கமல் பொன்விழா
ஒருபடியாக விளம்பரங்களுக்கு மத்தியில் கமல் 50 பிரமாண்ட இறுதி நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பிமுடித்துவிட்டது. விஜய் என்றாலே வித்தியாசம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்த நிகழ்ச்சியையும் வித்தியாசமாகவும் ஒழுங்காவும் நன்கு திட்டமிடலுடனுன் நடத்தி முடித்துள்ளார்கள். நிகழ்ச்சி பற்றி எழுத எத்தனையோ விடயங்கள் இருந்தாலும் ரஜனி கமல் நட்புத்தான் நிகழ்ச்சியின் ஹைலைட்டே. கமல் ரசிகர்கள் ரஜனி படத்தை ரசித்தாலும் ஏனோ ரஜனி ரசிகர்கள் கமலை விமர்சிப்பதுபோல் விமர்சிப்பதில்லை. ரஜனி ரசிகர்களே உங்கள் தலைவரின் பெரும்தன்மையை இனியாவது கடைப்பிடிப்பீர்களா? . நிகழ்ச்சி பற்றியும் இவர்கள் நட்பு பற்றியும் தனிப்பதிவுகள் விரைவில். (கிளம்பிட்டாங்கைய்யா கிளம்பிட்டாங்க).
சூரியாவும் மன்னிப்பும்
புவனேஸ்வரியின் விவகாரத்தால் கொதித்துப்போன நடிகர்கள் தங்கள் எதிர்ப்பை தினமலருக்கு தெரிவித்த கூட்டத்தில் சகல பத்திரிகையாளரையும் ஒரு பிடிபிடித்த நடிகர் சூரியா தான் அப்படிச் சொல்லவில்லை என பல்டி அடித்ததுடன் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். உடனே இவர் ஏன் மன்னிப்புக் கேட்டார் என சின்னக் குழந்தைக்கும் தெரியும் காரணம் தீபாவளிக்கு இவரின் படம் வெளியாகப்போகின்றது. பத்திரிகைகளைப் பகைத்தால் படத்திற்க்கான சரியான விமர்சனம் (?) கிடைக்காது என்ற சுயநலமே ஒழிய வேறு இல்லை. சூரியா உங்களின் நடவடிக்கைகளும் உங்கள் தந்தையின் நல்ல குணங்களும் உங்களிடமும் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களின் எண்ணத்தில் உங்களைப் பற்றிய கறுப்புப் புள்ளி படிய வைத்துவிட்டீர்கள். ஒன்று மட்டும் நிச்சயமாக கூறமுடியும் உங்களுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கிறது.
யாழ்தேவியும் தினக்குரலும்
சில நாட்களுக்கு முன்னர் யாழ்தேவி திரட்டி நிர்வாகத்திற்க்கும் தினக்குரல் பத்திரிகைக்கும் நடைபெற்ற கலந்துரையாடலில் தினக்குரல் பத்திரிகை ஞாயிறு தினக்குரலில் யாழ்தேவி திரட்டியில் இணைக்கப்பட்ட வலைகளில் வெளியாகும் காத்திரமான கட்டுரைகளை தினக்குரலில் வெளியிட சம்மதம் கொடுத்திருக்கின்றது. ஏற்கனவே இருக்கிறம் சஞ்சிகையில் வலைப்பதிவர்களின் ஆக்கங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தவேளையில் இந்தச் செய்தியும் அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். இதன் மூலம் இலைமறை காயாக இருக்கின்ற வலைப்பதிவர்கள் வெளியே தெரியவரும் வாய்ப்பு வரும். திரட்டிகளில் இணைப்பதன் மூலம் பல வாசகர்களை உங்கள் கருத்துகள் சென்றடைவதுபோல் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலம் இணைய வசதி இல்லாதவர்களும் உங்கள் எண்ணங்களை அறிந்துகொள்ளமுடியும்.
மேலதிக விபரங்களுக்கு: யாழ்தேவி
கிரிக்கெட்
சாம்பியன்ஸ் லீக் இருபதுக்கு 20 இந்தியாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 12 அணிகள் கலந்துகொண்டுள்ளன. ஐபில் அணிகளாக பெங்களூர், டெல்லி மற்றும் தற்போதைய சம்பியனான டெக்கான் விளையாடுகின்றன. சில போட்டிகள் விறுவிறுப்பு குறைந்தனவாக இருந்தாலும் நேற்று ஈகில்ஸுக்கும் சசெக்ஸ்சுக்கும் இடையில் நடைபெற்ற போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. போட்டி சமநிலையில் முடிந்ததனால் ரி20 போட்டி நிபந்தனைகளின் படி சூப்பர் ஓவரில் போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டது. சூப்பரில் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஈகில்ஸ் 10 ஓட்டங்களை மட்டும் எடுத்தது. 11 ஓட்டங்களை இலக்காக கொண்டு ஆடிய சசெக்ஸ் சிஜேடி வில்லியர்ஸின் முதல் 2 பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஓட்டங்களை எடுக்காமல் தோல்வியடைந்தது. இன்றைய போட்டியில் டெக்கானின் தலையெழுத்து தெரிந்துவிடும். அடுத்த சுற்றுப் போட்டிகள் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என நினைக்கின்றேன்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
22 கருத்துக் கூறியவர்கள்:
//ஒருபடியாக விளம்பரங்களுக்கு மத்தியில் கமல் 50 பிரமாண்ட இறுதி நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பிமுடித்துவிட்டது. //
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். எனக்கு பார்க்க கிடைக்கவில்லை. உங்கள எல்லாம் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது..
பாவனா படம் சூப்பர்...
ஆனா சரவணபவன் சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததும் எடுத்தது் போல் இருக்கு...
/*jackiesekar சொல்வது:
பாவனா படம் சூப்பர்...
ஆனா சரவணபவன் சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததும் எடுத்தது் போல் இருக்கு...*/
இதுலே டபுள் மீனிங் அதுவும் இல்லியே... ஏன்னா சரவணா பவன் அண்ணாச்சி... எதுலே "கில்லி"-ன்னு எல்லாருக்கும் தெரியும் ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கமல் - ரஜனி நட்பில் நெகிழ்ந்ததை விட, விளம்பரங்கள் போட்டு விஜய் படுத்திய பாட்டில் நெளிந்தது தான் அதிகம்.
சூர்யா பேரைக் கெடுத்துக் கொண்டார்..
நீங்கள் அத்தனை பெரும் உத்தமர் தானா சொல்லுங்கள்.. ;)
எனக்கு சாம்பியன்ஸ் லீக் பெரிதாக சுவாரஸ்யமாக இல்லை..
யாழ்தேவிக்கு வாழ்த்துக்கள்.. நிர்வாக உறுப்பினர் மயூரனுக்கும்.. ;)
ஜாக்கி,நைனா கலக்கிட்டீங்க..
வந்தி, பாவனாவை உடம்பில் கொஞ்சம் கவனமெடுக்க சொல்லுங்கள்.. ;)
\\கமல் ரசிகர்கள் ரஜனி படத்தை ரசித்தாலும் ஏனோ ரஜனி ரசிகர்கள் கமலை விமர்சிப்பதுபோல் விமர்சிப்பதில்லை. ரஜனி ரசிகர்களே உங்கள் தலைவரின் பெரும்தன்மையை இனியாவது கடைப்பிடிப்பீர்களா? . நிகழ்ச்சி பற்றியும் இவர்கள் நட்பு பற்றியும் தனிப்பதிவுகள் விரைவில். (கிளம்பிட்டாங்கைய்யா கிளம்பிட்டாங்க).
\\
தல ஒரு ரஜினி ரசிகர்களின் பார்வைக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு இது
இந்த லிங்கை போயி பாருங்கள்
http://www.rajinifans.com/detailview.php?title=1215
இதுல வச்சிருக்கும் தலைப்பை பாருங்கள்.
;)
//கமல் ரசிகர்கள் ரஜனி படத்தை ரசித்தாலும் //
:-))))
நிசமாவா!
//ரஜனி ரசிகர்களே உங்கள் தலைவரின் பெரும்தன்மையை இனியாவது கடைப்பிடிப்பீர்களா? //
கமல் ரசிகர்களும் கடைபிடித்தால்.... ;-)
//ரஜனி ரசிகர்களே உங்கள் தலைவரின் பெரும்தன்மையை இனியாவது கடைப்பிடிப்பீர்களா? .//
என்ன போஸ், சில நாடுகள் மனித உரிமையையே கடைப்பிடிப்பதில்லை, இதில ரசிகர்களை பெரும்தன்மையை வேற கடபிடிக்கச் சொன்னா....
---
யாழ்தேவிக்கு வாழ்த்துக்கள், தினக்குரலுக்கு நன்றிகள்.
கமல் பொன்விழா உண்மையில் மிக சிறப்பாக திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்பதில் ஐயமில்லை. ரஜனி தனது மனந்திறந்த கருத்துக்களால் உயர்ந்து நிற்கிறார்.
கமலுடைய பகுத்தறிவுக் கொள்கை எனக்கும் உடன்பாடான போதும் அதற்கு அவ்வளவு நேரம் எடுத்தது பொருத்தமாகப் படவில்லை.
எல்லோரும் அவரை அவரது கலைப் பணிக்காக கெளரவிக்கவே வந்திருந்தார்கள். கொள்கை விளக்கத்தைக் கேட்க அல்ல என்பதைப் அவர் புரிந்து கொள்ளவில்லை போலும்.
பாராட்டுவிழா பற்றி விரைவில் பதிவிடுங்கள்... இல்லாட்டா நான் போட்டுடுவன் (நான் இன்னும் பாக்கேல்லை)
எல்லாம் சரி...ஆனா உங்களின் பதிவில் இடப்பட்ட படம்.....??? விளங்கவில்லை....
சூப்பரில் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஈகில்ஸ் 10 ஓட்டங்களை மட்டும் எடுத்தது. 11 ஓட்டங்களை இலக்காக கொண்டு ஆடிய சசெக்ஸ் சிஜேடி வில்லியர்ஸின் முதல் 2 பந்துகளில்../////....முதலில் ஆடிய ஈகிள்ஸ் 9 ரன் எடுத்தது target 10 ரன்
//யோ வாய்ஸ் (யோகா) said...
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். எனக்கு பார்க்க கிடைக்கவில்லை. உங்கள எல்லாம் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது..//
கொஞ்ச நாள் பொறுங்கள் டிவிடி வரும் 80 ரூபாவிற்கு வாங்கலாம்.
// jackiesekar said...
பாவனா படம் சூப்பர்...
ஆனா சரவணபவன் சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததும் எடுத்தது் போல் இருக்கு...//
நன்றிகள் ஜாக்கியாரே, ஜோதிகாவின் தொப்பையை ரசிப்பதுபோல் பாவனாவையும் ரசியுங்கள்.
//நையாண்டி நைனா said...
இதுலே டபுள் மீனிங் அதுவும் இல்லியே... ஏன்னா சரவணா பவன் அண்ணாச்சி... எதுலே "கில்லி"-ன்னு எல்லாருக்கும் தெரியும் ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //
நைனா ஜாக்கி டவுள் மீனிங் எல்லாம் பேசமாட்டார் நல்ல மனிதர். அண்ணாச்சி கில்லி தான்/.
//LOSHAN said...
கமல் - ரஜனி நட்பில் நெகிழ்ந்ததை விட, விளம்பரங்கள் போட்டு விஜய் படுத்திய பாட்டில் நெளிந்தது தான் அதிகம். //
விளம்பரத்தை விட பூட்டேஜ் போட்டார்கள் அதுதான் மனிசரின் பொறுமையைச் சோதித்தது.
//சூர்யா பேரைக் கெடுத்துக் கொண்டார்..
நீங்கள் அத்தனை பெரும் உத்தமர் தானா சொல்லுங்கள்.. ;)//
அதே தான். நானும் இதே கேள்வியைத் தான் கேட்டேன்.
//எனக்கு சாம்பியன்ஸ் லீக் பெரிதாக சுவாரஸ்யமாக இல்லை..//
சும்மா பொழுதுபோக்குக்கு பார்த்தாலும் சில போட்டிகள் சுவாரசியமாக இருந்தன.
//யாழ்தேவிக்கு வாழ்த்துக்கள்.. நிர்வாக உறுப்பினர் மயூரனுக்கும்.. ;)//
மயூரனிடம் உங்கள் வாழ்த்துக்களைச் சொல்லிவிடுகின்றேன் நன்றி.
//ஜாக்கி,நைனா கலக்கிட்டீங்க..
வந்தி, பாவனாவை உடம்பில் கொஞ்சம் கவனமெடுக்க சொல்லுங்கள்.. ;)//
சரி சரி பாவனா அடுத்த முறை கோல் பண்ணும்போது சொல்லிட்டால் போச்சு.
//கோபிநாத் said...
தல ஒரு ரஜினி ரசிகர்களின் பார்வைக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு இது
இந்த லிங்கை போயி பாருங்கள்//
பார்த்தேன் தல. இதுகள் கிரிபோன்ற நேர்மையான ரஜனி ரசிகர்களுக்கு ஏனோ தெரிவதில்லை. ரஜனியே சொன்னாலும் இவங்கள் திருந்தமாட்டார்கள். மன்னிப்பவன் பெரிய மனிசன்.
/// கிரி said...
நிசமாவா!//
ஆமா உண்மைதான் நம்புங்கள்/
//கமல் ரசிகர்களும் கடைபிடித்தால்.... ;)//
அப்போ நீங்கள் கடைப்பிடிப்பதில்லை என்பதை ஒத்துக்கொள்கின்றீர்கள். கோபிநாத் கொடுத்திருக்கும் லிங்கில் பாருங்கள் உங்கள் ரசிகர்களின் பெரும்தன்மையை. :-))))
// வேந்தன் said...
என்ன போஸ், சில நாடுகள் மனித உரிமையையே கடைப்பிடிப்பதில்லை, இதில ரசிகர்களை பெரும்தன்மையை வேற கடபிடிக்கச் சொன்னா....//
அதுசரி அரசியலிலை இதெல்லாம் சாதாரணமப்பா,
//Dr.எம்.கே.முருகானந்தன் said...
கமல் பொன்விழா உண்மையில் மிக சிறப்பாக திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்பதில் ஐயமில்லை. ரஜனி தனது மனந்திறந்த கருத்துக்களால் உயர்ந்து நிற்கிறார். //
நிச்சயமாக டொக்டர் ரஜனியின் கருத்துக்கள் பல இடங்களில் பாராட்டப்பட்டிருக்கின்றன.
//கமலுடைய பகுத்தறிவுக் கொள்கை எனக்கும் உடன்பாடான போதும் அதற்கு அவ்வளவு நேரம் எடுத்தது பொருத்தமாகப் படவில்லை. //
உண்மைதான் அதே நேரம் கமல் தன் படங்களில் சில விடயங்கள் மாறிவருகின்றன எனக் குறிப்பிட்டார். அது எவை எனச் சொல்லாமல் வழக்கம் போல் குழப்பிவிட்டார்,
// Kiruthikan Kumarasamy said...
பாராட்டுவிழா பற்றி விரைவில் பதிவிடுங்கள்... இல்லாட்டா நான் போட்டுடுவன் (நான் இன்னும் பாக்கேல்லை)//
முயற்சி செய்கின்றேன் பார்த்துவிட்டு நீங்கள் போட்டாலும் பரவாயில்லை. பின்னவன் பெற்ற செல்வன் அடியேன் பெற்றதன்றே என விட்டுவிடுவேன்.
// யசோ...அன்பாய் உரிமையோடு கரன் said...
எல்லாம் சரி...ஆனா உங்களின் பதிவில் இடப்பட்ட படம்.....??? விளங்கவில்லை....//
அந்தப் படம் தான் பதிவின் ஹைலைட்டே காரணம் சிலவேளைகளில் மசாலாப் பதிவுகள் தான் ரசிக்கப்படும்.
//shabi said...
முதலில் ஆடிய ஈகிள்ஸ் 9 ரன் எடுத்தது target 10 ரன் //
தவ்றைச் சுட்டிக் காட்டியதற்க்கு நன்றிகள் ஷபி.
Post a Comment