ஐசிசியால் புறக்கணிக்கப்பட்ட ஆசிய ஆபிரிக்க‌ர்கள்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) 1909ஆம் ஆண்டு ஜூன் 15ந்திகதி ஆரம்பிக்கப்பட்டது. இப்போது அதன் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்படுகின்றது. இதில் முன்னாள் வீரர்களைக் கெளரவிக்கும் விதமாக "ஹோல் ஒவ் பாம்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 55 வீரர்களை ஐசிசி தெரிவுசெய்துள்ளது. இதில் வெறும் ஆறு பேரே ஆசியாவில் இருந்து தெரிவாகியுள்ளார்கள்.

இந்தியாவின் சார்பில் கபில்தேவ், கவாஸ்கர் மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோரும் பாகிஸ்தானில் இருந்து இம்ரான் கான், ஜாவேட் மியாண்டாட், ஹனீப் முகமது ஆகியோரும் தெரிவுசெய்யப்படிருக்கிறார்கள். இலங்கை அணி சார்பாக யாருமே தெரிவுசெய்யப்படவில்லை.



1995ஆம் ஆண்டிற்க்கு முன்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை மட்டுமே கணக்கில் எடுத்ததாக சொல்லும் ஐசிசி இங்கிலாந்திலிருந்து அதிக பட்சமாக 22 வீரர்களையும் ஆவுஸ்திரேலியாவில் இருந்து 13 வீரர்களையும் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து 11 வீரர்களையும் தெரிவு செய்துள்ளது.

தென்னாபிரிக்காவிலிருந்து ஷோன் போலக்கின் பெரிய தந்தையார் கீரீம் போலக்கும் , பெரி ரிச்சார்ட்ஸும் மாத்திரம் தெரிவாகியுள்ளனர். நியூசிலாந்திலிருந்து சேர் ரிச்சர்ட் ஹாட்லி மாத்திரம் தெரிவாகியுள்ளார்.


கீரீம் போலக்


தென்னாபிரிக்கா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சிம்பாவே, நியூசிலாந்து போன்ற நாடுகளின் பல தலைசிறந்த வீரர்களைத் தெரிவு செய்யாமல் ஐசிசி பாரபட்சம் காட்டியிருக்கிறது. இங்கிலாந்து வீரர்களில் சிலர் ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடிய வீரர்கள் ஆவார்கள்.

இலங்கையின் துலிப் மெண்டிஸ், மாலிந்த வர்ணபுர, ரோய் டயஸ் போன்ற வீரர்கள் பல சாதனை செய்தவர்கள். இந்தியாவைப் பொறுத்தவரை லாலா அமர்நாத், குண்டப்பா விஸ்வநாத்,வெங்சகார் விஜய் ஹசாரே போன்றவர்களும் தெரிவாகவில்லை.

அதேபோல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்க்கு முன்னர் இங்கிலாந்து அணியில் விளையாடிய ராஞ்சி கோப்பை உருவாக காரணமாக இருந்த குமார் ஸ்ரீ ராஞ்சி அவர்களின் பெயரயும் ஐசிசி பரீசிலிக்கவில்லை.

இனி ஒவ்வொரு ஆண்டும் ஒரு வீரர் இப்பட்டியலில் இடம் பெறவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பலரின் பெயர்களை பரிசீலிக்காமல் ஐசிசி எந்தப் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

9 கருத்துக் கூறியவர்கள்:

shabi சொல்வது:

அவனவன் கஷ்டம் அவனுக்கு யார் கிட்ட பந்தயம் கட்டுனாங்களோ

shabi சொல்வது:

இன்னக்கி நான் முதலா......................

shabi சொல்வது:

இன்னக்கி நான் முதலா......................

Unknown சொல்வது:

வந்தி... இது ஹோல் ஒஃப் ஃபேமில் முதல் சேர்க்கை. (Induction) விரைவிலேயே மற்றச் சேர்க்கைகளை ஐ.சி.சி. அறிவிக்கும். ஆசியக் கண்ட வீரர்களை ஐ.சி.சி. புறக்கணிக்க முடியாது. காரணம் ஐ.சி.சி க்கு பணம் காய்க்கும் மரங்கள் இவர்கள்தான்

கிடுகுவேலி சொல்வது:

ஐசிசி விருதுகளை நீங்கள் புறக்கணிக்கலாம். அது அப்படித்தான். அதை விட்டுத்தள்ளலாம். வேண்டும் என்றால் சுட்டிக்காட்டலாம். ஆனால் அதனை தட்டிக்கேட்டோ அல்லது கிடைக்கவில்லை என்று கவலைப்பட்டோ பிரயோசனம் இல்லை. நாகேசுக்கு கிடைக்காத பத்மஸ்ரீ விவேக்குக்கு கிடைக்கலயா? ஏன் நம்ம இளையராஜாவுக்கு இன்னும் பத்மஸ்ரீ கிடைக்கலையே? விருதுகள் கொடுத்து இனி அவர்களை அசிங்கப்படுத்த வேண்டாம். கோடிகள் பெரிதல்ல, கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சமே பெரிது.

வந்தியத்தேவன் சொல்வது:

//shabi said...
அவனவன் கஷ்டம் அவனுக்கு யார் கிட்ட பந்தயம் கட்டுனாங்களோ//

இதிலை எல்லாம் பந்தயம் கட்டியிருக்கமாட்டார்கள். ஐசிசியைப் பொறுத்தவரை நாம் என்றைக்கும் கறுப்பர்கள் தான்.

//shabi said...
இன்னக்கி நான் முதலா......................//

ஆமாம் நீங்கள் தான் முதல்.

வந்தியத்தேவன் சொல்வது:

//Keith Kumarasamy said...
வந்தி... இது ஹோல் ஒஃப் ஃபேமில் முதல் சேர்க்கை. (Induction) விரைவிலேயே மற்றச் சேர்க்கைகளை ஐ.சி.சி. அறிவிக்கும். ஆசியக் கண்ட வீரர்களை ஐ.சி.சி. புறக்கணிக்க முடியாது. காரணம் ஐ.சி.சி க்கு பணம் காய்க்கும் மரங்கள் இவர்கள்தான்//

நீங்கள் சொல்வது சரி ஹீத். முதல் சேர்க்கையயில் உள்ளவர்கள் தான் நூற்றாண்டு விழாவில் விருதுபெறுவார்கள் எனவும் ஏனையவர்களை இனி வருடத்திற்க்கு ஒருவர் எனத் தெரிவுசெய்வோம் எனவும் ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசியின் செல்லப்பிள்ளை பிசிசிஐ என்பது அனைவருக்கும் தெரியும் இவர்களின் தத்துப்பிள்ளை ஐபிஎல். ஐசிசி ஆசிய வீரர்களைப் புறக்கணித்து எதையும் செய்யமுடியாது? டால்மியா இருந்திருந்தால் இப்படி நடக்கவிட்டிருக்கமாட்டார்.

வந்தியத்தேவன் சொல்வது:

//கதியால் said...
ஐசிசி விருதுகளை நீங்கள் புறக்கணிக்கலாம். அது அப்படித்தான். அதை விட்டுத்தள்ளலாம். வேண்டும் என்றால் சுட்டிக்காட்டலாம். ஆனால் அதனை தட்டிக்கேட்டோ அல்லது கிடைக்கவில்லை என்று கவலைப்பட்டோ பிரயோசனம் இல்லை. நாகேசுக்கு கிடைக்காத பத்மஸ்ரீ விவேக்குக்கு கிடைக்கலயா? ஏன் நம்ம இளையராஜாவுக்கு இன்னும் பத்மஸ்ரீ கிடைக்கலையே? விருதுகள் கொடுத்து இனி அவர்களை அசிங்கப்படுத்த வேண்டாம். கோடிகள் பெரிதல்ல, கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சமே பெரிது.//

வணக்கம் கதியால் விருதுகள் என்றாலே சிக்கல்தான். ஆனாலும் நம்ம பங்குக்கு அவருக்கு கொடுக்கவில்லை இவருக்கு கொடுக்கவில்லை என்று கூவினால் தான் சிலவேளைகளில் அவர்களுக்கு கொடுக்கும்போது ஒரு சந்தோசம் வரும். சிவாஜிக்கு கூட மத்திய அரசின் விருதுகள் காலம் கடந்துதான் கிடைத்தன.

டோணி, ஹர்பயன் இருவரும் மத்திய அரசின் அர்ஜூன விருதைப் புறக்கணித்ததுபோல் ஏனைய இந்திய வீரர்களும் விருதுகளை வாங்க வரமாட்டார்கள் என்ற எண்ணத்தில் ஐசிசி இந்தியர்களை அதிகமாக தெரிவு செய்யவில்லையோ.

Sukumar சொல்வது:

இந்திய ஸ்ரீலங்கா பாகிஸ்தான் நாட்டு மக்கள் கிரிகெட் பார்பதை நிறுத்திவிட்டால் ஐ.சி.சி.யையே இழுத்து மூடி விட்டு போக வேண்டியதுதான். உரிய விருதுகளை கொடுக்காததில் இருந்து அவர்கள் கூவி கூவி விற்கும் குளிர் பானங்களை வாங்கி குடிக்க மட்டும்தான் நாம் லாயக்கு என நினைத்து விட்டார்களோ ?