மெஹா ஹிட் ஆதவனும் நானும் நண்பர்களும்

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் செந்தூரனிடம் இருந்து எனக்கு ஒரு மெயில் வந்திருந்தது மாலை 5.30 மணிக்கு இந்துக் கல்லூரி மாண்வர்கள் ஒழுங்கு செய்த ஆதவன் விசேட காட்சிக்கு ரிக்கெட் இருக்கின்றது, கரனையும் பாலாவையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் நான் ஏனைய நண்பர்களுடன் வருகின்றேன்.

நான் உடனடியாக பாலாவையும் கரனையும் தொடர்புகொள்ள இருவரும் வாறன் என்றார்கள். சில நிமிடத்தில் பாலாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு "மச்சான் நான் இன்னொரு செட்டுடன் நைட் லிபேர்ட்டியில் நடக்கும் காட்சிப்போகப்போகின்றேன் உங்களுடன் போகப்போகின்றேன் எனச் சொல்ல என் நண்பர்கள் போனில் திட்டயதில் என் காதினூடாக இரத்தம் வடிகின்றது" என அழுதபடி சொல்ல நாங்களும் எல்லாம் நன்மைக்கே என அவரை அவர்களுடன் போகவிட்டுவிட்டோம். அவர் வந்திருந்தால் எங்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கும் என்பது பின்னர் தெரிந்தது.

ஏற்கனவே எங்கள் குழாம் வெள்ளிக்கிழமை வெள்ளவத்தை காலி வீதியை அளக்கமுடிவு செய்திருந்தோம் நீண்ட நாள் அந்தப் பக்கம் போகவில்லை என்பதாலும் அத்துடன் தீபாவளிக்கு முதல் நாள் என்பதால் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதாலும் காலி வீதியை ரணகளப் படுத்துவது என தீர்மானித்தோம். பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு ஆதவனுக்கு செல்வது முடிவாகிவிட்டது.



சுமார் 4.30 மணியளவில் வெள்ளவத்தைச் சந்தியில் எனக்காக காத்துக்கொண்டிருந்த கரனைச் சந்தித்தேன். இருவரும் செநதூரனின் வரவிற்காக காத்திருக்க சரியாக 5 மணியளவில் செந்தூரனின் வாகனம் இன்னும் 3 நண்பர்களுடன் வந்து சேர்ந்தது. உள்ளே நிமல், ராஜ், ஹரி என ஏனைய நண்பர்கள் மொத்தமாக 6 பேரும் கொன்கோர்ட்டை நோக்கிப் படை எடுத்தோம்.

வாசலில் ஒழுங்கு செய்த இந்துக் கல்லூரி மாணவர்கள் எம்மை அடையாளம் கண்டு உடனடியாக உள்ளே செல்ல அனுமதித்துவிட்டார்கள். ஒரு மாதிரி வாகனத்தை தகுந்த இடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே செல்லும் போதுதான் செந்தூரன் தன்னிடம் இருப்பது பொக்ஸ் ஆசனங்களுக்கு உரிய அனுமதிச் சீட்டு என்று, அடப்பாவி ஏன் இந்தக் கொலை வெறி எனக்கேட்டால். தானும் மனைவியும் ஏனைய இரு நண்பர்கள் ஜோடிகளாக வரத் தானாம் திட்டம் போட்டார்கள் ஆனால் செந்தூரனின் மனைவியில் புத்திசாலித் தனத்தால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. ஏனென்றால் அவருக்குத் தெரியும் முதல் நாள் முதல் காட்சியில் விசிலடிச்சான் குஞ்சுகள் செய்யும் அட்டகாசங்கள். இதனால் பெரும்பாலான பெண்கள் முதல் நாள் காட்சிகளைத் தவிர்ப்பார்கள். இதனால் இதுவரை ஜோடிகளின் அரவணைப்பில் இருந்த பொக்ஸ்கள் ஆண்களை மட்டும் அனுமதித்தது.

உள்ளே சென்றால் தியேட்டர் நிரம்பி வழிந்தது. இளம் மாணவர்களை விட பச்சிளம் பாலக மாணவர்கள் அதிகமாக காண்ப்பட்டார்கள். அதில் சிலர் மட்டும் பெற்றோர்களுடன் வந்திருந்தார்கள். சரி இருவர் இருவராக 3 பொக்ஸ்குள் அமருவம் என நினைக்க அங்கே ரசிகர்களை ஒழுங்குபடுத்திக்கொண்ட மாணவர் ஒருவர் " அண்ணே குறை நினைக்கவேண்டாம் கூட்டம் அதிகம் என்பதால் ஒரு பொக்ஸ்க்குள் 3 பேர் அமருங்கள்" என்றான். அடப்பாவியளா? 2 பேர் இருக்கும் இடத்தில் 3 பேரா என மனதில் அவர்களைத் திட்டிக்கொண்டு நான், செந்தூரான், கரன் மூவர் ஒரு பொக்ஸினுள்ளும், நிமல், ஹரி, ராஜ் மூவரும் அடுத்த பொக்ஸினுள்ளும் அமர்ந்துவிட்டோம். .

அந்த சீட் சீரிபி பஸ் சீட்டை விட வசதி குறைவாகவே இருந்தது. எனக்கும் கரனுக்கும் பொக்ஸ் இதுதான் முதன் முறை( நம்புங்கள்) செந்தூரான் ஏற்கனவே வந்திருந்தபடியால் அந்த சீட்டின் அருமை பெருமைகளை எமக்குச் சொன்னார். என்ன செய்வது எங்கள் விதி இப்படி என நினைத்துக் கொண்டு மூன்று ஆண்களும் ஒரு மாதிரி அஜெஸ்ட் செய்தபடி இருந்து படம் பார்க்கத் தொடங்கினோம்.

ஒரு சில மாணவிகள் அரங்கினுள் நுழையும் போது மாணவர்கள் கூக்குரல் இட்டார்கள். சிலர் ஆண் பெயர்களைச் சொல்லி அழைத்தார்கள். பின்னர் நயன் திரையில் வர பிரபுதேவா எனக் கத்தும்போதுதான் அந்த மாணவிகளின் ஆண் பெயர்கள் அவை என்ற உண்மை எனக்கருகில் இருந்த சிறுவன் கரனுக்கு புரிந்தது.

இத்தனை அலப்பறைகளுக்கு மத்தியில் படம் ஆரம்பமாகியது. சூர்யாவின் சிறுவயதுப் படம் காட்டியதில் இருந்து அவரின் பெயர்வரும் வரைக்கும் விசிலில் மழை பொழிந்தார்கள். சூரியாவிற்க்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அப்போதுதான் புரிந்தது.

பின்னர் நயனின் பெயர் வரவும் விசில் மழை. சூரியாவின் முதல் காட்சிக்கும் விசிலடித்த ரசிகர்கள் அதன் பின்னர் ஒரு மாதிரி படத்துன் ஐக்கியமாகியபடியால் இடையில் விசில் அடிக்கவில்லை. பின்னர் நயனின் முதல் காட்சிக்கு சூரியாவின் வருகையை விட விசில் அதிகம். எனக்கு இருபுறமும் அமர்ந்திருந்த நயன் ரசிகர்கள் இருவரும் அவரின் காலில் இருந்து முகம் வரை கமெரா செல்லும் வரை விசில் அடித்தபடியே இருந்தார்கள். ஆனால் நயனின் முகத்தைப் பார்த்தவுடன் இருவரும் என்ன கொடுமை இது எப்படி எண்ணெயாக முகம் இருக்கின்றதே என நயனுக்காக கவலைப்பட்டார்கள்.

இப்படியே விசில் கைத‌ட்டுகள், சிரிப்புகள் எனப் படம் போய்க்கொண்டிருந்தது. இடையில் என்னுடைய இன்னொரு நண்பர் சஞ்சீவ் இரண்டுதரம் போன் பண்ணினார், அவர் சூர்யாவின் தீவிர ரசிகர் அடுத்த காட்சிக்கு தன் பாடசாலை நண்பர்களுடன் டிக்கெட் எடுத்து வைத்திருந்தவர் அடிக்கடி படம் எப்படி என என்னைக் கேட்டுக்கொண்டிருந்தார். இடைவேளையும் வந்தது.

இடைவேளையின் போது நானும் கரனும் போய் 6 பேருக்கும் குளிர்பானங்கள் வேண்டிவந்தால் எமக்கு அடுத்த பொக்ஸில் இருந்த நண்பர்கள் நாம் குளிர்பானம் குடிப்பதில்லை சூடான பானம் தான் அருந்துவோம் என ஆர்ப்பாட்டம் செய்தார்கள். திரும்ப உடைத்த குளிர்பானத்தைக் கொடுக்கமுடியாது என்பதாலும் எங்கள் எஞ்சின்கள் எத்தனை லீற்றரையும் தாங்கும் என்பதாலும் நாம் இரண்டு இரண்டு குடிப்பது என முடிவு செய்தாயிற்று, பின்னர் செந்தூரன் மிக்சரும் வாங்கிவந்தார். இடைவேளை முடிந்து படம் மீண்டும் தொடங்கியபின்னர் இடையில் என் நண்பி ஒருவர் போன் பண்ணினார், அவர் என்னை எங்கே இருக்கின்றீர்கள் எனக் கேட்க நான் படம் பார்க்கின்றேன் எனச் சொன்னேன். அதற்க்கு அவர் பக்கத்தில் இருக்கும் நிமலுக்கு ஒரு ஹாய் சொல்லிவிடுங்கள் என்றார். நான் அவரை நிமல் என்னுடன் இருப்பது எப்படித் தெரியும் எனக் கேட்க நிமல் பேஸ்புக்கில் ஆதவன் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என ஸ்டேடஸ் மெசேஜ் அடித்திருக்கின்றார் என்ற உண்மையைச் சொன்னார். எப்படியெல்லாம் பேஸ்புக்கை உபயோகிக்கின்றார்கள்.

கடைசியில் கே,எஸ்,ஆர் கிளைமாக்ஸில் சொதப்பியதால் நாம் மனம் நொந்து தியேட்டரை விட்டு வெளியே சென்றால். அடுத்த காட்சிக்கு மக்கள் கூட்டம் வழிந்தது, நாம் சென்ற வாகனத்தின் முன்னால் இன்னொரு வாகனம் நின்றது. அந்த வாகனம் எடுக்கும் வரை நாம் காத்திருக்கவேண்டும் என்பதால் அந்த கூட்டத்தில் தெரிந்த முகம் யாராவது நிற்கின்றார்களா? எனப் பார்த்தால் வலைப் பதிவர் ஒருவர் நின்றார். அவருக்கு யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற எங்கள் கொள்கைக்காக படம் சூப்பர் கலக்கல் என நல்ல கருத்துகளைத் தெரிவித்தோம்.

இது நேரம் லிபேர்ட்டியில் இருந்து பாலா தொலைபேசியில் படம் எப்படி எனக் கேட்டான் அவனுக்கும் எங்கள் கொள்கைப் படி நல்ல கருத்துக்களைச் சொன்னோம். படம் முடிந்தபின்னர் சாமத்தில் அவன் எங்களை தொலைபேசியில் திட்டியது இன்னும் காதினுள் நிற்கின்றது.

இதே நேரம் என் நண்பன் சஞ்சீவ் இருவராக வந்துகொண்டிருந்தான், அவனும் அவன் நண்பர்களும் பக்கத்தில் இருந்த தாகசாந்தி நிலையத்தில் தாகம் தீர்த்துவிட்டு வந்திருக்கின்றார்கள் எனபது தெரிந்தது. அவனுக்கும் படம் நல்லது எனச் சொல்லிவிட்டோம்.

ஒருமாதிரி வாகனத்தை எடுத்துக் கொண்டு அவரவர் வீடுகளிற்க்குத் திரும்பிவிட்டோம். வீட்டிற்க்கு வந்து கிரிக்கெட் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு ஆதவன் விமர்சனம் எழுதிக்கொண்டிருக்க, நண்பன் சஞ்சீவ் தொலைபேசியில் பிரபல பெண்பதிவர்கள் இருவர்கள் தியேட்டரில் இருக்கின்றார்கள். அத்துடன் இன்னும் இரண்டு ஆண் பதிவர்களும்(தனித் தனியாக) இருக்கின்றார்கள் என்ற தகவலைத் தந்தான்.

11.15 அளவில் என்னுடய விமர்சனத்தை வலையேற்றிவிட்டு மூஞ்சிப்புத்தகத்தில் தோட்டம் செய்துகொண்டிருக்க நண்பன் லோஷன் தானும் படம் பார்த்து விமர்சனம் எழுதியிருப்பதாகவும் அதனைப் பார்க்கவும் என தகவல் அனுப்பினார். அவரது விமர்சனத்தைப் படித்துக்கொண்டிருக்கும் போது அடுத்த காட்சி முடிந்து சஞ்சீவ் எனக்கு தொலைபேசியில் ஒரே கிழியல் அவன் சொன்னதில் ஹைலைட்டான விடயம் " 500 ரூபா ரிக்கெட் வாங்கியதற்க்குப் பதில் இன்னும் 3 போத்தல் வாங்கியிருக்கலாம்" என்றான்.

அதே நேரத்தில் இன்னொரு பதிவரான புருஷ் "இரண்டு பிரபல பெண் பதிவர்கள் படம் பார்த்துவிட்டு பேயறைந்தமாதிரி இருக்கின்றார்கள். ஆதவன் படம் பெரிதாக நல்லாயில்லை ரிஸ்க் எடுக்கவேண்டாம்" என எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தார். பின்னர் அவருக்கு நான் முதல் காட்சியில் ரிஸ்க் எடுத்த கதையைச் சொல்ல மனிதன் சிரித்த சிரிப்பு கொழும்பு முழுக்க கேட்டிருக்கும்.

எது எப்படியோ ஆதவன் படம் பார்த்த அனுபவம் என்றைக்கும் மறக்கமுடியாத அனுபவமாக மாறிவிட்டது. ஏற்கனவே படையப்பா, குஷி இரண்டு படங்களும் இதைப்போல தான் ஆனால் வித்தியாசமான அனுபவங்கள் கொடுத்த படங்கள்.

டிஸ்கி : மெஹா ஹிட் ஆதவன் எனத் தலைப்பிட்டிருக்க காரணம் என் ஆதவன் பதிவிற்க்கு இதுவரை 3000 மேற்பட்ட ஹிட்ஸ் வந்திருக்கிறது. அத்துடன் கடந்த சனிக்கிழமை மட்டும் 2500 ஹிட்ஸ். என் பதிவுகளில் ஆதவன் மெஹா ஹிட் தான்.

29 கருத்துக் கூறியவர்கள்:

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

ஏன்யா இந்த கொல வெறி. வெள்ளியிரவு 9 மணிக்கெல்லாம் ஆதவன் படம் பெருசா சொல்ல ஒன்னுமில்லை என்ற மூஞ்சிபுத்தக ஸ்டேஸ் மெசேஜ்களால் நிரம்பியது. அதுதான் தீபாவளி அன்று ஆதவன் பார்க்க இருந்த எங்களது ப்ளேனை மாத்தியது. நல்லவேளை அவசரபடவில்லை.

புல்லட் சொல்வது:

பொக்சுக்குள்ள இருந்து படம் பாத்தியளா? அதுவுமு் பெடியங்கள்.. அதுவும் 3 பெடியங்கள்? யோவ்.. உங்களையெல்லாம் நடுரோட்டில கட்டி கல்லால அடிக்கணும்.. கல்லச்சர நாசமாக்குறாங்களே இந்த நாச்மாப்போனவங்க..

அதுதான் நேற்று கரன் ஒரு விதமா இழுத்துக்கொண்டு போனாரோ? நல்ல காலம் அந்த பாலாப்பயல் தப்பித்தது.. அவன் சரியா ன அடக்க ஒடுக்காமான ஒழுக்கமான பையன் அல்லோ?

ம்ம்

maruthamooran சொல்வது:

//// " அண்ணே குறை நினைக்கவேண்டாம் கூட்டம் அதிகம் என்பதால் ஒரு பொக்ஸ்க்குள் 3 பேர் அமருங்கள்" என்றான். அடப்பாவியளா? 2 பேர் இருக்கும் இடத்தில் 3 பேரா என மனதில் அவர்களைத் திட்டிக்கொண்டு நான், செந்தூரான், கரன் மூவர் ஒரு பொக்ஸினுள்ளும், நிமல், ஹரி, ராஜ் மூவரும் அடுத்த பொக்ஸினுள்ளும் அமர்ந்துவிட்டோம். .////

வந்தியுடன் பொக்ஸ்சுக்குள் இருந்து படம்பார்த்த அந்த இரண்டு பிரபல பதிவர்களையும் எனக்கு நன்றாகத்தெரியும். பாவம், பொக்சுக்குள்ள படம் பார்த்த அனுபவத்தைப் பற்றி வெள்ளவத்தையில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஒரு மாநாடே நடத்திக் கொண்டிருந்தாங்கள் சிலபேர். அதில சில நண்பர்கள் ‘பேராண்மை’ பார்த்திட்டு வந்து ஜெயம் ரவி குறித்து பேசாமல், அந்த 5 நடிகைகள் மற்றும் பூஜா உமாசங்கர் குறித்தும் சிலாகித்து பேசியதாக அறிகிறேன். தகவல்களை வழங்கிய வந்திக்கு நன்றி.

‘ஆதவன்’ பார்த்துவிட்டு பேயறைந்த மாதிரி முளித்த பெண் பதிவர்கள் யார் என்பதை எனக்கு அலைபேசியில் வந்தியர் செல்வதாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். பாவம் பதிவர்களே திரையரங்குகளுக்கு போவதற்கு முன்னர் எச்சரிக்கையுடன் செயற்படுங்கள். சில உளவாளிகள் தகவல்களை விரைவாக பரப்புவதாகவும் ஒரு தகவல்.

root சொல்வது:

//அந்த வாகனம் எடுக்கும் வரை நாம் காத்திருக்கவேண்டும் என்பதால் அந்த கூட்டத்தில் தெரிந்த முகம் யாராவது நிற்கின்றார்களா? எனப் பார்த்தால் வலைப் பதிவர் ஒருவர் நின்றார்//

ஆனா அவர் உற்சாக பணம் அருந்த இல்லை

சஞ்சீவ் சொல்வது:

//இடையில் என்னுடைய இன்னொரு நண்பர் சஞ்சீவ் இரண்டுதரம் போன் பண்ணினார், அவர் சூர்யாவின் தீவிர ரசிகர் அடுத்த காட்சிக்கு தன் பாடசாலை நண்பர்களுடன் டிக்கெட் எடுத்து வைத்திருந்தவர் அடிக்கடி படம் எப்படி என என்னைக் கேட்டுக்கொண்டிருந்தார்//

call பண்ணும் போதே கூறி இருக்கலாமே அந்த 500 ரூபா டிக்கெட் எடுத்தவனுக்கு காசு குடுக்காம தாகசாந்தி நிலையத்தி இனும் 2 போட்டிட்டு 155 இல ஏறி ஹையா வந்து இருப்பன்.

Subankan சொல்வது:

ஆகா, ஆனால் இதாவது பரவாயில்லை. என்னோட கதையைக் கேட்டா கண்ணில ரத்தக்கண்ணீரே வடியும்.

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொல்வது:

படம் பார்த்த அனுபவப்பகிர்வு நல்லா தான் இருக்கு. இந்த படம் ரிலீஸ் பண்ணி முதல் நாளே இப்படி சொன்னிங்கனா? எவன் போய் பார்ப்பான்? அண்ணா பொது நலத்தோடு நடந்து கொள்றீங்களோ? எல்லோருக்கும் காசு மிச்சம். (எனக்கும் தான், இல்லைனா மட்டும் காசு வேஸ்ட் பண்ணி படம் பார்த்துட தான் போறாய்னு சொல்ல வருவீங்கனு தெரியும் இதெல்லாம் உங்களுக்குள்ளேயே இருக்கட்டும்)

வந்தியத்தேவன் சொல்வது:

ஒரு பித்தம் தலைக்கேறியவர் சில நாட்களாக என் பதிவுகள் வாசிக்காமல் ஏதோ ஏதோ பிதற்றியிருக்கிறார். நல்ல விடயங்கள் எழுதிய நேரம் அவர் ஞான நிலையில் இருந்தாரோ தெரியவில்லை. அவருடன் தொடர்புகொள்ள அவரின் மின்னஞ்சல் இல்லாதபடியால் இந்தப் பின்னூட்டம். முடிந்தால் மின்னஞ்சலை அனுப்புங்கள் விளக்கம் தருகின்றேன்.

ARV Loshan சொல்வது:

நல்லா இருக்கே உங்கள் பொக்ஸ் அனுபவம்.. ;)

நண்பர்கள் பாவம்.. ;)

அதுசரி யார் அந்தப் பித்தன்?
பித்தம் தெளிய வைக்கப் போகாதீங்க.. மூக்கு கவனம்

Jackiesekar சொல்வது:

நல்ல அனுபவ பதிவு...

ISR Selvakumar சொல்வது:

உங்களைப் போல பலருக்கும் படத்தை விட படம் பார்த்த அனுபவம்தான் சுவாரசியமாக இருந்திருக்கின்றது.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வாய்ஸ் (யோகா) said...
ஏன்யா இந்த கொல வெறி. வெள்ளியிரவு 9 மணிக்கெல்லாம் ஆதவன் படம் பெருசா சொல்ல ஒன்னுமில்லை என்ற மூஞ்சிபுத்தக ஸ்டேஸ் மெசேஜ்களால் நிரம்பியது. அதுதான் தீபாவளி அன்று ஆதவன் பார்க்க இருந்த எங்களது ப்ளேனை மாத்தியது. நல்லவேளை அவசரபடவில்லை.//

ஹாஹா யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற எண்ணம் தான் இந்தக் கொலைவெறிக்கு காரணம். மூஞ்சிப் புத்தக மெசேஜ்களில் படம் பார்க்கப் பலர் செல்லவில்லை. விரைவில் மூஞ்சிப் புத்தகமும் புளொக் போல் ஆகப்போகின்றது.

வந்தியத்தேவன் சொல்வது:

//புல்லட் said...
பொக்சுக்குள்ள இருந்து படம் பாத்தியளா? அதுவுமு் பெடியங்கள்.. அதுவும் 3 பெடியங்கள்? யோவ்.. உங்களையெல்லாம் நடுரோட்டில கட்டி கல்லால அடிக்கணும்.. கல்லச்சர நாசமாக்குறாங்களே இந்த நாச்மாப்போனவங்க..//

உதைத்தான் நானும் செந்தூரனிடம் கேட்டேன் அவர் சொன்னார். தான் ஒரு மூத்தவர் பழுத்த பழம் நான் பச்சிளம் பாலகன் கரனோ இன்னும் விரல் சூப்புவதை நிறுத்தாதவன் ஆகையால் நாம் ஒன்றாக இருந்தால் ஒரு பிரச்சனையும் வராது என்றார். ஆனால் பக்கத்து பொக்ஸில் இருந்தவர்கள் ஒரு கதை சொன்னார்கள் ( சென்சார் காரணமாக அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகின்றது அந்தக் கதை)

//அதுதான் நேற்று கரன் ஒரு விதமா இழுத்துக்கொண்டு போனாரோ? நல்ல காலம் அந்த பாலாப்பயல் தப்பித்தது.. அவன் சரியான அடக்க ஒடுக்காமான ஒழுக்கமான பையன் அல்லோ?//

கரன் கந்தசஷ்டி விரதம், பாலா லிபேர்ட்டியில் அடித்த கூத்து அவரின் நண்பரின் மூலம் அறிந்துவிட்டோம். படம் பார்த்த இளம்பெண்களை வீட்டுக்கு அனுப்பிட்டாராம் அவரது பேச்சுகள் மூலம்.

வந்தியத்தேவன் சொல்வது:

//மருதமூரான். said...

வந்தியுடன் பொக்ஸ்சுக்குள் இருந்து படம்பார்த்த அந்த இரண்டு பிரபல பதிவர்களையும் எனக்கு நன்றாகத்தெரியும். //

என்ன கொடுமை எங்களைக் கண்டவர்கள் யார்? அப்பவும் செந்தூரனிடம் சொன்னனான் முதல் நாள் வேண்டாம் என மனிசன் கேட்டால் தானே.

//பாவம், பொக்சுக்குள்ள படம் பார்த்த அனுபவத்தைப் பற்றி வெள்ளவத்தையில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஒரு மாநாடே நடத்திக் கொண்டிருந்தாங்கள் சிலபேர். //

இது வேறை நடந்ததா? யாரோ ஒருவர் அரைக் காற்சட்டையுடன் நீச்சலடிக்கப் போனாராம் அவரையும் இழுத்துவைத்து மாநாடு நடத்தியதாக இராமகிருஷ்ண பவனில் வடை சாப்பிட்ட புருஷ் சொன்னார்.

//அதில சில நண்பர்கள் ‘பேராண்மை’ பார்த்திட்டு வந்து ஜெயம் ரவி குறித்து பேசாமல், அந்த 5 நடிகைகள் மற்றும் பூஜா உமாசங்கர் குறித்தும் சிலாகித்து பேசியதாக அறிகிறேன். //

இது வேறையா? பேராண்மை பார்த்த கதையும் நல்ல கதை ஆனால் சொந்தக் கதை சோகக் கதை எழுதினால் பிரச்சனை அதனால் இனி சொந்தக் கதை இல்லை.

//தகவல்களை வழங்கிய வந்திக்கு நன்றி. //

வேண்டாம் சும்மா என்ரை பெயரை இழுக்கவேண்டாம் ஏனென்றால் நேற்று நான் பாடசாலை கூட்டத்தில் இருந்தேன்.

//‘ஆதவன்’ பார்த்துவிட்டு பேயறைந்த மாதிரி முளித்த பெண் பதிவர்கள் யார் என்பதை எனக்கு அலைபேசியில் வந்தியர் செல்வதாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.//

என்னை விட அவர்களைக் கண்ட புருஷை உங்களுக்கு பழக்கம் அவரைக் கேட்கவும்.

//பாவம் பதிவர்களே திரையரங்குகளுக்கு போவதற்கு முன்னர் எச்சரிக்கையுடன் செயற்படுங்கள். சில உளவாளிகள் தகவல்களை விரைவாக பரப்புவதாகவும் ஒரு தகவல்.//

நண்பர்களே சூதானமாக இருங்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

// root said...
ஆனா அவர் உற்சாக பணம் அருந்த இல்லை//

தெரியும் தெரியும் அவர் நல்ல பொடியன்

வந்தியத்தேவன் சொல்வது:

//சஞ்சீவ் said...

call பண்ணும் போதே கூறி இருக்கலாமே அந்த 500 ரூபா டிக்கெட் எடுத்தவனுக்கு காசு குடுக்காம தாகசாந்தி நிலையத்தி இனும் 2 போட்டிட்டு 155 இல ஏறி ஹையா வந்து இருப்பன்.//

அப்படிச் சொன்னால் நாங்கள் பட்ட கஸ்டம் நீ படமாட்டாய் என்றுதான் உனக்கு நல்ல படம் என்றோமே.

வந்தியத்தேவன் சொல்வது:

// Subankan said...
ஆகா, ஆனால் இதாவது பரவாயில்லை. என்னோட கதையைக் கேட்டா கண்ணில ரத்தக்கண்ணீரே வடியும்.//

விரைவில் அந்த ரத்தக்கண்ணிரை எழுத்துவடிவத்தில் வடிக்கவும்.

ஆதிரை சொல்வது:

@Loshan
//
நல்லா இருக்கே உங்கள் பொக்ஸ் அனுபவம்.. ;)

நண்பர்கள் பாவம்.. ;)
//


ரிப்பீட்டு... :)

Unknown சொல்வது:

//ஒரு சில மாணவிகள் அரங்கினுள் நுழையும் போது மாணவர்கள் கூக்குரல் இட்டார்கள். சிலர் ஆண் பெயர்களைச் சொல்லி அழைத்தார்கள். பின்னர் நயன் திரையில் வர பிரபுதேவா எனக் கத்தும்போதுதான் அந்த மாணவிகளின் ஆண் பெயர்கள் அவை என்ற உண்மை எனக்கருகில் இருந்த சிறுவன் கரனுக்கு புரிந்தது. //

யாரய்யா அந்த அப்பாவி மனிதர்...

பதிவை விட நிறைய பின்னூட்டங்களை வாசித்து சிரித்தேன்...
பதிவு சிரிப்பை வரவழைக்கவில்லை எண்டு சொல்லேல நான்... ஆனா வழக்கமா வந்தியண்ணா அசத்துவார் எண்டு தெரியும் தானே...
ஹி ஹி...

பொக்ஸ் இற்குள் 2 ஆண்களுடன் இருந்து படம் பார்த்த பதிவர் சிங்கம் வந்தி வாழ்க.... வாழ்க...

maruthamooran சொல்வது:

//// ஆதிரை சொல்வது:

@Loshan
//
நல்லா இருக்கே உங்கள் பொக்ஸ் அனுபவம்.. ;)

நண்பர்கள் பாவம்.. ;)
//

ரிப்பீட்டு...////

அடடா…..

Subankan சொல்வது:

//வந்தியத்தேவன் சொல்வது

விரைவில் அந்த ரத்தக்கண்ணிரை எழுத்துவடிவத்தில் வடிக்கவும்//

வடித்துவிட்டேன். வந்து பாருங்கள்

ஆதவனும் அறுந்த செருப்புகளும்

வந்தியத்தேவன் சொல்வது:

//ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...
படம் பார்த்த அனுபவப்பகிர்வு நல்லா தான் இருக்கு. இந்த படம் ரிலீஸ் பண்ணி முதல் நாளே இப்படி சொன்னிங்கனா? எவன் போய் பார்ப்பான்? அண்ணா பொது நலத்தோடு நடந்து கொள்றீங்களோ? //

நாம் எப்போதும் நண்பர்களை படம் பார்க்கவே தூண்டுவோம், நல்ல படம் என்றால் போய்பாருங்கள் என்போம் மொக்கைப் படங்கள் என்றால் நாம் பெற்ற துன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் படம் பார்க்க வேண்டுகோள் விடுப்போம். இது பொது நலம் தான்.

//எல்லோருக்கும் காசு மிச்சம். (எனக்கும் தான், இல்லைனா மட்டும் காசு வேஸ்ட் பண்ணி படம் பார்த்துட தான் போறாய்னு சொல்ல வருவீங்கனு தெரியும் இதெல்லாம் உங்களுக்குள்ளேயே இருக்கட்டும்)//

ஆமாம் எனக்குத் தெரியும் நீங்கள் கடைசியாக பார்த்த படம் என்னவென்று.

வந்தியத்தேவன் சொல்வது:

// LOSHAN said...
நல்லா இருக்கே உங்கள் பொக்ஸ் அனுபவம்.. ;)//

என்னை விட என் நண்பன் செந்தூரனைக் கேளுங்கள் இன்னும் பல பொக்ஸ் கதைகள் சொல்வார்.

//நண்பர்கள் பாவம்.. ;)//

ஹிஹிஹிஹி என் நண்பகள் என்னைப்போல் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

// jackiesekar said...
நல்ல அனுபவ பதிவு...//

நன்றி அண்ணாச்சி அனுபவம் தான் வாழ்க்கை.

வந்தியத்தேவன் சொல்வது:

//r.selvakkumar said...
உங்களைப் போல பலருக்கும் படத்தை விட படம் பார்த்த அனுபவம்தான் சுவாரசியமாக இருந்திருக்கின்றது.//

உண்மைதான், ஆதவனுக்கு மட்டுமல்ல பல படங்களுக்கு சுவாரசியமனா அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

வந்தியத்தேவன் சொல்வது:

// ஆதிரை said...

ரிப்பீட்டு... :) //

தம்பி யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் அப்போ நீங்கள் இதையெல்லாம் அனுபவிப்பீர்கள். மறந்துபோயும் நீலக் கலர் ரீசேர்ட்டுடன் சென்றுவிடாதீர்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//கனககோபி said...

யாரய்யா அந்த அப்பாவி மனிதர்...//

பாவம் அந்த மனிசன் இந்த போஸ்டை வாசித்துவிட்டு நொந்துபோனார். ஆனால் ஆள் அடப்பாவி ரகம் இடையிடையே அப்பாவியாக நடிப்பார்.

//பதிவை விட நிறைய பின்னூட்டங்களை வாசித்து சிரித்தேன்...//

எல்லாப் பெருமையும் சூர்யாவையே சேரும்.

//பதிவு சிரிப்பை வரவழைக்கவில்லை எண்டு சொல்லேல நான்... ஆனா வழக்கமா வந்தியண்ணா அசத்துவார் எண்டு தெரியும் தானே...//

வேண்டாம் அழுதிடுவேன்.

//பொக்ஸ் இற்குள் 2 ஆண்களுடன் இருந்து படம் பார்த்த பதிவர் சிங்கம் வந்தி வாழ்க.... வாழ்க...//

இதற்காக எனக்கு விருது எதுவும் கொடுப்பீர்களா?

10:48 AM, October 20, 2009

வந்தியத்தேவன் சொல்வது:

//மருதமூரான். said...

அடடா…..//

அடடா பக்கத்தில் "..." போடக்கூடாது ஆச்சரியக்குறி தான் போடவேண்டும்.
அடடா!!!

வந்தியத்தேவன் சொல்வது:

// Subankan said...

வடித்துவிட்டேன். வந்து பாருங்கள்

ஆதவனும் அறுந்த செருப்புகளும் //

நானும் பார்த்தேன் உங்களுக்காக கவலைப்படுகின்றேன்.