முட்டை அவிப்பது எப்படி...........
சமையலுக்கு வேண்டியவை பதார்த்தங்கள்:
தேவையான அளவு முட்டைகள், அதே போல் தேவையான அளவு தண்ணீர், முட்டையை அவிப்பதற்குரிய பாத்திரம், முக்கியமாக அடுப்பு, அடுப்பைப் பற்ற வைக்க தீப்பெட்டி அல்லது லைட்டர்.
இந்த அடுப்பென்னும் விசயத்தைப் பார்த்தீர்களானால், நீங்கள் காஸ் அடுப்பையோ, மின்னடுப்பையோ, விறகடுப்பையோ எதையாவது பயன்படுத்தலாம் என்பதுதான் இந்த முட்டை அவிப்பதில் சிறப்பான அம்சம்.
செய்முறை:
முதலில் நீங்கள் என்ன அடுப்பைப் பாவிக்கிறீர்களோ, அதற்கு ஏற்றவாறு காஸ் அடுப்பென்றால் காஸோ, மின்னடுபென்றால் மின்சாரமோ, விறகடுப்பென்றால் விறகோ இருக்கிறதா எனச் சரிபார்த்துக் கொள்ளவும்.
பின்னர் தீப்பெட்டியையோ, லைட்டரையோ கையில் எடுத்து அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும். இதில் பற்ற்ற வைக்கும் போது கையில் நெருப்புச் சுடாதவாறு பார்த்துக் கொள்வது மிக அவசியம். அப்படி இல்லாத பட்சத்தில், தேவையான பொருட்களின் பட்டியலில் பர்னாலையும் சேர்த்துக் கொள்ளவும்.
பற்ற வைத்த அடுப்பில் மிகவும் நிதானமாக, தண்ணீர் ஊற்றப்பட்ட பாத்திரத்தை வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் முட்டைகள் முழுதாக மூழ்கும் வரையிலான அளவிற்கு விடப்பட்டிருக்க வேண்டும்.
அதற்கு மேலதிகமாகவோ, குறைவாகவோ தண்ணீர் பாத்திரத்தில் இடப்பட்டடிருந்தால் வரும் விளைவுகளுக்கு, லீனாவாகிய நானோ, இந்தப் பதிவை பதிப்பதற்கு அனுமதி வழங்கிய கண்காணிப்பாளர் அல்லது இளமாறானோ பொறுப்பல்ல.
உங்களுக்குத் தேவையானதெல்லாம் நிதானமும் பொறுமையுமே!
தண்ணீர் கொதிக்கத் தொடங்கும் போது, உங்களுக்கு உணவிற்கு எத்தனை முட்டைகள் தேவையோ அவற்றுடன் மேலும் இரண்டு முட்டைகளை சேர்த்து பாத்திரத்தில் போடவும்.
இங்கே நீங்களெல்லாம் மேலதிகமாக ஏன் இரண்டு முட்டைகள் என ஆச்சரியத்தில் கண்களின் மேலுள்ள புருவத்தை உயர்த்துவது தெரிகிறது.
இங்குதான் லீனாவின் சமையல் தந்திரம் வெளிப்படுகிறது. அதை முடிவில் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்வீர்கள். அதுவரை உங்களுக்குத் தேவை மீண்டும் பொறுமை.
பாத்திரத்தில் முட்டைகளை இட்டதும் சில நிமிட நேரங்கள் எங்கும் செல்லாமல் (உங்களுக்கு டாய்லெட் வந்தால் கூட) பாத்திரத்தையே பார்த்தபடி நிற்கவும்.
தண்ணீர் மிகவும் ஆக்ரோசாமாகக் கொதித்து, நீராவியாகத் தொடங்கும் போது, ஒரு முட்டையை, தேவையான பொருட்களின் பட்டியலில் பர்னால் சேர்த்தவர்கள் கையாலும், மற்றவர்கள் கரண்டியாலும் வெளியே எடுக்கவும்.
அந்த முட்டையை உடைத்துப் பார்க்கவும்.
உடைத்த முட்டை அரை அவியலாக இருக்கும் பட்சத்தில் இன்னும் சில நிமிட நேரங்கள் எஞ்சிய முட்டைகளை அவிய விடவும். டாய்லெட் உபத்திரவம் உள்ளவர்கள் அதை மேலும் சில நிமிட நேரங்கள் ஒத்தி வைக்க வேண்டி வரலாம்.
பின்னர் மீண்டும் இன்னுமொரு முட்டையை வெளியே மேலே கூறப்பட்ட வழிமுறையில் எடுக்கவும். அதையும் உடைத்துப் பார்க்கவும்.
அப்போது உங்களுக்கு எஞ்சியிருக்கும் முட்டையின் அவிந்த தரம் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஏன் இரண்டு முட்டைகளை மேலதிகமாக அவியப் போட லீனா சொன்னார் என்ற சமையல் தந்திரம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
லீனாவை நினைத்து நீங்கள் பூரிப்படைந்திருப்பீர்கள்.
எமக்கு தற்சமயம் தேவையானது பூரிப்பு அல்ல முட்டை. எனவே மீண்டும் முட்டைக்கு வரவும்.
அடுப்பை நிதானமாக அணைக்கவும். பின்னர் பாத்திரத்தை அடுப்பிலிருந்த்து இறக்கவும்.
பாத்திரத்தை இறக்கும் போது காலில் வெந்நீரை ஊற்றுபவர்கள் முட்டை அவிப்பதை அன்று முதல் நிறுத்துமாறு இந்த லீனா அன்புடன் கேட்டுக் கோள்கிறான்.
பாத்திரத்தில் இருக்கும் நீரை வெளியே வடித்துவிட்டு முட்டைகளை ஆற விடவும்.
அப்போது நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று. முட்டைகளை ஒருதரம் மீண்டும் எண்ணிப் பார்ப்பது.
தற்செயலாக ஒரு முட்டை எண்ணிக்கையில் குறையும் பட்சத்தில், இரண்டாவதாக உடைத்துப் பார்த்த முட்டையை கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். (இங்குதான் லீனா நிற்கிறான்).
ஆறவிட்ட முட்டைகளின் கோதுகளை அகற்ற வேண்டிய ஒன்றே எஞ்சியுள்ளது.
இதற்கு உங்களுக்குத் தேவையானது மிகவும் நிதானமும் பொறுமையும்.
முட்டைக் கோதுகளை உடைக்கும் போது நீங்களே, லீனா ஏன் முட்டை அவிப்பதற்கு நிதானமும் பொறுமையும் தேவையயென்பதை அடிக்க்டி கூறுகின்றார் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
இப்போது உங்கள் கையில் அழகான வெள்ளை நிறத்தில் முட்டை வடிவத்தில் முட்டை காட்சியளிக்கும்.
முட்டை வடிவத்தில் காட்சியளிக்கும் முட்டையை சமைத்திருக்கும் மற்றய உண்வுடன் சேர்த்து சாப்பிடவும்.
லீனாவின் சமையல் குறிப்பிலிருந்து........
தமிழ்நாடுடோல்க்கில் கலக்கலாக எழுதும் லீனாவினது இந்த செய்முறை.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
21 hours ago
7 கருத்துக் கூறியவர்கள்:
முதல்ல வென்னீர் எப்படி வைப்பதுனு ஒரு இடுகை போட்ட பிறகு இல்ல நீங்க இந்த இடுகைய போடணும்!! இதெல்லாம் நான் சொல்லவேண்டி இருக்கு!! :))
தமிழ் மணம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் கேட்டரிங்க் டெக்னாலஜில இந்தப் பதிவையும் சேர்க்கணும்!
http://kalaaythal.blogspot.com/2006/11/022-tmict.html
குட்டிப்பிசாசு வருகைக்கு நன்றி. வென்நீர் வைப்பது எப்படி என அடுத்த பதிவில் போடுகிறேன்.
நாமக்கலில் இருந்து பார்வையிட்ட சிபிக்கும் நன்றிகள்
அய்யா போதும்யா எதாவது கொஞ்சம் சிரிக்கிறமாதிரி போடுங்கய்யா
முட்டை பொரிப்பதி எப்படி என்ற கட்டுரையையும் எதிர்பார்க்கிறேன்
தம்பி வந்திக்கு,
எனது முட்டைப் பதிவை உடையாமல் அப்படியே பதித்து என்னைப் பெருமைப் படுத்தியதற்கு நன்றி.
முட்டையைச் சிலர் கேவலமாக நினைப்பதை நினைத்து மனவருத்தமாய் உள்ளது.
என்னைப் பொறுத்தவரை முட்டை முட்டை வடிவத்தில் இருப்பதே ஒரு அதிசயம்தான்.
ஒரு கதைக்கு அந்த முட்டை முக்கோண வடிவிலிருந்திருந்தால் அந்தக் கூர் எங்கள் கைகளில் குத்தியல்லவா இருக்கும்.
இப்போதைக்கு இது போதுமென்று நினைத்து மீண்டும் நன்றியுடன் விடை பெறுகிறேன்.
//தம்பி வந்திக்கு,
எனது முட்டைப் பதிவை உடையாமல் அப்படியே பதித்து என்னைப் பெருமைப் படுத்தியதற்கு நன்றி.//
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்.
Post a Comment