என்றைக்குமே எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளிடையே சேர்ந்திருக்கும் ஒரு விடயம் கருத்துமோதல்களாகும். இந்தக் கருத்துமோதல்கள் இன்றைக்கோ நேற்றைக்கோ தொடங்கியது அல்ல. ஆரம்பத்தில் கம்பன்கழக மேடைகளில் தொடங்கிய கருத்துமோதல்கள் பின்னர் படிப்படையாக வார மாத இதழ்களிலும் பத்திரிகைகளிலும் இடம்பிடித்தன. பல ஆரோக்கியமாக இருந்தாலும் சில வெறும் தனிமனித தாக்குதல்களாகவே மாறிவிட்டன.
பெரும்பாலான கருத்துமோதல்களுக்கு காரணம் ஒவ்வொருவரும் வெவ்வேறு இசங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் தங்கள் இசங்களுக்கு அல்லது கொள்கைகளுக்கு எதிரானவர்களுடன் மல்லுக்கட்டுதல் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.
இணையத்தின் பரவல் அதிகரிக்கப்பட்டபின்னர் இணையத்தில் இந்ததாக்குதல் தொடர்கின்றன. இதற்க்கு சிறந்த உதாரணம் அண்மையில் சாருவுக்கும் ஜெமோவுக்கு இடையிலான பனிப்போர்.
இந்தப்பனிப்போர்கள் இலங்கையில் கூட நடைபெற்றன, நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு பட்டிமன்ற மேடையில் இரண்டு பேச்சாளர்களுக்கிடையில் நடைபெற்ற வாக்குவாதம் எங்கள் ஊர்ப்பகுதியில் பிரசித்திபெற்றது. இவர்கள் இருவரும் ஏதோ நாட்டுப்பிரச்சனையில் வாக்குவாதப்பட்டிருந்தார்கள் என்றால் பாராட்ட்லாம் ஆனால் என்றைக்கோ கம்பன் எழுதிவைத்துவிட்டுப்போன இராமாயணத்தில் சீதை பற்றி சண்டையிட்டார்கள். இந்தச் சண்டை அந்த மேடையில் மட்டுமல்ல அதன் பின்னர் வந்த ஏனைய இலக்கியமேடைகளில் கூட எதிரொலித்தது. சீதையை இராவணன் கடத்தியபோது சீதை இருந்த நிலைதான் சண்டைக்கான முதல்காரணம். இராமாயணம் படித்தவர்களுக்கு அந்த நிலை என்னவென்று தெரியும்.
இலங்கையிலுள்ள பெரும்பாலான எழுத்தாளர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள் என தம்மை அழைக்கிறார்கள். அதனால் இவர்களிடம் சுஜாதா பற்றியோ ராஜேஸ்குமார் பற்றியோ கதைக்கமுடியாது. இவர்களின் பார்வையில் சுஜாதா ராஜேஸ்குமார் புஷ்பா தங்கத்துரை போன்றவர்கள் எழுதியது குப்பை இலக்கியம் என்பார்கள். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்றோர்களின் எழுத்துக்கள் மட்டும் தான் தரமான இலக்கியம் என்பது இவர்களின் வாதம்.
ஒருமுறை எமது கல்லூரிக்கு பிரபல எழுத்தாளர் ஒருவர் உயர்தர மாணவர்களிடையே இலக்கிய சொற்பொழிவொன்றாற்றினார். இலக்கியம் என்றால் அது மண்வாசனையுடன் இருக்கவேண்டும், அதனைவிட்டுவிட்டு நகரங்களில் நடக்கும் கதைகள் துப்பறியும் கதைகள் எல்லாம் இலக்கியம் இல்லை என்ற தொணியில் உரையாற்றிக்கொண்டிருந்தார். அவரது உரை முடிவுற்றபின்னர் நாம் அவருடன் சிலமணி நேரம் கலந்துரையாடப் பணிக்கப்பட்டோம். அப்போது அவரிடம் தமிழ்வாணன் கதைகள் இலக்கியத்தில் வரதா? எனக்கேட்டபோது இல்லை என பதில் அளித்தார். பின்னர் சுஜாதா ராஜேஸ்குமார் போன்றவர்களையும் ஒரு பிடிபிடித்தார். இவர்களின் எழுத்துக்களில் ஆபாசம் தலைதூக்கியிருக்கிறது எனவும் சும்மா பொழுதுபோக்கிற்க்கு மட்டும் படிக்கலாம் எனவும் தன் கருத்துக்களைச் சொன்னார்.
இவர்களைப்போல் தமிழக எழுத்தாளர்கள் சிலரும் இருக்கிறார்கள். தமது எழுத்துக்கள் தான் தரமானது ஏனையவை தரமற்றது என்பது இவர்களின் கருத்து. சாரு போன்ற சிலர் தமிழ் எழுத்தாளர்களைவிட ஏனைய வெளிநாட்டு எழுத்தாளர்களைப் பற்றி மட்டுமே எழுதுவார். நம்ம நாட்டு கலைஞர்களைக் கெளரவிக்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வருவதில்லை.
சிலகாலத்திற்க்கு முன்னர் தினக்குரலில் இடம்பெற்ற கவிஞர் மு.பொன்னம்பலம்,
கம்பன் கழகப்பேச்சாளார் ஸ்ரீபிரசாந்தன் இடையே நடைபெற்ற விவாதங்களும் பிரசித்திபெற்றவை. இவர்கள் சண்டைபோட்ட விடயம் அல்குல் என்ற தமிழ் சொல் பற்றியதாகும். அத்துடன் பிரசாந்தன் ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பில் மலையக கவிஞர்களைப் புறக்கணித்ததாக அந்தனி ஜீவாவால் ஞானம் இதழில் குற்றம் சாட்டப்பட்டார். குற்றச்சாட்டை நிராகரித்த பிரசாந்தன் அந்தனி ஜீவாவை பிரதேசவாதி என குற்றம் சாட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
குமுதத்தில் கோணல் பக்கங்கள் எழுதிய காலத்தில் இருந்தே சாருவைப் படித்துவருகின்றேன். சாருவையோ ஏனைய எழுத்தாளர்களையோ விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை காரணம் அந்தளவிற்க்கு இலக்கிய அறிவு எனக்கில்லை. சாரு ஒரு இலக்கியவாதியாக இருந்துகொண்டு இளையராஜாவை விமர்சிப்பது பிடிக்கவில்லை. சாரு ஒரு இசைஅறிஞர் என்றால் இளையராஜாவை மட்டுமல்ல மொசார்ட், பீதோவனைக்கூட விமர்சிக்கலாம். ஆனால் சாருவுக்கு இசைபற்றித் ஆழ்ந்த அறிவுகிடையாது என்பது அவரது எழுத்துக்களில் இருந்து புரிகின்றது. அப்படியிருக்கையில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த இசைஞானியின் இசை இசையல்ல என்கிறார்.
இவரின் விமர்சனத்திற்க்கு அடிக்கடி உள்ளாகும் இன்னொருவர் நடிகர் கமலஹாசன். கமலஹாசனை அடிக்கடி விமர்சிக்கும் இவர் ஏன் தலைகளையும் தளபதிகளையும் விமர்சிப்பதில்லை? சாரு ரஜனிகாந்தைக்கூட இதுவரை விமர்சித்ததில்லை. இவரது புனைகதை எழுத்தில் இருக்கும் தைரியம் விமர்சனங்களில் இல்லை.
சாருவிடம் இன்னொரு கேள்வி உங்களுக்கு கேரளத்தில் இருக்கும் புகழ் பற்றி அடிக்கடி எழுதுகிறீர்கள். கட் அவுட் வைத்ததாககூட எழுதியிருக்கிறீர்கள். ஏன் உங்களால் முல்லைப் பெரியார் பற்றி கேரளமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விளங்குமாறு விளக்கம்கொடுக்கமுடியாது உள்ளது. காரணம் நீங்கள் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் மட்டும் விமர்சிக்கும் துணிவு அரசியல்வாதிகளிடத்தில் உங்களுக்கு இல்லை.
இறுதியாக சாரு ஜெமோ இருவருக்கும் ஒருவேண்டுகோள் உங்கள் சண்டைகளை ஆக்கபூர்வமான விடயங்களில் செலுத்தினால் அனைவருக்கும் பிரயோசனமாக இருக்கும்.
டிஸ்கி : அண்மைக்காலமாக சாரு, ஜெமோ, பைத்தியக்காரன், லக்கி, நர்சிம் எனப் பலரரின் விமர்சனங்கள் வாசித்தேன் அனைத்துக்கும் பொதுவான ஒரு பின்னூட்டமாக இந்த உளறல். வேறு எந்த உள்குத்தோ அரசியலோ இல்லை. இலக்கியச் சண்டைகள் எங்கும் நடைபெறுகின்றன என்பதற்காகவே இலங்கை எழுத்தாளர்கள் பற்றியும் ஒரு சின்ன விளக்கம்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
21 hours ago
9 கருத்துக் கூறியவர்கள்:
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் நண்பா.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
நன்றிகள் அக நாழிகை வாசுதேவன் அவர்களே.
மிகவும் சிறப்பான கட்டுரை. உங்கள் வேண்டுகோளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனும் உங்கள் நம்பிக்கை மிகவும் அசாத்தியமான நம்பிக்கைதான்.
நாம் என்ன செய்கிறோம் எனத் தெரியாமலா அவர்கள் இதனை செய்து கொண்டிருப்பார்கள் என கருதுகிறீர்கள்?
உலகில் ஒரு தத்துவம் உண்டு, நீ மேலே ஏற வேண்டுமெனில் கீழே இருப்பவனை நசுக்கிவிடு, உன் மேலே இருப்பவனை கீழே இழுத்துப் போட்டுவிடு. சமநிலையாக சென்றால் கால ஓட்டத்தில் நீ அடிபட்டு போய்விடுவாய்!
எனவே பிரபலமாக வேண்டுமெனில் கருத்து வேறுபாடுகளுடன் திரிய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் போல! இது எழுத்தாளர்களையும் விட்டுவைக்கவில்லை.
கவிப் புலமையை வெளிப்படுத்தினால் அன்று பரிசும் பட்டமும் கிடைத்தது. இன்று...
தொடராமல் இருக்கட்டும் சர்ச்சைகள்.
இலக்கியுலகில் எப்போதும் எங்கேயும் இரு சாரார் உண்டு.
ஒருவர் ஆழ்ந்த இலக்கியம் படிப்பவர். இதில் நீங்கள் சுட்டும் சுஜாதா, ராஜேஸ்குமார், போன்றவர்கள் வர மாட்டார்கள். மற்றவர் அனைத்தையும் படிப்பார்; ஆனால், அவருக்கு ஆழ்ந்த இலக்கியத்தை இரசிக்கும் தன்மையிருக்காது. அவருக்கு எனவே ஜனரஞசக எழுத்தரே விருப்பம்.
இலக்கியம் என்றால் என்ன என்பதில், இலக்கியத்தை இரசனையுணர்வோடு அனுபவித்து படிப்பவ்ருக்கும் மற்றவருக்கும் பெரும் வேறுபாடு உண்டு.
மாணாக்கருக்கு முன்சொன்ன இலக்கியம் இரசனையை வளர்க்கத்தான் கல்லூரி போன்றவை இருக்கின்றன.
இரண்டாவதை வள்ர்க்க்த் தேவையில்லை. அம்புலிமாமாவைப் ப்டிக்க எந்த பயிற்சியும் தேவையில்லை.
எனவே, நும் ஆசிரியர் சொன்னது சரியே!
வெ.இராதாகிருஷ்ணன் அவர்களே இவர்கள் என் பதிவைப்படிப்பார்கலே என்பதே சந்தேகம் தான் காரணம் அவர்களைப் பொறுத்தவரை தங்கள் பெயர் பிரபலமடையவேண்டுமென்பதே முழுமுதல்காரணம். இதற்காக இன்னொருவரை ஏய்ச்சுப் பிழைப்பு நடத்துகிறார்கள். மற்றும்படி இவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவ்வளவாக வித்தியாசம் இல்லை. கொள்கைகளை மாற்றுவதில் சில எழுத்தாளர்களும் உண்டு.
//எனவே பிரபலமாக வேண்டுமெனில் கருத்து வேறுபாடுகளுடன் திரிய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் போல! இது எழுத்தாளர்களையும் விட்டுவைக்கவில்லை.//
எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கின்றார் அவர் எங்கே சென்றாலும் கொஞ்சம் வித்தியாசமாகவே உடை அணிந்துசெல்வார். இதற்கான காரணம் தன்னையே அனைவரும் பார்க்கவேண்டும் என்பதாகும். மேடைகளில் எப்படியும் யாரையாவது தாக்குவார். வார மாத இதழ்களில் சர்ச்சைகளைக் கிளப்புவார். இதெல்லாம் அவர் தன் புகழுக்காகவே செய்கின்றாரே ஒழிய வேறு காரணம் அறியவில்லை.
ஒரு பிரசித்தி பெற்ற நிறுவனம் காசு வாங்கிக்கொண்டு தமிழுக்கு தொண்டாற்றாத ஒருவருக்கு விருது கொடுத்த அசிங்கம் கூட நம்ம நாட்டில் நிகழ்ந்தது.
கொற்கை அவர்களுக்கு என் புனை பெயரில் இருந்து நான் கல்கியைப் படித்தவன் என்பதை அறிந்திருப்பீர்கள். ரசனை என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். எனக்கு நண்பர் ஒருவர் இருந்தார் அவர் சில நேரம் என்னிடம் அரைமணி நேரம் லீவாக இருக்கிறேன் வாசிக்க ஏதும் கொடு என்னும் போது அவருக்கு சுஜாதா ராஜேஸ்குமார் நாவல்கள் தான் பொழுதுபோக்காக கொடுப்பது. அதே நண்பர் நாலு நாள் லீவாக உள்ளேன் எனும் போது அகிலன், ஜெயகாந்தன் டானியல் போன்றோரது புத்தகங்களைக் கொடுப்பேன் அவர் அதனையும் வாசித்து பின்னர் என்னுடன் சிலனேரம் விவாதம் செய்வார். ஆக இரண்டையும் ரசிக்கும் ரசிகர்களும் உண்டு.
இலக்கியமும் மெஹா சீரியல் போல்தான். மெஹா சீரியல் எப்படி குடும்பபெண்களைக் கவருகின்றதோ அதேபோல் தான் ரமணி சந்திரன் போன்றோரின் நாவல்கள் குடும்பபெண்களைக் கவருகின்றது. சுஜாதா ராஜேஸ்குமார் போன்றோரின் நாவல்கள் இளைஞர்களை பெரும்பாலும் கவருகின்றது. காத்திரமான இலக்கியகாரர்களால் மட்டும் சில இளைஞர்களையும் பல ஆழ்ந்த வாசிப்பு உள்ள பெரியவர்களையும் கவரமுடியும்.
இன்னொரு கவலையான விடயம் அம்புலிமாமாவே இன்றைய சிறுவர்கள் பலர் வாசிப்பதில்லை. வாசிப்பு பழக்கம் மிகவும் குறைந்துகொண்டுவருவதாக அடிக்கடி நாளேடுகளில் செய்திகள் வருகின்றது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
ஸ்ரீபிரசாந்தன் has to support alkul because they live by talkwing about it. I mean kamban kalakam depends only on the sexual matters in ramayanam.
saru wont talk about water problem, because of that he is famous in kelara. they are bright. they know who will talk for them. appadi iruppathal than avar anga famous. otherwise he wont be famous. we tamils only do praise who do bad things to us. tamillarin thalai vithi appadi
Venkattan
அனானி நண்பரே உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் சாரு பற்றி சொல்வது புரிகிறது.
சாருவின் கலகம் காதல் இசை வாசியுங்கள்..
Post a Comment