அரசியல்
அண்மையில் பொங்கலோ பொங்கல் என்ற திரைப்படத்தின் சில காட்சிகள் பார்த்தேன், உபயம் கேடிவி. நடிகர் தியாகு ஒரு கபட அரசியல்வாதியாக வருகின்றார் அவரை அஞ்சாநெஞ்சன் என அழைக்கின்றார்கள். இந்தப் படம் பல காலத்திற்க்கு முன்னர் வந்தது என்பதாலும் தியாகு திமுக அபிமானி என்பதாலும் நிஜமான அஞ்சாநெஞ்சனைக் கிண்டலடிக்க இந்தப் பெயரை பயன்படுத்தியிருக்கமாட்டார்கள் என்பது என் எண்ணம். ஆனாலும் ஆதித்யா சானலில் அடிக்கடி தியாகு அடிவாங்கும் அந்தக் காட்சி ஒளிபரப்புகின்றார்கள். அதன் உள்குத்துப் புரியவில்லை.
சின்னத்திரை
கடந்த வார நீயா நானாவில் நாடோடிகள் இயக்குனர் சமுத்திரக்கனியும் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் கதாநாயகன் ராமகிருஷ்ணனும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். நட்பு பற்றி இவர்கள் இருவரும் விவாதித்தது கலகலப்பாகவும் காத்திரமாகவும் இருந்தது. வாடா போடா என இவர்கள் இருவரும் கதைத்தைப்பார்க்கும் போது நல்ல நண்பர்கள் என்பது புரிகின்றது. நீண்ட நாட்களின் பின்னர் நல்லதொரு நீயா நானா?.
சின்னதொரு சந்தேகம் : கோலங்கள் சீரியல் எப்போ நிறைவடைகின்றது என்பது யாருக்காவது தெரியுமா? இல்லையென்றால் தொல்காப்பியனுக்கு ஒரு விமர்சனம் அனுப்ப அவரின் மெயில் ஐடி தேவைப்படுகின்றது. தெரிந்தவர்கள் பின்னூட்டமிடவும்.
ஹாட் பெண்கள்
கடந்த சனிக்கிழமை கொழும்பின் பிரபல ஷொப்பிங் மாலான மஜெஸ்டிக் சிட்டிக்கு நண்பர்களுடன் சென்றேன். வழமையாகவே இளம்பெண்களின் ஆதிக்கம் அங்கே அதிகம். அன்றைக்கு மிகமிக அதிகம் காரணம் ட்ரான்ஸ்போமர் 2 படம் அங்கே திரையிட்டிருக்கின்றார்கள். பெரும்பாலான இளைஞிகள் மைக்ரோ அல்லது மினி ஸ்கேர்டுகளுடன் க்யூவில் காணப்பட்டார்கள். பலர் தங்கள் ஆண் நண்பருடன் தான் வந்திருந்தார்கள். சிலர் மட்டும் குறூப்பாக ஆண்பெண் அன அலைந்துதிரிந்தார்கள். இன்றைக்கு ஜாக்கி அண்ணாச்சியின் இந்தப் பதிவு படிக்கும்போது ஏதோ அவர்கள் ஞாபகமும் வந்தது. இதில் கொடுமை என்னவென்றால் சில பெண்களின் தாயார்கள் கூட மைக்ரோ அல்லது மினி உடைகளில் மகளுக்கு போட்டியாக காட்சியளித்தார்கள்.
கணணி
சில நாட்களாக என்னுடைய நண்பர் ஒருவரின் கணணியில் இன்டெர்னெட் எக்ஸ்புளோரரிலோ அல்லது நெருப்பு நரியிலோ பக்கங்கள் ஓப்பன் ஆகும் போது சேர்டிபிக்கேட் கலாவதியாகவிட்டது என்ற அலேர்ட் மெசேஜ் வருகின்றது. முகவரி டைப் செய்யும் இடம் சிவப்புக்கலராக மாறுகின்றது. இதனை எப்படி நிவர்த்தி செய்யலாம். கூகுள் ஆண்டவரிடம் கேட்டாள். செட்டிங்கிள் ஏதோ மாற்றம் செய்யச் சொன்னார். ஆனால் அதனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. என்ன பிரச்சனை? எப்படி நிவர்த்தி செய்வது
பலரின் தற்போதைய கனவுக்கன்னி.
சூப் பிடித்திருந்தால் சொல்லுங்கள் இடையிடையே பரிமாறுகிறேன்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
13 கருத்துக் கூறியவர்கள்:
சூப் ஓகே வெஜிடபிள் சூப்பாக இருக்கின்றது. சிக்கன் சூப் கிடைக்குமா?
வந்தி,
எதுக்கு இப்ப எம்.சிய ஞாபகப்படுத்துறீங்க... நாங்க எல்லாம் பசங்களா போய் படம் பார்ப்போம்.. அவனவன் ஜோடியா வருவான்.. இப்ப நினைச்சாலும் வயிறெரியும்... ஹூம் ஒரு ஐந்து மாதம் எம்.சி.க்கு பக்கத்திலேயே இருந்ததால கிட்டத்தட்ட வயிறெரிஞ்சு அல்சரே வந்திட்டுது
நீயா நானா நானும் பார்த்தேன். சுவார்ஸமாக இருந்தது.
கீழே உள்ள சுனைனா படமும் அந்த பல் கடிப்பும் ஏதோ சொல்ல வருது தேவன் அந்த பொண்ணு...
நல்ல பதிவு
கோலங்கள் ஆகஸ்ட்டில் முடியும் என்று அதன் கதாசிரியர் பாஸ்கர் சக்தியே கூறியதாக தகவல் எந்த ஆகஸ்ட் என்பது விளங்கவில்லை...
// செந்தூரன் said...
சூப் ஓகே வெஜிடபிள் சூப்பாக இருக்கின்றது. சிக்கன் சூப் கிடைக்குமா?//
மன்னிக்கவும் செந்தூரன் நான் வெஜிடேரியன் சிக்கன் சூப் அனுபவம் இல்லை.
// Keith Kumarasamy said...
வந்தி,
எதுக்கு இப்ப எம்.சிய ஞாபகப்படுத்துறீங்க... நாங்க எல்லாம் பசங்களா போய் படம் பார்ப்போம்.. அவனவன் ஜோடியா வருவான்.. இப்ப நினைச்சாலும் வயிறெரியும்... ஹூம் ஒரு ஐந்து மாதம் எம்.சி.க்கு பக்கத்திலேயே இருந்ததால கிட்டத்தட்ட வயிறெரிஞ்சு அல்சரே வந்திட்டுது//
கீத் உங்களுக்கு மட்டுமல்ல எம்.சியை மிஸ் பண்ணுகின்ற அனைவருக்கும் வயிற்றெரிச்சல் நிச்சயம் வரும். இன்னொரு கதை இப்போ எம்சியில் செகண்ட் மற்றும் தேர்ட் புளோர்களில் போட்டிருந்த சின்ன சின்ன புட்டிகளை அகற்றிவிட்டார்கள் காரணம் அதில் குட்டிகள் இருக்கின்றார்களாம். ஹிஹிஹி
//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
நீயா நானா நானும் பார்த்தேன். சுவார்ஸமாக இருந்தது.//
நன்றிகள் டொக்டர் நீயா நானா ஏனைய டோல்க் ஷோக்களை விட சிறப்பாக இருக்கிறது. அரட்டை அரங்கம் விசுவின் மக்கள் அரங்கம் எல்லாம் சிலவேளைகளில் ஓவர் செண்டிமென்டாகி வெறுப்பைத் தருகின்றது.
// jackiesekar said...
கீழே உள்ள சுனைனா படமும் அந்த பல் கடிப்பும் ஏதோ சொல்ல வருது தேவன் அந்த பொண்ணு...நல்ல பதிவு//
வருகைக்கு நன்றிகள் ஜாக்கி அண்ணாச்சி. உங்களுக்குத் தான் நடிகைகளுடன் பழகிய அனுபவம் அதிகம் அவர் என்ன சொல்லவாறர் என்பதை ஊகித்துச் சொல்லுங்கள்.
//jackiesekar said...
கோலங்கள் ஆகஸ்ட்டில் முடியும் என்று அதன் கதாசிரியர் பாஸ்கர் சக்தியே கூறியதாக தகவல் எந்த ஆகஸ்ட் என்பது விளங்கவில்லை...//
இப்போ ஆகஸ்டா முன்னர் மேயில் முடியும் என்றார்கள் அப்போதுகூட எந்த மே எனச் சொல்லவில்லை. உலக சாதனை படைக்கும் மெஹா சீரியல் கோலங்கள் தான்.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
நன்றி வந்தியத்தேவன். ஏனையவற்றை நான் அதிகம் பாரத்ததில்லை
Tholkappiyan@இழுவை.com
Post a Comment