பெரும்பாலான வலைமனை வாசிகள் எப்படியும் ஒருதடவையேனும் பொன்னியின் செல்வனை ரசித்து ருசித்துப்படித்திருப்பீர்கள். வந்தியத்தேவனுடன் கடம்பூர், பழையாறை, அரசிலாற்றங்கரை, ஈழம், தஞ்சை என வலம் வந்திருப்பீர்கள். எத்தனையோ வரலாற்று நாவல்கள் வந்தாலும் பொன்னியின் செல்வன் படிப்பதுபோல் ஒரு உற்சாகம் ஏனைய நாவல்களில் குறைவாகவே இருக்கும்.
ஒரு வலையில் சுந்தரச்சோழரின் இறுதிக்காலத்தில் என்ன நடந்தது பற்றி அலசி ஆராய்ந்திருந்தார்கள்(அதன் சுட்டியை மறந்துபோனேன்) மதுராந்தகருக்கு என்ன நடந்தது? நந்தினி என்ன ஆனாள்? போன்றவற்றைப் பற்றிப் பலர் தங்கள் கருத்துகளைக் கூறியிருந்தார்கள்.
பொன்னியின் செல்வனில் அருள்மொழிவர்மன் ஒரு காரியத்தை மறுக்காமல் ஏற்றுக்கொண்டிருந்தால் சிலவேளை ஈழத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கும் கொடுமைகள் நடந்திருக்காது. ஈழப்போர்கள் வெடித்திருக்காது. யார் கண்டது ஈழமும் இந்தியாவின் ஒரு மாநிலமாகியிருக்கலாம். அருள்மொழிவர்மன் விட்ட தவறு என்ன? கல்கியின் பொன்னியின் செல்வனில் பாகம் இரண்டாகிய சுழற்காற்றில் இலங்கைச் சிங்காதனம் என்ற அத்தியாயத்திற்க்குள் நுழைவோம்.
அருள்மொழிவர்மனைத் தேடி ஈழத்திற்க்கு வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் பூங்குழலி உதவியுடன் வருகின்றான். அருள்மொழிவர்மனை வந்தியத்தேவனுடன் ஆழ்வார்க்கடியானும் சந்திக்கிறார்கள். அப்போது ஒரு பிஷு இவர்கள் மூவரையும் அழைத்துக்கொண்டு தங்கள் சபா மண்டபத்திற்க்கு கொண்டு செல்கிறார். அங்கே புத்த பிக்குகள் பலர் கூடியிருந்தார்கள் அவர்கள் மட்டுமல்ல நவரத்தினம் பதித்த தங்கச் சிங்காதனம் காணப்பட்டது. அதன் அருகில் பீடத்தில் மணிமகுடமும் உடைவாளும் செங்கோலும் காணப்பட்டன. அத்துடன் மகா தேரோ குருவும் நடுநாயகமாக வீற்றிருந்தார்.
மகா தேரர் ஆதிகாலத்திலிருந்து சோழர்களாலும் பாண்டியர்களாலும் கலிங்கத்தவர்களாலும் புத்த தர்மம் உள்ள ஈழநாட்டில் பல அட்டூழியங்கள் நடந்தனவென்றும் ஆனால் அருள்மொழிவர்மரின் காலத்தில் சிதைந்த விகாரைகளை பழுதுபார்க்க அரசர் கட்டளையிட்டார் என்றும் எந்த மன்னர்களினது காலத்திலும் இத்தகைய செயல் நடைபெறவில்லையென்றும் கூறி, அசோகர் எப்படி புத்தமதத்தை உலகெல்லாம் பரப்பினாரோ அப்படி நீங்கள் இந்த மஹா சாம்ராஜ்யத்துக்கு அதிபதியாகவேண்டும் என மஹா சபையினர் விரும்புவதாக கூறினார்.
கல்கியின் வரிகளில் இந்தக் காட்சி:
"இளவரசே, இதோ உங்கள் முன்னால் உள்ள சிங்காதனத்தைப் பாருங்கள். மணிமகுடத்தைப் பாருங்கள்.செங்கோலையும் பாருங்கள். இலங்கை இராஜ வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அனைவரும் இந்தச் சிங்காதனத்தில் அம்ர்ந்து, இந்த மணிமகுடத்தைத் அணிந்து, இந்தச் செங்கோலைக் கையில் தரித்த பிறகே, புத்த சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசர்களானார்கள். துஷ்டகெமுனு சக்ரவர்த்தியும், தேவனம்பிய திஸ்சரும் மகாசேனரும் அமர்ந்து முடிசூடிய சிங்காதனம் இது. அவர்கள் சிரசில் தரித்த கிரீடம் இது. அவர்கள் கரத்தில் ஏந்திய செங்கோல் இது. இப்படிப்பட்ட புராதன சிங்காதனம் ஆயிரம் ஆண்டுகளாக அரசர்களைச் சிருஷ்டித்த சிங்காதனம் இதோ தங்களுக்காக காந்திருக்கின்றது. இதில் அமரவும் இந்த மணிமகுடமும் செங்கோலும் தரிக்கவும் தங்களுக்குச் சம்மதமா? எனக் கேட்கின்றார்.
ஆனால் இதனை மறுத்துவிடுகிறார் அருள்மொழிவர்மர். அன்றைக்கு மறுத்து ஒரு மிகப்பெரிய வரலாற்றுத் தவறை பொன்னியின் செல்வன் என்றழைக்கப்படும் அருள்மொழிவர்மன் விடுகிறார்.
அன்றைக்கு அவர் ஈழத்து அரியணையில் ஏறியிருந்தால் சிலவேளைகளில் ஈழத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது. ஈழ இராட்சியம் முழுவதும் சோழர்களின் புலிக்கொடி பறந்திருக்கும். அருள்மொழிவர்மருக்கு தான் அரியணையில் அமராமல் தன் சார்பில் வேறு சில நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம் அவை:
1. ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவன் மூலம் சோழப்பேரரசில் அந்த காலத்தில் நிலவிய மதுராந்தகர், ஆதித்தகரிகாலருக்கிடையிலான இராட்சியப்போட்டியை மதுராந்தகரையோ அல்லது ஆதித்த கரிகாலரையோ ஈழத்து அரியணையில் ஏற்றி ஈழ இராட்சியத்தையும் சோழ இராட்சியமாக்கியிருக்கலாம். இதனால் தஞ்சையில் ஏற்பட்ட உள்நாட்டுச் சிக்கல் நீக்கியிருக்கும். (இதனை தற்போதைய சாணக்கியர் கலைஞர் மிக அழகாக கையாண்டுள்ளார்)
2.இரண்டாவது வந்தியத்தேவனுக்கு பட்டம் கட்டினால் இளையபிராட்டியார் குந்தவை ஒரு நாட்டின் அரசனை திருமணம் செய்யும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும், ஆனால் அருள்மொழிவர்மர் அதனையும் செய்யவில்லை. இதற்கான காரணம் எனக்குத் தெரியும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.
ஆக அருள்மொழிவர்மர் செய்த தவற்றிற்கான தண்டனைகளை நாங்கள் பல காலமாக அனுபவிக்கவேண்டியுள்ளது. சிலர் இதனைக் கல்கியின் கற்பனை என்றும் சொல்லலாம் ஆனால் கற்பனை என்றாலும் 12பி படம் போல் யோசனை செய்ததில் தவறில்லை என்றே நினைக்கின்றேன். உங்கள் எண்ணக் குதிரையையும் பின்னூட்டங்கள் மூலம் தட்டுங்கள் .
பொன்னியின் செல்வன் - வரலாற்றுத் தவறு
எழுதியது வந்தியத்தேவன் at 23 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் ஈழம், கல்கி, பொன்னியின் செல்வன், வந்தியத்தேவன்
தமிழ்மொழிக் கொலைகாரர்கள்
சென்ற வருடம் நான் தமிழ்மண நட்சத்திரமாக இருந்த காலத்தில் "உங்கள் வாழ்க்கை எங்கள் செய்தி" என்ற தலைப்பில் நுனிப்புல் மேய்ந்த விடயம் இன்றைக்கு நண்பர் சந்ருவினால் பரபரப்பாக எழுதப்பட்டுள்ளது.
தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?.
ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா..
அவருக்கு பின்னூட்டத்தில் சில விடயங்கள் சொல்லியிருந்தாலும் ஒரு பதிவுமூலம் அவருக்கும் ஏனைய ஊடகவியளாலர்களுக்கும் ஊடகங்களில் நடக்கும் தமிழ்மொழிக் கொலைகள் பற்றிய விளக்கங்களை கொடுக்கமுயற்சி செய்கிறேன்.
ஒரு இனத்தை அழிக்கவேண்டும் என்றால் முதலில் அந்த இனத்தின் மொழியை அழிக்கவேண்டும் என்பதே காலம் காலமாக ஆக்கிரமிப்பாளர்கள் கைக்கொள்ளும் ஒரு தந்திரம். ஏனைய மொழி பேசுபவர்களுக்குள்ள மொழிப்பற்று ஏனோ தமிழனுக்கு இல்லை, இதனால் அவனின் மொழியை அழிப்பது மிகவும் சுலபமாக இருக்கிறது.
ஒருகாலத்தில் இந்திய இலத்திரனியல் ஊடகங்களினால் கொல்லப்பட்ட நம்மொழி இன்றைக்கு நமது ஊடகங்களினாலும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவுறுகிறது. ஆகவே இந்திய ஊடகங்களைச் சாடுவதற்க்கு முன்னர் எங்கள் பக்கமுள்ள குப்பைகளை களையவேண்டும்.
பலதாசப்பதங்களாக வானொலி உலகில் கொடிகட்டுப்பறந்த வானொலியென்றால் அது இலங்கை வானொலிதான். இலங்கை வானொலியின் தமிழைக்க்கேட்டு தன் மொழி அறிவை வளர்த்ததாக ஒரு முறை நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தெரிவித்திருந்தார். அமரர்.எஸ்.கே.பரா, திரு.அப்துல் ஹமீத், திருமதி.இராஜேஸ்வரி சண்முகம், திரு.கே.எஸ்.பாலச்சந்திரன்,(சில பெயர்கள் மறந்துபோய்விட்டன) எனப் பலரால் கட்டிக்காத்த இலங்கை வானொலி இன்றைக்கு தனியார் வானொலிகளின் போட்டியால் தன் சுயத்தை இழந்துவிட்டது என்றே குறிப்பிடலாம்.
90களின் ஆரம்பகாலத்தில் எவ்எம் 99 என்ற பெயரில் ஒரு தனியார் வானொலி மக்களிடையே பிரபலமானது. கொழும்பையும் அதனைச்சூழவுள்ள இடங்களிலும் மாத்திரம் அந்த ஒலிபரப்பு கேட்ககூடியாதாக இருந்தது. பின்னர் 98களின் நடுப்பகுதியில் ஒரு பரீட்சார்த்த ஒலிபரப்பு ஆரம்பமாகி ஜூலையில் 24மணி நேர சேவையாக சூரியன் எவ்எம் தொடங்கியது. ஒரு இளைஞர் பட்டாளத்தைக் கொண்டு ஆரம்பமான சூரியன் பட்டிதொட்டியயெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. வரட்சியாக இருந்த வானொலி நேயர்களுக்கு சூரியன் வரப்பிரசாதமாக மாறியது. பேச்சுதமிழில் அறிவுப்புகள் நேயர்களுடனான நேரடி தொலைபேசி அழைப்பு கலந்துரையாடல்கள் என சூரியன் வெற்றிக்கொடிநாட்டிக்கொண்டிருந்தபோது அதே ஆண்டு சக்தி எவ்எம் என்ற எதிர்க்கடை பிரபல அறிவிப்பாளரும் நீலாவணன் என்ற ஈழத்து கவிதைகளில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய கவிஞரின்(இவர் பற்றிய ஒரு சர்ச்சை அடுத்த பதிவில்)மகனான எழில்வேந்தன் தலைமையில் இன்னொரு இளைஞர்கள் பட்டாளத்துடன் தொடங்கப்பட்டது. ரஜனி கமல், விஜய் அஜித் போல் சக்தி என்றால் சூரியன் என்ற போட்டி வானொலிகளுக்கிடையே மட்டுமல்ல நேயர்களுக்கிடையில் கூட ஏற்பட்டது.
சக்தியில் காலை வணக்கம் தாயகத்தில் பல அறிவுபூர்வமான நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். திரு.எழில்வேந்தனுடன் லோஷன் என்ற புதியவர்(எமக்கு பழையவர்), இலக்ஷ்மன்(அஞ்சனன்), ரமணிதரன்(சிலவேளைகளில்) போன்றவர்கள் இணைந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டுசென்றார்கள்.
சிலநாட்களில் இலங்கையின் பிரபல நிறுவனமான ஈஏபியினால் சுவர்ணஒலி என்ற வானொலி நம்நாட்டு அறிவிப்பாளர்கள் மேல் நம்பிக்கை வைக்காமல் இந்தியாவிலிருந்து யுகேந்திரனையும்(தற்போதைய யுகேந்திரன் வாசுதேவன் நாய்ர்)மலேசியாவிலிருந்து மாலினியையும் ((தற்போதைய மாலினி யுகேந்திரன் )கொண்டு நிகழ்ச்சி படைத்தார்கள். இந்த வானொலியில் தான் முதன்முதலில் மொழிக் கொலைகள் ஆரம்பித்தன எனலாம். சிலகாலத்தில் இந்த வானொலி நிறுத்தப்பட்டுவிட்டது. இந்தவானொலியால் யுகேந்திரன் மாலினி திருமணம் மட்டும் நடந்த ஒரு நல்லவிடயமாகும்.
சில காலங்களுக்கு முன்னர் இன்னொரு வானொலியின் ஆட்சி மாற்றம் காரணமாக வெற்றி என்ற பெயரில் இன்னொரு புதிய வானொலி அறிமுகமானது. இவர்கள் பெரும்பாலும் நல்ல நிகழ்ச்சிகளே செய்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளினதும் நேரம் அதிகம். சில நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட 4 மணித்தியாலம். ஆகக்குறைந்தது 2 மணித்தியாலம் ஒரு நிகழ்ச்சி என்றால் ஒரு நேயரால் ஓரளவு கேட்கலாம் ஆனால் 4 மணித்தியாலம் என்றால் அவரால் நிச்சயமாக முழு நிகழ்ச்சியையும் கேட்கமுடியாது. இது நேயர்களை தங்கள் வானொலியுடன் முற்றுமுழுதாக இருக்கவைக்கும் உத்தி என்றாலும் சிலவேளைகளில் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கோ அல்லது ஒருகதைக்கோ விடை தெரிய நிகழ்ச்சி முடிவு மட்டும் இருக்கவேண்டும் என்பது வேலைப்பளு உள்ளவர்களுக்கு கஸ்டமான காரியம்.
கால மாற்றமும் கேபிள் டிவிக்களின் அதிகரித்த வருகையும் அந்த தொலைக்காட்சிகளில் அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் பாணியும் நம்மவர்களையும் தொத்திக்கொண்டது. இதனால் தமிழ் மெல்ல மெல்ல குறையத்தொடங்கியது. யாருக்காக இந்தப்பாடலை கேட்க விரும்புகிறீர்கள் போய் யாருக்கு டெடிக்கேட் செய்ய விரும்புகிறீர்கள் என தமிங்கிலீஸ் பெரும்பாலனவரது நுனிநாக்கில் விளையாடத்தொடங்கியது.
இது சிலவேளைகளில் ஆங்கிலம் பெரிதாக தெரியாத நேயர்களைப் பாதிக்கத் தொடங்கியது. அறிவிப்பாளர் ஆங்கிலத்தில் பேச நேயரோ என்னசெய்வது என்ற அறியாமல் தட்டுத்தடுமாறுவார்.
சில இடங்களில் நாம் தமிழ்மொழிக்குள் நுழைந்த மாற்றுமொழிகளுடன் ஒத்துப்போவதில் தப்பில்லை. அதற்காக நிகழ்ச்சியின் பெயரில் தொடங்கி அறிவிப்புவரை ஆங்கிலம் தேவையா? பெரும்பான்மை இன வானொலிகளைக்கேட்டுப்பாருங்கள் அவர்கள் தங்கள் மொழியிலையே கூடுதலாக உரையாடுவார்கள்.
தமிழை வளர்க்கின்றேன் என்றுவிட்டு ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளை நடத்துவதும் ஆங்கிலத்தை வேண்டுமென்றே திணிப்பதும் தமிழ்மொழி அபிமானிகளிடம் இவர்கள் மேல் கசப்பையே ஏற்படுத்துகின்றது.
முன்னைய நாட்களில் நேயர்களின் கடிதங்களை நிகழ்ச்சி ஒன்றில் சேர்த்துக்கொள்வார்கள் அதில் நேயர்கள் கூறும் விமர்சனங்களை வாசித்து தங்கள் கருத்தை வானொலி அறிவிப்பாளரோ அல்லது நிகழ்ச்சிக்கு பொறுப்பானவரோ கூறுவார். ஆனால் இன்றைக்கு அப்படியான நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. தினக்குரல் என்ற ஒரே ஒரு பத்திரிகையில் முழுப்பக்கத்தை இலத்திரனியல் ஊடகங்கள் பற்றிய விமர்சனத்திற்க்கு ஒதுக்கினாலும் சில பந்திகள் மட்டும் நம் நாட்டு ஊடகங்கள் பற்றிய விமர்சனத்திற்க்கு ஒதுக்கப்படுகிறது. ஏனைய இடத்தில் தொல்காப்பியனின் பேட்டியோ இல்லை ராதிகா புதிய நாடகத்தில் நடிக்கும் செய்தியோ இடம் பெறும்.
அண்மையில் இடம்பெற்ற ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் அழகாக நிகழ்ச்சியை அழகாகத் தமிழில் தொகுத்தளித்தார். இதுவரை ஆங்கிலத்தில் தொகுப்புகளைக்கெட்டுப் புளித்த அந்த இளம்பாடகர்கள் நிச்சயம் இந்த தொகுப்பாளரையும் அவரது தமிழையும் வியந்திருப்பார்கள்.
ஒரு தொலைக்காட்சியின் குறைகளை ஒவ்வொருவாரமும் யாராவது குறிப்பிடுவார்கள் ஆனால் அவர்கள் மாற்றிக்கொள்வதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு வானொலி தொலைக்காட்சி என்று நாம் குற்றம் சுமத்த விரும்பினால் இந்தப் பதிவு பாகம் பாகமாக வரவேண்டும். இவர்களிடம் எந்த நிறைகளும் இல்லையா எனக்கேட்டால் நிச்சயமாக நிறைய இருக்கிறது ஆனால் அதற்க்கு முன்னர் இவர்கள் தங்கள் குறைகளை குறிப்பாக மொழிக்கொலையை நிறுத்தினால் இலங்கை வானொலிகள் சூரிய சக்தியுடன் சேர்ந்து தென்றலாக ஒலித்து வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
எழுதியது வந்தியத்தேவன் at 13 கருத்துக் கூறியவர்கள்
ஹாட் அண்ட் சவர் சூப் 29-07-2009
மீண்டும் சர்ச்சையில் திரிஷா
சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடந்த விருந்தொன்றில் குடித்துவிட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமந்த் பதானியுடன் ரகளையில் திரிஷா ஈடுபட்டதாக ஒரு செய்தி அடிபட்டது. பத்திரிகைகளில் வெளிவந்த இந்தச் செய்திக்கு ஏனோ இணையங்களில் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. சிலவேளை சர்ச்சையும் நைட் கிளப்பும் திரிஷா வாழ்க்கையில் சகஜமான நிகழ்வென நினைத்தார்களோ தெரியாது. வழக்கம் போல் திரிஷாவின் தாய்க்குலம் இந்தச் செய்தியை மறுத்துள்ளார். அத்துடன் திரிஷாவும் பதானி என்பவரைத் தனக்குத் தெரியாது எனக் கூறியுள்ளார். அதேவேளை தன்னைக் குறிவைத்து வதந்திகளைப் பரப்புபவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் திரிஷா கூறியுள்ளார். கவனமாக இருங்கள் மக்காள்.
அரசியல்
டி.எஸ். காயத்ரி ஸ்ரீனிவாஸ் என்ற திமுகவின் மாநில தொண்டரணி இணைச் செயலாளர் ஜூனியர் விகடனினால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பெயரில் புரோக்கராகச் செயல்ப்பட்டு மத்திய மாநில அமைச்சர்கள் ஊடக பல ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக ஜூவி செய்திவெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு எப்படியும் தமிழக நாளிதழ்களுக்கும் இணையங்களுக்கும் நல்லதொரு தீனி கிடைத்துள்ளது. ஏற்கனவே ஜீவியில் தன் பெயர் வரக்கூடாது என ஆ.ராசா கோர்ட்டில் தடைவாங்கியிருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு விகடன் குழுமத்திற்க்கு சார்பாக தீர்ப்பானபின்னர் இந்த மோசடியை ஜீவி அம்பலப்படுத்தியுள்ளது. தமிழக அரசு இவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழிசை விருதுகள்
இசையருவி நடத்திய தமிழிசை விருதுகள் கடந்த சனி ஞாயிறுதினங்களில் இசையருவியில் ஒளிபரப்பினார்கள். கடந்த வருடம் வெளிவந்த தமிழ்த் திரைப்பட இசை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு வ்ழங்கினார்கள். பெயரில் தான் தமிழிசை விருதுகள் ஆனால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விஜய் ஆதிராஜும் சின்மயியும் ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சியை நடாத்தினார்கள். விருதுவாங்கியவர்களும் ஆங்கிலத்திலேயே பதிலளித்தார்கள். கலைஞர் குழுமத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தான் தமிழில் பெயர். அடுத்தமுறை தமிழில் பேசினால் பேசுபவர்களுக்கு இலவச ஒட்டியாணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தமிழக அரசு அறிவித்தால் அனைவரும் ஏதோ முயற்சி செய்வார்கள். எப்படியும் கலைஞர் காலத்தில் தமிழைச் சாகடிக்கவென்றே பேரன்களும் அமிர்தம் இராம நாராயணன்களும் முயல்கிறார்கள். ஞானி சாருவும் இதெற்கெல்லாம் குட்டு வைக்கமாட்டார்கள்.
கிரிக்கெட்
மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் தொடரை வென்ற வங்கதேச அணி நேற்று ஒருநாள் தொடரையும் வென்றுவிட்டது. நேற்றைய போட்டி வங்கதேசம் விளையாடிய 200ஆவது ஒருநாள் போட்டியாகும். இரண்டாம் தர மேற்கிந்தியத்தீவுகளுடன் விளையாடினாலும் போட்டி பலமாகவே இருந்தது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் ஒரு டெஸ்ட் விளையாடும் நாட்டுடன் முதல் முறையாக தொடர் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச புதிய அணித்தலைவர் ஷகீப் அல் ஹசன் சகலதுறைகளிலும் பரிணமிக்கின்றார். மூன்றாவதும் இறுதியுமான போட்டிக்கு மேற்கிந்தியத்தீவுகளின் கிறீஸ் ஹெயில் தலைமையிலான பலமிக்க அணி களமிறங்குமென்கிறார்கள்.
எழுதியது வந்தியத்தேவன் at 1 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், கிரிக்கெட், சூப், திரிஷா, விருதுகள்
தமிழ்சினிமாவைப் புறக்கணிக்கிறாரா இசைப்புயல்
இன்றைய நாளிதழ் ஒன்றில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தமிழ் சினிமாவைப் புறக்கணிக்கிறார் என நடிகர் சங்கப் பொதுச் செயளாளர் ராதாரவி சீறிப்பாய்ந்திருக்கிறார்.
ரகுமான் தமிழ்த் திரையுலகைப் புறக்கணிக்கிறார் என்றும் தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களை இழுத்தடிக்கிறார் என்றும் ராதாரவி குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் அவர் சினிமாவுக்கு அறிமுகமானது கவிதாலயா மூலமே தவிர ஸ்லம் டோக் மில்லியனர் மூலம் அல்ல எனவும் விசனித்துள்ளார்.
அதுமட்டுமல்ல ரகுமானிற்க்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்த திகதிகேட்டபோது தமக்கு திகதி தராமல் வேறு ஒரு மாநிலத்தில் பாராட்டு நடத்த சம்மதித்திருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவை ஆஸ்கார் நாயகன் புறக்கணித்திருக்கிறார். கடந்த முறை சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வாங்கிய ரகுமான் இந்தமுறை வாழ்நாள் சாதனையாளருக்கான சிவாஜி விருதை வாங்கவரவில்லை.
எந்திரன் ராவணன் தவிர வேறை தமிழ்ப் படங்களில் ரகுமான் இதுவரை ஒப்பந்தமாகவில்லை. ஹிந்தித் திரைப்படங்களுக்கு அதிகம் இசையமைக்கும் ரகுமான் தமிழ்த் திரையுலகை புறக்கணிப்பது கவலையளிக்கிறது.
இதேவேளை பிரமாண்ட படங்களுக்கும் பிரமாண்ட இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் ரகுமான இசையமைக்கிறார் என்ற குற்றச்சாட்டும் சில காலங்களாக திரையுலகில் அடிபடுகிறது,
இசைப்புயல் மீண்டும் சொந்த மண்ணுக்குத் திரும்பவேண்டும் என்பதுதான் இசையார்வளர்களின் விருப்பம்.
எழுதியது வந்தியத்தேவன் at 8 கருத்துக் கூறியவர்கள்
ராஜாவும் கார்த்திக்கும் - பகுதி 1
அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஆரம்பித்த நவரச நாயகன் கார்த்திக் இசைஞானி கூட்டணி நினைவெல்லாம் நித்யா, வருஷம் 16, அக்னி நட்சத்திரம், கோபுரவாசலிலே, கிழக்குவாசல், தெய்வவாக்கு என பல படங்களில் வெற்றிக்கொடி நாட்டியது.
1. பனிவிழும் மலர் வனம்
ராஜாவின் எவர்கிரீன் ஹிட்டுகளில் இந்தப்பாடலும் ஒன்று. மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ராஜாவின் அனைத்துப்பாடல்களும் இனிமை. இந்தப்படம் ஒரு மியூசிக்கல் ஹிட் என்றே கூறலாம். ராஜாவின் ஆர்ப்பாட்டமில்லாத மெலடியும் வைரமுத்துவின் காதல் வரிகளும் பாடலை உச்சத்துக்கு கொண்டு சென்றது என்றால் மிகையாகது. அத்துடன் எஸ்.பி.பியின் குரலும் குறிப்பாக பனிவிழும் மலர் வனம் என்ற வரிகளை ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமாக பாடுவார். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இந்தப்பாடலும் ஒன்று.
2. நான் தேடும் செவந்திப்பூவிது
இன்னொரு எவர்கிரீன் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல். ஆனால் படமாக்கியவிதம் சொதப்பல். பாடலுக்கு முன்னால் இசைஞானி பாடும் ஆலாவிற்கும் அதனைத் தொடர்ந்து வரும் கிட்டார் இசைக்கும் எத்தனையோ விருதுகள் கொடுக்கலாம். முதல் சரணத்தில் இடைஇசையாக வரும் புல்லாங்குழலும் கிட்டாரும் மயக்கம் தரும். கூடப்பாடும் எஸ்.ஜானகியின் தேன்குரலும் இந்தப்பாடலுக்கு பிளஸ். இந்தபாடலைக்கேட்டால் கட்டாயம் காதல் தேசத்திற்க்கு போகும் எண்ணம் எவருக்கும் வரும்.
3. காதல் கவிதைகள் படித்திடும்
"I love this idiot, I love this lovable idiot" என்ற சித்ராவின் குரலுடன் இனிமையான புல்லாங்குழலுடன் தொடங்கும் இந்தப்பாடலும் என்றைக்கும் கேட்கும் இனிமையான மெலடி. பாடுநிலா எஸ்.பி.பியும் சின்னகுயில் சித்ராவும் இணைந்து கலக்கிய பாடல். பல்லவியில் ஆண்குரல் பாடிக்கொண்டிருக்கும்போதே இதம் தரும் காதல் கவிதைகள் என் சித்ரா குரல் ஒலிக்கும் இடம் இசைஞானியின் ஸ்பெசல் டச். துறுதுறுப்பான கார்த்திக்கும் படமாக்கியவிதமும் பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.
4. வா வா அன்பே அன்பே
அக்னி நட்சத்திரம் படத்தில் கிடைத்த இன்னொரு முத்து இந்தப்பாடல். அந்தப் படப்பாடல்கள் முழுவது சூப்பர் டூப்பர் ஹிட்ஸ். பத்மஸ்ரீ.கே,ஜே,ஜேசுதாசும் சின்னக்குயில் சித்ராவும் இணைந்துபாடிய டூயட்டுகளில் சிறந்த டூயட்டில் இதுவும் ஒன்று. பி.சி.ஸ்ரீராமின் கமிராவில் நிரோஷா மிகவும் அழகாகத் தெரிவார். படமாக்கப்பட்ட விதம் கவர்ச்சியாக இருந்தாலும் ஆபாசமாக இல்லை. இதயம் முழுதும் ராஜா வசம் தான்.
5. பழமுதிர்ச்சோலை எனக்காகதான்
வருஷம் 16 படத்தில் பத்மஸ்ரீ.கே.ஜே, ஜேசுதாசின் காந்தக்குரலில் இசைராஜாவின் இசையில் உருவான அழகான மெலடி.முதல் இடைஇசையில் வரும் புல்லாங்குழலும் தபேலாவும் கர்னாடக சங்கீதப்பாணியில் இருக்கும். சரணம் ஆரம்பிக்கும்போது ரம்சின் ரிதம் வெஸ்டேர் ஸ்டைலில் இருக்கும். இரண்டு பாணியையும் இணைத்து ராஜா கலக்கியிருப்பார். இரண்டாவது சரணம தூய கர்னாடக இசையாகவே இருக்கும். பாசிலின் இயக்கத்தில் வெளிவந்த அழகான படம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்ஸ்.
எழுதியது வந்தியத்தேவன் at 4 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் இசை, இளையராஜா, கார்த்திக், சினிமா
Flash News :விகடன் ஹேக் பண்ணப்பட்டதா?
விகடன் குழுமத்தின் விகடன்.கொம் என்ற இணையத்தளத்தைக் காணவில்லை. அதன் முகவரியில் இன்னொரு பக்கம் வருகின்றது. என்ன நடந்தது? ஹேக் செய்யப்பட்டுவிட்டதா? இல்லை எதாவது அப்டேட் செய்கிறார்களா?
விகடன் முகவரி டைப் செய்யவரும் இணைத்தளத்தின் முதல்ப்பக்கம் இதுதான்
எழுதியது வந்தியத்தேவன் at 17 கருத்துக் கூறியவர்கள்
சுவாரஸ்யமற்ற டெஸ்டும் சமிந்த வாஸும்
மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு வெள்ளையடிக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களின் துடுப்பாட்டமும் டனேஷ் கனேரியாவின் சுழலும் மூன்றாவது டெஸ்ட்டை பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றிகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டு அதிலும் சங்கக்கார, அஞ்சலோ மத்யூஸ் இருவரினாலும் அதுவும் முடியாமல் இறுதியில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
முதலாவது இனிங்ஸ்சில் பாகிஸ்தான் மொகமட் யூசுப், குராம் மன்சூர் இருவரினதும் 90களால் 299 ஓட்டங்களை எடுத்தது. மொகமட் யூசுப் 90களில் தேவையற்ற ஓட்டம் ஓடி தன் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். திலான் துஷாரா தன் முதலாவது 5 விக்கெட்டுகளை எடுத்தார். 83 ஓட்டங்கள் மாத்திரம் கொடுத்திருந்தார்.
இலங்கை அணி தன் முதலாவது இனிங்சில் மீண்டும் அணிக்குத் திரும்பிய டனேஷ் கனேரியாவின் பந்துவீச்சில் 233 ஓட்டங்களுக்கு சுருண்டது. முதல் இரண்டு போட்டிகளிலும் அவ்வளவு சோபிக்காத ஜெயவர்த்தன 79 ஓட்டங்களை பெற்றார். கனேரியா 62 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தன் இரண்டாவது இனிங்சில் சொயிப் மாலிக்கின்(134) சதமும் மிஸ்பா உல் ஹக்(65), கம்ரன் அக்மல்(74) இருவரினதும் அரைச்சதங்களும் கைகொடுக்க பாகிஸ்தான் இந்ததொடரில் தன் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையான 425 ஐ ஒன்பது விக்கெட்டுக்களுக்கு இழந்து ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. ரங்கன ஹேரத் 157 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது இவரது இத்தொடரின் இரண்டாவது 5 விக்கெட்டுகள் ஆகும்.
492 என்ற இமாலய இலக்கை நோக்கி தன் இரண்டாவது இனிங்சை தொடங்கிய இலங்கை அணி சங்கக்கார, சமரவீர, பரணவிதான அஞ்சலோ மத்யூஸ் போன்றவர்களின் பொறுமையான துடுப்பாட்டத்தினால் தோல்வியில் இருந்து தம்மைக் காத்துக்கொண்டார்கள் என்றே கூறவேண்டும். இன்றைய ஆட்டத்தில் சங்கக்கார அல்லது மத்யூஸ் இருவரில் ஒருவரது விக்கெட் விழுந்திருந்தாலும் ஆட்டம் பாகிஸ்தானுக்கு சாதகமாகவே இருந்திருக்கும். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களினால் இவர்களது விக்கெட்டை சாய்க்கமால் போகவே இரண்டு தலைவர்களும் சேர்ந்து ஆட்டம் சமநிலையில் முடிவுக்கு வந்ததாக அறிவித்தார்கள்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்ததொடரை இரண்டுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் இலங்கை அணி வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இதுவரை இலங்கை அணி பாகிஸ்தானை இலங்கையில் வைத்து தொடர் வெற்றி ஈட்டியதில்லை. புதிய அணித்தலைவர் சங்கக்காரவின் புத்திசாலித்தனமான ஆட்ட நுட்பங்களும் அபார துடுப்பாட்டமும் இளமையான புதுமுக வீரர்களும் அவரது முதல் தொடரே வெற்றி பெற வைத்தது.
இலங்கைஅணியைப் பொறுத்தவரை அணித்தலைவர் சங்ககாராவும் பரணவிதான, அஞ்சலோ மத்யூஸ் திலான் சமரவீர போன்றவர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க, பாகிஸ்தான் அணியில் மாலிக், மொகமட் யூசூப், அறிமுக வீரர் பாவாட் அலாம் ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தார்கள்.
பலராலும் எதிர்பார்க்கப்பட்ட மகேல ஜெயவர்த்தன, மாலிந்த வர்ணபுர, டில்ஷான் அவ்வளவு சோபிக்கவில்லை. பாகிஸ்தானைப் பொறுத்தவரை அணித்தலைவர் யூனூஸ் கான் துடுப்பாட்டத்தில் சொதப்பினார் என்றே கூறவேண்டும்.
பந்துவீச்சில் முரளி இல்லாத குறையை ரங்கன ஹேரத் நிரப்பிவிட்டார் என்றே சொல்லவேண்டும். வேகப்பந்துவீச்சில் தொடரில் 17 விக்கெட்டுகளைப் பெற்ற நுவான் குலசேகரவும் திலான் துஷாராவும் சோபித்தார்கள். நுவான் குலசேகர முதன் முதலாக தொடர் நாயகன் விருதையும் பெற்றார். அஜந்த மெண்டிசின் சுழல் வேலை செய்யவில்லை. முரளி விளையாடியிருந்தால் நிச்சயம் ஆகக் குறைந்தது 20 விக்கெட்டுகளாவது வீழ்த்தியிருப்பார்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் கடைசிப்போட்டியில் விளையாடிய டனேஷ் கனேரியாவும் சஜீட் அஜ்மலும் பிரகாசித்த அளவிற்க்கு உமர் குல்லால் பிரகாசிக்கம் முடியவில்லை. உமர் குல் 7 விக்கெட் மாத்திரமே மூன்று போட்டிகளில் வீழ்த்தினார் அத்துடன் அதிக ஓட்டங்களையும் கொடுத்தார்.
ஓய்வு பெற்ற சிங்கம்.
சமிந்த வாஸ் இலங்கை அணியின் அச்சுறுத்தும் வேகப் பந்துவீச்சாளார். ஒருபக்கம் முரளி சுழலில் மாயம் செய்ய இன்னொரு பக்கம் வாஸ் வேகத்தில் அதிரடி காட்டுவார். இன்றைய போட்டியுடன் சமிந்த வாஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
1994 ஆம் ஆண்டு கண்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தன் டெஸ்ட் வாழ்க்கையை தொடங்கிய வாஸ் அதே பாகிஸ்தானுக்கு எதிராக கொழும்பில் தன் டெஸ்ட் வாழ்க்கையை நிறைவு செய்தார். முதல் போட்டியில் வாஸினால் எந்தவித விக்கெடும் வீழ்த்தப்படவில்லை. இறுதிப்போட்டியில் குராம் மன்சூரின் விக்கெட்டை வீழ்த்தினார். 111 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 355 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 110 ஓட்டங்களையும் எடுத்திருந்தார். இவர் டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 3089 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
இலங்கை கிரிக்கெட்டில் வாஸின் பங்கு மகத்தானது. இன்றுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் வாஸ் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுவார்.
எதிர்வரும் 30ந்திகதி இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டிகள் தம்புள்ளையில் தொடங்குகின்றது. அப்ரிடி, ரசாக் என அதிரடி வீரர்களுடன் பாகிஸ்தான் அணியும் முரளி, ஜெயசூரியா, தரங்க போன்றவர்களுடன் இலங்கை அணியும் பலப் பரீட்சை நடத்த இருக்கின்றார்கள். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை பாகிஸ்தான் வென்று டெஸ்ட்டில் விட்ட தோல்விக்கு பழிதீர்க்குமா? இல்லை இலங்கை அணி இதனையும் வென்று சாதனை படைக்குமா?
எழுதியது வந்தியத்தேவன் at 1 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் இலங்கை, கிரிக்கெட், பாகிஸ்தான், வாஸ், விளையாட்டு
ராஜாவும் ரஜனியும் பகுதி - 2
சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் பகுதி 2 உடனடியாகத் தரமுடியவில்லை வருந்துகிறேன்,
6. மாசி மாசம் ஆளான பொண்ணு
பத்மஸ்ரீ கே.ஜே.ஜேசுதாஸின் காந்தக் குரலும் சுவர்ணலதாவின் குரலும் இணைந்து இசைஞானியுடன் கொடுத்த அருமையான மெலடி. தர்மதுரை படத்தில் இடம்பெற்ற பாடலின் காட்சிகள் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் பாடலைத் தனித்துக்கேட்கும்போது அருமையாக இருக்கும். ஆரம்ப ஆஆவும் அதன் பின்னர் வரும் ஹோரசும் ரிதமும் காட்சி எப்படியிருக்கும் என ஓரளவு ஊகிக்ககூடியதாக இருக்கும். ரஜனிக்கும் கெளதமிக்கும் இந்தப்பாடலில் நல்ல கெமிஸ்ரி இருக்கும்.
7. கண்மணியே காதல் என்பது
ஆறிலிருந்து அறுபது வரை என்ற அற்புதமான படத்தில் எஸ்.பி.பியும் எஸ்.ஜானகியும் இணைந்து கொடுத்த அருமையான பாடல். ஆரம்பத்தில் வரும் வீணையின் நாதம் இசைஞானியின் அக்மார்க் முத்திரை. இந்தப்பாடலின் சீறப்பு கண்மணியே காதல் என்பது எனத் தொடங்கும் பல்லவி முடியும் வரை ஒரே மூச்சில் இருவரும் பாடுவதுபோல் தெரியும். முதலாவது சரணத்தில் வரும் லாலலலால என்ற கோரஸ் சரணத்தில் ஒரே ட்ராக்கில் வரும்படி இசையமைத்திருப்பார். இதே லாலலாலால இரண்டாவது சரணத்தில் ஆரம்பத்திலும் பின்னர் இடையிலும் வரும் அழகு தனிதான்.
8. ராக்கம்மா கையைத் தட்டு
பிபிசியின் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த பாடல்கள் பட்டியலில் இடம் பெற்ற ஒரேயொரு தமிழ்சினிமாப்பாடல் இதுதான். பத்மஸ்ரீ பாடுநிலா எஸ்.பி.பியின் இனிமையான குரலும் சுவர்ணலதாவின் குரலும் இடையில் ஒலிக்கும் குனித்த்த புருவம் என்ற தேவாரமும் சோபனாவின் நடனமும் அழகுக்கு அழகு சேர்க்கின்றது. பாடலின் ஆரம்பத்தில் ரம்ஸ் உபயோகித்திருக்கும் ஞானி குனித்தபுருவத்திற்க்கு மிருதங்கத்தை உபயோகித்து அந்த இடத்தில் கர்னாடகபாணி இசை அமைத்திருப்பார். பின்னர் ஒரு ம்ம்ம் என்ற ஹம்மிங்குடன் ராக்கம்மா அதே ராகத்தில் அமைந்திருக்கும். இளையராஜா, மணிரத்னம், ரஜனிகாந்த், சந்தோஷ்சிவன் என தமிழ்சினிமாவின் பல நட்சத்திரங்கள் இணைந்தபடம். இனி இப்படியொரு படம் வராது. இந்தப்படத்தில் இடம்பெற்ற புத்தம்புது பூப்பூத்ததோ நல்லதொரு பாடல் படத்தின் நீளம் கருதி வெட்டிவிட்டார்கள். நெட்டில் கிடைத்தால் லிங்க் கொடுக்கவும்.
9. மலைக்கோயில் வாசலில்
இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இன்னொரு திறமைசாலி பாடகர் மனோ ராஜாவின் இசையில் பல பாடல்கள் பாடியவர். வீரா படத்தில் சுவர்ணலதாவுடன் சேர்ந்து இவர் பாடியிலுள்ள இந்தப்பாடலும் நல்லதொரு மெலடி. பாடலுடன் சேர்ந்து இசைக்கும் ரம்ஸ் கலக்கல். மீனாவின் அழகும் ரஜனியின் ஸ்டைலும் பாடலுக்கு பிளஸ்.
10. செனோரிட்டா ஐ லவ் யூ
ஜானி தமிழ்சினிமாவில் தவிர்க்கமுடியாத மகேந்திரனின் படம். பாடுநிலா எஸ்.பி.பியின் மகுடத்தில் இன்னொரு வைரம் இந்தப்பாடல். பாடலின் ஆரம்பத்தில் வரும் கிட்டாரின் அந்த இசையும் ரம்சின் ரிதமும் கலக்கல்.
இன்னும் எத்தனையோ பாடல்கள் மனதைக் கவர்ந்தாலும் ரஜனி ராஜா என்றால் உடனே நினைவுக்கு வருபவை இவையே. அடுத்து ராஜாவும் கார்த்திக்கும் இணைந்த படங்களின் பாடல்கள்.
எழுதியது வந்தியத்தேவன் at 3 கருத்துக் கூறியவர்கள்
பதிவுலகப் பதிகம்
கடந்த சில நாட்களாக பதிவுலகத்தை ஆட்டிப்படைத்துவரும் பத்து என்ற விடயத்தைப் பற்றி பதிவு எழுதாவிட்டால் பதிவுலக அம்மன் கண்ணைக் குத்தும் என்ற ஐதீகத்திற்காக என் பத்துகள் டாப் டென் பாணியில்.
சூடான இடுகை
தொடர்ந்து பல வாரங்களாக முதலிடத்தில் இருந்த சூடான இடுகை இந்தவாரம் பதிவுலகத்தைவிட்டு வெளியேற்கின்றது. 18+, வயதுவந்தவர்களுக்கு மட்டும், போன்ற சமாச்சாரங்களால் பல இடுகைகள் சூடான இடுகையில் வந்தன, தமிழ்மணம் மீண்டும் சூடான இடுகையை இடவேண்டும் என்பது ஒவ்வொரு சராசரிப் பதிவரினதும் எதிர்ப்பார்ப்பு. சூடான இடுகை - வடை போச்சே.
மொக்கை
கலாய்த்தல், மொக்கை என்ற பெயரில் பதிவர்கள் எழுதுகின்ற காமெடிப் பதிவுகளால் பத்தாவது இடத்தில் மொக்கை. சிலவேளை சில காமெடிகள் ஓவராகப்போய் சீரியஸ் பிரச்சனையாகவும் மாறியுள்ளன. ஆனாலும் பதிவுலகத்தை நன்கு தெரிந்தவர்கள் இவற்றை மொக்கையாகவே கருதுகிறார்கள். கலாய்த்தலில் குசும்பன், வால்பையன், சுகுமார் சுவாமிநாதன் போன்றோர்களின் சிறந்த பதிவுகள் ரசிகர்களிடையே பாராட்டைப் பெறுகின்றன. மொக்கை - பொழுதுபோக்கு
9 .ஏஜோக்
சிலநாட்களாக முன்னணியிலிருந்த ஏஜோக் சில இடங்கள் பிந்தள்ளி ஒன்பாதம் இடத்தில். ஜாக்கி சேகர், கேபிள்சங்கர் தங்கள் பாணியில் ஏஜோக் அடித்து அசத்துகிறார்கள். விகடனின் வயாகரா தாத்தாவை ரீமேக் செய்யும் கீத்தின் ஜோக்குகளும் சபாஷ் போடவைக்கின்றன. ஒரு சில இடத்தில் ஆபாசம் மேலோங்கினாலும் வயதுவந்தவர்களுக்கானது எனமுதலிலையே டைட்டில் கார்ட்டில் போடுவதால் மன்னிக்கலாம். ஏஜோக் - ரகசியப்புன்னகை.
8.தொடரிடுகை
பதிவுலகத்தை ஆட்டிப்படைக்கும் சிறந்த படைப்பு. பத்துக்கேள்வி, 12 கேள்வி என ஆரம்பத்தில் இருந்தாலும் சில இடங்களில் 32 கேள்விகள் என மக்களின் பொறுமையைச் சோதித்தார்கள். பல இடங்களில் சுவாரஸ்யம் இருந்தாலும் சில இடங்களில் கொட்டாவி விடுகிறார்கள் ரசிகர்கள். தொடரிடுகை - விடாது கருப்பு.
7. விமர்சனம்
தமிழ் சினிமாவையும் உலக சினிமாவையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துமேய்ந்து வலையில் மேயும் பல ரசிகர்களை தோரணை, ஏகன், வில்லு, வாமனன் போன்ற மஹா மொக்கைகளிடம் இருந்து காப்பாற்றிய பெருமை இந்த விமர்சகர்களையே சாரும். பிளார்பாரம் கடைகளில் பழைய ஆங்கிலப்படச் டிவிடிகளைத் தேடிப்பார்க்க செய்கிறார்கள். பிறருக்காக மொக்கைப்படம் பார்த்து விமர்சனம் எழுதும் பதிவர்களுக்கு விரைவில் வாழ்நாள் சாதனை விருது கிடைக்கும் என விபரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. விமர்சனம் - வருமுன் காப்போம்
6. விருதுகள்
பட்டாம்பூச்சிவிருது, கரப்பான் பூச்சி விருது என தொடங்கிய விருதுகள் இப்போது சுவாரஸ்ய பதிவர் விருதில் வந்து நிற்கிறது. அடுத்தகட்டமாக பத்ம விருதுகள் கூட கிடைக்கலாம். விருது என்பது முத்தம் போல கொடுப்பதும் சுகம் வாங்குவதும் சுகம். சிலர் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். செந்தழல் ரவி பலருக்கு விருது கொடுத்து சாதனை புரியவுள்ளார். விருதுகள் - பாராட்டும் ஊக்கமும்
5. பின்னூட்டம்
முதல் மூன்று இடங்களி இருந்த பின்னூட்டம் சற்றுக்கீழிறங்கி ஐந்தாம் இடத்தில். மீ த பர்ஸ்ட் என ஆரம்பித்து கலக்கல், :), முடியல என பல இடங்களில் மணிரத்னம் பட வசனங்கள் போல இரத்தினச் சுருக்கமாக இருக்கிறது. 25க்கு மேற்பட்ட பின்னூட்டம் கிடைத்தால் பிரபல பதிவர் ஆகும் யோகம் இருப்பதாக ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றார்கள். மொக்கைப் பதிவுகளுக்கு கிடைக்கும் கைத்தட்டல்களை விட காத்திரமான கருத்துள்ள பதிவுகளுக்கு ஏனோ அவ்வளவு கைத்தட்டல் கிடைப்பதில்லை. இதுபோன்ற சில தவறுகளை நிவர்த்தி செய்தால் பின்னூட்டம் பூஸ்டாக மாறும். பின்னூட்டம் பிறவிப்பயன்
4. தமிழ்மணம்
பதிவுலகத்தில் பிரிக்கமுடியாத ஒரு அங்கம். இடையிடையில் சிலருடன் மல்லுக்கட்டினாலும் பதிவர்களின் வங்கி. சூடான இடுகையை சென்சார் செய்தது ரசிகர்ளிடன் அவ்வளவு வரவேற்பு பெறவில்லை. ஓட்டுப் போடும் மர்மம் சராசரி ரசிகளுக்கு புரியவில்லை. இந்தவார நட்சத்திரம், ஈழம், செய்திகள் போன்றன தமிழ்மணத்தின் பிளஸ்கள் ஆகும். வாசகர் பரிந்துரை மைனஸ். மொத்தத்தில் தமிழ்மணம் - மணக்கும் மல்லிகை.
3.வாசகர் பரிந்துரை
தமிழ்மணத்தின் வெளியீடான வாசகர் பரிந்துரை ஆரம்பத்தில் ஸ்லோவாக புரிந்தாலும் பின்னர் பிக்கப் ஆகிவிட்டது. கமல் படத்தில் வையாபுரி, நாகேஸ் போன்றவர்களுக்கு எப்படி இடம் இருக்கிறதோ அதேபோல் ஒரு சில பதிவர்களின் பதிவுகள் மட்டும் வாசகர் பரிந்துரையில் இடம் பிடிக்கும் மர்மம் புரியவில்லை. கள்ளஓட்டுப்போடும் முறையை மாற்றியிருந்தாலும் ஓப்பன் ஐடி மல்லுக்கட்டுகிறது. வாசகர் பரிந்துரை - புரிந்தும் புரியாமலும்.
2.அனானி
அன்டிஹீரோ சப்ஜெக்டான அனானி பலரின் மனதைக் கவர்ந்தாலும், சிலருக்கு வில்லந்தான். அனானியின் தம்பியான அதர் ஆப்சனும் அனானியும் செய்யும் சேட்டைகளினால் டவுசர் கிழிந்தவர்கள் பலர். எந்தவித ஐடியும் வலையும் இல்லாத சாராசரி பி சென்டர் சி சென்டர் ரசிகர்களுக்கு அனானி வரப்பிரசாதம். மட்டுறுத்தல் என்ற சென்சார் அனானிகளுக்கு முட்டுக்கட்டை. அனானி - ஆர்ப்பாட்டம்.
1. பதிவர்
சன் டிவியில் எப்படி அவர்கள் தயாரிப்பு முதலிடமோ அதுபோல் பதிவுலகில் பதிவர் தான் முதலிடம். ஆரம்பகாலத்தில் சில பதிவர்கள் தடுமாறினாலும் பின்னர் தட்டுத் தடுமாறி வலையுல நுண்ணரசியலை அறிந்து தங்களை நிலைநிறுத்திக்கொள்கிறார்கள். பதிவர்களின் திறமையைப் பொறுத்து அவர்கள் பல விருதுகள் பெற்றாலும் பிரபல பதிவர் என்ற விருது அவர்களுக்கு ஆஸ்கார் விருதுக்கு நிகரான விருதாகவே கருதவேண்டும். பதிவர் - பாண்டித்தியம்.
புதுவரவு
நீங்களே கண்டுபிடியுங்கள்?
டிஸ்கி: கோபித்துக்கொள்ளமாட்டார்கள் என்ற எண்ணத்தில் சில நண்பர்களின் பெயரை பயன்படுத்தியிருக்கிறேன். புதுவரவாகவும் ஒரு விடயம் எழுத இருந்தேன் ஆனால் ஓவர் கலாய்த்தால் உடலுக்கு ஆகாத என்ற தத்துவப்படி கலாய்க்கவில்லை.
எழுதியது வந்தியத்தேவன் at 3 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் நகைச்சுவை, பதிவர் வட்டம், மொக்கை
ஹாட் அண்ட் சவர் சூப் 22-07-2009
பதிவுலகம்
அண்மைய நாட்களாக பதிவுலகத்தில் பலதரப்பட்ட பிரச்சனைகள், ஒரு அனானியின் அட்டகாசம் முடிவுக்கு வந்துள்ளது. நர்சிம் மீண்டும் பார்முக்கு வந்துவிட்டார். ஆனால் இன்றைக்கு சக்திவேல் எடுத்தமுடிவு கவலைக்குரியது. ஒரு பதிவரைப் பலர் ரவுண்டு கட்டி அடித்ததன் வெளிப்பாடக அவர் பதிவுலகை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார். ஒருவரைக் கலாய்த்தல் என்பது பதிவுலகில் பிரபலமானதும் சுவாரஸ்யமானதுமான ஒரு விடயம். குசும்பன் கலாய்க்காத பதிவர்களா? சக்திவேல் அவர்கள் தன் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
சின்னத்திரை
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் வழக்கம் போல் அட்டகாசமாகவும் அழுகையாகவும் போய்க்கொண்டிருக்கிறது. சென்னை ஜூனியர்கள் பலர் மவுண்ட்பேட்டன் பிரபுவின் பேரன் பேர்த்திகளாக பீட்டர் விடுகிறார்கள். சிலர் நன்றாகப்பாடவும் செய்கிறார்கள். ஒரு சிறுமி கிட்டத்தட்ட 11 மொழிகளில் பாடுகின்ற திறமை இருப்பதாகச் சொன்னதுடன் சில மொழிகளில் பாடி அடுத்த சுற்றுக்குத் தேர்வாகிவிட்டார். நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் மிகவும் சுட்டியாகவும் அழகாகவும் பேசிப் நடுவர்கள் உடபட பார்த்த அனைவரையும் கவர்ந்தான் ஆனால் அவனால் ஓரளவுதான் ஸ்ருதியுடன் பாடக்கூடியதாக இருந்தது அவனை மேடையில் வைத்து எலிமினேட் செய்ய விரும்பாமல் மஹதி அவனை வெயிட் லிஸ்ட்டில் போட்டுவிட்டு பின்னர் பெற்றோருக்கு முன்னால் அவனது குறைகளைச் சுட்டிக்காட்டி அடுத்தமுறை முயற்சி செய் என வாழ்த்தி அனுப்பினார். குழந்தைகளை எப்படிக் கையாளவேண்டும் என்ற விடயம் மஹதிக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. ஏனைய நடுவர்களும் இப்படியே குழந்தைகளுடன் நடந்துகொண்டால் எந்தக் குழந்தையும் தன் தோல்வியை நினைத்து கவலைப்படமாட்டார்கள்.
கிரிக்கெட்
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான கிரிக்கெட் போட்டி தற்போது கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. பாகிஸ்தானில் முதல் இனிங்கிஸில் முகமட் யூசுப் 90 ரன்கள் எடுத்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதுபோல் இருந்தது அந்தக்காட்சி. இலங்கை இனிங்சில் மீண்டும் அணிக்குத் திரும்பிய டேனீஷ் கனேரியா இலங்கை வீரர் ஆஞ்சலோ மத்யூசிடம் தகாத வார்த்தைகள் பேசி தன் சம்பளப் பணத்தில் 50% தண்டமாகச் செலுத்தவுள்ளார். மைதானத்தில் திட்டுவதில் ஆஸி அணிக்கு அடுத்த இடம் பாகிஸ்தான்காரர்கள் தான்.
ஈழத்துமுற்றம்
ஈழத்து வட்டார மொழிபற்றியும் கலை கலாச்சாரம் பற்றியும் கானாப்பிரபாவினால் ஆரம்பிக்கப்பட்டு ஈழத்து வலைப்பதிவாளர்களால் நடாத்தப்படும் ஈழத்துமுற்றம் என்ற வலைமனை பற்றிய செய்தி நேற்றைய மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. ஆரம்பித்து சில நாட்கள்தான் ஆகின்றபோதும் பலரின் எழுத்துக்களால் சொந்த நாட்டு அனுபவங்களையும் பேச்சையும் கேட்கும் போது ஆசையாகத்தான் இருக்கிறது. சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப்போல வருமா!!!.
சூரியகிரகணம்
கடந்த சிலநாட்களாக சகல ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்ட சூரியகிரகணம் வந்துபோய்விட்டது. பலரும் எதிர்பார்த்த சுனாமியும், பூகம்பமும் வரவேயில்லை. நம்புங்கள் நாராயணனை நம்பியவர்கள் முகத்தில் கரி. சுனாமி வராது என சரியாக எதிர்வுகூறிய இலங்கை வானிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு பாராட்டுக்கள். வழக்கமாக இவர்கள் மழை வரும் என்றால் மழை வராது.
இன்று காலை வெற்றி வானொலியில் பேப்பர்த்தம்பி கேட்ட கேள்வி சரியான நக்கல் "அண்ணே டீவியில் கிரகணம் பார்கிறதென்றால் கறுப்புக் கண்ணாடி அணியவேண்டுமா?".
ஜகன்மோகினி என்றைக்கு ரிலீஸ்?
எழுதியது வந்தியத்தேவன் at 6 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் ஈழத்துமுற்றம், கிரிக்கெட், சின்னத் திரை, சூப், பதிவர் வட்டம்
சரித்திரம் படைத்தது இங்கிலாந்து
இங்கிலாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆஷஸ் தொடரில் இரண்டாவது போட்டியில் கடைசிநாளான இன்று அவுஸ்திரேலியாவை 115 ஓட்டங்களால் தோற்கடித்தது இங்கிலாந்து.
லண்டன் லோட்ர்ஸ் மைதானத்தில் 1934 ஆம் ஆண்டிற்க்குப் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும். 75 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத இந்த சாதனையை இன்று அன்றூ ஸ்ரோஸின் இங்கிலாந்து அணி முறியடித்து சரித்திரம் படைத்துள்ளது.
522 என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களை சொறப ஓட்டங்களில் இழந்திருந்தாலும் பின்னர் வந்த கிளார்க்கின் அபார சதத்தினாலும் பிராட் ஹடினுடான சிறந்த இணைப்பாட்டத்தினாலும் தங்கள் தோல்வியை சற்று நேரம் பிற்ப்போட்டது என்றே கூறலாம். இதற்கு மிச்சல் ஜோன்சனும் தன் பங்குக்கு கொஞ்சம் உதவினார்.
அன்றூ பிளின்டோவ் இரண்டாவது இனிங்சில் 92 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து தன் லோர்ட்ஸ் மைதான இறுதிப்போட்டியிலிருந்து இனிமையான நினைவுகளுடன் விடைபெற்றார். போட்டியின் நாயகன் விருதும் இவருக்கே வழங்கப்பட்டது.
ரிக்கி பொண்டிங் வழக்கம்போல் நடுவர்கள் செயல்ப்பாடுகள் சரியில்லை என்ற குற்றச்சாட்டைக் கூறினார். ஒரு போட்டியில் தோற்றால் நடுவர்களையும் எதிரணியையும் ஆடுகளத்தையும் குற்றம் சாட்டும் ஒரே அணி ஆஸி தான்.
2009ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 1 க்கு 0 என்ற நிலையில் முன்னணி வகிக்கின்றது. இன்னும் 3 போட்டிகள் மீதமிருக்கின்ற நிலையில் அவுஸ்திரேலியா தன் திறமையைக்காட்டுமா? இல்லை இங்கிலாந்து இதே உத்வேகத்துடன் எதிர்வரும்போட்டிகளை வென்று கிண்ணத்தை சுவீகரிக்குமா?
எழுதியது வந்தியத்தேவன் at 9 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அவுஸ்திரேலியா, ஆஷஸ், இங்கிலாந்து, கிரிக்கெட், விளையாட்டு
காதல்... காதல்... காதல்...
நேற்றைய விஜய் தொலைக்காட்சி நீயா நானாவில் தற்போது காதலித்துக்கொண்டிருப்பவர்களும் காதலில் தோற்றவர்களும் விவாதித்தார்கள். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கரு.பழனியப்பனும், பாடகி கல்பனாவும் கலந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பலரும் பலதைப் பேசினாலும் ஹைலைட்டான விடயமே மூன்று பெண்களின் கருத்துக்கள் தான்.
முதலாமர் ஒரு பெண்மணி காதலிக்கும் வயசில் தனக்கு ஒரு மகன் இருப்பதாக கூறினார். இவர் தன் மாமனை விரும்பியதாகவும் மாமன் அதிகம் படிக்கவில்லை என்பதால் பெற்றோர்கள் சடுதியில் பணக்கார மாப்பிள்ளை ஒருவரை மணம்முடித்துக்கொடுத்ததாகவும், பெற்றோர்களின் விருப்பத்தை தட்டவிரும்பாதபடியால் தன் மனதுக்கு ஒவ்வாத அந்த திருமணத்தைச் செய்ததாகவும், தன் முதலிரவிலே தன் கணவனுக்கு மாமனுடனான காதலைச் சொல்ல அவர் தன்னை தன் மாமனுடன் சேர்த்துவைக்கிறேன் என்றாராம். பின்னர் தான் குடும்ப கெளரவம், கலாச்சாரம் போன்றவற்றைக் கருது அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இன்றைக்கும் தன் மாமனை நெஞ்சில் சுமப்பதாகவும் கூறினார். இவரது மாமன் இன்னமும் திருமணம் செய்யவில்லையாம். இவர் தன் கணவரை விட்டுவிட்டு வந்தால் ஏற்றுக்கொள்வதாக 10 வருடங்களுக்கு முன்னர் கூறியதாகவும் சொன்னார்.
அவரது காதலை ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் ஒரு பெண் அதுவும் திருமணமான பெண் தன்னுடைய பழைய காதல் பற்றி பொது இடத்தில் தொலைக்காட்சியில் பேசியது துணிச்சலாக இருந்தாலும். அவரது பல கருத்துக்கள் முரண்பாடாகவே இருந்தன. காதலைனையும் விட மனமில்லை அதே நேரம் கணவனுடன் ஏனோ தானோ என வாழ்வதாகவும் கூறினார்.
இந்தப் பெண் செய்வது சரியா?
இன்னொருவர் இளைஞி4 நாட்களுக்கு முன்னர் தான் காதல் முறிந்ததாகவும் தன் வீட்டில் தன் காதலை ஏற்றுக்கொண்டார்கள் என்றும் ஆனாலும் காதலன் தன்னை விட்டு விட்டு இன்னொருவரைக் காதலிப்பதுடன் கூடாத பழக்கங்கள் பழகுவதாகவும் குறிப்பிட்டார். இன்றைக்கும் தன் காதலன் மனம் மாறினால் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருப்பதாகவும் தன் காதலனுக்கு தொலைக்காட்சியினூடாக தன் விருப்பத்தையும் அறிவித்தார். அவர் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டிருந்தார். அடுத்த எதிர்முகாமில் இவரது நண்பி ஒருவர் இருந்தார். அவர் பேசும் போது தன் நண்பி காதலனைப் பிரியும்போது கூட இவ்வளவு உணர்ச்சி வசப்படவில்லை என்றும் இன்றைக்கு அந்தப் பிரிவு அவரை வாட்டுவதாகவும் நண்பிக்கு ஆதரவு கொடுத்தார்.
அடுத்த இளைஞி பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினார். தன் காதலனை செருப்பால் கல்லூரியில் மாணவர்களுக்கு முன்னிலையில் அடித்ததாக ஆங்கிலத்தில் கூற கோபிநாத் அதனை தமிழிழும் ஒருக்கால் சொல்லுங்கள் என தமிழிழும் கூறினார். தான் அடித்தபின்னர் தன் காதலன் தன்னை திருப்பி அடிப்பார் என எதிர்ப்பார்த்ததாகவும் ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் தன் தவறை ஒத்துக்கொண்டதுபோல் சென்றுவிட்டார் என்றும் கூறினார். தன் காதலன் வேலையற்று இருக்கிறார் என்றும் அவரது செலவுகளை தானே செய்ததாகவும் நம்பமுடியாத ஒரு உண்மையையும் சொன்னார்.
இவரை மீண்டும் அதே காதலுடன் சேர்வீர்களா எனக்கேட்டபோது 50% சேரும் ஆசை இருப்பதாகவும் 50% அவரை கைவிடுவது சரியென்றும் சொன்னார். இரண்டும்கெட்டான் மனநிலையில் இருக்கின்றார்.
இந்த மூன்று பெண்களும் துணிச்சலாக தம் கருத்துக்களை வெளியிட்டார்கள், மூன்று பேரும் வெவ்வேறு மனநிலையிலும் இருக்கிறார்கள். பாவம் காதல் இவர்களைப் பாடாய்ப் படுத்துகிறது.
காதலில் தோற்ற அனைவரும் ஒட்டுமொத்தமாக இனி ஒரு காதல் தங்கள் வாழ்க்கையில் இல்லையென்றார்கள்.
காதலித்துக்கொண்டிருப்பவர்களின் பேச்சுக்கள் சுவாரசியமாக இருந்தபோதும் என்னைப்போன்ற இளைஞர்களுக்கு இப்படியொரு காதலி/காதலன் இல்லையே என பொறாமை ஏற்படுத்தியது.
இன்னொரு சுவாரசியமான தலைப்பில் கோபிநாத் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு நடத்தினாலும் சிறப்பு விருந்தினர்களை அதிகம் பேசவிடவில்லை என்பது கண்டனத்துக்குரியது.
எழுதியது வந்தியத்தேவன் at 5 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அனுபவம், காதல், நீயா நானா?, விஜய் டீவி
ராஜாவும் ரஜனியும் - பகுதி 1
இசைஞானி இளையராஜாவின் ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றும் எம் மனதில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது. அதிலும் ராஜா 80களில் இசையமைத்த ஒவ்வொரு பாடல்களும் ராஜாவின் முத்துக்கள் என்றால் மிகையில்லை.
என் உயிருடன் கலந்துவிட்ட ராஜாவின் பாடல்களை ஒரு பதிவில் எழுதிவிடமுடியாது. ஆகவே சில நடிகர்களுக்கு ராஜா இசையமைத்த அந்த முத்துக்களில் இருந்து முதல் பத்துபாடல்களைப் பற்றிய என் கருத்துகளையும் யூடூயூப் உதவியுடன் பாடல்களின் காணொளியையும் தரவிருக்கின்றேன்.
முதலில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் படங்களுக்கு ராஜா இசையமைத்த படங்களில் இருந்து 10 பாடல்கள். இந்தப் பத்துப்பாடல்களைவிட சிறந்த எத்தனையோ 100 பாடல்கள் இருந்தாலும் இவை என் மனதுடன் ஐக்கியமான பாடல்கள். சிலவேளைகளில் பாடகர் பாடகி பற்றிய விபரங்கள் தவறாக அமைந்திருந்தால் பின்னூட்டமூடாக அதனைத் திருத்துங்கள். இனி ராஜா ரஜனி கூட்டணியில் வெளிவந்த சில பாடல்களை ரசிப்போம்.
1. ஏ பாடல் ஒன்று
ப்ரியா படத்தில் ரஜனி ஸ்ரீதேவி ஜோடியாக ஆடும் பாடல். பத்மஸ்ரீ கே.ஜே.ஜேசுதாஸின் காந்தக்குரலும் உமா ரமணனின் தேன்குரலும் இணைந்த கலவையான பாடல். முதல் முறை ஸ்டிரீயோ மூலம் ஒளிப்பதிவான பாடல். எத்தனை தடவையும் கேட்கலாம்.
ரஜனியின் இளமையும் ராஜா உடுப்பும் அவரது கம்பீரத்தைக் கூட்டுகின்ற பாடல். ஸ்ரீதேவி பற்றிச் சொல்லத்தேவையில்லை. இளவரசியாகவே பாடலில் தெரிகின்றார்.
இடை இசையில் வரும் வீணையில் ராஜா கம்பீரமாக கொலுவீற்றிருக்கிறார்.
2. ஆகாய கங்கை பூந்தேன் மலர்
தினமும் இரவில் யூடூயுப்பில் கேட்கும் இன்னொரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல். மலேசியா வாசுதேவனின் கணீர்க்குரலும் எஸ்.ஜானகியின் இளமைக்குரலும் கொஞ்சிவிளையாடும் பாடல். பாடல் ஆரம்பமாகும் போது வரும் ஹம்மிங்கே கேட்பவர்களை மயக்கும். அதன் பின்னர் முதல் சரணத்தில் வரும் ஜானகியின் ஹேஹே ஹம்மிங்கும் அடுத்த சரணத்தில் வரும் மலேசியா வாசுதேவன் அவர்களின் ஹேஹே ஹம்மிங்கும் இந்தப்பாடலின் உயிர் நாடி என்றால் மிகை இல்லை.
தர்மயுத்தம் படத்தில் மீண்டும் ரஜனி ஸ்ரீதேவி கூட்டணி. இந்தப்பாடலில் ரஜனியின் பெரிய கண்ணாடியும் அதனை அவர் சுழட்டுவதும் அவரது ஸ்டைலை இன்னமும் கூட்டுகின்றது. ஸ்ரீதேவி இந்தப்பாடல் படப்பிடிப்பின்போது காலில் காயம் காரணமாக நடனமாடாமல் தரையில் இருந்தபடியும் நடந்தபடியும் நடித்திருப்பார்.
ஒருமுறை ஒரு பேட்டியில் மலேசியா வாசுதேவன் அவர்களே தனக்கு மிகவும் விருப்பமான பாடலாக இந்தப்பாடலைத்தான் குறிப்பிட்டார். அவரின் குரல் ரஜனிக்கு மிகவும் பொருத்தமாகவும் இருந்தது.
3. ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
மீண்டும் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்,ஜானகி கூட்டணியில் அருமையான மெலடி. நெற்றிக்கண் படத்தில் ஒரு ரஜனி சபலிஸ்டாக இருக்க மகன் ரஜனி ராமனாக இருப்பார். மகன் ரஜனிக்கும் அவரது காதலியாக நடித்த மேனகா என்ற நடிகைக்கும் இடையேயான டூயட். இந்தப்பாடலில் இருவரும் ஒருவரையொருவர் தொடாமல் நடித்திருப்பார்கள்.
இராமாயணம் பாராயணம் காதல் மங்களம் போல் இந்தபபாடலும் தெய்வீகப்பாடல் தான்.
4. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணும்
தங்கமகன்களான ரஜனி, ராஜா பத்மஸ்ரீ எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி கூட்டணியில் உருவான சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் இதுவாகும்.
எஸ்.பி.பியின் தேன்குரலும் எஸ்.ஜானகியின் இளமையான் வசீகரக்குரலும் இந்தபாடலின் வெற்றிக்கு முக்கியகாரணம்.
ரஜனியின் ஸ்டைலும் பூர்ணிமா பாக்யராஜின் விதவிதமான பாரம்பரிய நடன உடைகளும் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க மட்டுமல்ல் பார்க்கவும் வைக்கும்.
பகலும் உறங்கிடும் ராத்திரியில் கேட்பதற்க்கு உகந்தபாடல்களில் இந்தப்பாடலும் ஒன்றாகும்.
5. சுந்தரி கண்ணால் ஒரு சேதி
இளையராஜா மணிரத்னம் கூட்டணி கொடுநாட்டிய காலத்தில் வெளிவந்த தளபதி படப்பாடல். இளையராஜாவின் இசை மகுடத்தில் முத்தான ஒரு பாடல். எஸ்.பி.பியின் காந்தக்குரலும் எஸ்.ஜானகியின் வசீகரக்குரலும் வாலியின் வாலிப வரிகளும் பாடலை தூக்கிப்பிடிக்கின்றன.
இடைஇசையில் வரும் அணிநடை இசையும் யுத்தக்காட்சிகளும் போர் நடுவிலும் தமிழர்கள் காதல் செய்தார்கள் என்பதைக் காட்டுகின்றது. இந்தப்பாடலைப் பற்றிப்பேசுவதைவிட பாடலைக் கேட்பதே சிறந்தது.
முதல் ஐந்துபாடல்கள் கேட்டீர்களா? நாளைவரை பொறுத்திருங்கள் அடுத்த ஐந்துபாடல்களுக்கும். எதேச்சையாக இந்த 5 பாடல்களும் டூயட்டாக இருக்கிறது.
இந்தப் பதிவை வீடியோஸ்பதி, ரேடியோஸ்பதி மூலம் பல பாடல்களைத் தந்து எம்மை மகிழ்வித்த அண்ணன் கானாப் பிரபாவிற்க்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
எழுதியது வந்தியத்தேவன் at 9 கருத்துக் கூறியவர்கள்
அனானிகளும் அதர் ஆப்சனும்
சில நாட்களாக வலையுலகில் அனானிகளின் ஆட்டம் அதிகமாகியிருக்கிறது. அனானி ஆப்சன் என்பது எந்தவித ஈமெயில் ஐடிகளும் இல்லாதவர்கள் தங்கள் கருத்துக்களை கூறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு இலகுவான முறையே இதேபோல் அதர் ஆப்சன் முறையில் உங்கள் பெயருடன் விரும்பினால் உங்கள் வலைமுகவரியோ அல்லது ஏனைய இணைய முகவரியோ கொடுக்கமுடியும்.
கடந்த சில நாட்களாக வலையுலகில் சக்திவேலின் பதிவுகளில் தொடங்கிய அனானிகளின் ஆட்டம் பிரபல பதிவர் நர்சிம்மின் வெளியேற்றம் வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எனக்கு ஒரு சந்தேகம் சில இணையங்களில் இருப்பதுபோல் பின்னூட்டம் இடுபவரது பெயருடன் அவரது ஐபி அட்ரெஸும் சேர்ந்து வருவதுபோல் செய்யமுடியாது. சில காலம் இந்த வசதி தட்ஸ்தமிழில் இருந்தது. இப்போ அங்கேயும் காணவில்லை. பல பதிவர்கள் ஐபி முகவரி இருக்கும் விட்ஜெட்டுகளை வைத்திருந்தாலும் அவர்களால் அந்த நேரத்தில் பின்னூட்டம் இட்டவர் எந்த எந்த ஐபிகளில் இருந்து ஊடுருவியர் எனக் கண்டுபிடிக்கலாமே ஒழிய இவர் தான் பின்னூட்டம் இட்டார் என உறுதியாகச் சொல்லமுடியாது. இதனால் சில நண்பர்கள் மேல்கூட சந்தேகம் ஏற்பட ஏதுவாகும்.
இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க நல்லதீர்ப்பை எந்த நாட்டாமையாவது தரமாட்டார்களா?
எழுதியது வந்தியத்தேவன் at 9 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அனானிகள், பதிவர் பிரச்சனை
மீண்டும் சுனாமி
2004 டிசம்பர் 26 ந்திகதியை யார் மறந்தாலும் ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள் மறக்கமாட்டார்கள். ஆழிப்பேரலை என்ற சுனாமி இலங்கை, தாய்லாந்து, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி பல லட்சம் உயிர்களை காவு கொண்ட கறுத்த நாள்.
அந்த கோரத்தின் அழிவுகள் மறையும் முன்னரே இன்னொரு சுனாமி எதிர்வரும் 22ந்திகதி ஏற்படும் என சிலர் எதிர்வுகூறுகின்றார்கள். சுனாமி வருகிறதோ இல்லையோ மக்கள் கொஞ்சம் அவதானமாக இருந்தால் அழிவுகளில் இருந்து காத்துக்கொள்ளமுடியும்.
எதிர்வரும் 22ந்திகதி முழுச் சூரியகிரகணம் ஏற்படுகிறது. இந்தகிரகணத்தின் தாக்கம் 6 மாதத்தில் இருந்து மூன்று ஆண்டுகள் வரை இருக்கும் என்றும் இதனால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படலாம் என ஜோதிட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதனை நம்புங்கள் நாராயணன்(இவரை நம்பலாமா?) மற்றும் நாசா ஆய்வு மையம் உறுதிப்படுத்தியதாகவும் செய்திகள் வெளிவருகின்றது. அத்துடன் ஈமெயில்கள் மூலமாக சிலர் இதனை அறிவித்துக்கொண்டும் இருக்கின்றார்கள்.
ஆகவே வருமுன் காப்போம் என்ற வாசகத்திற்க்கிணங்க சுனாமி அழிவில் இருந்து எம்மைக் காப்பது நலம் தரும்.
எழுதியது வந்தியத்தேவன் at 2 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் இயற்கை, சுனாமி, சூரிய கிரகணம்
ஹாட் அண்ட் சவர் சூப் 15-07-2009
அரசியல்
அண்மையில் பொங்கலோ பொங்கல் என்ற திரைப்படத்தின் சில காட்சிகள் பார்த்தேன், உபயம் கேடிவி. நடிகர் தியாகு ஒரு கபட அரசியல்வாதியாக வருகின்றார் அவரை அஞ்சாநெஞ்சன் என அழைக்கின்றார்கள். இந்தப் படம் பல காலத்திற்க்கு முன்னர் வந்தது என்பதாலும் தியாகு திமுக அபிமானி என்பதாலும் நிஜமான அஞ்சாநெஞ்சனைக் கிண்டலடிக்க இந்தப் பெயரை பயன்படுத்தியிருக்கமாட்டார்கள் என்பது என் எண்ணம். ஆனாலும் ஆதித்யா சானலில் அடிக்கடி தியாகு அடிவாங்கும் அந்தக் காட்சி ஒளிபரப்புகின்றார்கள். அதன் உள்குத்துப் புரியவில்லை.
சின்னத்திரை
கடந்த வார நீயா நானாவில் நாடோடிகள் இயக்குனர் சமுத்திரக்கனியும் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் கதாநாயகன் ராமகிருஷ்ணனும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். நட்பு பற்றி இவர்கள் இருவரும் விவாதித்தது கலகலப்பாகவும் காத்திரமாகவும் இருந்தது. வாடா போடா என இவர்கள் இருவரும் கதைத்தைப்பார்க்கும் போது நல்ல நண்பர்கள் என்பது புரிகின்றது. நீண்ட நாட்களின் பின்னர் நல்லதொரு நீயா நானா?.
சின்னதொரு சந்தேகம் : கோலங்கள் சீரியல் எப்போ நிறைவடைகின்றது என்பது யாருக்காவது தெரியுமா? இல்லையென்றால் தொல்காப்பியனுக்கு ஒரு விமர்சனம் அனுப்ப அவரின் மெயில் ஐடி தேவைப்படுகின்றது. தெரிந்தவர்கள் பின்னூட்டமிடவும்.
ஹாட் பெண்கள்
கடந்த சனிக்கிழமை கொழும்பின் பிரபல ஷொப்பிங் மாலான மஜெஸ்டிக் சிட்டிக்கு நண்பர்களுடன் சென்றேன். வழமையாகவே இளம்பெண்களின் ஆதிக்கம் அங்கே அதிகம். அன்றைக்கு மிகமிக அதிகம் காரணம் ட்ரான்ஸ்போமர் 2 படம் அங்கே திரையிட்டிருக்கின்றார்கள். பெரும்பாலான இளைஞிகள் மைக்ரோ அல்லது மினி ஸ்கேர்டுகளுடன் க்யூவில் காணப்பட்டார்கள். பலர் தங்கள் ஆண் நண்பருடன் தான் வந்திருந்தார்கள். சிலர் மட்டும் குறூப்பாக ஆண்பெண் அன அலைந்துதிரிந்தார்கள். இன்றைக்கு ஜாக்கி அண்ணாச்சியின் இந்தப் பதிவு படிக்கும்போது ஏதோ அவர்கள் ஞாபகமும் வந்தது. இதில் கொடுமை என்னவென்றால் சில பெண்களின் தாயார்கள் கூட மைக்ரோ அல்லது மினி உடைகளில் மகளுக்கு போட்டியாக காட்சியளித்தார்கள்.
கணணி
சில நாட்களாக என்னுடைய நண்பர் ஒருவரின் கணணியில் இன்டெர்னெட் எக்ஸ்புளோரரிலோ அல்லது நெருப்பு நரியிலோ பக்கங்கள் ஓப்பன் ஆகும் போது சேர்டிபிக்கேட் கலாவதியாகவிட்டது என்ற அலேர்ட் மெசேஜ் வருகின்றது. முகவரி டைப் செய்யும் இடம் சிவப்புக்கலராக மாறுகின்றது. இதனை எப்படி நிவர்த்தி செய்யலாம். கூகுள் ஆண்டவரிடம் கேட்டாள். செட்டிங்கிள் ஏதோ மாற்றம் செய்யச் சொன்னார். ஆனால் அதனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. என்ன பிரச்சனை? எப்படி நிவர்த்தி செய்வது
பலரின் தற்போதைய கனவுக்கன்னி.
சூப் பிடித்திருந்தால் சொல்லுங்கள் இடையிடையே பரிமாறுகிறேன்.
எழுதியது வந்தியத்தேவன் at 13 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், சின்னத் திரை, சூப்
சுவாரஸ்யமான அறுவர்
நண்பர் செந்தழல் ரவி சுவாரஸ்யமான ஆறு வலைப்பதிவுகளுக்கு விருதுகொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது மனம் நோகக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் எனக்கு சுவாரஸ்யமாகத் தெரிகின்ற ஆறு நண்பர்களுக்கு இந்த விருதுகளை அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
கானா பிரபா
அவன் அவன் ஒரு வலையையே கட்டிமேய்க்க கஸ்டப்படும்போது மடத்துவாசல் பிள்ளையாரடி, உலாத்தல், ரேடியோஸ்பதி, வீடீயோஸ்பதி என தன்னுடைய சொந்த வலைகளுடன் பல குழும வலைகளிலும் இளமையாக கலக்குபவர் வலையுலக இளம்புயல் அண்ணன் கானாப் பிரபா.
ஜாக்கி சேகர்
பிருந்தாவனத்தில் நொந்தகுமாரனாக இருக்கும் இவரின் எழுத்துக்கள் மிகமிக சுவாரஸ்யமானவை. சும்மா ஜாலிக்காக இவர் போடும் படங்கள் சுவராஸ்யத்துக்கும் மேலானவை. உலகப் படங்களைப் பற்றி தற்போது எழுதி அந்தப் படங்களை எப்படியும் தேடிப்பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியவர். பிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென்னின் தீண்டலால் ஏனைய வலைப்பதிவாளர்களைப் பொறாமைப் பட வைத்தவர். இப்போது தன் இரண்டாம் இனிங்சில் சில காலத்துக்கு முந்திய படங்களுக்கு விமர்சனம் எழுதி ஹிட் அடிக்கும் வலையுலகின் ... (உங்களுக்கு பிடித்த ஏதாவது பட்டம் போட்டுக்கொள்ளுங்கள். இவரது சாண்ட்விச் அண்டு நான்வெஜ்யுக்கு டிமாண்ட் அதிகம்.
முரளி கண்ணன்
சினிமாவையும் நடிகர்களையும் பலவித கோணங்களில் ஆராய்ந்து எழுதும் அற்புதமான எழுத்தாளர். தன் எழுத்தில் மெல்லிய நகைச்சுவையைக் கொண்டிருந்தாலும் சிலவேளைகளில் நகைச்சுவையாகவே பதிவுபோடுபவர். அண்மைய உதாரணம் மோகன் லால் பிரியதர்ஷன் ஐபிஎல் ஆலோசனையைக் குறிப்பிடலாம். இன்னொரு பிலிம் நியூஸ் ஆனந்தனாக பரிமாணம் எடுக்கின்றார். பத்மஸ்ரீ கமலஹாசனின் ரசிகர் என்பதால் எனக்கு அதிகம் பிடிக்கும்.
ஹீத் குமாரசாமி
மெய் சொல்லப்போகின்றேன் என பலதரப்பட்ட விடயங்களில் பதிவுகள் எழுதி பலரின் கவனத்தை தற்போது ஈர்த்திருக்கின்றார். சுவாரஸ்யமாகவும் எழுதுகின்றார். என்னுடைய பாடசாலையில் படித்தவர் என்பது இன்னொரு கூடுதல் தகவல். இன்னும் நிறைய எழுதவேண்டும் என்பது என் ஆசை.
டொக்டர் எம்.கே.முருகானந்தன்
ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் மருத்துவரும். இவருக்கு நான் விருது கொடுப்பது விஜய் அவார்ட்ஸில் கமலுக்கு விஜய் விருது கொடுப்பதுபோல இருக்கின்றது. சினிமா, இலக்கியம், மருத்துவம் என பல் திறமைவாய்ந்தவர். இவரது சினிமா விமர்சனங்களை பத்திரிகைகளில் வாசித்து நல்ல சினிமாக்களை சுவைக்க வழிவகுத்தவர், இன்று வலையுலகிலும் தனக்கென இடம் பிடித்தவர். மருத்துவர் என்பதால் நேரம் கிடைப்பது அரிதென்பதால் அதிகம் எழுதுவதில்லை. எழுதியவை அத்தனையும் சுவாரஸ்யமானவை.
வர்மா
தமிழக அரசியல் பற்றி வீரகேசரிப் பத்திரிகையில் எழுதுபவர். அத்துடன் விளையாட்டு, சினிமா என வலையுலகிலும் எழுதுகின்றார். சில காலமாக அவரது பதிவுகளைக் காணவில்லை. அவரை மீண்டும் வலையுலகிற்க்கு இழுக்கவும் ஊக்கப்படுத்தவும் இந்த விருதை அவருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
என் நண்பர்கள் பலர் வலையுலகில் கொடிகட்டிப்பறக்கின்றார்கள். அவர்கள் நண்பர்களாக இருப்பதால் அவர்களுக்கு விருதுகொடுக்கமுடியவில்லை.
எழுதியது வந்தியத்தேவன் at 15 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் பதிவர் வட்டம், வலையுலகம், விருதுகள்
சர்ச்சையில் புச்சானன்
சர்ச்சையில் சிக்குவதோ இல்லை மற்றவர்கள் மேல் வசை பாடுவதோ அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களுக்கும் அவுஸ்திரேலியாப் பத்திரிகைகளுக்கும் புதிசல்ல.
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஜோன் புச்சானன் சமீபத்தில் எழுதியுள்ள கிரிக்கெட்டின் எதிர்காலமும் டுவென்டி 20-யின் எழுச்சியும்("The Future of Cricket: The Rise of Twenty20") என்ற நூலில் பல முன்னணி வீரர்களை மிகவும் காட்டமாகச் சாடியுள்ளார். ஏற்கனவே ஐபிஎல்லில் கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது பல சர்ச்சைகள் உருவாகவும் அந்த அணி தொடரில் கடைசி இடத்தில் வரவும் வழி செய்தவர் இவரே.
இவர் தனது புத்தகத்தில் முன்னாள் வீரர்களான கவாஸ்கர் உட்பட யுவராஜ் சிங், கங்குலி, ஹர்பஜன் சிங் போன்ற இந்திய வீரர்களையும், மார்க் ராம் பிரகாஷ், ஹெவின் பீட்டர்சன், சோயப் அக்தர் போன்ற ஏனைய வீரர்களையும் இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவையும் விமர்சனம் செய்துள்ளார்.
விஜய் மல்லையாவை ஒரு சர்வாதிகாரியாகவும், கவாஸ்கர் ஒரு தலைப்பட்சமான முடிவுகளை எடுப்பவர் எனவும் எழுதியிருக்கின்ற புச்சானன் யுவராஜ் சிங் கங்குலியாக முயற்சிக்கின்றார் ஆனால் அவருக்கு அந்தத் தகுதியில்லை என்கின்றார். அத்துடன் சச்சின் டெண்டுல்கருக்கு ருவெண்டி 20யில் விளையாட தகுதியில்லை என்றும் அவரால் அதிரடியாக ஆடமுடியாது என்று நட்சத்திரவீரர் சச்சின்மேலும் தன் கடின சொற்களை வீசியுள்ளார்.
இவரின் இந்தக் கருத்துக்களுக்கு ஹர்பஜன் சிங் தன் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். புச்சானன் தன் புத்தகத்தினை விற்க மலிவான விளம்பரம் தேடுகின்றார் புச்சானன் என ஹர்பஜன் தெரிவித்தார்.
இதுவரை ஏனைய வீரர்களோ அல்லது பிசிசிஐயோ இதற்க்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. புச்சானனின் கருத்து ஒரு தனிப்பட்ட மனிதரின் கருத்தாக இருந்தாலும் பிரபல நட்சத்திர வீரர்களை குறிவைத்துத் தாக்கும்போது அமைதி காப்பது புச்சானனின் கருத்துக்களை மறைமுகமாக ஒத்துக்கொள்வதுபோல் இருக்கின்றது.
எழுதியது வந்தியத்தேவன் at 2 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கிரிக்கெட், புச்சானன், ரி20, விளையாட்டு
பழிதீர்த்தது இலங்கை
கடந்த மாதம் இங்கிலாந்தில் இடம் பெற்ற இருபதுக்கு இருபது உலககிண்ணப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றதற்க்கு இன்று காலியில் இடம்பெற்ற டெஸ்போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டி பழிதீர்த்துக்கொண்டது.
இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் தொடரை இலகுவாக வென்று தன் கணக்கை புதியதலைவர் சங்ககார தொடங்கியுள்ளார்,
முரளிதரன், வாஸ் போன்றவர்கள் இல்லாததாலும் சில புதுமுகவீரர்களுடனும் களமிறங்கிய இலங்கை அணி முன்னைப்போல் இல்லாமல் முதல் இனிங்ஸில் துடுப்பாட்டத்தில் தடுமாறியது.
ஆரம்பத் துடுப்பாட்டவீரர் மாலிந்த வர்ணபுர இரண்டு இனிங்சிலும் சொதப்பினார், அதேபோல் சல்மான் பட்டின் சோகமும் தொடர்கின்றது. இரண்டு அணியிலும் ஆரம்பத் துடுப்பாட்டவீரகளினால் பெரிதாக எதையும் சாதிக்கமுடியவில்லை. இலங்கை சார்பாக பரணவிதான முதல் இனிங்சில் அரைச்சதம் கடந்தார். தனது முதல் போட்டியில் விளையாடும் அஞ்சலோ மத்தியூஸ் 42 ஓட்டங்களை எடுத்தார். பரணவிதான இரண்டாவது இனிங்சிலும் சிறப்பாக விளையாடியிருந்தார். ஏனைய இலங்கை வீரர்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை.
பாகிஸ்தானின் பந்துவீச்சில் புதுமுக வீரர் இரண்டு இனிங்சிலும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி மொத்தமாக 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இன்னொரு புதுமுகவீரரான சஜீட் அஜ்மல் இரண்டு இனிங்சிலும் மொத்தமாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உமர் குல் அவ்வளவாக மிரட்டவில்லை.
பாகிஸ்தானின் துடுப்பாட்டம் முதல் இனிங்சில் அணிக்கு மீண்டும் திரும்பிய முகமட் யூசுப்பின் சதத்தினாலும் மிஸ்பா உல் ஹக்கின் அரைச்சதத்தினாலும் சிறப்பான நிலைக்கு அணியை இட்டுச் சென்றது. ஏனையவீரர்கள் சோபிக்கவில்லை.
இலங்கைப் பந்துவீச்சைபொறுத்தவரை வேகங்களான நுவான் குலசேகர, திலான் துஷார இருவரும் முதல் இனிங்சில் அச்சுறுத்தினார்கள். ரங்கன ஹேரத்திற்க்கு ஒரு விக்கெட்டும் அறிமுகவீரர் அஞ்சலோ மத்தியூசுக்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தது. மெண்டிஸ் மந்திரம் வேலை செய்யவில்லை. முரளிதரன் இல்லாத குறை பட்டவர்த்தனமாக தெரிந்தது. முரளி இல்லாமல் இலங்கை அணியால் வெல்லப்பட்ட நான்காவது டெஸ்ட் இதுவாகும். இரண்டாவது இனிங்சில் ரங்கன ஹேரத்தின் சுழலில் மிக இலகுவான இலக்கை பாகிஸ்தான் வீரர்களால் எட்டமுடியாமல் திணறினார்கள். இரண்டாவது இனிங்சில் 11.3 ஓவர்கள் பந்து வீசி வெறும் 15 ஓட்டங்கள் மாத்திரமே கொடுத்து சல்மான் பட் முகமட் யூசுப் உட்பட நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ரங்கன ஹேரத் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பாட்டார்.
எழுதியது வந்தியத்தேவன் at 3 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் இலங்கை, கிரிக்கெட், பாகிஸ்தான், விளையாட்டு
ஒரு கை ஓசை
இந்தியா என்றாலே உடனே பலரது நினைவுக்கு வருவது கலாச்சாரம் பண்பாடு நிறைந்த நாடு என்பதேயாகும். ஆனால் கடந்த வியாழக்கிழமை ஓரினச்சேர்க்கை சரியானது என தில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தியாவும் மேற்கத்திய நாடுகள் பட்டியலில் தன்னை இணைத்துக்கொள்ளமுயகின்றதுபோல் தெரிகின்றது.
இராமாயண காலத்திலிருந்து ஒருவனுக்கு ஒருத்தி என்பதை பெரும்பான்மையான இந்தியர்கள் கடைப்பிடித்துவருகின்றார்கள். இதனை தமிழர்கள் தம் கலாச்சாரமாகவே கட்டிக்காத்துவருகின்றார்கள். அப்படியிருக்கையில் ஒரு ஆண் ஆணுடன் சேர்ந்துவாழ்வதையும் பெண் பெண்ணுடன் சேர்ந்துவாழ்வதையும் சரியென தீர்ப்பளித்து உயர்நீதிமன்றம் இந்தியப் பண்பாட்டையே கொச்சைப்படுத்தியுள்ளது.
சில இஸ்லாமிய கிறிஸ்தவ அமைப்புகள் இதனை எதிர்க்கின்றார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் ராமனை வைத்து அரசியல் நடத்தும் பிஜேபி சிவசேனா போன்ற கட்சிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து குரல் கொடுத்ததாக செய்திகள் காணப்படவில்லை. ஏன் ஆனந்தவிகடனோ ஜூனியர் விகடனோ கூட இது பற்றி வாய் திறக்கவேயில்லை. சர்ச்சை நாயகி குஷ்புமட்டும் இதனை வரவேற்றிருப்பதாக செய்திகள் வெளியாகின.
மேற்கத்திய நாடுகள் போல் வல்லரசாக வேண்டுமென்றால் அணுஆயுதம், சிறிய நாடுகளுடன் சண்டித்தனம், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றுடன் இப்படியான நாகரீகங்களையும் இந்தியாவிற்க்குள் புகவிட்டால் வல்லரசாகிவிடும் என்ற மனப்பான்மையில் காங்கிரஸ் அரசு இருப்பதாக தெரிகின்றது.
ஏற்கனவே டேட்டிங், பப், டிஸ்கோதே கலாச்சாரத்தில் ஊறிய நாடு ஓரினச்சேர்கையாளர்களின் அனுமதியால் என்ன என்ன கஸ்டங்களைப் படப்போகின்றதோ?
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆனந்தவிகடனில் இரண்டு தமிழ்ப் பெண்களை படத்துடன் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற செய்தி வெளியிட்டார்கள். ஏற்கனவே இந்தியாவில் 24 லட்சத்துக்கு மேற்பட்ட ஓரினச்சேர்க்கைப் பிரியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்க்கு தடையில்லை என்பதால் இந்தத் தொகை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
எதுஎப்படியோ இந்தியாவின் பண்பாடு கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய கலாச்சாரத்திற்க்கு மாறிவருவது வேதனைக்குரியது.
எழுதியது வந்தியத்தேவன் at 9 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், ஓரினச் சேர்க்கை, குஷ்பு, பாலியல்
ஐசிசியால் புறக்கணிக்கப்பட்ட ஆசிய ஆபிரிக்கர்கள்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) 1909ஆம் ஆண்டு ஜூன் 15ந்திகதி ஆரம்பிக்கப்பட்டது. இப்போது அதன் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்படுகின்றது. இதில் முன்னாள் வீரர்களைக் கெளரவிக்கும் விதமாக "ஹோல் ஒவ் பாம்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 55 வீரர்களை ஐசிசி தெரிவுசெய்துள்ளது. இதில் வெறும் ஆறு பேரே ஆசியாவில் இருந்து தெரிவாகியுள்ளார்கள்.
இந்தியாவின் சார்பில் கபில்தேவ், கவாஸ்கர் மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோரும் பாகிஸ்தானில் இருந்து இம்ரான் கான், ஜாவேட் மியாண்டாட், ஹனீப் முகமது ஆகியோரும் தெரிவுசெய்யப்படிருக்கிறார்கள். இலங்கை அணி சார்பாக யாருமே தெரிவுசெய்யப்படவில்லை.
1995ஆம் ஆண்டிற்க்கு முன்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை மட்டுமே கணக்கில் எடுத்ததாக சொல்லும் ஐசிசி இங்கிலாந்திலிருந்து அதிக பட்சமாக 22 வீரர்களையும் ஆவுஸ்திரேலியாவில் இருந்து 13 வீரர்களையும் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து 11 வீரர்களையும் தெரிவு செய்துள்ளது.
தென்னாபிரிக்காவிலிருந்து ஷோன் போலக்கின் பெரிய தந்தையார் கீரீம் போலக்கும் , பெரி ரிச்சார்ட்ஸும் மாத்திரம் தெரிவாகியுள்ளனர். நியூசிலாந்திலிருந்து சேர் ரிச்சர்ட் ஹாட்லி மாத்திரம் தெரிவாகியுள்ளார்.
கீரீம் போலக்
தென்னாபிரிக்கா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சிம்பாவே, நியூசிலாந்து போன்ற நாடுகளின் பல தலைசிறந்த வீரர்களைத் தெரிவு செய்யாமல் ஐசிசி பாரபட்சம் காட்டியிருக்கிறது. இங்கிலாந்து வீரர்களில் சிலர் ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடிய வீரர்கள் ஆவார்கள்.
இலங்கையின் துலிப் மெண்டிஸ், மாலிந்த வர்ணபுர, ரோய் டயஸ் போன்ற வீரர்கள் பல சாதனை செய்தவர்கள். இந்தியாவைப் பொறுத்தவரை லாலா அமர்நாத், குண்டப்பா விஸ்வநாத்,வெங்சகார் விஜய் ஹசாரே போன்றவர்களும் தெரிவாகவில்லை.
அதேபோல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்க்கு முன்னர் இங்கிலாந்து அணியில் விளையாடிய ராஞ்சி கோப்பை உருவாக காரணமாக இருந்த குமார் ஸ்ரீ ராஞ்சி அவர்களின் பெயரயும் ஐசிசி பரீசிலிக்கவில்லை.
இனி ஒவ்வொரு ஆண்டும் ஒரு வீரர் இப்பட்டியலில் இடம் பெறவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பலரின் பெயர்களை பரிசீலிக்காமல் ஐசிசி எந்தப் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
எழுதியது வந்தியத்தேவன் at 9 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் ஐசிசி, கிரிக்கெட், விருதுகள், விளையாட்டு
தெருச் சண்டைகளாக மாறும் இலக்கியச் சண்டைகள்
என்றைக்குமே எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளிடையே சேர்ந்திருக்கும் ஒரு விடயம் கருத்துமோதல்களாகும். இந்தக் கருத்துமோதல்கள் இன்றைக்கோ நேற்றைக்கோ தொடங்கியது அல்ல. ஆரம்பத்தில் கம்பன்கழக மேடைகளில் தொடங்கிய கருத்துமோதல்கள் பின்னர் படிப்படையாக வார மாத இதழ்களிலும் பத்திரிகைகளிலும் இடம்பிடித்தன. பல ஆரோக்கியமாக இருந்தாலும் சில வெறும் தனிமனித தாக்குதல்களாகவே மாறிவிட்டன.
பெரும்பாலான கருத்துமோதல்களுக்கு காரணம் ஒவ்வொருவரும் வெவ்வேறு இசங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் தங்கள் இசங்களுக்கு அல்லது கொள்கைகளுக்கு எதிரானவர்களுடன் மல்லுக்கட்டுதல் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.
இணையத்தின் பரவல் அதிகரிக்கப்பட்டபின்னர் இணையத்தில் இந்ததாக்குதல் தொடர்கின்றன. இதற்க்கு சிறந்த உதாரணம் அண்மையில் சாருவுக்கும் ஜெமோவுக்கு இடையிலான பனிப்போர்.
இந்தப்பனிப்போர்கள் இலங்கையில் கூட நடைபெற்றன, நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு பட்டிமன்ற மேடையில் இரண்டு பேச்சாளர்களுக்கிடையில் நடைபெற்ற வாக்குவாதம் எங்கள் ஊர்ப்பகுதியில் பிரசித்திபெற்றது. இவர்கள் இருவரும் ஏதோ நாட்டுப்பிரச்சனையில் வாக்குவாதப்பட்டிருந்தார்கள் என்றால் பாராட்ட்லாம் ஆனால் என்றைக்கோ கம்பன் எழுதிவைத்துவிட்டுப்போன இராமாயணத்தில் சீதை பற்றி சண்டையிட்டார்கள். இந்தச் சண்டை அந்த மேடையில் மட்டுமல்ல அதன் பின்னர் வந்த ஏனைய இலக்கியமேடைகளில் கூட எதிரொலித்தது. சீதையை இராவணன் கடத்தியபோது சீதை இருந்த நிலைதான் சண்டைக்கான முதல்காரணம். இராமாயணம் படித்தவர்களுக்கு அந்த நிலை என்னவென்று தெரியும்.
இலங்கையிலுள்ள பெரும்பாலான எழுத்தாளர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள் என தம்மை அழைக்கிறார்கள். அதனால் இவர்களிடம் சுஜாதா பற்றியோ ராஜேஸ்குமார் பற்றியோ கதைக்கமுடியாது. இவர்களின் பார்வையில் சுஜாதா ராஜேஸ்குமார் புஷ்பா தங்கத்துரை போன்றவர்கள் எழுதியது குப்பை இலக்கியம் என்பார்கள். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்றோர்களின் எழுத்துக்கள் மட்டும் தான் தரமான இலக்கியம் என்பது இவர்களின் வாதம்.
ஒருமுறை எமது கல்லூரிக்கு பிரபல எழுத்தாளர் ஒருவர் உயர்தர மாணவர்களிடையே இலக்கிய சொற்பொழிவொன்றாற்றினார். இலக்கியம் என்றால் அது மண்வாசனையுடன் இருக்கவேண்டும், அதனைவிட்டுவிட்டு நகரங்களில் நடக்கும் கதைகள் துப்பறியும் கதைகள் எல்லாம் இலக்கியம் இல்லை என்ற தொணியில் உரையாற்றிக்கொண்டிருந்தார். அவரது உரை முடிவுற்றபின்னர் நாம் அவருடன் சிலமணி நேரம் கலந்துரையாடப் பணிக்கப்பட்டோம். அப்போது அவரிடம் தமிழ்வாணன் கதைகள் இலக்கியத்தில் வரதா? எனக்கேட்டபோது இல்லை என பதில் அளித்தார். பின்னர் சுஜாதா ராஜேஸ்குமார் போன்றவர்களையும் ஒரு பிடிபிடித்தார். இவர்களின் எழுத்துக்களில் ஆபாசம் தலைதூக்கியிருக்கிறது எனவும் சும்மா பொழுதுபோக்கிற்க்கு மட்டும் படிக்கலாம் எனவும் தன் கருத்துக்களைச் சொன்னார்.
இவர்களைப்போல் தமிழக எழுத்தாளர்கள் சிலரும் இருக்கிறார்கள். தமது எழுத்துக்கள் தான் தரமானது ஏனையவை தரமற்றது என்பது இவர்களின் கருத்து. சாரு போன்ற சிலர் தமிழ் எழுத்தாளர்களைவிட ஏனைய வெளிநாட்டு எழுத்தாளர்களைப் பற்றி மட்டுமே எழுதுவார். நம்ம நாட்டு கலைஞர்களைக் கெளரவிக்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வருவதில்லை.
சிலகாலத்திற்க்கு முன்னர் தினக்குரலில் இடம்பெற்ற கவிஞர் மு.பொன்னம்பலம்,
கம்பன் கழகப்பேச்சாளார் ஸ்ரீபிரசாந்தன் இடையே நடைபெற்ற விவாதங்களும் பிரசித்திபெற்றவை. இவர்கள் சண்டைபோட்ட விடயம் அல்குல் என்ற தமிழ் சொல் பற்றியதாகும். அத்துடன் பிரசாந்தன் ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பில் மலையக கவிஞர்களைப் புறக்கணித்ததாக அந்தனி ஜீவாவால் ஞானம் இதழில் குற்றம் சாட்டப்பட்டார். குற்றச்சாட்டை நிராகரித்த பிரசாந்தன் அந்தனி ஜீவாவை பிரதேசவாதி என குற்றம் சாட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
குமுதத்தில் கோணல் பக்கங்கள் எழுதிய காலத்தில் இருந்தே சாருவைப் படித்துவருகின்றேன். சாருவையோ ஏனைய எழுத்தாளர்களையோ விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை காரணம் அந்தளவிற்க்கு இலக்கிய அறிவு எனக்கில்லை. சாரு ஒரு இலக்கியவாதியாக இருந்துகொண்டு இளையராஜாவை விமர்சிப்பது பிடிக்கவில்லை. சாரு ஒரு இசைஅறிஞர் என்றால் இளையராஜாவை மட்டுமல்ல மொசார்ட், பீதோவனைக்கூட விமர்சிக்கலாம். ஆனால் சாருவுக்கு இசைபற்றித் ஆழ்ந்த அறிவுகிடையாது என்பது அவரது எழுத்துக்களில் இருந்து புரிகின்றது. அப்படியிருக்கையில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த இசைஞானியின் இசை இசையல்ல என்கிறார்.
இவரின் விமர்சனத்திற்க்கு அடிக்கடி உள்ளாகும் இன்னொருவர் நடிகர் கமலஹாசன். கமலஹாசனை அடிக்கடி விமர்சிக்கும் இவர் ஏன் தலைகளையும் தளபதிகளையும் விமர்சிப்பதில்லை? சாரு ரஜனிகாந்தைக்கூட இதுவரை விமர்சித்ததில்லை. இவரது புனைகதை எழுத்தில் இருக்கும் தைரியம் விமர்சனங்களில் இல்லை.
சாருவிடம் இன்னொரு கேள்வி உங்களுக்கு கேரளத்தில் இருக்கும் புகழ் பற்றி அடிக்கடி எழுதுகிறீர்கள். கட் அவுட் வைத்ததாககூட எழுதியிருக்கிறீர்கள். ஏன் உங்களால் முல்லைப் பெரியார் பற்றி கேரளமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விளங்குமாறு விளக்கம்கொடுக்கமுடியாது உள்ளது. காரணம் நீங்கள் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் மட்டும் விமர்சிக்கும் துணிவு அரசியல்வாதிகளிடத்தில் உங்களுக்கு இல்லை.
இறுதியாக சாரு ஜெமோ இருவருக்கும் ஒருவேண்டுகோள் உங்கள் சண்டைகளை ஆக்கபூர்வமான விடயங்களில் செலுத்தினால் அனைவருக்கும் பிரயோசனமாக இருக்கும்.
டிஸ்கி : அண்மைக்காலமாக சாரு, ஜெமோ, பைத்தியக்காரன், லக்கி, நர்சிம் எனப் பலரரின் விமர்சனங்கள் வாசித்தேன் அனைத்துக்கும் பொதுவான ஒரு பின்னூட்டமாக இந்த உளறல். வேறு எந்த உள்குத்தோ அரசியலோ இல்லை. இலக்கியச் சண்டைகள் எங்கும் நடைபெறுகின்றன என்பதற்காகவே இலங்கை எழுத்தாளர்கள் பற்றியும் ஒரு சின்ன விளக்கம்.
எழுதியது வந்தியத்தேவன் at 9 கருத்துக் கூறியவர்கள்