ஆண்க‌ள் ஆண்க‌ள் தான் - வருட இறுதி லொல்லு

சிறுவ‌னோ குழ‌ந்தையோ இளைஞ‌னோ யாராக‌ இருந்தாலும் ஆண்க‌ள் ஆண்க‌ள் தான் என்ற‌ சார‌ப்ப‌ட‌ என‌க்கு வ‌ந்த‌ மின்ன‌ஞ்ச‌ல் உங்க‌ள் பார்வைக்காக‌. மின்ன‌ஞ்ச‌லை என‌க்கு அனுப்பிய‌வ‌ர் ஒரு பெண். ஆக‌வே இது ஆண்க‌ளை அவ‌தூறாக‌ அவ‌மதிக்கும் ஒரு பெண்ணாதிக்க‌வாதியின் செய‌லாக‌வே என‌க்குப் ப‌டுகின்ற‌து.

உங்க‌ளுக்கு?
















நண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


Wish you a very Happy New Year, 2008!

இந்தியாவின் வீழ்ச்சியும் மேற்கிந்தியாவின் எழுச்சியும்.

இன்று நடைபெற்று முடிந்த இந்தியா எதிர் அவுஸ்திரேலியா மெல்பேர்ன் முதலாவது டெஸ்டில் இந்தியா மிக இலகுவாக தோற்றுவிட்டது. இந்தத் தோல்விக்கு முக்கியகாரணம் இந்தியாவின் முன்னணி சாதனை வீரர்கள் என்றால் மிகையாகாது.

343 என்ற சொற்ப ஓட்டங்களில்(அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் ஒப்பிடும்பொழுது முதலாவது இனிங்க்ஸ்சுக்கு இது குறைந்த ஓட்டம்) ஆஸியை வீழ்த்திய கும்ளேயின் அணி, ஜாபர், ராவிட், லக்ஸ்மன், டோணி, யுவராஜ் போன்றவர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் வெறும் 196 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அனுபவ சச்சினும், 100 போட்டியில் விளையாடும் கங்குலியும் மட்டும் 105(இருவரும் சச்சின் 62, கங்குலி 43) எடுத்தார்கள்.

147 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த ஆஸி மீண்டும் தமது ஒற்றுமையான டீம் வேர்க்கினால் 351 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை இடை நிறுத்தி இந்தியாவிற்க்கு 499 என்ற இலக்கையும் இரண்டு நாட்களையும் கொடுத்தது.

இந்தியப் பெருஞ்சுவர் ராவிட், சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானை இரட்டைச் சதத்தால் அசத்திய ஜாபர், சாதனை நாயகன் சச்சின், ஆக்ரோச வீரர் கங்குலி, பாகிஸ்தானை ஆட்டக்காணவைத்த யுவராஜ், அதிரடி டோணி, பொறுமையான லக்ஸ்மன் என இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை இரு நாட்களில் இந்த ஓட்டத்தை எடுத்து ஆஸி மண்ணில் ஒரு வெற்றியை நிலை நாட்டுவார்கள் என நினைத்தால் அனைத்திலும் ம‌ண்ணைப்போட்டுவிட்டார்கள்.

கங்குலியையும் லக்ஸ்மனையும் தவிர ஏனையவர்கள் அணியில் எப்படி ஆடினாலும் இடம் கிடைக்கும் என்ற மனப்பான்மையில் வந்தார்கள், திரும்பச் சென்றார்கள், இரண்டு இனிங்க்ஸிலும் ராவிட் பார்வையாளர்களை பயங்கரமாகச் சோதித்துவிட்டார். முதலாவது இனிங்ஸ்சில் 62 ஆவது பந்தில் தான் ராவிட் ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பித்தார் ஆனால் பரிதாபம் 66வது பந்தில் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துவிட்டார். இரண்டாவது இனிங்ஸிலும் அதே ஆமை வேகம் 114 பந்தில் 16 ஓட்டங்கள். சில காலமாக இந்தியப் பெருஞ்சுவர் ஆட்டம் கண்டுவிட்டது.

ராவிட் போனால் என்ன சச்சின் இருக்கிறார் என்றால் சச்சினுக்கு என்ன அவசர வேலையோ 15 ஓட்டம் போதும் என்பதுபோல் அவுட்டாகிவிட்டார். கொஞ்ச நேரம் கங்குலியும் லக்ஸ்மணும் 41 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக எடுத்து நெஞ்சில் பால் வார்த்தார்கள். இந்த இனிங்கிசில் இதுதான் கூடுதல் இணைப்பாட்டம்.

இந்தியத் தேர்வாளர்கள் செய்த தவறுகளில் ஒன்று ஆஸி மண்ணில் அனுபவம் குறைந்த யுவராஜை தேர்ந்தெடுத்தது, இவருக்கு பதிலாக சேவாக்கை எடுத்திருந்தால் சில வேளைகளில் சேவாக் சிறப்பாக ஆடியிருப்பார். இன்னொரு தவறு இர்பான் பதானைத் தெரிவுசெய்யாதது.

தோல்வியும் வெற்றியும் சகஜம் தான் ஆனால் ஆஸியின் 15ஆவது தொடர் வெற்றியை இந்திய அணியால் நிறுத்த முடியாமல் போய்விட்டது. இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி வெறும் என வழமைபோல் நினைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது.இந்திய அணிக்குத் தேவை கபில்தேவ் மாதிரியான ஒரு போராட்ட குணமுள்ள வீரர்.

அடுத்த இன்றைய ஆட்டம் டெஸ்ட் தரவரிசையில் 2ஆவதாக இருக்கும் தென்ஆபிரிக்காவுக்கும் வேஸ்ட்(Waste) இன்டீஸ் என செல்லமாக அழைக்கப்படும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான ஆட்டம்.

2000ஆவது ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக எக்பஸ்டனின் பெற்ற வெற்றியின் பின்னர் 7 வருடங்களுக்கு பிறகு அன்னிய மண்ணில்( வங்கதேசம், சிம்பாவேயுடன் பெற்ற வெற்றிகள் நீங்கலாக) பெற்றதும் அதே நேரம் தென்ஆபிரிக்கா மண்ணில் முதல் தடவை பெற்றதுமான வெற்றியானது ஒரு சாதனைதான்.

அணித்தலைவர் கிரிஸ் கேயில் , சந்தர்போல் தவிர எனையவர்கள் பலர் அனுபவமற்ற வீரர்கள், இவர்கள் அனைவரது மொத்த ஓட்டங்களையும் கணக்கிட்டாலும் சச்சின் டெண்டுல்கரின் தனி நபர் மொத்த ஓட்டத்துக்கு சமமாகாது. ஆனாலும் இளம் கன்று பயமறியாது என்பது போல் பலம் வாய்ந்த தென் ஆபிரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்தியது வெஸ்ட் இன்டீஸின் எழுச்சி எனக் கொள்ளலாம்.

இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வெஸ்ட் இன்டீஸ் வீரர் பிராவோவுக்கு இதுதான் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு டெஸ்ட் வெற்றியை வைத்துக்கொண்டு வெஸ்ட் இன்டீஸ் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டதெனக் கொள்ளமுடியாது.

இந்திய அணியை பொறுத்தவரை இந்த வருட முடிவு கசப்பாகிவிட்டது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு உற்சாகமான வருடம். அதே நேரம் இரு அணிகளுக்கும் அடுத்த வருடம் எப்படியிருக்கும் என சில நாட்களில் தெரிந்துவிடும். அடுத்த டெஸ்டில் ஆஸியின் 15 டெஸ்ட் தொடர் வெற்றிகளை இந்திய அணியால் நிறுத்த முடியுமா? காலம் பதில் சொல்லும்.

அந்தணர் என்போர் அறவோர்.

நேற்றை விஜய் டீவியின் மதன் திரைப்பார்வையில் எவனோ ஒருவன் திரைப்பட விமர்சனத்தில் மாதவன் பிராமணர் என்றால் சாதுவானவர்கள் யாருக்கும் எந்தக் கேடும் விளைவிக்கமாட்டார்கள் என்றார். அதாவது இந்தப்படத்தின் கதாநாயகன் ஸ்ரீதர் வாசுதேவன் பாத்திரத்தை ஏன் பிராமணராகக் காட்டினீர்கள் என மதன் கேட்ட கேள்விக்கு மாதவன் அளித்த பதில்.

இந்தியாவில் எத்தனையோ பிரச்சனைகளுக்கு காரணம் பிராமணர்கள் என்ற உணமை மாதவனுக்கும் தெரியவில்லை, மதனுக்கும் தெரியவில்லை.

ஆனால் ஈழப்பிரச்சனையில் அப்பாவித் தமிழர்களையும் புலிகளாக்கும் ஹிந்து ராம், மணி சங்கர் ஐயர், சோ, தினமலர் குருமூர்த்தி, ஈழத்தமிழர்களின் பாஸ்போர்ட்டைப் பார்க்க விரும்பும் மாலன் போன்றவர்கள் சாதுவான அந்தணர்களா?

என்ன கொடுமை சார்?

நாயாட நரியாட

தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரு வித்தியாசமான நடன நிகழ்ச்சி நாயாட நரியாட. இந்த நிகழ்ச்சி ஒரு சேனலில் விரைவில் ஆரம்பமாக இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக ( நடனம் ஆடுபவர் அல்ல நடு நிலையான நடுவர்) நீங்களும் பங்கபற்ற விருப்பமா? உடனடியாக எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தேவையான தகைமைகள்:

1. நடனம் பற்றிய எந்த அறிவும் தேவையில்லை.
2. தலைமயிர் நன்கு வளர்ந்திருந்தால் தேர்வு செய்யப்படும் சாத்தியம் அதிகம்.
3. இடையிடையே நடிக்கத் தெரிந்திருக்கவேண்டும், அழுதால் ரசிகர்களிடம்
பெயர் கிடைக்கும்.
4. நடனமாடும் ஆண்களை விட பெண்களிற்க்கு அதிகம் மார்க் போடுதல் வேண்டும் அட்டு
பிகர் என்றாலும் அவரை ஜோதிகா, சிம்ரன் ரேஞ்சுக்கு புகழவேண்டும்.
5. இடையிடையே மேடையில் சென்று சூப்பராக ஆடினேர்கள் என ஆண்களைக்
கட்டிப்பிடித்து வாழ்த்தவேண்டும், பெண்களையும் கட்டிப்பிடிக்கலாம் ஆனால் பின்
விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.

தெரிந்திருக்கவேண்டிய சொற்கள் :
கீழ் வரும் சொற்களில் சிலவற்றை மட்டும் பாவித்து நீங்கள் ஜல்லி அடிக்கலாம். இந்த சொற்களில் 3க்கு மேற்பட்ட சொற்கள் உங்களுக்குத் தெரிந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

1. கெமிஸ்ரி : ஒரு நடன நிகழ்ச்சியில் முக்கியமான சொல் இதுவாகும்.
நடனாமாடிய பெண்ணுக்கும் ஆணுக்கும் இந்தக் கெமிஸ்ரி இல்லையென்றால் நடனம்
அம்பேல். எனக்குத் தெரிந்த கெமிஸ்ரியில் பென்சீன் ரிங், ஆர்கானி போன்றவை
மட்டும்தான் தெரியும். இந்த நிக்ழ்ச்சிகள் பார்த்த்பின்னர் தான் நடனம் ஆடவும்
கெமிஸ்ரி தெரிந்திருக்கவேண்டும் என புரிந்தது.)

2. சூப்பர் : இந்த வார்த்தையை பல விதமான ஸ்டைல்களில் சொல்லத்
தெரிந்திருக்கவேண்டும்.

3. பன்டாஸ்டிக் : ஒருவர் சொதப்பலாக ஆடினாலும், சூப்பராக ஆடினாலும் இந்த
வார்த்தையைச் சொல்லவேண்டும், நீங்கள் சொதப்பலாக ஆடியவருக்கு ஏன்
பன்டாஸ்டிக்கு என்று சொன்னீர்கள் என்று பார்ப்பவர்கள் முடியைப் பிய்க்கவேண்டும்.

4. எனர்ஜி :கெமிஸ்ரிக்கு அடுத்த இடத்தை இந்த சொல் பிடிக்கவேண்டும். ஆடுபவர்
சோம்பலாக ஆடினாலும் உங்கள் எனர்ஜி, எனர்ஜி லெவல் ஆச்சரியமளிக்கிறது என
ஆடிய்வரையே ஆச்சரியப்படவைக்கவேண்டும்.

5. எக்ஸ்பிரசன்ஸ் : முகத்தில் எந்தவித முகபாவனை செய்யாதவரைப் பார்த்து உங்கள்
எக்ஸ்பிரசன்ஸ் அட்டகாசம் என நீங்கள் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல்
சொல்லவேண்டும்.

6. பாடி லாங்குவேஜ் : இதனையும் இடைக்கிடை சொல்லவேண்டும். இல்லையென்றால்
உங்களுக்கு ரசனை இல்லையென்று மற்றவர்கள் நினைத்துவிடுவார்கள்.

இது தவிர வேறு வார்த்தைகள் இருந்தால் அன்பான நண்பர்களே தெரிவியுங்கள்.

மானாட மயிலாட, ஜோடி நம்பர் ஒன், மஸ்தானா மஸ்தானா போன்ற நடன நிகழ்ச்சிகள் பார்த்த பாதிப்பில் எழுதிய பதிவு இது.

வீக் என்ட் ஜொள்ளு

வீக் என்ட் ஜொள்ளு

அடுத்த வாரம் முதல் எனக்கு புதிய வேலை கிடைத்துள்ளது. இதுவரை செய்தவேலையையும் விட்டுவிட்டு இந்தவேலைக்குப் போகப்போகின்றேன், முன்னையவேலையை விட சம்பளமும் குறைவு தான். ஆனால் இந்த வேலை மனதை உற்சாகப்படுத்தும்.

என்ன வேலை தெரியுமா? காற்பந்து பயிற்சிவிப்பாளர். பாடசாலை நாட்களில் கால்பந்தை நான் கையால் கூடத் தொட்டதில்லை ஆனால் இந்தவேலைக்கு போகவேண்டும் என எனக்கு ஆசை. ஓவர் பில்டப் இத்துடன் போதும்.


ஏன் நான் அந்த வேலைக்குப் போகவிரும்புகின்றேன் தெரியுமா?

கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.




இந்த டீமுக்கு கோச்சாகப் போக எவன் தான் விரும்பமாட்டான்.

‘மனுஷங்களா நீங்க?!’

கொதிக்கும் மலேசிய தமிழர்கள்!

கலை இரவுக்கு கிளம்பும் கோலிவுட்...

‘மனுஷங்களா நீங்க?!’


பறிக்கப்பட்டு வரும் தங்கள் அடிப்படை உரிமைகளை மீட்க, நவம்பர் 25&ம் தேதி அமைதியான முறையில் திரண்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை மலேசிய அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கிய அராஜகத்தை உலகமே பார்த்து அதிர்ந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்ட பலர் இன்று மலேசிய சிறையில்! இதைத் தொடர்ந்து, இலங்கை தமிழர்கள் பிரச்னைக்குப் பிறகு சர்வதேச அரங்கில் மலேசிய தமிழர்களின் பிரச்னை வெளிச்சத்துக்கு வந்து, புதியதோர் இன உரிமைப் போராட் டத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

தமிழக அரசு, இந்திய அரசு தவிர அமெரிக்கா உட்பட உலக நாடுகள் மலேசிய தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித் திருக்கின்றன. ஆனாலும், எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்பதுதான் மலேசியாவின் திக்திக் நிலவரம்.

இப்படியரு சூழலில், மலேசிய தமிழர்கள் முன்பு கலை நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலம் வரும் வருவாயை தங்கள் சங்கத்தின் நலனுக்குப் பயன்படுத்த தீவிரமாக தமிழ் திரையுலகத்தினர் ஏற்பாடுகள் செய்துவருகிறார்கள். இது கோடம்பாக்கத்துக்குள்ளேயே பெரிய புயலைக் கிளப்பி இருக்கிறது.

நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடம் கட்டவும், நலிந்த கலைஞர்களுக்கு உதவும் வகையிலும் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் தலா ஒருநாள்


நடைபெறும் கலை நிகழ்ச்சி களில் பங்கேற்பதே கோலிவுட் ஸ்டார்களின் திட்டம். இந்த தருணத்தில் மலேசியத் தமிழர் அமைப்பிலிருந்து நடிகர் சங்கத்துக்குப் படுகாட்டமான ஒரு கடிதம் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

‘‘நடுத்தெருவில் எங்கள் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். பிரச்னை பற்றியெரியும் இந்த நேரத்தில் நீங்கள் இங்கு வந்து எங்களை சந்தோஷப்படுத்தப் போகிறீர்களா? நீங்கள் இங்கு வந்து, உங்களைப் பார்க்க நாங்களும் ஆடிட்டோரியத்தில் கூடி, கைதட்டி ஆர்ப் பரிப்புடன் ரசித்தால் எங்கள் போராட்டம் பற்றி உலகம் என்ன பேசும்? மலேசிய அரசு எங்கள் உரிமைப் போரின் நேர்மை குறித்து என்ன சொல்லும்? இதையெல்லாம் யோசிக்காமல், ஏற்கெனவே தீட்டிய பயணத்தை விடாப் பிடியாக மேற்கொள்ள நினைக்கும் நீங்கள் மனிதர்களா?’’ என்று நீள்கிறதாம் அந்தக் கடிதம்.

இதுபற்றி சினிமா பிரமுகர் ஒருவரே தன் அடையாளத்தை மறைத்துப் பேசினார். ‘‘எல்லாமொழி சினிமாவிலும் தேவைகள் உண்டு. அதை நிறைவேற்றிக்கொள்ள எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, கேரளா சினிமாவின் அமைப்பான ‘அம்மா(association of all malayala movie artists-AMMA)’ தங்கள் கலைஞர்களின் நலனுக்காக நிதி திரட்ட ஒரு யோசனை செய்தது. அதன் படி நடிகர் திலீப் தலைமையில் காமெடி ப்ளஸ் கமர்ஷியல் படமெடுத்து சூப்பர் ஹிட்டாக்கி சம்பாதிக்க ஐடியா செய் தார்கள். இப்போது படத்துக்கு ‘ட்வென்டி ட்வென்டி’ என்று தலைப்பிட்டு, மலையாளத்தின் அத்தனை ஸ்டார் களும் அதில் நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். நல்ல காரியத்துக்காக உருவான சினிமா என்பதாலேயே அதற்குப் பெருவாரியான ஆதரவு... மலையாள சினிமா வில் இதுவரை இல்லாத அளவுக்கு அந்தப் படம் வியாபார மாகியிருக்கிறது.

மலேசிய கலை நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல் போகவில்லை. விஜய், விக்ரம் போன்றவர்கள் போனால்தான் உண்டு. இந்நிலையில் யாரைத் திருப்திப்படுத்த, யாருடைய வியா பார வளர்ச்சிக்காக இந்த மலேசியப் பயணம் என்பது தெரியவில்லை’’ என்று கேள்வி எழுப்பினார்.

மலேசியத் தமிழர்கள் என்ன நினைக் கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ‘இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு’வின் (இந்தஅமைப்புதான் மலேசிய தமிழர்களின் உரிமைகளுக்காக இப்போது போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது) சட்ட ஆலோசகரும் முன்னணி தலைவர் களில் ஒருவருமான வழக்கறிஞர் கணபதி ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.

‘‘மலேசிய அரசுக்கு ஆதரவான அரசியல் கட்சிகளின் உதவியோடுதான் தமிழகக் கலைஞர்களை மலேசியாவுக்குக் கொண்டுவர சிலர் ஏற்பாடு செய்திருக் கிறார்கள். அவர்களுக்கு எங்கள் நிலைமையின் தீவிரமோ, வேதனையோ தெரியவில்லை. இங்குள்ள பளபள ஹோட்டல்களில் தங்கிவிட்டு, நகரத்தை சுற்றிவிட்டு, வந்த வேலை முடிந்து திரும்பிவிடுவார்கள். அவர்கள் நடத் தும் கலைநிகழ்ச்சிகளுக்கு நாங்கள் போனால் அதை இந்த அரசாங்கம், ‘இங்கே எல்லோரும் அமைதியாக, ரிலாக்ஸாக இருக்கிறார்கள்’ என்று உலக நாடுகளிடம் பிரசாரம் செய்யும். இதனால் எங்கள் போராட்டத்தின் வீரியம் குறைந்துபோகாதா?

கோரிக்கைகளை வலியுறுத்தி பொது இடத்தில் கூடுகிறோம். அதற்கு போலீஸ் அனுமதி மறுக்கிறது, சிறையில் தள்ளுகிறது என்பதெல்லாம் வந்த செய்திகள். வராத செய்தி ஒன்றைச் சொல்கிறேன்... கோலாலம்பூருக்குப் பக்கத்திலிருக்கும் பட்டா கேவ்ஸ் என்ற இடத்திலிருக்கும் முருகன் கோயிலில் சுமார் ஏழாயிரம் தமிழர்கள் கார்த்திகை தீபத் திருவிழாவுக்காகக் கூடினார்கள். அங்கும் வந்த போலீஸ் பீதியைக் கிளப்பி, ‘இவர்களால் சட்டம்&ஒழுங்கு பாதிக்கப்படும்’ என்ற பொய்யைச் சொல்லி, எல்லோரையும் அந்தக் கோயில் வளாகத்துக்குள் சிறை வைத்தது. அனைவர் மீதும் கண்ணீர்ப் புகையைப் பாய்ச்சியது. பக்திப் பரவசத்துடன் கூடிய தமிழர்களை அடக்க போலீஸ் செய்த அராஜகத்தைப் பற்றி யாரும் எதுவும் பேசவில்லை. ஆனால், அந்தக் களேபரத்தில் ஒரு போலீஸ்காரரின் நெற்றியில் சிறு கீறல் விழுந்தது. இதற்காக 33 தமிழர்கள் மீது ஜாமீனில் வெளியில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப் போட்டு உள்ளே தள்ளியிருக்கிறார்கள். இதற்கான தண்டனைக்காலம் இருபது வருடங்கள்.

இதுதான் எங்களின் இப்போதைய நிலை. ஆனால், Ôஉணவும், உடையும், இருக்க வீடும்தான் கிடைக்கிறதே... பிறகும் ஏன் போராட்டம்?Õ என்று கேலியாகக் கேட்கிறது மலேசிய அரசு. நாங்கள் எந்தத் தொழில் தொடங்கினாலும் அதில் முக்கால்வாசிப் பங்குகளை மலேயர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். 2003&ம் வருடத்தில் மருத்துவக் கல்லூரியில் ஒரே ஒரு சீட்டைத்தான் தமிழர்களுக்கு ஒதுக்கினார்கள். நாங்கள் போராடிய பிறகு அது கூட்டப்பட்டிருக்கிறது. அழகான நகரங்களை விட்டு சற்று உள்ளே சென்றால், தோட்டங்களில் வேலை செய்யும் தமிழர்களின் நிலைமையை எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.

எத்தனை சூப்பர் ஸ்டார் வேண்டுமானாலும் எங்கள் மண்ணுக்கு வரலாம்... நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அவர்கள் எங்கள் பிரச்னையைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எங்கள் பிரச்னையை அவர்களும் இந்த உலகத்துக்கு உரக்கச் சொல்ல வேண்டும்! அதற்காக வந்தால் மனமுவந்து வரவேற்போம். செய்வார்களா தமிழ் நட்சத்திரங்கள்?’’ என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் கணபதி ராவ்.

மலேசிய தமிழர்கள் சிலர் தங்கள் பெயர் குறிப்பிடாமல் நம்மிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். ‘‘ஏழு வருடங்களுக்கு முன்பாக தமிழ் சினிமா இசைப் பிரபலம் ஒருவர் மாபெரும் கச்சேரிக்காக மலேசியா வந்தார். அதற்கு கோடிக்கணக்கில் வசூல் கொட்டியது. உணர்ச்சிப் பெருக்கில் எங்களை சந்தித்த அவர், ‘உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று நெகிழ்வோடு கேட்டார். விழுந்து நொறுங்கும் நிலையிலிருக்கும் சில தமிழ்ப் பள்ளிகளைக் குறிப்பிட்டு அவற்றைப் புனரமைக்க நிதி கேட்டோம். ‘நிச்சயம் செய்கிறேன்’ என்று போனவர்தான். அதன்பிறகு மலேசியாவுக்கு அவர் உதவி வந்தது. ஆனால், எங்களுக்கல்ல... வேறு சிலருக்கு... அதுவும் அவர் விரும்பியவர்களுக்கு!’’ என்றார்கள்.

கடைசியாக, நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவியிடம் பேசினோம். ‘‘எனக்குத் தெரிந்து கலை நிகழ்ச்சி நடத்த மலேசியாவில் யாருக்கும் எதிர்ப்பு இல்லை. நீங்கள் சொல்வது போல் கடிதம் எதுவும் வரவுமில்லை. மலேசிய தமிழர்களின் நலனில் எங்களுக்கும் மிகுந்த அக்கறை இருக்கிறது. அது அவர்களுக்கும் புரியும். ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தபடி இந்த நிகழ்ச்சி நன்றாகவே நடந்து முடியும். ஆனால் மலேசிய தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக நாங்கள் நிகழ்ச்சி நடத்தப்போகிறோம் என்று வர்ணிப்பதை உணர்வுள்ள ஒரு தமிழனான என்னால் ஏற்க முடியாது!’’ என்றார்.

நன்றி ஜீனியர் விகடன்

பின்குறிப்பு : இந்த வார ஜூனியர் விகடனின் வந்திருக்கும் இந்த செய்தி உங்கள் பார்வைக்கு. சினிமாக்காரர்கள் தமிழனின் பணத்தில் வாழ்ந்துகொண்டு தமிழனை அழிக்கப்பார்க்கிறார்கள்.

விஜய் டீவியில் லக்கி லுக்

நேற்று இரவு 7 மணிக்கு விஜய் டீவியில் இடம்பெற்ற பாடும் ஆபிஸ் என்ற பாடல் பாடும் போட்டு நிகழ்ச்சியில் கலந்து அசத்தினார்.

அந்த நபர் லக்கி லுக்தான் என்பதற்கான ஆதாரங்கள்:
லக்கியின் புகைப்படம் பார்த்துள்ளேன் அத்துடன் பெயரும் ஒரே பெயர் தான். அந்த நபரும் விளம்பரத் துறையில் வேலை பார்க்கின்றார். ஆகவே லக்கி லுக்தான் அந்த நபர் என்பது வில்லிவாக்கம் புலனாய்வுத் துறையினராலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மறுபடியும் அந்த நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் பார்க்க மறந்தவர்கள் இன்று பார்க்கவும்.

டிஸ்கி : இது ஒரு மொக்கைப் பதிவு அல்ல. :)

ஓம் சாந்தி ஓம்

ஓம் சாந்தி ஓம் - திரைவிமர்சனம்

நேற்று பிற்பகல் என் மீடியா நண்பர் ஒருவர் இரவு ஓம் சாந்தி ஓம் படத்தின் பிரிவியூ ஷோவுக்கு போகவேண்டும் ஆயுத்தமாக இருக்கவும். நானும் பிரியாக வாற சான்சை ஏன் விடுவான் என்பதுடன் முதல்முதலாக தீபிகா படுகோனை திரையில் பார்க்கும் மகிழ்ச்சியுடனும் தயாரானேன்.

சரியாக ஆறரைமணியளவில் என் நண்பன் என் இருப்பிடத்துக்கு வந்தான் நாம் இருவரும் வெளியே கிழம்பியதுதான் தாமதம் மழை கொட்டத்தொடங்கியது. இருவரும் புரோகிராமைக் கான்சல் செய்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பலாம் என்றால் அவனுக்கு உத்தியோகபூர்வமாக எப்படியும் படத்தைப் பார்த்து எதிர்வரும் ஞாயிறு அவனுடைய பத்திரிகைக்கு விமர்சனம் கொடுக்கவேண்டும். இதனால் இருவரும் பஸ்சில் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு ஒரு ஓட்டோ ஒன்று பிடித்து திரையரங்கத்தை அடைந்தோம்.

7 மணிக்கு தொடங்கவிருந்த படம் சில பிரமுகர்களின் வருகையால் சற்றுத்தாமதமாகி 7.25 மணிக்குத்தான்ஆரம்பித்தது.



முதலில் 30 வருடங்களுக்கு முன்னர் என்ற டைட்டிலுடன் படம் ஆரம்பித்தது. ஒரு ஸ்ரூடியோவில் ஏதோ ஒரு படத்தின் சூட்டிங் நடக்கின்றது. ஓம் பிரகாஸ் மஹிஜாவும் (ஷாருக்கான்) அவரது நண்பர் பப்புவும்(ஸ்ரேயாஸ் தல்படே) ஜீனியர் ஆர்ட்டிஸ்ட். ஷாருக்கின் கனவு தான் ஒரு நாள் ஹிந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்ரார் ஆகவேண்டும் என்பதுதான் அதற்க்கு அவரது நண்பர் பப்பு நீ சூப்பர் ஸ்ரார் ஆகவேண்டும் என்றால் முதலில்
உன் பெயரை ஓம் கண்ணா அல்லது ஓம் கபூர் என மாற்று இல்லையென்றால் உன்னால் சூப்பர் ஸ்ராராக முடியாது என்கிறார்.

ஓமின் ஆசைகளில் ஒன்று தான் சூப்பர் ஸ்ராராகியவுடன் சுழலும் வட்டவடிவான கட்டிலிலிருந்து காலையில் நித்திரையால் எழும்பொழுது தன்னுடைய கால்கள் அழகான வெல்வெட் பாதணிகளைத் தாங்கவேண்டும், தனக்கு ஜூஸ் கொடுக்க ஒரு வேலையாள், ஜூஸ் குடித்தபின்னர் அந்த கப்பை எறிய அதனை பிடிக்க இன்னொரு வேலையாள், இப்படியான கனவு ஓமின் கனவு.

சூப்பர் ஸ்ரார்கனவில் மிதக்கும் ஷாருக்கின் கனவுக்கன்னி சாந்திப்பிரியா(தீபிகா படுகோன் அதாங்க நம்ம டோணியுடன் கிசுகிசுக்கப்படுபவர்). ஒரு நாள் ஒரு படப்பிடிப்பில் தீப் பிடிக்கும் காட்சி ஒன்றில் நிஜமாகவே தீப்பற்றிக்கொள்ள தீபிகா தீயினுள் அகப்பட்டுக்கொள்வார். அந்தப் படத்தின் நிஜக் ஹீரோ பயத்தில் அலற ஜீனியர் ஆர்ட்டிஸ் தீக்குள் பாய்ந்து தீபிகாவைக் காப்பாற்றிவிடுவார்.

பின்னர் வழமையான திரைக்கதைபோல ஷாருக்குக்கு தீபிகாமேல் காதல் வருகிறது தீபிகாவும் ஷாருக்குடன் டின்னர் போகின்றார் கனவில் அரைகுறை ஆடைகளுடன் ஆடுகின்றார். ஷாருக்குக்கு ஒரு காதலர் போல் உள்ள பரிசு ஒன்று அளிக்கின்றார். இந்த வேளையில் தான் முகேஸ் மெஹ்ராவுக்கும்(அர்ஜூன் ராம்பால்)தீபிகாவுக்கும் உள்ள
தொடர்பு ஷாருக்குக்கு தெரியவருகின்றது. முகேஸ் மெஹ்ரா ஓம் சாந்தி ஓம் என்ற பிரமாண்டமான படத்தை சாந்திப்பிரியாவை வைத்த எடுக்க நினைக்கின்றார். இந்த வேளையில் இவருக்கும் சாந்திப்பிரியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு என்ன நடக்கின்றது என்பது தான் இடைவேளைக்கு முன்னால் வரும் ஒரு கிளைமாக்ஸ்.

30 வருடங்களுக்கு பின்னர் 2007 என டைட்டில் கார்ட்.

இடைவேளைக்கு பின்னர் ஷாருக் கண்ட கனவுபோல் காட்சிகள் வருகின்றது, இவரின் தந்தை முன்னாள் பிரபல நடிகர் ராஜேஸ் கபூர் , ஷாருக்கின் பெயர் ஓம் கபூர். இந்த ஷாருக் முற்றிலும் மார்டேன் ஆன புதியவராக இருக்கிறார். இவருக்கு மூன்று அழகிகள் உதவியாளர்கள்.

ஓம் கபூர் தான் நினைத்தபடி இந்த வருடத்துக்கான பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது பெறுகின்றார் இவருடன் போட்டியிட்டவர்கள் அபிசேக் பச்சானும்( ஏனுங்க நம்ம தலைவி ஐஸ்வர்யா ராயை விருது வாங்கும் விழாவுக்கு அழைத்து வரவில்லை), அக்சய் குமாரும். எந்தவித பந்தாவும் இல்லாமல் இந்த கொஞ்சூண்டு கேரட்டரில் நடித்த இருவருக்கும் பாராட்டுக்கள். விருது முடிந்ததும் ஒரு பிரமாண்டமான பாடல், ஹிந்தித் திரையுலகின் அனைத்து நடிகர் நடிகைகளும் பங்குபெறுகிறார்கள்( தமிழில் ஒரு நடிகரின் படத்தில் இன்னொரு பிரபல நடிகர் முகத்தைக் காட்டுவதையே ஏதோ கொலைக்குற்றம் போல் பேட்டி கொடுப்பார்கள்).

அதே விருந்தில் ஓம் கபூர் முகேஸ் மெஹ்ராவைச் சந்தித்து 30 வருடங்களுக்கு முன்னர் தடைப்பட்ட ஓம் சாந்தி ஓம் படத்தை தன்னை வைத்து தயாரிக்கும் படி கூறுகின்றார். இதன் பின்னர் நடக்கும் சம்பவங்களைச் சொன்னால் படம் பார்க்கும் சுவாரஸ்யம் குன்றிவுடும். ஆகவே படம் பார்க்கவிரும்பும் அன்பர்கள் திரையிலோ இல்லை வீசிடியிலோ பார்த்து மகிழ்க.எதிர்வரும் 9 ந்திகதி இந்தத் திரைப்படம் திரைக்கு வருகின்றது.

இனி இப்படத்தின் பின்னால் இருந்தவர்களைப் பார்ப்போம்.

கதை, திரைக்கதை, இயக்கம் : ஃபாரா கான் பிரபல நடன இயக்குனர். நடன இயக்கமும் இவரே. பல காட்சிகளில் இவரின் திறமை தெரிகின்றது. ஆனால் சில இடங்களில் 30 வருடத்துக்கு முன்னைய காலகட்டத்தில் சில இடங்களில் கொஞ்சம் தடுமாறியுள்ளார். அதேபோல் ஓம் கபூரின் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் அவரின் பெற்றோருக்கு தெரியாமலிருப்பதிலும் நோ லாஜிக் ஒன்லி மாஜீக். மற்றும்படி சிறந்த பொழுதுபோக்குப் படம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

இசை : விஷால் அன்ட் சேகர் பாடல்கள் கேட்கும் படி இருக்கின்றன.

கலை : சாபு சிரில் ஓம் சாந்தி ஓம் சூட்டிங் நடக்கும் ஸ்ரூடியோ பிரமிக்க வைக்கின்றது அதிலும் இரண்டு கிளைமேக்ஸ் காட்சிகளிலும் கலக்கல். ஒரு பாடலிலும் சிறந்த கலைவடிவம்.

ஒளிப்பதிவு : மணிகண்டன்( அந்னியனில் சங்கருடன் பணியாற்றியவர் ஷாருக்கின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் )சிறந்த ஒளிப்பதிவு முதல் பாடலில் திரையை படம் பிடித்தால் ஏற்படும் எபெக்ட் கொடுத்திருப்பார்.

மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விடயம் ஃபாரா கானுக்காக ஹிந்தித் திரையுலகின் பலர் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியதுதான் . அவர்களுக்கு முதலிலேயே நன்றி சொல்லிவிட்டார்கள்.




இறுதியாக என்ன சொல்கிறாகள் என்றால் சில காதல் கதைகளுக்கு ஒரு வாழ் நாள் போதாது.

For some Dreams one lifteime is not enough

பின் குறிப்பு :
இந்தப் படத்துக்கும் நடிகை பூஜாவுக்கு என்ன தொடர்பு என்றால் ஹிஹிஹி ஒன்றும் இல்லை. அவர் நான் பார்த்த பிரிவியூ ஷோ பார்க்க தனது தாயாருடன் வந்திருந்தார். மேக்கப் இல்லாமல் வந்தபடியால் முதலில் அடையாளம் காண்பது கஸ்டமாக இருந்தது.

தசாவதாரம் இசை விமர்சனம்

குமுதம் இதழில் வெளிவந்த தசாவதாரம் இசை விமர்சனம்.


கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது’’
_ ஹரிஹரனின் கணீர்க் குரலில் ஆரம்பிக்கிறது தெறித்து விழும் வாலியின் தத்துவார்த்தமான வரிகள். இசை: மும்பையிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகியிருக்கும் ஹிமேஷ் ரேஷ்மையா. இந்தப் பாடல் காட்சியை படுபிரமாண்டமாக அமைத்திருகிறார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமிடையிலான பரஸ்பர பகையின் பின்னணியில் இந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆஜானுபாகுவாக பஞ்சகச்சத்துடன் சட்டை போடாமல் திருநாமத்துடன் நிற்கும் கமலைக் கொக்கியால் இரண்டு கைகளிலும் கால்களிலும் குத்தி, ஒரு கிரேனில் கொடூரமாகத் தொங்கவிடுகிறார்கள் சைவர்கள். அம்பாரி வைத்து ஜோடிக்கப்பட்ட யானையின் மீது கம்பீரமாக வரும் சைவ மன்னரான நெப்போலியனின் உத்தரவின் பேரில்தான் இந்தக் கொடூரம் நடக்கிறது. ஒரு பக்கம் ஏராளமான வைணவர்கள் செய்வதறியாமல் திகைக்க, இன்னொருபுறம் கமலின் மனைவியான அஸின் (புடவை கட்டி ரவிக்கை போடாத அஸின்!) கதற... கிரேன் வேகமாக கடற்கரையில் நகர்கிறது. உயரத்தில் தொங்கும் கமல் மீது அம்புகள் வேறு சரமாரியாக விடப்படுகின்றன. சற்று நேரத்தில் ஒரு சிலையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் கமல் நடுக் கடலில் தூக்கி வீசப்படுகிறார். உடம்பை உலுக்கும் காட்சி! பாட்டு முடிகிறது. யாரையும் வெலவெலக்க வைக்கும் இந்த நான்கு நிமிட காட்சியைப் பீதியுடன் காணும் திரளான மக்களை உற்று கவனித்தால், சுத்தமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடுத்தர வயதில் ஒரு மாநிற மனிதர் அட... அவரும் கமல்! காட்சிக்கு ஏற்றவாறு தசைகளை முறுக்கேற்றும்படி பாடியிருக்கிறார் ஹரிஹரன்.

‘முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா ‘வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா’ பாடலை நம்மூர் ஸ்டைலில் ரொம்ப சாஸ்திரியமாக முயற்சி செய்திருக்கிறார் வட இந்திய ஹிமேஷ். காப்பி ராக சாயலில் அமைந்துள்ள ‘முகுந்தாவில்’ அனாவசிய வாத்திய இரைச்சல் இல்லை. வீணை, மிருதங்கம், கடம் ஆனந்தமாய் ஒலிக்கிறது. சாதனா சர்கத்தின் தொண்டையில் நிரந்தரமாக தேன் தடவியிருக்கிறதோ என்னமோ, அப்படியரு குழைவு, இளமை! சொல்லப்போனால் தசாவதாரத்தின் ஐந்து பாடல்களில் இதில் மட்டுமே கர்நாடக சங்கீதத்தை கேட்க முடிகிறது.

மல்லிகா ஷெராவத்தின் துள்ளலான ஆட்டத்திற்கு ராப் ஸ்டைலில் விளையாடியிருப்பவர் கமலின் மகள் ஸ்ருதி. பல்லவியை ஆங்கிலத்தில் ஆரம்பித்து அனுபல்லவியின் போது தமிழுக்கு வருகிறார். வாத்திய இரைச்சல் சற்று அதிகம் என்றாலும் மேற்கத்திய இசை ரசிகர்களை தோளைக் குலுக்கி, குதிகாலைத் தூக்கி ஆடவைக்கலாம். முழுவதும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட அட்டகாசம்!

வழக்கமாக கமல் பாடும் போது வாயில் எதையோ அடக்கிக் கொண்டு பாடுவது போல தெரியும். தசாவதாரத்தில் அவர் பாடும் டூயட் ‘ஓ.. ஓ சனம்’ பெட்டர். முழுவதும் மேடையில் பாடுவது போன்ற காட்சி. இடை யிடையே ‘உஸ் உஸ்’ என்று சீறும் அலை ஓசை வித்தியாசமானது. பாட்டின் பல இடங்களில் கிதார் ரகளை செய்கிறது!

‘‘உடல் பூமிக்கு போகட்டும்

இசை பூமியை ஆளட்டும்’’

‘‘கடவுளும் கந்த சாமியும்

பேசிக் கொள்ளும் மொழி இசை’’

‘‘வீழ்வது யாராயினும்

வாழ்வது நாடாகட்டும்’’

போன்ற வைரமுத்தின் நயமான வரிகள் பாட்டு நெடுகிலும் உண்டு.

படத்தின் க்ளைமாக்ஸில் எல்லா கமல்களும் அணிவகுக்கும் போது ஆர்ப்பாட்டமாக வருவது:

‘‘உலக நாயகனே... கண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகனே!’’

ராப், ஹிந்துஸ்தானி எல்லாவற்றையும் அழகாக கலந்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். கமல் ரசிகர்கள் திரைக்கு முன்பு ஓடிவந்து நாக்கை மடக்கி வெறியாட்டம் போட வைக்கிற அதிரும் பீட்! அந்த ‘கிடதங் கிடதங்’ பின்னணி அருமை! கமல் ரசிகர்களை சூடேற்றுவதற்காகவே ‘நீ பெருங்கலைஞன், நிரந்தர இளைஞன்’ என்று வைரமுத்துவின் கெத்தான வரிகள் வேறு! கேட்கவா வேண்டும்?

ஹிமேஷ் இசையைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்கிறபோது சற்று ரஹ்மானை நினைவுபடுத்தினாலும் தமிழுக்கு அந்த பீட்களும், அலறும் வயலின்களும், வேகமும் புதியது! மேற்கத்திய வாடை சற்று தூக்கல்! நம்மூர் கர்நாடிக் மியூஸிக்கை ஊறுகாயைப் போல தொட்டுக் கொண்டு விட்டு விட்டாரே என்ற ஏக்கமும் வராமல் இல்லை. ஆனால் தயாரிப்பாளர் கல்லாவைப் பார்ப்பாரா, கர்நாடிக்கைப் பார்ப்பாரா?.

_ வி. சந்திரசேகரன்

நன்றி : குமுதம்

டிஸ்கி : இதுவரை எந்த இணையத்திலும் பாடல்கள் வெளிவரவில்லை.

வாழ்த்துக்கள் முரளி கார்த்திக்



திமிர் பிடித்த ஆஸியின் மூக்கை பந்துவீச்சாலும் துடுப்பாட்டத்தாலும் உடைத்த தங்கத் தமிழன் முரளி கார்த்திக்கு வாழ்த்துக்கள்.



தெரிவாளார்களே இனியாவது உங்கள் கண்களுக்கு முரளி தென்படுகின்றாரா எனப் பாருங்கள். மீண்டும் அவரை இடை நிறுத்தாதீர்கள்.

ஓய்வெடுங்கள் சச்சின்

ஓய்வெடுங்கள் சச்சின்

சமீபகாலமாக சச்சின் டெண்டுல்கரின் துடுப்பாட்டம் குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில் அவ்வளவாக சோபிக்க வில்லை. இன்று சண்டிகரில் நடந்துகொண்டிருக்கும் போட்டியில் கூட ஆரம்பத்தில் மிகவும் மந்தமாக விளையாடி (ஒரு கட்டத்தில் சச்சின் 22 பந்துகளுக்கு வெறும் 3 ஓட்டங்கள் மட்டும் பெற்றிருந்தார்), பின்னர் சற்று அடித்து அதிலும் 119 பந்துகளில் வெறும் ஏழே எழு நான்கு ஓட்டங்களுடன் மொத்தமாக 79 ஓட்டங்கள் எடுத்தார். 119 பந்துகளில் சச்சின் விளையாடாமல் அல்லது ஓட்டம் எடுக்காமல் விட்ட பந்துகளின் எண்ணிக்கை 73 பந்துகள். ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவரை இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். 73 பந்துகளை சச்சின் வீணாக்கினார் என்பது கிட்டத்தட்ட 12 ஓவர்களை சச்சின் வீணடித்துள்ளார்.

சில‌ நாட்க‌ளுக்கு முன்ன‌ர் மூத்த‌ வீர‌ர்க‌ள் ப‌ற்றி திலிப் வெங்சகார் கூறிய‌ க‌ருத்து உண்மையாகும் போல் தெரிகின்ற‌து. மூத்த‌ வீர‌ர்க‌ள் இள‌ம் த‌லைமுறைக்கு இட‌ம் விட்டு விட்டு ம‌ரியாதையாக‌ ஒதுங்குவ‌து ந‌ல்ல‌து.


இன்றைய சச்சினின் ஆட்டம் தனது இடத்தை தக்கவைக்க ஆடியதுபோல் உள்ளது. இறுதி நேரத்தில் மகேந்திர சிங் டோணியும் ரொபின் உத்தப்பாவும் ஆடியபோல் மூத்த வீரர்களான சச்சினும் கங்குலியும் ஆடவில்லை. இருவரும் தமது இடத்தை தக்கவைத்துக்கொள்ளவே ஆடியதுபோல் ஆடினார்கள். அடுத்த மூத்த வீரரான ராகுல் ராவிட் யார் என்ன சொன்னாலும் என் இடத்தை யாருக்கும் விட்டுத்தரமாட்டேன் என்ற எண்ணத்தில் 14 பந்துகளில் 13 ஓட்டங்களை மட்டும் எடுத்து (அதில் 7 பந்துகளுக்கு ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை ) அவுட்டாகினார்.

கங்குலியும் தான் சச்சினுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை என்பதுபோல் 59 பந்துகளீல் 41 ஓட்டங்களை மட்டும் எடுத்தார். இதில் 46 பந்துகளுக்கு ஓட்டம் ஏதும் எடுகவில்லை.

ஆரம்பத்தில் போட்டியைப் பார்த்தவர்களுக்கு ஏதோ டெஸ்ட் மேட்ச் நடக்கின்றதோ என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும்.

சச்சின் உங்கள் சாதனைகளை நாங்கள் மறக்கவில்லை. அதே நேரம் உங்கள் சாதனைகளை முறியடிக்கவும் வருங்கால வீரர்களுக்கு நீண்டகாலம் எடுக்கும். அதனால் மிகவும் மரியாதையாக ஒரு நாள் போட்டியிலிருந்து விலகி புதிய இளம் சிங்கங்களுக்கு வழிவிடுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல கங்குலி ராவிட் போன்ற ஏனைய மூத்த வீரர்களுக்கும் பொருந்து. நீங்கள் மூவரும் வழி விட்டதினால் தான் இளம் வீரர்களால் 20க்கு 20 போட்டியில் சாம்பியன்ஸ் ஆக முடிந்தது.

வாழ்க சச்சின் வளர்க அவர் சாதனைகள்.

கர்னாடக சங்கீத்தில் தமிழ் ஏன் புறக்கணிக்கப்படுகிறது?

கர்னாடக சங்கீத்தில் தமிழ் ஏன் புறக்கணிக்கப்படுகிறது?

தலைப்பை பார்த்ததும் சிந்துபைரவி படம் ஞாபகத்திற்கு வருகிறதா? விடயமும் அதில் வந்த சிந்துவின் கேள்விதான்?

பல சங்கீதமேடைகளில் தெலுங்குகீர்த்தனைகளைத்தவிர வேறு ஏதும் பாடுவதில்லை. அப்படிப் பாடினாலும் அவை துக்கடாக்களாத்தன் இருக்குமே தவிர ஒரு முழுமையான கீர்த்தனையாய் இராது. இந்த இசை ஜாம்பவாங்கள் அனைவரும் ஏதோ கர்னாடக சங்கீதம் தெலுங்கில் இருந்து பிறந்தது என எண்ணிக்கொண்டிரிக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல தமிழில் தான் அது முதலில் உருவானது பின்னர் கால் ஓட்ட்த்தில் அது தெலுங்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சிலர் சொல்லுகிறார்கள் தமிழில் போதிய பாடல்கள் இல்லையென்று ஐயா மேதாவிகளே நமது முண்டாசுக் கவிஞனின் பாடல்களே பல தலைமுறைக்கு போகும் அதனை விட நமது தேவாரதிருவாசகங்கள் பல நூறு தலைமுறைகளுக்கு போதும் பின் ஏன் நீங்கள் தமிழில் பாடாமல் தெரியாத மொழியில் பாடுகிறீர்கள்.

எனக்கு தெரிந்து ஒருமுறை கொழும்பில் சீர்காழி சிவசிதம்பரமும் பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதியும் மட்டும் முழுக்க முழுக்க தமிழில் பாடி சபையைமெய்மறக்கசெய்தார்கள்.கம்பன் விழா இசை வேள்வியில் திரு,ராஜ்குமார் பார‌தி
பாடினார். சீர்காழி சிவசிதம்பரம் வேறு ஒரு நிகழ்ச்சியில் பாடினார். இதுவரை கம்பன் கழகம்( கன்னித் தமிழ் வளர்ப்பவர்கள்) ஒரு இசை வேள்விக்கேணும் சீர்காழி சிவசிதம்பரத்தை அழைக்கவில்லை. ராஜ்குமார் பார‌தியும் ஒரே ஒரு தடவை மட்டும்தான்.


எனையோர் வழமைபோல் சுந்தரத் தெலுங்குக்கு அடிமையாகி தங்கள் தலைகளை மட்டும் ஆட்டி சபையை விட்டு மெல்ல மெல்ல வெளியேறினார்கள்

ஏன் இந்த அடிமைதனம்?

எமது முத்தமிழை ஒழிக்க பலர் பல்வேறு வடிவங்களில் அலைகிறார்கள் என்னை பொறுத்தவரை இவர்களிடமும் இருந்து எம் மொழியை காக்கவேண்டிய அவசியம் தேவை. சும்மா சினிமா படங்களின் தலைப்பை மாத்தசொல்லி போராடும் தமிழ்குடிதாங்கிகள் இதைப்பற்றி கவலைப்பட்டதாய் தெரியவில்லை. சில வேளை இது மேல்தட்டு மேல்ஜாதி மக்களின் துறை என நினைத்து சும்மா இருக்கிறார்களா?

இது பற்றியும் சற்று சிந்திபோம்.

உலக சமாதானத்துக்காக‌

உலக சமாதானத்துக்காக‌

உலகில் சாந்தியும் சமாதானமும் உருவாக இந்த கற்பனைத் திருமணங்கள் நடைபெற்றால் எப்படி இருக்கும்.

அத்வானியும் சோனியாவும், முஷாரப்பும் பெனாசீரும் அத்துடன் ஒரு ஆணை இன்னொரு ஆண் திருமணம் செய்வது என்பது சில நாடுகளில் சட்டரீதியானது என்பதால் புஷ்சும் பின்லேடனும் திருமணம் செய்து உலக மக்களின் சமாதானத்துக்காக பாடுபடப்போகிறார்கள்.

வாங்க சும்மா சிரித்துவிட்டுப்போங்க

மனிதரில் எத்தனை நிறங்கள்

மனிதரில் எத்தனை நிறங்கள்

கீழே எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு ஆங்கிலக் கவிதையை தருகின்றேன். அழகாக மொழிபெயர்க்ககூடியவர்கள் தமிழில் மொழி பெயருங்கள்.

அந்த சிறுமியின் வேதனை ஆதங்கம் நெஞ்சைத் தொடுகிறது.

This poem was nominated poem of 2005 for the best
poem, written by an
African kid.........amazing thought!!!


When I born, I'm Black,
When I grow up, I'm Black,
When I go in Sun, I'm Black,
When I scared, I' m Black,
When I sick, I'm Black
And when I die, I'm still black.

And you White fellow,
When you born, you are Pink
When you grow up, you are White,
When you go in Sun, you are Red,
When you cold, you are Blue
When you scared, you are Yellow
When you sick, you are Green
And when you die, you are Gray
And you calling me colored?

விநாயகருக்கு நேர்ந்த கதி.

விநாயகருக்கு நேர்ந்த கதி.

எனக்கு இன்று மின்னஞ்சலில் வந்த ஒரு விடயத்தை பகிர விரும்புகிறேன். விநாயகர் சதுர்த்தி தேவைதான் ஆனால் அதற்க்காக இப்படியா பிள்ளையார் சிலைகளை கேவலப்படுத்துவது.
கடவுளா? கல்லா? என பலர் கேள்விகேட்க இதுவும் ஒரு காரணம் தான்.

இனி மின்னஞ்சலைப் படியுங்கள்.

Truth Hurts-Wake Up Call !

IDOL Worship ?
or
IDLE Worship ?
or
IDEAL Worship ?


After immersion...?


The Day after ...



Would you like your Gods bulldozed like garbage?



And treated like this?


Or dumped like this ?



Left to rot for scavengers to feast?



Lying at your feet … Helpless … Abandoned by worshipers


Maimed ? Desecrated ?

And you create a hue and cry when some statue in your city get Desecrated ?

You burn down buses and call for bands?



Was that statue a God?
Or
Is this God only a statue ?
You decide



Wake up

இந்துக்களே இனியாவது விழிமின் எழுமின்

அவுஸ்திரேலியாவை வீழ்த்திய சிம்பாவே.

அவுஸ்திரேலியாவை வீழ்த்திய சிம்பாவே.

இன்றைய ஆட்டத்தில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஆஸி அணியை இளம் வீரர்களைக் கொண்ட சிம்பாவே அணி மிகுந்த போராட்டத்துடன் வீழ்த்தி ஆஸிக்கு அதிர்ச்சியளித்தது. ஆஸியின் முதல் 3 விக்கெட்டுகள் சொற்ப ஓட்டஙளுக்கு வீழ்ந்தன. 20க்கு 20 போட்டியில் அதிகூடிய ஓட்டம் எடுப்பார் என பலராலும் நம்பபட்ட கில்கிறிஸ்ட் வெறும் நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆஸி 9 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. சிக்கும்பரா 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்

139 என்ற இலக்கை ஆரம்பம் முதலே அதிரடியாக டைலரும் சிபண்டாவும் ஆரம்பித்தனர். பின்னர் மழை காரணமாக சில நிமிடங்கள் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வேளையில் D/ள் முறைப்படி ஆஸி வெற்றியின் விளிம்பில் இருந்தது. பின்னர் டைலரின் அதிரடி ஆட்டத்தில் சிம்பாவே ஒரு பந்து மீதமிருக்க 19.5 ஓவரில் 139 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. யாரலும் வீழ்த்தமுடியாத ஆஸியை சிம்பாவே வீழ்த்தியபின் இன்னமும் எத்தனை அதிர்ச்சிகள் காத்திருக்கப்போகின்றனவோ காத்திருப்போம்.

நெஞ்சு பொறுக்குதில்லை

சுதந்திரத்துக்காக இவர்கள் என்ன செய்தார்கள்?

நாளை இந்தியாவின் 60வதாவது சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் சின்னத்திரையில் வெகு ஜோராக களை கட்ட இருக்கிறது. சகல டீவிகளிலும் அரை மணித்தியாலம் சுதந்திரத தினம் பற்றி யாரோ பாடுகிறார்கள் அல்லது கதைக்கிறார்கள். பின்னர் சகல நிகழ்ச்சிகளும் சினிமா சினிமா. ட்ரையிலர்களைப் பார்த்தாலே புரியும்.

சன் டீவியில் சிறப்பு வணக்கம் தமிழகத்தில் நடிகை சந்தியா கலந்துகொள்கிறார்கள். இவர் இந்திய சுதந்திரத்துக்கு என்ன செய்தார்?
ஜெயா டீவியில் நடிகை சதா (தமிழ் தெரியாது) ஆங்கிலத்தில் பேட்டி.
கேடிவியில் நடிகை ஷெரின் பேட்டி.
விஜய் டீவியில் சரோஜா சாமா நிக்காலோ என்ற சென்னை 28ன் நூறாம் நாள் விழா.
மற்றும்படி வழமைபோல் சன்னில் சாலமன் பாப்பையா விஜய்யில் லியோனி பட்டிமன்றம்.

சன்னில் காலையில் ஸ்ரீ காந்த் சினேகாவுடன் ஆடிப்பாடிய பார்த்தீபன் கனவு படம் . சுதந்திர தினத்துக்கும் இந்தப்படத்துக்கும் என்ன சம்பந்தம். பாரதியார் கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களைப் போடலாம். ஜெயாவில் பாலசந்தரின் பொய். சன்னில் மீண்டும் ரீமெக் மன்னன் ஜெயம் ரவி நடித்த எம் குமரன் படம்.

சுதந்திரதினம் என்பது இவர்களுக்கு விளையாட்டாக போய்விட்டது. பொதிகையில் மட்டும் சுதந்திரதின விழா நேரடியாக ஒளிபரப்புவார்கள்.

நல்ல காலம் பாரதி இன்றில்லை இருந்திருந்தால் நெஞ்சு பொறுக்கிதில்லை இந்த நிலைகெட்ட திரையுலகை நினைத்துவிட்டால் எனப்பாடியிருப்பார்.

முக்கனிகளில் சிறந்த கனி என்ன கனி?

முக்கனிகளில் சிறந்த கனி என்ன கனி?
மா பலா வாழை என்ற முக்கனிகளில் எந்தப்பழம் பலராலும் அதிகம் விரும்பப்படுகிறது.
ஒவ்வொரு கனியாக எடுத்து ஒரு சின்ன ஆராய்ச்சி எனக்கு தெரிந்த விடயங்கள் மட்டும் தெரியாதவற்றை நண்பர்கள் அறியத்தரவும்.

மாம்பழம் :
மாம்பழத்தின் பிறப்பிடம் இந்தியா என கோன் பனேகா குரோர்பதியில் ஒரு முறை ஷாருக்கான் கூறியிருந்தார். இதனைப் பற்றிய மேலதிக தகவல்களை யாரும் அறியத்தரவும். மாம்பழத்தைப் பற்றிய கதைகள் பல உண்டு. அவற்றில் முருகன் உலகைச் சுற்றிய கதை முதன்மையானது. பெரும்பாலும் இந்துக்கள் வீடுகளில் மாஇலை கூட விசேட வைபவங்களுக்கு பயன்படுத்துவார்கள்.

மாவில் பல வகை உண்டு மல்கோவா, பிலாட், கறுத்தக்கொழும்பான், வெள்ளைக்கொழும்பான், அம்பலவி, புளி மாங்காய், சேலம், செம்பாடு போன்றவை என் ஞாபகத்தில் இருக்கின்றவை. இவற்றில் சில காயாக சாப்பிட சுவையாக இருக்கும் பழம் அவ்வளவு சுவையானது அல்ல உதாரணமாக சேலம் வெள்ளிக்கொழும்பான் .

கறுத்தக்கொழும்பான் மாம்பழம் யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் சுவையே தனிச் சுவைதான். அமுதத்தின் சுவை அறியவேண்டும் என்றால் கறுத்தக்கொழும்பான் மாம்பழம் சாப்பிட்டால் அறியலாம். அத்தனை சுவை மிகுந்த மாம்பழம். புட்டுடன் சாப்பிடுவதற்கு கறுத்தக்கொழும்பானை விட்டால் வேறு மாம்பழம் கிடையாது.

சில சீசன்களில் மட்டும் பெரும்பாலன மாம்ப்ழங்கள் கிடைக்கும். மாங்காய்ச் சம்பல் (சட்னி) சாப்பிட்டு இருக்கிறிர்களா? நல்ல சுவையான சட்னியாகும். பாடசாலைக் காலங்களில் பக்கத்து வீட்டு மாமரத்தில் களவாக மாங்காய் அடித்து உப்புத் மிளகாய்த் தூள் போட்டும் உண்ணுவது ஒரு தனி சுவை. இதனைப் பார்ப்பவர்களின் வாயில் அருவியாக ஜொள்ளூ வடியும்.

பலா:
பலாபழம் பார்ப்பதற்க்கு கடினமாக இருந்தாலும் அதனுள் இருக்கும் சுளையின் சுவை தனி. இதன் பிறப்பிடம் தெரியவில்லை. அத்துடன் இதற்க்கு வாழை, மா மாதிரி வேறு வகைகளும் இருப்பதாக தெரியவில்லை. தேனுடன் கலந்து சிலர் சாப்பிடுவது உண்டு. இதுவும் மாம்பழம் போல பெரும்பாலும் சில சீசன்களில் மட்டும் கிடைக்கும். பால் உள்ள மரத்திலி இருந்து கிடைப்பதால் இப்பழமும் பால் உள்ள பழமாகும். பலாபழத்தின் சுளையை பிரித்து எடுப்பது என்பது கஸ்டமான ஒரு விடயம் சிலருக்கு கைவந்த கலை மிகவும் அழகாக பிரித்து எடுப்பார்கள். கத்திக்கு எண்ணெய் பூசி வெட்டினால் பால் ஒட்டாது.

வாழைப்பழம்:
பெரும்பாலும் வருடம் முழுவதும் கிடைக்கும் இந்தப் பழத்தின் பிறப்பிடம் கரிபியன் தீவுகள் எனப் படித்த ஞாபகம். இதுவும் மாம்பழம் மாதிரி பல வகைகள் கொண்டது. கதலி, மொந்தன், சாம்பல், யாணை, கப்பல் என சில வகைகள் மட்டும் எனக்கு தெரிந்தவை. மிக இலகுவாக உண்ணக்கூடிய பழம் என்பதாலும் தினமும் கிடைக்கும் என்பதாலும் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதாலும் அன்றாடம் உணவு வேளைகளில் சேர்க்கப்படும் பழவகையாகும். விற்றமின் சீ அதிகம் நிறைந்த பழம்.

இம்மூன்றையும் தேன் சர்க்கரை கலந்து பஞ்சாமிர்தமாக(ஹோட்டல்களில் புரூட் சாலட்) சாப்பிட்டால் அதன் ருசியே ருசி.

ஐஸ்வர்யா செளந்தர்யா

அங்கவை சங்கவைக்குப் பதிலாக ஐஸ்வர்யா செளந்தர்யா எனவோ இல்லை மீனாட்சி காமாட்சி எனவோ சுஜாதா ஏன் பெயர் வைக்கவில்லை. சிவாஜி படத்தில் இது ஒரு நெருடல் . ஐஸ்வர்யா செளந்தர்யா என பெயர் வைத்தால் ரஜனி ஏறுக்கொள்ளமாட்டார் என்றா இந்தப் பெயர் வைக்கவில்லை.

பாமரன் கேட்பது சரியாகத் தான் இருக்கிறது. தமிழ்க்குடிதாங்கிகளும் கற்பு பற்றி பேசி பிரபலமானவர்களும் நம் சங்க இலக்கியங்களை கிண்டல் செய்வதை ஏன் தட்டிக்கேட்கவில்லை?

ஏ வி எம் என்ற பெரிய நிறுவனத்துக்கு பயந்தா? இல்லை ரஜனி என்கின்றவருக்கு பயந்தா?

பாமரனின் குமுதம் படித்ததும் கிழித்ததும் பகுதி

முல்லைக்குத் தேர் தந்த பாரி வள்ளலின் பெண்கள்தான் அங்கவை, சங்கவை. மாட மாளிகையில் வாழ்ந்த இவர்கள் தங்கள் தந்தையை இழந்து தவித்த போது அடைக்கலம் தந்து மணமுடித்து வைத்தவர் வள்ளல் பாரியின் நண்பரான புலவர் கபிலர்.

‘அன்று இதே வெண்ணிலவின் போது எங்களைப் போற்றிப் பாதுகாத்த தந்தையும் எங்களுடன் இருந்தார். எங்களுக்கான குன்றும் எங்கள் வசம் இருந்தது.

இன்று எங்கள் தந்தையையும் இழந்தோம்... நாட்டையும் இழந்தோமே’ என பாரியின் மகளிர் அங்கவையும். சங்கவையும் கதறிய கதறல் புறநானூற்றைப் புரட்டிப் பார்த்தவர்களுக்குத் தெரியும்.

இவர்கள்தான் இன்றைய தமிழ் சினிமாவின் கேலிப் பொருள்.

இதற்கு ‘தமிழாய்ந்த’ வாத்தி ஒருத்தர் பல்லை இளித்துக் கொண்டு ‘வாங்க வந்து பழகுங்க’ என்று மாமா வேலை பார்க்கும் காட்சியைப் பார்த்தபோது ரத்தம் சூடேறி விட்டது.

வசனம் : சுஜாதா.

நல்லது.

அங்கவை சங்கவைக்கு பதிலாக பிரியதர்ஷிணி தேவதர்ஷிணி என்றோ.... அபித குஜலாம்பாள் குசல குஜலாம்பாள் என்றோ... அல்லது சிவாஜிராவ் கெய்க்வாட்டுக்குப் பிடித்த பர்வதம்மா பசவம்மா என்றோ போட்டிருக்கலாமே. எது தடுத்தது இவர்கள் அனைவரையும்?

‘சண்டைக்கோழி’யில் ‘குட்டிரேவதி’ என்று வந்த வசனத்திற்காக எஸ்.ராமகிருஷ்ணனை ஒரு வழி பண்ணிய இலக்கியவாதிகள் அங்கவை, சங்கவை விஷயத்தில் மட்டும் சகலத்தையும் பொத்திக் கொண்டிருப்பது ஏன்?

‘படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்’ என்று பொங்கி எழுந்த தமிழ் பாதுகாப்புப் பேரவையினர் இப்போது தமிழ் நாட்டில்தான் இருக்கிறார்களா?

‘கற்பு’ விஷயத்தில் குஷ்புவை விட்டேனா பார்...என்று தொடை தட்டிய ஜாம்பவான்கள் அங்கவை, சங்கவை விஷயத்தின் போது மட்டும் எங்கே போய்த் தொலைந்தார்கள்?

இப்படி ஏகப்பட்ட கேள்விகள் என்னுள் மண்டையைக் குடைந்தபடி...

இதில் வக்கிரத்தின் உச்ச கட்டம் என்னவென்றால் அங்கவை, சங்கவை இருவருக்கும் கருப்புச் சாயம் பூசிக் காட்டியிருப்பது.....

மூடர்களே....! ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்.

கருப்பு என்பது நிறமல்ல. இனம்.

இன்னும் உங்களுக்குப் ‘புரியும் மொழியில்’ சொல்வதானால்......

Black is not a Colour

To Erase.

It is a RACE

இத்தோடு நிறுத்துங்கள் உங்கள் விபரீத விளையாட்டை. அப்புறம்....

நாங்களும் ‘பழக’ ஆரம்பித்தால்......

பத்தாயிரம் ரூபா யாருக்கு?

பத்தாயிரம் ரூபா யாருக்கு?

கவிஞர் வைரமுத்து குமுதம் இதழில் அளித்த பதிலில் கீழ் வரும் பாடலைக் க்ண்டுபிடிப்பவருக்கு ரூபா பத்தாயிரம் பரிசு அளிக்கவுள்ளார். நீங்களும் முயற்சி செய்யலாமே.


உங்கள் எல்லாப் பாடல்களையும் ரசிகர்கள் அறிந்துவைத்திருக்கிறார்களா?

இல்லை. சேற்றில் புதைந்த முத்துக்களாய் ஆயிரமாயிரம் வரிகள் கேட்பாரற்றுப் போயிருக்கின்றன.

‘‘மூங்கிலுக்குள் நுழைகின்ற காற்று
முக்தி பெற்றுத் திரும்புதல் போல
உன் மடியில் சொல்லாய் விழுந்தவன்
கவியாய் முளைத்தெழுந்தேன்’’

இது எந்தப் பாட்டுக்குள்?

‘‘மொட்டுகள் வெடிக்கும் தேசமிது
குண்டுகள் வெடிக்கும் வாசனையோ?
மகரந்தப் பொடிகள் கலக்கும் காற்றில்
மாமிசத் தூள்கள் பறப்பதுவோ?
கடவுள் பேரில் இங்கு
போர்கள் போர்கள் எனில்
மனிதர்கள் கதைமுடிந்து போகாதோ?
மனிதர் தீர்ந்துவிடில்
வணங்க யாருமின்றிக்
கடவுள் கதைமுடிந்து போகாதோ?’’

இந்தச் சரணத்தின் பல்லவி என்ன?

‘‘விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை
புளிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணிச் சலிக்கும் மனதில் சந்தோஷமில்லை
எட்டுநாள் வாழும் பட்டாம் பூச்சி
இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை
அறுபது வயது ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழவுமில்லை
நாளை என்பதில் நம்பிக்கை வைத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்துப்
புன்னகை அணிந்து போரை நடத்து’’

இது எந்தப் பாடலின் சரணம்?


மூன்றுக்கும் சரியான விடை எழுதினால் பத்தாயிரம் ரூபாய் பணிவோடு பரிசு தருவேன்..

யார் மனசில் யாரு? அந்த உலகத் தலைவருக்கு என்ன பேரு?

யார் மனசில் யாரு? அந்த உலகத் தலைவருக்கு என்ன பேரு?

ஒரு உலகத் தலைவரைத் தேர்வு செய்வதற்க்கான வாய்ப்பு இது. உங்கள் வாக்குகளில் மட்டுமே இந்த தேர்வு சாத்தியமாகிறது என வைத்துக்கொள்ளுங்கள். மூன்று வேட்பாளர்கள் இதற்க்குப்போட்டியிடுகிறார்கள் போட்டியிடும் வேட்பாளர் பற்றித் கீழே தரப்படும் குறிப்புகளை வைத்து யாரை நீங்கள் தெரிவு செய்வீர்கள் என்பதையும் அந்த வேட்பாளாரின் நிஜமான பெயரையும் கண்டுபிடியுங்கள்.

முதலாவது வேட்பாளர்
ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளொடு கூட்டுவைத்திருப்பவர். எப்போதும் சோதிடர்களை நம்புகிறவர். இவருக்கு இரண்டு மனைவிமார் அதுமட்டுமல்ல மிக அதிகமாக புகைப்பவரும் குடிப்பவரும் கூட.

இரண்டாவது வேட்பாளர்
அதிகார பீடத்திலிருந்து இரண்டு தடவைகள் துரத்தியடிக்கப்பட்டவர். படித்த காலத்தில் ஓப்பியம் என்றபோதையில் இருக்கும் பழக்கம் உண்டு.

மூன்றாவது வேட்பாளர்
நாட்டுக்காக போர்க்களம் புகுந்து கெளரவம் பெற்ற வீரர். என்றுமே மாமிசம் உண்ணாதவர் அதுமட்டுமல்ல புகை பிடிப்பதஓ மதுபானம் அருந்துவதோ கூட கிடையாது எப்போதவது கொஞ்சம் பியர் அருந்துவார். எந்தப்பெண்ணையும் எப்போதும் இவர் ஏமாற்றியது கிடையாது.

நன்றி இருக்கிறம் சஞ்சிகை

ஒரு சிங்கமும் சில பன்றிகளும்

ஒரு சிங்கமும் சில பன்றிகளும்

இதோ வருகிறது, அதோ அருகிறது என்று ஏமாற்றியே ரஜனி ரசிகர்களை எல்லாம் முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாமல் வைத்திருந்த சிவாஜி "The Boss" இறுதியில் வந்தேவிட்டது. வெளியீட்டுத் திகதியைத் தொடர்ந்து பின் போட்டுப் பின்போட்டுச் செய்யும் "சூக்காட்டுதல்" என்பதே பெரும் விளம்பர உத்திதான். வரலாறு காணதா அடுக்கடுக்கான விளம்பரங்களின் பின்னால் சிவாஜி ஆற அமர வந்தே விட்டது. வெளிவந்த முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு கொழும்புப் பாடசாலைகளில் நன் மாணவ மணிகளின் வருகையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக தகவல். அப்போ தமிழ் நாட்டின் நிலைமை எப்படியிருந்திருக்கும் அன்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.

பால்காவடி, பன்னீர் காவடி புஸ்பக்காவடி துலாக்காவடி என போன்ற சுத்த சைவ அனுஷ்டானங்கள் ஒரு புறம், ஆடு பலியிடுதல் கோழி அடித்து விருந்து வைத்தல் போன்ற அசைவ வீர வழிபாடுகள் மறுபுறம்.. டெல்லி வரை சென்று பிளாக் மார்க்கெடில் டிக்கட் வாங்கிய " தீர்த்த யாத்திரைகள்" வேறொரு புறம்..

தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே (சில வேளைகளில் இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே எனவும் திருத்த நேரிடலாம்) மிக அதிக அளவில் பிரிண்ட் போடப்பட்ட இந்தப் படத்தை வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் மட்டுமல்ல பூமிப்பந்தெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களால் உயர்த்திப்பிடிக்கப்படும் தமிழ்க்கொடி தாழ்ந்து பறக்கும் தமிழ் கூறு நல்லுலகு எங்கணும் மட்டுமல்ல கொம்யூனிசக் கிலி பிடித்த கேரளாவில் மட்டுமல்ல சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைக்கும் ஆந்திராவில் மட்டுமல்ல காவேரி ஊறும் கர்நாடகாவில் மட்டுமல்ல நம் அறிவுக்கும் கற்பனைக்கும் எட்டாத தூரத்துக்கும் அப்பால் பல படங்களின் வருகையை தள்ளிப்போட்ட இந்த பராசக்தி ஹீரோவை ப்ளாக்கில் டிக்கெட் எடுத்து நாய் படாப்பாடு பட்டுப் பார்க்கப்போனால்....

படமோ கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்க்கான ஹை டெக் திட்டங்களை சூப்பர் ஸ்டார் ரஜனி தனது ஸ்டைலில் நடைமுறைப்படுத்துவதைப் பற்றிப் பேசுகிறது. ஏவிஎம் , சங்கர், ஏ ஆர் ரகுமான் , சுஜாதா , ரஜனி , விவேக் முதலிய தமிழ்த் திரைப்படத் துறையின் இன்றைய உச்சனிலை வியாபாரிகள் எல்லோருமாகச் சேர்ந்து தமிழ்த் திரைப்பட ரசிகனை திறந்த வாய் மூடவிடாமல் திரையையே வெறித்துப்பார்க்க வைத்திருக்கிறார்கள்.

மனிதனுக்கு சுயபுத்தி அவசியமென்பதால் அதை பத்திரமாக வீட்டிலேயே வைத்துவிட்டுப்போனால் இந்தப் படத்தை நன்கு ரசிக்கலாம்.

ரஜனி பொய் முடி, கிலோக் கணக்கில் மேக்கப் பவுடர்கள் முதலியவற்றின் உதவியுடன் என்றும் இளமையாக இருக்கும் பரகசியத்தையும் , ஸ்ரேயா என்னும் மெழுகுப்பொம்மை வளைந்து வளைந்து ஆடுவதையும், விவேக் அடிக்கின்ற கோமாளிக் கூத்துக்களையும், கம்யூட்டர் கிராபிக்ஸ்சில் நல்ல விவேகியான சங்கர் நமக்கெல்லாம் அளக்கின்ற "கதை"களையும் ஏ ஆர் ரகுமானுக்கு ஏற்பட்டிருக்கும் தீராத வயிற்று உபாதைகளின் காரணமாக அவர் எழுப்பும் சத்தங்களையும் ... இன்னும் பலவற்றையும் ரசிக்கலாம் அவ்ற்றையிட்டும் பெருமிதப்படலாம்.

உதாரணம் 1 :
சிவாஜி கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதை குறியீடு மூலம் சங்கர் உணர்த்துகின்றார் அதாகப்பட்டது கறுப்பு ரஜனியை அசல் பேர்சியன் வெள்ளைக் கலருக்கு(ரோஸ் கலருக்கு) கிராபிக்ஸ் மூலமும் சங்கர் மாற்றுகிறார்.

உதாரணம் 2 :
சங்கர் மற்றவர் பணத்தை தண்ணீராய்(தனது சொந்த தயாரிப்புகள் மட்டும் சிறிய பட்ஜட் படங்கள்) இறைத்து படம் எடுப்பதில் பெயர் போனவர். அதையே குறியீடாக கடைசிச் சண்டைக்காட்சியில் பணம் பற பற என்று பறக்கிர காட்சியாக எடுத்துக்காட்டியிருக்கிறார௼br />.

உதாரணம் 3 :
சமீப காலங்களாக தமிழகத்தில் ஈழத்தமிழர் ஆதரவு அலை பலமாக வீசுகின்றதாம் அதில் அடிபட்டுப்போன விவேக் சுழட்டுகிறதுக்கு நேராக யாழ்ப்பாணம் போகிற கதையும் ஒன்று கதைக்கிரார். தியேட்டரில் விசில் காதைப் பிளக்கிறது.

உதாரணம் 4 :
சுஜாதவின் சுருக் நருக் நடைக்கு ( சுருக்கிய நறுக்கிய என நீட்டி முழங்குவானேன் இது சுஜாதா ஸ்டைல்) பேர் போனவர். முந்தைய ரஜனிப் படங்களில் வரும் பஞ்ச் டயலாக்கைப் போலல்லாது இப்படத்தில் தனது பங்கிற்கு அதை ஒட்ட நறுக் செய்திருக்கிறார்.

படத்தில் இரண்டு நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள் ஒருவர் சுமன். மற்றவர் ரஜனி ( ரகுவரன் பாவம் அவரை விட்டுவிடுவோம்). ஆனாலும் ரஜனியை பற்றி ஒரு நணபர் "ரஜனிக்கு எழுபதுகளின் கடைசியில் பிடித்த சித்தப் பிரமை இன்னமும் மாறவில்லை" என ஒற்றைவரி விமர்சனம் ஒன்றை எழுதி இருந்தார்.

மானிடர்களுக்கு பால்குடிப்( mummal Stage) பருவம் என்று ஒன்று இருக்கின்றது. ரஜனி தனது வாயை வைத்துப் பண்ணுகின்ற சேட்டைகளைப் பார்த்தால் அந்தப் பால்குடிபருவத்திலிருந்து இன்னமும் அவர் வளரவிலையோ என்று எனக்கு ஐயமாக இருக்கிறது. அவர் ஒரு பால்குடி.

சங்கரே நீங்கள் ரஜனியை வைச்சு காமெடி கீமெடி ஒண்னும் பண்ணலையே நண்பரே.

நன்றி : இருக்கிறம் சஞ்சிகை ஜூலை 2007.

பின் குறிப்பு :இம்முறை சனி மாற்றம் எனக்கு சரியில்லை என சக்திவிகடனில் இருக்கின்றது.

குற்றவாளிக் கூண்டில் காதல்!

குற்றவாளிக் கூண்டில் காதல்!

காதல் பலருக்கு வாழ்க்கையில் வெறுப்பையும் சோகத்தையும் விரக்தியையும் மட்டும் கொடுக்கும் ஒரு நோய். குழந்தைப் பருவத்தில் எந்தவித ஆசைகள் விருப்புகள் இன்றி வாழும் மனிதன் காதல் என்ற நோய் பீடித்த பின்னர் பைத்தியக்காரனாக அலைகிறான். இந்தக் காதலினால் அவன் தன் வாழ்க்கையின் முக்கிய பல நிகழ்வுகளையும் சந்தோஷங்களையும் இழக்கிறான். பெரும்பாலும் காதல் தோல்வி ஏற்படுவது ஆண்களுக்கே அதனால் தான் ஆண்களுக்கு தாடி வளர்கின்றதோ தெரியவில்லை.

இளைஞர்களின் வாழ்க்கையை பாழாக்கும் காதல் தேவையா? காதலுக்கு எதிராக இதுவரை யாரும் வழக்கு தொடரவில்லை அதனால் நான் தொடர்கிறேன். இந்த வழக்கின் முடிவில் நீதிபதி காதலுக்கு மரண தண்டனை விதித்து இன்றைய இளைஞர்களை அதிலும் ஆண் வர்க்கத்தினரை காப்பாற்றவேண்டும்.

காதல் செய்த குற்றங்கள் :
1. ஒழுங்காக படிக்கின்ற மாணவனை ஒழுங்காக படிக்கவிடாமல் தேர்வுகளில் கோட்டை விட செய்தது. மிகச் சிறந்த உதாரணம் நானே ஓ எல் பரீட்சையில் 8 பாடங்களிலும் அதிவிசேட சித்திய்டையவேண்டிய நான் 4 பாடங்களில் மட்டும் அதிவிசேட சித்தியடைந்தது. அதுமட்டுமல்ல பொறியியளாராக வேண்டிய என்னை ஏ எல் பரீட்சையில் கொடியடிக்க வைத்து என் எதிர்காலத்தை பாழக்கியது.

2. உறவினர்களிடையே பகையைத் தோற்றுவித்தது. என் நண்பன் ஒருவன் தன் மாமன் மகளைக் காதலித்த குற்றத்தினால் இருவர் வீடுகளுக்கும் இடையில் இன்றுவரை பேச்சுவார்த்தை கொடுக்கல் வாங்கல் இல்லை. ஆனால் மாமன் மகளோ வேறு ஒருவரை திருமணம் செய்து சுகபோகமாக இருக்கிறார். என் நண்பனோ இன்னமும் திருமணம் செய்யவில்லை.

3. சிறந்த கம்பனி ஒன்றில் வேலை செய்தவனை காதல் என்ற மாயமான் அவன் காதலித்த பெண் வெளிநாடு சென்ற காரணத்தால் அவள் சென்ற நாட்டுக்கே அவனும் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் வேலையைத் துறந்து பின்னர் அவளையும் துறந்து வெளிநாடும் இல்லாமல் உள்நாட்டில் இருந்த வேலையும் இல்லாமல் நடுத்தெருவில் விட்டது.

4. எந்த தீயபழக்கமும் இல்லாத ஆண்களிடம் காதல் தோல்விக்கு பின்னர் அவளை மறக்க
மது சிகரெட் என கெட்ட பழக்கவழக்கங்களை விதைத்தது.

இப்படிப் பட்ட பல குற்றச்சாட்டுகள். மேலதிக விளக்கம் தேவைப்படுபவர்களுக்கு பின்னர் தரப்படும்.

இறுதியில் இன்றைய இளைஞர்கள் காதல் என்ற மாயையில் விழாமல் இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. எந்தவொரு ஆணின் தோல்விக்கு பின்னாலே ஒரு பெண் குறிப்பாக அவனின் காதலி இருப்பாள்.

டிஸ்கி : என் நண்பன் ஒருவனின் ஆதங்கம் என் பதிவாக‌

முட்டை அவிப்பது எப்படி...........

முட்டை அவிப்பது எப்படி...........

சமையலுக்கு வேண்டியவை பதார்த்தங்கள்:

தேவையான அளவு முட்டைகள், அதே போல் தேவையான அளவு தண்ணீர், முட்டையை அவிப்பதற்குரிய பாத்திரம், முக்கியமாக அடுப்பு, அடுப்பைப் பற்ற வைக்க தீப்பெட்டி அல்லது லைட்டர்.
இந்த அடுப்பென்னும் விசயத்தைப் பார்த்தீர்களானால், நீங்கள் காஸ் அடுப்பையோ, மின்னடுப்பையோ, விறகடுப்பையோ எதையாவது பயன்படுத்தலாம் என்பதுதான் இந்த முட்டை அவிப்பதில் சிறப்பான அம்சம்.

செய்முறை:

முதலில் நீங்கள் என்ன அடுப்பைப் பாவிக்கிறீர்களோ, அதற்கு ஏற்றவாறு காஸ் அடுப்பென்றால் காஸோ, மின்னடுபென்றால் மின்சாரமோ, விறகடுப்பென்றால் விறகோ இருக்கிறதா எனச் சரிபார்த்துக் கொள்ளவும்.
பின்னர் தீப்பெட்டியையோ, லைட்டரையோ கையில் எடுத்து அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும். இதில் பற்ற்ற வைக்கும் போது கையில் நெருப்புச் சுடாதவாறு பார்த்துக் கொள்வது மிக அவசியம். அப்படி இல்லாத பட்சத்தில், தேவையான பொருட்களின் பட்டியலில் பர்னாலையும் சேர்த்துக் கொள்ளவும்.

பற்ற வைத்த அடுப்பில் மிகவும் நிதானமாக, தண்ணீர் ஊற்றப்பட்ட பாத்திரத்தை வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் முட்டைகள் முழுதாக மூழ்கும் வரையிலான அளவிற்கு விடப்பட்டிருக்க வேண்டும்.
அதற்கு மேலதிகமாகவோ, குறைவாகவோ தண்ணீர் பாத்திரத்தில் இடப்பட்டடிருந்தால் வரும் விளைவுகளுக்கு, லீனாவாகிய நானோ, இந்தப் பதிவை பதிப்பதற்கு அனுமதி வழங்கிய கண்காணிப்பாளர் அல்லது இளமாறானோ பொறுப்பல்ல.
உங்களுக்குத் தேவையானதெல்லாம் நிதானமும் பொறுமையுமே!

தண்ணீர் கொதிக்கத் தொடங்கும் போது, உங்களுக்கு உணவிற்கு எத்தனை முட்டைகள் தேவையோ அவற்றுடன் மேலும் இரண்டு முட்டைகளை சேர்த்து பாத்திரத்தில் போடவும்.
இங்கே நீங்களெல்லாம் மேலதிகமாக ஏன் இரண்டு முட்டைகள் என ஆச்சரியத்தில் கண்களின் மேலுள்ள புருவத்தை உயர்த்துவது தெரிகிறது.
இங்குதான் லீனாவின் சமையல் தந்திரம் வெளிப்படுகிறது. அதை முடிவில் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்வீர்கள். அதுவரை உங்களுக்குத் தேவை மீண்டும் பொறுமை.

பாத்திரத்தில் முட்டைகளை இட்டதும் சில நிமிட நேரங்கள் எங்கும் செல்லாமல் (உங்களுக்கு டாய்லெட் வந்தால் கூட) பாத்திரத்தையே பார்த்தபடி நிற்கவும்.
தண்ணீர் மிகவும் ஆக்ரோசாமாகக் கொதித்து, நீராவியாகத் தொடங்கும் போது, ஒரு முட்டையை, தேவையான பொருட்களின் பட்டியலில் பர்னால் சேர்த்தவர்கள் கையாலும், மற்றவர்கள் கரண்டியாலும் வெளியே எடுக்கவும்.
அந்த முட்டையை உடைத்துப் பார்க்கவும்.
உடைத்த முட்டை அரை அவியலாக இருக்கும் பட்சத்தில் இன்னும் சில நிமிட நேரங்கள் எஞ்சிய முட்டைகளை அவிய விடவும். டாய்லெட் உபத்திரவம் உள்ளவர்கள் அதை மேலும் சில நிமிட நேரங்கள் ஒத்தி வைக்க வேண்டி வரலாம்.

பின்னர் மீண்டும் இன்னுமொரு முட்டையை வெளியே மேலே கூறப்பட்ட வழிமுறையில் எடுக்கவும். அதையும் உடைத்துப் பார்க்கவும்.
அப்போது உங்களுக்கு எஞ்சியிருக்கும் முட்டையின் அவிந்த தரம் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ஏன் இரண்டு முட்டைகளை மேலதிகமாக அவியப் போட லீனா சொன்னார் என்ற சமையல் தந்திரம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
லீனாவை நினைத்து நீங்கள் பூரிப்படைந்திருப்பீர்கள்.

எமக்கு தற்சமயம் தேவையானது பூரிப்பு அல்ல முட்டை. எனவே மீண்டும் முட்டைக்கு வரவும்.

அடுப்பை நிதானமாக அணைக்கவும். பின்னர் பாத்திரத்தை அடுப்பிலிருந்த்து இறக்கவும்.
பாத்திரத்தை இறக்கும் போது காலில் வெந்நீரை ஊற்றுபவர்கள் முட்டை அவிப்பதை அன்று முதல் நிறுத்துமாறு இந்த லீனா அன்புடன் கேட்டுக் கோள்கிறான்.

பாத்திரத்தில் இருக்கும் நீரை வெளியே வடித்துவிட்டு முட்டைகளை ஆற விடவும்.
அப்போது நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று. முட்டைகளை ஒருதரம் மீண்டும் எண்ணிப் பார்ப்பது.
தற்செயலாக ஒரு முட்டை எண்ணிக்கையில் குறையும் பட்சத்தில், இரண்டாவதாக உடைத்துப் பார்த்த முட்டையை கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். (இங்குதான் லீனா நிற்கிறான்).

ஆறவிட்ட முட்டைகளின் கோதுகளை அகற்ற வேண்டிய ஒன்றே எஞ்சியுள்ளது.
இதற்கு உங்களுக்குத் தேவையானது மிகவும் நிதானமும் பொறுமையும்.
முட்டைக் கோதுகளை உடைக்கும் போது நீங்களே, லீனா ஏன் முட்டை அவிப்பதற்கு நிதானமும் பொறுமையும் தேவையயென்பதை அடிக்க்டி கூறுகின்றார் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

இப்போது உங்கள் கையில் அழகான வெள்ளை நிறத்தில் முட்டை வடிவத்தில் முட்டை காட்சியளிக்கும்.
முட்டை வடிவத்தில் காட்சியளிக்கும் முட்டையை சமைத்திருக்கும் மற்றய உண்வுடன் சேர்த்து சாப்பிடவும்.

லீனாவின் சமையல் குறிப்பிலிருந்து........

தமிழ்நாடுடோல்க்கில் கலக்கலாக எழுதும் லீனாவினது இந்த செய்முறை.

சங்கரின் சிவாஜி

சங்கரின் சிவாஜி

கதை:
எல்லோருக்கும் தெரிந்த கறுப்புப் பணம் பற்றிய ஒரு வரிக் கதைதான் சங்கர் வழமைபோல் தன் பாணியில் அதிரடியாகவும் பிரமாண்டமாகவும் கொடுத்துள்ளார். இதனைப் பற்றி நான் அதிகம் அலட்டிக்கொள்ளவிரும்பவில்லை.

ரஜனி :
மீண்டும் ஒரு முறை ரஜனி தான் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்ரார் என ஸ்டைலாலும் மேக்கப்பாலும் நிரூபித்திருக்கிறார். ரஜனியின் இளமையான தோற்றம் சூப்பர் ஸ்ரார் நாற்காலியைக் குறிவைக்கும் இன்றைய ஜெராக்ஸ் சூப்பர் ஸ்ரார்களான விஜய் அஜித் சிம்பு போன்றவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்பது வெளிப்படை உண்மை. ரஜனியிடம் இந்தப் படத்திலும் நடிப்பு மிஸ்சிங். முள்ளும் மலரும் தில்லு முல்லு ரஜனியை என்றுதான் பார்ப்போமோ. வழமைபோல் தன் காமெடியாலும் ஸ்டைலாலும் பைட்டாலும் கவர்ந்திருக்கிறார். ரஜனியைப் பொறுத்தவரை இந்தப்படம் பாட்ஷாவிற்க்கு அடுத்தபடமாக தன் வாழ்நாளில் கூறலாம்.

அதே நேரம் இந்தக் கதைக்கு ரஜனியைத் தவிர வேறு யார் நடித்திருந்தலும் படம் அவ்வளவாக ஓடியிருக்கமுடியாது.

ஸ்ரேயா :
ஒரு சாதாரண தமிழ்ப் பட கதாநாயகியாக பாடல்களுக்கு மட்டும் வந்துபோகிறார்ர். குளோசபில் முகத்தைக் காட்டுகிறபோது திரிஷா அசின் பரவாயில்லை போல் தெரிகிறது ( ஆனால் திரிஷாவினால் வாஜி வாஜி பாடலுக்கு ஸ்ரேயாபோல் கவர்ச்சி காட்டியிருக்க முடியாது). இவரை ஒரு அக்மார்க் தமிழ்ப்பெண்ணாக காட்டுகிறார்கள் ஆனால் வீட்டில் தாவணியுடன் இருக்கும் போதும் தொப்புள் காட்டுகிறார். பாடல்களில் தொப்புள் இடுப்பு இன்ன பிறவற்றால் ஸ்ரேயா தன் பணியைத் திறம்படச் செய்துள்ளார்.

திரிஷா நமீதா போன்றவர்களின் கவர்ச்சிக்கு ஆப்பு வைப்பது உறுதி.

விவேக் :
ரஜனியுடன் கூடவே இருக்கிறார்(பாடல் காட்சிகளில் மட்டும் மிஸ்சிங்). சுஜாதாவின் வசந்த் பாத்திரம் போல் பெண்களைப் பார்த்து ஜொள்ளு பிளஸ் லொள்ளு பண்ணுகிறார். மற்றும்படி எந்த காமெடியும் மனதில் நிற்கவில்லை. அந்த நேரம் மட்டும் சிரிப்பு வருகிறது. விவேக்கிடம் ஒரு கேள்வி : உங்கள் சொல்லியடிப்பேன் எப்போ வெளிவரும்?

சுமன் :
தமிழ் சினிமாவுக்கு இன்னொரு அசத்தலான வில்லன் கிடைத்துள்ளார். உதட்டில் புன்சிரிப்புடன் இவர் செய்யும் வில்லத்தனங்கள் சூப்பராக இருக்கிறது. அதிலும் இவர் பெட்டிக்கடையில் பஜ்ஜி சாப்பிடும்போது முகத்தில் காட்டும் ரியாக்சன்கள் அமர்க்களமாக இருக்கிறது. ஆனால் பாத்திரப்படைப்புத் தான் கொஞ்சம் நெருடுகிறது. ஒரு தனிமனிதனால் ஒரு அரசாங்கத்தையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா? தமிழகச் சகோதரர்களிடம் இருந்து பதில் எதிர்பார்க்கிறேன்?

ஏ ஆர் ரகுமான் :
பாடல்களில் ரகுமான் தான் இருப்பை மீண்டும் காட்டியுள்ளார். சகல பாடல்களும் அருமையாக இருக்கிறது. ஆனால் பின்னணி இசையில் அவ்வளவாக சிரத்தை எடுக்கவில்லைபோல தெரிகிறது(படையப்பா பின்னணி இசை மாதிரி இல்லை). மிகமுக்கிய விடயம் டைட்டில் சூப்பர் ஸ்ரார் இசையும் கிராபிஸ்சும் ரஜனியின் அடுத்த(?) படங்களில் இனி உபயோகிக்கப்படும்.

சுஜாதா :
வழக்கம் போல் தன் இளமையான எழுத்துக்களால் வசீகரித்துள்ளார். இறக்கும் நாள் தெரிந்திருந்தால் வாழ்க்கை நரகமாகும் என்ற வசனங்கள் அவரின் ஆளுமையை காட்டுகின்றன. இம்முறை பாய்ஸ் மாதிரி எந்த இரட்டை அர்த்தவசனமும் இல்லை. அதே நேறம் ஜாதகம் ஜோதிடம் பற்றிய காட்சிகளில் குழப்புகிறார். ரஜனியின் ஜாதகத்தில் ரச்சுப் பொருத்தம் சரியில்லாதபடியால் ரஜனி இறப்பார் என்கிறார்கள் ஆனால் படத்தில் ரஜனி இறந்து மறுபடியும் வருகிறார். ஒரு வகையில் ஜோதிடம் உண்மையானதுபோல் தெரிகிறது இன்னொரு பக்கம் ஜோதிடம் பொய் போல் தெரிகிறது. இறுதியாக சுஜாதா என்ன சொல்ல வருகிறார் என்பதை கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம். அடுத்த கற்றதும் பெற்றதும் கட்டுரையில் எழுதுங்கள்.

பீட்டர் ஹெயின் :
வாவ் அந்த ரைவின் கார் ஷேசிங் காட்சியிள் அவரின் உழைப்பு தெரிகிறது. இசை வளாகத்தில் அவரின் சண்டையுடன் காமெடியும் கலந்து ஜாக்கிசான் படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸ் சண்டையிலும் சோடைபோகவில்லை. ஆனால் ரஜனி சுமனிடம் முதல் முறை பணம் வாங்கும் அந்த சண்டையில் கிட்டத்தட்ட 50 பேரை ரஜனி சமாளிப்பது நம்பும்படி இல்லை ( சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா).

இயக்குனர் சங்கர் :
என்னைப் போன்ற சங்கர் ரசிகர்களுக்கு இயக்குனர் சங்கர் ஏமாற்றம் அளித்துள்ளார். முதல்ப்பாதி சுந்தர். சி படம் பார்த்த உணர்வு. பாடல்களில் மட்டும் சங்கரும் அவருன் பிரமாண்டமும் தெரிகிறது. இறுதியில் மொட்டைபோட்ட ரஜனி காட்சிகளில் சங்கரின் பாணி தென்படுகிறது. பல இடங்களில் அடுத்தது இதுதான் என ஊகிக்க வைப்பதும் இவரது திரைக்கதை பழைய மொந்தையில் புதிய கள் போல் தென்படுகிறது. எம் எம் எஸ்சை பயன்படுத்தி ரஜனி தப்பும் காட்சியில் புதிய தொழில்னுட்பம் பயன்படுதும் இடங்களில் சங்கரிசம். ஆனாலும் ஒரு நிமிடம் கூட போரடிக்காத திரைக்கதையில் சங்கரின் அனுபவம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஆணாலும் தியேட்டரை விட்டு வெளிவரும்போது இந்தியன் ஒரு நாள் முதல்வனும் அந்நியனும் மனதில் வந்துபோகிறார்கள். அடுத்த படம் என்ன யாருடன் ?

வீணடிக்கப்பட்டவர்கள் :
சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா, மணிவண்ணன், ரகுவரன். அத்துடன் ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த். எந்த ஒரு இடத்திலும் காமெராவில் புதிதாக ஏதும் காட்சிகளோ பிரேம்களோ இல்லை. பாடல்காட்சிகளில் மட்டும் பிரமாண்ட செட்டுகளை வைத்து விளையாடியிருக்கிறார்கள். வழமையான சங்கர் படத்தில் வருவதுபோல் கமெரா படம் பிடிக்கவில்லை.

பிடித்தவை :
1. ரஜனிகாந்த் ஓரிடத்திலும் சிகரெட் பிடியாதது.( அன்புமணி இம்முறையும் வாழ்த்துவாரா?).
2. வழமையான ரஜனி படங்களில் பெண்களுக்கு எதிரான வசனங்கள் காட்சிகள் வரும் இம்முறை அவை இல்லை.
3. பாடல்காட்சிகளும் அவைபடமாக்கப்பட்ட விதமும்.

பிடிக்காதவை :
1. ஸ்ரேயா.
2. ஒரு பாடலில் ஆடிய நயன் தாரா. அது நயன் தாரா என பக்கத்து சீட்டுக்காரர் சொல்லித்தான் தெரிந்தது. சிம்புவின் இழப்பு அவரை இப்படி வாட்டியுள்ளது. பேசாமல் நமீதாவை அந்தப்பாடலில் ஆடவிட்டிருக்கலாம்.

மனதில் எழும் சில கேள்விகள் :
1. இலவச கல்வி பற்றி பேசும் ரஜனி தன் ஆஸ்ரம் ஸ்கூலில் பணம் வாங்குகிறாரே ஏன்?
2 கறுப்புபணத்துக்கு எதிரான இந்தப் படத்தில் ரஜனி எவ்வளவு பணம் கறுப்பாக வாங்கினார்?
3. கறுப்புபணத்துக்கு எதிரான இந்தப் படத்துக்கு பிளாக்கில் ரிக்கெட் விற்பது நியாயமா?
4. இயக்குனர் சங்கரிடம் ஒரு கேள்வி? நீங்கள் லஞ்சத்துக்கு எதிராக எடுத்த இந்தியனும் ஊழல் செய்கின்ற அரசியல்வாதிகளுக்கு எதிராக எடுத்த முதல்வனும் மக்களிடம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா? இந்தியன் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது ( சிவாஜியில் நிறைய காட்சிகளில் வெளிப்படையாக லஞ்சம் வாங்குகிறார்கள்).
5. இந்நாள் முன்னால் முதல்வர்கள் இந்தப்படம் பார்த்துள்ளார்கள். அவர்களது ஆட்சியில் நடக்கும் இந்த கொடுமைகள் அவர்களைப் பாதித்திருக்குமா? இல்லையா?

இறுதியாக எத்தனை நாட்டின் அவலங்களைச் சாடும் படங்கள் வந்தாலும் அரசியல்வாதிகள் திருந்தமாட்டார்கள். இந்தியா இலங்கை பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஒரு போதும் பொருளாதார வளர்ச்சியடையாது.

மொத்தத்தில் சிவாஜி ஒரு பொழுதுபோக்கிற்கான சிறந்தபடம்.

கமல் ரஜனி விக்ரம் விஜய்.....ஒரு கண்ணோட்டம்

மத ஜாதி அனாணி சண்டைகள் அடித்து களம் ஓய்ந்துபோன நிலையில் தமிழர்களின் பொழுதுபோக்காக இருந்த சினிமாக் கதாநாயகர்கள். தற்போது தலைகளாகவும் தளபதிகளாகவும் மாறிய நிலையில் யார் சிறந்த நடிகர் என சண்டைபோட்டால்( சும்மா தமாசுக்குத்தான்) எப்படியிருக்கும்.

முதலில் நம்ம உலகநாயகன் கலைஞானி கமலஹாசன் என் மனம் கவர்ந்த நடிகர் என்ற உண்மையை சொல்லிவிட்டு தொடங்குகிறேன்.சூப்பர் ரஜனியை எடுத்துக்கொண்டால் அவரின் பிளஸ் பாயிண்ட் 2 வயதுச் சிறுவன் முதல் 80 வயது கிழவன் வரை அனைத்து தரப்பினரதும் மனதைக் கொள்ளைகொண்டதாகும். திரையில் அவர் தோன்றும் முதல்காட்சியில் யாராயிருந்தாலும் வாயில் விரல் வைத்து விசிலடிக்கத்தான் தோன்றும். நடந்த நிகழ்வு ஒன்று சந்திரமுகி முதல் காட்சி நான் அக்கா தங்கை என எல்லோரும் முதல்க்காட்சிக்கே தியேட்ட்ருக்கு சென்றோம். அட்வான்ட்ஸ் புக்கிங் செய்தபடியால் டிக்கெட் சுலபமாக கிடைத்தது. ரஜனி தோன்றும் முதல்க் காட்சியில் என் அக்கா உணர்ச்சி வசப்பட்டு விசிலடித்துவிட்டார். ரஜனியை திரையில் பார்க்கும்போது ஏற்படும் அனுபவம் விஜயைப்பார்க்கும்போது பலருக்கு ஏற்படுகிறது.

ஆனாலும் சூப்பர் ஸ்ரார் படத்தில் வேண்டுமானல் சூப்பர் ஸ்ராராக இருக்கலாம் நிஜத்தில் சூப்பர் ஸ்ராரா என்றால் இல்லை என்பது தான் என் பதில். காரணம் இவர் தேவையற்ற அரசியல் சிக்கல்களில் ஈடுபட்டது. ஒரு முறை ஆண்டவனே வந்தாலும் தமிழ் நாட்டை அம்மாவிடம் இருந்து காக்க முடியாது என்றவர் பின்னர் அதே அம்மாவை தைரியலக்சுமி என்றார். காவேரிப் பிரச்சனையிலும் இவர் நடுநிலையாக செயப்படாமல் தன் தாய்மொழிக்கு ஆதரவு தருகிறார். இப்படி பல குற்றச்சாட்டுக்கள்.

குடும்ப விடயத்தில் திருமணத்தீற்கு முன்பு கிசுகிசுக்கள் வந்தாலும் பின்னர் எந்த தப்புதண்டாக்களிலும் ஈடுபடாதவர். சிம்பு நயந்தாரா விடயத்தில் அவ்ர்களுக்கு வில்லன் இவர் என ஒரு கதை உலாவருகிறது. யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல் இவர் சறுக்கிய ஒரு இடம் தன் மகளின் திருமணம்.

இவரது இடத்தை அதாவது சூப்பர் ஸ்ரார் பட்டத்தை விஜய் சிம்பு போன்ற மசாலா ஹீரோக்கள் பெறமுடியாது. இவரை ஒரு பார்முலா ஹீரோவாக மாற்றிய பெருமை இயக்குனர் சுரேஸ் கிருஸ்ணாவையே சேரும். அண்ணாமலைக்கு பிந்தான் இவர் கதையற்ற படங்களில் நடித்தார்(சந்திரமுகி நீங்கலாக). ப்ரியா முள்ளும் மலரும் தில்லு முல்லு போன்ற படங்கள் இனி இவரிடம் எதிர்பார்ப்பது தவறு.

மொத்தத்தில் அன்றைய ரஜனி ஹீரோ இன்றைய ரஜனி மாஸ் ஹீரோ.

நாளை விஜய் பற்றிய கண்ணோட்டம்

இளைய தளபதி விஜய்

சிறுவயதில் விஜயகாந்த் படங்களில் சின்ன விஜயகாந்தாக அறிமுகமாகி இன்று வருங்கால சூப்பர் ஸ்ரார் என சிலரால் அழைக்கபடும் விஜய் ஆரம்ப காலங்களில் சங்கவிக்கு சோப்புபோடுகிற காட்சிகளில் நடித்து அந்தக் கால தனுஸ் ஆகியிருந்தார். இவரின் திரையுலக வாழ்க்கையை மாற்றிய படம் பூவே உனக்காகவாகும் அதன் பின் காதலுக்கு மரியாதை லவ் ருடே துள்ளாத மனமும் துள்ளும் என சிறந்த காதல் படங்களில் நடித்தவர். சூப்பர் ஸ்ராக வேண்டும் என்ற ஆசையில் அவரை மாதிரியே பஞ்ச் டயாலக் காமெடி பண்ணி தன் காதல் படங்களை கைவிட்டுவிட்டார். ஆனாலும் சூப்பர் ஸ்ரார் பஞ்ச் டயலாக் சொன்னால் ஏற்றுக்கொள்ளாலம் இவரை மாதிரி கத்துக்குட்டிகள் சொல்லும் போது சிரிப்புதான் வருகிறது. விஜய் ரஜனியை காப்பி பண்ணாமல் தன் பாணியில் படங்கள் நடித்தால் சூப்பர் ஸ்ரார் நாற்காலியை தொட்டுப்பார்க்கலாம். இல்லையென்றால் விஷால் ஜீவா போன்றவர்களின் போட்டியில் அதை இழக்கவேண்டியிருக்கும்.

விஜயின் பலம் டான்ஸ் டான்ஸ் டான்ஸ். பலவீனம் தந்தையின் படங்கள். தற்போது ஒரு அரசியல் கட்சியினது அபிமானியாக இருப்பதால் சிலவேளைகளில் வருங்கால முதல்வர் நாற்காலியும் இவரது கண்ணாக இருக்கலாம். இவரது ரசிகர்கள் தான் பீர் பால் அபிசேகம் செய்கிற முறையை அறி முகப்படித்தியவர்கள். தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலும் விஜய் அஜித் ரசிகர்கலிடம் மோதல்கள் நடந்ததுண்டு.

இவர் ஏன் போக்கிரி ஆதி சச்சின் மதுர போன்ற படங்களில் நடித்தார் என்பது அதிசயம்தான்.

ஆரம்பகாலங்களில் கிசுகிசுக்களில் அடிபட்டாலும் திருமணத்தின் பின் பெரிதாக ஒன்றும் அடிபடவில்லை. கில்லியின் பின் திரிஷாவுடன் ஒரு கிசுகிசு வந்து போனது.

நாளை விக்ரம் பற்றிப்பார்ப்போம்.

தமிழ்த் திரையுலகின் பிதாமகன்.

பன்னிரண்டு வருட கஸ்டங்கள் வேதனைகள் மன உலைச்சல்களுக்கு மத்தியில் பாலாவின் சிறந்த இயக்கத்தில் சேது மூலம் தமிழ்த்திரையுலகைதன் பக்கம் திருப்பிய விக்ரம், கலையுலகைப் பொறுத்தவரை கமல்ஹாசனின் நாற்காலிக்கு பொருத்தமானவர். இவர் சூப்பர் ஸ்ரார் என்ர இடத்திற்க்கு தகுதியானவர் ஆனால் நிகழ்கால வருங்கால சூப்பர் ஸ்ரார்களை விட ஒரு படி மேலாக இவருக்கு நடிப்பும் வருவதால் இவர் அடுத்த உலக நாயகனாவார்.

ஏற்கனவே சேது காசியில் இழந்த தேசியவிருதை பிதாமகன் மூலம் வசனமே பேசாமல் வெறும் பாடி லாங்குவேஜால் மட்டும் பெற்ற நடிகர் இவர் ஒருதராகத் இருக்க முடியும். இவரின் திறமைக்கு அடுத்து வந்த அன்னியன் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். அம்பி ரெமோ அன்னியன் என்ற மூன்று வெவ்வேறு பாத்திரங்களை அழகுறச்செய்தவர். இப்படத்தில் வேறுயாராவது நடித்திருந்தால் எடுபட்டிருக்குமா என்பது கேள்வி.

இவரின் பலம் எந்தப் பாத்திரமானாலும் அதனைத் திறம்பட நடிப்பது ஹார்ட் வேர்க் ஹோம் வேர்க் பண்ணுவது. அதே நேரம் பிதாமகன் அன்னியன் காசி போன்ற சிறந்த படங்களிள் நடித்தாலும் அருள் மஜா போன்ற மசாலாப் படங்களிலும் நடித்து தயாரிப்பாளர்களின் கல்லாவை நிறைப்பார்.

பலவீனம் கிங் சாமுராஜ் காதல்சடுகுடு போன்ற பப்படப்படங்களில் நடிப்பது.

பொது வாழ்க்கையில் இதுவரை எந்தக் கிசுகிசுக்களிலும் சிக்கவில்லை. அதனைவிட அரசியல் மோகம் பஞ்ச் வசனம் கூட இல்லை. பலவற்றில் இவர் கமலுடன் ஒத்துப்போகிறார். இருவரும் பரமக்குடி தந்த தவப்புதல்வர்கள். எந்தவித பந்தா இலாமல் எல்லா நடிகர்களுடனும் சினேகம் பாராட்டுவது இவரின் மிகசிறந்த குணமாகும்.

அடுத்த போஸ்டில் தலையை பற்றி பார்ப்போம்.

தல வரலாறு.

என்னடா சினிமா சம்பந்தமான திரியில் ஏதோ கோயில் தல வரலாறு என்று நினைக்கிறீர்களா? இல்லை இது நம்ம தல என செல்லமாக அழைக்கப்படும் ஆசைநாயகன் அஜித்குமார் வரலாறு.

ஆரம்ப நாட்களில் அஜித்தும் மற்ற ஹீரோக்கள் போல் சாக்லேட் பேபியாகத்தான் அறிமுகமானார். முதல்படமான அமராவதி அவ்வளவு சிறப்பாக ஓடாவிட்டாலும் யார் இந்த நடிகன் என அஜித்தை சற்றுப்பார்க்க வைத்தது. தமிழ் நடிகர்களிலேயே ஜெமினி கணேசன் கமலுக்குபின் வசீகரமான முகம் இவருக்குத்தான் தற்போது ஜெயம் ரவி அந்த கேட்டகரிக்குள் வருமுயல்கிறார். அமராவதிக்குப்பின் இவர் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக எந்தப்படமும் ஆசை வரை நடிக்கவில்லை. விஜயுடன் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையில் என்ற படம் (எத்தனைபேர் பார்த்தீர்கள்?) இருவரினது படப்பட்டியலில் ஒரு எண்ணிக்கையை கூட்டியதே ஒழிய வேறு எந்த விடயமும் அதில் இல்லை.

ஆரம்ப காலங்களில் இவர் பிரசாந்துடன் கல்லூரி வாசல், விக்ரமுடன் ஏதோ ஒரு படம்(பெயர் ஞாபகம் வரவில்லை ஆனால் அதில் கார்த்திக் ராஜா இசையில் கமல் முத்தே முத்தம்மா என்ற நல்லதொரு பாடல் பாடியிருப்பார்) என இன்னொரு ஹீரோவுடன் நடித்த படங்களும் வந்த வேகத்தில் ஓட்டம் பிடித்தது.

வசந்தின் இயக்கத்தில் ஆசை என்ற படம்தான் அஜித்தை ஆசைநாயகனாக்கியது அதன் பின் வந்த காதல்கோட்டை காதலர்களிடையே புதிய அத்தியாயத்தை உருவாக்கியது. அதன்பின் சில அடங்கள் வழமையான படங்களாகி பெட்டிக்குள் போய்விட்டது. அடுத்த படமான வாலிதான் அஜித்தின் இன்னொரு பரிமாணத்தை உலகிற்க்கு காட்டியது. எஸ்.ஜே. சூர்யாவின் அட்டகாசமான இயக்கத்தில்( இனி இவரால் இப்படியொரு ப்டம் இயக்கமுடியுமா என்பது சந்தேகம்) அஜித் இரட்டை வேடத்தில் அதிலும் வாய் பேசமுடியாதவராக நடித்து கமலின் நாற்காலிக்கு தன்னைத் தயாராக்கிக்கொண்டார். நான் எல்லாம் ஆசை படத்தின் பின் அஜித் விசிறியாகி காதல் கோட்டை பார்த்தபின் முழுக்கை சட்டையை இன் பண்ணி போட்டுக்கொண்டு ஊரில் ரகளை செய்த காலம் அது. பின்னர் சிட்டிசனில் பல வேடம் தாங்கி நடித்தார் ஆனால் அந்தப் படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. இடையில் வேறு சில படங்களும் இதே நிலைதான்.

காதல் மன்னனில் அஜித்தின் நண்பர் சரண் தன் வித்தியாசமான திரைக்கதையாலும் பாடல்களாலும் மீண்டும் அஜித் விஸ்வரூபம் எடுத்தார். அதன் பின் அமர்க்களம் அஜித்தின் வாழ்க்கை துணையையும் அவருக்கு கொடுத்தது. இந்தக்காலத்தில்தான் இவருக்கும் விஜயைக்கும் ஒரு பனிப்போர் ஆரம்பமாகியது இவரின் படத்தில் அவரைத்தாக்கி பஞ்ச் வசனங்கள் அவரின் படத்தில் இவரைத்தாக்கி பஞ்ச் வசனங்கள் என இருவரும் தயாரிப்பாளாரின் பணத்தில் சண்டைபோட்டார்கள்.

இடையில் சில காலம் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தியதால் அஜித்தினால் நல்ல படங்களைத் தரமுடியவில்லை. இந்த சைக்கிள் கேப்பில் விஜய் முன்னுக்கு வரத்தொடங்கிவிட்டார். அஜித் வெறும் தன் பேட்டிகளில் அதிகம் கதைத்து தன் இடத்தைகோட்டை விட்டதுடன் சூர்யா விக்ரம் போன்றவர்களின் போட்டியில் சற்று களைத்துத்தான் போனார். இந்த நேரத்தில் இவரின் இடத்தை விக்ரம் தட்டிக்கொண்டு போய்விட்டார். தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் உண்டு எப்போதும் இரு துருவங்கள் எம்ஜிஆர் சிவாஜி, கமல் ரஜனி பின்னர் விஜய் அஜித்தாக இருந்து தற்போது அது விஜய் விக்ரமாக மாறிவிட்டது.

இந்த நேரத்தில் தான் தோல்வி நாயகர்களை வைத்து வெற்றிபடம் கொடுக்கும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் வரலாறு அஜித்தின் அடுத்த படை எடுப்பை காட்டியது. மூன்று வேடங்களில் அஜித் அனைவரையும் திகைக்க வைத்தா என்றுதான் சொல்லவேண்டும். சற்று பெண் தன்மை கலந்த பாத்திரத்தின் நளினம் பலராலும் பாராட்டப்பட்டது. ஆனாலும் கதையைக்கேட்காமல் அடுத்து நடித்த ஆழ்வார் சூப்பர் டூப்பர் பிளாப் ஆகிவிட்டது. அஜித்தைபொறுத்தவரை சினிமா என்பது பரமபதம் போல் ஒரு முறை ஏணியில் ஏறினாரோ என்றால் அடுத்த தடவை பெரிய ஒரு பாம்பு அவரை விழுங்கிவிடும்.

பலம் : எந்த கேரக்டர்களையும் இழுகுவாக கையாண்டு நடிப்பது. நிறைய ஹார்ட் வேர்க் செய்வது.

பலவீனம் : அதிகம் கதைப்பது. பேட்டிகளில் உணர்ச்சிவசப்படுவது.
பொது நிகழ்ச்சிகளில் பங்குபற்றாமை.

ஆரம்ப நாட்களில் ஹீராவுடன் கிசுகிசுக்கப்பட்டபோதும் ஷாலினியை திருமணம் செய்தபின் ஒரு சர்ச்சைகளிலும் சிக்கவில்லை.

இன்னொரு கமலஹாசனாக வரவேண்டிய அல்டிமேட் ஸ்ரார் அஜித் தன் தவறான படத்தெரிவுகளினால் அந்த இடத்தை அடைவதற்க்கு சற்று கடினம் தான் ஏனெனில் இவர் விக்ரம் சூர்யா என்ற இரு குதிரைகளுடன் போட்டு போட்டுத்தான் அந்த இடத்தை அடையமுடியும். பொறுத்திருந்துபார்ப்போம்.

வந்தியத்தேவனின் குதிரை

வந்தியத்தேவனின் குதிரை

முதலில் குதிரை ஓடுவது என்பது என்றால் என்னவென்றுபார்ப்போம் ஒருவருக்குப் பதிலாக இன்னொருவர் பரீட்சை எழுதுவது குதிரை ஓடுவது ஆகும்.

1992ஆம் ஆண்டு நான் உயர்தரம் படிக்கும்போது எனக்கும் அப்படி ஒரு நிலமை ஏற்பட்டது. கல்விப் பொதுத் தராதர(சாதாரணதரம்) (General Certificate of Education (Ordinary Level or O/L)பரீட்சை பொதுவாக டிசெம்பர் மாதத்தில்தான் இடம் பெறும். 1991ல் நான் எனது பரீட்சையை வெற்றிகரமாக முடித்துவிட்டு உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன் . பொதுவாக டிசெம்பர் லீவு என்பதால் குடும்பத்தவர் அனைவரும் கொழும்புக்கு சென்றுவிட்டார்கள். நான் மட்டும் டியூசனுக்கு ஒழுங்காச் செல்லவேண்டும் எனக் கண்டிப்புடன் சொல்லிவிட்டு அவர்கள் என்னை வீட்டில் தனியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். 30 நாள் லீவில் நான் 5 நாள் மட்டும் நான் டியூசன் சென்றது வேறு கதை.

ஒரு நாள் இரவு என் உற்ற நண்பன் ஒருவன் இன்னொரு தெரிந்த பொடியனுடன் வந்து மச்சான் இவன் ஓஎல் ல் கணித பாடம் சென்ற வருடம் பெயிலாகிவிட்டான் அவனுக்கு ஏ எல்( Advanced Level ) படிக்க மேட்ஸ் பாஸ் பண்ணி இருக்கவேண்டும் இவனுக்கோ மேட்ஸ் சுத்த சூனியம். நீ தான் இவனுக்காக குதிரை ஓடவேண்டும் என்றான் நானோ முதலில் பயத்தில் மறுத்துவிட்டேன். அட விசரா நான் பிடிபட்டால் என் படிப்பும் போய்ச்சு இவன்ரை படிப்பும் போய்ச்சு என்னால் முடியாது என்றேன். அவனோ விடாப்பிடியாக நீ தான் மேட்ஸ் நல்லா எழுதுவாய் சும்மா பாஸ் காணும் இவணுக்கு ஒன்றும் டிஸ்டிங்சன் கிரெடிட் ஒன்றும் வேண்டாம் சிம்பிள் பாஸ் ஓக்கே என்றான்.

நானும் கொஞ்சம் யோசித்துவிட்டு வீட்டுக்காரர் ஒருதரும் இல்லை களவும் கற்றுமற என பெரியவர்களும் சொல்லியிருக்கிறார்கள் ஒருதரம் ட்றை பண்ணிப்பார்ப்போம். உடனே என்ரை கண்டிசன் எல்லாம் சொன்னேன். எக்ஸாம் ஹோல் என்ரை பாடசாலையாக இருக்ககூடாது அதற்கு அவர்கள் அதில்லை பள்ளிக்கூடம் என்றுவிட்டு ஒரு பிரபல பெண்கள் பாடசாலையை சொல்ல நான் விண்ணில் மிதந்தேன் ஏனென்றால் அங்கே தான் என் தேவதை படிக்கிறாள் அவளும் இந்த மூறை எக்ஸாம் எழுதுகிறாள். நான் உடனே அடுத்த கண்டிசனான யார் அங்கே மேற்பார்வையாளர் எனக் கேட்க அவங்களும் அது யாரோ தெரியாத மாஸ்டர்தான் உனக்கு தெரிந்த ஒருதரும் இல்லை பயப்படவேண்டாம் என்றார்கள்.

அடுத்த கட்ட முக்கிய நடவடிக்கை ஐடி மாத்துவது அவனது ஐடியில் என்னுடைய போட்டோ ஒன்றை மாத்தி ஒட்டவேண்டும். இதற்கென சில பொடியள் இருக்கிறார்கள் அவங்கள் நல்ல வடிவாகச் செய்வார்கள் என அவங்கள் என்ரை போட்டோவை வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். எக்ஸ்சாம் ஹோல் வாசலில் எனக்கு ஐடியைத் தருவதாக சொன்னார்கள்.

விடிந்தால் எக்ஸ்சாம் நான் எக்ஸாமுக்கு போகும்போது கூட இப்படி பதட்டப்பட்டதில்லை. ஒரே ரென்சன். காலை நேரத்துக்கு எழும்பி குளித்துவிட்டு அப்படியே பிள்ளையாருக்கும் ஒரு சலூட் போட்டுவிட்டு பக்திப் பழமாகா எக்ஸ்சாம் ஹோல் பாடசாலை வாசலில் நண்பர்களுக்காக நின்றேன். என் போதாத காலம் என் தேவதை நான் அவளை சைட் அடிக்க வந்திருக்கிறன் என நினைத்து ஒரு ருத்ர லுக் விட்டுவிட்டுப் போனாள். வாசலிலேயே என் மானம் கொஞ்சம் கப்பல் ஏறிவிட்டது. எக்ஸ்சாம் தொடங்க 15 நிமிடங்கள் இருக்கும்போது தான் அவர்கள் இருவரும் வந்தார்கள் என்ன மச்சான் இப்படி லேட் பண்ணிவிட்டிர்களே எனக் கேட்க அவங்களோ இல்லை இப்ப நீ போனாள்தான் சரியாக இருக்கும் பெஸ்ட் ஒவ் லக் என என்னை வாழ்த்தி அனுப்பினார்கள்.

நானும் பாண்டியராஜன் முழிமாதிரி கண்ணைப் பிரட்டிகொண்டு என் சீட்டைத் தேடினேன். அவ்ங்கள் முதலிலே சொல்லியிருந்தாங்கள் மச்சான் ரிலாக்சாகபோய் எழுது பயந்துகொண்டுபோனியோ என்றால் பிடித்துப்போடுவாங்கள் என. ஒருமாதிரி சீட்டைக் கண்டுபிடித்து இருக்க மேற்பார்வையாளார் வந்தார். அவரும் என்னை நோக்க நானும் வரை நோக்க என் மனதில் பெரிய போக்ரான் குண்டே வெடித்தது. அவர் வேறையாரும் அல்ல எனது பாடசாலை இரசாயணவியல் ஆசிரியரும் என் வகுப்பு ஆசிரியரும். அவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் சேர்ந்துவெடித்தது. ஆனாலும் உடனே அதைக் காட்டிக்கொள்ளாமல் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே அழைத்துச் சென்றார்.

மற்ற மாணவர்களுக்கு நான் யார் என்பதைக் காட்டிக்கொடுக்காமல் வெளியே வைத்து சரமாரியாக ஏசினார். இறுதியாக ஓடடா வீட்டை என என்னை துரத்திவிட்டிருந்தால் பரவாயில்லை. பாடசாலைதொடங்கியபின் அம்மாவைக் கூப்பிட்டு என் சாகசத்தைச் சொல்லி வீட்டிலும் எனக்கு அர்ச்சனை கிடைக்கச் செய்தார்.

ஆனாலும் நான் யாருக்கு குதிரை ஓடி பிடிபட்டேனோ அவன் சேம் டைம் இன்னொருவரையும் அமர்த்தி ஒருமாதிரி அந்த வருடம் மேட்ஸ் பாஸ்பண்ணிவிட்டான்.

கறுப்பு வரலாறும் நேற்றைய கல்லறையும்

கறுப்பு வரலாறும் நேற்றைய கல்லறையும்
வாழ்த்துக்கள் மோகன் உங்கள் இரு நாவல்களும் நேற்றிரவு ஒரே மூச்சில் வாசித்தேன். வாசித்தபின்னர் என் கருத்தை அல்லது விமர்சனத்தைக் கூறுவதுதான் உங்களைமாதிரி எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் என்பதால் என் விமர்சனத்தை தொடர்கிறேன். அதற்குமுன் நான் பாடசாலை நாட்களில் விமர்சன உரையாற்றியுள்ளேனே தவிர இதுவரை பெரிசாக விமர்சனம் எதுவும் செய்ததில்லை. இது ஒரு நுனிப்புல் மேய்ச்சலே தவிர முழுமையான விமர்சனம் அல்ல.

மோகனின் முதலாவது துப்பறியும் அல்லது மர்மக் கதையான கறுப்புவரலாறு ஆனது களப்பிறர் பற்றிய ஒரு ஆய்வுடன் ஆரம்பமாகிறது. சில சரித்திர எழுத்தாளர்களின் சில கதைகளில் களப்பிறர் என்ற இனத்தைப் பற்றி தெரிந்திருக்கிறேனே ஒழிய எனக்கு மோகனின் நாவலில்தான் அவர்கள் பற்றிய சில விடயங்கள் தெரியவந்தது. இவர்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு வரலாற்று ஆசிரியர் பழனியப்பன் அவர்களும் அவருடன் வரலாற்று மாணவர்களான ரவி, ரகு , சங்கர், சவீதா மற்றும் நீலவேணி ஆகியோர் முனைகிறார்கள். இவர்கள் சந்திக்கும் இடர்கள் ஆபத்துக்கள் என்பவற்றை கொஞ்சம் காதலுடன் கதாசிரியர் தனக்கே உரிய பாணியில் சொல்லியுள்ளார்.

பல இடங்களில் மோகன் களப்பிறர் பற்றிய தகவல்களை விரிவாக கல்கி சாண்டில்யன் வரலாற்றுப் பாத்திரங்களைப் பற்றிய தகவல்களைத் தருவதுபோல் தந்திருப்பதால் படிப்பவர்களுக்கும் களப்பிறர் பற்றி அறியும் ஆவலுடன் ஆராய்ச்சியாளர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்ற திகிலுடன் சொல்லியுருப்பது சுவையாகவும் அதே நேரம் எடுத்த புத்தகத்தை சாரி மின் புத்தகத்தை வைக்க மனமில்லாமல் வாசிக்கதூண்டுகிறது. இது மோகனது எழுத்துக்கு கிடைத்த பெற்றியாகும். ஏனென்றால் ஒரு எழுத்தாளனின் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய வாசகனைத் தூண்டுவதுடன் அவரது அடுத்த படைப்புக்களையும் வாசிக்க தூண்டும்.

அத்துடன் ஒரு அத்தியாயம் முடியும்போது ஒரு திகில் வசனத்துடன் முடிப்பது தேர்ந்த எழுத்தாளருக்கே உரியது. அந்தவகையில் மோகன் தன்னை ஒரு தேர்ந்த எழுத்தாளராக நீரூபித்துள்ளார்.உதாரணமாக "கறுப்பு பட ஆரம்பித்தது அவர்கள் வாழ்வில்" என்று ஒரு அத்தியாயத்தை முடிப்பவர், அடுத்த அத்தியாயத்தில் சங்கர் "என்னுடைய கறுப்பு சட்டையைமறக்காமல் எடுத்து வையுங்க என்றான்" இப்படி அவர் கறுப்பு என்பதை பல இடங்களில் உலாவ விடுகிறார்.

ஒரு இடத்தில் மோகன் குறிப்பிடுகிறார் வரலாற்று பொக்கிசங்களை அழித்து அந்த வரலாற்றை பலர் மறைக்கப்பார்க்கிறார்கள் என அது நூற்றுக்கு நூறு உண்மையானது. இலங்கையில் தென் தமிழீழத்திலுள்ள திருகோணமலை மட்டக்களப்பு போன்றவற்றை தற்போது சிங்கள இனவாத வரலாற்றாசிரியர்கள் தமது பிரதேசமாக மாற்றுவதற்காக அங்கே புத்த கோவில்களையும் புத்தர் சிலைகளையும் வைத்து ஆக்கிரமிக்கிறார்கள். அத்துடன் தமிழர்களின் எச்சங்களை இவர்கள் அழிக்கிறார்கள். இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ரமேசும் ஜெயாவும் கதைக்கின்ற 22ஆம் அத்தியாயத்தில் ஹிட்லர் சதாம் போன்றோர் எப்படி வரலாறுகளைக் கொளுத்தினார்கள் என்பதற்கு எம் நாடும் இன்னொரு உதாரணம். இங்கேயும் வரலாற்றைத் திரிவுபடுத்துகிறார்கள்.

இக்கதையில் வரும் ரமேஸ் என்ற பாத்திரமும் அவரது ஒரு சில வரிக்காதலும் இறுதியாக அவர் யார் குற்றாவாளி என கண்டுபிடிக்கும் இடங்களும் அருமையாக இருக்கிறது. அதிலும் யாரும் எதிர்பார்க்காத முடிவை கிளைமாக்சில் சொல்லியிருப்பது பாரட்டத்தக்கது. பல நேரம் வாசகர்களால் யார் குற்றவாளி என்பதை கதையின் ஓட்டத்தை வைத்து கண்டுபிடிக்கமுடியும் ஆனால் இக்கதையில் அது கஸ்டமானது.

மோகனின் எழுத்துக்கள் சுஜாதா பாணியில் இருப்பதாக கூறுவதை என்னால் ஒத்துக்கொள்ளமுடியாது. ஆனால் சுஜாதாவின் பாதிப்பு இல்லாமல் எழுதுவது கஸ்டம். பல இடங்களில் மோகன் சுஜாதாவைவிட்டு விலகியுள்ளார். குறிப்பாக இவரின் கதைகளுக்கு பிரப்ல ஓவியர் ஜெயராஜ் ஒவியம் வரையமுடியாது காரணம் இவரின் இந்தக்கதையில் வரும் நாயகிகள் சுஜாதா ,ராஜேஸ்குமார், சுபா, பிகேபி நாயகிகள் போல் வராமல் சாதாரண பெண்களாக மோகன் காட்டியிருப்பது இயல்பாக உள்ளது. அத்துடன் அவர்கள் போல் கதாநாயகிகளின் அங்க அசைவுகளை வர்ணிக்காமல் சைவமாகவே கதையை கொண்டுசெல்கிறார். துப்பறியும் கதைகளில் பெண்களை வர்ணிப்பதற்கே சிலர் இருக்கிறார்கள். அவர்கள்போல் இல்லாமல் மோகன் வித்தியாசமான முறையில் எழுதுவது நன்றாக இருக்கிறது.

ஒரு விமர்சனத்தில் அக்கதையின் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டவேண்டியது விமர்சகரின் கடமை ஆனால் இக்கதையில் என் அறிவுக்கு எட்டியவரை பெரிதாக எந்தக் குறைகளும். தென்படவில்லை. ரமேசின் நடவடிக்கைகள் ஒரு சினிமாப் பாடலில் கதாநாயகன் பணக்காரன் ஆவதுபோல் பாஸ்ட்டாக இருப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது ஆனால் இது கதை ஓட்டத்தை எந்தவிதத்திலும் பாதிக்காதபடியால் பரவாயில்லை.


அனைவராலும் படித்து ரசிக்கவேண்டிய ஒரு நாவல் கறுப்புவரலாறு.

மோகனிடம் ஒரு கேள்வி களப்பிறர் பற்றிய விபரங்களை எப்படி எடுத்தீர்கள்? அத்துடன் அவர்கள் பற்றிய மேலும் விபரங்கள் தரமுடியுமா? குறிப்பாக இறுதியாக அவர்கள் என்ன ஆனார்கள்? எந்தக்காலத்தில் வாழ்ந்தார்கள்? என்ற கேள்விகளுக்கு விடை தரமுடியுமா?

மோகனின் அடுத்த நாவலான நேற்றைய கல்லறையும் ஒரு புதையல் பற்றிய குறுநாவலாகும். இந்த நாவலின் சிறப்பு என்னவென்றால் கதாநாயகனின் பார்வையில் அல்லது அவனின் நோக்கில்(தமிழில் இதனை முன்னிலையோ படர்க்கையோ எனச் சொல்வார்கள் ஞாபகம் இல்லை) சொல்கிறார். அதனால் கதாநாயகனின் பெயர் இக்கதையில் இல்லை.

மிகமுக்கியமாக இக்கதையில் பெண் பாத்திரம் என யாரும் இல்லை. கதாநாயகன் ஒரு மெஸ் நடத்தும் ஐயங்கார் ஏசுநாயகம் என மூன்று முக்கிய பாத்திரங்களை வைத்து கதையை கொண்டுசெல்கிறார்.
இக்கதையின் முதல் அத்தியாயத்தில் என்னைப்போன்ற இளைஞர்களிம்(?) முக்கிய பிரச்சனையான கடைச்சாப்பாட்டை அனுபவித்து எழுதியுள்ளார். அதே நேரம் இதில் வரும் கதாநாயகன் ஒரு ஹைடெக் ஆசாமியாவதால் லாப்டாப் சாப்ட்வேர் போன்றவை கதையில் வருவதாலும் நாமே கதாநாயகன் என்ற எண்ணம் வருகிறது.

அதேவேளை இன்றைய நாட்களில் இடுகாட்டுக்கு பக்கத்தில் வீடுகள் கட்டி மக்கள் குடியேறும் நகரமயமாக்களையும் அப்படியே தொட்டுச்சென்றுள்ளார். மேலும் இக்கதையின் ஓட்டம் வாசகனை இடையில் எந்த வேலையும் செய்யமுடியாமல் அப்படியே கதையுடன் ஒன்றச் செய்வது பராட்டுக்குரியது.


இறுதியாக இக்கதையின் முடிவு ஒரு ஹைக்கூ கவிதை மாதிரியான யாரும் எதிர்ப்பார்க்கமுடியாத முடிவாகும்.

இக்கதைகளைப் படிக்க இத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள் http://etheni.com