புத்தாண்டு புதுக் குழப்பம்
பொதுவாக டிசம்பர் 31 என்றாலே அனைவரின் மனதிலும் வருவது புத்தாண்டுக் கொண்டாட்டமே. கிறிஸ்துமஸ் அன்று தொடங்கும் கொண்டாட்டங்கள் புதுவருடம் வரை நீடிப்பது வழக்கம். உலகமே டிசம்பர் 31 இரவைக் குதுகலாமாக கொண்டாடும் போது இலங்கையில் மட்டும் ஒரு குழப்பம்.
என்ன குழப்பம் என்றால் டிசம்பர் 31 ந்திகதி போயா(பெளர்ணமி) தினமாகும். இங்கே போயா தினம் விடுமுறையாகவும் மதுபானங்கள், இறைச்சி போன்றவை விற்பனை செய்யமுடியாத நாளாகவும் இருக்கின்றது. ஆகவே டிசம்பர் 31 ந்திகதி எப்படி மதுபானம் இல்லாமல் கொண்டாடுவது.
டிசம்பர் 31ந்திகதி ஆட்டம் பாட்டம் எனக் கொடி கட்டிப் பறக்கும் நட்சத்திர ஹோட்டல்கள், பப்கள் எப்படி இந்த நிலையைச் சமாளிக்கப்போகின்றன. சிலர் அரசாங்கத்துக்கு நள்ளிரவு 12 மணியின் பின்னர் மதுபானங்களை விற்க அனுமதி கோரியிருக்கின்றார்கள். ஆனாலும் அதற்கெல்லாம் விசேட அனுமதி தேவைப்படும் என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.
அதே நேரம் வீடுகளில் மதுபானங்களுடன் கொண்டாடுபவர்களை எந்தச் சட்டமும் ஒன்றும் செய்யமுடியாது.
தீபாவளிக் குழப்பம்
எதிர்வரும் 17ந்திகதி தீபாவளி பண்டிகை வருகின்றது. அன்றைக்கு புரட்டாதி மாதம் என வாக்கிய பஞ்சாங்கம் கூறுகின்றது. அதனால் புரட்டாதியில் 300 வருடங்களுக்குப் பிறகு தீபாவளி வருவதாகவும் கூறுகின்றது.
திருக்கணிதப்படி ஐப்பசி முதலாம் திகதிதான் தீபாவளி. அன்று துலாத்தில் சூரியன் நுழைகிறான். வாக்கிய பஞ்சாங்கம் பிழை என்றும் அதனால் தீபாவளி ஐப்பசியில் தான் வருகின்றது இதனால் எந்த குழப்பமும் இல்லையென்றும் கூறுகின்றது.
நல்ல காலம் இந்த குழறுபடியை வைத்து புடைவை நகை வியாபாரிகள் சகோதரர்களுக்கு தோஷம், பெற்றோர்களுக்குத் தோஷம் என இந்த வியாபாரத் தந்திரங்களும் செய்யவில்லை.
எது எப்படியோ தீபாவளி என்பது ஆரியர்களின் பண்டிகைதான். இதனால் தமிழர்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை ஒரு நாள் விடுமுறைமட்டும் அனுபவிக்கலாம்.
கிரிக்கெட்
நடந்து முடிந்த ஐசிசி மினி உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணித் தலைவர் யூனிஸ் கானும் பயிற்றுவிப்பாளர் இந்திகாப் அலாமும் சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆனால் இந்தப் போட்டியை விட அவுஸ்திரேலியாவுக்கு எதிரான வெல்ல வேண்டிய போட்டியை இந்தியாவை வெளியேற்றச் செல்வதற்காக பாகிஸ்தான் வேண்டுமென்றே தோற்றதாகவும் சிலர் கூறுகின்றார்கள். பாகிஸ்தான் வெல்ல வேண்டுமென பிரார்த்தித்த இந்தியர்களின் பிரார்த்தனை வீணாகியது.
பாகிஸ்தான் சூதாட்டத்தில் இறங்கியிராவிட்டால் நல்லதொரு இறுதிப்போட்டி பார்வையாளர்களுக்கு கிடைத்திருக்கும். ஆஸியும் நியூசியும் மோதிய போட்டி ஒரு இறுதிப்போட்டி போல தோன்றவே இல்லை.
புவனேஸ்வரி
புவனேஸ்வரி சில நாட்களாக ஊடகங்களில் அடிபடும் சூடான பெயர். இரண்டாம் தடவையாக விபசாரத் தடுப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைத்திருக்கப்படுபவர். சில நாட்களுக்கு முன்னர் அவர் தன்னைத் தவிர ஏனைய சில கொடிகட்டிப் பறந்த பறக்கின்ற நடிகைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் என கொழுத்திப்போட்ட அணுகுண்டு கோடம்பாக்கத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
புவனேஸ்வரிக்கு ஆதரவாக சில விவிஜபிகள் இருப்பதாகவும் அவர்கள் தற்போது அவரைக் கைவிட்டுவிட்டதாகவும் அரசல் புரசலாக செய்திகள் கசிகின்றது. புவனேஸ்வரியின் வாக்குமூலத்தால் கொதித்துப் போயுள்ள நடிகர் சங்கம் போலீஸ் கமிசனரிடம் தங்கள் புகாரையும் கொடுத்திருக்கின்றார்கள்.
ஒரு சில நடிகர்கள் முதல்வரையும் தங்களுக்கு சார்பாக இருக்கச் சொல்லி வற்புறுத்துகின்றார்களாம்.
எத்தனையோ கோடி ரூபாக்களை கொள்ளை அடித்த அடித்துக்கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகளை விட்டுவிட்டு ஏனோ வயிற்றுப் பிழைப்புக்காக விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகளை கைது செய்வது காவல் துறைக்கு பிழைப்பாகிவிட்டது என புவனேஸ்வரி சார்பில் பேசவல்லவர்கள் கூறுகின்றார்கள்.
எது எப்படியோ சிறையினுள் தன் வாழ்க்கை வரலாற்றை(?) எழுதப்போவதாக புவனேஸ்வரி கூறியுள்ளார். யார் யாருடைய குட்டுகள் வெளியில் வரப்போகின்றதோ பொறுத்திருந்து பார்ப்போம். சென்சேசனல் நியூஸ் தேடும் மீடியாக்களுக்கு புவனேஸ்வரி சில நாட்களுக்கு ஹாட் டாபிக் தான்.
5 கருத்துக் கூறியவர்கள்:
//ஆகவே டிசம்பர் 31 ந்திகதி எப்படி மதுபானம் இல்லாமல் கொண்டாடுவது.//
எனக்கெல்லாம் பிரச்சினையில்லை பச்சிளம் பாலகர்களுக்கு பால் இல்லாமல் போனால்தான் பிரச்சினையே..
//தமிழர்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை ஒரு நாள் விடுமுறைமட்டும் அனுபவிக்கலாம்.//
ஏன் இல்லை உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் ஏதாவது ஒரு படத்தை பார்த்து மகிழலாமே?
புவனேஸ்வரி விடயம் புஸ் என்று அடங்கிவிடும். கவலைபடவேண்டாம். தலைவர் கலைஞர் எப்படியும் காப்பாற்றி விடுவார். ஏனென்றால் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நமீதா இல்லாவிடின் கலைளிழந்து விடுமே..
//எது எப்படியோ தீபாவளி என்பது ஆரியர்களின் பண்டிகைதான். இதனால் தமிழர்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை ஒரு நாள் விடுமுறைமட்டும் அனுபவிக்கலாம்.
//
அதுவும் போச்சு, தீபாவளி சனிக்கிழமை.
தீபாவளியில் இவ்வளவு குழப்பமா..? அதனால் தான் விஜய் படம் வரவில்லையா ..? :-)
அடடா டிசம்பர் 31ஆம் திகதி இப்படி ஒரு ஆப்பு வைத்துவிட்டதா? அதுசரி வந்தி... ஏன் நீங்கள் இந்தப்பதிவில் நம்ம தமன்னாவின் புகைப்படத்தை போட்டிருக்கின்றீர்கள் என்று யோசித்தே குழம்பிவிட்டேன்.(P*TV?)
//நடந்து முடிந்த ஐசிசி மினி உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணித் தலைவர் யூனிஸ் கானும் பயிற்றுவிப்பாளர் இந்திகாப் அலாமும் சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். //
Is it?
I used crapinfo via my mobile... It didn't say about it. Crapinfo proved that it's a crap.
regarding new year matter,
I don't mind whether it's poya or vaayaa... I'm not gonna celebrate it.
Same to Deepavali.
Let's see...
Thank u for the news about Pakistan Cricket anna.
Post a Comment