இங்கிலாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆஷஸ் தொடரில் இரண்டாவது போட்டியில் கடைசிநாளான இன்று அவுஸ்திரேலியாவை 115 ஓட்டங்களால் தோற்கடித்தது இங்கிலாந்து.
லண்டன் லோட்ர்ஸ் மைதானத்தில் 1934 ஆம் ஆண்டிற்க்குப் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும். 75 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத இந்த சாதனையை இன்று அன்றூ ஸ்ரோஸின் இங்கிலாந்து அணி முறியடித்து சரித்திரம் படைத்துள்ளது.
522 என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களை சொறப ஓட்டங்களில் இழந்திருந்தாலும் பின்னர் வந்த கிளார்க்கின் அபார சதத்தினாலும் பிராட் ஹடினுடான சிறந்த இணைப்பாட்டத்தினாலும் தங்கள் தோல்வியை சற்று நேரம் பிற்ப்போட்டது என்றே கூறலாம். இதற்கு மிச்சல் ஜோன்சனும் தன் பங்குக்கு கொஞ்சம் உதவினார்.
அன்றூ பிளின்டோவ் இரண்டாவது இனிங்சில் 92 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து தன் லோர்ட்ஸ் மைதான இறுதிப்போட்டியிலிருந்து இனிமையான நினைவுகளுடன் விடைபெற்றார். போட்டியின் நாயகன் விருதும் இவருக்கே வழங்கப்பட்டது.
ரிக்கி பொண்டிங் வழக்கம்போல் நடுவர்கள் செயல்ப்பாடுகள் சரியில்லை என்ற குற்றச்சாட்டைக் கூறினார். ஒரு போட்டியில் தோற்றால் நடுவர்களையும் எதிரணியையும் ஆடுகளத்தையும் குற்றம் சாட்டும் ஒரே அணி ஆஸி தான்.
2009ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 1 க்கு 0 என்ற நிலையில் முன்னணி வகிக்கின்றது. இன்னும் 3 போட்டிகள் மீதமிருக்கின்ற நிலையில் அவுஸ்திரேலியா தன் திறமையைக்காட்டுமா? இல்லை இங்கிலாந்து இதே உத்வேகத்துடன் எதிர்வரும்போட்டிகளை வென்று கிண்ணத்தை சுவீகரிக்குமா?
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
20 hours ago
9 கருத்துக் கூறியவர்கள்:
ம்ம் நீங்களும் சுடசுட பதிவு போட்டுட்டிங்களா :-)
// ராஜா | KVR said...
ம்ம் நீங்களும் சுடசுட பதிவு போட்டுட்டிங்களா :-)//
ஆமாங்க பொண்டிங்க்கு யார் ஆப்படித்தாலும் உடனே பதிவு போட்டுவிடுவோம்.
//ஆமாங்க பொண்டிங்க்கு யார் ஆப்படித்தாலும் உடனே பதிவு போட்டுவிடுவோம்.//
:))
ததாஸ்து! ததாஸ்து!
நன்றிகள் நாமக்கல் சிபி மன்னிக்கவும் பிரபல பதிவர் நாமக்கல் சிபி அவர்களே. பிரபல பதிவர் என்பது உங்கள் பெற்றோர்கள் வைத்த பெயரா? வேதம் புதிது ஸ்டைலில் படிக்கவும்.
///ஆமாங்க பொண்டிங்க்கு யார் ஆப்படித்தாலும் உடனே பதிவு போட்டுவிடுவோம்.///
ஆகா வந்தி... நீங்க நம்ம ஆளு... அதென்னமோங்க... நிலத்தில இருந்த பந்தைப் பொறுக்கி கிளார்க் எடுக்க அதை அவுட் என்று அம்பயர சொல்ல வச்ச இந்த பொண்டிங் துரை (சிட்னி 2008, இந்தியா டெஸ்ட்) இப்ப ஸ்பிரிட் ஒஃப் கிரிக்கட் பத்தி எல்லாம் பேசுது... ஒரே கமெடி போங்கோ
நன்றி!
//பிரபல பதிவர் என்பது உங்கள் பெற்றோர்கள் வைத்த பெயரா? வேதம் புதிது ஸ்டைலில் படிக்கவும்.//
எல்லாரும் நீங்கதான் பிரபல பதிவரா பிரபல பதிவரா என்னை கேட்டு டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சாங்க! அதான்
"ஆமாம்பா! நான் பிரபல பதிவர்தான், போதுமா" அப்படின்னு நானே இந்தப் பேரை சேர்த்துக்கிட்டேன்!
நேத்துதான்!
ipa irukra australia team sariana mokka team...
itha vachitu oru match jeichu kaatna ponting a paaratalaam...
உங்கள் பதிவுகள் நல்ல பதிவுகள் தொடருங்கள்....
வாழ்த்துக்கள்....
Post a Comment