பாராளுமன்றமா விளையாட்டு மைதானமா?
நேற்று சில நாட்களின் பின்னர் இலங்கைப் பாராளமன்றம் கூடியது. வழக்கம்போல் பாராளமன்றத்தில் சில அமைச்சர்கள் தங்கள் வாய்வார்த்தையை விட அதிரடி நடவடிக்கைகளால் மன்றத்தைக் கலகலப்பாக்கினார்கள். கோட்டு சூட்டுப்போட்ட ஒரு அமைச்சர் பத்தாம் வகுப்பு பாஸாகவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியதுடன் அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை எனவும் கேலி செய்தார்கள். கோட்டு சூட்டுப் போட்டால் கட்டாயம் ஆங்கிலம் தெரியவேண்டுமா? தமிழ்சினிமாவில் வில்லனின் அடியாட்கள் பலரும் கோட்சூட்டுடன் தான் சண்டைபோடுகின்றார்கள். ஆங்கிலம் தெரியாது என எதிர்க்கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் முன்னர் அவர்களின் கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உறுப்பினர்களின் சச்சரவினால் முக்கியமான பிரச்சனையான ருபெல்லா தடுப்புமருந்து விவகாரம் பெரிதாகப் பேசப்படவில்லை. இந்தியா இலங்கைக்கு அன்பளிப்பாக கொடுக்கும் பெரும்பாலான மருந்துகள் காலாவதியானவை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழ்மொழியின் சக்தி
நேற்று இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்று தங்கள் பிறந்ததினத்தை கொண்டாடியது. இவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 75% வீதமான நிகழ்ச்சிகள் சன்னின் இழுவைத் தொடர்களேயாகும். ஏனைய 25%வீதமான தங்கள் சுயதயாரிப்புகள் கூட தனித்துவமானவை அல்ல. நேற்றுக்கூட சில அறிவிப்பாளினிகள் எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் இல்லாமல் அறுத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் "பேயை நேரில் பார்த்திருக்கின்றீர்களா? இல்லையென்றால் குறிப்பிட்ட தொலைக்காட்சியைப் பாருங்கள்" என குறும் செய்தி அனுப்பினார். தொலைக்காட்சியைப் பார்த்தால் ஒரு அழகான பெண்ணை ஒப்பனை என்ற பெயரில் அசிங்கமாக்கியிருந்தார்கள். அவர்களின் தொலைக்காட்சி நிலையத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி இல்லையோ தெரியவில்லை. எத்தனையோ பத்திரிகைகளில் இவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் தங்கள் சர்வாதிகார போக்கினால் அவற்றைக் கவனத்தில் எடுப்பதேயில்லை. தங்கள் தான் தமிழ் மொழியை வளர்க்கின்றோம் எனச் சொல்லிக்கொண்டு நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் இவர்களின் போக்கை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லை.
தீபாவளியும் தொலைக்காட்சிகளும்
தீபாவளியும் ஒருமாதிரி வந்து போய்விட்டது. இலங்கையில் தீபாவளி பெரிதாக கொண்டாடப்படுவதில்லை என்பதால் இது ஒரு சாதாரண நாள் போல் தான் பலருக்கு இருந்தது. என்ன சிலர் கோவிலுக்குப் போய் வருவார்கள். கோவில்களில் கூட இம்முறை மக்கள் குறைவாகவே இருந்தார்கள்.
கலைஞர் தொலைக்காட்சி உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முதலாக என தசாவதாரம் படம் மாலையில் ஒளிபரப்பினார்கள், ஆனால் இவர்களுக்கு முன்னால் இலங்கையின் வசந்தம் தொலைக்காட்சி 12.30 மணிக்கு தசாவதாரம் படத்தை ஒளிபரப்பினார்கள். கலைஞரின் உலகத் தொலைக்காட்சியில் வசந்தம் தொலைக்காட்சி இல்லையா? இல்லை உலகம் என்பது தமிழ்நாடு மட்டும்தானா?
சகல தொலைக்காட்சியிலும் ஒரு குறிப்பிட்ட சிலரின் பேட்டிகளை ஒளிபரப்பி பொறுமையைச் சோதித்தார்கள். விஜய் தொலைக்காட்சி மட்டும் வழக்கம் போல் வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஆனால் தங்களின் அதே ஆட்களை வைத்து நடத்தியது. தீபாவளிச் சிறப்பு நிகழ்ச்சியாக இவர்களின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் பங்கேற்ற சிறுவர்களின் குடும்பத்தினரும் தங்கள் திறமைகளைக் காட்டியது சிறப்பாக இருந்தது. பலரின் தாய், தந்தையர் அழகாக்வும் திறமையாகவும் பாடுகின்றனர்.
கமல் 50 சிறப்பு மலர் வெளியீடு
திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்த உலகநாயகன் பத்மஸ்ரீ கமலஹாசனைப் பற்றிய சிறப்பு மலர் ஒன்று எதிர்வரும் அக்டோபர் 25ந்திகதி மாலை 6 மணிக்கு சுகததாச ஸ்போர்ட்ஸ் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் நடைபெற இருக்கின்றது.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.
சின்ன சந்தேகம்
சினிமா, விளையாட்டுகள் எல்லாம் காத்திரமான விடயங்கள் இல்லையா? அண்மையில் நண்பர் ஒருவர் என்னுடன் அதிகமாக சினிமா, கிரிக்கெட் பற்றி எழுதுகின்றேன் என கோபித்தார். வலையில் எழுதுகின்ற பெரும்பாலானவர்கள் சாதாரண விடயங்களை அலசி ஆராயும் மனிதர்களே ஒழிய காத்திரமான விடயங்களை எழுதும் எழுத்தாளர்கள் அல்ல. அதே நேரம் சமூக, சிந்தனை வெளிப்பாடுடைய பதிவுகள் எழுதினால் பெரிதாக எவரும் படிப்பதில்லை என்பது என் சொந்த அனுபவம். அத்துடன் அப்படியான பதிவுகளை எழுதும்போது நிறையத் தேடல்கள் தேவை. சாதாரணமாக வலையில் எழுதுபவர்களுக்கும் இப்படியான தேடல்கள் செய்ய நேரம் போதாது. சினிமா, கிரிக்கெட் எல்லாம் மொக்கையா? என்னுடைய சந்தேகத்தை தீர்த்துவையுங்கள்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
7 கருத்துக் கூறியவர்கள்:
//பேயை நேரில் பார்த்திருக்கின்றீர்களா? இல்லையென்றால் குறிப்பிட்ட தொலைக்காட்சியைப் பாருங்கள்" என குறும் செய்தி அனுப்பினார். தொலைக்காட்சியைப் பார்த்தால் ஒரு அழகான பெண்ணை ஒப்பனை என்ற பெயரில் அசிங்கமாக்கியிருந்தார்கள். அவர்களின் தொலைக்காட்சி நிலையத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி இல்லையோ தெரியவில்லை.//
ம்.. என்ன செய்ய பாவம் இலங்கை தமிழ்த் தொலை்காட்சி இரசிகர்கள்... :(
இந்திய தொலைக்காட்சிகளில் உலக தொலைக்காட்சிகளில் என குறிப்பிபவற்றில் இலங்கை தொலைக்காட்சிகள் இல்லை. ஏனென்றால் அவர்கள் முதன் முறை என அறிவிக்கும் பல படங்கள் இலங்கையில் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானவைதான்.
நானும் தீபாவளி அன்று தசாவதாரம் பார்த்தேன். அந்த படத்தில் எனக்கு இன்னும் நம்ப முடியாத விடயம் ஒளிப்பதிவு. மிகவும் அருமை. எப்படி செஞ்சிருப்பாங்க என்று யோசித்து யோசித்து பார்த்தேன். ம்ஹம் முடியல..
சினிமா ,கிறிக்கெட் இரண்டும் பொழுதுபோக்கு அம்சங்கள்
///சினிமா, கிரிக்கெட் எல்லாம் மொக்கையா?///
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்ஸ்
// நேற்றுக்கூட சில அறிவிப்பாளினிகள் எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் இல்லாமல் அறுத்துக்கொண்டிருந்தார்கள்
நான் நினைப்பது சரியாக தான் இருக்கும் அந்த அறிவிப்பாள்ர் ஒரு blog எழுத்தாளரும் கூட.....
என்னத்தை சொல்லி இவர்களின் பிழைகளுக்கு....
இனி வாரன் பொயிண்ட்டுக்கு
உந்த சொத்தி டிவிய சத்தியம
தமிழ் இலக்கியம், இலக்கணம்.. etc... எல்லாத்தையும் படு பிழையாக இழம் சமுதாயத்துக்கு சொல்லுராங்கள்... அதுதான் எனக்கு ஒரே கோபம்...
உந்த அறிவிப்பாளர்களுக்கு பளைய புத்தக கடையில இருந்து எல்ல இலக்கிய இலக்கண புத்தகம் வேண்டி குடுக்கணும்...
இன்னும் நிறைய இருக்கு...
என்னால தட்டச்சு செய்ய கஷ்டமா இருக்கு...
நண்பன் வந்தி அண்ணனுக்கு தொலைபேசியில்,FB chat, MSN chat, எல்லாத்திலையும் சொன்னனான்... நான் நினைச்சன் அவர் ஒரு தனி பதிவா போடுவார் எண்டு பட் எம்மத்திட்டார்...
கடைசியா சொல்லுரன்... எனக்கு மட்டும் அண்டைக்கு தொலைபேசி அளைப்பு கிடைத்து இருந்தா தெரிஞ்சு இருக்கும்....
//பேயை நேரில் பார்த்திருக்கின்றீர்களா? இல்லையென்றால் குறிப்பிட்ட தொலைக்காட்சியைப் பாருங்கள்" என குறும் செய்தி அனுப்பினார்.//
Twitter முருகனும் அப்பிடித் தான் சொன்னார்...
ஹி ஹி....
பாராளுமன்றம்... ஹி ஹி....
மேர்வின் சில்வாவே போதுமே இலங்கைப் பாராளுமன்றத்தைப் பற்றிச் சொல்வதற்கு....
அந்த பத்தாம் வகுப்பு சித்தியடையாத கதை நிறைய நாட்களாக இருக்கிறது....
நான் முன்பொருமுறையும் பார்த்தேன்....
கிறிக்கெற், சினிமா பற்றி எழுதுவதில் தவறில்லைத் தான. (எனக்கு சினிமா மீது அவ்வளவு ஈடுபாடு இல்லாவிட்டாலும்.)
ஆனால் இந்த இரண்டையும் பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நான் சொல்வது 'பிடிக்காவிட்டால் விஜயம் செய்யாதீர்கள்... உங்களை நாம் வற்புறுத்தவில்லை.'
பக்குவமான விமர்சனங்களுக்கு பாராட்டுக்கள் வந்தி.
நோகாமல் சொல்லியுள்ளீர்கள்.
பாராளுமன்றப் பண்புகள் எல்லாம் எப்போதோ காற்றோடு போய்விட்டன. இப்போது அது பைத்தியக்காரன் மடம்.
உலகத் தொலைக்காட்சிகளில்? ஹா ஹா ஹா.. யோ சொன்னது மிகச் சரி..
மீண்டும் தசா பார்த்தேன்.. நிறைய விஷயங்களை நுண்ணியமாக அவதானித்தேன்.
வந்தி அந்த மொக்கை கருத்துக்களை விட்டுத் தள்ளுங்கள்.எமக்கு எது பிடிக்கிறதோ,எது வருகிறதோ அதை எழுதுவோம்.. இதை தான் எழுதனும் என்று விதி இருக்கா என்ன?
பிடிப்பதை வாசிப்பவர்கள் தெரிந்தேடுக்கட்டும்.
பூமிகா படம் அருமை.. இது அழகான(ஆபாசமில்லாத) கவர்ச்சி..
அதுசரி அவர் கைகள் சொல்லும் சேதி என்ன?
Post a Comment