நண்பர் செந்தழல் ரவி சுவாரஸ்யமான ஆறு வலைப்பதிவுகளுக்கு விருதுகொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது மனம் நோகக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் எனக்கு சுவாரஸ்யமாகத் தெரிகின்ற ஆறு நண்பர்களுக்கு இந்த விருதுகளை அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
கானா பிரபா
அவன் அவன் ஒரு வலையையே கட்டிமேய்க்க கஸ்டப்படும்போது மடத்துவாசல் பிள்ளையாரடி, உலாத்தல், ரேடியோஸ்பதி, வீடீயோஸ்பதி என தன்னுடைய சொந்த வலைகளுடன் பல குழும வலைகளிலும் இளமையாக கலக்குபவர் வலையுலக இளம்புயல் அண்ணன் கானாப் பிரபா.
ஜாக்கி சேகர்
பிருந்தாவனத்தில் நொந்தகுமாரனாக இருக்கும் இவரின் எழுத்துக்கள் மிகமிக சுவாரஸ்யமானவை. சும்மா ஜாலிக்காக இவர் போடும் படங்கள் சுவராஸ்யத்துக்கும் மேலானவை. உலகப் படங்களைப் பற்றி தற்போது எழுதி அந்தப் படங்களை எப்படியும் தேடிப்பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியவர். பிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென்னின் தீண்டலால் ஏனைய வலைப்பதிவாளர்களைப் பொறாமைப் பட வைத்தவர். இப்போது தன் இரண்டாம் இனிங்சில் சில காலத்துக்கு முந்திய படங்களுக்கு விமர்சனம் எழுதி ஹிட் அடிக்கும் வலையுலகின் ... (உங்களுக்கு பிடித்த ஏதாவது பட்டம் போட்டுக்கொள்ளுங்கள். இவரது சாண்ட்விச் அண்டு நான்வெஜ்யுக்கு டிமாண்ட் அதிகம்.
முரளி கண்ணன்
சினிமாவையும் நடிகர்களையும் பலவித கோணங்களில் ஆராய்ந்து எழுதும் அற்புதமான எழுத்தாளர். தன் எழுத்தில் மெல்லிய நகைச்சுவையைக் கொண்டிருந்தாலும் சிலவேளைகளில் நகைச்சுவையாகவே பதிவுபோடுபவர். அண்மைய உதாரணம் மோகன் லால் பிரியதர்ஷன் ஐபிஎல் ஆலோசனையைக் குறிப்பிடலாம். இன்னொரு பிலிம் நியூஸ் ஆனந்தனாக பரிமாணம் எடுக்கின்றார். பத்மஸ்ரீ கமலஹாசனின் ரசிகர் என்பதால் எனக்கு அதிகம் பிடிக்கும்.
ஹீத் குமாரசாமி
மெய் சொல்லப்போகின்றேன் என பலதரப்பட்ட விடயங்களில் பதிவுகள் எழுதி பலரின் கவனத்தை தற்போது ஈர்த்திருக்கின்றார். சுவாரஸ்யமாகவும் எழுதுகின்றார். என்னுடைய பாடசாலையில் படித்தவர் என்பது இன்னொரு கூடுதல் தகவல். இன்னும் நிறைய எழுதவேண்டும் என்பது என் ஆசை.
டொக்டர் எம்.கே.முருகானந்தன்
ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் மருத்துவரும். இவருக்கு நான் விருது கொடுப்பது விஜய் அவார்ட்ஸில் கமலுக்கு விஜய் விருது கொடுப்பதுபோல இருக்கின்றது. சினிமா, இலக்கியம், மருத்துவம் என பல் திறமைவாய்ந்தவர். இவரது சினிமா விமர்சனங்களை பத்திரிகைகளில் வாசித்து நல்ல சினிமாக்களை சுவைக்க வழிவகுத்தவர், இன்று வலையுலகிலும் தனக்கென இடம் பிடித்தவர். மருத்துவர் என்பதால் நேரம் கிடைப்பது அரிதென்பதால் அதிகம் எழுதுவதில்லை. எழுதியவை அத்தனையும் சுவாரஸ்யமானவை.
வர்மா
தமிழக அரசியல் பற்றி வீரகேசரிப் பத்திரிகையில் எழுதுபவர். அத்துடன் விளையாட்டு, சினிமா என வலையுலகிலும் எழுதுகின்றார். சில காலமாக அவரது பதிவுகளைக் காணவில்லை. அவரை மீண்டும் வலையுலகிற்க்கு இழுக்கவும் ஊக்கப்படுத்தவும் இந்த விருதை அவருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
என் நண்பர்கள் பலர் வலையுலகில் கொடிகட்டிப்பறக்கின்றார்கள். அவர்கள் நண்பர்களாக இருப்பதால் அவர்களுக்கு விருதுகொடுக்கமுடியவில்லை.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
20 hours ago
15 கருத்துக் கூறியவர்கள்:
நன்றி வந்தியதேவன்.
மிக மகிழ்வாக உணர்கிறேன்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
கலக்கல் வந்தி.. நல்ல தெரிவுகள்..
இதில் அநேகர் எனக்கும் பிடித்தவர்களே..
வந்தி மனத்தால் விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
என் நண்பர்கள் பலர் வலையுலகில் கொடிகட்டிப்பறக்கின்றார்கள். அவர்கள் நண்பர்களாக இருப்பதால் அவர்களுக்கு விருதுகொடுக்கமுடியவில்லை..
>>>>>
அதெல்லாம் கிடையாது. அவர்களுக்கும் கொடுக்கனும்...
// முரளிகண்ணன் said...
நன்றி வந்தியதேவன்.
மிக மகிழ்வாக உணர்கிறேன்//
முரளிகண்ணன் அவர்களே இது உங்கள் திறமைக்கு நான் வழங்குகின்ற விருது. உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் இட்டிருந்தாலும் இப்படியொரு வாய்ப்புக் கிடைக்கின்ற போது பாராட்டியிருக்கின்றேன் அவ்வளவுதான்.
//வால்பையன் said...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்//
வருகைக்கு நன்றிகள் வால்பையன்
//LOSHAN said...
கலக்கல் வந்தி.. நல்ல தெரிவுகள்..//
லோஷன் இன்னும் பலரைத் தெரிவு செய்யலாம் ஆனால் நண்பர் செந்தழல் ஆறுபேர் என கட்டளை இட்டிருப்பதால் தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டன.
//செந்தழல் ரவி said...
அதெல்லாம் கிடையாது. அவர்களுக்கும் கொடுக்கனும்...//
வலையுலக தளபதி அண்ணன் செந்தழல் வாழ்க.
மிக்க நன்றி வந்தி, உங்களைப் போன்ற நண்பர்களை இணையம் வாயிலாகச் சந்தித்தது பெரும் விருது. மற்றைய நண்பர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
முதலில் என்னை மிக உயர்வாய் விமர்சித்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல...என் தளத்தை இவ்வளவு அழகாக விமர்சித்து உள்ளீர்கள் நன்றி .. அதே போல் என்னோடு விருது பெற்றவர்களுக்கு என் நன்றியும் அன்பும்..
நன்றி வந்தியதேவன்
அன்புடன்
ஜாக்கிசேகர்
பொழுதுபோக்காக ஏதோபதிகிறேன் அதுக்கும் விருதா.
அன்புடன்
வர்மா.
// கானா பிரபா said...
மிக்க நன்றி வந்தி, உங்களைப் போன்ற நண்பர்களை இணையம் வாயிலாகச் சந்தித்தது பெரும் விருது. மற்றைய நண்பர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.//
ஆஹா கலக்கிட்டியள் நிச்சயமாக இணையவழி இணைந்தவர்கள் பலர் இன்று நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். நன்றிகள் பிரபா.
// jackiesekar said...
முதலில் என்னை மிக உயர்வாய் விமர்சித்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல...என் தளத்தை இவ்வளவு அழகாக விமர்சித்து உள்ளீர்கள் நன்றி .. அதே போல் என்னோடு விருது பெற்றவர்களுக்கு என் நன்றியும் அன்பும்..//
உண்மையைச் சொன்னேன்(பாட்ஷா ஸ்டைலில் வாசிக்கவும்)
//வர்மா said...
பொழுதுபோக்காக ஏதோபதிகிறேன் அதுக்கும் விருதா.//
நீங்கள் மட்டுமல்ல பலரும் பொழுதுபோக்காத்தான் பதிவு செய்கிறோம். அப்படி பொழுதுபோக்காக எழுதினாலும் சுவாரஸ்யமாக எழுதுபவர்கள் ஒரு சிலரே அவர்களை ஊக்குவிப்பதில் தப்பில்லை.
உணமையில் உங்கள் வார்தைகள் மகிழ்வூட்டுகின்றன. எனக்கு இலக்கிய, இலட்ரோனிக் மற்றும் பத்திரிகை உலகில் பல நண்பர்கள் இருக்கிறார்கள். இன்று இணையத்திலும் உங்களைப் போன்ற பல நல்ல உள்ளங்களைப் நண்பர்காளகப் பெற்றமை எனக்குக் கிடைத்த அதிர்ஸ்டமே.
Post a Comment