சில நாட்களாக வலையுலகில் அனானிகளின் ஆட்டம் அதிகமாகியிருக்கிறது. அனானி ஆப்சன் என்பது எந்தவித ஈமெயில் ஐடிகளும் இல்லாதவர்கள் தங்கள் கருத்துக்களை கூறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு இலகுவான முறையே இதேபோல் அதர் ஆப்சன் முறையில் உங்கள் பெயருடன் விரும்பினால் உங்கள் வலைமுகவரியோ அல்லது ஏனைய இணைய முகவரியோ கொடுக்கமுடியும்.
கடந்த சில நாட்களாக வலையுலகில் சக்திவேலின் பதிவுகளில் தொடங்கிய அனானிகளின் ஆட்டம் பிரபல பதிவர் நர்சிம்மின் வெளியேற்றம் வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எனக்கு ஒரு சந்தேகம் சில இணையங்களில் இருப்பதுபோல் பின்னூட்டம் இடுபவரது பெயருடன் அவரது ஐபி அட்ரெஸும் சேர்ந்து வருவதுபோல் செய்யமுடியாது. சில காலம் இந்த வசதி தட்ஸ்தமிழில் இருந்தது. இப்போ அங்கேயும் காணவில்லை. பல பதிவர்கள் ஐபி முகவரி இருக்கும் விட்ஜெட்டுகளை வைத்திருந்தாலும் அவர்களால் அந்த நேரத்தில் பின்னூட்டம் இட்டவர் எந்த எந்த ஐபிகளில் இருந்து ஊடுருவியர் எனக் கண்டுபிடிக்கலாமே ஒழிய இவர் தான் பின்னூட்டம் இட்டார் என உறுதியாகச் சொல்லமுடியாது. இதனால் சில நண்பர்கள் மேல்கூட சந்தேகம் ஏற்பட ஏதுவாகும்.
இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க நல்லதீர்ப்பை எந்த நாட்டாமையாவது தரமாட்டார்களா?
Box Off Aug7th
-
இந்த வாரமும் ஏகப்பட்ட தமிழ் படங்கள்.
1 காத்துவாக்குல ஒரு காதல்
2. பாய்
3. ரெட் ப்ளவர்
4. வானரன்
5. மாமரம்
6. நாளை நமதே
7. உழவன் மகன்
8. தங்கக்கோட்டை
9. ரா...
8 hours ago
9 கருத்துக் கூறியவர்கள்:
//பிரபல பதிவர் நர்சிம்மின்//
நான் எப்பய்யா பிரபல பதிவர் னு சொன்னேன்! நீங்களேதான்யா சொல்லிக்கிறீங்க! :(
நர்சிம் பேரில் பின்னூட்டம் இட்டம் அனானிக்கு கண்டனங்கள்
அதையெல்லாம் வெச்சிருந்த ஒரு பயலும் பின்னூட்டம் போட மாட்டேங்குறாங்கய்யா!
கிடைக்குற ஒண்ணு ரெண்டு பின்னூட்டத்துக்கும் ஆப்பு வைக்கிறியே ராசா!
அன்பின் வந்தியத்தேவன்,
அக்கறையான கேள்வி. தீர்வுகளே இல்லாத பிரச்சினை எதுவும் கிடையாது. பதிவர் உண்மை தமிழனின் இடுகையில் (http://truetamilans.blogspot.com/2009/07/blog-post_16.html) இட்ட பதிலை இங்கும் காப்பி / பேஸ்ட் செய்கின்றேன்.
########
அன்பின் உண்மை தமிழன்,
ஆகா, நீங்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறீர்கள். ஆனால் இது தான் உங்களின் பலம் & பலவீனம். பிறகு இந்த ஹேக்கிங் எல்லாம் உங்களின் அருகில் இருப்பவர்களோ பண்ணும் வேலை தான். தமிழ் பதிவர்களை யாரோ ஒரு எஸ்கிமோவே அல்லது மாயன் இனத்தவரோ ஹேக் செய்வதற்கான மேட்டிவ் கொஞ்சமும் கிடையாது. அவர்களுக்கு இது தேவையும் கிடையாது. அது போல தான் இந்த அனானி புண்ணுட்டங்களும். எங்களுக்கு வரும் சைபர் க்ரைம் ரிக்வெஸ்ட்களை பார்த்தாலே இது புரியும். இந்த ஹேக்கிங்களை தவிர்க்க அடுத்தவர் கணணியில் ஓசி இணைய உலாவல், கண்ட கணணிகளில் இணைய உலாவல் மற்றும் நண்பர்கள் தரும் மென்பொருட்களை சரியாக பரிசோதிக்காமல் பயன்படுத்துதல் போன்ற காரணங்கள் தான். இதை தான் நான் கடந்த ஆகஸ்ட் 5, 2007 ல் நடந்த சென்னை வலைப்பதிவர் பட்டறையில் நம்ம கிழக்கு பதிப்பக பத்ரியின் மடிக்கணணியில் விளக்கினேன். அதற்கும் நான் அனானிகளால் பதிவுலகில் தாக்கப்பட்டேன். இவர்கள் அனைவருமே ஒரு கை விரல்களின் எண்ணிக்கை அளவு தான். அதற்கு மேல் கிடையாது.
இந்த அனானி புண்ணுட்டங்களுக்கு நாமும், நம் நடவடிக்கைகளுமே ஒரு மறைமுக காரணம் தான். இதெல்லாம் அவர்களின் ஒரு வகை கவன ஈர்ப்பு தீர்மானம் போல தான். புதிதாக வருபவர்களை நாம் சரியாக ஊக்கப்படுத்துவது கிடையாது. அவர்களின் இடுகைக்கு குறைந்தபட்சம் ஒரு பின்னுட்டம் இடுவது கிடையாது. ஆதலால் கோபமடைந்த அவர்கள் இது போன்ற கீழ்தரமான காரியத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்களை பற்றி அனைவரும் பேசுவதால் அவர்களுக்கு ஒரு மறைமுகமான ஆதரவு கிடைத்த தோற்றம். பிறகு அந்த அசிங்க குட்டையை விட்டு அவர்களுக்கு வெளிவர மனது இடம் தருவதில்லை.அதிலேயே ஊறி ஆனந்தம் அடைதலேயே அவர்கள் விரும்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். இது தான் நாங்கள் கண்டு கொண்ட உண்மை.
மறுபடியும் ஒரு வலைப்பதிவர் பட்டறையை நடத்தினால் அது முற்றிலும் புதியவர்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும். அதில் நிறைய தொழில்நுட்ப விஷயங்கள் வருபவர்களுக்கு இலவசமாக கற்றுதரப்பட வேண்டும். மிக முக்கியமாக கற்றுதருபவரிடம் நேரடியாக கேள்விகளை கேட்டு, அதற்கு உடனே பதில் பெறும் இருவழி உரையாடல் முறை இருக்க வேண்டும். அப்போது தான் புதியவர்களால் இது போன்ற பிரச்சினைகளை எதிர்காலத்தில் திறமையாக கையாள இயலும். இல்லையொன்றால் " நம்ம சக்திவேலை" ப்போல் பலத்த அடிபட்டு தான் இவற்றை கற்கவேண்டி வரும். பட்டறையை நடத்த கிழக்கு மொட்டை மாடி சரியான இடம் தான். அங்கு இணைய வசதி கூட கிடைக்கும். தடங்கலற்ற இணைய வசதி மிக முக்கியம். 2007 ல் பட்ட அவதியை நான் இன்னும் மறக்க வில்லை. ஆகவே வருங்கால பயிற்சி பட்டறையை ஒரு முழுமையானதாக நடத்த எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு.
இறுதியாக இந்த மேற்கோளுடன் முடிக்கின்றேன்.
"நீங்கள் முன்னர் ஒரு விஷயத்தில் ஏமாற்றப்பட்டிருந்தால் , உண்மையிலேயே உங்களுக்கு அந்த விஷயத்தில் முழுமையான அறிவு/ஞானம் இல்லை என அர்த்தம்."
இஸ்மாயிலானந்தா !
ஆகவே கற்போம், கற்ப்பிப்போம். அதுவே மனித குலத்திற்கு முக்கிய தேவையான ஒன்று. நன்றி, வணக்கம்.
with care & love,
Muhammad Ismail .H, PHD,
gnuismail.blogspot.com
வந்தியத்தேவன் பெயரிக் புன்னூட்டம் போட்ட வந்தியத்தேவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
(எலிக்குட்டி சோதனை உண்மையான வந்தியத்தேவன்தான் என்பதை உறுதி செய்கிறது)
//ஐபி அட்ரஸ் பிடிக்கிற பதிவர் said...
அதையெல்லாம் வெச்சிருந்த ஒரு பயலும் பின்னூட்டம் போட மாட்டேங்குறாங்கய்யா!
கிடைக்குற ஒண்ணு ரெண்டு பின்னூட்டத்துக்கும் ஆப்பு வைக்கிறியே ராசா!//
நான் என்னங்க பண்ணமுடியும் அனானி நண்பர்களின் சில கீழ்த்தரமான பின்னூட்டங்களை தடுக்கவே இந்த நடவடிக்கை. மற்றும்படி நீங்கள் அனானியாகவோ அதர் ஆப்சனிலோ நல்ல பின்னூட்டங்களைத் தாராளமாக இடுங்கள் யாரும் கோவிக்கமாட்டார்கள்.
// Muhammad Ismail .H, PHD, said...
அன்பின் வந்தியத்தேவன்,
அக்கறையான கேள்வி. தீர்வுகளே இல்லாத பிரச்சினை எதுவும் கிடையாது. பதிவர் உண்மை தமிழனின் இடுகையில் (http://truetamilans.blogspot.com/2009/07/blog-post_16.html) இட்ட பதிலை இங்கும் காப்பி பேஸ்ட் செய்கின்றேன். //
திரு. முகமட் இஸ்மாயில் அவர்களுக்கு உண்மைத்தமிழனின் வலையில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன் அதற்க்கு பதிலாக பின்னூட்டம் இடுவதற்க்குப் பதிலாகவே இந்தப் பதிவு. அடுத்த பதிவர் சந்திப்பில் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றேன்.
//அதே அனானி said...
(எலிக்குட்டி சோதனை உண்மையான வந்தியத்தேவன்தான் என்பதை உறுதி செய்கிறது)//
அதே அனானிக்கு நீங்கள் எலிக்குட்டிச் சோதனை இல்லையென்றால் பூனைக்குட்டிச் சோதனை செய்தாலும் நான் நானகவே இருப்பேன். கவலைப்படவேண்டாம்.
Please visit this link
http://blogs.siliconindia.com/yourfreesystemadmin/how_to_find_a_ip_address_to_a_location-bid-8NtcR1HC43166090.html
Raj
Post a Comment