அங்கவை சங்கவைக்குப் பதிலாக ஐஸ்வர்யா செளந்தர்யா எனவோ இல்லை மீனாட்சி காமாட்சி எனவோ சுஜாதா ஏன் பெயர் வைக்கவில்லை. சிவாஜி படத்தில் இது ஒரு நெருடல் . ஐஸ்வர்யா செளந்தர்யா என பெயர் வைத்தால் ரஜனி ஏறுக்கொள்ளமாட்டார் என்றா இந்தப் பெயர் வைக்கவில்லை.
பாமரன் கேட்பது சரியாகத் தான் இருக்கிறது. தமிழ்க்குடிதாங்கிகளும் கற்பு பற்றி பேசி பிரபலமானவர்களும் நம் சங்க இலக்கியங்களை கிண்டல் செய்வதை ஏன் தட்டிக்கேட்கவில்லை?
ஏ வி எம் என்ற பெரிய நிறுவனத்துக்கு பயந்தா? இல்லை ரஜனி என்கின்றவருக்கு பயந்தா?
பாமரனின் குமுதம் படித்ததும் கிழித்ததும் பகுதி
முல்லைக்குத் தேர் தந்த பாரி வள்ளலின் பெண்கள்தான் அங்கவை, சங்கவை. மாட மாளிகையில் வாழ்ந்த இவர்கள் தங்கள் தந்தையை இழந்து தவித்த போது அடைக்கலம் தந்து மணமுடித்து வைத்தவர் வள்ளல் பாரியின் நண்பரான புலவர் கபிலர்.
‘அன்று இதே வெண்ணிலவின் போது எங்களைப் போற்றிப் பாதுகாத்த தந்தையும் எங்களுடன் இருந்தார். எங்களுக்கான குன்றும் எங்கள் வசம் இருந்தது.
இன்று எங்கள் தந்தையையும் இழந்தோம்... நாட்டையும் இழந்தோமே’ என பாரியின் மகளிர் அங்கவையும். சங்கவையும் கதறிய கதறல் புறநானூற்றைப் புரட்டிப் பார்த்தவர்களுக்குத் தெரியும்.
இவர்கள்தான் இன்றைய தமிழ் சினிமாவின் கேலிப் பொருள்.
இதற்கு ‘தமிழாய்ந்த’ வாத்தி ஒருத்தர் பல்லை இளித்துக் கொண்டு ‘வாங்க வந்து பழகுங்க’ என்று மாமா வேலை பார்க்கும் காட்சியைப் பார்த்தபோது ரத்தம் சூடேறி விட்டது.
வசனம் : சுஜாதா.
நல்லது.
அங்கவை சங்கவைக்கு பதிலாக பிரியதர்ஷிணி தேவதர்ஷிணி என்றோ.... அபித குஜலாம்பாள் குசல குஜலாம்பாள் என்றோ... அல்லது சிவாஜிராவ் கெய்க்வாட்டுக்குப் பிடித்த பர்வதம்மா பசவம்மா என்றோ போட்டிருக்கலாமே. எது தடுத்தது இவர்கள் அனைவரையும்?
‘சண்டைக்கோழி’யில் ‘குட்டிரேவதி’ என்று வந்த வசனத்திற்காக எஸ்.ராமகிருஷ்ணனை ஒரு வழி பண்ணிய இலக்கியவாதிகள் அங்கவை, சங்கவை விஷயத்தில் மட்டும் சகலத்தையும் பொத்திக் கொண்டிருப்பது ஏன்?
‘படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்’ என்று பொங்கி எழுந்த தமிழ் பாதுகாப்புப் பேரவையினர் இப்போது தமிழ் நாட்டில்தான் இருக்கிறார்களா?
‘கற்பு’ விஷயத்தில் குஷ்புவை விட்டேனா பார்...என்று தொடை தட்டிய ஜாம்பவான்கள் அங்கவை, சங்கவை விஷயத்தின் போது மட்டும் எங்கே போய்த் தொலைந்தார்கள்?
இப்படி ஏகப்பட்ட கேள்விகள் என்னுள் மண்டையைக் குடைந்தபடி...
இதில் வக்கிரத்தின் உச்ச கட்டம் என்னவென்றால் அங்கவை, சங்கவை இருவருக்கும் கருப்புச் சாயம் பூசிக் காட்டியிருப்பது.....
மூடர்களே....! ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்.
கருப்பு என்பது நிறமல்ல. இனம்.
இன்னும் உங்களுக்குப் ‘புரியும் மொழியில்’ சொல்வதானால்......
Black is not a Colour
To Erase.
It is a RACE
இத்தோடு நிறுத்துங்கள் உங்கள் விபரீத விளையாட்டை. அப்புறம்....
நாங்களும் ‘பழக’ ஆரம்பித்தால்......
குரு' அஷ்வின் 'சிஷ்யன்' லியான் மீண்டும் ஒரு 'சுழல்' மோதல்
-
அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிறிக்கெற் அணி 'பார்டர்- - கவாஸ்கர்'
டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் கடந்த 22 ஆம் திகதி
வெள்ளிக்கிழ...
3 hours ago
7 கருத்துக் கூறியவர்கள்:
படத்துக்கு வசனம் எழுதுபவரை நம்பி எந்தப் படமும் விலைப் போவதில்லை...இதில் இரண்டு பேர் முக்கியமானவர்-சிவாஜியைப் பொறுத்தவரையில்...ஒன்று ரஜினி...இன்னொன்று .அந்த இருவரில் முக்கியமானவர் ரஜினி.அது மட்டுமல்ல ஏதோ திடீரென்று முளைத்தத் தயாரிப்பாளர் அல்ல...அவருக்கு லாபம் வேண்டும்.அவ்வளவே.
ஆக சுஜாதாவையோ , சங்கரையோக் குற்றம் காணுவது தவறு.ரஜினியும் தான் காரணம்....
அதுமட்டுமல்ல, தமிழுக்காகத் தொடை தட்டும் ஜாம்பவான்களான ராமதாஸ், திருமாவளவன், உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்ற வியர்வைக் கவிஞன் வைரமுத்து இவர்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாகவும், சில்லறையாகவும் இன்னொருமுறை விலை போயிருக்கிறார்கள்...
இதில் என்ன நகைச் சுவை என்றால், கலைஞர் தொலைக்காட்சி இன்னும் அதிகாரப் பூர்வமாக ஆரம்பிக்கப்படவில்லை..அதற்குள
�� தமிழ் பெண்களை இவ்வாறூ இழிவுப் படுத்திய சிவாஜியை அதிக விலை கொடுத்து வாங்கியதுதான்.....
கபடதாரிகள்!
குமுதம் செய்தியுடன் ஒத்துப் போகிறேன்!
Also we strongly condemn the use of name 'Aathi Seshan' which is a holy god of all the Hindus. Let me also watch the movie again to see whether are there any other names which are misused. I think they should sensor the whole audio and video of sivaji and just show the plain screen. That against the screen will be a white color which will be against the Dravidian color.
* அங்கவை சங்கவை - Solomon Papayyaவின் மகள்கள் என்பதால்
(Tamil .. Solomon Papayya ? see the relation ? Same for Shreya .. Raja's daughter(தமிழ் செல்வி))
* ஏன் வைக்கக்கூடாது ? இரு பெண்கள், உங்கள் பார்வையில், அழகாக இல்லை என்பதாலா ?
நன்றிகள் வித்யா ராம் மற்றும் அனானி தற்போது வடை மேட்டரும் சர்ச்சையாகி இருக்கிறது
லேட்டா வந்துருக்கேன் போல இருக்கே(-:
//தற்போது வடை மேட்டரும் சர்ச்சையாகி இருக்கிறது//
அது என்ன வடை மேட்டர்? வடைக்கு எதாவது ஆபத்தா?
கொஞ்சம் சொல்லுங்க விளக்கமா.
//அது என்ன வடை மேட்டர்? வடைக்கு எதாவது ஆபத்தா?
கொஞ்சம் சொல்லுங்க விளக்கமா. //
வணக்கம் துளசி கோபால்
வடை மேட்டரை லக்கி லுக் அல்லது செந்தழல் ரவி இருவரிடமும் கேளூங்கள்.
அல்லது இந்த வசனத்தை பேசிய உமா பத்மநாபனிடம் கேளுங்கள்
sivagirirajan@gmail.com
Sir , once again this is giri , why do you always run around cinema .
Cinema is not our life , cinema is not our society , cinema is just for entertainment. I never consider cinema as a art . but for this discussion I oppose your opinion because nothing wrong in that names why don’t we use sanga ellakiya names . you have to remember that they did not criticized pari’s daughters , they had that name for their characters so nothing to tense .
Post a Comment