இன்று காலையில் விகடன் இணையத்தைத் திறந்துபார்த்தேன் முன்பக்கத்தில் ரஜனியின் படத்துடன் ரஜனி 60 ஆச்சரியங்கள் என ரஜனி பற்றிய ஒரு கடடுரை. இன்று ரஜனியின் பிறந்த நாளும் அல்ல அத்துடன் திடீரென விகடன் ரஜனி பற்றி ஏன் எழுதுகிறது என யோசித்தால் நேற்று நாயகன் 50 என கமல் பற்றி தங்கள் இணையப்பதிப்பில் எழுதிய கட்டுரைக்கு எதிர்க்கட்டுரையாக ரஜனி 60.
ரஜனிக்கு இன்னும் 60 வயது வரவில்லை ஆனாலும் கமலை முந்திக்காட்டவேண்டும் என்ற சிண்டு முடியும் நினைப்பில் ரஜனி 60 என கமலை விட 10 கூடப் போட்டிருக்கிறார்கள்.
சில காலம்களுக்கு முன்னர் குசேலன் பிரச்சனையை ஊதிப்பெரிதாக்கிய பெருமையும் விகடனையே சேரும். அதற்க்கு முதல் ஒவ்வொரு வாரத்திலும் ரஜனி பற்றிய செய்திகள், என ரஜனிக் கொடி பறந்த விகடனில் அந்தக் கட்டுரையின் பின்னர் ரஜனி பற்றிய செய்திகள் குறைந்துவிட்டன( இந்த நேரத்தில் அவர்களின் வியாபாரத்திற்க்கு இலங்கைச் செய்திகள் கிடைத்துவிட்டன).
பின்னர் மீண்டும் இந்த வாரம் முதல் விகடன் தன் கைவரிசையைக் காட்டிவிட்டது. இதற்கான காரணமாக விகடன் குழுமத்தில் கலாநிதி மாறனுக்கு பங்கிருப்பதும் எந்திரன் அவர்களின் வெளியீடாக வரவிருப்பதும் இதனால் ரஜனியை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்க்கு விகடன் தள்ளப்பட்டிருக்கின்றது.
வாரத்திலும் ரஜனி பற்றிய செய்திகள், என ரஜனிக் கொடி பறந்த விகடனில் அந்தக் கட்டுரையின் பின்னர் ரஜனி பற்றிய செய்திகள் குறைந்துவிட்டன( இந்த நேரத்தில் அவர்களின் வியாபாரத்திற்க்கு இலங்கைச் செய்திகள் கிடைத்துவிட்டன).
அத்துடன் இனி இவர்கள் இலங்கைத் தமிழர்களை வைத்தும் வியாபாரம் செய்யமுடியாது ஆகவே வியாபாரத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் ரஜனியை மீண்டும் களத்தில் இறக்கிவிட்டார்கள்.
சன் குழுமத்தின் மொக்கைப் படங்களுக்கு விகடன் விமர்சனத்தில் மார்க் அள்ளிப்போடும்போதே இவர்களுக்கிடையிலான தொடர்பு புரிந்துவிட்டது.
பல காலமாக நடுநிலையாக இருந்த விகடன் இன்றோ தன் நடுநிலையை அரசியலில் தொலைத்துவிட்டு ஒரு பக்கம் சார்ந்தே தன் எழுத்துக்க்ளையும் அந்த கட்டுரைகளுக்கு வரும் பின்னூட்டங்களையும் வெளியிடுகின்றது.
அண்மையில் திமுக அமைச்சர் ராசா பற்றிய ஒரு புலனாய்வுக் கட்டுரையை விகடன் வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டது. இதுவும் சன் குழுமத்தின் ஒரு வேலையாகவே இருக்கலாம் ஏனெனில் கண்கள் பனித்து இதயம் இனிக்கும் வரை ஆ.ராசாவைப் பற்றி சன்னில் எந்த நேரம் புறணி பாடுவார்கள்.
அண்மையில் வெளிவந்த ஒரு பின்னூட்டத்தில் ஒருவர்(ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்பது அவரது பெயரில் தெரிகிறது) இலங்கைத் தமிழர்களைப் பற்றி மிகவும் கேவலமாக எழுதியிருந்தார். அந்தப் பின்னூட்டத்திற்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்தும் இதுவரை விகடன் அதனை அகற்றவில்லை.
எது எப்படியோ சில நாட்களாக புலம் பெயர் தமிழர்களை இலக்காக வைத்து வியாபாரம் செய்த விகடன் இனி ரஜனி ரசிகர்களைக் குறிவைத்துள்ளது. இதனால் இவர்களின் வியாபாரம் பெருகும்.
டிஸ்கி: இந்தப் பதிவிற்க்கு வி னாவில் தொடங்கும் இன்னொரு பெயரில் தான் தலைப்பை போட நினைத்தேன் ஆனால் எத்தனையோ காலமாக எனக்கும் விகடனுக்கும் உள்ள உறவு அதனைத் தடுத்துவிட்டது.
தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? (புருஜோத்தமன் தங்கமயில்)
-
பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது மூன்று நாட்கள் மட்டுமே.
இன்று நள்ளிரவோடு பிரச்சாரப் பணிகள் நிறைவுக்கு வருகின்றன. அடுத்த இரண்டு
நாட்கள் அ...
4 days ago
4 கருத்துக் கூறியவர்கள்:
வந்தி.. சரவெடி.. எப்போதோ விகடன் சாயம் வெளுத்து விட்டது..
எனினும் நீங்கள் சொன்னது போல குமுதம் விகடன் என்று போட்டி வரும்போது பழைய பாசத்திலும், தரத்திலும் நான் எப்போதும் விகடன் பக்கம் தான்..
ஆனாலும் இப்போது கொஞ்சக் காலமாக இரண்டுமே ஒன்று போலத் தான் கிடக்கு..
டிஸ்கி: இந்தப் பதிவிற்க்கு வி னாவில் தொடங்கும் இன்னொரு பெயரில் தான் தலைப்பை போட நினைத்தேன் ஆனால் எத்தனையோ காலமாக எனக்கும் விகடனுக்கும் உள்ள உறவு அதனைத் தடுத்துவிட்டது.//
இதைத் தான் உங்களிடம் எதிர்பார்த்தேன்..
நீங்க ஏதோ சும்மா சொல்லுறீங்கனு விகடன்.காம் போய் பார்த்தேன். உண்மைதான் நல்ல வேளை அவங்க கட்டண தளமாக மாற்றிய பிறகு நான் விகடன் படிக்கிறத நிப்பாட்டிட்டேன், மாசிலாமணி, காதலில் விழுந்தேன் விளம்பரம் பார்த்து சன் டிவியும் பார்க்கிறது இல்ல. எப்ப வாச்சி பொழுது போகாட்டி கேடீவி பக்கம் லேசா போய வருவேன். அவ்வளவு தான்..
பார்ப்போம் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு..
///அண்மையில் வெளிவந்த ஒரு பின்னூட்டத்தில் ஒருவர்(ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்பது அவரது பெயரில் தெரிகிறது) இலங்கைத் தமிழர்களைப் பற்றி மிகவும் கேவலமாக எழுதியிருந்தார். அந்தப் பின்னூட்டத்திற்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்தும் இதுவரை விகடன் அதனை அகற்றவில்லை///
லிங்க் தருவியளோ வந்தி... ஆரோடையும் சண்டை போடோணும் போல இருக்கு
அவர்கள் பிழைப்பும் ஓடவேண்டுமே? இவற்றைப் படிப்பதை நான் நிறுத்தி இரண்டு வருடங்களாகப்போகிறது.
//டிஸ்கி: இந்தப் பதிவிற்க்கு வி னாவில் தொடங்கும் இன்னொரு பெயரில் தான் தலைப்பை போட நினைத்தேன் ஆனால் எத்தனையோ காலமாக எனக்கும் விகடனுக்கும் உள்ள உறவு அதனைத் தடுத்துவிட்டது.//
போட்டாலும் ஒன்றும் தப்பில்லை. எல்லாம் வியாபாரம்
Post a Comment