"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. "
என்பது வள்ளுவரின் திருவாக்கு. நட்பு என்பது விலைமதிக்க முடியாதது. புராண காலங்களில் கிருஷ்ணன் குசேலன் நட்பையும் கர்ணன் துரியோதனன் நட்பையும் நட்புக்கு எடுத்துக்காட்டாக கூறுவார்கள். இவர்கள் நட்பை விட சிறந்த நட்பாக இந்தக் காலத்தில் சொல்லகூடிய நட்பு கமல் ரஜனி நட்பாகும்.
கமல் 50 விழாவில் தான் இவர்களின் நட்பின் உச்சக் கட்டத்தைப் பலர் பார்த்திருப்பார்கள். ரஜனி சினிமாவில் காலெடி எடுத்து வைத்த காலம் முதல் கமலுடனான நட்பை எந்தக் கட்டத்திலும் கைவிடவில்லை.
தமிழ்த் திரையில் போட்டியாளர்களான இருவரும் ஒருவர் மேல் ஒருவர் நட்புப் பாராட்டினார்களே ஒழிய என்றைக்கும் பொறாமைப் பட்டதில்லை. ஆனால் ஒருவருக்கு ஒருவர் போட்டியாக இருந்தாலும் கமலின் படங்கள் ஒரு திசையிலும் ரஜனி படங்கள் இன்னொரு திசையிலும் இருந்தன.
எத்தனையோ பேட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் ரஜனியும் சரி கமலும் சரி தங்கள் நட்பை என்றைக்கும் உயர்த்தியே கூறிவந்தார்கள். அபூர்வராகங்கள் படத்தில் இருவரும் முதன் முதலில் சேர்ந்து நடித்தார்கள். அதன் பின்னர் பல படங்கள் இணைந்து நடித்தாலும் இந்த இரண்டு போட்டிக் குதிரைகளையும் வைத்து பலர் பணம் பண்ண இருக்கும்போது தனித் தனியாக நடித்தால் இருவருக்கும் பெயரும் பணமும் கிடைக்கும் என்ற கமலின் கருத்துப் படி இருவரும் பிரிந்து தனித் தனியே அவர்கள் பாணியில் நடித்தார்கள்.
கமல் 50 பிரமாண்ட விழாவில் ரஜனி கமலைப் பற்றிக் தன் பாணியில் கூறியவை :
" அபூர்வ ராகங்கள்' படத்துக்குப் பிறகு மூணு படங்களில் நானும் கமலும் சேர்ந்து நடிச்சோம். அப்பவே ஃபீல்டுல கமல் பெரிய பிஸ்தா. 'இந்தப் படத்துல ரஜினியைப் போட வேணாம்'னு கமல் ஒரு வார்த்தை சொல்லி இருந்தார்னா, கண்டிப்பா எனக்கு அந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கும். ஆனால், கமல் அப்படிச் சொல்லலை. " அத்துடன் கமல் தான் என்னுடைய கலையுலக அண்ணா என கமலைப் பற்றிச் சிலாகித்துப் பேசினார்.
வேறு எந்த நடிகர்களும் இப்படிச் சொல்வார்களா? ரஜனியிடம் இருக்கும் பெரும்தன்மை ஏனோ அவர் ரசிகர்களிடம் காணக்கிடைப்பதில்லை.
நிகழ்ச்சி தொடங்கமுன்னர் திவ்யதர்சினி ரஜனி கமல் இருவரிடமும் பேசும் போது கமலிடம் கேட்டார் " சிவாஜி படத்தில் ரஜனி சிவப்பாக மாற முல்தானி மெட்டி பூசிய பின்னர் தான் கமலஹாசன் கலரில் வருவேன்" என கமலின் கலரைப் போற்றுவார், இதனைப் பார்த்த போது என்ன நினைத்தீர்கள் என திவ்யதர்சினி கமலிடம் கேட்டபோது "அவர் இதனை விட இன்னும் சொல்லுவார், அவரின் மனதின் கலர் அது" என்பார் அந்த நேரம் ரஜனியின் முகத்தில் ஏற்படும் மாற்றம் உண்மையான நட்பு அதுதான் எனக் காட்டும்.
பின்னர் விழாவின் இறுதியில் கமல் பேசும்போது "சினிமாவில் என்னையும் ரஜினியையும் போல நண்பர்கள் யாரும் கிடையாது. ஒரு சக நடிகனைப்பத்தி ஒரு பொது மேடையில் மனசுவிட்டு எவன் இப்படிப் பேசுவான்? அந்த மனசு ரஜினிகிட்ட இருக்கு. தன்னைத் தாழ்த்தி என்னை உயர்த்திப் பேசி இருக்காரு. நான் ஒரு சவால் விடுறேன். தமிழ் சினிமாவில் ரெண்டு ஹீரோக்கள் இருந்தாங்கடா. கமல் - ரஜினின்னு. அவங்களைப் போல நட்பு சினிமாவில் யார்கிட்டே இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம். எங்கள் முதல் ஜெனரேசனில் இப்படியான நட்பு எவரிடமும் இல்லை," என்ற கமல் அடுத்த ஜெனரேசனிடம் நான் சவால் விடமாட்டேன் எங்கள் நட்பை விட உங்கள் நட்பு உயர்ந்ததாக இருக்கவேண்டும் என வேண்டுகோளூம் விடுத்தார்.
ரஜனிக்கும் கமலுக்கும் இருக்கும் நட்புபோல் ஏனோ இருவர் ரசிகர்களிடம் இருப்பதில்லை. அதிலும் ரஜனி ரசிகர்கள் கமல் ரசிகர்களை எதிரிகளாகத் தான் பார்ப்பார்கள். பெரும்பாலான கமல் ரசிகர்கள் ரஜனி படத்தை ரசித்துப் பார்த்தாலும் கிண்டல் செய்யமாட்டார்கள் ஆனால் ரஜனி ரசிகர்களோ கமல் படங்களில் சின்ன தவறையும் பெரிதாக எடுத்து கிண்டலடிப்பார்கள்.
சில காலங்களுக்கு முன்னர் வார்த்தைகளால் சண்டைபோட்ட ரசிகர்கள் இப்போ தம் வலைகளினூடு சண்டைபோடுகின்றார்கள். இதில் கொடுமை என்னவென்றால் சிலர் கமலைத் திட்டுவதற்க்கே தனிவழியாக வலை வைத்திருக்கிறார்கள்.
எந்த மனிதரிடமும் பலமும் பல்வீனமும் இருக்கும். கமல் மேல் கல் எறிபவர்களில் ஒரு கேள்வி முதலில் உங்களைச் சுத்தம் செய்துகொண்டு கமல் மேல் கல்லெறியுங்கள்.
என்னுடைய மிகவும் நெருக்கமான நண்பன் ஒருத்தன் ரஜனி பைத்தியம் ( பைத்தியம் என்பது சிறந்த சாதாரண ரசிகனை விட சிறந்த ரசிகன்) நான் கமல் ரசிகன்( பைத்தியம் அல்ல)ஆனால் இருவருக்கும் என்றைக்கும் எந்த சண்டையும் சச்சரவும் வருவதில்லை காரணம் எமக்குள் இருக்கும் புரிந்துணர்வு ஆனால் இந்தப் புரிந்துணர்வு பலரிடம் இல்லாமல் இருக்கின்றது.
பெரும்பாலன கமல் ரசிகர்கள் அன்பே சிவம் நல்லசிவம் போலவே இருக்கின்றார்கள். யார் என்ன சொன்னாலும் "பிழைத்துப் போகட்டும்" என பெரும்தன்மையாக விட்டுவிடுவார்கள். இதுவே இவர்களின் பலமும் பலவீனமும்.
ரசிகர்கள் எப்படித் தங்களுக்குள் அடிபட்டாலும் இந்த நூற்றாண்டின் சிறந்த நண்பர்கள் உலகநாயகன் கமலும் சூப்பர் ஸ்டார் ரஜனியும் தான் என்பது நட்பை உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.
தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? (புருஜோத்தமன் தங்கமயில்)
-
பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது மூன்று நாட்கள் மட்டுமே.
இன்று நள்ளிரவோடு பிரச்சாரப் பணிகள் நிறைவுக்கு வருகின்றன. அடுத்த இரண்டு
நாட்கள் அ...
4 days ago
25 கருத்துக் கூறியவர்கள்:
அடடா கலக்கிட்டீங்க வந்தி
நான் ரகுமான் பைத்தியம் இளையராஜா ரசிகர்களோடு நட்பாக இருக்க விரும்புகிறேன். என்னை கிண்டலடிக்கிறார்களே?
//இதில் கொடுமை என்னவென்றால் சிலர் கமலைத் திட்டுவதற்க்கே தனிவழியாக வலை வைத்திருக்கிறார்கள்.
//
;)
//வேறு எந்த நடிகர்களும் இப்படிச் சொல்வார்களா? ரஜனியிடம் இருக்கும் பெரும்தன்மை ஏனோ அவர் ரசிகர்களிடம் காணக்கிடைப்பதில்லை.
//
ரஜினி ரசிகர்களை விடுங்க.. கமலிடம் இருக்கிறதா...??
இந்த பண்பு அண்மைக்காலமாக அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய் அஜித்திடம் கொஞ்சம் துளிர் விட்டிருப்பது சந்தோசமே. ஆனால் நீங்கள் சொன்னதுபோல அவரின் ரசிகர்கள் வெறியர்களாக நடக்கின்றார்கள். நல்ல பதிவு வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் ராஜி ரசிகர்கள் பொதுவாக கமலை எதிர்ப்பவர்கள் என்பதை ஏற்க்கமுடியாது. கமலுக்கும் பைத்தியங்கள் உண்ட ரஜினிக்கும் உண்டு அதை விட நல்ல ரசிகர்களும் இருவருக்கும் உண்டு. சர்வேசன் குறிப்பிட்டதுபோல சிலர் விஜயை திட்டுவதற்கும் வலை வைத்த்துள்ளனர் வந்தி அண்ணா நீங்களும் தானே.
I don't accept your argument. I'm also fan of Super star. But I watch Kamal's movie better than his fans. Most of the Kamal fans don't know the fact that Rajni also a good acter like kamal. In my point view both are necessary for tamil cinema.
Superb..
//நிகழ்ச்சி தொடங்கமுன்னர் திவ்யதர்சினி ரஜனி கமல் இருவரிடமும் பேசும் போது //
அந்த முன்னுக்கு மட்டும் ட்றஸ் போட்டிருந்தாங்களே, அவங்கதானே?
ரஜினி ரசிகர்கள் சிலர் அப்படி இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
நான் கமல் ரசிகன் என்பதற்காகச் சொல்லவில்லை.
ஆனால் பல இடங்களில் கவனித்திருக்கிறேன்.
ஆனால் மறுபுறத்தில் ஒப்பிடும் போது ரஜினியை விட கமல் நடிப்பில் சிறந்தவர் என்பதால் ரஜினியை ஒண்டுக்கும் ஏலாதவர் என்று கணிப்போரும் உண்டு.
யார் என்ன சொன்னால் என்ன... அவர்கள் இருவரும் நட்பாக, முக்கியமாக உயர்விலும் அடக்கமாக இருக்கிறார்கள்.
தொடர்ந்து இப்பிடியே இருக்கட்டும்.
அருமையான - மறக்க முடியாத உணர்வுபூர்வமான நட்பைப் பற்றிய பதிவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்! கடைசி 3 வரிகளையும் நானும் மீட்டுப் பார்க்கின்றேன் - கடல் கடந்த நிலையிலும் என் நண்பர்களை நினைவுகொள்கிறேன். நான் தொடர்பாயிருக்காவிட்டாலும் அவர்களுக்கு என்னைத் தெரியும் - எனக்கு அவர்களைப் புரியும்!
//கமல் ரசிகர்கள் அன்பே சிவம் நல்லசிவம் போலவே இருக்கின்றார்கள். யார் என்ன சொன்னாலும் "பிழைத்துப் போகட்டும்" என பெரும்தன்மையாக விட்டுவிடுவார்கள்//
ஏங்க! வந்தியதேவன் இது கொஞ்சம் உங்களுக்கே ஓவரா தெரியலையா! :-)
ஆக மொத்ததுல நீங்க ஒரு கமல் "ரசிகர்"னு நிரூபிச்சுட்டீங்க! ;-)
நல்ல பதிவு வாழ்த்துக்கள்....
///ஆனால் மறுபுறத்தில் ஒப்பிடும் போது ரஜினியை விட கமல் நடிப்பில் சிறந்தவர் என்பதால் ரஜினியை ஒண்டுக்கும் ஏலாதவர் என்று கணிப்போரும் உண்டு///
கனககோபி.. அப்படியானவர்களை கொஞ்ச நேரம் சந்திரமுகி வேட்டையனை ரசிக்கச் சொல்லுங்கள். ரஜனி ஒரு மாயவலையில் சிக்கிவிட்டார். இல்லாவிட்டால அவரும் பல நல்ல வேஷங்களைப் போட்டிருக்க முடியும். ரஜனி நல்ல நடிகர் என்பதில் சந்தேகமயில்லை,
பதிவு நல்லாயிருக்கு வந்தியண்ணா
// மருதமூரான். said...
அடடா கலக்கிட்டீங்க வந்தி//
நன்றிகள் மருதமூரான்.
//யோ வாய்ஸ் (யோகா) said...
நான் ரகுமான் பைத்தியம் இளையராஜா ரசிகர்களோடு நட்பாக இருக்க விரும்புகிறேன். என்னை கிண்டலடிக்கிறார்களே?//
நான் ராஜா ரசிகன் ஆனால் அதற்காக ரகுமான் பிடிக்காது எனச் சொல்லமாட்டேன். எல்லா இசையமைப்பாளர்களையும் பிடிக்கும்
// SurveySan said...
;) //
இந்த ஸ்மைலியின் அர்த்தம் எனக்குப் புரிகின்றது ஆனால் நான் உங்களைச் சொல்லவில்லை.
//Anonymous said...
ரஜினி ரசிகர்களை விடுங்க.. கமலிடம் இருக்கிறதா...?? //
நிறைய இருக்கு? இல்லையென்றால் வலைகளில் கும்மி அடிக்கும் அறிவுஜீவிகளை கமல் ரசிகர்கள் விட்டுவைப்பார்களா?
//SShathiesh said...
இந்த பண்பு அண்மைக்காலமாக அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய் அஜித்திடம் கொஞ்சம் துளிர் விட்டிருப்பது சந்தோசமே. //
என்ன தம்பி பகிடியா? இருவரிடம் நட்பு இருந்தாலும் படங்களில் ஒருவரை ஒருவர் கிண்டலடிப்பார்கள். ஆனால் இதுவரை ரஜனி தன் படத்தில் கமலையோ கமல் படத்தில் ரஜனியையோ கிண்டல் செய்ததில்லை.
//ஆனால் நீங்கள் சொன்னதுபோல அவரின் ரசிகர்கள் வெறியர்களாக நடக்கின்றார்கள். //
ரசிகளை அடக்குவது தலைகளின் பொறுப்பு.
//சிலர் விஜயை திட்டுவதற்கும் வலை வைத்த்துள்ளனர் வந்தி அண்ணா நீங்களும் தானே.//
நான் விஜயைத் திட்டிய பதிவுகளைப் பட்டியல் இடுங்கள்.
//Kalidass said...
I don't accept your argument. I'm also fan of Super star. But I watch Kamal's movie better than his fans. Most of the Kamal fans don't know the fact that Rajni also a good acter like kamal. In my point view both are necessary for tamil cinema.//
உங்கள் கருத்துகள் சரி உங்களைப்போன்ற சிலரைத் தவிர்த்து பலருக்குப் பொருத்தமானது, ஆனால் பெரும்பாலான ரஜனி ரசிகர்கள் கமல் படங்களை நக்கலடிப்பது தசாவதாரம், உபோஒ விமர்சனங்களிலும் தேவையற்ற முட்டையில் மயிர் பிடுங்கும் ஆராய்ச்சிகளிலும் செலுத்தினார்கள்.
இருவரும் தமிழ்சினிமாவின் ஆதாரங்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.
// Subankan said...
Superb..
அந்த முன்னுக்கு மட்டும் ட்றஸ் போட்டிருந்தாங்களே, அவங்கதானே?//
அவங்களே தான், அவங்கள் குழந்தைமாதிரி இதையெல்லாம் கணக்கில் எடுக்ககூடாது.
//கனககோபி said...
ரஜினி ரசிகர்கள் சிலர் அப்படி இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.//
நன்றி கோபி நானும் கமல் ரசிகனாகச் சொல்லவில்லை உங்களைப் போல் பல இடங்களில் அவதானித்தது.
//ஆனால் மறுபுறத்தில் ஒப்பிடும் போது ரஜினியை விட கமல் நடிப்பில் சிறந்தவர் என்பதால் ரஜினியை ஒண்டுக்கும் ஏலாதவர் என்று கணிப்போரும் உண்டு.//
ஆமாம் ஆனால் ரஜனியின் ஸ்டைலும் சில படங்களின் நடிப்புகளும் அவருடைய நடிப்பை பறைசாற்றுபவை. முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக் குறி, ஆறில் இருந்து அறுபதுவரை, தில்லு முல்லு போன்றவை ரஜனியின் நடிப்பை வெளிக்காட்டிய படங்கள்.
//யார் என்ன சொன்னால் என்ன... அவர்கள் இருவரும் நட்பாக, முக்கியமாக உயர்விலும் அடக்கமாக இருக்கிறார்கள். தொடர்ந்து இப்பிடியே இருக்கட்டும்.//
ஏனென்றால் நிறைகுடங்கள் என்றைக்கும் தளம்பாது.
//தங்க முகுந்தன் said...
அருமையான - மறக்க முடியாத உணர்வுபூர்வமான நட்பைப் பற்றிய பதிவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்! கடைசி 3 வரிகளையும் நானும் மீட்டுப் பார்க்கின்றேன் - கடல் கடந்த நிலையிலும் என் நண்பர்களை நினைவுகொள்கிறேன். நான் தொடர்பாயிருக்காவிட்டாலும் அவர்களுக்கு என்னைத் தெரியும் - எனக்கு அவர்களைப் புரியும்!//
நன்றிகள் முகுந்தன் அண்ணா. எனக்குப் புரிகிறது நீங்கள் என்ன சொல்லவாறியள் எண்டு. என்ன செய்வது சிலவேளைகளில் சிலவற்றை விட்டுக்கொடுக்கவேண்டியிருக்கு.
// கிரி said...
ஏங்க! வந்தியதேவன் இது கொஞ்சம் உங்களுக்கே ஓவரா தெரியலையா! :)//
இதிலை என்ன ஓவர்? உங்களிடம் ஒரு கேள்வி எனக்கு ஒரு 10 பதிவுகளாவது ரஜனியைத் திட்டி எழுதிய பதிவுகள் காட்டுங்கள். நான் உங்களுக்கு 100ற்க்கு மேற்பட்ட கமலைத் திட்டிய பதிவுகள் காட்டுகின்றேன். ஒருவர் கமலைத் திட்ட இணையமே வைத்திருக்கிறார். அதில் கமலைத் திட்டிப் பின்னூட்டம் போட்டால் உடனே வெளியிடுவார். கமலைப் போற்றிப்போட்டால் அழித்துவிடுவார். அவர் வழி தனிவழியாம்.
//ஆக மொத்ததுல நீங்க ஒரு கமல் "ரசிகர்"னு நிரூபிச்சுட்டீங்க! ;)//
இல்லை நான் சினிமா ரசிகன் என்பதை நிரூபித்துவிட்டேன். கமல் ரஜனி இருவரையும் சமமாகத் தான் எடைபோட்டுள்ளேன்.
// jackiesekar said...
நல்ல பதிவு வாழ்த்துக்கள்....//
நன்றிகள் ஜாக்கியாரே.
// Kiruthikan Kumarasamy said...
கனககோபி.. அப்படியானவர்களை கொஞ்ச நேரம் சந்திரமுகி வேட்டையனை ரசிக்கச் சொல்லுங்கள். //
நானும் கனககோபிக்கு சில ரஜனி படங்கள் சிபாரிசு செய்திருக்கின்றேன். வேட்டையனும் நல்ல பாத்திரம். ரஜனி சிக்கிய மாலையில்
//ரஜனி ஒரு மாயவலையில் சிக்கிவிட்டார்.//
அதேதான் ரஜனி அந்த மாயவலையில் இருந்து வெளிவர விரும்பினாலும் ரசிகர்களும் இயக்குனர்களும் விடமாட்டார்கள்.
//பதிவு நல்லாயிருக்கு வந்தியண்ணா//
நன்றிகள் கீத்.
நட்பு பற்றிய நல்ல பதிவொன்று.. உண்மையில் ரஜினி பண்பான நல்ல மனிதர்.. நல்ல நடிகரும் கூட.. இமேஜ் என்ற நீங்கள் குறிப்பிட்ட மாய வலையில் திரையில் மாட்டிக் கொண்டாலும் நிஜத்தில் பந்தா இல்லாதவர்.
கமலுக்கு அவர் கொடுக்கும் மரியாதையும் அன்பும் நெகிழ வைத்தது./
கமழும் தனது அன்பைப் பொழிந்ததும் நட்புக்கு இலக்கணம்..
நான் கமல் ரசிகன் ,பைத்தியம். எதுவேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால் மற்ற நல்ல திறமையான நடிகர்களை மதிக்கிறேன்
Post a Comment