2004 டிசம்பர் 26 ந்திகதியை யார் மறந்தாலும் ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் மறக்கமாட்டார்கள். ஆழிப்பேரலை என்ற சுனாமி இலங்கை, தாய்லாந்து, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி பல லட்சம் உயிர்களை காவு கொண்ட கறுத்த நாள்.
அந்த கோரத்தின் அழிவுகள் மறையும் முன்னரே இன்னொரு சுனாமி எதிர்வரும் 22ந்திகதி ஏற்படும் என சிலர் எதிர்வுகூறுகின்றார்கள். சுனாமி வருகிறதோ இல்லையோ மக்கள் கொஞ்சம் அவதானமாக இருந்தால் அழிவுகளில் இருந்து காத்துக்கொள்ளமுடியும்.
எதிர்வரும் 22ந்திகதி முழுச் சூரியகிரகணம் ஏற்படுகிறது. இந்தகிரகணத்தின் தாக்கம் 6 மாதத்தில் இருந்து மூன்று ஆண்டுகள் வரை இருக்கும் என்றும் இதனால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படலாம் என ஜோதிட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதனை நம்புங்கள் நாராயணன்(இவரை நம்பலாமா?) மற்றும் நாசா ஆய்வு மையம் உறுதிப்படுத்தியதாகவும் செய்திகள் வெளிவருகின்றது. அத்துடன் ஈமெயில்கள் மூலமாக சிலர் இதனை அறிவித்துக்கொண்டும் இருக்கின்றார்கள்.
ஆகவே வருமுன் காப்போம் என்ற வாசகத்திற்க்கிணங்க சுனாமி அழிவில் இருந்து எம்மைக் காப்பது நலம் தரும்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
21 hours ago
2 கருத்துக் கூறியவர்கள்:
நேற்று இரவு சுனாமி எச்சரிக்கை ஆஸியின் தென் கிழக்குப்பகுதிகளில் இருந்தது. விடிகாலையே எச்சரிக்கை வாபஸ் வாங்கப்பட்டது. நியூஸிக்கு 160 கி.மீ கீழ் 7.3 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் இருந்ததால் சுனாமி எச்சரிக்கை இருந்தது. அதுவும் இப்போது வாபஸ் வாங்கப்பட்டுவிட்டது.
உங்கள் தகவல்களுக்கு நன்றிகள் சின்ன அம்மணி
Post a Comment