மனிதரில் எத்தனை நிறங்கள்

மனிதரில் எத்தனை நிறங்கள்

கீழே எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு ஆங்கிலக் கவிதையை தருகின்றேன். அழகாக மொழிபெயர்க்ககூடியவர்கள் தமிழில் மொழி பெயருங்கள்.

அந்த சிறுமியின் வேதனை ஆதங்கம் நெஞ்சைத் தொடுகிறது.

This poem was nominated poem of 2005 for the best
poem, written by an
African kid.........amazing thought!!!


When I born, I'm Black,
When I grow up, I'm Black,
When I go in Sun, I'm Black,
When I scared, I' m Black,
When I sick, I'm Black
And when I die, I'm still black.

And you White fellow,
When you born, you are Pink
When you grow up, you are White,
When you go in Sun, you are Red,
When you cold, you are Blue
When you scared, you are Yellow
When you sick, you are Green
And when you die, you are Gray
And you calling me colored?

4 கருத்துக் கூறியவர்கள்:

SP.VR. SUBBIAH சொல்வது:

பிறந்தபோது
கருப்பனென்றார்கள்
பிறந்து வளர்ந்தபோதும்
கருப்பனென்றார்கள்

சூரியவொளியிலும்
கருப்பனென்றார்கள்
சுற்றித்திரியப்
பயந்தபோதும்
கருப்பனென்றார்கள்

பிணியில் படுத்தபோதும்
கருப்பனென்றார்கள்
உயிரிழந்து போனாலும்
கருப்பனென்பார்கள்

வெள்ளை நண்பனே - நீ
பிறந்தபோது
இளஞ்சிவப்பு நிறமானாய்
பிறந்து வளர்ந்தபோது
வெள்ளையனானாய்

சூரிய வொளியில்
சிவப்பு நிறத்தானானாய்
சுற்றித்திரியப் பயந்தபோது
மஞ்சள் நிறத்தானானாய்
கடுங்குரிளில் உன் நிறம்
ஆகாய வண்ணமானது

பிணியில் படுத்தபோது
பச்சையானாய்
உயிரிழந்து போனால்
சாமபல் நிறம் பெறுவாய்

உனக்குத்தான்
அத்தனை நிறமும்
சொந்தமெனும்போது -
என்னை
நிறத்தான் என்று பெயரிட்டு
அழைப்பது
என்ன நியாயம்?

முடிந்தவரை மொழிபெயர்ப்பு:
SP.VR. சுப்பையா

வந்தியத்தேவன் சொல்வது:

நன்றிகள் திரு.சுப்பையா அவர்களே. உங்கள் கவிதை நடை அருமையாக உள்ளது. இறுதியில் கேட்டீர்களே ஒரு கேள்வி அதுதான் பஞ்ச் .

இன்னொரு நண்பி அனுப்பிய மொழிபெயர்ப்பு கீழே:

பிறக்கையில் என் நிறம் கருப்பு
வளர்கையில் என் நிறம் கருப்பு
வெயிலில் திரிகையில் என் நிறம் கருப்பு
பயத்தில் உறைகையில் என் நிறம் கருப்பு
உடல்நலம் குறையும் போதும் கருப்பு
உயிர் நான் துறக்கும்போதும் கருப்பு


வெள்ளையனே!

பிறக்கையில் உன் நிறம் ரோஜா
வளர்கையிலே நீ வெள்ளை
வெயிலில் திரிகையிலே நீ சிவப்பு
குளிரில் நடுங்கும் போது நீலம்
பயத்தில் உன் நிறம் மஞ்சள்
நோய்ப்படுக்கையில் நீயோ பச்சை- இறுதிப்
பயணத்தில் உன் நிறம் சாம்பல்

என்றுமே நாங்கள் கறுப்பு - எங்களை
நிறத்தவர் என்றழைப்பது உம் வெறுப்பு!

காரூரன் சொல்வது:

நல்ல கவிதை.
கவிதையின் பிறப்பிடம் வலி. எட்டய புரத்து கவிஞனுக்கும் இதற்கு விதி விலக்கல்ல.

வந்தியத்தேவன் சொல்வது:

//நல்ல கவிதை.
கவிதையின் பிறப்பிடம் வலி. எட்டய புரத்து கவிஞனுக்கும் இதற்கு விதி விலக்கல்ல.//

வணக்கம் காரூரன்
வருகைக்கு நன்றிகள். எட்டையபுரத்துக் கவிஞனின் வலியை இன்னமும் பலர் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் வேதனைக்கு உரியது.