தேர்தல் திருவிழா
இலங்கையில் அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலையும் பாராளமன்றத்திற்கான பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்த அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 வருடங்கள் இருக்கும் நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது. இதே நேரம் நேற்று மக்கள் விடுதலை முன்னணி() நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைய நீக்கும் படி ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி நீக்கப்படவேண்டும் என இரண்டு கட்சிகளும் ஒப்பந்தம் செய்து பொதுத் தேர்தலையும் சந்தித்து வெற்றியும் பெற்றன.
இதே வேளை ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை எதிர்த்து ஜக்கிய தேசியக் கட்சி சார்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா அல்லது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிடலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன. கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க இதுவரை வாயே திறக்கவில்லை.
நவம்பர் 15ந்திகதி உத்தியோகபூர்வமான அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிசம்பர் தொடக்கம் திருவிழா ஆரம்பமாகப்போகின்றது. பேரம் பேசுதல்களும் கட்சி மாறுதல்களும் நிகழப்போகின்றன. அதே நேரம் இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதன் மூலம் தேர்தல் திணைக்களம் செலவீனத்தைக் குறைத்துள்ளமை பாராட்டத்தக்கது.
இருக்கிறம் ஒன்று கூடல்
இருக்கிறம் சஞ்சிகை எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வலைப்பதிவர்கள், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடான ஒன்றுகூடல் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளமை தெரிந்ததே. சிலர் இந்த ஒன்றுகூடலை வலைப்பதிவர் சந்திப்பு என தவறாக புரிந்துகொண்டுள்ளனர். வலைப்பதிவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தாலும் அவர்கள் தங்களுக்குள் கலந்துரையாடினாலும் பொதுவான விவாதங்களோ கலந்துரையாடல்களோ நடக்கும் சாத்தியங்கள் இல்லையென்றே இருக்கிறம் நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.
இந்த ஒன்றுகூடலானது பாடசாலை, கல்லூரி நாட்கள் ஒன்றுகூடல் போல் சுவாரசியமாகவே இருக்கப்போகின்றது. சென்ற சந்திப்பில் பலர் எமக்குள் சந்தித்து பேசமுடியவில்லை எனக் குறைப்பட்டார்கள். ஆனால் இந்தச் சந்திப்பில் உங்கள் நண்பர்களை நீங்கள் சந்தித்து அளவளாவ முடியும். அத்துடன் சில ஆச்சரியங்களும் காத்திருக்கின்றன என இருக்கிறம் நிர்வாகிகள் அறிவித்திருக்கின்றார்கள்.
இருக்கிறம் அலுவலகத்தை வந்தடையும் பாதைகள்.
தெகிவளை,வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிப் பகுதிகளில் இருந்து வருபவர்கள் 154 ஆம் இலக்க பஸ்சில் ரூபவாஹினி அல்லது டொரிங்டன் என ரிக்கெட் எடுத்து ரூபவாஹினிக்கு முன்னால் இறங்கவும். கொட்டாஞ்சேனை, மோதரை, மட்டக்குளி பக்கம் இருந்து வருபவர்கள் கொட்டாஞ்சேனையில் 176 ஆம் இலக்க பஸ்சில் ஏறி பொரளையில் இறங்கவும் அங்கிருந்து 154 அல்லது 104 ஆம் இலக்க பஸ்சில் ஏறி ரூபவாஹினிக்கு முன்னால் இறங்கவும். மோதரை மட்டக்குளியைச் சேர்ந்தவர்கள் 173 ஆம் பஸ்சில் நேரடியாக வரலாம் ஆனால் விடுமுறை தினம் என்பதால் பஸ் குறைவாக இருக்கும்.
பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் கோட்டையில் இறங்கி 103 ஆம் இலக்க பஸ்சில் பொரளைக்கு வரவும், அங்கிருந்து 154 அல்லது 104 ஆம் இலக்க பஸ்சில் ஏறிவரலாம்.
வத்தளையில் இருந்து வருபவர்கள் பொறுமை இருந்தால் 104ஆம் இலக்க பஸ்சில் நேரடியாக டொரிங்டனை வந்தடையலாம்.
மிகவும் இலகுவான வழி பாதை தெரிந்தவர்களுடன் தொற்றிக்கொண்டு வருவதே.
திருமண வாழ்த்துக்கள்
சக பதிவரும் நண்பருமான ஜீவநதி வலையின் சொந்தக்காரர் டொக்டர் த,ஜீவராஜின் திருமணம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(01.11.2009) திருகோணமலையில் நடைபெறவிருக்கின்றது. அவருக்கும் சகோதரி அருணாவிற்க்கும் பதிவர்களின் சார்பிலும் என் சார்பிலும் திருமண வாழ்த்துக்கள்.
பதிவுத் திருட்டுகள்
நேற்று இணையத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் போது ஒரு வலையில் ஒரு கட்டுரையைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. காரணம் நான் எழுதிய ஒரு பதிவை எந்த மாற்றமும் இன்றி ஒருவர் தன்னுடைய வலையில் இணைத்திருக்கின்றார்கள். ஆனால் அந்தப் பதிவை எங்கிருந்தது எடுத்தது என்ற தகவல்களைக் காணக்கிடைக்கவில்லை. ஏற்கனவே பதிவுலகத்தில் இப்படியான சில திருட்டுகள் நடப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். என் நண்பர்கள் சிலருடைய சில படைப்புகள் வேறு நபர்களால் சுடப்பட்டு மூஞ்சிப்புத்தகத்திலும் வேறு வலைகளில் அப்படியே இணைக்கப்படுகின்றன.
பதிவுகளை ஏனைய இடங்களில் இணைப்பவர்கள் தயவு செய்து எங்கிருந்து எடுத்தீர்கள் எனச் சொன்னால் எந்தப் பிழையும் இல்லை. பதிவுகளை எப்படி இவர்களிடம் இருந்து காப்பது என்பதையும் தொழில்நுட்பப் புலிகள் சொல்லுங்கள்.
அண்ணன் உண்மைத்தமிழனின் அபிமான நடிகை அனுஷ்கா என்பதை அவரின் மூஞ்சிப்புத்தகத்தில் தெரிந்துகொண்டேன் அவருக்காக வேட்டைக்காரி அனுஷ்காவின் அழகிய தோற்றம்
Box Office- Aug-4-2025
-
Box Office: Kingdom, House Mates, Thalaivan Thalaivi ,Maha Avatar
Narashimha,
4-Day Collection- Housemates -1.2 Cr(Approx)
5-Day Collection- Kingdom- 42...
8 hours ago
36 கருத்துக் கூறியவர்கள்:
//வத்தளையில் இருந்து வருபவர்கள் பொறுமை இருந்தால் 104ஆம் இலக்க பஸ்சில் நேரடியாக டொரிங்டனை வந்தடையலாம்.
உது என்ன சங்கதி வத்தளைக்கு மட்டும் தனிக்கவனிப்பு...?
// ஆதிரை said...
உது என்ன சங்கதி வத்தளைக்கு மட்டும் தனிக்கவனிப்பு...?//
இல்லை அந்த பஸ் நேரடியாக 154 போல் வருகின்றது நான் வெள்ளவத்தை பம்பலப்பிட்டிகளையும் தனியாக கவனித்திருக்கின்றேன். மற்றும் படி நான் அந்த பஸ்சில் பயணித்ததே இல்லை.
வத்தளை தனியாக கடைசிப் பந்தியில்...
அதுதான் கேட்டேன்
அனுஷ்கா படம் போடறதுக்கு காரணம் தேடி திரியிறீராவோய் மூஞ்சிபுக்ல
நடக்கட்டும் ! :)))
மிகவும் இலகுவான வழி பாதை தெரிந்தவர்களுடன் தொற்றிக்கொண்டு வருவதே.
உங்களுக்குப் பாதை தெரியுமா?
//ஆதிரை said...
வத்தளை தனியாக கடைசிப் பந்தியில்...
அதுதான் கேட்டேன்//
ஏனென்றால் நான் அந்த பஸ்சை மறந்துபோனேன் முகுந்தன் அண்ணாதான் எனக்கு நினைவூட்டியவர் அதுதான் கடைசியில் போட்டிருந்தேன். டொரிங்டன் வரைபடம் தேடினேன் கிடைக்கவில்லை. கிடைத்தால் அனுப்பவும்.
what a coincidence Coincidence வந்தி. நானும் டாக்டர். ஜீவராஜ் அவருக்கு எனது பதிவில் வாழ்த்தி விட்டு உங்களது பக்கம் வந்தால் நீங்களும் வாழ்த்தியிருக்கிறீர்கள். எப்படியோ வாழ்த்துக்கள் அதிகரிப்பது மகிழ்ச்சியே.
ஆமா நாங்கல்லாம் கண்டில இருந்து ஒரே பஸ்ஸில நேரா டொரிங்டன் வர எந்த பஸ்ஸில ஏறனும்.
தேர்தல் பற்றி எதுவும் சொல்ல இல்ல. அரசியலுக்கும் நமக்கும் அஜித் விஜய் அளவுக்கு தூரம்
//ஆயில்யன் said...
அனுஷ்கா படம் போடறதுக்கு காரணம் தேடி திரியிறீராவோய் மூஞ்சிபுக்ல
நடக்கட்டும் ! :)))//
இல்லை ஆயில்ஸ் மூஞ்சி நம்ம முருகபக்தரே அனுஷ்காவின் ரசிகர்கள் குழுவில் இணைந்திருக்கின்றார் அதனாலை அவரைக் குளிர்விக்க இந்தப் படம் ஹிஹ்ஹி
//ஆதிரை said...
உங்களுக்குப் பாதை தெரியுமா?//
தெரியும் தெரியும் என்னுடைய Client Office அந்த வீதியில் தான் இருக்கின்றது. எனக்கு நன்கு பழக்கப்பட்ட இடம்.
//ரூபவாஹினிக்கு முன்னால் இறங்கவும்//
இறங்கி...??
அங்க இறங்கு 5 நிமிசத்துக்கு மேல நிண்டா அப்பிக்கொண்டு
போயிருவாங்க...
அங்க இருக்கிறம் இருக்குதெண்டு தட்டி ஏதாவது இருக்குதா?
//மிகவும் இலகுவான வழி பாதை தெரிந்தவர்களுடன் தொற்றிக்கொண்டு வருவதே.
ஓ... உந்த ஐடியாக் கொடுத்ததும் முகுந்தன் அண்ணாவோ?
யாரந்த திருட்டுச் சிங்கம்?
//யோ வாய்ஸ் (யோகா) said...
what a coincidence Coincidence வந்தி. நானும் டாக்டர். ஜீவராஜ் அவருக்கு எனது பதிவில் வாழ்த்தி விட்டு உங்களது பக்கம் வந்தால் நீங்களும் வாழ்த்தியிருக்கிறீர்கள். எப்படியோ வாழ்த்துக்கள் அதிகரிப்பது மகிழ்ச்சியே.//
உண்மைதான் யோ இது ஒரு Coincideந்செ தான் அதே நேரம் நான் எழுதிக்கொண்டிருக்கும் போது நூடுல்ஸ் வந்தது நூடுல்சைப் பார்த்தால் நீங்கள் எழுதியிருக்கின்றீர்கள். ஆனாலும் அவருக்கு நானும் ஒரு வாழ்த்துப்போடுவோம் என அப்படியே விட்டுவிட்டேன்.
அதே நேரம் நான் எழுதவிருந்த ஒரு விடயத்தை நீங்கள் எழுதியபடியால் நான் எழுதவில்லை, எல்லாம் டில்காராவின் விவகாரம் தான்.
//ஆமா நாங்கல்லாம் கண்டில இருந்து ஒரே பஸ்ஸில நேரா டொரிங்டன் வர எந்த பஸ்ஸில ஏறனும். //
கண்டியில் இருந்து கோட்டைக்கு வந்து அங்கிருந்து 103 இல் ஏறி பொரளையில் இறங்கி அங்கிருந்து 154 அல்லது 104 ல் டொரிங்டன் வந்தடையலாம். நேரடியாக எந்த பஸ்சும் இல்லை.
//தேர்தல் பற்றி எதுவும் சொல்ல இல்ல. அரசியலுக்கும் நமக்கும் அஜித் விஜய் அளவுக்கு தூரம்//
இல்லையே விஜய் அரசியலுக்குள் நுழையப்போகின்றார் விரைவில்.
// நிமல்-NiMaL said...
இறங்கி...?? //
இறங்கி மிலாந்தினால் அவ்வளவுதான் ஹிஹி
//அங்க இறங்கு 5 நிமிசத்துக்கு மேல நிண்டா அப்பிக்கொண்டு
போயிருவாங்க...//
அதனாலை அங்கே இறங்கி உடனடியாக டொரிங்டன் வீதிக்கு வந்தால் இடது பக்கம் உள்ள ஒரு பெரிய வீடு( இருப்பது எல்லாம் பெரியவீடுதானே என என்னைத் திட்டக்கூடாது).
//அங்க இருக்கிறம் இருக்குதெண்டு தட்டி ஏதாவது இருக்குதா?//
ஒரு தட்டியும் இல்லை , அவர்களுக்குச் தட்டி வைக்கச் சொல்லவா?
//ஆதிரை said...
ஓ... உந்த ஐடியாக் கொடுத்ததும் முகுந்தன் அண்ணாவோ?//
இல்லை இல்லை இது என்ரை சொந்த அனுபவம்.
//இறக்குவானை நிர்ஷன் said...
யாரந்த திருட்டுச் சிங்கம்?//
உங்கள் மின்னஞ்சலைப் பார்க்கவும்.
// வந்தியத்தேவன் said...
நேரடியாக எந்த பஸ்சும் இல்லை.//
பஸ் இல்லாட்டி ஹெலிகப்டர் ஏதும் இல்லையா நேரா போக?
///சக பதிவரும் நண்பருமான ஜீவநதி வலையின் சொந்தக்காரர் டொக்டர் த,ஜீவராஜின் திருமணம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(01.11.2009) திருகோணமலையில் நடைபெறவிருக்கின்றது. அவருக்கும் சகோதரி அருணாவிற்க்கும் பதிவர்களின் சார்பிலும் என் சார்பிலும் திருமண வாழ்த்துக்கள்.///
நாங்களும் வாழ்த்துகிறோம்.... அதற்கு அடுத்த நாளே சகோதரர் அருண்மொழிவர்மன் கொழும்பு மயூராபதி அம்மன் கோவிலில் தம் மனதுக்கினியவளைக் கைப்பிடிக்கிறார். 11:15-12:45 முகூர்த்தம். பதிவர்கள் வாழ்த்தலாம்.
அதுசரி, உ.த. அண்ணனைச் சாட்டி நீங்கள் அனுஷ்காவை ஜொள்ளு விடுறீயள்.... ஐயோ ஐயோ
//மிகவும் இலகுவான வழி பாதை தெரிந்தவர்களுடன் தொற்றிக்கொண்டு வருவதே.//
முதலே சொல்லிட்டன்...
மாலிகாவத்தை வந்து தான் போறது ok?
//பதிவுகளை எப்படி இவர்களிடம் இருந்து காப்பது என்பதையும் தொழில்நுட்பப் புலிகள் சொல்லுங்கள்.//
புலி இல்லை root இன் experience.
இதுக்கு இருக்கு வழி..
report பண்ணலாம்...
சாத்தியம் இருக்குது அந்த blog stop பண்ணு பட
"http://www.google.com/support/blogger/bin/topic.py?hl=en&topic=12468"
எனது ஒரு blog இப்படி சுட்டு போட்டதால் போனாது....
note:- வேர ஒண்டும் சுட்டு போட இல்லை.. indiaglitz இல இருந்து ஒரு இரண்டு மூன்று படம் சுட்டு போட்டனான்...
so படங்கள்(கிளு கிளுப்பாக) போடும் போது வலைப்பதிவாளர்கள் கவனம்.....
இருக்கிறம் ஒன்று கூடல் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். (கட்டுநாயக்காவில் இருந்து எப்படி வருவது? :)) )
டொக்டர் த,ஜீவராஜிற்கு திருமண வாழ்த்துக்கள்.
//பதிவுத் திருட்டுகள்//
என்ன செய்ய முடியும்...:((((
//அங்க இறங்கு 5 நிமிசத்துக்கு மேல நிண்டா அப்பிக்கொண்டு
போயிருவாங்க...//
பயமுறுத்துறீங்களே? ஆமர்வீதியில் வெயிட்டிங் ஓகே?
பதிவுத்திருட்டைத் தடுக்க எங்கோ ஒரு JavaScript பார்த்த ஞாபகம். ஆனால் அதை இட்டால் பதிவைப் படிப்பவர்களும் எரிச்சலடையக்கூடும் என்பதால் இணைக்கவில்லை. எனது ஒரு பதிவு மொத்தம் ஏழு இடங்களில் இடப்பட்டிருந்தது. இப்போதெல்லாம் பதிவை யாராவது திருடாவிட்டால்தான் ஒரு மாதிரியாக இருக்கின்றது.
http://www.copyscape.com இல் சென்று உங்கள் பதிவு URL இனை கொடுத்துத் தேடுங்கள். திருடப்பட்டிருந்தால் புட்டுப்புட்டு வைத்துவிடும்.
அடடே.. பதிவுலகம் தூங்கிப் போய்விட்டதுவோ.... இன்னும் ஒரு எதிர்மறை வாக்கையும் காணவில்லையே... (ஏதோ, என்னால முடிஞ்ச கலகம்)... ஆள் ஆரெண்டு கண்டுபிடிச்சாச்சா???
//சக பதிவரும் நண்பருமான ஜீவநதி வலையின் சொந்தக்காரர் டொக்டர் த,ஜீவராஜின் திருமணம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(01.11.2009) திருகோணமலையில் நடைபெறவிருக்கின்றது.//
எங்களுடைய வாழ்த்துக்களும்...
//மிகவும் இலகுவான வழி பாதை தெரிந்தவர்களுடன் தொற்றிக்கொண்டு வருவதே.//
இது தனி வழி
:)
//யோ வாய்ஸ் (யோகா) said...
பஸ் இல்லாட்டி ஹெலிகப்டர் ஏதும் இல்லையா நேரா போக?//
இருக்கு ஆனால் அந்த இடத்தில் இறங்க இடமில்லையாம் ஹெலியில் இருந்து நீங்கள் குதிப்பீர்கள் என்றால் அனுப்பிவைக்கின்றோம்.
// Kiruthikan Kumarasamy said...
நாங்களும் வாழ்த்துகிறோம்.... அதற்கு அடுத்த நாளே சகோதரர் அருண்மொழிவர்மன் கொழும்பு மயூராபதி அம்மன் கோவிலில் தம் மனதுக்கினியவளைக் கைப்பிடிக்கிறார். 11:15-12:45 முகூர்த்தம். பதிவர்கள் வாழ்த்தலாம்.//
தகவலுக்கு நன்றி கிருத்தி. அருண்மொழிவர்மனுக்கும் திருமண வாழ்த்துக்கள்.
//அதுசரி, உ.த. அண்ணனைச் சாட்டி நீங்கள் அனுஷ்காவை ஜொள்ளு விடுறீயள்.... ஐயோ ஐயோ//
உண்மைகளை இப்படிப் பொது இடத்தில் போட்டு உடைக்ககூடாது.
// root said...
முதலே சொல்லிட்டன்...
மாலிகாவத்தை வந்து தான் போறது ஒக்?//
சரி சரி வந்துபோகின்றேன்.
//report பண்ணலாம்...
சாத்தியம் இருக்குது அந்த blog stop பண்ணு பட
"http://www.google.com/support/blogger/bin/topic.py?hl=en&topic=12468"//
உங்கள் உதவிக்கு நன்றிகள் ஒருக்கால் முயற்சி செய்துபார்ப்போம்.
//so படங்கள்(கிளு கிளுப்பாக) போடும் போது வலைப்பதிவாளர்கள் கவனம்.....//
இந்தப் படங்கள் வலைகளில் மேயும் போது கிடைப்பன, சிலவற்றிற்க்கு ஆதி அந்தம் எதுவும் இல்லை அதனால் பயப்படாமல் பாவிக்கலாம்.
//வேந்தன் said...
என்ன செய்ய முடியும்...:((((//
ஏதோ செய்யலாமாம் திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது.
//Subankan said...
பயமுறுத்துறீங்களே? ஆமர்வீதியில் வெயிட்டிங் ஓகே?//
பயமுறுத்தல் அல்ல சில நிஜங்கள் இவை. சரி சரி ஆமர்வீதிக்கு வந்து அப்படியே மாளிகாவத்தையில் இன்னொருவரையும் அழைத்துக்கொண்டுசெல்வோம்.
//Subankan said...
பதிவுத்திருட்டைத் தடுக்க எங்கோ ஒரு JavaScript பார்த்த ஞாபகம். ஆனால் அதை இட்டால் பதிவைப் படிப்பவர்களும் எரிச்சலடையக்கூடும் என்பதால் இணைக்கவில்லை. எனது ஒரு பதிவு மொத்தம் ஏழு இடங்களில் இடப்பட்டிருந்தது. இப்போதெல்லாம் பதிவை யாராவது திருடாவிட்டால்தான் ஒரு மாதிரியாக இருக்கின்றது.//
ஆமாம் நானும் அந்த ஜாவாஸ்கிரிப்ட் பார்த்தனான். ஆஹா நீங்கள் சாதனையே செய்திருக்கின்றீர்கள்.
//http://www.copyscape.com இல் சென்று உங்கள் பதிவு URL இனை கொடுத்துத் தேடுங்கள். திருடப்பட்டிருந்தால் புட்டுப்புட்டு வைத்துவிடும்.//
தேடினேன் ஏதோ System maintenance என தகவல் வருகின்றது
// Kiruthikan Kumarasamy said...
அடடே.. பதிவுலகம் தூங்கிப் போய்விட்டதுவோ.... இன்னும் ஒரு எதிர்மறை வாக்கையும் காணவில்லையே... (ஏதோ, என்னால முடிஞ்ச கலகம்)... ஆள் ஆரெண்டு கண்டுபிடிச்சாச்சா??? //
ஆஹா ஏன் இந்தக் கொலை வெறி. யாழ்தேவி தொழில்நுட்பவாதிகள் ஏதோ செய்து அதனை நிறுத்தியிருக்கிறார்களாம். எனக்கு உந்த தொழில்நுட்பம் ஒன்றும் தெரியாது என்பதை இங்கே தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.
//தமிழன்-கறுப்பி... said...
எங்களுடைய வாழ்த்துக்களும்...//
நன்றிகள் தமிழன் கறுப்பி உங்கள் வாழ்த்துகளை அவரிடம் சேர்ந்துவிடுகின்றேன்.
//இது தனி வழி//
ஹாஹா உங்களுக்குத் தான் புரிந்திருக்கின்றது.
//இதே நேரம் நேற்று மக்கள் விடுதலை முன்னணி() நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைய நீக்கும் படி ஆர்ப்பாட்டம் நடத்தியது. //
மக்கள் விடுதலை முன்னணியா? அந்தக் கட்சி இப்பயும் இருக்குதா? ஹி ஹி....
பதிவர் டொக்ரர்.ஜீவராஜ் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.... சீ.... சீ....
இனிய திருமண வாழ்த்துக்கள்...
(நகைச்சுவைக்காக மட்டும். நகைகச்சுவையாக எடுத்துக் கொள்ளுங்கள்....)
அதுசரி...
வெள்ளவத்தையிலிருந்து போகிறவர்கள் யாராவது எங்கிருந்து, எத்தனை மணிக்கு புறப்படுகிறீர்கள் என்று சொன்னால் யாரோடாவது தொற்றிக் கொள்ள வசதியாக இருக்கும்....
//வெள்ளவத்தையிலிருந்து போகிறவர்கள் யாராவது எங்கிருந்து, எத்தனை மணிக்கு புறப்படுகிறீர்கள் என்று சொன்னால் யாரோடாவது தொற்றிக் கொள்ள வசதியாக இருக்கும்....
பன்னிகள் தான்....
நாங்க சிங்கங்கள்.
ஹா ஹா ஹா
[[[அண்ணன் உண்மைத்தமிழனின் அபிமான நடிகை அனுஷ்கா என்பதை அவரின் மூஞ்சிப் புத்தகத்தில் தெரிந்துகொண்டேன். அவருக்காக வேட்டைக்காரி அனுஷ்காவின் அழகிய தோற்றம்]]]
அடக் கொடுமையே.. இதென்ன கூத்து..?
வந்தியா.. அனுஷ்கா போட்டோவை உமது தளத்துல போடுறதுக்கு என் பேரை சாக்கா வைச்சுக்கிட்டீகளா..?
ம்.. நல்லாயிருங்க தம்பீ..!
Post a Comment