இந்தியா என்றாலே உடனே பலரது நினைவுக்கு வருவது கலாச்சாரம் பண்பாடு நிறைந்த நாடு என்பதேயாகும். ஆனால் கடந்த வியாழக்கிழமை ஓரினச்சேர்க்கை சரியானது என தில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தியாவும் மேற்கத்திய நாடுகள் பட்டியலில் தன்னை இணைத்துக்கொள்ளமுயகின்றதுபோல் தெரிகின்றது.
இராமாயண காலத்திலிருந்து ஒருவனுக்கு ஒருத்தி என்பதை பெரும்பான்மையான இந்தியர்கள் கடைப்பிடித்துவருகின்றார்கள். இதனை தமிழர்கள் தம் கலாச்சாரமாகவே கட்டிக்காத்துவருகின்றார்கள். அப்படியிருக்கையில் ஒரு ஆண் ஆணுடன் சேர்ந்துவாழ்வதையும் பெண் பெண்ணுடன் சேர்ந்துவாழ்வதையும் சரியென தீர்ப்பளித்து உயர்நீதிமன்றம் இந்தியப் பண்பாட்டையே கொச்சைப்படுத்தியுள்ளது.
சில இஸ்லாமிய கிறிஸ்தவ அமைப்புகள் இதனை எதிர்க்கின்றார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் ராமனை வைத்து அரசியல் நடத்தும் பிஜேபி சிவசேனா போன்ற கட்சிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து குரல் கொடுத்ததாக செய்திகள் காணப்படவில்லை. ஏன் ஆனந்தவிகடனோ ஜூனியர் விகடனோ கூட இது பற்றி வாய் திறக்கவேயில்லை. சர்ச்சை நாயகி குஷ்புமட்டும் இதனை வரவேற்றிருப்பதாக செய்திகள் வெளியாகின.
மேற்கத்திய நாடுகள் போல் வல்லரசாக வேண்டுமென்றால் அணுஆயுதம், சிறிய நாடுகளுடன் சண்டித்தனம், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றுடன் இப்படியான நாகரீகங்களையும் இந்தியாவிற்க்குள் புகவிட்டால் வல்லரசாகிவிடும் என்ற மனப்பான்மையில் காங்கிரஸ் அரசு இருப்பதாக தெரிகின்றது.
ஏற்கனவே டேட்டிங், பப், டிஸ்கோதே கலாச்சாரத்தில் ஊறிய நாடு ஓரினச்சேர்கையாளர்களின் அனுமதியால் என்ன என்ன கஸ்டங்களைப் படப்போகின்றதோ?
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆனந்தவிகடனில் இரண்டு தமிழ்ப் பெண்களை படத்துடன் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற செய்தி வெளியிட்டார்கள். ஏற்கனவே இந்தியாவில் 24 லட்சத்துக்கு மேற்பட்ட ஓரினச்சேர்க்கைப் பிரியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்க்கு தடையில்லை என்பதால் இந்தத் தொகை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
எதுஎப்படியோ இந்தியாவின் பண்பாடு கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய கலாச்சாரத்திற்க்கு மாறிவருவது வேதனைக்குரியது.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
20 hours ago
9 கருத்துக் கூறியவர்கள்:
இந்தியா என்பது பல இனக்கூறுகளையும் பண்பாடுகளையும் கொண்டு 1947 இலே தோன்றிய புதுநாடு.
ஓரினச்சேர்க்கை மேற்கத்தையப்பண்பாடு என்று யார் சொல்வது? தன்னாட்டுப்பெண்டிரையும் அடுத்தநாட்டுப்பெண்டிரையும் தம் இராணுவம் வன்புணர்வதைக் இந்தியர்களுக்கு ஓரினச்சேர்க்கை மட்டும் கசக்கிறதா?
வந்தி... உயர் நீதிமன்றத்தீர்ப்பு ஓரினச்சேர்க்கை சரி அல்லது தவறு என்று சொல்லவில்லை. பரஸ்பர சம்மதத்துடன் நிகழும் ஓரினச்சேர்க்கையைக் குற்றமாகக் கருதக்கூடாது என்று சொல்லியிருக்கிறது. அப்புறம்.. மகாபாரதம் ராமாயணத்துக்குப் பிந்திய காலம் என்று நினைக்கிறேன்.. மகாபாரதத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ராமாயணக் கோட்பாடு பின்பற்றப்படவில்லையே??? ஏன் ராமாயணத்திலேயே ஒருவனுக்கு ஒருத்தி என்ற் கோட்பாடு தசரதன் மூலமாக அடிபட்டுப் போகிறது அல்லவா.
கவலைதான். ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற அடிப்படையில் இப்படியான் மாற்றங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. கலாசாரம் என்ற அடிப்படையில் சில மாற்றங்களை ஏற்படுத்த முயாலமல் இருப்பது மகா முட்டாள்தனம் என்றே கருதுகிறேன். ஆதிகால கலாசாரம் தொடர்ந்து இருக்க முடியாதுதானே. எவ்வளவு மாற்றங்களை நாம் தாண்டி வந்து விட்டோம். அவ்வாறே இதுவும் ஒன்றாக இருக்கும். இணையம் வந்த பின்னர் பாலியல் துஷ்பிரயோகத்தின் அளவு குறைந்து விட்டதாம். அவ்வாறே இதுவும் இப்படியான் பாலியல் பிரச்சினைகளை குறைக்கலாம் என்று கருதியிருக்கலாம். (இவை என் கருத்துகளே)
ஓரினச் சேர்க்கையை பற்றிய பதிவிற்கு, "ஒரு கை ஓசை"ன்னு தலைப்பு. குறும்பு தாங்க உங்களுக்கு :)
அனானி நண்பருக்கு உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். இந்தியா என்ற நாட்டிற்குள் தான் தமிழ்நாடு வருகின்றது தமிழ்நாட்டில் இருந்து இதுவரை காட்டமாக யாரும் எதிர்க்கவில்லை சிலவேளைகளில் சில பெரிய மனிதர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருப்பதாலோ தெரியவில்லை.
ஹீத் உங்கள் கருத்துக்கள் விவாதத்திற்க்குரியவை இராமாயணத்தில் இராமனை ஏகபத்தினி விரதனாக காட்டியவர்கள் அவர் தந்தையை ஏகப்பட்ட பத்தினி விரதனாகக் காட்டியிருக்கிறார்கள். பாரதம் இராமாயணத்திற்க்கு பிற்ப்பட்டதுமட்டுமல்ல பல கிளைக்கதைகளைக் கொண்டிருப்பதால் சிக்கலான காவியமுமாகும். பாண்டவர்களுக்கு பாஞ்சாலியைத் தவிர தனித்தனியே மனைவிகள் இருந்ததாக சொல்கிறார்கள்.
கதியால் உங்கள் கருத்துக்களும் ஏற்புடயவை. ஆனால் இணையம் வந்தபின்னர் பாலியல் இன்னொரு கோணத்தை நோக்கிச் சென்றுவிட்டது. இதனால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
// damildumil said...
ஓரினச் சேர்க்கையை பற்றிய பதிவிற்கு, "ஒரு கை ஓசை"ன்னு தலைப்பு. குறும்பு தாங்க உங்களுக்கு :)//
உள்குத்தைப் புரிந்துகொண்டமைக்கு நன்றிகள். அத்துடன் ஒரு கை தட்டு ஓசை வராது அதேபோல் ஓரினச்சேர்க்கையால் குழந்தைப்பேறு என்ற ஓசை வராது.
நம்மவர்கள் ஆங்கிலேயர்களுக்கு வேலைபார்த்த காலம் போய் ஆங்கிலேயர்களாகவே மாறிவரும் அவலநிலையயேகுறிக்கிறது .
ஒருவர் விருப்பப்பட்டு தற்கொலைச்செய்தால் நாம் அதை மனிதஉரிமைகள் என்று ஒப்புக்கொள்வோமா ? அதுபோலவே கலாச்சார சீர்கேடுகளையும் மனித உரிமைகளாக அங்கீகரிக்க கூடாது .
மேலும் நண்பரொருவர் மேலேகுறிப்பிட்டு இருபதைபோல் இச்சட்டதின்மூலம் பாலியல் வன்முறைகள் குறையாது மாறாக பாலியல்வன்முரைகளின் போக்கு மட்டும்தான்மாரும் உதாரணமாக இதுவரை பெண்களை
பாலியல்கொடுமைகளுக்கு ஆட்படுத்தியவர்கள் இனிமேல் ஆண்களையும் பலாத்காரம் செய்வார்கள்
Post a Comment