அ முதல் ஃ வரை

தொடர்பதிவுகள் காதலிக்கு கொடுக்கும் முத்தம் போன்றது அடிக்கடி கொடுத்தால் கசந்துவிடும் என அனுபவஸ்தர்கள் சொன்னார்கள் ஆனாலும் இதில் ஏதோ கிக் இருப்பதால் அடிக்கடி பலர் எழுதுகின்றார்கள் என்னையும் மாட்டிவிடுகிறார்கள்.

மீண்டும் இன்னொரு தொடர்பதிவு. அழைத்த அன்புத் தம்பி சுபாங்கனுக்கு நன்றிகள்.

1. A – Available/Single? : சிங்கிளாக Available

2. B – Best friend? : ஒன்றா இரண்டா பலர் இருக்கின்றார்கள்

3. C – Cake or Pie?: இரண்டும் பிடிக்காது

4. D – Drink of choice? : பச்சைத் தண்ணி

5. E – Essential item you use every day? : செல்லிடப்பேசி

6. F – Favorite color? : நான் சிவப்பு மனிதன்

7. G – Gummy Bears Or Worms?: இரண்டும் இல்லை

8. H – Hometown? : கரவெட்டி

9. I – Indulgence? : இசை

10. J – January or February? February 14 : ஜனவரி தான் புதுவருடம், பொங்கல்

11. K – Kids & their names? : நானே ஒரு பச்சிளம் பாலகன்

12. L – Life is incomplete without? : Wife (Lol)

13. M – Marriage date? : ஆயுள் தண்டனை திகதி இன்னும் முடிவு செய்யவில்லை

14. N – Number of siblings? : யாதும் ஊரே யாவரும் கேளீர்

15. O – Oranges or Apples? : A for Apple

16. P – Phobias/Fears? : பாம்பு

17. Q – Quote for today? : Do it Now

18. R – Reason to smile? : சிரிப்பதனால் ஆயுள் அதிகரிக்கும்

19. S – Season? : மழைக்கால மேகம் ஒன்று மணி ஊஞ்சலாடியது

20. T – Tag 4 People?
ஆதிரை (ஆதிரை ரூபியுடன் குடும்பம் நடத்துவதால் அவருக்குப் பதிலாக அவரின் சகா மருதமூரான் இந்த தொடரைகொண்டு நடத்துவார்)
கீர்த்தி
நிர்ஷன்
கார்த்தி

21. U – Unknown fact about me? : அப்படி ஒன்றும் இல்லை

22. V – Vegetable you don't like? : கரட்டும் பீட்ரூட்டும்

23. W – Worst habit? : நகம் கடித்தல்

24. X – X-rays you've had? : என் இதயத்தை எக்ஸ்ரே பிடித்தால் அசின் இருப்பார்

25. Y – Your favorite food? : Naan with Panner Butter Masala

26. Z – Zodiac sign? : Capricorn

அன்புக்குரியவர்கள்: குடும்பத்தவர்கள்

ஆசைக்குரியவர்: என் தேவதைகளின் தேவதை

இலவசமாய் கிடைப்பது: அன்பும் நல்ல நட்பும்

ஈதலில் சிறந்தது: இரத்ததானம், கண்தானம்

உலகத்தில் பயப்படுவது: மனசாட்சிக்கு மட்டுமே

ஊமை கண்ட கனவு: உலக சமாதானம்

எப்போதும் உடனிருப்பது: தன்னம்பிக்கை ( சிலவேளைகளில் மிகவும் அதிகம்)

ஏன் இந்த பதிவு: அன்புத் தம்பி சுபாங்கனுக்காக‌

ஐஸ்வர்யத்தில் சிறந்தது:
கல்வி

ஒரு ரகசியம்: அதிரடிப் பதிவருக்கு விரைவில் டுமீல்டுமீல்டுமீல் மன்னிக்கவும் டும் டும் டும்

ஓசையில் பிடித்தது: இயற்கையான பறவைகளின் ஒலிகள்

ஔவை மொழி ஒன்று: இளமையில் கல்

(அ)ஃறிணையில் பிடித்தது: யானை

12 கருத்துக் கூறியவர்கள்:

ஆதிரை சொல்வது:

Tag 4 people.
முதல் பெயர் என் கண்ணுக்கு தெரியவில்லை.

நன்றி மாப்பிள்ளை...

Subankan சொல்வது:

//ஒரு ரகசியம்: அதிரடிப் பதிவருக்கு விரைவில் டுமீல்டுமீல்டுமீல் மன்னிக்கவும் டும் டும் டும்//

எதிர்பார்ப்பு எகிறுகின்றது.

//L – Life is incomplete without? : Wife (Lol)//

மேலே உள்ளதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா?

//X – X-rays you've had? : என் இதயத்தை எக்ஸ்ரே பிடித்தால் அசின் இருப்பார் //

அப்ப நயனோட கதி?

//ஆசைக்குரியவர்: என் தேவதைகளின் தேவதை//

இது யாரு?

//Q – Quote for today? : Do it Now//

அதுதான் உடனே எழுதிட்டீங்களோ?

//ஏன் இந்த பதிவு: அன்புத் தம்பி சுபாங்கனுக்காக‌//

நன்றி

Unknown சொல்வது:

//காதலிக்கு கொடுக்கும் முத்தம் போன்றது அடிக்கடி கொடுத்தால் கசந்துவிடும் //

அப்படியா வந்தியண்ணா?
சொந்த அனுபவமா?

//M – Marriage date? : ஆயுள் தண்டனை திகதி இன்னும் முடிவு செய்யவில்லை //

ஆனால் ஆயுள்தண்டனை முடிவாகிவிட்டதாக பேச்சு....

//ஒரு ரகசியம்: அதிரடிப் பதிவருக்கு விரைவில் டுமீல்டுமீல்டுமீல் மன்னிக்கவும் டும் டும் டும்//

அதிரடிப்பதிவருக்கு பச்சக் பச்சக் பச்சக்....

ஹி ஹி....
பார்ப்போம் பார்ப்போம்....

வந்தியத்தேவன் சொல்வது:

//ஆதிரை said...
Tag 4 people.
முதல் பெயர் என் கண்ணுக்கு தெரியவில்லை.//

ஆமாம் உங்கள் கண்ணுக்குத் தெரியாதபடியால் ஆளை மாற்றிவிட்டேன் உங்கள் பாடசாலை நண்பர் தான்.

//நன்றி மாப்பிள்ளை..//

மாப்பிள்ளையா? நான் அவனில்லை நீங்கள் தான் என்பது எனக்கு மட்டும் தெரியும்.

வந்தியத்தேவன் சொல்வது:

//Subankan said...

எதிர்பார்ப்பு எகிறுகின்றது.//

எகிறும் எகிறும் அவருக்கும் உங்கள் பல்கலைக் கழகத்திற்க்கும் தொடர்புண்டு.

//மேலே உள்ளதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா?//

இருக்கலாம் இருக்கலாம்.

//அப்ப நயனோட கதி?//

நயனின் கதியை பிரபுதேவாவிடம் கேட்கவும்.


//இது யாரு?//

யாருக்குத் தெரியும்.

//அதுதான் உடனே எழுதிட்டீங்களோ?//

ஆமாம் நன்றே செய் அதனை இன்றே செய்.

//நன்றி//
நன்றிகள் இந்த சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கியதற்க்கு.

வந்தியத்தேவன் சொல்வது:

// கனககோபி said...
அப்படியா வந்தியண்ணா?
சொந்த அனுபவமா?//

நான் பச்சிளம் பாலகன். என் நண்பனின் அனுபவம் அவரும் வலையில் இருக்கின்றார்.

//ஆனால் ஆயுள்தண்டனை முடிவாகிவிட்டதாக பேச்சு....//

இன்னும் இல்லை இல்லை

//அதிரடிப்பதிவருக்கு பச்சக் பச்சக் பச்சக்....//

பச்சக் பச்சக் என்றால் கத்தியால் குத்துவதா?

Admin சொல்வது:

//4. D – Drink of choice? : பச்சைத் தண்ணி//

அப்படி என்றால்????


//13. M – Marriage date? : ஆயுள் தண்டனை திகதி இன்னும் முடிவு செய்யவில்லை//


முன்கூட்டிய வாழ்த்துக்கள்

//22. V – Vegetable you don't like? : கரட்டும் பீட்ரூட்டும்//

English மரக்கறி என்று சொல்றதாலேயோ (தமிழ் பற்று அதிகமல்லவா)

Unknown சொல்வது:

//பச்சக் பச்சக் என்றால் கத்தியால் குத்துவதா?//

(நீ/நா)ங்கள் கமல் இரசிகர் என்ற படியால் விளங்கிக் கொள்வீர்கள் என்று நினைத்தேன்....

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொல்வது:

//X – X-rays you've had? : என் இதயத்தை எக்ஸ்ரே பிடித்தால் அசின் இருப்பார்//

நம்பலாமா? அருமையான பதில்கள் வாழ்த்துக்கள் ஆனால் என்னையும் மாட்டிவிட்டுவிட்டீர்களே :(

கார்த்தி சொல்வது:

அழைத்தமைக்கு நன்றி!! விரைவில் தொடருகின்றேன்..

// Drink of choice? : பச்சைத் தண்ணி
good selection!!!

SUREஷ்(பழனியிலிருந்து) சொல்வது:

புரியாத விஷயம்..,

// Available/Single? : சிங்கிளாக Available
//

அப்படின்னா என்ன அர்த்தம்,,,

ARV Loshan சொல்வது:

தொடர்பதிவுகள் காதலிக்கு கொடுக்கும் முத்தம் போன்றது அடிக்கடி கொடுத்தால் கசந்துவிடும் என அனுபவஸ்தர்கள் சொன்னார்கள்//

ஆகா ஆகா ஆரம்பத்திலேயே எஸ்கேப்பா? ஆனால் பல இடங்களில் மழுப்பியும் மாட்டி உள்ளீர்கள் மாப்ளே.. ;)

அது சரி தேவதை சுகமா? ;)