பதிவுலகம்
அண்மைய நாட்களாக பதிவுலகத்தில் பலதரப்பட்ட பிரச்சனைகள், ஒரு அனானியின் அட்டகாசம் முடிவுக்கு வந்துள்ளது. நர்சிம் மீண்டும் பார்முக்கு வந்துவிட்டார். ஆனால் இன்றைக்கு சக்திவேல் எடுத்தமுடிவு கவலைக்குரியது. ஒரு பதிவரைப் பலர் ரவுண்டு கட்டி அடித்ததன் வெளிப்பாடக அவர் பதிவுலகை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார். ஒருவரைக் கலாய்த்தல் என்பது பதிவுலகில் பிரபலமானதும் சுவாரஸ்யமானதுமான ஒரு விடயம். குசும்பன் கலாய்க்காத பதிவர்களா? சக்திவேல் அவர்கள் தன் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
சின்னத்திரை
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் வழக்கம் போல் அட்டகாசமாகவும் அழுகையாகவும் போய்க்கொண்டிருக்கிறது. சென்னை ஜூனியர்கள் பலர் மவுண்ட்பேட்டன் பிரபுவின் பேரன் பேர்த்திகளாக பீட்டர் விடுகிறார்கள். சிலர் நன்றாகப்பாடவும் செய்கிறார்கள். ஒரு சிறுமி கிட்டத்தட்ட 11 மொழிகளில் பாடுகின்ற திறமை இருப்பதாகச் சொன்னதுடன் சில மொழிகளில் பாடி அடுத்த சுற்றுக்குத் தேர்வாகிவிட்டார். நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் மிகவும் சுட்டியாகவும் அழகாகவும் பேசிப் நடுவர்கள் உடபட பார்த்த அனைவரையும் கவர்ந்தான் ஆனால் அவனால் ஓரளவுதான் ஸ்ருதியுடன் பாடக்கூடியதாக இருந்தது அவனை மேடையில் வைத்து எலிமினேட் செய்ய விரும்பாமல் மஹதி அவனை வெயிட் லிஸ்ட்டில் போட்டுவிட்டு பின்னர் பெற்றோருக்கு முன்னால் அவனது குறைகளைச் சுட்டிக்காட்டி அடுத்தமுறை முயற்சி செய் என வாழ்த்தி அனுப்பினார். குழந்தைகளை எப்படிக் கையாளவேண்டும் என்ற விடயம் மஹதிக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. ஏனைய நடுவர்களும் இப்படியே குழந்தைகளுடன் நடந்துகொண்டால் எந்தக் குழந்தையும் தன் தோல்வியை நினைத்து கவலைப்படமாட்டார்கள்.
கிரிக்கெட்
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான கிரிக்கெட் போட்டி தற்போது கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. பாகிஸ்தானில் முதல் இனிங்கிஸில் முகமட் யூசுப் 90 ரன்கள் எடுத்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதுபோல் இருந்தது அந்தக்காட்சி. இலங்கை இனிங்சில் மீண்டும் அணிக்குத் திரும்பிய டேனீஷ் கனேரியா இலங்கை வீரர் ஆஞ்சலோ மத்யூசிடம் தகாத வார்த்தைகள் பேசி தன் சம்பளப் பணத்தில் 50% தண்டமாகச் செலுத்தவுள்ளார். மைதானத்தில் திட்டுவதில் ஆஸி அணிக்கு அடுத்த இடம் பாகிஸ்தான்காரர்கள் தான்.
ஈழத்துமுற்றம்
ஈழத்து வட்டார மொழிபற்றியும் கலை கலாச்சாரம் பற்றியும் கானாப்பிரபாவினால் ஆரம்பிக்கப்பட்டு ஈழத்து வலைப்பதிவாளர்களால் நடாத்தப்படும் ஈழத்துமுற்றம் என்ற வலைமனை பற்றிய செய்தி நேற்றைய மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. ஆரம்பித்து சில நாட்கள்தான் ஆகின்றபோதும் பலரின் எழுத்துக்களால் சொந்த நாட்டு அனுபவங்களையும் பேச்சையும் கேட்கும் போது ஆசையாகத்தான் இருக்கிறது. சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப்போல வருமா!!!.
சூரியகிரகணம்
கடந்த சிலநாட்களாக சகல ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்ட சூரியகிரகணம் வந்துபோய்விட்டது. பலரும் எதிர்பார்த்த சுனாமியும், பூகம்பமும் வரவேயில்லை. நம்புங்கள் நாராயணனை நம்பியவர்கள் முகத்தில் கரி. சுனாமி வராது என சரியாக எதிர்வுகூறிய இலங்கை வானிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு பாராட்டுக்கள். வழக்கமாக இவர்கள் மழை வரும் என்றால் மழை வராது.
இன்று காலை வெற்றி வானொலியில் பேப்பர்த்தம்பி கேட்ட கேள்வி சரியான நக்கல் "அண்ணே டீவியில் கிரகணம் பார்கிறதென்றால் கறுப்புக் கண்ணாடி அணியவேண்டுமா?".
ஜகன்மோகினி என்றைக்கு ரிலீஸ்?
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
20 hours ago
6 கருத்துக் கூறியவர்கள்:
நமீதா படம் சூப்பருங்கோ
ஈழத்துமுற்றம் பற்றிய தகவலுக்கு நன்றி
வந்தி.. வழமையான கலக்கல்..
உங்க ஸ்பெஷல் டச்சே அந்த கலர் கவர்ச்சிப் படம் தான் ஐயா .. ;)
மகதி பற்றி நானும் வீட்டில் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தேன். திப்பு சிலநேரம் கடுமையாக நடப்பதாகப் பட்டது.
நம்ம பேபர் தம்பி உங்களைக் கேட்டதாக சொன்னார்.. (நூறு ரூபாய் அல்ல)
//நமீதா ரசிகன் said...
நமீதா படம் சூப்பருங்கோ//
நன்றிகள் நமீதா ரசிகன் உங்களைப்போல மச்சான்ஸ் இருக்கும்வரை நமீதா கொடிகட்டிப்பறப்பார்.
//டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
ஈழத்துமுற்றம் பற்றிய தகவலுக்கு நன்றி//
டொக்டர் ஒருமுறை ஈழத்துமுற்றத்துக்கு வருகை தாருங்கள். உங்களின் கருத்துக்களும் ஆக்கங்களும் எமக்குத் தேவைப்படுகின்றன,
// LOSHAN said...
வந்தி.. வழமையான கலக்கல்..
உங்க ஸ்பெஷல் டச்சே அந்த கலர் கவர்ச்சிப் படம் தான் ஐயா .. ;)
மகதி பற்றி நானும் வீட்டில் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தேன். திப்பு சிலநேரம் கடுமையாக நடப்பதாகப் பட்டது.
நம்ம பேபர் தம்பி உங்களைக் கேட்டதாக சொன்னார்.. (நூறு ரூபாய் அல்ல)//
லோஷன் விடியலுக்கு இடையில் பின்னூட்டம் இடுகிறீர்கள் என்றால் நமீதா உங்களைக் கவர்ந்துதான் இருக்கிறார் ஹிஹிஹி.
திப்பு கடுமையாகத் தான் நடக்கிறார் ஷாலினி ஓரளவு கடுமை மஹதி மட்டும் குழந்தைகளுடன் குழந்தையாக மாறுகின்றார்.
பேப்பர்த் தம்பி இங்கிலீஸ் சோதனை எடுத்திட்டாரோ?
Post a Comment