அண்மைக்கால இலத்திரனியல் ஊடகங்களின் அசுர வளர்ச்சியும் இணையத்தின் மூலமான ஒலி/ஒளி பரப்புகளும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குகின்றன என்பது அப்பட்டமான உண்மை.
ஒருகாலத்தில் வானொலி கேட்க வானொலிதான் தேவைப்பட்டது ஆனால் இன்றோ இணையம் செல்லிடப்பேசிகள், MP3/MP4 Players என இலத்திரனியல் சாதனங்களின் உதவியால் எங்கிருந்தும் வானொலிகளைக் கேட்கமுடியும் என்ற நிலை வந்துவிட்டது. தொலைக்காட்சிகளுக்கு இணையமூலமான இணைப்புகள் குறைவு என்றாலும் பல நிகழ்ச்சிகள் இணையத்தில் பின்னர் தரவிறக்கிக் கொள்ளமுடியும்.
இதே நேரம் கேபிள் தொலைக்காட்சிகள் Satellite தொலைக்காட்சிகளின் அதீத வளர்ச்சியினால் உலகின் பெரும்பாலான தொலைக்காட்சிச் சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடிகின்றது. இதனால் உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்களுக்கு பேரிடி.
இலங்கையைப் பொறுத்தவரை பல வருடங்களாக அரசாங்கத்தின் ரூபவாஹினியே கோலோச்சிக் கொண்டிருந்தது. தமிழில் செய்திகளும் ஏதோ ஒரு நாளில் கலையரங்கம் என்ற நிகழ்ச்சியும் பொங்கல், தீபாவளிகளில் மட்டும் தமிழ்த் திரைப்படங்களும் ஒளிபரப்பினார்கள்.
தொண்ணூறுகளின் கடைசிக் காலத்தில் தனியார் தொலைக்காட்சிகளும் வான்னொலிகளும் அனுமதி கிடைத்தபடியினால் பல்கிப் பெருகின. சிங்கள மொழிமூல தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் பெருகினாலும் தமிழ்மொழி மூலம் சக்தி தொலைக்காட்சி மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு ஏகபோக உரிமையாக(Monopoly) இருந்தார்கள். கீரைக் கடைக்கு போட்டியாக எதிர்க் கடையாக ரூபவாஹினியின் "ஐ" தொலைக்காட்சி இருக்கும் என எதிர்பார்த்தால் அவர்களோ கிரிக்கெட் அல்லது ஏனைய அரச நிகழ்வுகள் நடக்கும் போது தமிழ் நிகழ்ச்சிகளை நிறுத்துவதால் சக்தியின் ஆதிக்கம் மேலோங்கியே இருந்தது.
இதனால் தானோ என்னவோ சக்தி தொலைக்காட்சியினர் தாங்கள் செய்வதுதான் சரி என்ற சர்வாதிகாரப் போக்கில் பல தரமற்ற நிகழ்ச்சிகளையும் சன்னிடம் இருந்து வாங்கிய மெஹா சீரியல்களையும் ஒளிபரப்புகின்றார்கள்.
ஆரம்பத்தில் நன்றாக தமிழ் மொழியின் சக்தியாக விளங்கிய இவர்கள் தற்போது ஆங்கில மொழியின் அல்லது இந்தியத் தமிழின் சக்தியாக விளங்குகின்றார்களோ என்ற எண்ணம் பலரிடம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தியாவில் ஒதுக்கப்பட்ட அறிவிப்பாளர்களை வைத்து நிகழ்ச்சி படைப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களேயாகும்.
இவர்களுக்கு போட்டியாக விளங்கிய "ஐ" தொலைக்காட்சி "நேத்ரா" எனப் பெயர் மாற்றினாலும் கிரிக்கெட் நடந்தால் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு தடைதான். ஆனால் "ஐ"யாக இருந்தால் என்ன நேத்ராவாக இருந்தால் என்ன நம்மவர்கள் தான் அங்கே நிகழ்ச்சி செய்கின்றார்கள். அத்துடன் இவர்களின் தமிழ் உச்சரிப்பும் மொழி ஆளுமையும் பாராட்டத்தக்கது. சக்தி அறிவிப்பாளர்களின் தமிழ் உச்சரிப்புகள் இவர்கள் எந்த வட்டாரத் தமிழ் பேசுகின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்படுத்தும். இந்திய அறிவிப்பாளினிகளை கொப்பியடிக்கப் போய் வான்கோழிகளாக பல பெண் அறிவிப்பாளினிகள் மாறிவிட்டார்கள்.
அண்மைக்காலமாக சக்தியில் புதிய பல அறிவிப்பாளர்கள் இருப்பது பாராட்டத்தக்கது, பல காலமாக சகல நிகழ்ச்சிகளிலும் ப்ரியமான அறிவிப்பாளினிதான் தமிழைக் கொலை செய்வார். இப்போ புதிய மொழிக் கொலைகாரர்கள், அதிலும் இவர்கள் எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் என்பதைப் பற்றி பொருட்படுத்தாமல் முற்றுப்புள்ளிகள் இல்லாமல் தொடர்ந்து ஏதோ கதைப்பார்கள்.
சக்தியின் காலை நிகழ்ச்சிக்குப் பெயர் "குட்மோர்னிங் ஸ்ரீ லங்கா" இதில் பலதரப்பட்ட விடயங்கள் பேசுவார்கள். இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் எல்லாம் சொல்வார்கள். ஆனால் கோவில் விசேட நிகழ்வுகள் சொல்லும் போது சமஸ்கிருத உச்சரிப்புகளான அஸ்டோத்ர , சகஸ்ரநாம போன்றவைகளிலும் ஏனைய உற்சவங்களின் பெயர்களிலும் தடுமாறுவார்கள்.
தமிழ்ப் பெண்கள் என்றால் கணவன் இறந்தபின்னர் அவரின் உடலுக்கு முன்னால் தான் தலைவிரி கோலமாக இருக்கவேண்டும், ஆனால் நம்ம அறிவிப்பாளினிகள் காலை வேளையில் தலைவிரிகோலமாகவே இருப்பார்கள் (இது பற்றி பலர் பத்திரிகைகளில் எழுதினாலும் நம்ம குத்துவிளக்குகள் கணக்கில் எடுப்பதில்லை).
பெரும்பாலும் இவர்கள் எந்த நிகழ்ச்சிக்கும் தம்மை தயார்ப்படுத்தி செய்துவருவதில்லைப் போல் எண்ணத் தோன்றும். ஏனென்றால் யாரையாவது பேட்டி எடுத்தால் அவரைப் பற்றியோ அவர் சம்பந்தப்பட்ட துறை பற்றியோ அறிந்திருக்காமல் அந்த நேரத்தில் தோன்றும் கேள்விகளையே கேட்பார்கள்.
ஒருமுறை உறவினர் ஒருவர் வீட்டில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிகொண்டிருந்தது ஒரு நேயர் தொலைபேசியில் அறிவிப்பாளினியின் சுக நலன்களை விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போ என் உறவினர் ஒரு குறீப்பிட்ட நேயரின் பெயரைக் குறிப்பிட்டு என்ன அவரை இன்னும் காணவில்லை. இவர்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட நேயர்கள் மட்டும் தினம் தினம் தொலைபேசி எடுப்பார்கள் என்றார்.
அண்மைக்காலமாக இவர்களின் சேவை பல இடங்களில் தெளிவில்லாமலும் தெரியாமலும் இருக்கின்றது, இதனையும் அவர்களுக்குச் சொன்னால் செவிசாய்ப்பதில்லை.
அத்துடன் கேபிள் தொலைக்காட்சிகளின் அண்மைக்கால வரவால் இவர்களின் சொந்த தயாரிப்புகளை தவிர்த்து ஏனையவற்றை சன்னிலையே பார்த்துவிடுகின்றார்கள்.
இவர்களின் வானொலியில் இன்னொரு நிகழ்ச்சிக்கு பெயர் சூப்பர் வொய்சர்ஸ். சில அறிவிப்பாளினிகள் இதனை அவசரமாக உச்சரிக்கும் போது சூப்பவாய்சர்ஸ் என கேட்கும். இந்த நிகழ்ச்சி என்னவென்றால் ஒருவரின் தமிழ் மொழி ஆற்றலைத் தெரிந்துகொள்வது. விஜய் தொலைகாட்சியின் "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சியைப் பார்த்து தொடங்கிய நிகழ்ச்சி இதுவாகும் ஆனால் நிகழ்ச்சியின் பெயரோ ஆங்கிலத்தில்.
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கரை பார்த்து சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சி சீசன் 3 நடக்கின்றது. நம்ம நாட்டுத் திறமைகளை வெளிக்கொணரும் நல்ல நிகழ்ச்சி. இவர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் கிடைத்தாலும். தோற்றவர்கள் அழுவதையும் சண்டைபோடுவதையும் காட்டி வெறுப்பேத்துகின்றார்கள். இந்த நிகழ்ச்சியை தொகுத்தளித்தவர் ஆங்கிலேய வம்சாவளியோ தெரியாது காரணம் அவரின் வாயில் தமிழ் வராது வந்தாலும் நொண்டியடிக்கும். தமிழில் அழகாகப் பேசும் இன்னொரு அறிவிப்பாளரையே முழு நிகழ்ச்சிக்கும் தொகுத்தளிக்க விட்டிருக்கலாம்.
நடுவர்களோ அடிக்கடி ஸ்ருதியைத் தேடுவார்கள். ஏற்கனவே இந்த ஸ்ருதியை வைத்து இவர்களின் போட்டி வானொலி நக்கலடித்தது இன்னும் நினைவில் நிற்கின்றது.
இவர்களின் குறைகள் சொல்லிக்கொண்டிருந்தால் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கலாம். இவர்களுக்கான எதிர்க்கடை கொஞ்சம் வீரியமாக இருந்தால் இவர்கள் தங்களை மறுபரிசோதனை செய்யவேண்டியிருக்கும். பிரமாண்டமாக புதிய அனுபவத்திற்க்கு தயாராகுங்கள் என இன்னொரு தொலைக்காட்சி வரவிருக்கின்றது, அவர்கள் இவர்களுக்கு போட்டிகொடுப்பார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.
வானொலிகளைப் பொறுத்தவரை பல வானொலிகள் இருப்பதால் ஆரோக்கியமான போட்டி நிகழ்வதாலும் பல தரமான நிகழ்ச்சிகள் நேயர்களுக்கு கிடைக்கின்றன. ஏற்கனவே வானொலிகள் பற்றி ( தமிழ்மொழிக் கொலைகாரர்கள்
) எழுதியிருப்பதால் அதில் தவறவிடப்பட்ட சில விடயங்கள் மட்டும் இந்தப் பதிவில்.
சில வானொலிகள் யார் தங்களுக்குள் முதல்வன் எனப் போட்டி போடுகின்றார்கள். இது நேயர்களைக் குழப்புகின்றது. சூரியன் சொல்கின்றது நான் தான் முதல்வன் என ஆனால் சக்தியோ தங்களை முதல்தர வானொலி வல்லவன் எனச் சொல்லிக்கொள்கின்றார்கள். தனியார் வானொலிகளில் முதலில் ஆரம்பித்தது சூரியன் என்ற வகையில் அவர்களின் முதல்வன் என்ற பதம் அவர்களுக்குப் பொருந்தினாலும் வானொலி நிகழ்ச்சிகளின் அவர்கள் முதல்வனா என்பது நேயர்க்ள் தான் சொல்லவேண்டும்.
அதே நேரம் சில பெண் வானொலி அறிவிப்பாளினிகள் தங்களை மிர்ச்சி சுசித்திரா போல் காட்டிக்கொள்ள மிகவேகமாக பேசுகின்றார்கள். இதனால் அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என விளங்குவதேயில்லை. எலிசபத் மகாராணியின் மருமக்கள் போல் இவர்கள் பேசும் ஆங்கிலம் அதிலும் இவ்வளவு காலமும் வானொலிகள் யாருக்கு இந்தப் பாடலை யார் யாருக்காக கேட்கின்றீர்கள் எனக் கேட்பார்கள் ஆனால் இவர்களோ யாருக்கு டெடிக்கேட் பண்ணுகின்றீர்கள் என சன் மியூசிக் அறிவிப்பாளினிகளைப் பின்பற்றுகிறார்கள். அத்துடன் அவர்கள் பேசும் பாணியும் இந்திய அறிவிப்பாளினிகளின் பாணி. உங்கள் வானொலிகளைப் கேட்பவர்கள் பெரும்பாலும் இலங்கையர் தான் அவர்களிடம் So, But, Suppose, எல்லாம் தேவையா? நல்ல காலம் ஆண் அறிவிப்பாளர்கள் இந்த மாயையில் விழவில்லை.
ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த இலங்கை வானொலியில் எண்ணற்ற நல்ல குரல், மொழி ஆளுமை உள்ள அறிவிப்பாளர்கள் இருந்தார்கள். ஆண்கள் வரிசையில் பி,எச். அப்துல் ஹமீட், கே.எஸ்.ராஜா. எஸ். எழில்வேந்தன், இளையதம்பி தயானந்தா, மயில்வாகனம் சர்வானந்தா, நடராஜசிவம் எனப் பட்டியல் நீளும் தற்போதைய இளம் ஆண் அறிவிப்பாளர்களில் ஒரு சிலர் இவர்களின் இடத்தைப் பிடித்திருக்கின்றார்கள், பிடிப்பார்கள், ஆனால் ராஜேஸ்வரி சண்முகம், புவனலோஜினி, கமலினி செல்வராஜன், ரேலங்கி செல்வராஜா இடத்திற்க்கு போட்டியாக எந்த இளம் பெண் அறிவிப்பாளினிகளும் இல்லை என்பது கவலைக்குரிய விடயம்.
எது எவ்வாறாயினும் தமிழ் மொழியை வளர்க்கும் பொறுப்பு இந்த இலத்திரனியல் ஊடகங்களின் கைகளிலும் இருக்கின்றது என்ற உண்மையை உணர்ந்து மொழிப் பற்றுடன் இவர்களே தங்கள் தவறை உணர்ந்து செயல்படுவார்களாயின் தென்றலாக சூரிய சக்தி மாறி வெற்றி கிடைக்கும்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
69 கருத்துக் கூறியவர்கள்:
சரியான நேரத்தில் சரியான பதிவு வந்தி. அடிக்கடி இப்படி குறைகளை எடுத்து கூறியும் ”நீ என்னா வேண்டுனாலும் சொல்லிட்டு போ, நான் செய்றததான் செய்வேன்” என நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்பது கவலையான விடயமே.
அருமையான பதிவு.. நல்ல நேர்த்தியன கண்ணோட்டம்.. நல்லாயிருக்கு.. ஆனால் என்ன அவர்கள் மாறவா போகின்றார்கள்.. நாங்கள் வானொலினை மாற்றுவோம்.. சக்தியும் சூரியனும் வேண்டாம்.. வெற்றியோதும்.. அதுவும் மாறாது இருந்தால் நல்லதே..
அப்துல் ஹமீது என்னும் நபர்தான் எனக்குத் தெரிந்த/ஞாபகம் கொண்ட வானொலி நபர். பிறகுதான் மற்றவரெல்லாம். அவரின் தமிழின் மீது எனக்கு அளவளாத அவா
அட நீங்க போங்க வந்தியண்ணா...
சொத்தியப் புரியாணி இல்லாட்டிக்கு பரவாயில்லாம இருக்கும் எண்டு நம்பி சக்தி சுப்பர் ஸ்ரார் பாத்தன்... புதுசா வந்திருக்கிறவன் அதவிட கொடுமையா இருக்கிறான்...
அவன் பேர் வெற ஏதோ டொங்கி சங்கராம்.... பேருக் கேத்தமாதிரியே இருக்கிறான்...
இவர்களை விமர்சித்து நான் தான் களைத்துவிட்டேன்.
திருந்த மாட்டார்கள்...
வெற்றி தொலைக்காட்சி நன்றாக செய்வார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர்களும் ஏமாற்றிவிட்டார்கள்.
விரைவில் சொந்த நிகழ்ச்சிகள் செய்வார்கள் என ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
நேத்ராவில் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டு புதிய அலைவரிசை ஒன்றில் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்புச் செய்தால் நன்றாக இருக்கும்.
என்னைப் பொறுத்தவரை சக்தியோடு ஒப்பிடும் போது நேத்ரா எவ்வளவோ மேல்.
வசந்தம் தெளிவில்லாமல் இருக்கிறது.
இப்போது டான் தமிழ் ஒளி ஒளிபரப்பாகிய UHF அலைவரிசையில் ஒளிபரப்புகிறார்கள். ஆனால் வசந்தத்தில் எந்த வசந்தத்தையும் என்னால் காணமுடியவில்லை.
அவர்கள் சக்திக்குப் போட்டியாக தங்களை நினைத்துக் கொண்டதால் நிறைய நிகழ்ச்சிகள், அறிவிப்பு முறைகள் நன்றாக இருக்கவில்லை.
புதிய தொலைக்காட்சியா? இலங்கையிலா? யாரது...???
வானொலிகளில் ஓரளவுக்கு ஆரோக்கியமான போட்டி நிலவுவது உண்மைதான்...
இன்னும் தங்களை மேம்படுத்துவார்கள் என நம்புவோம்...
உள்ளதை எல்லாம் புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள் .
எப்போதும் முதல்வன் சூரியன் தான் .
நல்ல பதிவு
அருமையான பதிவு
உள்ளதை உள்ளபடி எழுதியுள்ளீர்கள், மாற்றம் வருமா
தெளிவான நேர்மையான விமர்சனம் வந்தி..
நானே ஒரு ஒலிபரப்பாலனாக இருப்பதால் போட்டி வானொலிகள்,தொ.கா பற்றி விமர்சிக்க விரும்பவில்லை.
எனினும் வெற்றி டிவி பற்றியும் இங்கே பேசப்பட்டிருப்பதால்,
எமது தயாரிப்புக்கள் வந்து நிகழ்ச்சிக் கட்டமைப்புக்கள் வந்த பிறகு விமர்சனத்துக்கு தயாராகிறேன். :)
இப்போதும் ஒரு வகை பரீட்சார்த்தம் தான்.
ஆனாலும் சில ஒளிபரப்பு நெறிகளைப் பின்பற்றி வருகிறோம்.
என்னுடைய பின்னூட்டத்தில் ஒரு சிறு எழுத்துப் பிழை.. பொறுத்தருளவும்..
ஒலிபரப்பாளன் .. ஒளியும் சேர்ந்து தான்.. ;)
சக்தி பற்றி என்னால் திரட்ட முடிந்த பதிவுகள்....
பாருங்கள்....
http://unchal.blogspot.com/2009/08/shakthitv-programs.html
http://tamilgopi.blogspot.com/2009/09/blog-post.html
http://nkashokbharan.blogspot.com/2009/08/blog-post_10.html
http://enularalkal.blogspot.com/2009/07/blog-post_29.html
http://sidaralkal.blogspot.com/2009/10/blog-post_05.html
************************8
அப்படியே லோஷன் அண்ணாவிற்கு....
நான் நீங்கள் சொந்தமாக நிகழ்ச்சி செய்வீர்கள் என்று எதிர்பார்த்து அத நடக்கவில்லை என்பதைத் தான் ஏமாந்துவிட்டேன் என்றேன்...
ஏனென்றால் உங்களிடமிருந்து இப்படியான சீரழிவில்லாத நிகழ்ச்சிகளைத் தரமுடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது....
அதனால் தான் சொன்னேன்....
உங்கள் ஊர் ஒளிபரப்புகளை தெரிந்து கொண்டேன் நன்றி .. நல்ல பதிவு
please வந்தி அண்ணன் உந்த சொத்தி FM,TV பற்றி எழுத வேணாம்... எவ்வழவு எழுதினாலும் திட்டினாலும் உந்த பயலுகள் திருந்த மாட்டாங்க.
ஷ்ன் uncle தொடக்கம் வந்தி அண்ணன் வரை எழுதியாச்சு. திருந்த்தினாங்களா?
முதலில்
நல்ல அறிவிப்பாளர்களுக்கு வாரன்...
இப்போது என்னால் ஏத்துக்கோள்ள கூடிய 2 பேர் இருக்காங்கள்.. அவங்கள் வம்சா வழி வந்தவங்கள்
1>பெண் அறிவிப்பாளர் சர்வானந்தாவின் மகள்.
(//எந்த இளம் பெண் அறிவிப்பாளினிகளும் இல்லை என்பது கவலைக்குரிய விடயம்// தலை வரிட்ட சொல்லி தனி program குடுக்க சொல்லுங்க)
2>சண்முகநாதன் (லண்டன் கந்தையா) பேரன்.
3>அவர் நாட்டில் இல்லை- ஒரு பிராமணன் (எண்டு சொல்லுராங்கள்).
(எண்ட தரப்படுத்தல்.. ஒரு நிகழ்ச்சி செய்ய வாரங்கள் எண்ட தாயர் படுத்திட்டு வாரங்கள. எண்டு தான் பாக்குரனான். அந்த வகையில் இவங்கள் 3 பேரும் best)
அடுத்து முதல்வன் or சிறந்த் FM எண்டு பார்த்தால் எண்ட கருத்து படி வெற்றி தான். அதிலையும் 1 2 பேரை அண்ணன் கலைத்தார் எண்டா சரி.
வெற்றி தான் முதலில் நிக்குறது என்பதுக்கு FB அப்ப்லிக்கேஷன் நடாத்திய வாக்கெடுப்பு மூலம் தெரிந்த உண்மை. எண்ட கருத்து இதுதான்.
TV நான் விஜ்ய் தான் பாக்குறனான்...
வீட்டில hall இல அம்ம சொத்தி தான் எதாவது பிழையா அறிவித்தல் செய்வாங்கள். அதுக்கு அம்ம வோட சண்ட தான் உந்த பயலுகளால எனக்கு சப்பாடும் பிந்தி தான் வரும்.(நல்ல வேளை TV card போட்டு ஒரு dish உம் வச்சு இருககன்)
பிறகு உந்த shakthi super star நடத்துறவன்....
கொலை செய்யனும்... பய பில்ல கொமடி try பன்னுரான்...
காதால ரத்தம் வருது...
பிறகு வந்தி அண்ண... உந்த பிள்ளைக்கு(யார சொல்லுரன் எண்டு தெரியுதா) காசு குடுக்குறாங்களா யாரவது...?
பிரிச்சு மேய்ந்து விட்டீர்கள் மாமா. நானும் வாசித்த்தேன் என்பதற்கு இந்த பின்னூட்டம். மற்றும் படி நான் இங்கே வம்புக்கு வரல காரணம் நான் சிம்பு ரசிகன் இல்லை. எப்புடி தப்பிட்டமல்லே...
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
தமிழ் மொழியின் சக்தியா? யார் சொன்னது
அவர்கள் முன்பு ஓ போடு என்றொரு நிகழ்ச்சி நடாத்தினார்கள். ஏறத்தாள அனைவருமே அடித்துப் பிழிந்து துவைத்துக் காயப்போட்ட பின்னரும் அந்த நிகழ்ச்சி தொடர்ந்தது. இதுமாதிரி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
//என்னைப் பொறுத்தவரை சக்தியோடு ஒப்பிடும் போது நேத்ரா எவ்வளவோ மேல்.
//
உண்மைதான். இன்னும் இந்திய மாயையில் விழவில்லை.
எனக்கொரு டவுட். கேபிள் டிவிக்காரன் கொச்சைத்தமிழிலயோ பச்சைத்தமிழிலயோ போட்டால் நாங்கள் கெள்வி கெட்கலாம்.. மாசாமாசம் காசு கட்டுறதால உரிமை இருக்கு..
சக்தி டிவி அப்பிடியில்லையே நீ பாத்தா பாரு பாக்காட்டி போ எண்டு ப்ரீயாத்தானே டெலிகாஸ்ட் பண்ணுறாங்கள். அதுல எப்பிடி நீங்கள் பிழைபிடிக்கலாம்..?
நீங்கள் சினிமாவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ளலாம்.. காசுகட்டி அடிபிடிப்பட்டு போய் பார்க்கும்பொது ஊதியத்துக்குந்த வேலை செய்திருக்கப்படாவிட்டால் திட்டுவதில் பிரச்சனையில்லை.ஆனால் ஓசி டிவியை பார்த்விட்டு திட்டுவதில் எனக்குடன்பாடு இல்லை.. இது கம்பில போற கரப்பான கழுசானுக்க பிடிச்சு விட்டுட்டு எடுறா ஸ்பிரேய எண்டு கத்துறமாதிரி கிடக்கு..
வேணுமெண்டால் நீங்கள் ஒரு டிவியை ஸ்டார்ட் பண்ணிட்டு பலான படம் போடுங்கோ .. எஙககிட்ட காசு கேட்காத வரை நோ ப்ரொப்ளம்.. ;)
பிரிச்சு மேய்ஞ்சு எழுதியிருக்கிறியள்
ஐ சானல் இடையில் கண்மணி எண்டும் இருந்ததெல்லோ.
சுவர்ண ஒலி போனதும் கூட தமிழ் ஓரளவு காப்பாற்றுப்பட உதவினது எண்டு சொல்லுவினம்.
சிலவேளைகளில் தென்றல் தரும் 80கள் தான் எனக்குப் பிடிக்கும்.
நல்லாக் கிளறி விட்டிருக்கிறியள்! பிரிச்சு என்ற சொல்லைப் பாவிச்சதால நான் இப்படிச் சொல்லுறன்! என்ன வந்தி! குழப்பமோ! இங்க இப்பிடி யாரோடையும் கதைக்க முடியிறதில்ல. அதால இப்படி ஒரு பதில்! குறைநினைக்கிறீங்களோ?
நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகளின் பெயர்கள் எல்லாம் மக்களின் கருத்தை அறிந்து தான் வைப்பார்கள். பதிவுலகத்துக்கு வேண்டுமானால் பிடிக்காமல் இருக்கலாம்.. (பதிவுலகத்துக்கு கந்தசாமி பிடிக்காதமாதிரி)
//அவர்களோ கிரிக்கெட் அல்லது ஏனைய அரச நிகழ்வுகள் நடக்கும் போது தமிழ் நிகழ்ச்சிகளை நிறுத்துவதால்//
அவர்களை பொறுத்தவரை பார்வையாளர் குறைந்த நிகழ்ச்சியை இடைநிறுத்துவதுதானே முறை. அத்துடம் தமிழ் நிகழ்ச்சிகளூடாக வருமானமும் குறைவு அல்லவா?
இலங்கை அறிவிப்பாளர்களின் தமிழ் உச்சரிப்பை குறை கூறுபவர்கள் சன் டிவி பார்க்கிறார்கள் என்பது முரண்பாடு.
//யாரையாவது பேட்டி எடுத்தால் அவரைப் பற்றியோ அவர் சம்பந்தப்பட்ட துறை பற்றியோ அறிந்திருக்காமல் அந்த நேரத்தில் தோன்றும் கேள்விகளையே கேட்பார்கள்.//
அது எல்லாம் தெரிந்திருந்தால் இதைவிட நல்ல வேலைக்கு போயிருப்பார்கள்.
//விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கரை பார்த்து//
எல்லாமே அமெரிக்கன் ஐடலின் கொப்பிதான்..
//பிரமாண்டமாக புதிய அனுபவத்திற்க்கு தயாராகுங்கள//
வந்தால் நல்லது. இருந்தும் அவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இல்லை.
So, But, Suppose, எல்லாம் தேவையா?
அப்படித்தானே இப்போது சாதாரண மக்கள் பேசுகிறார்கள். எதற்கு திணிப்பு?
இளையதம்பி தயானந்தா போல் நல்ல தமிழில் பூரணமான வசனங்களில் இன்று வானொலி நிகழ்ச்சி செய்தால் எத்தனைபேர் கேட்பர்?
மொத்தத்தில் இது வர்த்தகம். இவர்கள் யாரும் நமக்கு இன்பத்தேன் தமிழ் பாய்ச்ச வரவில்லை. மக்கள் கேட்க கேட்க வியாபரம் கூடும். பொதுவாக மக்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை செய்கிறார்கள்.. விரும்பினால் கேட்போம்.. புல்லட் சொன்ன மாதிரி..
நான் எழுதியவை
TV உடன் ஞாயிறு
http://eksaar.blogspot.com/2009/09/tv.html
மின்னல் - ஆலை இல்லா ஊருக்கு
http://eksaar.blogspot.com/2009/08/blog-post_16.html
வெற்றியின் படத்தை பெரிதாய்போட்டு நடுநிலை தாண்டிவிட்டீர்கள்
சுவர்ண ஒலிதான் இன்றைய வானொலிக்கெல்லாம் முன்மாதிரி.. அதைத்தானே எல்லாரும் இன்று கொப்பி பண்ணி செய்துகொண்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் சக்தியில் வள்.. என்று எரிந்து விழுந்துகொண்டும்.. கெக்கே பிக்கே என்று சிரித்துக்கொண்டுமல்லவா இருந்தார்கள்.
//யோ வாய்ஸ் (யோகா) said...
சரியான நேரத்தில் சரியான பதிவு வந்தி. //
நன்றிகள் யோ இந்தப் பதிவு சில தடங்கல்களினால் பிந்திவந்திருகின்றது என்றே சொல்லவேண்டும்,
//அடிக்கடி இப்படி குறைகளை எடுத்து கூறியும் ”நீ என்னா வேண்டுனாலும் சொல்லிட்டு போ, நான் செய்றததான் செய்வேன்” என நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்பது கவலையான விடயமே.//
எங்கள் கடமை இவர்களின் நிறைகுறைகளைச் சொல்வது ஆனால் இவர்கள் ஒருநாளும் அவற்றைக் காதில் விழுத்தமாட்டார்கள் இதற்கான காரணமாக பெரும்பாலான மேலதிகாரிகள் பெருன்பான்மை இனம் அல்லது மொழிப் பற்றில்லாதவர்களாக இருக்கின்றார்கள் என்பது ஒரு காரணம். இதனை ஒருவர் தினக்குரலிலும் எழுதியிருந்தார்.
நல்ல விமர்சனம் வந்தி, எழுதவேணும் என்று நினைத்து எழுதாமல் போன ஒரு பதிவு இது.
பதிவுலகத்துக்கு வரமுதல் வீரகேசரிக்கு ஒன்று எழுதி அவர்கள் பிரசுரிக்க வில்லை.
ஆங்கிலம் இந்தியத்தமிழ் என்பவற்றை இந்த அறிவிப்பாளர் /அறிவிப்பாளினிகள் (சக்தியில்)தாங்களாக விரும்பித்தான் கதைக்கிறார்களா இல்லை மேலிடத்தின் அழுத்தமாக இருக்குமா என்று ஏதாவது விசாரித்து பார்த்தீர்களா ? நமக்கு தெரிஞ்சவங்க ரெண்டு மூணு பேர் இருக்கிறாங்கதானே? ஏனெனில் முதல்வன் கோசங்களையும் மேலிடங்கள்தான் போடவைக்கின்றன, அறிவிப்பாளர்கள் என்ன செய்வார்கள் பாவம்.
ஒரு சில லோஷனைப்போல் வளர்ந்த (ஊடகத்துறையில் ) அறிவிப்பாளர்கள் என்றால் சிறிது வாதாடி பார்க்க முடியும், ஆனால் இவர்கள் இன்னமும் புதிது, சுத்தமான தமிழில் பேசவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் , நீங்கள் இப்படிதான் பேசவேண்டும் என்ற உத்தரவு இருந்தால் என்ன செய்வது? எழுவாய் பயனிலை தெரியாமல் பேசினால், அதற்க்கு எவ்வளவு எழுதினாலும் தகும். ஆனால் இந்தியதமிழ் ஆங்கிலம் என்று வரும்போது அது, அவர்கள் கையில் இல்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் தொலைக்காட்சி, வானொலி இரண்டுக்கும் இந்திய இறக்குமதிகள்தான் தலைமை என்று கேள்விப்பட்டிருக்கிறேன் உண்மை தெரியவில்லை. எந்தவிதமான தயாரிப்புக்களுமில்லாமல் நிகழ்ச்சி செய்ய வருகிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. நான் கூட நினைப்பதுண்டு இப்பிடி கதைக்கிறாங்களே இவர்கள் தாங்கள் செய்யும் நிகழ்ச்சியை திரும்ப தொலைக்கட்சியில் பார்ப்பார்களா என்று, நான் சிங்கள, ஆங்கில தொலைக்காட்சிகளின் ரசிகனாக மாறுவதற்கு காரணமே இந்த அருவிப்பாலர்கல்தான் ( தெரியாமல் விட்ட எழுத்துப்பிழை அல்ல). கொஞ்சம் உள்வீட்டு இரகசியங்களை அறிய முடிந்தால் அறிந்து பார்த்து இன்னொரு பதிவு போடுங்கள்.
//சுபானு said...
அருமையான பதிவு.. நல்ல நேர்த்தியன கண்ணோட்டம்.. நல்லாயிருக்கு..//
நன்றிகள் சுபானு நீங்கள் கூட இதுபற்றி ஒருமுறை எழுதியிருக்கின்றீர்கள்.
//ஆனால் என்ன அவர்கள் மாறவா போகின்றார்கள்.. நாங்கள் வானொலினை மாற்றுவோம்.. சக்தியும் சூரியனும் வேண்டாம்.. வெற்றியோதும்.. அதுவும் மாறாது இருந்தால் நல்லதே..//
அவர்கள் கடைசிவரை மாறமாட்டார்கள் இது விழலுக்கு இறைத்த நீர் என்பது புரியும் ஆனாலும் எங்க கருத்துகளைச் சொல்வது எம் கடமை. நான் பெயருக்காக வானொலி கேட்பதில்லை ஒவ்வொரு வானொலியிலும் ஏதாவது ஒரு நல்ல நிகழ்ச்சி இருக்கும் அவற்றைமட்டும் கேட்பது. பெரும்பாலும் சகல வானொலிகளும் இரவு 9 மணிக்குப் பின்னர் செய்யும் நிகழ்ச்சிகள் மிகவும் நல்லவை. அதற்காக காலை நிகழ்ச்சிகள், பகல் நிகழ்ச்சிகள் நல்லதல்ல என்பதல்ல என் கருத்து. இரவில் அமைதியாகவும் சாந்தமாகவும் அறிவிப்பவர்கள் ஏன் பகலில் மட்டும் ஏன் கடுகதியாகப் பேசுகின்றார்கள் என்பதுதான் என் கேள்வி.
// ILA(@)இளா said...
அப்துல் ஹமீது என்னும் நபர்தான் எனக்குத் தெரிந்த/ஞாபகம் கொண்ட வானொலி நபர். பிறகுதான் மற்றவரெல்லாம். அவரின் தமிழின் மீது எனக்கு அளவளாத அவா//
இலங்கை வானொலி புகழ் திரு.அப்துல் ஹமீது அவர்கள் இலங்கைத் தமிழை அல்லது சுத்தத் தமிழை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரியவர்.
//கனககோபி said...
அட நீங்க போங்க வந்தியண்ணா...
சொத்தியப் புரியாணி இல்லாட்டிக்கு பரவாயில்லாம இருக்கும் எண்டு நம்பி சக்தி சுப்பர் ஸ்ரார் பாத்தன்... புதுசா வந்திருக்கிறவன் அதவிட கொடுமையா இருக்கிறான்... //
ஹாஹா அவர் என்ன பேசுகின்றார் என்பது பங்குபற்றுபவர்களுக்கே விளங்கவில்லை. பேசாமல் கஜமுகனையே இந்த நிகழ்ச்சியையும் தொகுத்தளிக்க விட்டிருக்கலாம்.
//இவர்களை விமர்சித்து நான் தான் களைத்துவிட்டேன்.
திருந்த மாட்டார்கள்...//
அதையும் பார்த்தேன் சமீபகாலமாக வலையிலும் பல ஊடகவியளாளர்கள் இருப்பதால் தான் இந்தப் பதிவு.
//வெற்றி தொலைக்காட்சி நன்றாக செய்வார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர்களும் ஏமாற்றிவிட்டார்கள். //
ஒரே ஒரு நாள் ஒரு நிமிடம் மட்டும் பார்த்தேன் காரணம் எங்கள் வீட்டில் கேபிள் வெற்றி இழுப்பதில்லை. இதனால் எந்தக் கருத்தும் சொல்லமுடியாது.
//விரைவில் சொந்த நிகழ்ச்சிகள் செய்வார்கள் என ஆவலோடு எதிர்பார்க்கிறேன். //
நானும் எதிர்பார்க்கின்றேன்.
//நேத்ராவில் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டு புதிய அலைவரிசை ஒன்றில் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்புச் செய்தால் நன்றாக இருக்கும்.//
ஹாஹா இதையும் பலர் பல இடத்தில் சொன்னார்கள் ஆனால் செய்கின்றார்கள் இல்லை. ஏனென்றால் விளையாட்டுப் பிரியர்கள் ஒப்பிட்டளவில் மிகவும் குறைவு.
//என்னைப் பொறுத்தவரை சக்தியோடு ஒப்பிடும் போது நேத்ரா எவ்வளவோ மேல்.//
உண்மைதான் நேத்ராவிடம் இருக்கும் வசதிகளுக்கு நல்ல தரமான நிகழ்ச்சிகள் செய்யலாம் ஆனால் இன்னும் பழைய சிலபஸ்சிலையே இருக்கின்றார்கள்.
// வசந்தம் தெளிவில்லாமல் இருக்கிறது. //
மெஹா தொலைக்காட்சியை ஒளிபரப்புகின்றார்கள். சில நிகழ்ச்சிகள் மட்டும் சொன்த தயாரிப்பு ஆனால் நேத்ராவின் கொப்பி போல் தான் இருக்கின்றது.
//புதிய தொலைக்காட்சியா? இலங்கையிலா? யாரது...???//
வெற்றி தொலைக்காட்சி.
//வானொலிகளில் ஓரளவுக்கு ஆரோக்கியமான போட்டி நிலவுவது உண்மைதான்... இன்னும் தங்களை மேம்படுத்துவார்கள் என நம்புவோம்...//
வானொலிகள் தங்களுக்குல் யார் முதல்வன் என மோதாமலும் நாங்கள் கேட்பது இதுதான் என சொல்லாமலும் இருந்தால் ஆரோக்கியமாக இருக்கும்.
//Pavi said...
உள்ளதை எல்லாம் புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள் .//
நன்றிகள் பவி. உண்மைகளைச் சொல்வதில் என்ன தயக்கம்.
//எப்போதும் முதல்வன் சூரியன் தான் .//
இது உங்கள் கருத்து.
//Pavi said...
உள்ளதை எல்லாம் புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள் .//
நன்றிகள் பவி. உண்மைகளைச் சொல்வதில் என்ன தயக்கம்.
//எப்போதும் முதல்வன் சூரியன் தான் .//
இது உங்கள் கருத்து.
//புலவன் புலிகேசி said...
நல்ல பதிவு///
நன்றிகள் புலவரே
//Vijay said...
அருமையான பதிவு
உள்ளதை உள்ளபடி எழுதியுள்ளீர்கள், மாற்றம் வருமா//
நன்றிகள் விஜய், மாற்றம் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும், இல்லை என்னத்தை கன்ணையா பாணியில் சொல்வது என்றால் வரும் ஆனால் வராது
//LOSHAN said...
தெளிவான நேர்மையான விமர்சனம் வந்தி.. //
நன்றிகள் லோஷன் ஒரு ஒளி/ஒலி பரப்பாளனிடம் இருந்து வந்த பாராட்டு என்பதால் நான் நடுநிலைமை தவறியோ அல்லது பிழையாகவோ எழுதவில்லை என நினைக்கின்றேன்.
//நானே ஒரு ஒலிபரப்பாலனாக இருப்பதால் போட்டி வானொலிகள்,தொ.கா பற்றி விமர்சிக்க விரும்பவில்லை.//
சரியானது .
//எமது தயாரிப்புக்கள் வந்து நிகழ்ச்சிக் கட்டமைப்புக்கள் வந்த பிறகு விமர்சனத்துக்கு தயாராகிறேன். :)//
எனக்கு வெற்றி தொலைக்காட்சி என் கேபிளில் வந்தால் விமர்சிக்கத் தயங்கமாட்டேன். விமர்சனம் என்பது குறைகள் மட்டுமல்ல நிறைகளைக் கூறுவதும் தான்.
// LOSHAN said...
என்னுடைய பின்னூட்டத்தில் ஒரு சிறு எழுத்துப் பிழை.. பொறுத்தருளவும்..
ஒலிபரப்பாளன் .. ஒளியும் சேர்ந்து தான்.. ;)//
ஒலிஒளிபரப்பாளன் எனச் சொல்லவும், அந்தக் காலத்து ஒலியும் ஒளியும் ஞாபகம் வருகின்றது.
//கனககோபி said...
சக்தி பற்றி என்னால் திரட்ட முடிந்த பதிவுகள்....
பாருங்கள்....//
இணைப்புகளுக்கு நன்றிகள் கோபி.
// jackiesekar said...
உங்கள் ஊர் ஒளிபரப்புகளை தெரிந்து கொண்டேன் நன்றி .. நல்ல பதிவு//
நன்றி அண்ணாச்சி முன்னர் தொப்புள் கொடி உறவுகளுக்குத் தெரிந்த ஒரே ஒரு வானொலி இலங்கை வானொலி மாத்திரமே.
// root said...
please வந்தி அண்ணன் உந்த சொத்தி FM,TV பற்றி எழுத வேணாம்... எவ்வழவு எழுதினாலும் திட்டினாலும் உந்த பயலுகள் திருந்த மாட்டாங்க.
ஷ்ன் uncle தொடக்கம் வந்தி அண்ணன் வரை எழுதியாச்சு. திருந்த்தினாங்களா?//
எல்லோரும் இதையேதான் சொல்றீயள் அப்போ யார் அவர்களுக்கு அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது. ஓ அப்படிக்காட்டியும் மாறவில்லை என்பதுதான் பலரின் ஆதங்கமே.
//1>பெண் அறிவிப்பாளர் சர்வானந்தாவின் மகள்.
(//எந்த இளம் பெண் அறிவிப்பாளினிகளும் இல்லை என்பது கவலைக்குரிய விடயம்// தலை வரிட்ட சொல்லி தனி program குடுக்க சொல்லுங்க)//
ஓ அவரா? அடப்பாவி ஏனப்பா என்னை இதில் இழுக்கின்றீர்கள்.
// 2>சண்முகநாதன் (லண்டன் கந்தையா) பேரன். //
இவரைப் பற்றிப் பலரும் சொல்லக்கேள்விப்பட்டிருக்கின்றேன்.
//3>அவர் நாட்டில் இல்லை- ஒரு பிராமணன் (எண்டு சொல்லுராங்கள்).//
இவர் நல்ல அறிவிப்பாளர்தான் ஆனால் இவர் தான் வானொலிகளிடையே சண்டையைத் தொடக்கியவர் என்ற கதை பரவலாக அடிபடுகிறது.
//அடுத்து முதல்வன் or சிறந்த் FM எண்டு பார்த்தால் எண்ட கருத்து படி வெற்றி தான். அதிலையும் 1 2 பேரை அண்ணன் கலைத்தார் எண்டா சரி.//
இது உங்கள் கருத்து தானே. ஏனையா இந்தக் கொலை வெறி அவர்களை கொஞ்சம் மேம்படுத்தினால் சரி எனச் சொல்லவும்.
//வெற்றி தான் முதலில் நிக்குறது என்பதுக்கு FB அப்ப்லிக்கேஷன் நடாத்திய வாக்கெடுப்பு மூலம் தெரிந்த உண்மை. எண்ட கருத்து இதுதான்.//
இது எப்போ நடந்தது?
//TV நான் விஜ்ய் தான் பாக்குறனான்...//
நானும் தான்.
//பிறகு உந்த shakthi super star நடத்துறவன்....
கொலை செய்யனும்... பய பில்ல கொமடி try பன்னுரான்...
காதால ரத்தம் வருது...//
ஏன் இந்தக் கொலை வெறி அவர் பாவம் யார் சொல்லி இப்படிச் செய்கின்றாரோ? ஆனாலும் பயபிள்ளை நல்ல நகைச்சுவை உணர்வுடையவர் இல்லையென்றால் பாட்டு நிகழ்ச்சியை முஸ்பாத்தி நிகழ்ச்சி ஆக்குவாரோ.
//பிறகு வந்தி அண்ண... உந்த பிள்ளைக்கு(யார சொல்லுரன் எண்டு தெரியுதா) காசு குடுக்குறாங்களா யாரவது...?//
நான் அப்பாவி.
யார் இந்த என்ன கொடும சார் என்ற ரோதனை பிடிச்சவன்?
தன்னை தனியனாகக் காட்டிக் கொள்வதில் ஈன விருப்பம் கொண்ட ஒரு ஈகோ கேசா?
//இளையதம்பி தயானந்தா போல் நல்ல தமிழில் பூரணமான வசனங்களில் இன்று வானொலி நிகழ்ச்சி செய்தால் எத்தனைபேர் கேட்பர்?
//
( என்ன கொடும சார் said...
சுவர்ண ஒலிதான் இன்றைய வானொலிக்கெல்லாம் முன்மாதிரி.. அதைத்தானே எல்லாரும் இன்று கொப்பி பண்ணி செய்துகொண்டிருக்கிறார்கள். )
அவனுடைய ரசனையைப் பாருங்கோ..
திருந்தாதுகள்.இவனை மாதிரிக் கொஞ்சப் பேரால தான் இன்னும் கழிவுகள் எல்லாம் அறுப்பு மன்னிக்க அறிவிப்பு செய்யுதுகள்.
இவன்டை ப்லோக்கைப் பார்த்தாலே ரசனை தெரியுதே.
புல்லட் said...
எனக்கொரு டவுட். கேபிள் டிவிக்காரன் கொச்சைத்தமிழிலயோ பச்சைத்தமிழிலயோ போட்டால் நாங்கள் கெள்வி கெட்கலாம்.. மாசாமாசம் காசு கட்டுறதால உரிமை இருக்கு..
சக்தி டிவி அப்பிடியில்லையே நீ பாத்தா பாரு பாக்காட்டி போ எண்டு ப்ரீயாத்தானே டெலிகாஸ்ட் பண்ணுறாங்கள். அதுல எப்பிடி நீங்கள் பிழைபிடிக்கலாம்..?
நீங்கள் சினிமாவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ளலாம்.. காசுகட்டி அடிபிடிப்பட்டு போய் பார்க்கும்பொது ஊதியத்துக்குந்த வேலை செய்திருக்கப்படாவிட்டால் திட்டுவதில் பிரச்சனையில்லை.ஆனால் ஓசி டிவியை பார்த்விட்டு திட்டுவதில் எனக்குடன்பாடு இல்லை.. இது கம்பில போற கரப்பான கழுசானுக்க பிடிச்சு விட்டுட்டு எடுறா ஸ்பிரேய எண்டு கத்துறமாதிரி கிடக்கு..
வேணுமெண்டால் நீங்கள் ஒரு டிவியை ஸ்டார்ட் பண்ணிட்டு பலான படம் போடுங்கோ .. எஙககிட்ட காசு கேட்காத வரை நோ ப்ரொப்ளம்.. ;)
//
இவரும் இப்பிடியோ?
பகிடியா சொன்னாரோ இல்லாட்டி இவர் ரசனையும் இப்பிடியோ?
ஆண்டாவா தமிழ் மக்களைக் காப்பாத்தும்
// SShathiesh said...
பிரிச்சு மேய்ந்து விட்டீர்கள் மாமா. நானும் வாசித்த்தேன் என்பதற்கு இந்த பின்னூட்டம். மற்றும் படி நான் இங்கே வம்புக்கு வரல காரணம் நான் சிம்பு ரசிகன் இல்லை. எப்புடி தப்பிட்டமல்லே...//
ஏன் உங்களுக்கு நடிக்கத் தெரியாதா? விஜய் ரசிகன் என்பதைக் காட்டிவிட்டீர்கள்? அமைதியாக ஒதுங்கிக்கொள்வது. (என்ன சொல்கின்றேன் என்பதுபுரிகின்றதா?)
// ஆதிரை said...
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.//
நல்ல தத்துவம்.
//Anonymous said...
தமிழ் மொழியின் சக்தியா? யார் சொன்னது//
அவர்கள் தான் சொல்கின்றார்கள்.
//Subankan said...
அவர்கள் முன்பு ஓ போடு என்றொரு நிகழ்ச்சி நடாத்தினார்கள். ஏறத்தாள அனைவருமே அடித்துப் பிழிந்து துவைத்துக் காயப்போட்ட பின்னரும் அந்த நிகழ்ச்சி தொடர்ந்தது. இதுமாதிரி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.//
அந்த கொடுமையை என்னவென்று சொல்வது.
//என்னைப் பொறுத்தவரை சக்தியோடு ஒப்பிடும் போது நேத்ரா எவ்வளவோ மேல். //
உண்மைதான். இன்னும் இந்திய மாயையில் விழவில்லை.//
அத்துடன் அவர்களின் நிகழ்ச்சியை நடத்தும் விதமும் சிறப்பானது.
//புல்லட் said...
எனக்கொரு டவுட். கேபிள் டிவிக்காரன் கொச்சைத்தமிழிலயோ பச்சைத்தமிழிலயோ போட்டால் நாங்கள் கெள்வி கெட்கலாம்.. மாசாமாசம் காசு கட்டுறதால உரிமை இருக்கு.. //
புல்லட் நாங்கள் இங்கே காசு கொடுத்து கேள்வி கேட்பதோ அல்லது கொடுக்காமல் கேட்பதோ அல்ல பிரச்சனை. ஆனால் வானொலிகள் தொலைக்காட்சிகள் என்பன சேவைகள் ஆகும். இவைகள் பணம் பண்ணினாலும் இவர்களின் நோக்கம் சேவையுமாகும் (பத்தாம் வகுப்பில் படித்த வர்த்தகம் ஞாபகமில்லை இல்லையென்றால் இலகுவாக விளக்கிவிடுவேன்). ஆகவே இவர்களின் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அவர்களது கடமை.
//சக்தி டிவி அப்பிடியில்லையே நீ பாத்தா பாரு பாக்காட்டி போ எண்டு ப்ரீயாத்தானே டெலிகாஸ்ட் பண்ணுறாங்கள். அதுல எப்பிடி நீங்கள் பிழைபிடிக்கலாம்..? //
அவர்கள் ப்ரியாகச் செய்தாலோ காசுக்குச் செய்தாலோ அவர்களின் பிழையான மொழிப் பிரயோகங்களினால் எதிர்காலச் சந்ததி பாதிக்கப்படும். இதனால் தான் பலர் அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுகின்றாகளே ஒழிய அவர்கள் மேல் எந்தக் கோபமும் இல்லை.
//நீங்கள் சினிமாவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ளலாம்.. காசுகட்டி அடிபிடிப்பட்டு போய் பார்க்கும்பொது ஊதியத்துக்குந்த வேலை செய்திருக்கப்படாவிட்டால் திட்டுவதில் பிரச்சனையில்லை.ஆனால் ஓசி டிவியை பார்த்விட்டு திட்டுவதில் எனக்குடன்பாடு இல்லை.. இது கம்பில போற கரப்பான கழுசானுக்க பிடிச்சு விட்டுட்டு எடுறா ஸ்பிரேய எண்டு கத்துறமாதிரி கிடக்கு..//
மிகவும் தவறான கண்ணோட்டம்.
//வேணுமெண்டால் நீங்கள் ஒரு டிவியை ஸ்டார்ட் பண்ணிட்டு பலான படம் போடுங்கோ .. எஙககிட்ட காசு கேட்காத வரை நோ ப்ரொப்ளம்.. ;)//
ஆனால் அரசாங்கம் என்னை உள்ளே போட்டுவிடும்.
//கானா பிரபா said...
பிரிச்சு மேய்ஞ்சு எழுதியிருக்கிறியள்//
நன்றிகள் பிரபா இன்னொரு ஒலிபரப்பாளரிடம் இருந்து பாரட்டுகள்.
//ஐ சானல் இடையில் கண்மணி எண்டும் இருந்ததெல்லோ. //
இல்லை அதனைத் தமிழில் கண்மணிச் சேவை என பத்திரிகைகள் எழுதின ஆனால் ஐ பெயர் மாற்றவில்லை/
//சுவர்ண ஒலி போனதும் கூட தமிழ் ஓரளவு காப்பாற்றுப்பட உதவினது எண்டு சொல்லுவினம்.//
உண்மைதான், அவர்கள் செய்த ஒரே ஒரு நல்ல காரியம் ஒரு பிரபலத்தின் திருமணம் தான்.
//சிலவேளைகளில் தென்றல் தரும் 80கள் தான் எனக்குப் பிடிக்கும்.//
இன்றைக்கும் பொங்கும் பூம்புனல் கேட்டுவிட்டு வேலைக்குச் செல்பவர்கள் இருக்கின்றார்கள். தென்றல் மட்டுமல்ல சகல வானொலிகளும் இரவுகளில் தரும் 80கள் இனிமைதான்.
//தங்க முகுந்தன் said...
நல்லாக் கிளறி விட்டிருக்கிறியள்! பிரிச்சு என்ற சொல்லைப் பாவிச்சதால நான் இப்படிச் சொல்லுறன்! என்ன வந்தி! குழப்பமோ! இங்க இப்பிடி யாரோடையும் கதைக்க முடியிறதில்ல. அதால இப்படி ஒரு பதில்! குறைநினைக்கிறீங்களோ?//
நன்றிகள் முகுந்தன் அண்ணா. எந்தக் குழப்பவும் இல்லை. பார்ப்போம் கிளறியதில் எவராவது திருந்துகிறார்களா என.
// என்ன கொடும சார் said...
நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகளின் பெயர்கள் எல்லாம் மக்களின் கருத்தை அறிந்து தான் வைப்பார்கள். பதிவுலகத்துக்கு வேண்டுமானால் பிடிக்காமல் இருக்கலாம்.. (பதிவுலகத்துக்கு கந்தசாமி பிடிக்காதமாதிரி)//
அப்படியா ? நீங்கள் பதிவுலகம் மட்டும்தான் படிப்பீர்கள்போலத் தெரிகின்றது. பத்திரிகைகளிலும் இவர்கள் நிகழ்ச்சிகளை விமர்சனம் செய்கின்றார்களே பார்க்கவில்லையா? இதுவரை எந்த நிகழ்ச்சிகளையும் மக்களிடம் கேட்டுப் பெயர் வைப்பதில்லை. கந்தசாமி ஏன் இங்கே? கருத்தை கருத்தால் வெல்லத் தெரியாவிட்டால் மற்றவர்களையும் பதிவர் சந்திப்புகளையும் பொய் எனச் சொல்லிக்கொண்டு திரியும்.
//அவர்களை பொறுத்தவரை பார்வையாளர் குறைந்த நிகழ்ச்சியை இடைநிறுத்துவதுதானே முறை. அத்துடம் தமிழ் நிகழ்ச்சிகளூடாக வருமானமும் குறைவு அல்லவா?//
அப்படியென்றால் என்ன மண்ணாங்கட்டிக்கு தமிழ் நிகழ்ச்சிகள்.
//இலங்கை அறிவிப்பாளர்களின் தமிழ் உச்சரிப்பை குறை கூறுபவர்கள் சன் டிவி பார்க்கிறார்கள் என்பது முரண்பாடு.//
நான் சன் ரிவி பார்க்கின்றேன் என எங்கே சொன்னேன். மீண்டும் நீங்கள் ஒரு அரைகுறை என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.
//அது எல்லாம் தெரிந்திருந்தால் இதைவிட நல்ல வேலைக்கு போயிருப்பார்கள்.//
அப்படியென்றால் அங்கே இருப்பவர்கள் முட்டாள்கள் என நீங்கள் சொல்கின்றீர்கள். பல அறிவிப்பாளர்கள் படித்தவர்கள் பட்டதாரிகள் என்பது தெரியுமா?
//எல்லாமே அமெரிக்கன் ஐடலின் கொப்பிதான்..//
சரி சரி நம்பிட்டோம் அவன் கொப்பி அடித்தாலும் நிகழ்ச்சியை சிறப்பாகச் செய்கின்றான்.
//வந்தால் நல்லது. இருந்தும் அவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இல்லை.//
ஏன் இந்தக் காழ்ப்புணர்ச்சி. ஓ தெரியும் தெரியும்
//So, But, Suppose, எல்லாம் தேவையா?
அப்படித்தானே இப்போது சாதாரண மக்கள் பேசுகிறார்கள். எதற்கு திணிப்பு?//
அப்படியா எந்த கிராமத்தில் பேசுகின்றார்கள். சில ஆங்கில அல்லது பிற மொழிச் சொற்கள் கலந்து இருந்தாலும் இந்த வார்த்தைகள் அவர்கள் பேசுவதில்லை.
//இளையதம்பி தயானந்தா போல் நல்ல தமிழில் பூரணமான வசனங்களில் இன்று வானொலி நிகழ்ச்சி செய்தால் எத்தனைபேர் கேட்பர்?//
நான் எங்கேயாவது இலக்கணத் தமிழோ அல்லது சுத்ததமிழோ பாவிக்கச் சொன்னனா? சாதாரணமாகப் பேசும் தமிழில் நிகழ்ச்சி செய்யச் சொல்லித்தான் எல்லோரும் கூறுகின்றார்கள்.
//மொத்தத்தில் இது வர்த்தகம். இவர்கள் யாரும் நமக்கு இன்பத்தேன் தமிழ் பாய்ச்ச வரவில்லை. மக்கள் கேட்க கேட்க வியாபரம் கூடும். பொதுவாக மக்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை செய்கிறார்கள்.. விரும்பினால் கேட்போம்.. புல்லட் சொன்ன மாதிரி..//
அதே தான் வியாபாரம் தான் ஆனால் அப்ப ஏன் வர்த்தக சேவை, தேசிய சேவை என வைத்திருக்கின்றார்கள். புல்லட்டிற்க்கு சொன்ன பதிலே உங்களுக்கும்.
//வெற்றியின் படத்தை பெரிதாய்போட்டு நடுநிலை தாண்டிவிட்டீர்கள்//
ஐயா அறிவுக்கொழுந்தே எனக்கு இணையத்தில் கிடைத்த படங்களைப் போட்டுள்ளேன் அதில் வெற்றியின் படம் பெரிதாக இருக்கின்றது அவ்வளவுதான். ஏன் தென்றலை முன்னுக்குப் போட்டிருக்கின்றேன் தமிழிசில் சூரியனைப் போட்டிருக்கின்றேன் இது எல்லாம் உங்கள் ஞானக் கண்ணுக்குத் தெரியவில்லையா.
உங்கள் பிரச்சனை புரிகின்றது.
//என்ன கொடும சார் said...
சுவர்ண ஒலிதான் இன்றைய வானொலிக்கெல்லாம் முன்மாதிரி.. அதைத்தானே எல்லாரும் இன்று கொப்பி பண்ணி செய்துகொண்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் சக்தியில் வள்.. என்று எரிந்து விழுந்துகொண்டும்.. கெக்கே பிக்கே என்று சிரித்துக்கொண்டுமல்லவா இருந்தார்கள்.//
ஐயோ ஐயோ தயவு செய்து இரு நாட்கள் தரவும் இதனை நினைத்துச் சிரித்துவிட்டுவருகின்றேன்.
//இதுவரை எந்த நிகழ்ச்சிகளையும் மக்களிடம் கேட்டுப் பெயர் வைப்பதில்லை//
ஏன் இல்லை? R&D department எதற்கு இருக்கு?
//கந்தசாமி ஏன் இங்கே?//
பதிவுலகுக்கும் சாமானிய மனிதர்கட்கும் இருக்கும் இடைவெளியை காட்ட.. புரியலையா?
//மற்றவர்களையும் பதிவர் சந்திப்புகளையும் பொய் எனச் சொல்லிக்கொண்டு திரியும்//
உங்கள் பிரச்சனை புரிகின்றது.
அதாவது விமர்சனத்துக்கு நீங்கள் தயாரில்லை.. அப்படியானால் சக்திக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் அப்பு?
http://eksaar.blogspot.com/2009/10/iam-not-afraid-to-be-alone.html
//என்ன மண்ணாங்கட்டிக்கு தமிழ் நிகழ்ச்சிகள்.//
சும்மா இருக்கிற நேரத்தில் காசு உழைக்க.. :D
//நான் சன் ரிவி பார்க்கின்றேன் என எங்கே சொன்னேன். மீண்டும் நீங்கள் ஒரு அரைகுறை என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.//
இவர்களின் சொந்த தயாரிப்புகளை தவிர்த்து ஏனையவற்றை சன்னிலையே பார்த்துவிடுகின்றார்கள்.
என்று சொல்லியிருக்கிறீர்கள் இல்லையா? இந்திய பாணியை மக்கள் புறக்கணித்திருந்தால் சன் பார்ப்பார்களா? கேபிள் எடுப்பார்களா?
/அறிவிப்பாளர்கள் படித்தவர்கள் பட்டதாரிகள் /
பட்டம் ஒருதுறையில் தான் எடுப்பார்கள். BBA என்றால் வர்த்தகம். BA என்றால் கலை. இவர்களிடம் ஒரு வைத்தியரிடம் கேள்விகேட்கும் அளவுக்கு அறிவு இருக்குமா அப்பு?
/அப்படியா எந்த கிராமத்தில் பேசுகின்றார்கள்./
கிராமத்தில் வேலைமெனக்கெட்டு தொழிலுக்கு போகாம ரேடியோவா கேக்கிறாங்க? கேக்கெறவங்க அப்படித்தான் பேசுறாங்க.. நீங்க வெள்ளவத்தயில போய் பாருங்கோ..
//அப்ப ஏன் வர்த்தக சேவை, தேசிய சேவை என வைத்திருக்கின்றார்கள//
வெச்சவங்க கிட்ட கேளுங்கோ..தேசிய சேவை தேசிய நலனுக்காக நல்ல தமிழில் தானே செய்றாங்க..எத்தன பேர் கேக்கிறாங்க அத?
//இணையத்தில் கிடைத்த படங்களைப் போட்டுள்ளேன்//
ஐயா அறிவுக்கொழுந்தே image resize பண்ண தெரியாதோ,,,
என்ன கொடுமை சார் என்ற காழ்ப்புணர்சிக்கு
நீங்கள் பதிவர் சந்திப்புக்கு வரவில்லை என்ற ஆதாரம் எம்மிடம் இருக்கின்றது. அப்படி வந்திருந்தால் நீங்கள் பொய் பெயரில் வந்திருப்பீர்கள். ஒரு ஏமாற்றுக்காரரிடம் எங்கள் கருத்துகளை கேட்க நாம் தயாரில்லை.
Image resize செய்வது எனக்கும் தெரியும் ஆனால் நான் எழுதுவதே ஒழிய படங்களில் மாற்றம் செய்து என் நேரத்தை வீண்டிக்கமுயலவில்லை. உங்களின் காழ்ப்புணர்சிகளை எல்லாம் உங்கள் வலையில் வைத்துக்கொள்ளுங்கள் இங்கே வந்து குப்பை போடாதீர்கள்.
வணக்கம் வந்தி,
இலங்கை இலத்திரணியல் ஊடகத்துறையில் தொழிநுட்ப ரீதியிலான முன்னேற்றங்கள் அதிகமுள்ளன. அதனை பாராட்ட வேண்டும். அதுவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிப்பதிவு, காட்சித்தொகுப்பு என்பன அற்புதம். (சகோதர மொழி பேசுகின்றவர்களே அதிகம் தொழிநுட்ப கலைஞர்களாக இருக்கின்றனர். அவர்களின் திறன் பாராட்டத்தக்கது) ஆனால், நிகழ்ச்சி தயாரிப்;பு, அல்லது நிகழ்ச்சி வடிவமைப்பு என்ற முக்கிய விடயங்களில் இலத்திரணியல் ஊடகங்கள் பல இடங்களில் தவறிழைக்கின்றன. இதற்கு உதாரணங்களை தேடி செல்ல தேவையில்லை.
ஊடகங்களுக்கிடையில் போட்டிகள் இருக்க வேண்டும். அப்பொழுது தான் தரமான நிகழ்ச்சிகள் வரும் என்ற தப்புக்கணக்கு நம்நாட்டு ஊடகங்களுக்கு பொருந்தாது. ஆந்த ஊடகம் இந்திய கலைஞர்களை வைத்து நிகழ்ச்சி செய்தால், நாங்களும் அவர்களை வரவழைத்து நிகழ்ச்சி செய்வோம் என்கிற நிலையே இங்கு உள்ளது. இவற்றை யாவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
நுpகழ்ச்சி தயாரிப்பாளராக அல்லது வடிவமைப்பாளராக இருப்பவருக்கு என்னென்ன கடமைகள் இருக்கின்றன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆதற்கு அவர்களுக்கு முறையான பயிற்சி அவசியம். வேலைக்கு வந்த சில நாட்களிலேயே நிகழ்ச்சி தயாரிப்பு பணிகளில் அவர்களை அமர்த்தியவுடன், அவர்கள் இந்திய ஊடகங்களுக்கு பின்னால் செல்ல முனைகின்றனர். ஆதனால், நேர்த்தியும் இல்லாமல், தரமின்றி நிகழ்ச்சிகள் வருகின்றன. இது நம்நாட்டு அனைத்து ஊடகங்களுக்கும் பொருந்தும். ஆனால், நம்நாட்டு மொழிப் பாரம்பரியத்தை பலர் சிதறடித்தாலும், சிலர் கட்டிக்காக்க முனைகிறார்கள் என்பது சிறு மகிழ்ச்சியைத் தருகிறது.
மற்றப்படி, அடுத்த முதல்வன் யார்? என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஊடகங்கள் அல்ல.
வந்தி,
குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்கள் இலத்திரனியல் ஊடகங்களில் இடம்பெற்றிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் சமுதாயப் பங்கு என்று நோக்கும்போது பல விடங்கள் ஊடகங்களினால் தவறவிடப்பட்டுள்ளன.
தலைவிரிகோலம் என்பதற்கு பின்புலத்தில் உயரதிகாரிகள் தான் காரணகர்த்தாக்கள். ஆங்கில மோகம் தான் இதற்குக் காரணம். ஆங்கிலத்தில் பேசுவது, ஆங்கிலத்தை உண்ணுவது, ஆங்கிலத்தையே துப்புவதன் பின்விளைவுதான் இது. தவிர்க்க முடியாததாலும் தாங்கள் பெரும்பாலும் விரும்புவதாலும் சிலர் இதைப் பின்பற்றுகிறார்கள்.
தனிப்பட்ட hPதியில் அந்த அறிவிப்பாளர்களின் நற்பெயர் களங்கப்படுகிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். “ஐயோ இந்த டீவியா ஒரே அறுவல் தான் மாத்துங்கப்பா” என்ற குரல் அடிக்கடி வீடுகளில் ஒலிப்பதை நான் கேட்டிருக்கிறேன்.
குடும்பத் தலைவியர் மாத்திரம் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. எத்தனையோ வேலைகளுக்கு மத்தியிலும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மாலையில் வீடுவந்துசேரும் குடும்பத் தலைவர்கள், இளைஞர்களுக்கு காத்திரமான நிகழ்ச்சி படைக்கப்படுகின்றனவா? அவர்களுக்கு மேலும் தலையிடியாய் அமையும் அறுவல்களாக இருந்தால் எப்படி விரும்புவார்கள்? எத்தனையோ புதிய விடயங்களை தொலைக்காட்சிகளில் பகிரலாம். நாளுக்கு நாள் எத்தனையோ மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை பயனுள்ள தகவல்களைக் கொண்டு மாற்றியமைக்கலாம்.
இதற்கெல்லாம் புதிய திட்டமிடல்கள் அவசியம். வெறும் இந்திய தொலைக்காட்சிகளை மையமாக வைத்துக்கொண்டு பார்ப்பதால் குறுகிய வட்டத்துக்குள்ளேயே நாம் இருந்துகொண்டிருக்கிறோம்.
(அதிகம் எழுதிவிட்டேன் போல. நல்ல பதிவு வந்தி. நமது பின்னு}ட்டதாரர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதாற்காக பொறுத்திருந்து பின்னு}ட்டம் தந்தேன்)
// Paheerathan said...
நல்ல விமர்சனம் வந்தி, எழுதவேணும் என்று நினைத்து எழுதாமல் போன ஒரு பதிவு இது.//
உங்களது நீண்ட விளக்கத்துக்கும் நன்றிகள் பகீ, நீங்கள் மட்டுமல்ல பலர் எழுத நினைத்து இவர்கள் திருந்தமாட்டார்கள என எழுதாத விடயம்.
//பதிவுலகத்துக்கு வரமுதல் வீரகேசரிக்கு ஒன்று எழுதி அவர்கள் பிரசுரிக்க வில்லை.//
வீரகேசரி எந்த இலத்திரனியல் ஊடகம் பற்றி எழுதினாலும் பிரசுரிக்கமாட்டார்கள். தினக்குரலுக்கு அனுப்புங்கள்.
//ஆங்கிலம் இந்தியத்தமிழ் என்பவற்றை இந்த அறிவிப்பாளர் /அறிவிப்பாளினிகள் (சக்தியில்)தாங்களாக விரும்பித்தான் கதைக்கிறார்களா இல்லை மேலிடத்தின் அழுத்தமாக இருக்குமா என்று ஏதாவது விசாரித்து பார்த்தீர்களா ? //
ஆமாம் இந்த பிரச்சனை இருக்கிறதாக கேள்விப்பட்டேன், காரணம் மேலிடம் இந்தியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. நம் நாட்டில் திறமைசாலிகள் இல்லையாம் அக்கரைக்கு இக்கரை பச்சை.
//நமக்கு தெரிஞ்சவங்க ரெண்டு மூணு பேர் இருக்கிறாங்கதானே? ஏனெனில் முதல்வன் கோசங்களையும் மேலிடங்கள்தான் போடவைக்கின்றன, அறிவிப்பாளர்கள் என்ன செய்வார்கள் பாவம்.//
எனக்குத் தெரிந்தவர்கள் பலர் இருந்தார்கள் இருக்கின்றார்கள். சில விடயங்கள் மட்டும் கேட்டறிந்தேன்.
//எழுவாய் பயனிலை தெரியாமல் பேசினால், அதற்க்கு எவ்வளவு எழுதினாலும் தகும்.
உண்மை உண்மை.
//ஆனால் இந்தியதமிழ் ஆங்கிலம் என்று வரும்போது அது, அவர்கள் கையில் இல்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் தொலைக்காட்சி, வானொலி இரண்டுக்கும் இந்திய இறக்குமதிகள்தான் தலைமை என்று கேள்விப்பட்டிருக்கிறேன் உண்மை தெரியவில்லை. ///
நானும் கேள்விப்பட்டேன்
//எந்தவிதமான தயாரிப்புக்களுமில்லாமல் நிகழ்ச்சி செய்ய வருகிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. நான் கூட நினைப்பதுண்டு இப்பிடி கதைக்கிறாங்களே இவர்கள் தாங்கள் செய்யும் நிகழ்ச்சியை திரும்ப தொலைக்கட்சியில் பார்ப்பார்களா என்று,//
இல்லையாம் நிகழ்ச்சி செய்பவர்கள் தேடல் இல்லாமல் டொக்டர் ஒருவரைப் பேட்டிகாண டொக்டராக இருக்கவேண்டும் என ஒரு அறிவு ஜீவி சொல்கின்றார். ஒருவனின் அறிவு அவனது படிப்பை வைத்து அளக்கப்படுவதில்லை என்பது ஏனோ அந்த புத்திசாலிக்கு தெரியவில்லை.
//நான் சிங்கள, ஆங்கில தொலைக்காட்சிகளின் ரசிகனாக மாறுவதற்கு காரணமே இந்த அருவிப்பாலர்கல்தான் ( தெரியாமல் விட்ட எழுத்துப்பிழை அல்ல). //
இவர்களை விட சில நல்ல நிகழ்சிகளை மட்டும் பார்க்கலாம் இல்லையென்றால் கிரிக்கெட், டிஸ்கவரி பக்கம் பார்வையைத் திருப்புங்கள்.
//கொஞ்சம் உள்வீட்டு இரகசியங்களை அறிய முடிந்தால் அறிந்து பார்த்து இன்னொரு பதிவு போடுங்கள்.//
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தித்தான் உடம்பை ரணகளமாக்கிவிட்டீர்கள்.
//சவரிமுத்து தயாளன் said...
யார் இந்த என்ன கொடும சார் என்ற ரோதனை பிடிச்சவன்?
தன்னை தனியனாகக் காட்டிக் கொள்வதில் ஈன விருப்பம் கொண்ட ஒரு ஈகோ கேசா?//
அவர் ஒரு பிரபலம் விரும்பி அவரின் பதிவுகளில் இலங்கைப் பதிவர்களைச் சீண்டுவதுதான் அவரின் நோக்கம்
//இவன்டை ப்லோக்கைப் பார்த்தாலே ரசனை தெரியுதே. //
ஹாஹா
//இவரும் இப்பிடியோ?
பகிடியா சொன்னாரோ இல்லாட்டி இவர் ரசனையும் இப்பிடியோ?//
அவர் என்னைக் நக்கலடிக்க எழுதியவை இவை.
//ஆண்டாவா தமிழ் மக்களைக் காப்பாத்தும்//
நல்ல கோரிக்கை ஆனால் அவர் காப்பாத்தமாட்டார்.
@ புல்லட்
”உன்னுடைய தாயை இன்னொருவன் பிழைபிழையாக சொன்னால் ப்ரீயாத்தானே சொல்லுறான் எண்டு பொறுத்துக்கொண்டிருக்கப்போவதில்லை அதே பொலத்தான் தம்பி இதுவும்”
காற்றில் கலக்கும் விஷம் போன்றது இது.. போதை மருந்துக்குட்பட்டவனை அதனின்றும் மீட்பது ஒரு தூய மனிதனின் கடமை... ””
புல்லட்டிடம் இருந்து இப்படியான பதில்கள் எதிர்பார்க்கவில்லை.
வந்தி அண்ணே வணக்கம் ...........!உங்கட பார்வை நடுநிலையாக இருக்கலாம் ஆனால் என்னை பொறுத்தவரை ஒரே ஒரு முதல்வன்தான் நம்ம ARV எங்க இருக்கிறாரோ அதுதான் முதல்வன் அவர்தான் நான் அறிய முதன் முதலில் வானொலி நிக்கழ்சிகளை பொழுதுபோக்கு என்பதை தாண்டி நல்ல நாலு விடயங்கள் கிடைக்கும் ஒன்றாக மாற்றியவர்
அதாவது பாட்டு கேட்பதற்கும் அரட்டை அடிப்பதற்கு மட்டும் தான் வானொலி என்பதை மாற்றியவர் அவருடைய முத்துகள் பாத்து கேட்டு கவிதை எழுத தொடங்கியவர்கள் பலர் இதயோ ஒரு புகழ்ச்சிக்காக சொல்லவில்லை உண்மை அதுதான் ...........
நல்ல இடுகை எப்போதோ எதிர்பார்த்த இடுகை. நன்றாக எழுதப்பட்டிருக்கின்றது. நீங்கள் என்ன சொன்னாலும் எங்கள் விருப்பம்போல் நடப்பதில் நாங்கள்தான் முதல்வன் என்று சொல்லும் ஊடகங்கள்தான் இன்று இலங்கையில் அதிகம்.
அவர்கள் இலவசமாக சேவை வழங்குகின்றோம் என்பதற்காக எதனையும் செய்ய முடியாதல்லவா? தமிழ் கொலை செய்யப்படும்போது தட்டிக்கேட்க, சுட்டிக்காட்ட வேண்டியது எமது தமிழர் ஒவ்வொருவரது கடமை.
இன்றைய அறிவிப்பாளர்கள் நல்ல தமிழ் அறிவிப்பாளர்களாக இருந்து எமது தமிழின் பெருமையினை உலகுக்கு எடுத்துச் சென்ற எமது மூத்த அறிவிப்பாளர்களின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே எனது அவா.
உலகம் முழுவதும் இலங்கை அறிவிப்பாளர்கள் என்றாலே ஒரு சிறப்பு இருக்கின்றது அதனை இன்றைய அறிவிப்பாளர்கள் காப்பாற்ற வேண்டும்.
இன்று தாங்கள் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டும்போது எத்தனை அறிவிப்பாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஒரு சிலரே.
அருமையான விமர்சனம் வந்தி!
எவ்வளவு தரம் எழுதினாலும் அவர்கள் திருந்தமாட்டார்கள் என்பதால் எழுதுவதை நிறுத்துவது பற்றி எனக்கு உடன்பாடு இல்லை. திருப்பி திருப்பி பிழையை சொன்னால்தான் இதைப்பற்றிய தெளிவு மக்களுக்காவது போய்ச்சேரும்.
அறிவிப்பாளர்களுக்கும் நிகழ்ச்சித்தயாரிபாளர்களுக்கும் பின்னால் இருந்து ஏதோ ஒரு வலிமையான மேல்மட்டச் சக்தி தான், இப்படி ஆங்கிலம் கலந்த தமிழை பிரயோகிக்கச்சொல்லி உந்துகிறது என்பதையும் மறுக்க முடியாது.
அண்மையில் சக்தி பண்பலை நடாத்திய “சக்தி சுப்பர் வொய்ஸஸ்“ போட்டியில் நானும் பங்குபற்றியிருந்தேன் - பங்குபற்றப் போன கதை வில்லங்கமானது - வித்தியாசமானது - அதை இந்த பகிரங்க மேடையில் பலரின் தனித்தன்மை கருதி சொல்லமுடியவில்லை - மன்னிக்கவும். இந்தப் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றிய போது - போட்டி தவிர்ந்த நேரத்தில் சில சக்தி அறிவிப்பாளர்களுடன் உரையாடும் சந்தர்ப்பமும் சக போட்டியாளர்களுடன் கலந்துரையாடும் அனுபவமும் கிடைத்தது - இதன் போது அங்கு வந்திருந்த அனைவரும் சக்தி பண்பலையைக் தினமும் கேட்பவர்கள். நானும் எனது நண்பர்கள் இருவரும் தான் வானொலிப் பக்கம் காது வைக்காதவர்கள் ஆக சம்பாஷணைகளின் போது அவர்கள் சக்தி நிகழ்ச்சிகள் பற்றிப் பேசும் போது எனக்கும் என்னருமை நண்பர்களுக்கும் அது எல்லாம் சூனியமாகத் தெரியும். ஆனால் இலங்கை வானொலிகளின் தமிழ்ப்பிழைகளை ஆங்காங்கே நான் கவனித்திருக்கின்றேன் ஆக அதை நான் அப்படியொரு சம்பாணையின் போது சுட்டிக்காட்டுகையில் புதியதொரு தர்க்கம் பிறந்தது. நான் சரியில்லை என்று சொன்ன (அதாவது மொழிப்பழையும் தரமுமற்ற) அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிதான் தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ளதாம் என அதிகாரபூர்வமான ஒருவர் தெரிவித்தார் - நான் வியந்து போனேன் - அந்த ரேட்டிங் முறையைப் பற்றி பேச்சு வலுக்கும் போது மக்கள் எதை விரும்புகிறார்களோ நாங்களும் அதையே கொடுக்கின்றோம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. நான் அந்தக் கருத்தை முற்றாக மறுத்தேன் - ஒரு நல்ல சிறந்த அறிவிப்பாளனுக்கு அழகு தனக்கேற்ப மககளின் இரசனையை மாற்றுவதேயன்றி மக்களின் இரசனைக் கேற்ப தன்னை மாற்றிக்கொள்வதல்ல என்றேன் - ஆனால் வர்த்தகத்தை மையப்படுத்திய வானொலிச் சேவையில் இது சாத்தியமில்லை - மக்கள் விரும்புவதை நாம் போடாவிட்டால் அடுத்த பண்பலைக்காரன் போடுவான் மக்களும் எங்கள் பண்பலையைக் கேட்பதைவிட்டு அடுத்த பண்பலைக்கு மாறிவிடுவார்கள் என்று தங்கள் கருத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார். இந்த கட்டத்தில் எனக்கு ஆழமாகச் சிந்திக்கத் தோன்றியது - இது வெறுமனே தனிப்பட்ட வானொலிச் சேவையின் பிழையல்ல - இது ஒட்டு மொத்த வானொலிச் சேவை நிலையங்களின் கூட்டுப்பிழை. சந்தையைக் கைப்பற்றும் போட்டியிலே ஆளுக்காள் அடித்துத்துவைத்துக்கொண்டு தரத்தை மறந்து விடுகிறார்கள். ஆக வானொலிச் சேவையிலுள்ள அறிவிப்பாளர்கள் நினைத்தாலும் அதை மாற்ற வர்த்தகம் ரீதியான காரணங்கள் தடையாக இருக்கிறது என்பது ஏற்கத்தக்க உண்மைதான் ஆனாலும் இவர்கள் வர்க்க நோக்கத்துக்காக தங்கள் தார்மீகப் பொறுப்புக்களையும் விற்றுவிடுவது மிகவும் கவலையளிக்கிறது.
அடுத்ததாக இந்தியத் தமிழின் ஆதிக்கம். - இது எல்லா வானொலிகளையும் விட சக்தியில் அதிகம் இருக்கிறது காரணம் சக்தி பண்பலையின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர், வாரஇறுதி நிகழ்ச்சிப் பொறுப்பாளர் உட்பட சில அறிவிப்பாளர்கள் இந்தியர்களே - இதைப்பார்த்தபோது இலங்கையில் திறமைக்குப் பஞ்சமோ எனத் தான் எனக்கு எண்ணத்தோன்றுகிறது. இந்த இந்திய அறிவிப்பாளர்களின் திறமை பற்றி எனக்கு முரண்பாடு எதுவுமில்லை ஆனால் தனித்துவமான தேசம், மொழி என்ற அடிப்படையில் பார்க்கும் போது இது இந்தியத்துவத்தின் திணிப்பாக ஆகுமோ என்னுமு் அச்சம் என்னிடமுண்டு - இது தொடர்பில் மஹாராஜா கூட்டு நிறுவனத் தலைமைகள் சிந்திக்க வேண்டும்.
சரி சக்தியை பார்த்தாச்சு - மற்றவை மட்டும் என்ன மேலா? சூரியன் முன்பிருந்த தரத்தில் இப்போது இல்லை - இங்கும் இந்தியத் தமிழ் வாடை. தென்றல் இந்தியத்தமிழுக்கும், நவீன பண்பலைப் பாணிக்குமு் கிட்டத்தட்ட முழுவதுமாக மாறிவிட்டது, வெற்றியும் கொஞ்சம் இந்தியச் சாயலில் நனைகிறது - அதுவும் அந்த பகல்பந்தி நிகழ்ச்சி கேட்கச்சகிக்கவில்லை.
மாற்றங்கள் தாமாக நடப்பதில்லை - நாமாக ஏற்படுத்துவதுதான் - அன்புள்ள ஊடகத்துறை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து இவற்றைக் கவனத்திற் கொண்டு கொஞ்சம் சிந்தியுங்கள்.
அண்ணா, இப்போதுதான் சத்தி சூப்பர்ஸ்டார் நிகழ்ச்சி தற்செயலாக முதன்முதலாக பார்க்கக்கிடைத்தது. நிக.ச்சி நடத்துபவரின் நடத்தையைப் பார்த்து சிரித்துச் சிரித்து சாப்பாடு புரைக்கேறியதுதான் மிச்சம். பாவம் போட்டியாளர்கள்.
// மருதமூரான். said...
இலங்கை இலத்திரணியல் ஊடகத்துறையில் தொழிநுட்ப ரீதியிலான முன்னேற்றங்கள் அதிகமுள்ளன. அதனை பாராட்ட வேண்டும். அதுவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிப்பதிவு, காட்சித்தொகுப்பு என்பன அற்புதம். (சகோதர மொழி பேசுகின்றவர்களே அதிகம் தொழிநுட்ப கலைஞர்களாக இருக்கின்றனர். //)
நிச்சயமாக பாராட்டவேண்டும், நான் சில காலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சம்பந்தமான தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை செய்தபோது அவதானித்த விடயத்தை நீங்களும் சொல்கின்றீர்ர்கள் என்னவென்றால் தொழில் நுட்பம் சம்பந்தமான பயிற்சிக்கு வந்தவர்கள் பெரும்பாலும் சகோதர மொழிகாரர்களே. ஏனோ நம்மவர்கள் வருவதில்லை அல்லது குறைவு,
//நிகழ்ச்சி தயாரிப்;பு, அல்லது நிகழ்ச்சி வடிவமைப்பு என்ற முக்கிய விடயங்களில் இலத்திரணியல் ஊடகங்கள் பல இடங்களில் தவறிழைக்கின்றன. இதற்கு உதாரணங்களை தேடி செல்ல தேவையில்லை. //
இவர்களின் நிகழ்ச்சி தயாரிப்பு பக்கத்து வீடுகளை எட்டிப்பார்ப்பதாகவே பெரும்பாலும் இருக்கின்றது, வானொலிகளில் வித்தியாசமான நிகழ்ச்சிகள் சில இருந்தாலும் தொலைக்காட்சிகள் கொப்பிதான் அதிகம்.
//ஊடகங்களுக்கிடையில் போட்டிகள் இருக்க வேண்டும். அப்பொழுது தான் தரமான நிகழ்ச்சிகள் வரும் என்ற தப்புக்கணக்கு நம்நாட்டு ஊடகங்களுக்கு பொருந்தாது. ஆந்த ஊடகம் இந்திய கலைஞர்களை வைத்து நிகழ்ச்சி செய்தால், நாங்களும் அவர்களை வரவழைத்து நிகழ்ச்சி செய்வோம் என்கிற நிலையே இங்கு உள்ளது. இவற்றை யாவரும் புரிந்துகொள்ள வேண்டும். //
சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்வார்கள் என நினைக்கின்றோம்.
//ஆனால், நம்நாட்டு மொழிப் பாரம்பரியத்தை பலர் சிதறடித்தாலும், சிலர் கட்டிக்காக்க முனைகிறார்கள் என்பது சிறு மகிழ்ச்சியைத் தருகிறது.//
இதில் சிலர் பலராகவும் பலர் சிலராகவும் மாறினால் மகிழ்ச்சி.
//மற்றப்படி, அடுத்த முதல்வன் யார்? என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஊடகங்கள் அல்ல.//
அதே அதே, மக்கள் மனதில் அதிகம் எந்த ஊடகம் இடம் பிடித்திருக்கின்றதோ அந்த ஊடகம் தான் முதல்வன்.
// இறக்குவானை நிர்ஷன் said...
குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்கள் இலத்திரனியல் ஊடகங்களில் இடம்பெற்றிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் சமுதாயப் பங்கு என்று நோக்கும்போது பல விடங்கள் ஊடகங்களினால் தவறவிடப்பட்டுள்ளன.//
நிச்சயமாக மிகச் சில நிகழ்ச்சிகள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தித்தான் உள்ளன. அதே நேரம் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கின்றது/
///தலைவிரிகோலம் என்பதற்கு பின்புலத்தில் உயரதிகாரிகள் தான் காரணகர்த்தாக்கள். ஆங்கில மோகம் தான் இதற்குக் காரணம். ஆங்கிலத்தில் பேசுவது, ஆங்கிலத்தை உண்ணுவது, ஆங்கிலத்தையே துப்புவதன் பின்விளைவுதான் இது. தவிர்க்க முடியாததாலும் தாங்கள் பெரும்பாலும் விரும்புவதாலும் சிலர் இதைப் பின்பற்றுகிறார்கள்.//
இதே கருத்தைப் பலர் இங்கேயும் என்னிடம் நேரிலும் சொல்லியிருக்கின்றார்கள். இவர்களின் மேலதிகாரிகள் தமிழர் அல்லாதது அல்லது இலங்கையைச் சேர்ந்தவர் அல்லாததுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆங்கிலம் கட்டாயம் தேவை, ஆனால் தமிழ்த் தொலைக்காட்சியில் ஏன் ஆங்கிலம்.
//தனிப்பட்ட ரீதியில் அந்த அறிவிப்பாளர்களின் நற்பெயர் களங்கப்படுகிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். “ஐயோ இந்த டீவியா ஒரே அறுவல் தான் மாத்துங்கப்பா” என்ற குரல் அடிக்கடி வீடுகளில் ஒலிப்பதை நான் கேட்டிருக்கிறேன்.//
நிச்சயமாக நானும் கண்டிருக்கின்றேன், நேரில் அழகாக தமிழை உச்சரிக்கும் அறிவிப்பாளர்கள் தாம் சார்ந்த ஊடகங்களில் ஒரு ஸ்டைலான டமிழ் பேசுவார்கள். இதனால் அவர்களின் பெயர் கெடுவதுடன் பலராலும் வெறுக்கப்படுகின்றனர்.
//குடும்பத் தலைவியர் மாத்திரம் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. எத்தனையோ வேலைகளுக்கு மத்தியிலும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மாலையில் வீடுவந்துசேரும் குடும்பத் தலைவர்கள், இளைஞர்களுக்கு காத்திரமான நிகழ்ச்சி படைக்கப்படுகின்றனவா? அவர்களுக்கு மேலும் தலையிடியாய் அமையும் அறுவல்களாக இருந்தால் எப்படி விரும்புவார்கள்? எத்தனையோ புதிய விடயங்களை தொலைக்காட்சிகளில் பகிரலாம். நாளுக்கு நாள் எத்தனையோ மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை பயனுள்ள தகவல்களைக் கொண்டு மாற்றியமைக்கலாம்.//
நடக்குமா? நடந்தால் நல்லது.
//இதற்கெல்லாம் புதிய திட்டமிடல்கள் அவசியம். வெறும் இந்திய தொலைக்காட்சிகளை மையமாக வைத்துக்கொண்டு பார்ப்பதால் குறுகிய வட்டத்துக்குள்ளேயே நாம் இருந்துகொண்டிருக்கிறோம்.//
உண்மை உண்மை. ஆனால் அவர்கள் புதிது புதிதாக நிகழ்ச்சிகள் படைக்கின்றார்கள் அங்கே ஆறின கஞ்சியை இங்கே புதிய கஞ்சியாக சுடவைத்துத் தருகின்றார்கள் அதுதான் வித்தியாசம்.
//(அதிகம் எழுதிவிட்டேன் போல. நல்ல பதிவு வந்தி. நமது பின்னு}ட்டதாரர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதாற்காக பொறுத்திருந்து பின்னு}ட்டம் தந்தேன்)//
நீங்கள் ஏற்கனவே செய்திகள் சம்பந்தப்பட்ட ஒரு பதிவும் எழுதியிருக்கின்றீர்கள் அத்துடன் இந்த விடயங்களையும் சேர்த்து அல்லது இவற்றைத் தனியாக ஒரு பதிவாக போட்டிருக்கலாம்.
//புல்லட்டின் ரசிகன் said...
”உன்னுடைய தாயை இன்னொருவன் பிழைபிழையாக சொன்னால் ப்ரீயாத்தானே சொல்லுறான் எண்டு பொறுத்துக்கொண்டிருக்கப்போவதில்லை அதே பொலத்தான் தம்பி இதுவும்”//
நல்லதொரு உவமை, தாயும் மொழியும் ஒன்று அதனால் தான் தாய்மொழி என்பார்கள்.
//காற்றில் கலக்கும் விஷம் போன்றது இது.. போதை மருந்துக்குட்பட்டவனை அதனின்றும் மீட்பது ஒரு தூய மனிதனின் கடமை... ””//
இதனால் தான் ஒரு இனத்தை அழிக்கவேண்டும் என்றால் முதலில் அவனின் மொழியை அழி என்கிறார்கள் சர்வாதிகாரிகள்.
//புல்லட்டிடம் இருந்து இப்படியான பதில்கள் எதிர்பார்க்கவில்லை.//
புல்லட் இன்னொரு கோணத்தில் சிந்தித்திருக்கின்றாரே ஒழிய அவர் என்றைக்கும் தப்பான வழியில் போனது கிடையாது.
நல்ல பதிவு நண்பரே....
தமிழை கொலை செய்வதில் எம் பல அறிவிப்பாளர்களுக்கு அப்படியொரு பிரியம். காலங்காத்தால ரிவிய போட்டா தலைவிரி கோலமா நின்று "குட்மோர்ணிங் சிறிலங்கா' என்று சொல்லுறத கேட்டு இன்னுமொருக்கா காலை கடனை கழித்தால் என்ன என்ற உணர்வுகளை பெற்றவனில் நானும் ஒருவன். அதைவிட கலாச்சாரம் இல்லாத அலங்காரங்கள் வேறு. சகோதர இன தொலைக்காட்டிகளில் கலாச்சாரம் இல்லாமல் தானே காட்டுகிறார்கள் என்று வாதிடலாம் ஆனால் அது கிட்டத்தட்ட அவர்களது 'வியாபார தந்திரம்' என்று கூட சொல்லலாம் ஏனொனில் சிங்கள அரசி ஒருவருடை தவறான நடத்தையை 'போராட்ட தந்திரம்' என்று மகாவம்சம் வாதிட்டிருப்பது யாவரும் அறிந்ததே. ஆனால் எமக்கப்படியில்லையே இதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சக்தியின் "கிறாண்ட் மாஸ்டர்" நிகழ்ச்சி. எவ்வளவு பிரயோசனமான நிகழ்ச்சி என்றாலும் தமிழ்மக்களை சென்றடைய கூடியவாறு எவ்வளவு தயாரிக்கப்பட்டுள்ளது என்பதே என் ஜயப்பாடு.
சனல் ஜ.. தென்றல் என்பன தமிழை எவ்வளவு கொல்லமுடியுமோ அவ்வளவுக்கும் முயற்சி செய்கின்றன என்றே படுகிறது. சனல் ஜ யின் பத்திரிகை செய்திகள் வாசிக்கும் பகுதி மிக மோசம்....
சூரியன் மற்றும் வெற்றி வானொலிகள் நன்றாக தான் உள்ளன. எவர் எதை செய்தாலும் தமிழை கொல்லாமல் செய்தால் சந்தோசம் தான்.
// Balavasakan said...
வந்தி அண்ணே வணக்கம் ...........!உங்கட பார்வை நடுநிலையாக இருக்கலாம் ஆனால் என்னை பொறுத்தவரை ஒரே ஒரு முதல்வன்தான் நம்ம ARV எங்க இருக்கிறாரோ அதுதான் முதல்வன் அவர்தான் நான் அறிய முதன் முதலில் வானொலி நிக்கழ்சிகளை பொழுதுபோக்கு என்பதை தாண்டி நல்ல நாலு விடயங்கள் கிடைக்கும் ஒன்றாக மாற்றியவர்
அதாவது பாட்டு கேட்பதற்கும் அரட்டை அடிப்பதற்கு மட்டும் தான் வானொலி என்பதை மாற்றியவர் அவருடைய முத்துகள் பாத்து கேட்டு கவிதை எழுத தொடங்கியவர்கள் பலர் இதயோ ஒரு புகழ்ச்சிக்காக சொல்லவில்லை உண்மை அதுதான் ...........//
பாலவாசகன் உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
//சந்ரு said...
நல்ல இடுகை எப்போதோ எதிர்பார்த்த இடுகை. நன்றாக எழுதப்பட்டிருக்கின்றது. நீங்கள் என்ன சொன்னாலும் எங்கள் விருப்பம்போல் நடப்பதில் நாங்கள்தான் முதல்வன் என்று சொல்லும் ஊடகங்கள்தான் இன்று இலங்கையில் அதிகம். //
இன்னொரு ஊடகவியளாளரிடம் இருந்து கிடைத்த பாராட்டுகளுக்கு நன்றிகள் சந்ரு. ஏற்கனவே முதலில் எழுதிய இடுகையில் சில விடயங்கள் விடுபட்டிருந்தன அதனால் தான் இந்த இன்னொரு இடுகை.
//அவர்கள் இலவசமாக சேவை வழங்குகின்றோம் என்பதற்காக எதனையும் செய்ய முடியாதல்லவா? தமிழ் கொலை செய்யப்படும்போது தட்டிக்கேட்க, சுட்டிக்காட்ட வேண்டியது எமது தமிழர் ஒவ்வொருவரது கடமை. //
நிச்சயமாக தாய்மொழியை அழியவிடாமல் இருப்பது ஒவ்வொருவரினதும் கடமை.
//இன்றைய அறிவிப்பாளர்கள் நல்ல தமிழ் அறிவிப்பாளர்களாக இருந்து எமது தமிழின் பெருமையினை உலகுக்கு எடுத்துச் சென்ற எமது மூத்த அறிவிப்பாளர்களின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே எனது அவா. //
நான் குறிப்பிட்டது போல் ஒரு சிலர் அந்த இடங்களுக்கு சென்றுகொண்டிருக்கின்றார்கள் ஆனால் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்பது கவலைக்குரிய விடயம்.
//உலகம் முழுவதும் இலங்கை அறிவிப்பாளர்கள் என்றாலே ஒரு சிறப்பு இருக்கின்றது அதனை இன்றைய அறிவிப்பாளர்கள் காப்பாற்ற வேண்டும். //
அதே தான், அண்மையில் கூட ஒரு இளம் அறிவிப்பாளருக்கு இந்தியாவில் ஒரு நேரடி நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கும் வாய்ப்பு வந்தது சில தடங்கல்களால் அவரினால் செல்லமுடியவில்லை.
//இன்று தாங்கள் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டும்போது எத்தனை அறிவிப்பாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஒரு சிலரே.//
கேள்வியை நீங்களே கேட்டு பதிலையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள்.
//ஆதித்தன் said...
அருமையான விமர்சனம் வந்தி!//
நன்றிகள் ஆதித்தன், உங்களுக்கு இன்னொருதடவை நன்றிகள் காரணம் மூஞ்சிப் புத்தகத்தில் இந்தப் பதிவின் தொடுப்பை இணைத்தமைக்கு.
//எவ்வளவு தரம் எழுதினாலும் அவர்கள் திருந்தமாட்டார்கள் என்பதால் எழுதுவதை நிறுத்துவது பற்றி எனக்கு உடன்பாடு இல்லை. திருப்பி திருப்பி பிழையை சொன்னால்தான் இதைப்பற்றிய தெளிவு மக்களுக்காவது போய்ச்சேரும். //
நீங்கள் சொல்வதும் சரிதான் இவர்களை என்னவாவது செய்யட்டும் என விட்டுவிட்டுப்போககூடாது அடிக்கடி தவறுகளைச் சுட்டிக்காட்டவேண்டும் இல்லையென்றால் சில வரலாற்றுப் பிழைகளுக்கு காரணமானவர்களாக அனைவரும் மாறவேண்டிவரும். ஆனாலும் மக்கள் தெளிவாகத் தான் இருக்கின்றார்கள்.
//அறிவிப்பாளர்களுக்கும் நிகழ்ச்சித்தயாரிபாளர்களுக்கும் பின்னால் இருந்து ஏதோ ஒரு வலிமையான மேல்மட்டச் சக்தி தான், இப்படி ஆங்கிலம் கலந்த தமிழை பிரயோகிக்கச்சொல்லி உந்துகிறது என்பதையும் மறுக்க முடியாது.//
நிச்சயமாக அந்த சக்தி அந்நியசக்தி என அறியக்கூடியதாக இருக்கின்றது.
//என்.கே.அஷோக்பரன் said...
அண்மையில் சக்தி பண்பலை நடாத்திய “சக்தி சுப்பர் வொய்ஸஸ்“ போட்டியில் நானும் பங்குபற்றியிருந்தேன் //
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அசோக்பரன்.
//பங்குபற்றப் போன கதை வில்லங்கமானது - வித்தியாசமானது - அதை இந்த பகிரங்க மேடையில் பலரின் தனித்தன்மை கருதி சொல்லமுடியவில்லை - மன்னிக்கவும்.
இதனால் தான் நானும் கிராண்ட் மாஸ்டரில் ஏமாற்றப்பட்டதை எழுதவில்லை.
//அந்த ரேட்டிங் முறையைப் பற்றி பேச்சு வலுக்கும் போது மக்கள் எதை விரும்புகிறார்களோ நாங்களும் அதையே கொடுக்கின்றோம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. //
ஒரு நிறுவனம் சில தனியார் வானொலிகளின் சிறந்த நிகழ்ச்சிகளைப் பற்றி எழுந்தமானமாக சிலரிடம் கேள்விக்கொத்துகள் மூலம் ஒரு தரவு எடுத்த போது பலர் சொன்ன விடயம் இதுதான் பிரபலமான நிக்ழ்ச்சி தரமற்றது என்றாலும் அந்த நிகழ்ச்சியின் பெயருக்காக பார்க்கின்றார்களாம்.
//ஒரு நல்ல சிறந்த அறிவிப்பாளனுக்கு அழகு தனக்கேற்ப மககளின் இரசனையை மாற்றுவதேயன்றி மக்களின் இரசனைக் கேற்ப தன்னை மாற்றிக்கொள்வதல்ல என்றேன் //
நிச்சயமாக சிறந்த உதாரணம் பி.எச்.அப்துல் ஹமீது அவர்கள் அவர் இந்தியாவில் செய்யும் எந்த நிகழ்ச்சிகளிலும் தன் பாணியை மாற்றுவதில்லை. பலர் அவரை ரசிக்கத் தான் செய்கின்றார்கள்.
//இவர்கள் வர்க்க நோக்கத்துக்காக தங்கள் தார்மீகப் பொறுப்புக்களையும் விற்றுவிடுவது மிகவும் கவலையளிக்கிறது. //
இதனைத்தான் எல்லோரும் சொல்கின்றார்கள் ஆனால் சில அறிவுஜீவிகள் மட்டும் அவன் தன் வியாபாரத்திறாக என்ன செய்தாலும் நீங்கள் பொறுத்துக்கொள்ளததான் வேண்டும் என்கிறார்கள்.
//அடுத்ததாக இந்தியத் தமிழின் ஆதிக்கம். - இது எல்லா வானொலிகளையும் விட சக்தியில் அதிகம் இருக்கிறது காரணம் சக்தி பண்பலையின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர், வாரஇறுதி நிகழ்ச்சிப் பொறுப்பாளர் உட்பட சில அறிவிப்பாளர்கள் இந்தியர்களே - இதைப்பார்த்தபோது இலங்கையில் திறமைக்குப் பஞ்சமோ எனத் தான் எனக்கு எண்ணத்தோன்றுகிறது. //
இலங்கையில் பஞ்சமில்லை அல்ல, இவர்களுக்கு அவர்களின் புகழையும் பிரபலத்தையும் வைத்து வியாபாரம் செய்யத் தெரியும். இதனால் மிகவும் திறமையானவர்கள் மறைக்கப்படுகின்றார்கள்.
//சரி சக்தியை பார்த்தாச்சு - மற்றவை மட்டும் என்ன மேலா? சூரியன் முன்பிருந்த தரத்தில் இப்போது இல்லை - இங்கும் இந்தியத் தமிழ் வாடை. தென்றல் இந்தியத்தமிழுக்கும், நவீன பண்பலைப் பாணிக்குமு் கிட்டத்தட்ட முழுவதுமாக மாறிவிட்டது, வெற்றியும் கொஞ்சம் இந்தியச் சாயலில் நனைகிறது - அதுவும் அந்த பகல்பந்தி நிகழ்ச்சி கேட்கச்சகிக்கவில்லை.//
உங்கள் கருத்துகளை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுப்பார்கள் என நினைக்கின்றேன்.
//மாற்றங்கள் தாமாக நடப்பதில்லை - நாமாக ஏற்படுத்துவதுதான் - அன்புள்ள ஊடகத்துறை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து இவற்றைக் கவனத்திற் கொண்டு கொஞ்சம் சிந்தியுங்கள்.//
பொறுத்திருந்துபார்ப்போம்.
உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்க்கு நன்றிகள் இதனை நீங்கள் ஒரு தனிப்பதிவாகவே இட்டிருக்கலாம்.
// Subankan said...
அண்ணா, இப்போதுதான் சத்தி சூப்பர்ஸ்டார் நிகழ்ச்சி தற்செயலாக முதன்முதலாக பார்க்கக்கிடைத்தது. நிக.ச்சி நடத்துபவரின் நடத்தையைப் பார்த்து சிரித்துச் சிரித்து சாப்பாடு புரைக்கேறியதுதான் மிச்சம். பாவம் போட்டியாளர்கள்.//
இத்தால் சகலருக்கும் அறியத் தருவது என்னவென்றால் சாப்பிடும்போது தயவு செய்தி சில நிகழ்ச்சிகளைப் பாராதீர்கள்.
//M.Kuruparan said...
நல்ல பதிவு நண்பரே....//
நன்றிகள் நண்பரே.
//தமிழை கொலை செய்வதில் எம் பல அறிவிப்பாளர்களுக்கு அப்படியொரு பிரியம். //
சிலவேளை இது ஒரு வித்தியாசமான நோயோ தெரியவில்லை, தமிழ்க் கொலை செய்தால் பலர் தம்மைப் பற்றி அடிக்கடி பேசுவார்கள் என்ற போபியாவோ தெரியாது. மருத்துவர்கள் விளக்கம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும்.
//காலங்காத்தால ரிவிய போட்டா தலைவிரி கோலமா நின்று "குட்மோர்ணிங் சிறிலங்கா' என்று சொல்லுறத கேட்டு இன்னுமொருக்கா காலை கடனை கழித்தால் என்ன என்ற உணர்வுகளை பெற்றவனில் நானும் ஒருவன். //
காலையில் டிஸ்கவரி, விளையாட்டு அல்லது தொலைக்காட்சிகளில் பாடல் ஒளிபரப்பானால் பாருங்கள். சிலவேளை குத்துப்பாட்டு ஒளிபரப்பாக்கி வதைப்பார்கள்.
//அதைவிட கலாச்சாரம் இல்லாத அலங்காரங்கள் வேறு. //
அலங்காரங்களை விட இவர்கள் நடந்துகொள்ளும் சில விடயங்களும் முகம் சுழிக்கவைக்கும்.
//சகோதர இன தொலைக்காட்டிகளில் கலாச்சாரம் இல்லாமல் தானே காட்டுகிறார்கள் என்று வாதிடலாம் ஆனால் அது கிட்டத்தட்ட அவர்களது 'வியாபார தந்திரம்' என்று கூட சொல்லலாம் ஏனொனில் சிங்கள அரசி ஒருவருடை தவறான நடத்தையை 'போராட்ட தந்திரம்' என்று மகாவம்சம் வாதிட்டிருப்பது யாவரும் அறிந்ததே. ஆனால் எமக்கப்படியில்லையே இதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். //
சிலர் இதனைத் தான் சொல்கின்றார்கள் அவர்கள் அப்படிச் செய்கின்றார்களே அப்படி உடுக்கின்றார்களே என ஆனால் அவர்கள் தங்கள் மொழியைக் கொலை செய்வதில்லை.
//சக்தியின் "கிறாண்ட் மாஸ்டர்" நிகழ்ச்சி. எவ்வளவு பிரயோசனமான நிகழ்ச்சி என்றாலும் தமிழ்மக்களை சென்றடைய கூடியவாறு எவ்வளவு தயாரிக்கப்பட்டுள்ளது என்பதே என் ஜயப்பாடு. //
கிராண்ட் மாஸ்டரிலும் நடுவர்களுக்குத் தெரிந்த பிரபலங்கள் மட்டும் அனுமதிக்க படுவார்கள். நானும் இந்த நிகழ்ச்சியை பார்த்து பங்கு பற்றி ஏமாந்தவன்.
//சனல் ஜ.. தென்றல் என்பன தமிழை எவ்வளவு கொல்லமுடியுமோ அவ்வளவுக்கும் முயற்சி செய்கின்றன என்றே படுகிறது. சனல் ஜ யின் பத்திரிகை செய்திகள் வாசிக்கும் பகுதி மிக மோசம்....//
பத்திரிகைச் செய்திகளில் சிலர் செய்தியை விமர்சனமும் செய்வார்கள். அதாவது அவர் சார்ந்த கட்சி என்றால் தூக்கிவைத்து செய்தியை வாசித்து தன் கருத்தையும் சொல்லுவார்.
// எவர் எதை செய்தாலும் தமிழை கொல்லாமல் செய்தால் சந்தோசம் தான்.//
அதைத்தான் பலரும் கேட்கின்றார்கள். பொறுத்திருந்துபார்ப்போம்.
இங்கு வானொலிகள் பற்றியும் அதில் பேசப்படும் தமிழ் பற்றியும் பலர் பலவித கருத்துக்களையும் எழுதியிருக்கின்றார்கள் வரவேற்கத்தக்க கருத்துக்கள் காணப்படுகின்றன்.வரவேற்கின்றேன்.......... ஆனால் வானொலிபற்றியும் அதுசார்பான கண்ணோட்டத்தையும் இங்குள்ளவர்கள் அனைவருமே ஒரே நோக்கில் மட்டும் பார்ப்பது எனக்கு கவலையளிக்கின்ற ஒரு விடயமாக படுகின்றது.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தால் தேசிய சேவை என்று ஒரு ஒலிபரப்பு ஒலிபரப்பப்படுகிறது உள்ளத்தில் கை வைத்துச்சொல்லுங்கள் நீங்கள் குற்றாம் சாட்டும் குறித்த வானொலிகளை நீங்கள் கேட்கும் நேரம் அதிகமா? அல்லது நீங்கள் எதிர்பார்க்கும் அத்தனை தரங்களையும் உள்ளடக்கி நிகழ்ச்சி நடத்தும் தேசிய சேவையை நீங்கள் கேட்கும் நேரம் அதிகமா? இங்குள்ளவர்கள் பலருக்கு தேசிய சேவை என்று ஒன்று இருப்பதாக தெரியுமோ என்னமோ?
காய்த்த மரத்துக்குத்தான் கல்லடி என்பதுபோல ஜனரஞ்சக வானொலி எதுவோ அதுபற்றியதாகத்தான் உங்களனைவரதும் கவலையும் இருக்கின்றது. அவ்வாரான நிகழ்ச்சிகளை கேட்பதை தவிருங்கள். நல்ல வானொலிகளை கேளுங்கள். யார் உங்களை தடுத்தார்கள்? அவர்களை திருத்த நீங்கள் யார்? உங்களது விமர்சனங்கள் அவர்களை ஒன்றும் செய்துவிடப்போவதில்லை. மாறாக அவர்களை பிரபல்யப்படுத்துவதை தவிர.
உங்களைப்போன்றவர்களை கடுப்பேத்தேயே பிரபலமான ஊடகங்கள் பல இருக்கின்றன. அவர்களுக்கு நன்கு தெரியும். எப்படி நிகழ்ச்சி செய்தால் எப்படி விமர்சனம் வரும்.... அந்த விமர்சனங்களை சரிபார்க்க எத்தனை புதியவர்கள் அந்த வானொலியை கேட்பார்கள் என்பதையெல்லாம் புள்ளிவிபரக்கணக்காகவே வைத்திருக்கின்றார்கள் வானொலி நிலையத்தார்.
அடுத்து உங்களனைவரதும் பார்வை ஒரு பிரதேசவாதியான தமிழைப்பேசினால் அது தான் தூய தமிழ் என்பது போல் உள்ளது. அது நீங்கள் அனைவரும் பிறந்த மண் மீது நீங்கள் கொண்ட பற்றாக இருக்கலாம் அதை வானொலிகள் மீது திணிக்க நினைப்பது உங்கள் பிரதேசவாத மேலாண்மைப்போக்கையே காட்டுகின்றது.
இன்று வானொலிகளை அதிகம் கேட்பவர்கள் உங்களைப்போன்ற வலைப்பதிவர்கள் அல்ல. நகைக்கடைகளிலும் ஹோட்டல்களிலும் வேலை செய்யும் சராசரி மலையக இளைஞர்கள். தோட்டத்தொழிலாளிகள் மற்றும் சாதாரண தரத்து பாமர மக்கள் எனவே வானொலிகள் அவர்களை நோக்காக வைத்து நிகழ்ச்சி செய்வதில் என்ன தப்பை காண்கின்றீர்கள்?
வானொலிகள் நீங்கள் குற்றம் சாட்ட ஒன்றும் பொதுச்சொத்தல்ல..... அவை 100% இலாப நோக்கை கருத்தில் கொண்டு பெரும்பாலான வானொலிகள் சகோதர மொழி பேசுபவர்களது நிர்வாகத்தில் நடத்தப்படுபவை. எனவே அவர்களிடம் தமிழை எதிர்பார்ப்பது உங்கள் தப்பும் முட்டாள்தனமும் ஏமாளித்தனத்தையுமே காட்டுகின்றது. அத்தோடு பிரபலமான ஒன்றைப்பற்றி பேசியும் விமர்சித்தும் உங்களை பிரபலப்படுத்திக்கொள்ள முனையும் உங்களது குறுக்குப்புத்தியையுமே காட்டுகின்றது.
தமிழர்களது நிர்வாகத்தில் இயங்கும் ஷக்தி வானொலியும் உங்களைப்போன்றவர்களது குற்றச்சாட்டுக்களனைத்தும் புரம் தள்ளிவிட்டு இன்று அன்று சுவர்ணஒலி வானொலி செய்ததாக நீங்கள் அனைவரும் குற்றம் சாட்டும் அதே இந்திய அறிவிப்பாளர்களையே நம்பி நிகழ்ச்சி நடத்துகின்றது. வியாபார ரீதியாக அது அவர்களுக்குன் வெற்றியை தேடித்தந்திருப்பது வேறு விடயம். அங்கு குறித்த இந்திய அறிவிப்பாளர் செய்யும் நிகழ்ச்சி தான் அவ்வானொலியின் முதல்தர நிகழ்ச்சி என்பது உங்களில் எத்தனை பேருக்குத்தெரியும்?
இத்தனைக்கும் அன்று சுவர்ண ஒலி வானொலியை கடுமையாக விமர்சித்த பல ஊடகங்களில் சக்தி வானொலியும் ஒன்று. ஆனால் இன்று சக்தி வானொலியின் நிலை என்ன? அவ்வகையில் சூரியன் எப் எம்மை பாராட்ட வேண்டும். அவர்கள் வழி எப்போதும் தனி வழியாகத்தான் இருக்கின்றது. சுவர்ண ஒலியை விமர்சித்த சில மூத்த சக்திமிக்க ஊடகவியலாளர்கள் அதே சுவர்ணஒலி ஏற்படுத்திய வர்த்தக போட்டி காரணமாக அவ்வானொலி நிறுவனங்களால் ஓரம் கட்டப்பட்டதும், பின்னர் போட்டி வானொலிகளின் காலடியில் விழுந்ததும் இங்கு நான் சொல்லி யாரும் அறிய வேண்டியதில்லை.
அத்தோடு அதே சக்தி மிக்க அறிவிப்பாளர்கள் அன்று சுவர்ண ஒலி செய்த அதே நிகழ்ச்சித்தரத்தில்தானே இன்றும் நிகழ்ச்சி படைத்க்துக்கொண்டு இருக்கின்றார்கள். நிகழ்ச்சிகள் பெயர் தமிழில் இருந்துவிட்டால் மட்டும் போதுமா? இது கருணாநிதியின் தமிழில் பெயர்வைத்த படங்களுக்கு வரி விலக்கு அறிவிப்பு போன்றதுதான்! சரியாக சிந்தனை செய்துபாருங்கள்..................... உண்மைகள் உங்களுக்கும் புரியவரும்.
அறிவிப்பாளர்களில் பலர் இன்று வலைப்பதிவர்களாக உலா வருகின்றார்கள் நல்லது! வானொலியில் வளர்க்க முடியாத தமிழை வலையூடாக வளர்க்கின்றார்கள் போலும். அதற்காக அவர்கள் சார்ந்த வானொலிகள் மட்டும் தமிழை வளர்ப்பது போல "பம்மாத்து" காட்டுவதும் இவர்களே தமிழினத்தின் காவலர்கள் போல பதிவுகள் இடுவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள். இவர்களுக்கு வக்காலத்து வாங்கி பிரபலமாக நினைக்கும் ஜால்ராக்களையும் இங்கு காண்கின்றேன். அத்தோடு சில அறிவிப்பாளர்களே வேறு பெயர்களில் ஒழிந்துகொண்டு பதிவுகள் இடுவதையும் காண்கின்றேன். எனவே உங்கள் ஏமாற்று வித்தைகளை ஓரம் கட்டுங்கள் உலகுக்கு உண்மையாக இருங்கள். உங்கள் வானொலிகள் யாருக்கு சாமரம் வீச ஆரம்பிக்கப்பட்டது..... அதை மறைக்க நீங்கள் ஆடிய நாடகம் என்ன? அதன் இன்றைய நிலை என்ன என்பதை விபரம் அறிந்தவர்கள் அறிவார்கள்.
ஆயிரம் கைகள் கூடி மறைத்தாலும் சூரியனை மறைத்துவிட முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்... கண்ணாடி மாளிகைக்களுக்குள் இருந்து கொண்டு கல்லெறியாதீர்கள்.
Post a Comment