இளையராஜா அவ்வளவுதானா? என கேள்வி கேட்கும் விதமாக இந்தப் பதிவுக்கு தலைப்பிட நினைத்தேன். ஆனால் என்னால் அப்படி இடமுடியவில்லை காரணம் நான் கடைந்தெடுத்த இசைஞானி ரசிகன்.
கடந்த சில காலமாக ராஜாவைப்பற்றி பல கருத்துகள் வலைகளிலும் சரி சில களங்களிலும் குழுமங்களிலும் ஏன் நேரில் கூட விவாதித்துக்கொள்ளப்படுகின்றது. 70களின் முடிவிலும் 80களில் முழுவதும் 90களின் ஆரம்பத்திலும் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இசையுலகை தன் ஆர்மோனியப்பெட்டியில் வைத்திருந்தவர் இளையராஜா என்றால் மிகையாகாது.
இந்தப்பதிவிற்க்கு மூலகாரணம் அண்மையில் வால்மீகி படத்தைப்பார்த்துவிட்டு பலர் ராஜாவின் இசை சரியில்லைஎனக் கூறுகின்றார்கள். படம் இன்னும் பார்க்கவில்லை, பாடல்கள் கேட்கவில்லை அதனால் இந்தப்படத்தினைப் பற்றி என்னால் எதுவும் கூறமுடியாது.
ஒருமுறை ஹாய் மதனில் ஒருவர் கேள்வி ஒன்று கேட்டிருந்தார் "சிவாஜிகணேசன், அசாரூதீன், இளையராஜா மூவரும் இனி ஓய்வெடுக்கலாமா?" என. அதற்க்கு மதன் "இவர்கள் மூவரும் சாதனையாளர்கள் இவர்களின் சாதனைகளை இன்னொருவர் முறியடித்தாலும் இவர்கள் தான் முன்னோடிகள்" என பதில் அளித்திருந்தார்.
ஆக இளையராஜா அண்மைக்காலங்களில் அவ்வளவாக சேபிக்காவிட்டாலும் முன்னைய காலங்களில் அவர் தந்த பாடல்களை மிஞ்ச இன்னொருவர் இல்லை என்றே சொல்லலாம். அதுமட்டுமல்ல இன்றைக்கும் அவர் தான் பின்னணி இசையில் நம்பர் ஒன்.
ஒரு கலைஞனுக்கு தன் நாட்டை விட ஊரைவிட இன்னொரு ஊரில் தான் மரியாதை அதிகம். அதனால் தான் என்னவோ இளையராஜாவை மலையாளத் திரையுலகம் தத்தெடுத்துவிட்டது இசைப்புயலை மும்பை தத்தெடுத்துவிட்டது.
80களின் இசைபற்றி ஆராயவே தேவையில்லை. ராஜா கொடிகட்டிப்பறந்த காலமது.இளையராஜாவுக்காகவே ராமராஜன் ராஜ்கிரண் படம் எல்லாம் பார்த்து தொலைத்தகாலமது
90களின் தொடக்கத்தில் ரகுமானின் வரவால் இளையராஜாவின் படங்களின் எண்ணிக்கை குறைந்ததே அல்லாமல் தரம் குறையவில்லை. அந்தகாலத்தில் வெளிவந்த காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற படங்களில் மீண்டும் தன் இருப்பை மற்றவர்களுக்கு காட்டினார்.
பின்னர் ஹேராம், விருமாண்டியில் உச்சத்திற்க்கு வந்த இசைராஜா மும்பை எக்ஸ்பிரசை கமலுடன் சேர்ந்து மிஸ் பண்ணிவிட்டார். இடையில் பாலாவின் ஆஸ்தான இசையமைப்பாளராகி சேதுவில் எங்கே செல்லும் இந்தப்பாதை தேடி பிதாமகனில் இளங்காற்று வீசி நான் கடவுளில் ஓம் சிவோஹம் என உருத்திர தாணடவமே ஆடினார். ரமணாவில் இரண்டே இரண்டு பாடல்களிலும் பின்னணியிலும் கேப்டனுக்கு முருகதாசுடன் மறுவாழ்வு கொடுத்தார்.
இடையில் சில படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தாலும் நல்ல கதை அமைப்பு இல்லாதபடியால் பாடல்களும் எடுபடவில்லை. அதே நேரம் அந்தக்காலத்தில் கதையே இல்லாத பல படங்கள் இவரின் பாடல்களுக்காகவே ஓடின.
ராஜாவின் இன்றைய பின்னடைவிற்க்கு என்னால் கூறக்கூடியவை காரணங்கள் :
1. புதிய தலைமுறைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளாமை முக்கிய காரணமாகும். மகன் யுவன் சங்கர் ராஜா புதிய தலைமுறைக்கேட்ப இசையமைக்கும்போது இவரால் அதனைச் செயல்படுத்தமுடியவில்லை. இதற்க்கு தலைமுறை இடைவெளியும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.
2. எவ் எம் ரேடியோக்கள் மியூசிக் சேனல்களின் வருகை. இவை இரண்டும் பெரும்பாலும் இளசுகளை டார்கட் பண்ணியே நடைமுறைப்படுத்தப்படுவதால் ராஜாவைவிட ரகுமான், ஹாரிஸ், யுவன் போன்றோரே இவர்களின் தெரிவாக இருக்கின்றது. ஆஹா எவ் எம்மில் பவதாரணி நடத்திய ராஜாங்கமும் இலங்கையில் சக்தி எவ் எம்மில் ஒளிபரப்புகின்ற ராஜாங்கமும் மட்டும் விதிவிலக்காக இருக்கின்றன.
3. ராஜாவின் கெடுபிடிகளை நினைத்து இளம் இயக்குனர்கள் பயத்தினால் இவரை நாடுவது குறைவு, அண்மையில் கூட மிஷ்கினின் நந்தலாலாவில் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது இளையராஜா யூசர் பிரண்ட்லி இல்லையென செய்தி அடிபடுகின்றது.
சிலர் சொல்வதுபோல் அவரிடம் சரக்கில்லை என்பது கடைந்தெடுத்த பொய். சரக்கிருக்கு அதனை இந்தக்காலத்திற்க்கு ஏற்ப கொடுக்க தவறிவிட்டார் அல்லது இந்தக்காலத்தின் சில வடிவங்களை அன்றே தந்துவிட்டார் எனலாம். உதாரணமாக விக்ரம் படத்தின் வனிதாமணி வனம்மோகினி பாடலின் முன்னால் வரும் "கண்ணே கட்டிக்கவா ஒட்டிக்கவா" தமிழில் முதல் வந்த ராப் என இசைவல்லுனர்கள் சொல்கிறார்கள்.
வால்மீகி படத்தின் இசைக்கு அதன் தயாரிப்பாளர்களான விகடனும் ஒரு காரணமாக இருக்கலாம். காரணம் ஆரம்ப நாட்களில் விகடனால் இளையராஜா கண்டுகொள்ளப்படவில்லை. இதனை தற்போது அவர்கள் வெளியிடும் விகடன் பொக்கிசத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். ராஜா கோலோச்சிய பல படங்களின் விமர்சனங்களில் அவரைப்பற்றி ஒரு வார்த்தைகூட விகடன் எழுதவில்லை. இதனைப் பலர் விகடன் இணையப்பதிப்பில் பின்னூட்டங்களில் கூடச் கூறியிருந்தார்கள். ஆகவே அதற்க்குப் பழிவாங்கும் வகையில் இசையை சொதப்பினரா? இல்லை இந்தப் படத்திற்க்கு இவ்வளவு போதும் என நினைத்தாரா? (விகடனுக்கு மட்டுமா சிண்டு முடியத்தெரியும்).
இசையில் பல சாதனைகள் செய்த மனிதரை மத்திய மாநில அரசுகள் தான் கண்டுகொள்ளவில்லை என்றால் பதிவுலகத்திலும் எத்தனை எத்தனை எதிர்க்கருத்துக்கள்.
ஒருமுறை விவேக் சொன்னதுபோல் இளையராஜா வெளிநாடு ஒன்றில் பிறந்திருந்தால் அவரை அங்கே கொண்டாடியிருப்பார்கள். தவறிப்போய் அவர் தமிழ்நாட்டில் பண்ணைபுரத்தில் பிறந்தது அவரது துரதிஷ்டம்தான்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
21 hours ago
12 கருத்துக் கூறியவர்கள்:
no chance... he is always best....
Y he should change his orginality...
bakyaraj & barathiraja's some movies failed because they changed thier style...
but i expecte movie from them the same old style....
நண்பரே... பதிவு நன்றாக இருக்கிறது.இதில் சில நெருடல்களும் உள்ளன. அதனைப்பிறகு சொல்கிறேன்.
இப்போதைக்கு ‘வால்மீகி’ பாடல்களைக் கேட்டுவிட்டு வாருங்கள்.’கூட வருவியா’ பாடல் ஹெட்ஃபோனில் கொடுக்கும் சங்கதிகள் ஏராளம்.’பூ சிரிக்குது’ பாடலின் சரணங்கள் புதுவிதமாய்ப் புன்னகைக்கிறது. பாடகியின் குரல் அழகு.’என்னடா பாண்டி’ பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.பாடல்களில் குறைகளில் இல்லை. கேட்பவர் செவிகளில்தான். நான் படம் பார்க்கவில்லையாதலால் பின்னணி இசை பற்றிச் சொல்லவியலாது.மற்றபடி ராஜா அப்படியொன்றும் வஞ்சம் வைத்துப் பழி தீர்க்க மாட்டார். அவர் நினைத்தாலும் அவர் இசை அப்படி நினைக்காது. அதறு எதிரி, நண்பன் எல்லாம் ஒன்றுதான்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பாக்யராஜ் சொல்லியிருந்தார். ‘சுவரில்லாத சித்திரங்கள்’,’மவுன கீதங்கள்’ படங்களுக்கு கங்கை அமரனை உபயோகப் படுத்தியதால், தனது அடுத்த படமான ‘முந்தானை முடிச்சு’ க்கும் கங்கைஅமரனையே சிபாரிசு செய்தார். ஆனால் ஏ.வி.எம் , இளையராஜாவைக் கை காட்ட ,வேறு வழியின்றி ராஜாவை நாடினார். ராஜா அப்போது கோபமாக,”அமர்தான வேணும்னு சொன்ன. அவனோடவே பணியாற்றிக்கோ”ன்னு கூடச் சொன்னாராம். ஆனா ‘முந்தானை முடிச்சு” பாடல்கள், பின்னணி இசை பத்தி உங்களுக்கே தெரியும். நான் அப்புறம் வந்து விரிவாப் பின்னூட்டுறேன். நன்றி...
இளையராஜா மட்டுமல்ல வந்தி.... தமிழ்க் கலைஞர்கள் எல்லோருமே துரதிர்ஷ்டசாலிகள்... தமிழர்கள் நாங்கள் மட்டும்தான் வேற்றுமொழிக் கலைஞர்களையும், கலைகளையும் தேடிப்போய் கொண்டாடுகிறோம். அவர்கள் எங்களைக் கண்டுகொள்வதேயில்லை. உதாரணமாக கமலின் நடிப்பில் அல் பசீனோ, மார்லன் பிராண்டோ சாயல் அப்பட்டமாகத் தெரிவதாகக் கத்தும் இவர்கள், விருமாண்டி, தேவர்மகன் முதலாய படங்களில் கமல் காட்டிய அசல் கிராமத்தானைக் கொண்டாடுவதில்லை என்பதுதான் வருத்தம்
வால்மீகி பாட்டு நல்லா இல்லைன்னு யார் சொன்னது? முதல்ல பாட்டை கேளுங்க - இந்த வருசத்தோட சூப்பர் ஹிட் பாட்டுக்கள் அது.
'என்னடா பாண்டி' ‘ரெக்க கட்டி பறக்குது' - இன்னைக்கும் அவர் ‘இளைய'ராஜான்னு நிரூபிச்சு இருக்கார்.
இளையராஜா இசை நல்லா இல்லைன்னு சொல்றது அறிவுஜீவியாகறதுக்கு ஒரு முதல்படி மாதிரி ஆய்டிச்சி.
சிறிது நேரத்தின் பின்னர் அனைவருக்கும் விரிவான பின்னூட்டம் இடுகிறேன். இறுதியாக பின்னூட்டம் இட்ட அனானிக்கு மட்டும் ஒரு விளக்கம் வால்மீகி விமர்சனம் எழுதிய சில பதிவர்களும் சில இணையத்தளங்களும் ராஜா இசையை பாராட்டவில்லை அவர்களின் மேல் காண்டுகொண்டு எழுதியதே ஒழிய நான் என்றைக்கும் ராஜா ரசிகன் தான். ஆகவே நீங்கள் கூறிய அறிவுஜீவிகள் பட்டியலில் நான் வரமாட்டேன்.
//தமிழ்ப்பறவை said...
பாடல்களில் குறைகளில் இல்லை. கேட்பவர் செவிகளில்தான்.//
இதுதான் நிஜம் தற்போது சில இசைஞானியின் மேல் எப்படியாவது களங்கம் ஏற்படுத்த வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இதனால் தான் அதில் நொல்லை இது சரியில்லை என தங்கள் விமர்சனங்களை எழுதுகிறார்கள். ராஜாவின் அந்த நாள் இசையாக இருந்தால் என்ன இந்தநாள் இசையாக இருந்தால் என்ன கேட்பவர்களுக்கு (இசைரசனைடன்)ஏதோ ஒரு இடம் கட்டாயம் புதியதாக இருக்கும். இதற்க்கு ஒரு சின்ன உதாரணம் ஈரமான ரோஜாவே படத்தில் ஒரு மெட்டில் இரண்டு பாடல்கள் உண்டு ஒன்று "வாவா அன்பே பூஜை உண்டு", இன்னொன்று " தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு" இந்த இரண்டுபாடல்களில் ஒன்று மகிழ்ச்சியாக இருக்கும் இன்னொன்று சோகம் இரண்டிலும் பிஜிஎம் வேறு வேறு. இப்படி சின்ன சின்ன விடயங்களில் கூட வித்தியாசம் காட்டுபவர் இசைராஜா.
வஞ்சம் தீர்த்தது என்பது என்னுடைய விகடன் மீதான ஆத்திரத்தின் வெளிப்பாடு காரணம் ஆரம்ப நாட்களில் விகடன் ராஜாவை ஏறெடுத்தே பார்க்கவில்லை. வாத்தியார் பிள்ளை மக்கு என்பதுபோல் மற்றவர்களை கிண்டல் செய்யும் விகடன் தான் எடுத்த சிவா மனசில சக்தியும் சரி வால்மீகியும் சரி சாதாரண படங்கலே அண்மையில் நண்பர் ஒருவரின் பதிவில் விகடன் பசங்க கதையை நிராகரித்ததாக எழுதியிருந்தார். ஆகவே விகடன் தன் தயாரிப்பென்றால் மசாலா தேவை மற்றவன் எடுத்த மசாலாக்களை நன்றாகவே விமர்சிப்பார்கள். ஒரு காலத்தில் விகடன் விமர்சனம் படித்து படம் பார்த்த என்னைப்போன்ற பலர் இப்போ வலைப்பதிவாளர்களின் விமர்சனத்தைப் படித்துவிட்டு படம் பார்க்கின்றோம்.
முந்தானை முடிச்சு விடயங்கள் அறிந்திருந்தேன்.
ஹீத் உங்கள் அக்கரைக்கு இக்கரை பச்சை பதிவில் எழுதிய பதிலைப்படிக்கவும். கமலையும் சிவாஜியையும் கொப்பி என்பவர்கள் அவர்களின் கிராமிய படங்களைப் பார்க்கவும் அல் பசீனோவும், மார்லன் பிராண்டோவும் கிராமப்படங்களில் நடித்திருக்கிறார்களா? இல்லை நம்ம ஊர் ஆலமரம் ஆற்றங்கரை அனுபவம் அவர்களுக்கிருக்கா? எம்மவர்கள் என்றைக்கும் எமது படைப்புகளையோ படைப்பாளிகளையோ மதிப்பது குறைவு. இன்றைக்கும் ஹிந்தியில் தமிழ் ஒளிப்பதிவாளர்கள் தான் கோலோச்சுகிறார்கள். சிலர் ஹோலிவூட்டுக்கு கூட செல்கிறார்கள்.
// இந்தப் படத்திற்க்கு இவ்வளவு போதும் என நினைத்தாரா? //
ஓஹோ அதான் மேட்டரா...
வந்தியதேவன்.....மிக விரிவான அலசல்.... கலக்குங்க....
//
இளையராஜா இசை நல்லா இல்லைன்னு சொல்றது அறிவுஜீவியாகறதுக்கு ஒரு முதல்படி மாதிரி ஆய்டிச்சி//
சரியா சொன்னீங்க அனானி...
அய்யா, அவர் இப்போதைய ட்ரெண்டிற்கு தகுந்தவாறு பேரிரைச்சலோடு பாடல்கள் அமைப்பதில்லை... வாஸ்தவம்தான். அவர் ”கெடுபிடிகள்” செய்வார் என்பதெல்லாம் டுபாக்கூர்.
தமிழ் சினிமாவில் கதையைத் தவிர மற்ற விஷயங்களை தாராளமாக ந்ம்புகிறார்கள். போதாதகுறைக்கு செண்டிமெண்டுகள் வேறு. கேமராவிற்கு சூடம் காட்டி படமெடுத்தால் மட்டும் படம் வசூலை வாரிக் குவித்து விடுமா? மட்டமான கதையைக் கொண்டு போய் அவரிடம் தந்து ஏதோ அவரது இசையால்தான் படம் தோற்றது என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். ஜெயித்தால் மட்டும் இயக்குனரின் படமாம். தோற்றால் மற்றவரை பலிகடா ஆக்குகிறார்கள்.
தற்போது அவரது இசை நன்றாக இல்லையென்று சொல்கிறவர்களில் பெரும்பாலும் பாடல்களை முழுமையாக கேட்பதில்லை. மேலும் மற்ற இசையமைப்பாளர்கள், ஒரு generic இசையை தருகிறார்கள். பாடலுக்கான சூழ்நிலையும், கதாப்பாத்திரங்களின் தன்மைக்கும் ஏற்றவாறு இன்றும் இசையமைக்கும் ராஜாவின் இசை தற்போதைய ட்ரெண்டினையொட்டி இல்லைதான்.. என்ன செய்ய?
இளையராஜாவின் பின்னடைவுக்கு அவரேதான் காரணம். முக்கியமாக showmanship அவரிடம் இல்லை.
மேடையில் ஒரு ஆண்டிப்பண்டாரம் போல் தோன்றுகிறார். ஒரு முழு western orchestra வை வைத்துக்கொண்டு
நெற்றியில் விபூதிப் பட்டை , ஜிப்பா வேஷ்டியில் வந்தால் யார் மதிப்பார்கள் ?
ஒரு கர்நாடக இசை கச்சேரியில் அனைவரும் full suit -ல் வந்தால் எப்படி இருக்கும் ?
மேலும் வேண்டாத stupid தத்துவங்கள் பேசுவதை தவிர்க்கவேண்டும். He must realise he is not a philosopher but a musician. பாவம் இளையராஜா !
Ilayaraaja is a human music god. Don't comment his dress and fashion activities. Like You Music only. Don't Comment non sensible words.
Thangavel.M
Ilayaraja's attitude in stage so boring.Some time he used so much boasting words also no public relation aspect.But you find from Gangai Amaran.Basically Ilayaraja a egoist person not only him also singer Lata mangskar,even KamalHasan also.(when his response to heared about Oscar for A.R Rahman).But Ilayaraja is ever lasting musian in Tamil as Bethovan.
Post a Comment