இன்றைய காலத்து இளைஞர்களுக்கு உணவு உடை உறையுள் போன்ற அத்தியாவசிய விடயங்களுடன் வாழ்க்கையில் இன்னொன்றாக மாறிவிட்டது மூஞ்சிப்புத்தகம் என தமிழில் செல்லமாக அழைக்ப்படும் Facebook.
Facebook ஆரம்பித்தகாலத்தில் Orkutன் ஆதிக்கத்தினால் அவ்வளவாக பலரைக் கவரவில்லை ஆனால் காலப்போக்கில் Quiz, Games, Date of the day, எனப் பல விடயங்களைப் புகுத்தி Orkutடை ஓரம் கட்டி முன்னணியில் வந்துவிட்டது Facebook.
நானும் ஆரம்பத்தில் Facebook பக்கம் தலைவைத்துப் படுக்காவிட்டாலும் சும்மா இருக்கட்டுமே என ஒரு கணக்கை ஆரம்பித்து வைத்தேன். 2008ன் ஆரம்பத்தில் நண்பி ஒருவரின் திருமணம் கனடாவில் நடந்தது, அவரது திருமணப் புகைப்படங்களை மின்னஞ்சல் செய்ய அவரிடம் கேட்டபோது தன்னுடைய Facebook ல் இருக்கிறது பாருங்கள் என்றார். அன்று தொடங்கிய அடிமைத் தனம் இன்றைக்கு சிறந்த விவசாயி ஆகும் வரை வந்துவிட்டது.
பின்னர் என்னுடைய பாடசாலை காலத்து நண்பர்கள் பலர் தங்களையும் இணைத்துக் கொண்டபின்னர் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. பாடசாலையின் இறுதிநாள் பரீட்சையில் பார்த்த நண்பனிடம் கூட அளவளாவ முடிந்தது. அத்துடன் எங்கள் பாடசாலைக் குழுமம், எங்கள் வகுப்புக் குழுமம் எனப் பல குழுமங்களில் இணைந்து அன்றைய பசுமையான நினைவுகளை இரைமீட்க முடிந்தது.
"1வது காதலில் தோல்வியுற்றவர்கள் சங்கம்","குப்புற படுத்துக்கிட்டு "யோசிப்போர்" சங்கம்"(அண்ணன் உண்மைத் தமிழன் ஒரு உறுப்பினர்) "வில்லுப் பார்த்து நொந்துபோனோர் சங்கம்", "ஏகனை எதிர்ப்போர் சங்கம்", "அனுஷ்கா", "நயந்தாரா", கூழ் குடிப்போர் சங்கம் (கானா பிரபா ஒரு உறுப்பினர்) எனச் குழுக்கள் பல இருக்கின்றன. இதனை விட பல தமிழ் மொழி சம்பந்தப்பட்ட பல குழுக்களும் திறம்பட இயம்பி மொழி பற்றிய பலவிதமான விவாதங்களைச் செய்கின்றார்கள்.
சில நாட்களுக்கு முன்னர் சில நண்பர்கள் Facebook ல் நாங்கள் விவசாயம்(Farmville) செய்கின்றோம் நீயும் இணைந்துகொள் என எனக்கு கோரிக்கை விடுத்தும் வழக்கம் போல் ஒரு நிலத்தை வாங்கிப்போட்டுவிட்டு சும்மா இருந்துவிட்டேன் ஆனால் என் பங்கு தூயா எழுதிய சில 'பிரபல' பதிவர்களும், விவசாயமும் (அதிரடி பதிவு) பதிவினால் எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த விவசாயி கிளர்ந்து எழுந்து இன்றைக்கு லெவல் 11 வரை சிறப்பாக விவசாயம் பண்ணுகின்றார்.
இன்றைக்கு எனப் பல பதிவர்கள் என்னுடைய பக்கத்து தோட்டக்காரர்கள், அன்புத் தம்பி டொன்லீ தன் பதுங்கு குழிக்குள் இருந்து அன்பளிப்புச் செய்த குட்டி யானையும் ஏனைய நண்பர்கள் அன்பளிப்புச் செய்த முயல்கள், செம்மறி ஆடுகள், மற்றும் பசுக்கள் என பல என் தோட்டத்திம் மேய்கின்றன.
நேற்று டிவிட்டரில் நம்ம டொன்லீயும் கீத்தும் என்னுடைய பால்ப் பண்ணையில் எப்படி 20 பசுக்களை அடைத்து வைத்திருப்பது எப்படி என ஆராய்ந்தார்கள், டொன்லீ சொன்னார் ஒரு அன்பளிப்பாக கிடைக்கின்ற ஒரு பசுவை நேரடியாக பால்ப் பண்ணையில் அடைத்தால் அது 20 பசுக்களாகும் என்றார். இதனை நம்பி நானும் கீத்தை கெஞ்சிக் கூத்தாடி ஒரு பசுவை அன்பளிப்பாக பெற்று பண்ணையில் அடைத்தால் ஒரு மாற்றமும் நடக்கவில்லை. பின்னர் கீத் இதனை ஒரு பதிவாக எழுதி நாமக்கலாரை நக்கலடித்திருந்தார். கீத்தின் பதிவு பசுக் கொட்டாய்
இந்த விளையாட்டுகளை விட்டுவிட்டு முக்கியமான விடயத்திற்க்கு இனி வருவோம். வருகின்ற மாதம் என் நண்பர் ஒருவருக்கு யாழ்ப்பாணத்தில் திருமணம் நடக்கவிருக்கின்றது. அவர் இன்னொரு நாட்டில் இருந்து வருகின்றார். பெண்ணைப் பார்த்தது Facebook ல் தான். திருமணம் பேசும்போது மணமகளின் படத்தை Facebook ல் இருக்கின்றது பாருங்கள் என்றார்களாம் பின்னர் நண்பர் அவரை தன்னுடைய நண்பராக அழைப்பு (Friend Request) அனுப்பி இருவரும் தங்கள் படங்களைப் பார்த்தார்களாம், இதனை விட இருவரினதும் விருப்பு வெறுப்புகளும் அதில் இருந்தபடியால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இலகுவாக இருந்ததாகவும் கூறினார்.
இதே போல் இன்னொரு தெரிந்தவர் தன்னுடைய நண்பி ஒருத்தரின் நண்பியை Facebookல் கண்டு பிடித்து காதலித்துக் கொண்டிருக்கின்றார். நண்பியின் நண்பர்கள் பட்டியலைப் பார்க்கும் போது ஒரு பெண்ணின் படம் அவரைக் கவர்ந்திருக்கின்றது உடனே அவரின் Profile ஐ பார்த்தபோது இவரின் குணாதிசயங்களோடு பொருந்தியதால் உடனடியா தன்னுடய நண்பியாக்கி பின்னர் அரட்டைகள் அடித்து சில நாட்களின் பின்னர் காதலிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.
இத்தனைக்கும் ஒருவர் இலங்கையில் இருக்கின்றார் இன்னொருவர் இன்னொரு ஆசிய நாட்டில் இருக்கின்றார். இதுவரை நேரில் சந்தித்ததில்லை. இன்னொரு காதல் கோட்டை கட்டுகின்றார்கள், நான் அவருக்கு சொன்ன அறிவுரை கவனம் காதல் கோட்டை கனவுக் கோட்டையாகி விடப்போகின்றது என்பதாகும்.
Facebook, Orkut போன்ற இணையங்களில் சில தீமைகள் இருந்தாலும் பல நன்மைகளும் இல்லாமலில்லை. ஆனாலும் இவை நேரத்தைப் போக்கவே பயன்படுகின்றதாக சிலர் கூறுகின்றார்கள்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
19 hours ago
29 கருத்துக் கூறியவர்கள்:
//Facebook, Orkut போன்ற இணையங்களில் சில தீமைகள் இருந்தாலும் பல நன்மைகளும் இல்லாமலில்லை.//
உதாரணமாக அப்ப நமது பெரியண்ணன் வந்தியின் திருமணமும் பேஸ்புக்கில் தான் நிச்சயிப்படும் என்பது போல...!
நல்ல பயனுள்ள பதிவு. இனி facebook பக்கம் அடிக்கடி வரவேண்டும்போல
நானும் தான் மூஞ்சிப்புத்தகத்தை பலகாலமாக பயன்படுத்துகிறேன். எனக்கு யாருமே செட் ஆகலையே வந்தி. காதலனாக முயற்சித்து விவசாயி ஆனது தான் மிச்சம்
//நேற்று டிவிட்டரில் நம்ம ஆயில்சும் கீத்தும் என்னுடைய பால்ப் பண்ணையில் எப்படி 20 பசுக்களை அடைத்து வைத்திருப்பது எப்படி என ஆராய்ந்தார்கள், ஆயில்ஸ் சொன்னார் ஒரு அன்பளிப்பாக கிடைக்கின்ற ஒரு பசுவை நேரடியாக பால்ப் பண்ணையில் அடைத்தால் அது 20 பசுக்களாகும் என்றார்.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்னோட மைண்ட்டுக்கு வராமலே இதெல்லாம் அங்க நடந்துக்கிட்டிருக்கா ஆஹா மூஞ்சியை மூடிடவேண்டியதுதான் போல !
[வந்தி அண்ணா நான் அங்கன போறதே ரொம்ப கொறச்சல் அதுல இந்த பார்ம்வில்லா வெளையாட்டுல எல்லாம் என்னைய ஈடுபடுத்திக்காமலே எப்புடி...?]
இது ஏதோ தனக்கு அப்படி இதுவரை நடக்கவில்லை என்று வயிறெரிந்து கதைப்பதைப் போலவே இருக்கிறதே? ;)
ஓ... அதுதான் இப்போதெல்லாம் அதிகமாகவே மூஞ்சிப்புத்தகத்தில் நேரம் செலவிடுகிறீர்களோ?
வாழ்க வாழ்க....
அப்படியே பதிவுலகச்சிங்கம் என்ற பட்டத்தோடு விவசாயச் சிங்கம் என்ற பட்டமும் உங்களுக்கு வழங்கப்படுகிறது....
சில சொந்த விடயங்களை நண்பர்களின் தலையில் தூக்கிப் போட்டு கதை சொல்லுவதற்கு உங்களை விட்டால் யார் இருக்கினம் இங்கே.... :)
வந்தி - மலேசியா - சிங்கை - கனடா - கொலிஜ் எழுத்தத் தொடங்கினால் உங்களின் ஹீரோத்தனத்தில் ஒரு தொடர்கதையே எழுதி முடிக்கலாம்.
விவசாயம் பற்றி..
நாமக்கல் சிபி சொன்னது உண்மை தான்.. அதைப் பார்த்து தான் நான் கூட 23 பசுவை கொட்டகைக்குள்ள அடைச்சு வைச்சிருக்கிறன்..
Farmville பற்றி ஏதும் சந்தேகம் இருந்தால் உடனடியாக தீர்க்கப்படும்.. :)
////// ஆதிரை said...
சில சொந்த விடயங்களை நண்பர்களின் தலையில் தூக்கிப் போட்டு கதை சொல்லுவதற்கு உங்களை விட்டால் யார் இருக்கினம் இங்கே.... :)
வந்தி - மலேசியா - சிங்கை - கனடா - கொலிஜ் எழுத்தத் தொடங்கினால் உங்களின் ஹீரோத்தனத்தில் ஒரு தொடர்கதையே எழுதி முடிக்கலாம்//////
எழுதுங்கள் ஆதிரை. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்....
மாஃபி
யா வா
ர்ஸ்ம் ட்ரை பண்ணுங்கள். நன்றாகவே இருக்கிறது.
ஆகா சாயினி இப்ப இதெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டா போல இருக்கு.... farmville க்கு consultatncy எண்டு கொம்பனி தொடங்கினாலும் தொடங்கீடுவா போல இருக்கு
யோ வாய்ஸ் (யோகா) said
நானும் தான் மூஞ்சிப்புத்தகத்தை பலகாலமாக பயன்படுத்துகிறேன். எனக்கு யாருமே செட் ஆகலையே வந்தி. //
மூஞ்சி (என்ன தமிழோ) ஒழுங்காக இருக்கணும் அப்பு..
//நிமல்-NiMaL said...
உதாரணமாக அப்ப நமது பெரியண்ணன் வந்தியின் திருமணமும் பேஸ்புக்கில் தான் நிச்சயிப்படும் என்பது போல...!//
இருக்கலாம் யார் கண்டது ஹிஹிஹி.
//Subankan said...
நல்ல பயனுள்ள பதிவு. இனி facebook பக்கம் அடிக்கடி வரவேண்டும்போல//
வாருங்கள் பக்கத்து தோட்டக்காரரே உங்கள் நிலம் சும்மா கிடக்கின்றது உழுது விவசாயம் செய்யுங்கள்
//யோ வாய்ஸ் (யோகா) said...
நானும் தான் மூஞ்சிப்புத்தகத்தை பலகாலமாக பயன்படுத்துகிறேன். எனக்கு யாருமே செட் ஆகலையே வந்தி. காதலனாக முயற்சித்து விவசாயி ஆனது தான் மிச்சம்//
எனக்கும் தான். நானும் விவசாயி ஆகி சில நாட்களில் பைலட்டாகும் யோகம் கிடைத்திருக்கிறது. ஆனால் உங்களுக்கு lover of the ஆக ஒரு பிரபலம் அடிக்கடி வந்துபோகின்றார்.
//ஆயில்யன் said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்னோட மைண்ட்டுக்கு வராமலே இதெல்லாம் அங்க நடந்துக்கிட்டிருக்கா ஆஹா மூஞ்சியை மூடிடவேண்டியதுதான் போல !//
மன்னிக்கவும் ஆயில்ஸ் ட்விட்டரில் அடிக்கின்ற கும்மிகளில் டொன்லீ கூறியதை நான் நீங்கள் என மாறி எழுதிவிட்டேன் இப்போ மாற்றிவிட்டேன்.
//[வந்தி அண்ணா நான் அங்கன போறதே ரொம்ப கொறச்சல் அதுல இந்த பார்ம்வில்லா வெளையாட்டுல எல்லாம் என்னைய ஈடுபடுத்திக்காமலே எப்புடி...?]//
வந்தி அண்ணாவா? இதெல்லாம் ரொம்ப ஓவர் நான் சின்னப்பிள்ளை ஆயில்ஸ் அண்ணா. பார்ம்வில்லா வாங்கள் நல்லாப் பொழுது போகும்.
//கனககோபி said...
இது ஏதோ தனக்கு அப்படி இதுவரை நடக்கவில்லை என்று வயிறெரிந்து கதைப்பதைப் போலவே இருக்கிறதே? ;)//
தம்பி இரகசியம் எல்லாம் வெளியே சொல்லக்கூடாது.
//ஓ... அதுதான் இப்போதெல்லாம் அதிகமாகவே மூஞ்சிப்புத்தகத்தில் நேரம் செலவிடுகிறீர்களோ? வாழ்க வாழ்க....//
இருக்கலாம்
//அப்படியே பதிவுலகச்சிங்கம் என்ற பட்டத்தோடு விவசாயச் சிங்கம் என்ற பட்டமும் உங்களுக்கு வழங்கப்படுகிறது....//
என்ன விட சிறந்த விவசாயிகள் இருக்கின்றார்கள்
//ஆதிரை said...
சில சொந்த விடயங்களை நண்பர்களின் தலையில் தூக்கிப் போட்டு கதை சொல்லுவதற்கு உங்களை விட்டால் யார் இருக்கினம் இங்கே.... :)//
அடங்கு ராசா அடங்கு. ஒரு கதை சொன்னால் அனுபவிக்கவேண்டும் ஆராயக்கூடாது/
//வந்தி - மலேசியா - சிங்கை - கனடா - கொலிஜ் எழுத்தத் தொடங்கினால் உங்களின் ஹீரோத்தனத்தில் ஒரு தொடர்கதையே எழுதி முடிக்கலாம்.//
எப்படி சிலுவை சுமந்த சிங்காரிக் கதைபோல் கதையாக நிறைய ஆட்டோகிராப், பொக்கிசம் எல்லாம் வரும், நீங்கள் எழுதத் தயார் என்றால் நான் கதை சொல்கின்றேன்.
ஆசிய நாட்டு அந்த நண்பர் டொன்லி மாதிரிக் கிடக்கே
//சாயினி/Chayini said...
நாமக்கல் சிபி சொன்னது உண்மை தான்.. அதைப் பார்த்து தான் நான் கூட 23 பசுவை கொட்டகைக்குள்ள அடைச்சு வைச்சிருக்கிறன்.. //
எப்படி எப்படி? தயவு செய்து மேலதிக விளக்கங்கள் தரவும், நீங்கள் விவசாயம் செய்வதால் தான் பதிவுலகப் பக்கம் எட்டிப்பார்ப்பதில்லையோ நான் நினைத்தேன் பரீட்சைக்கு படிக்கிறியள் என.
//Farmville பற்றி ஏதும் சந்தேகம் இருந்தால் உடனடியாக தீர்க்கப்படும்.. :)//
நிறைய்ச் சந்தேகம் இருக்கின்றது. தீர்த்துவையுங்கள்.
//யோ வாய்ஸ் (யோகா) said...
எழுதுங்கள் ஆதிரை. ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்....//
இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கின்றீர்கள் நான் ரொம்ப நல்லவன்.
//ramalingam said...
மாஃபி யா வார்ஸ்ம் ட்ரை பண்ணுங்கள். நன்றாகவே இருக்கிறது.//
நன்றிகள் ராமலிங்கம் அவர்களே நான் அதனை முயற்சி செய்தேன் ஆனால் கஸ்டமாக இருந்தபடியால் விட்டுவிட்டேன்.
///Kiruthikan Kumarasamy said...
ஆகா சாயினி இப்ப இதெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டா போல இருக்கு.... farmville க்கு consultatncy எண்டு கொம்பனி தொடங்கினாலும் தொடங்கீடுவா போல இருக்கு//
ஆமாம் கிருத்தி விரைவில் வெள்ளவத்தையில் பாவை farmville consultatncy அறிவித்தல் பலகை பார்க்கலாம்.
// Anonymous said...
மூஞ்சி (என்ன தமிழோ) ஒழுங்காக இருக்கணும் அப்பு..//
மூஞ்சி என்பது தமிழ் தான் நண்பரே,
// Anonymous said...
ஆசிய நாட்டு அந்த நண்பர் டொன்லி மாதிரிக் கிடக்கே//
அனானியாரே ஏன் இந்தச் சிண்டு முடிதல் அவர் சின்னப்பொடியன் காதல் கீதல் எனப் போகமாட்டார்.
ம்
நம்ம கதை வேற அண்ணே ...
வலைபூவுக்கு வந்த பிறகு தோட்ட பக்கம் போகாம ....
நம்ம முந்திரி தோட்டம் கருகி போச்சு
என்ன கொடுமை ....
மேலதிக விளக்கங்கங்கள் கிருத்திகனின் பதிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.. ஆனால் இப்போது அதை சரி செய்து விட்டார்கள் போல் இருக்கிறது.. எதற்கும் ஒரு 10,000 செலவு செய்து மீண்டும் முயற்சி செய்யவும்.. :)
இரண்டு கொட்டகைகளுக்கு மேல கொட்டகை வாங்கி விவசாய நிலத்தை அநியாயமாக்க கூடாது என்பதால் மீளவும் நான் முயற்சி செய்யவில்லை..
பரீட்சை என்ன பரீட்சை.. சோறு போடுற விவசாயத்தை விட.. :))
சந்தேகங்களை ஒரு பதிவாக போட்டால் தீர்க்கப்படும்..
மேலதிகமாக :: விவசாயம் செய்பவரை நடமாடமுடியாமல் Hay bales போன்ற ஏதாவதால் சுற்றிவர அடைத்து விட்டால் அவர் ஓடியாடி வேலை செய்யாமல் நின்ற இடத்தில் நின்றே வேலை செய்வார்.. இதனால் உங்களுக்கு எடுக்கும் நேரம் பாதியிலும் குறைவாகும்..
உங்களுக்கு???
இப்படியெல்லாம் நடக்குதா.... நான் அடிக்கடி முஞ்சிப் புத்தகம் போவதில்லை இனிமேலாவது போகலாம் என்று நினைக்கிறேன்.
read this to guys
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33776
Post a Comment