ராஜாவும் கார்த்திக்கும் - பகுதி 1

அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஆரம்பித்த நவரச நாயகன் கார்த்திக் இசைஞானி கூட்டணி நினைவெல்லாம் நித்யா, வருஷம் 16, அக்னி நட்சத்திரம், கோபுரவாசலிலே, கிழக்குவாசல், தெய்வவாக்கு என பல படங்களில் வெற்றிக்கொடி நாட்டியது.

1. பனிவிழும் மலர் வனம்
ராஜாவின் எவர்கிரீன் ஹிட்டுகளில் இந்தப்பாடலும் ஒன்று. மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ராஜாவின் அனைத்துப்பாடல்களும் இனிமை. இந்தப்படம் ஒரு மியூசிக்கல் ஹிட் என்றே கூறலாம். ராஜாவின் ஆர்ப்பாட்டமில்லாத மெலடியும் வைரமுத்துவின் காதல் வரிகளும் பாடலை உச்சத்துக்கு கொண்டு சென்றது என்றால் மிகையாகது. அத்துடன் எஸ்.பி.பியின் குரலும் குறிப்பாக பனிவிழும் மலர் வனம் என்ற வரிகளை ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமாக பாடுவார். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இந்தப்பாடலும் ஒன்று.2. நான் தேடும் செவந்திப்பூவிது
இன்னொரு எவர்கிரீன் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல். ஆனால் படமாக்கியவிதம் சொதப்பல். பாடலுக்கு முன்னால் இசைஞானி பாடும் ஆலாவிற்கும் அதனைத் தொடர்ந்து வரும் கிட்டார் இசைக்கும் எத்தனையோ விருதுகள் கொடுக்கலாம். முதல் சரணத்தில் இடைஇசையாக வரும் புல்லாங்குழலும் கிட்டாரும் மயக்கம் தரும். கூடப்பாடும் எஸ்.ஜானகியின் தேன்குரலும் இந்தப்பாடலுக்கு பிளஸ். இந்தபாடலைக்கேட்டால் கட்டாயம் காதல் தேசத்திற்க்கு போகும் எண்ணம் எவருக்கும் வரும்.3. காதல் கவிதைகள் படித்திடும்
"I love this idiot, I love this lovable idiot" என்ற சித்ராவின் குரலுடன் இனிமையான புல்லாங்குழலுடன் தொடங்கும் இந்தப்பாடலும் என்றைக்கும் கேட்கும் இனிமையான மெலடி. பாடுநிலா எஸ்.பி.பியும் சின்னகுயில் சித்ராவும் இணைந்து கலக்கிய பாடல். பல்லவியில் ஆண்குரல் பாடிக்கொண்டிருக்கும்போதே இதம் தரும் காதல் கவிதைகள் என் சித்ரா குரல் ஒலிக்கும் இடம் இசைஞானியின் ஸ்பெசல் டச். துறுதுறுப்பான கார்த்திக்கும் படமாக்கியவிதமும் பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.4. வா வா அன்பே அன்பே
அக்னி நட்சத்திரம் படத்தில் கிடைத்த இன்னொரு முத்து இந்தப்பாடல். அந்தப் படப்பாடல்கள் முழுவது சூப்பர் டூப்பர் ஹிட்ஸ். பத்மஸ்ரீ.கே,ஜே,ஜேசுதாசும் சின்னக்குயில் சித்ராவும் இணைந்துபாடிய டூயட்டுகளில் சிறந்த டூயட்டில் இதுவும் ஒன்று. பி.சி.ஸ்ரீராமின் கமிராவில் நிரோஷா மிகவும் அழகாகத் தெரிவார். படமாக்கப்பட்ட விதம் கவர்ச்சியாக இருந்தாலும் ஆபாசமாக இல்லை. இதயம் முழுதும் ராஜா வசம் தான்.5. பழமுதிர்ச்சோலை எனக்காகதான்
வருஷம் 16 படத்தில் பத்மஸ்ரீ.கே.ஜே, ஜேசுதாசின் காந்தக்குரலில் இசைராஜாவின் இசையில் உருவான அழகான மெலடி.முதல் இடைஇசையில் வரும் புல்லாங்குழலும் தபேலாவும் கர்னாடக சங்கீதப்பாணியில் இருக்கும். சரணம் ஆரம்பிக்கும்போது ரம்சின் ரிதம் வெஸ்டேர் ஸ்டைலில் இருக்கும். இரண்டு பாணியையும் இணைத்து ராஜா கலக்கியிருப்பார். இரண்டாவது சரணம தூய கர்னாடக இசையாகவே இருக்கும். பாசிலின் இயக்கத்தில் வெளிவந்த அழகான படம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்ஸ்.

4 கருத்துக் கூறியவர்கள்:

Unknown சொல்வது:

வாவா அன்பே அன்பேயும், காதல் கவிதைகளும் அடிக்கடி நான் கேட்கும் பாடல்கள்... காட்சியமைப்பும் அழகாக இருக்கும்... அதேபோல் காதல் கவிதைகள் இடம்பெற்ற கோபுர வாசலிலே படத்திலேயே தாலாட்டும் பூங்காற்று என்று ஜானகி குரலில் ஒரு பாட்டு இருக்கிறது. அழகான காட்சியமைப்போடு நல்ல பாடல்..

ARV Loshan சொல்வது:

wow.. super..good one.
i ll comment later. :)

Jackiesekar சொல்வது:

நான் தேடும் செவ்வந்தி பூவிது, இளையராஜா சாங் வாய்சும் அருமை...

Azhagan சொல்வது:

Poo pookkum maasam.... from Varusham 16.
Pachamalapoovu... from Kizhakku Vaasal
naa yaaru yenakkethum theriyalaye...
+ a duet(cant recollect now) Chinna jameen