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
18 hours ago
22 கருத்துக் கூறியவர்கள்:
ஆனால் புத்தர் வழிவந்தவர்கள் பலர் ஞானம் அடைவதாகக் காணவில்லை.
// இப்படிக் கதைத்துக்கொண்டிருந்தால் விரைவில் உங்களுக்கு ஞானம் கிடைக்கும்..ஹிஹி
உங்கட சிறுகுறிப்பு செய்த வேலை: இனி நான் அந்த இமேஜை மெயின்டெயின் பண்ண சிரிச்சிட்டல்லோ இருக்கோணும்..
நீங்கள் அமைதியோ? இருக்கட்டும் பிறகு கவனிச்சுக் கொள்ளுறன்.. சந்திப்பு முடிஞ்சதும் உங்களுக்கு தனிய ஒரு ஸ்பெசல் கவர் இருக்கு...
கொத்து( ஹிஹி) விளக்கா இருக்கிற நயனும் வந்தாங்ளா விழாவுக்கு? அப்ப இந்த ஜென்ம சாபகல்யத்த அடைஞ்சாச்சு...
உப்படியான சோக்களுக்கு பாகும் போது கைகாவலா பாய் தலகாணி கொண்டு போகணும்.. ஓவரா வதைச்சாங்கன்னா விறுவிறுன்னு முன்னுக்கு போய் மேடைக்கு கீழ பாய விரிச்சு படுத்துடனும் ...மைக்க வாங்கி பெரிசா கொட்டாவி விடணும்..
சந்திப்பம்...
//ஆதிரை மிகவும் அமைதியாக காணப்பட்டார். என்னைப் போல் அமைதியாக இருக்கின்றாரோ தெரியவில்லை.
இத்துடன், இதைச் சொன்னதும் வந்திதான்.
என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.
//இரு நாட்களுக்கு முன்னர் வலையுலக டுமீல் தம்பி புல்லட்டையும் தம்பி ஆதிரையையும் (கடலேறி) பிரபல உணவகம் ஒன்றின் முன்னால் சந்தித்தேன். விரைவில் இலங்கை வலைப்பதிவாளர்களை ஒருங்கிணைத்து ஒரு சந்திப்பை நடத்திவிடவேண்டுமென்பதில் புல்லட் உறுதியுடன் இருந்தார்.///
வாழ்த்துகள் நண்பர்களே
ம்ம்ம்ம்....எல்லாம் சரி..குத்துவிளக்காக இருந்த நயனுக்கு என்ன ஆச்சு என்பதைப் பற்றி சொல்லவே இல்லையே....!
வந்தியண்ணா... ஆதிரை சும்மா உங்களைக் கடிக்கிறார்.. ஆள் பாக்கத்தான் பூனை, பாஞ்சா புலி..அச்சச்சோ..அப்பிடி சொல்லக்கூடாதோ.. பாஞ்சா சிங்கம்
இலங்கைப்பதிவர் சந்திப்பு அவசியமே. ஏற்பாடுகளை செய்யும் நண்பர்களுக்கு நன்றிகள்...
இலங்கைப் பதிவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுவது நல்லதென நினைக்கிறேன். வர முடிந்தவர்கள் வருவார்கள் இல்லையா...
@கீத் குமாரசாமி
//ஆதிரை சும்மா உங்களைக் கடிக்கிறார்... ஆள் பாக்கத்தான் பூனை, பாஞ்சா புலி..அச்சச்சோ..அப்பிடி சொல்லக்கூடாதோ.. பாஞ்சா சிங்கம்
புலி உறுமும்...
சிங்கம் கர்ச்சிக்கும்...
அப்போ... கடிப்பது???
ம்ம்ம்... நாய் கடிக்கும்
புல்லட் உங்கள் பின்னூட்டத்தை வாசித்து சிரித்ததில் வெளியிட மறந்துபோனேன்
// புல்லட் said...
இப்படிக் கதைத்துக்கொண்டிருந்தால் விரைவில் உங்களுக்கு ஞானம் கிடைக்கும்..ஹிஹி//
இன்றைக்கு இராமகிருஷ்ணமிசனில் சுகி சிவம் அவர்கள் தன் சொற்பொழிவில் இதனை இவ்வாறு குறிப்பிட்டார்.
"புத்தரைப் பற்றி இலங்கை மக்களுக்குத் தெரியாது. இந்த உலகத்தில் அரசியலைத் துறந்து ஞானத்துக்கு வந்தவர் புத்தர் ஆனால் ஞானத்தை துறந்து அரசியல் செய்யவது ஆபத்தானது " என்றார்.
//உங்கட சிறுகுறிப்பு செய்த வேலை: இனி நான் அந்த இமேஜை மெயின்டெயின் பண்ண சிரிச்சிட்டல்லோ இருக்கோணும்..//
அது அப்படியே இருந்தால் நீங்கள் இன்னும் இளமையாகத் தெரிவீர்கள்.
//நீங்கள் அமைதியோ? இருக்கட்டும் பிறகு கவனிச்சுக் கொள்ளுறன்.. சந்திப்பு முடிஞ்சதும் உங்களுக்கு தனிய ஒரு ஸ்பெசல் கவர் இருக்கு...//
கவரிலை எப்படியும் ஒரு இரண்டாயிரமாவது போட்டுத்தாருங்கள்.
//கொத்து( ஹிஹி) விளக்கா இருக்கிற நயனும் வந்தாங்ளா விழாவுக்கு? அப்ப இந்த ஜென்ம சாபகல்யத்த அடைஞ்சாச்சு... //
நயன் விழாக்கு வந்திருந்தால் பம்பலப்பிட்டியில் ஜொள்ளாக ஆறு ஓடியிருக்கும் நயன் வரவில்லை. சும்மா ஒரு நயனின் படம் போட்டேன், பதிவிற்க்கும் நயனிற்க்கும் சம்பந்தமில்லை.
//உப்படியான சோக்களுக்கு பாகும் போது கைகாவலா பாய் தலகாணி கொண்டு போகணும்.. ஓவரா வதைச்சாங்கன்னா விறுவிறுன்னு முன்னுக்கு போய் மேடைக்கு கீழ பாய விரிச்சு படுத்துடனும் ...மைக்க வாங்கி பெரிசா கொட்டாவி விடணும்..//
ஊரிலை சிவராத்தி நிகழ்ச்சிகள் பார்க்கபோகும் போது பாய் தலையணியுடன் தான் போவது.
//ஆதிரை said...
இத்துடன், இதைச் சொன்னதும் வந்திதான்.
என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை//
இப்ப என்ன சொல்லவாறீர்கள்.
//ஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துகள் நண்பர்களே//
வாழ்த்துத் தெரிவித்த ஆ.ஞானசேகரன் அவர்களுக்கு நன்றிகள்.
//கதியால் said...
ம்ம்ம்ம்....எல்லாம் சரி..குத்துவிளக்காக இருந்த நயனுக்கு என்ன ஆச்சு என்பதைப் பற்றி சொல்லவே இல்லையே....!//
நயன் படத்திற்க்கும் இந்தப் பதிவிற்கும் சம்பந்தமில்லை ஆனால் நயன் பற்றிய ஒரு கிசுகிசு இருக்கு.
வெளிநாட்டுக்கு பாடல் காட்சியை ஷ§ட் பண்ண போனார்கள் ஆ படத்திற்கு. நம்பர் நடிகையின் திருட்டு பார்வையை கொஞ்ச நாளாகவே விசாரித்து வந்த முன்னாள் நடிகையும், இந்நாள் மருமகளும் ஆன பப்ளி நடிகை, கணவரை காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாராம். தனது மகளை பாட்டி தாத்தா பொறுப்பில் விட்டு விட்டு தானும் கூடவே கிளம்பிவிட்டாராம். இதில் நம்பர் அப்செட்! அதே நேரத்தில் ஹீரோவுக்கு நிம்மதி. பெரும் தொல்லையில் இருந்து தப்பினோமே என்றுதான்!
//கீத் குமாரசாமி said...
வந்தியண்ணா... ஆதிரை சும்மா உங்களைக் கடிக்கிறார்.. ஆள் பாக்கத்தான் பூனை, பாஞ்சா புலி..அச்சச்சோ..அப்பிடி சொல்லக்கூடாதோ.. பாஞ்சா சிங்கம்//
அப்படியா ஆனால் உங்களைப் பற்றி நல்லாச் சொன்னார். பக்திமானாக இருக்கிறார் இதுதான் கொஞ்சம் உதைக்கிறது.
//சந்ரு said...
இலங்கைப்பதிவர் சந்திப்பு அவசியமே. ஏற்பாடுகளை செய்யும் நண்பர்களுக்கு நன்றிகள்...
இலங்கைப் பதிவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுவது நல்லதென நினைக்கிறேன். வர முடிந்தவர்கள் வருவார்கள் இல்லையா...//
சந்ரு தனிப்பட்ட முறையில் கொழும்பில் இருக்கும் பதிவாளர்களுக்கு பின்னூட்டம் மூலம் இதனைத் தெரியப்படுத்துகின்றேன். நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்தவும். மேலதிக விபரங்களை விரைவில் அனுப்புகின்றேன்.
ஏன் ஐயா உங்களுக்கு தேவை இல்லாத வேலை, போயா தினம் தான் ஒரு நாள் தூரத்தில உள்ள என்னுடைய வீட்டுக்கு போயிட்டு வந்து உங்க பதிவ பார்த்தா?????
நற நற நற ....
எங்க ஒரு நாள் விடுமுறைக்கும் ஆப்பு வைச்சிடுவீங்க போல இருக்கு...
நயந்தாரா படம் நல்லா இருக்கு!!!! ஹீ ஹீ
தனிய சந்திச்சு சேர்ந்து கூட்டமோ? இது தானே அரசியல் நடைமுறை? ;)
இந்தப் பதிவில் தானே என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை விளங்கிச்சு.. ;)
நயன் நல்லாத் தான் இருக்கிறா..
சூர்யா நயன் என்ன படம்? கஜினி படம் வெளிநாட்டு படப்பிடிப்பு நடந்ததா?
வந்தி, நீங்கள் சொன்னது போல முதலில் கொழும்பு பதிவர்கள் சிந்திப்போம்.. பின்னர் பெரிதான விடயமான இலங்கைப் பதிவரைக் கூட்டலாம்..
//உப்படியான சோக்களுக்கு பாகும் போது கைகாவலா பாய் தலகாணி கொண்டு போகணும்.. ஓவரா வதைச்சாங்கன்னா விறுவிறுன்னு முன்னுக்கு போய் மேடைக்கு கீழ பாய விரிச்சு படுத்துடனும் ...மைக்க வாங்கி பெரிசா கொட்டாவி விடணும்..
சந்திப்பம்...
//
இனி மேல் நான் கொஞ்சம் கவனமாத் தான் இருக்கவேணும்.. ;)
நன்றி வந்தியதேவன். உங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி. இந்த மாதம் நடுப்பகுதியில் நான் யாழ் செல்வதால் வரமுடியுமோ தெரியவில்லை. முயற்சிக்கிறேன்!!!!
//யோ (Yoga) said...
ஏன் ஐயா உங்களுக்கு தேவை இல்லாத வேலை, போயா தினம் தான் ஒரு நாள் தூரத்தில உள்ள என்னுடைய வீட்டுக்கு போயிட்டு வந்து உங்க பதிவ பார்த்தா?????
எங்க ஒரு நாள் விடுமுறைக்கும் ஆப்பு வைச்சிடுவீங்க போல இருக்கு...//
யோ நான் பதிவு எழுதி இலங்கை அரசாங்கம் அந்த லீவை எடுத்தால் உலக அதிசயம் தான். பாராளமன்றத்தில்(சந்திரிக்கா காலத்தில்) விவாதம் செய்தே எடுக்கப்படாத லீவு என் உளறலினால் எடுக்கப்படுமா?
//நயந்தாரா படம் நல்லா இருக்கு!!!! ஹீ ஹீ//
பதிவைப் பாராட்டுறதை விட்டுவிட்டு நயன் படம் நல்லாயிருக்கு என்கிறீர்கள்
// LOSHAN said...
தனிய சந்திச்சு சேர்ந்து கூட்டமோ? இது தானே அரசியல் நடைமுறை? ;)//
புல்லட்டை சந்தித்த கதை தனிக்கதை சனிக்கிழமை புட்சாலில் சொல்கின்றோம். புட்சாலுக்கு பேப்பர்த் தம்பி வருவாரா?
/இந்தப் பதிவில் தானே என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை விளங்கிச்சு.. ;)//
ஹிஹிஹி.
//சூர்யா நயன் என்ன படம்? கஜினி படம் வெளிநாட்டு படப்பிடிப்பு நடந்ததா?//
புதிய படம் ஆதவன். கற்றது கையளவில் ஆதவன் பற்றிய செய்திகள் சொன்னார்களே.
//வந்தி, நீங்கள் சொன்னது போல முதலில் கொழும்பு பதிவர்கள் சிந்திப்போம்.. பின்னர் பெரிதான விடயமான இலங்கைப் பதிவரைக் கூட்டலாம்..//
அதே அதே. நாளைக்கு புல்லட்டுடன் ஒரு மாநாடு போட்டுவிட்டு சனிக்கிழமை விபரங்கள் தருகின்றோம்.
//இனி மேல் நான் கொஞ்சம் கவனமாத் தான் இருக்கவேணும்.. ;)//
சூப்பர் சிங்கர் போல் நல்ல நிகழ்ச்சிகள் நடத்தினால் பிரச்சனை இல்லை.
//கார்த்தி said...
நன்றி வந்தியதேவன். உங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி. இந்த மாதம் நடுப்பகுதியில் நான் யாழ் செல்வதால் வரமுடியுமோ தெரியவில்லை. முயற்சிக்கிறேன்!!!!//
சரி சரி யாழ் சென்று அந்த அனுபவத்தையே ஒரு பதிவாக இடுங்கள்.
சனிக்கிழமை என்றால் நான் முதல் ஆளாகநிற்பேன். சந்திப்போடை நிக்காமல் சாதிக்கவும் வேண்டும்.
அன்புடன்
வர்மா
//
கொழும்பு வலைப்பதிவர் சந்திப்பு
//
வாழ்த்துக்கள்
Post a Comment