இசைஞானி இளையராஜாவின் ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றும் எம் மனதில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது. அதிலும் ராஜா 80களில் இசையமைத்த ஒவ்வொரு பாடல்களும் ராஜாவின் முத்துக்கள் என்றால் மிகையில்லை.
என் உயிருடன் கலந்துவிட்ட ராஜாவின் பாடல்களை ஒரு பதிவில் எழுதிவிடமுடியாது. ஆகவே சில நடிகர்களுக்கு ராஜா இசையமைத்த அந்த முத்துக்களில் இருந்து முதல் பத்துபாடல்களைப் பற்றிய என் கருத்துகளையும் யூடூயூப் உதவியுடன் பாடல்களின் காணொளியையும் தரவிருக்கின்றேன்.
முதலில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் படங்களுக்கு ராஜா இசையமைத்த படங்களில் இருந்து 10 பாடல்கள். இந்தப் பத்துப்பாடல்களைவிட சிறந்த எத்தனையோ 100 பாடல்கள் இருந்தாலும் இவை என் மனதுடன் ஐக்கியமான பாடல்கள். சிலவேளைகளில் பாடகர் பாடகி பற்றிய விபரங்கள் தவறாக அமைந்திருந்தால் பின்னூட்டமூடாக அதனைத் திருத்துங்கள். இனி ராஜா ரஜனி கூட்டணியில் வெளிவந்த சில பாடல்களை ரசிப்போம்.
1. ஏ பாடல் ஒன்று
ப்ரியா படத்தில் ரஜனி ஸ்ரீதேவி ஜோடியாக ஆடும் பாடல். பத்மஸ்ரீ கே.ஜே.ஜேசுதாஸின் காந்தக்குரலும் உமா ரமணனின் தேன்குரலும் இணைந்த கலவையான பாடல். முதல் முறை ஸ்டிரீயோ மூலம் ஒளிப்பதிவான பாடல். எத்தனை தடவையும் கேட்கலாம்.
ரஜனியின் இளமையும் ராஜா உடுப்பும் அவரது கம்பீரத்தைக் கூட்டுகின்ற பாடல். ஸ்ரீதேவி பற்றிச் சொல்லத்தேவையில்லை. இளவரசியாகவே பாடலில் தெரிகின்றார்.
இடை இசையில் வரும் வீணையில் ராஜா கம்பீரமாக கொலுவீற்றிருக்கிறார்.
2. ஆகாய கங்கை பூந்தேன் மலர்
தினமும் இரவில் யூடூயுப்பில் கேட்கும் இன்னொரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல். மலேசியா வாசுதேவனின் கணீர்க்குரலும் எஸ்.ஜானகியின் இளமைக்குரலும் கொஞ்சிவிளையாடும் பாடல். பாடல் ஆரம்பமாகும் போது வரும் ஹம்மிங்கே கேட்பவர்களை மயக்கும். அதன் பின்னர் முதல் சரணத்தில் வரும் ஜானகியின் ஹேஹே ஹம்மிங்கும் அடுத்த சரணத்தில் வரும் மலேசியா வாசுதேவன் அவர்களின் ஹேஹே ஹம்மிங்கும் இந்தப்பாடலின் உயிர் நாடி என்றால் மிகை இல்லை.
தர்மயுத்தம் படத்தில் மீண்டும் ரஜனி ஸ்ரீதேவி கூட்டணி. இந்தப்பாடலில் ரஜனியின் பெரிய கண்ணாடியும் அதனை அவர் சுழட்டுவதும் அவரது ஸ்டைலை இன்னமும் கூட்டுகின்றது. ஸ்ரீதேவி இந்தப்பாடல் படப்பிடிப்பின்போது காலில் காயம் காரணமாக நடனமாடாமல் தரையில் இருந்தபடியும் நடந்தபடியும் நடித்திருப்பார்.
ஒருமுறை ஒரு பேட்டியில் மலேசியா வாசுதேவன் அவர்களே தனக்கு மிகவும் விருப்பமான பாடலாக இந்தப்பாடலைத்தான் குறிப்பிட்டார். அவரின் குரல் ரஜனிக்கு மிகவும் பொருத்தமாகவும் இருந்தது.
3. ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
மீண்டும் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்,ஜானகி கூட்டணியில் அருமையான மெலடி. நெற்றிக்கண் படத்தில் ஒரு ரஜனி சபலிஸ்டாக இருக்க மகன் ரஜனி ராமனாக இருப்பார். மகன் ரஜனிக்கும் அவரது காதலியாக நடித்த மேனகா என்ற நடிகைக்கும் இடையேயான டூயட். இந்தப்பாடலில் இருவரும் ஒருவரையொருவர் தொடாமல் நடித்திருப்பார்கள்.
இராமாயணம் பாராயணம் காதல் மங்களம் போல் இந்தபபாடலும் தெய்வீகப்பாடல் தான்.
4. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணும்
தங்கமகன்களான ரஜனி, ராஜா பத்மஸ்ரீ எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி கூட்டணியில் உருவான சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் இதுவாகும்.
எஸ்.பி.பியின் தேன்குரலும் எஸ்.ஜானகியின் இளமையான் வசீகரக்குரலும் இந்தபாடலின் வெற்றிக்கு முக்கியகாரணம்.
ரஜனியின் ஸ்டைலும் பூர்ணிமா பாக்யராஜின் விதவிதமான பாரம்பரிய நடன உடைகளும் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க மட்டுமல்ல் பார்க்கவும் வைக்கும்.
பகலும் உறங்கிடும் ராத்திரியில் கேட்பதற்க்கு உகந்தபாடல்களில் இந்தப்பாடலும் ஒன்றாகும்.
5. சுந்தரி கண்ணால் ஒரு சேதி
இளையராஜா மணிரத்னம் கூட்டணி கொடுநாட்டிய காலத்தில் வெளிவந்த தளபதி படப்பாடல். இளையராஜாவின் இசை மகுடத்தில் முத்தான ஒரு பாடல். எஸ்.பி.பியின் காந்தக்குரலும் எஸ்.ஜானகியின் வசீகரக்குரலும் வாலியின் வாலிப வரிகளும் பாடலை தூக்கிப்பிடிக்கின்றன.
இடைஇசையில் வரும் அணிநடை இசையும் யுத்தக்காட்சிகளும் போர் நடுவிலும் தமிழர்கள் காதல் செய்தார்கள் என்பதைக் காட்டுகின்றது. இந்தப்பாடலைப் பற்றிப்பேசுவதைவிட பாடலைக் கேட்பதே சிறந்தது.
முதல் ஐந்துபாடல்கள் கேட்டீர்களா? நாளைவரை பொறுத்திருங்கள் அடுத்த ஐந்துபாடல்களுக்கும். எதேச்சையாக இந்த 5 பாடல்களும் டூயட்டாக இருக்கிறது.
இந்தப் பதிவை வீடியோஸ்பதி, ரேடியோஸ்பதி மூலம் பல பாடல்களைத் தந்து எம்மை மகிழ்வித்த அண்ணன் கானாப் பிரபாவிற்க்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
9 கருத்துக் கூறியவர்கள்:
இலங்கை பதிவர்களுக்கு தனிக்களம் அமைக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டு வரும் “நிலாமுற்றம்” சிறப்பு திரட்டியில் உங்கள் பதிவுகளும் இடம்பெறுகின்றன.
தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்
“நிலாமுற்றம்”
http://www.nilamuttram.com/
ப்ரியா படத்தில் ரஜனி ஸ்ரீதேவி ஜோடியாக ஆடும் பாடல். பத்மஸ்ரீ கே.ஜே.ஜேசுதாஸின் காந்தக்குரலும் உமா ரமணனின் தேன்குரலும///.... இந்த பாடல் பாடியது S.ஜானகி சரி பார்க்கவும்
// shabi said...
ப்ரியா படத்தில் ரஜனி ஸ்ரீதேவி ஜோடியாக ஆடும் பாடல். பத்மஸ்ரீ கே.ஜே.ஜேசுதாஸின் காந்தக்குரலும் உமா ரமணனின் தேன்குரலும///.... இந்த பாடல் பாடியது S.ஜானகி சரி பார்க்கவும்//
இல்லைங்க ஷபி உமாரமணன் தான் பாடினார். பின்னர் இளையராஜாவின் ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்தப்பாடலை விஜய் ஜேசுதாசுடன் இணைந்துபாடினார். உமாரமணன் ஜென்சி போன்றவர்களின் சில பாடல்கள் ஜானகி அம்மாவின் குரல் போல் தோன்றும்.
நல்ல பதிவு.
ஏ பாடல் ஒன்று,ராத்திரியில் பூத்திருக்கும் போன்ற பாடல்கள் நினைவிற்கு வந்துவிட்டால் உடனே கேட்டுவிட மனம் துள்ளும்.
நல்லா எழுதி இருக்கீங்க.
( ‘ஒரிஜினல் நர்சிம்’னு போடுற நிலமைய கொண்டுவந்துட்டாங்க...)
"ப்ரியா படத்தில் ரஜனி ஸ்ரீதேவி ஜோடியாக ஆடும் பாடல். பத்மஸ்ரீ கே.ஜே.ஜேசுதாஸின் காந்தக்குரலும் உமா ரமணனின் தேன்குரலும///.... இந்த பாடல் பாடியது S.ஜானகி சரி பார்க்கவும்//"
"இல்லைங்க ஷபி உமாரமணன் தான் பாடினார். பின்னர் இளையராஜாவின் ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்தப்பாடலை விஜய் ஜேசுதாசுடன் இணைந்துபாடினார். உமாரமணன் ஜென்சி போன்றவர்களின் சில பாடல்கள் ஜானகி அம்மாவின் குரல் போல் தோன்றும்."
இல்லை. Mr.ஷபி கூறியதுதான் சரி. தொலைக்காட்சியில் வேண்டுமானால் உமா ரமணன் அந்தப்பாடலை பாடியிருக்கலாம். ஆனால் ரெகார்டிங்கில் பாடியது S.ஜானகிதான். வேண்டுமானால் நான் உங்களுக்கு உமா ரமணன் பாடிய பாடல்களின் பட்டியல் தருகிறேன்.
//என் உயிருடன் கலந்துவிட்ட ராஜாவின் பாடல்களை ஒரு பதிவில் எழுதிவிடமுடியாது//
correeeeettu!! :)
Kadhalin deepam onru, yetrinaale en nenjil, comes to mind as my #1 :)
http://www.youtube.com/watch?v=8x9LjtO6eqQ
childhood favorite was 'raman aandaalum, ravanan aandaalum'.
//நர்சிம் said...
ஏ பாடல் ஒன்று,ராத்திரியில் பூத்திருக்கும் போன்ற பாடல்கள் நினைவிற்கு வந்துவிட்டால் உடனே கேட்டுவிட மனம் துள்ளும்.
( ‘ஒரிஜினல் நர்சிம்’னு போடுற நிலமைய கொண்டுவந்துட்டாங்க...)//
உண்மைதான் பல பாடல்கள் இன்னமும் மனதில் நிற்பதற்க்கு காரணம் இசைஞானியின் இசையும் பாடல்வரிகளும் தான்.
முதல்வன் அர்ஜீன் பாணியில் உங்களையும் இந்த நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.
//சபேசன் said...
இல்லை. Mr.ஷபி கூறியதுதான் சரி. தொலைக்காட்சியில் வேண்டுமானால் உமா ரமணன் அந்தப்பாடலை பாடியிருக்கலாம். ஆனால் ரெகார்டிங்கில் பாடியது S.ஜானகிதான். வேண்டுமானால் நான் உங்களுக்கு உமா ரமணன் பாடிய பாடல்களின் பட்டியல் தருகிறேன்.//
தகவலுக்கு நன்றிகள் திரு.சபேசன் மற்றும் திரு.ஷபி சிலவேளைகளில் சில பாடல்கள் எழுதியவரின் பெயரே மாற்றிச் சொல்வார்கள். உமா ரமணனின் பாடல்கள் பட்டியலை தயை கூர்ந்து தந்துதவுங்கள்.
//SurveySan said...
correeeeettu!! :)
Kadhalin deepam onru, yetrinaale en nenjil, comes to mind as my #1 :)
http://www.youtube.com/watch?v=8x9LjtO6eqQ
childhood favorite was 'raman aandaalum, ravanan aandaalஉம்'.//
வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றிகள் சர்வேசன்
Post a Comment