இன்றைய நாளிதழ் ஒன்றில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தமிழ் சினிமாவைப் புறக்கணிக்கிறார் என நடிகர் சங்கப் பொதுச் செயளாளர் ராதாரவி சீறிப்பாய்ந்திருக்கிறார்.
ரகுமான் தமிழ்த் திரையுலகைப் புறக்கணிக்கிறார் என்றும் தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களை இழுத்தடிக்கிறார் என்றும் ராதாரவி குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் அவர் சினிமாவுக்கு அறிமுகமானது கவிதாலயா மூலமே தவிர ஸ்லம் டோக் மில்லியனர் மூலம் அல்ல எனவும் விசனித்துள்ளார்.
அதுமட்டுமல்ல ரகுமானிற்க்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்த திகதிகேட்டபோது தமக்கு திகதி தராமல் வேறு ஒரு மாநிலத்தில் பாராட்டு நடத்த சம்மதித்திருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவை ஆஸ்கார் நாயகன் புறக்கணித்திருக்கிறார். கடந்த முறை சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வாங்கிய ரகுமான் இந்தமுறை வாழ்நாள் சாதனையாளருக்கான சிவாஜி விருதை வாங்கவரவில்லை.
எந்திரன் ராவணன் தவிர வேறை தமிழ்ப் படங்களில் ரகுமான் இதுவரை ஒப்பந்தமாகவில்லை. ஹிந்தித் திரைப்படங்களுக்கு அதிகம் இசையமைக்கும் ரகுமான் தமிழ்த் திரையுலகை புறக்கணிப்பது கவலையளிக்கிறது.
இதேவேளை பிரமாண்ட படங்களுக்கும் பிரமாண்ட இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் ரகுமான இசையமைக்கிறார் என்ற குற்றச்சாட்டும் சில காலங்களாக திரையுலகில் அடிபடுகிறது,
இசைப்புயல் மீண்டும் சொந்த மண்ணுக்குத் திரும்பவேண்டும் என்பதுதான் இசையார்வளர்களின் விருப்பம்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
20 hours ago
8 கருத்துக் கூறியவர்கள்:
நான் இசைப்புயல் இப்படி புறக்கணிப்பதை வரவேற்கிறேன்... ஷங்கர், மணிரத்னம், ராஜீவ்மேனன் தவிர மற்றவர்கள் தங்கள் மொக்கைப் படங்களை ஒப்பேற்றவே ரஹ்மானை நாடுகிறார்கள் (உதா: சக்கரகட்டி)... இளையராஜா என்ற மகாகலைஞனது திறமையை விற்று பல இயக்குனர்கள் வாழ்ந்தது போல் ரஹ்மானின் திறமையும் வீணாய்ப் போய்விடக்கூடாது என்பது என் எண்ணம்.
உங்கள் தளத்தின் 29வது வழிப்போக்கன்...:)
Avaru "puyal" appdinnu thaane sollreenga? adhaan karayai thaaandi poittar!! vidungappa
// கீத் குமாரசாமி said...
நான் இசைப்புயல் இப்படி புறக்கணிப்பதை வரவேற்கிறேன்... ஷங்கர், மணிரத்னம், ராஜீவ்மேனன் தவிர மற்றவர்கள் தங்கள் மொக்கைப் படங்களை ஒப்பேற்றவே ரஹ்மானை நாடுகிறார்கள் (உதா: சக்கரகட்டி)... இளையராஜா என்ற மகாகலைஞனது திறமையை விற்று பல இயக்குனர்கள் வாழ்ந்தது போல் ரஹ்மானின் திறமையும் வீணாய்ப் போய்விடக்கூடாது என்பது என் எண்ணம்.//
கீத் வித்தியாசமான கருத்து. என் சுவாசக் காற்றே, ஸ்டார்,சரணின் ஒரு படம் எனப் பல படங்கள் ரகுமான் இசையால் ஏதோ ஒரளவு ஓடியது. நிச்சயம் சில நல்ல இயக்குனர்களுடன் ரகுமான் தமிழ்த் திரையுலகிற்குத் திரும்ப வேண்டும்.
//வேந்தன் said...
உங்கள் தளத்தின் 29வது வழிப்போக்கன்...:)//
நன்றிகள் ஐயா ஏதோ எனக்கும் இத்தனை வழிப்போக்கன்கள் இருப்பதை இட்டு மகிழ்ச்சி
// Azhagan said...
Avaru "puyal" appdinnu thaane sollreenga? adhaan karayai thaaandi poittar!! vidungஅப்ப//
அப்போ புயல் தமிழ்நாட்டைக் கடந்துவிட்டது என்கிறீர்கள்.
ஏ.ஆர்.இரகுமான் தமிழ்சினிமாவை புறக்கணிக்கிறாரா? இல்லையா? என்பதை தனியாக விவாதிக்கலாம்.
எம்.ஜி.ஆர், சிவாஜி,எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா உட்பட பல்வேறு மேதைகள்தான் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் கல்லாப்பெட்டிகளால் புறக்கணிக்கப்பட்டார்கள்.
ஏ.ஆர்.இரகுமான் தமிழ்சினிமாவை புறக்கணிக்கிறார் என்பதெல்லாம் வெற்று பிதற்றல்.
பின்னூட்டத்தில் கீத் குமாரசாமி கூறியுள்ள ஒரு கருத்து மிக முக்கியமானது.
சிவாஜி, எம்.எஸ்.வி, இளையராஜா, எம்.ஆர்.ராதா போன்ற மேதைகளை பல குப்பைப் படங்களால் தமிழ் சினிமா வீணடித்திருக்கிறது. ஏ.ஆர்.இரகுமான் இன்னும் அது போன்ற குப்பைகளில் சிக்கவில்லை. அவருடைய தேடல் இந்திய எல்லைகளைத் தாண்டியிருக்கிறது. இதில் தவறு ஏதுமில்லை.
நிச்சயமாக ரஹ்மானின் திறமையை நம்மவர்கள் பயன்படுத்த தவறி விட்டனர், ஹிந்தியில் அவரை மிக சிறப்பாக பயன் படுத்துகிறார்கள், மிக நல்ல உதாரணம் சமீபத்தில் வெளி வந்த டெல்லி - 6. தமிழில் எவேளவு கேவலமாக அவர் பயன் பட்டார் என்பதுக்கு நம்ம எல்லாருக்கும் சக்கர கட்டி, மிஸ்டர் ரோமியோ, தாஜ்மகால் என பல உதரணம் இருப்பது தெரியும், இந்த படங்களில் இருந்து அவரது இசையை தூக்கி விட்டு பாருங்கள், எதுவுமே மிஞ்சாது.. அவரை மிக சிறப்பாக இன்னும் பயன் படுத்தும் இயக்குனர் மணி ரத்னம் தான். ஷங்கர் கூட ஒரு மசாலா இசையை மட்டுமே அவரிடம் இருந்து பெற்று கொள்வது கவலை,
Post a Comment