வியாழன், ஜூலை 30, 2009

பொன்னியின் செல்வன் - வரலாற்றுத் தவறு

பெரும்பாலான வலைமனை வாசிகள் எப்படியும் ஒருதடவையேனும் பொன்னியின் செல்வனை ரசித்து ருசித்துப்படித்திருப்பீர்கள். வந்தியத்தேவனுடன் கடம்பூர், பழையாறை, அரசிலாற்றங்கரை, ஈழம், தஞ்சை என வலம் வந்திருப்பீர்கள். எத்தனையோ வரலாற்று நாவல்கள் வந்தாலும் பொன்னியின் செல்வன் படிப்பதுபோல் ஒரு உற்சாகம் ஏனைய நாவல்களில் குறைவாகவே இருக்கும்.

ஒரு வலையில் சுந்தரச்சோழரின் இறுதிக்காலத்தில் என்ன நடந்தது பற்றி அலசி ஆராய்ந்திருந்தார்கள்(அதன் சுட்டியை மறந்துபோனேன்) மதுராந்தகருக்கு என்ன நடந்தது? நந்தினி என்ன ஆனாள்? போன்றவற்றைப் பற்றிப் பலர் தங்கள் கருத்துகளைக் கூறியிருந்தார்கள்.

பொன்னியின் செல்வனில் அருள்மொழிவர்மன் ஒரு காரியத்தை மறுக்காமல் ஏற்றுக்கொண்டிருந்தால் சிலவேளை ஈழத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கும் கொடுமைகள் நடந்திருக்காது. ஈழப்போர்கள் வெடித்திருக்காது. யார் கண்டது ஈழமும் இந்தியாவின் ஒரு மாநிலமாகியிருக்கலாம். அருள்மொழிவர்மன் விட்ட தவறு என்ன? கல்கியின் பொன்னியின் செல்வனில் பாகம் இரண்டாகிய சுழற்காற்றில் இலங்கைச் சிங்காதனம் என்ற அத்தியாயத்திற்க்குள் நுழைவோம்.

அருள்மொழிவர்மனைத் தேடி ஈழத்திற்க்கு வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் பூங்குழலி உதவியுடன் வருகின்றான். அருள்மொழிவர்மனை வந்தியத்தேவனுடன் ஆழ்வார்க்கடியானும் சந்திக்கிறார்கள். அப்போது ஒரு பிஷு இவர்கள் மூவரையும் அழைத்துக்கொண்டு தங்கள் சபா மண்டபத்திற்க்கு கொண்டு செல்கிறார். அங்கே புத்த பிக்குகள் பலர் கூடியிருந்தார்கள் அவர்கள் மட்டுமல்ல நவரத்தினம் பதித்த தங்கச் சிங்காதனம் காணப்பட்டது. அதன் அருகில் பீடத்தில் மணிமகுடமும் உடைவாளும் செங்கோலும் காணப்பட்டன. அத்துடன் மகா தேரோ குருவும் நடுநாயகமாக வீற்றிருந்தார்.

மகா தேரர் ஆதிகாலத்திலிருந்து சோழர்களாலும் பாண்டியர்களாலும் கலிங்கத்தவர்களாலும் புத்த தர்மம் உள்ள ஈழநாட்டில் பல அட்டூழியங்கள் நடந்தனவென்றும் ஆனால் அருள்மொழிவர்மரின் காலத்தில் சிதைந்த விகாரைகளை பழுதுபார்க்க அரசர் கட்டளையிட்டார் என்றும் எந்த மன்னர்களினது காலத்திலும் இத்தகைய செயல் நடைபெறவில்லையென்றும் கூறி, அசோகர் எப்படி புத்தமதத்தை உலகெல்லாம் பரப்பினாரோ அப்படி நீங்கள் இந்த மஹா சாம்ராஜ்யத்துக்கு அதிபதியாகவேண்டும் என மஹா சபையினர் விரும்புவதாக கூறினார்.

கல்கியின் வரிகளில் இந்தக் காட்சி:

"இளவரசே, இதோ உங்கள் முன்னால் உள்ள சிங்காதனத்தைப் பாருங்கள். மணிமகுடத்தைப் பாருங்கள்.செங்கோலையும் பாருங்கள். இலங்கை இராஜ வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அனைவரும் இந்தச் சிங்காதனத்தில் அம்ர்ந்து, இந்த மணிமகுடத்தைத் அணிந்து, இந்தச் செங்கோலைக் கையில் தரித்த பிறகே, புத்த சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசர்களானார்கள். துஷ்டகெமுனு சக்ரவர்த்தியும், தேவனம்பிய திஸ்சரும் மகாசேனரும் அமர்ந்து முடிசூடிய சிங்காதனம் இது. அவர்கள் சிரசில் தரித்த கிரீடம் இது. அவர்கள் கரத்தில் ஏந்திய செங்கோல் இது. இப்படிப்பட்ட புராதன சிங்காதனம் ஆயிரம் ஆண்டுகளாக அரசர்களைச் சிருஷ்டித்த சிங்காதனம் இதோ தங்களுக்காக காந்திருக்கின்றது. இதில் அமரவும் இந்த மணிமகுடமும் செங்கோலும் தரிக்கவும் தங்களுக்குச் சம்மதமா? எனக் கேட்கின்றார்.

ஆனால் இதனை மறுத்துவிடுகிறார் அருள்மொழிவர்மர். அன்றைக்கு மறுத்து ஒரு மிகப்பெரிய வரலாற்றுத் தவறை பொன்னியின் செல்வன் என்றழைக்கப்படும் அருள்மொழிவர்மன் விடுகிறார்.

அன்றைக்கு அவர் ஈழத்து அரியணையில் ஏறியிருந்தால் சிலவேளைகளில் ஈழத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது. ஈழ இராட்சியம் முழுவதும் சோழர்களின் புலிக்கொடி பறந்திருக்கும். அருள்மொழிவர்மருக்கு தான் அரியணையில் அமராமல் தன் சார்பில் வேறு சில நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம் அவை:

1. ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவன் மூலம் சோழப்பேரரசில் அந்த காலத்தில் நிலவிய மதுராந்தகர், ஆதித்தகரிகாலருக்கிடையிலான இராட்சியப்போட்டியை மதுராந்தகரையோ அல்லது ஆதித்த கரிகாலரையோ ஈழத்து அரியணையில் ஏற்றி ஈழ இராட்சியத்தையும் சோழ இராட்சியமாக்கியிருக்கலாம். இதனால் தஞ்சையில் ஏற்பட்ட உள்நாட்டுச் சிக்கல் நீக்கியிருக்கும். (இதனை தற்போதைய சாணக்கியர் கலைஞர் மிக அழகாக கையாண்டுள்ளார்)

2.இரண்டாவது வந்தியத்தேவனுக்கு பட்டம் கட்டினால் இளையபிராட்டியார் குந்தவை ஒரு நாட்டின் அரசனை திருமணம் செய்யும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும், ஆனால் அருள்மொழிவர்மர் அதனையும் செய்யவில்லை. இதற்கான காரணம் எனக்குத் தெரியும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.

ஆக அருள்மொழிவர்மர் செய்த தவற்றிற்கான தண்டனைகளை நாங்கள் பல காலமாக அனுபவிக்கவேண்டியுள்ளது. சிலர் இதனைக் கல்கியின் கற்பனை என்றும் சொல்லலாம் ஆனால் கற்பனை என்றாலும் 12பி படம் போல் யோசனை செய்ததில் தவறில்லை என்றே நினைக்கின்றேன். உங்கள் எண்ணக் குதிரையையும் பின்னூட்டங்கள் மூலம் தட்டுங்கள் .

23 கருத்துக் கூறியவர்கள்:

PPattian சொல்வது:

சோழ ராச்சியமே காலப்போக்கில் காணாமல் போனது.. ஈழத்தில் அமையும் சோழ விரிவாக்கம் எம்மாத்திரம்.. எப்படியும் வேறு ஏதாவது வகையில் சண்டைக்கான மூலம் நிறுவப்பட்டிருக்கும்.

வந்தியத்தேவன் சொல்வது:

// PPattian : புபட்டியன் said...
சோழ ராச்சியமே காலப்போக்கில் காணாமல் போனது.. ஈழத்தில் அமையும் சோழ விரிவாக்கம் எம்மாத்திரம்.. எப்படியும் வேறு ஏதாவது வகையில் சண்டைக்கான மூலம் நிறுவப்பட்டிருக்கும்.//

நிச்சயமாக புபட்டியன். சோழ ராச்சியம் அழிந்தாலும் அந்த சுவடுகள் இன்றைக்கும் இருக்கின்றன அதேபோல் ஈழராச்சியத்தையும் சோழர்கள் போர்த்துக்கீசர் வரும்வரை ஆட்சி செய்திருந்தால் சிங்களவர் தமிழர் வேறுபாடு களையப்பட்டிருக்கலாம். இலங்கையைப் பொறுத்தவரை மூன்று இராச்சியங்கள் ஆதிக்கம் செலுத்தின. தமிழர்களை யாழ்ப்பாண இராச்சியம் மூலமும் சிங்களவர்களை கண்டி மற்றும் அனுராதபுர இராச்சியங்கள் மூலமு மன்னர் ஆட்சி செய்தார்கள். சோழர்களால் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றமுடியவில்லை, அதேபோல் பின்னாலில் படையெடுத்த போத்துக்கீசர்களாலும், ஒல்லாந்தர்களாலும் கண்டியைக் கைப்பற்ற முடியவில்லை. கண்டியின் இறுதிமன்னனான ஸ்ரீ இராஜசிங்கன் தமிழன். இவரது ராச்சியத்தை ஆங்கிலேயர்களே கைப்பற்றினார்கள்.

Unknown சொல்வது:

இது இந்த இடுகைக்கு சம்பந்தமில்லாத கேள்வி வந்தி..
பாலகுமாரனின் உடையார் வாசித்தீர்களா.. சில இடங்களில் முன்னுக்குப் பின்னான தகவல்கள் தந்து தடுமாறுகிறார் பாலகுமாரன்.உதாரணத்துக்கு இராஜேந்திர சோழன் பஞ்சவன்மா தேவி ஆகியோரைக் கருதினால் முதல் பாகத்தில் ‘பத்து வயதான இளவரசனும், இருபது வயதான சிற்றன்னையும்' என்று ஒரு வரி வருகிறது. இரண்டாம் பாகத்தில் ‘இராஜேந்திரனை விட மூன்று வயது மூத்த பஞ்சவன்மாதேவி' என்கிறார். வரலாற்றுப் புதினங்களை அப்படியே நம்புவது கடினமாக உள்ளது. நாவலாசிரியர்களின் மேற்கண்டது போன்ற தவறுகளால்... பொன்னியின் செல்வனை வாசித்துவிட்டு அதைப்பற்றிச் சொல்கிறேன்

வந்தியத்தேவன் சொல்வது:

//கீத் குமாரசாமி said...
இது இந்த இடுகைக்கு சம்பந்தமில்லாத கேள்வி வந்தி..
பாலகுமாரனின் உடையார் வாசித்தீர்களா.. சில இடங்களில் முன்னுக்குப் பின்னான தகவல்கள் தந்து தடுமாறுகிறார் பாலகுமாரன்.உதாரணத்துக்கு இராஜேந்திர சோழன் பஞ்சவன்மா தேவி ஆகியோரைக் கருதினால் முதல் பாகத்தில் ‘பத்து வயதான இளவரசனும், இருபது வயதான சிற்றன்னையும்' என்று ஒரு வரி வருகிறது. இரண்டாம் பாகத்தில் ‘இராஜேந்திரனை விட மூன்று வயது மூத்த பஞ்சவன்மாதேவி' என்கிறார். வரலாற்றுப் புதினங்களை அப்படியே நம்புவது கடினமாக உள்ளது. நாவலாசிரியர்களின் மேற்கண்டது போன்ற தவறுகளால்... பொன்னியின் செல்வனை வாசித்துவிட்டு அதைப்பற்றிச் சொல்கிறேன் //

இல்லை கீத் இதுவரை உடையார் வாசிக்கவில்லை. எனக்கு ஒரு நண்பர் உடையார் வாசிக்கச் சொல்லி சிபாரிசு செய்தார் ஆனாலும் ஏதோதோ காரணங்களால் உடையார் வாசிப்பது தள்ளிப்போகின்றது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்திலையும் அதனைக் காணவில்லை.

கல்கி எங்கேயும் தடுமாறவில்லை பலமுறை பொன்னியின் செல்வனை வாசித்தவன் என்றபடியால் சொல்கின்றேன். கல்கி பொன்னியின் செல்வனுக்கு ஆதாரம் சேர்க்க இலங்கைக்கு வந்தவர். ஏன் கரவெட்டிக்கு கூட வந்தார். சில கற்பனைகள் இருந்திருக்கலாம் ஆனால் வரலாற்றில் நடந்த கதை.

பொன்னியின் செல்வன் வாசிக்கத் தொடங்கினீர்களோ இடையில் சோறு தண்ணி நித்திரை இல்லாமல் வாசிப்பீர்கள்.

Unknown சொல்வது:

வந்தி,

நான் பொசெ’ வாசிக்கவில்லை. ஆனால் சோழர் வரலாற்றை வாசித்திருக்கிறேன். எனக்குமே உங்கள் கருத்து பலமுறை வந்து போகும், ஆனால் சோழர்கள் பாசக்கார பயல்கள், ஒருத்தர விட்டு ஒருத்தர் இருப்பதே இல்லை.

அவர்கள் பிடித்த நாட்டிலெல்லாம் ஒழுங்காக சோழ ராசாக்களை அரியனை ஏற்றி, காலம் காலமாக ஆட்சி புரிந்திருக்கலாம். ஆனால் பெருந்தன்மையாக தோற்கடித்த மன்னனையே திரும்ப ஆட்சியில் அமர்த்திவிட்டு, கம்பீரமாக வீடு திரும்பும் ‘ரொம்ப நல்லவங்க’.


ராசேந்திரன் வென்றதை கட்டிகாத்திருந்தாலே பாதிஉலகம் தமிழ்பேசி இருக்கும். பாண்டியர்களும் சிங்களர்களும் சேரர்களும் தொடர்ந்து நெருக்குதல் தந்த சூழலில் ஒரு பரம்பரை எப்போதும் வீராதிவீரர்களையே தந்து கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஈழத்தின் விடிவுகாலம் என்பது தொலைந்தகனவாகவே இருப்பது வரலாற்று சோகம்.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

எனக்கு பொன்னியின் செல்வன் வாசிக்க ஆவலாய் இருக்கிறது.. எப்படி என தெரிய வில்லை புத்தகம் வாங்க கிடைக்குமா

SurveySan சொல்வது:

வந்தி, எனக்கு வரலாற்று அறிவு கெம்மி.

ஆனாலும், நீங்க சொல்லியிருக்கும் butterfly effect மேட்டர் யோசிக்க வைக்குது.

ராஜராஜ சோழர், இலங்கையிலேயே இருந்திருந்தால், தமிழகத்துக்கு எந்த்த மாதிரியான மாற்றங்கள் வந்திருக்கும்னு கிரஹிக்க முடியலை. ஆனா, தமிழன் இலங்கையில் இன்னும் திடமா இருந்திருக்கலாம்.

பொ.செ'வில், பல விஷயம் இன்னும் தெளிவா இல்லை. கடைசி வால்யூம் பாதி வந்தாச்சு, இனி தெளிவு பிறக்கலாம் :)

ஆதித்த கரிகாலனும், ராஜ ராஜனும் இருந்த காலத்தில், ஆளுக்கு ஒரு மூலையில் தனியா ஆட்சி அமைச்சு, தனித்தனியா தங்கள் ராஜ்யத்தை பெருக்கியிருந்தாலே,, சோழ சாம்ராஜ்யம், இன்னும் கன்னா பின்னான்னு திடமா வளந்திருக்கும்.

ஆனா, பதவி ஆசை யாரை விட்டுது? லேசுல விட்டுக் கொடுக்கர விஷயமா பதவி?
சாதாரண குட்டி ஆணி புடிங்கும் வேலையச் செய்யவே, நீ பெருசா நான் பெருசான்ன்னு போட்டி நடக்குது.
சோழ குலத்து வாரிசுகள் ஒண்ணா பதவி வகிப்பாங்கன்னெல்லாம் ஆசைப்படரது ஓவருதான்.

இந்த காலத்து சோழ மன்னராட்சியும் அப்படித்தான இருக்குது. சுமுகமா போகும்னா தோணுது? :)

வர்மா சொல்வது:

பொன்னியின் செல்வன் வரலாற்றுத்தவறல்ல. உரியவர்களீடம் ஆட்சியை ஒப்படைத்த்தில் எந்தத்தவறும் இல்லை.
அன்புடன்
வர்மா

வந்தியத்தேவன் சொல்வது:

// இசை said...
வந்தி,

நான் பொசெ’ வாசிக்கவில்லை. ஆனால் சோழர் வரலாற்றை வாசித்திருக்கிறேன். எனக்குமே உங்கள் கருத்து பலமுறை வந்து போகும், ஆனால் சோழர்கள் பாசக்கார பயல்கள், ஒருத்தர விட்டு ஒருத்தர் இருப்பதே இல்லை.//

வணக்கம் இசை ஆமாம் இவங்க நிஜமாக பாசக்காரப்பயல்கள் தான் பலபக்கதிலிருந்து எதிர்ப்புவந்தாலும் பிடித்த இடங்களை பகைவனுக்கே கொடுத்துவிட்டு மீண்டும் அதே பகைவன் இன்னொரு எதிரியுடன் சேர்ந்து தாக்கும் போது செய்த தவறை உணர்பவர்கள். கடாரம் வென்ற சோழன் கடாரத்தில் சோழர் ஆட்சியை மேலும் நீட்டித்திருந்தால் இன்றைக்கு ஆசியாவிலே பலரால் பேசப்படும் மொழியாக தமிழ் இருந்திருக்கும். ம்ம்ம் என்ன செய்வது நம்ம விதி அப்படி.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ (Yoga) said...
எனக்கு பொன்னியின் செல்வன் வாசிக்க ஆவலாய் இருக்கிறது.. எப்படி என தெரிய வில்லை புத்தகம் வாங்க கிடைக்குமா//

இணையத்தில் இலவசமாக மின்னூலாக கிடைக்கிறது. கூகுளில் தேடிப்பாருங்கள். புத்தகம் வானதி பதிப்பகம், சாரதா பதிப்பகம் வெளியீடுகளாக கிடைக்கும்.

வந்தியத்தேவன் சொல்வது:

// SurveySan said...
வந்தி, எனக்கு வரலாற்று அறிவு கெம்மி.

ஆனாலும், நீங்க சொல்லியிருக்கும் butterfly effect மேட்டர் யோசிக்க வைக்குது. //
எனக்கும் வரலாற்று அறிவு கம்மிதான். ஆனால் உங்களளவுக்கு சுருக்கமாக பொன்னியின் செல்வனை விபரிக்கத் தெரியாது, இந்த வண்ணத்துப்பூச்சியின் விளைவை கொஞ்சம் மாற்றியும் யோசிக்கலாம். தமிழ் மன்னர்களான சோழர்களால் அன்றைக்கு ஈழத்திலுள்ள பல விஹாரங்கள் இடித்து நொருக்கப்பட்டன அதற்கான எதிர்வினையாக இன்றைக்கு பல கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இங்கே நியூட்டனின் மூன்றாம் விதியும் துணைக்கு வருகின்றது. அன்றைக்கு ராஜராஜனோ, விஜயலாயனோ செய்த தவறுகள் அவரின் மூதாதையரான எம்மை பாதிக்கின்றது.

//ராஜராஜ சோழர், இலங்கையிலேயே இருந்திருந்தால், தமிழகத்துக்கு எந்த்த மாதிரியான மாற்றங்கள் வந்திருக்கும்னு கிரஹிக்க முடியலை. ஆனா, தமிழன் இலங்கையில் இன்னும் திடமா இருந்திருக்கலாம்.//

தமிழகத்தில் பாண்டியர்களை விட சோழர்களும் பல்லவர்களுமே பல மாற்றங்களுக்கு காரணமாக இருந்தார்கள். பாண்டியர்கள் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமிருக்கா இல்லையா என்ற ஆராய்ச்சியில் ஈடுபாட்டாகள். பலகோயில்களுக்கு மானியங்கள் கொடுத்து உதவியவர்கள் சோழர்களே.

சோழ ஆட்சி இலங்கையில் நீடித்திருந்தால் தமிழன் திடமாகவும் பெரும்பான்மையாகவும் இருந்திருக்கலாம். அத்துடன் இலங்கைக்கு சங்கமித்தையின் வரவும் விஜயனின் நாடுகடத்தலும் பல மாற்றத்தை ஏற்படுத்திய முழுமுதல்காரணிகள்.

//ஆதித்த கரிகாலனும், ராஜ ராஜனும் இருந்த காலத்தில், ஆளுக்கு ஒரு மூலையில் தனியா ஆட்சி அமைச்சு, தனித்தனியா தங்கள் ராஜ்யத்தை பெருக்கியிருந்தாலே,, சோழ சாம்ராஜ்யம், இன்னும் கன்னா பின்னான்னு திடமா வளந்திருக்கும். //

அதேதான் தஞ்சையில் ஒருவரும் பழையாற்றில் இன்னொருவரும் ஈழத்தில் இன்னொருவர் என ஆட்சியை சோழர்கள் பகிர்ந்திருந்தால் சோழ சாம்ராஜ்யம் அல்ல தமிழர்களும் திடமாக இருந்திருப்பார்கள்.

//இந்த காலத்து சோழ மன்னராட்சியும் அப்படித்தான இருக்குது. சுமுகமா போகும்னா தோணுது? :)//

திருக்குவளை சோழரும் தன் பங்கிற்க்கு ஆட்சியைப் பிரித்தாலும் இன்றைக்கும் தயாதி சண்டைகள் மறைமுகமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக அவர்களின் ஊடகங்களைப் பார்த்தால் புரியும். இங்கே மதுராந்தகன் போல மாறவர்மன் சகோதரர்கள் விளங்குகிறார்கள். அதே நேரம் அருள்மொழிவர்மனுக்கு முடிசூட்டி ஆதித்தகரிகாலனுக்கு இன்னொரு பகுதியைக் கொடுத்தாலும் குந்தவை நட்டாற்றில் விடப்பட்டுவிட்டார். சில காலத்தில் என்ன நடக்கப்போவதென்பது தெரியும்.

வந்தியத்தேவன் சொல்வது:

// வர்மா said...
பொன்னியின் செல்வன் வரலாற்றுத்தவறல்ல. உரியவர்களீடம் ஆட்சியை ஒப்படைத்த்தில் எந்தத்தவறும் இல்லை.//
தவறில்லைத் தான் ஆனால் ஆட்சியாளர்கள் இன்னொரு இனத்தை அடக்கியாள்வது தவறுதானே. அன்றைக்கு அருள்மொழிவர்மன இந்த தவறைச் செய்யாதுஇருந்தால் இன்றைக்கு நாம் நிம்மதியாக இருந்திருக்கலாம். அலல்து அன்றைய மதகுருமார்கள் போல் இன்றைய மதகுருமார்களும் பெருந்தன்மையாக இருந்திருந்தாலும் பிரச்சனை பூதாகரமாகியிருக்காது.

வர்மா சொல்வது:

கைப்பற்றிய நாட்டில் அருள்மொழிவர்மன் ஆட்சி செய்திருந்தால் மன்னன் தவறு செய்துவிட்டதாக அன்றைய மக்களேதூற்றியிருப்பார்கள். அருள்மொழிவர்மன் செய்தது முற்றிலும் சரியானது.
அன்புடன்
வர்மா

வந்தியத்தேவன் சொல்வது:

//வர்மா said...
கைப்பற்றிய நாட்டில் அருள்மொழிவர்மன் ஆட்சி செய்திருந்தால் மன்னன் தவறு செய்துவிட்டதாக அன்றைய மக்களேதூற்றியிருப்பார்கள். அருள்மொழிவர்மன் செய்தது முற்றிலும் சரியானது.//

வர்மா அவர்களே உங்கள் பெயரில் வர்மன் இருப்பதால் அருள்மொழிவர்மனுக்கு ஆதரவா? (சும்மா பகிடிக்கு).

எங்கடை சனம் யார் என்ன செய்தாலும் தூற்றியே இருப்பார்கள்.

Unknown சொல்வது:

இந்த லிங்க் ல் பொன்னியின் செல்வன் படிக்கலாம் இலவசமாக......
http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan.html

Unknown சொல்வது:

நான் ஒரு வாரம் விடாம படிச்சு முடிச்சேன் இத.....
அருமையான நாவல் சார் இது...படிக்க படிக்க நம்ம கண்ணுல எல்லாம் காட்சியாகவே தெரியும்...வந்தியத்தேவன் இப்படித்தான் இருப்பான், நந்தினி இப்படித்தான் இருந்திருப்பாள் னு அப்படியே விறியும் பாருங்க....ஆகா ECTASY

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

Kamal said...

இந்த லிங்க் ல் பொன்னியின் செல்வன் படிக்கலாம் இலவசமாக......
http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan.html


மிக்க நன்றி நண்பரே இணைப்புக்கு, நாளை முதல் வேலையாக இதை உட்கார்ந்து வாசிக்க வேண்டும்

வந்தியத்தேவன் சொல்வது:

// Kamal said...
நான் ஒரு வாரம் விடாம படிச்சு முடிச்சேன் இத.....
அருமையான நாவல் சார் இது...படிக்க படிக்க நம்ம கண்ணுல எல்லாம் காட்சியாகவே தெரியும்...வந்தியத்தேவன் இப்படித்தான் இருப்பான், நந்தினி இப்படித்தான் இருந்திருப்பாள் னு அப்படியே விறியும் பாருங்க....ஆகா ECTASY//


கமல் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். நீங்களும் நாவலை ஈடுபாட்டுடன் படித்திருக்கிறீர்கள். வந்தியத்தேவனின் குதிரையுடன் நாமும் பயணிப்போம். நந்தினியினதும் பழுவேட்டரையர்களினதும் சதிஆலோசகனைகளைப் பார்த்து நாமும் ஆவேசப்படுவோம். குந்தவை வானது பூங்குழலி அழகுகளை வர்ணனையுடன் வாசித்த பின்னர் ஐஸ்வர்யா ராய் கூட கொஞ்சம் அழகு குறைந்தே காணப்படுவார், யாராவது மெஹா சீரியலாக எடுத்தால் விளம்பர இடைவேளையைக்கூட சகித்துக்கொண்டு பார்ப்போம் ,செய்வார்களா?

Unknown சொல்வது:

மக்கள் எல்லோரும் பொசெ விவாதத்தில் இருப்பதால், பொன்னியின் வெற்றிச் செல்வனான ராசேந்திரனின் கங்கை கொண்ட சோழபுரத்து பதிவொன்றை இங்கு இணைக்கிறேன்.

http://eyilnadu.blogspot.com/2009/07/blog-post_30.html

:) (ஒரு வெளம்பரம்....

VIKNESHWARAN ADAKKALAM சொல்வது:

தோழரே, கரிகாலனின் பொன் மாளிகை சிங்கலவர்களை சிறை கொண்டு வந்து கட்டப்பட்டதென படித்த ஞாபகம் வருகிறது. இத்தருனத்தில் சரியாக நினைவுகூற முடியவில்லை. அருள்மொழிவர்மரின் வாழ்நாளில் சில இருண்ட காலங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பான தகவல்கள் இல்லை.

வந்திய தேவனை இலங்கை அரசனாக்காமல் இருந்ததுக்கு காரணம் அவன் தமிழ் மரபில் வந்தவனாக இல்லாமல் இருந்ததும் காரணமாக இருக்கலாம். பொ.செவனில் வந்தி வல்லத்து இளவரசன் என குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவன் உண்மையில் சாளுக்கிய வம்சத்தில் வந்தவன் என்பதை வரலாற்று நிபுணர்கள் வலியுருத்தி சொல்கிறார்கள். சோழர்கள் அக்காலகட்டத்தில் சாளுக்கியர்களுடன் சமரசத்துடன் இருக்க விரும்பினார்கள் ஆனால் ஜாக்கிறதையாகவும் இருக்க முற்பட்டிருப்பார்களோ?

SUREஷ்(பழனியிலிருந்து) சொல்வது:

அந்தச் சம்பவம் மிகைப் படுத்தப் பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அவ்வாறு பிட்சுக்கள் கேட்டிருந்தால் அரசராக அருள்மொழி பதவியேற்றுத்தான் ஈழத்தை சோழப் பேரரசில் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. சுந்தரச் சோழரையே அரசராக ஏற்றுக் கொண்டு கூட நாட்டை ஏற்றுக் கொண்டிருக்க முடியும். மாபெரும் ராஜ தந்திரியான குந்தவை கூட அப்படித்தான் அறிவுரை கூறியிருப்பார். எந்தப் பகுதியை யர் ஆட்சிசெய்தாலும் ஒரே நாடு என்ற பெயரும் இருந்திருக்கும்.

ஆகவே நாட்டையே ஒப்படைப்பது போன்ற நிகழ்ச்சி நடந்தே இருந்திருக்காது.

ஈழ மண்ணின் முக்கிய நபர்கள் அருள்மொழியை அணுகி போரில் வெல்ல வாழ்த்துக்களை தெரிவித்த நிகழ்ச்சியாகவே என்னால் பார்க்கமுடிகிறது. நாவலின் கடைசிக்காட்சியில் மகுடத்துடன் வந்து நிற்பதற்கும் இந்தக் காட்சியில் பிட்சுக்கள் சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

அப்போதைய சோழ அரசரையே படைகளுடன் வந்த தளபதி அரசராக்குவதுதான் தளபதியின் வேலை. தானே மன்னனாகுவது அல்ல.

மன்னன் மகனாக இருந்தாலும் அரசர் என்பவர் சுந்தரர்தானே.


அவரைவிடுத்து யார் மன்னன் ஆனாலும் அவர் அரச துரோகி ஆகியிருக்க மாட்டார்களா!

நிலமை இவ்வாறிருக்க பொன்னியின் செல்வன் எப்படி அரசியல் பிழை செய்ததாகக் கூறமுடியும்?

malarvizhi சொல்வது:

"vanthiyathevan" miga arumaiyana peyar. yen valkaiyil marakkamudiyatha novel "ponniyin selvan".pala murai padithulen. nan thanjai mannil piranthaval. ungal varigal parthavudan meendum novel padikka aavalaka vullathu.

Anonymous சொல்வது:

enaku ponniyin selvan romba romba pidichuruku,bt nandhini enna anal,veera pandiyanin kullanthai than nandhini,mathuranthaharna,sundara solora thane manthahiniya love panunaru apadi irukum pothu epadi veera pandiyan appava ahuvan,