Showing posts with label குஷ்பு. Show all posts
Showing posts with label குஷ்பு. Show all posts

ஒரு கை ஓசை

இந்தியா என்றாலே உடனே பலரது நினைவுக்கு வருவது கலாச்சாரம் பண்பாடு நிறைந்த நாடு என்பதேயாகும். ஆனால் கடந்த வியாழக்கிழமை ஓரினச்சேர்க்கை சரியானது என தில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தியாவும் மேற்கத்திய நாடுகள் பட்டியலில் தன்னை இணைத்துக்கொள்ளமுயகின்றதுபோல் தெரிகின்றது.

இராமாயண காலத்திலிருந்து ஒருவனுக்கு ஒருத்தி என்பதை பெரும்பான்மையான இந்தியர்கள் கடைப்பிடித்துவருகின்றார்கள். இதனை தமிழர்கள் தம் கலாச்சாரமாகவே கட்டிக்காத்துவருகின்றார்கள். அப்படியிருக்கையில் ஒரு ஆண் ஆணுடன் சேர்ந்துவாழ்வதையும் பெண் பெண்ணுடன் சேர்ந்துவாழ்வதையும் சரியென தீர்ப்பளித்து உயர்நீதிமன்றம் இந்தியப் பண்பாட்டையே கொச்சைப்படுத்தியுள்ளது.

சில இஸ்லாமிய கிறிஸ்தவ அமைப்புகள் இதனை எதிர்க்கின்றார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் ராமனை வைத்து அரசியல் நடத்தும் பிஜேபி சிவசேனா போன்ற கட்சிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து குரல் கொடுத்ததாக செய்திகள் காணப்படவில்லை. ஏன் ஆனந்தவிகடனோ ஜூனியர் விகடனோ கூட இது பற்றி வாய் திறக்கவேயில்லை. சர்ச்சை நாயகி குஷ்புமட்டும் இதனை வரவேற்றிருப்பதாக செய்திகள் வெளியாகின.

மேற்கத்திய நாடுகள் போல் வல்லரசாக வேண்டுமென்றால் அணுஆயுதம், சிறிய நாடுகளுடன் சண்டித்தனம், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றுடன் இப்படியான நாகரீகங்களையும் இந்தியாவிற்க்குள் புகவிட்டால் வல்லரசாகிவிடும் என்ற மனப்பான்மையில் காங்கிரஸ் அரசு இருப்பதாக தெரிகின்றது.

ஏற்கனவே டேட்டிங், பப், டிஸ்கோதே கலாச்சாரத்தில் ஊறிய நாடு ஓரினச்சேர்கையாளர்களின் அனுமதியால் என்ன என்ன கஸ்டங்களைப் படப்போகின்றதோ?

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆனந்தவிகடனில் இரண்டு தமிழ்ப் பெண்களை படத்துடன் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற செய்தி வெளியிட்டார்கள். ஏற்கனவே இந்தியாவில் 24 லட்சத்துக்கு மேற்பட்ட ஓரினச்சேர்க்கைப் பிரியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்க்கு தடையில்லை என்பதால் இந்தத் தொகை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

எதுஎப்படியோ இந்தியாவின் பண்பாடு கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய கலாச்சாரத்திற்க்கு மாறிவருவது வேதனைக்குரியது.

இன்னொரு சர்ச்சையில் குஷ்பு,


இன்று மானாட மயிலாடவின் முதாலாம் ஆண்டுக் கொண்டாட்டங்களை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் நடிகை குஷ்புவை ஒருவர் உங்களுக்கு பிடித்த நடிகை யார் எனக் கேட்டார். அதற்க்கு குஷ்பு சிம்ரன், ஜோதிகாவிற்க்குப் பின்னர் எந்த நடிகையும் ஒழுங்காக நடிக்கவில்லை என்றும் சும்மா கிளாமராக வந்துபோகின்றார்கள் எனவும் கொஞ்சம் காட்டமாகக் கூறினார். 

அதாவது தற்போதைய முன்னணி நடிகைகளான அசின், நயந்தாரா, திரிஷா, பாவனா, சினேகா, நமீதா இவர்கள் ஒருதரும் நடிகைகள் இல்லையாம். 

யார் யார் குஷ்புவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களோ, பொறுத்திருந்து பார்ப்போம். முன்னர் ஒரு பத்திரிகையில் நடன இயக்குனர் பிருந்தா சினேகாவிற்க்கு நடனம் ஆடவராது எனப்பேட்டி கொடுத்து சர்ச்சையாக்கினார். குஷ்புவுக்கு சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல.

நிகழ்ச்சியைத் தப்பவிட்டவர்கள் எதிர்வரும் சனிக்கிழமை இரவு இந்திய நேரம் 10 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்வார்கள் பார்த்து மகிழுங்கள். வீதியில் கூட நம்ம நடனமங்கைகள் ஆடினார்கள். என்ன கொடுமை கலா மாஸ்டர்.