ஜனாதிபதித் தேர்தல்
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட முன்னரே இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள் தொடங்கிவிட்டன. தற்போதைய ஜனாதிபதியை எதிர்த்து தேர்தலில் போட்டி இடுபவர் யார் என்ற சர்ச்சை இன்னமும் தீர்ந்தபாடில்லை.
ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரோ வழக்கம் போல் அமைதியாக இருக்கின்றார். நிச்சயம் அந்தக் கட்சியின் சார்பில் அவர் போட்டியிடமாட்டார். காரணம் அவர் தோல்விகளின் நாயகன் என அறியப்பட்டவர். ஆகவே கட்சியின் சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவோ அல்லது முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவோ போட்டியிடக்கூடும்.
இதே வேளை அரசாங்க ஊடகங்களில் சரத் பொன்சேகாவிற்க்கு எதிரான பிரச்சாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைமுகமாக மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன் மகா நாயக்க தேரர்கள் கூட சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவதை எதிர்க்கின்றார்கள்.
அதே நேரம் சரத் பொன்சேகாவின் ராஜினாமாவை தான் ஏற்கத் தயார் என்றும் அந்தக் கடிதத்திற்கான பதிலை அரை மணி நேரத்தில் அனுப்பிவைப்பேன் எனவும் கூறியுள்ளார். இன்னும் சில நாட்களில் இலங்கை அரசியல் வட்டாரங்களில் பல சுவாரசியங்கள் நடக்கும்.
இரண்டாவது பதிவர் சந்திப்பு
கடந்த சில நாட்களாக இரண்டாவது பதிவர் சந்திப்பின் முக்கியம் பல வலைப்பதிவர்களால் பிரேரிக்கப்பட்டுள்ளது. பதிவர் சந்திப்பானது 3 அல்லது 4 மாதத்திற்க்கு ஒருமுறை நடத்துவதுதான் சிறந்தது என எம்மால் முதலாவது சந்திப்பில் தீர்மானித்திருந்தோம். அடிக்கடி சந்தித்தால் சந்திப்பில் எந்த சுவாரசியமும் இருக்காது.
இரண்டாவது சந்திப்பை ஒழுங்குபடுத்த இன்னொரு மிகவும் துடிப்பான ஆர்வமுள்ள சிலர் முன் வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கும் அதேவேளை சிறந்த திட்டமிடல் இல்லையென்றால் சிறப்பாக செய்யமுடியாது என்பதையும் தெரிவிக்கின்றேன். காரணம் கடந்த முறை நாங்கள் திட்டமிடுவதற்கே பலமுறை சந்தித்திருந்ததோம். ஒரு கிழமைக்குள் திட்டுமிட்டு நடத்தினால் சந்திப்பு வெற்றியளிக்காது என்பதையும் அறிவீர்கள்.
இம்முறை பதிவர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ளும் கஸ்டம் உங்களுக்கு இல்லை. காரணம் ஏற்கனவே எம்மிடம் இவர்களின் விபரங்கள் எம்மிடம் இருப்பதால் அதனை வைத்து நீங்கள் அனைவரையும் தொடர்புகொள்ளமுடியும்.
வடிவேல் பாணியில் சொல்வது என்றால் "எதையும் பிளான் பண்ணிப் பண்ணனும் சரியோ".
பதிவர் சர்ச்சைகள்
சில காலங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பரபரப்பையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திய போலிப் பிரச்சனை தற்போது இலங்கைக்கு பரவியுள்ளது. நண்பர் சந்ருவின் வலையில் வரும் ஆக்கங்களை ஒருவர் தன்னுடைய வலையில் பதிவு செய்கின்றார். அதுமட்டுமல்ல சில நண்பர்களின் பெயர்களில் ஒருவரோ அல்லது ஒரு குழுவோ ல் வந்து போலிப் பின்னூட்டங்கள் இடுகின்றார்கள்.
ஒருவரோ ஒரு குழுவோ பல பெயர்களில் வந்து சர்ச்சையான பின்னூட்டங்களை இட்டு பதிவர்களை வம்புக்கு இழுக்கின்றார்கள். அதே நேரம் இப்படியானவர்களின் பின்னூட்டங்களையும் கருத்துகளையும் கருத்தில் எடுக்ககூடாது என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.
"துஷ்டனைக் கண்டால் தூர விலகு"
கிரிக்கெட்
அவுஸ்திரேலியா இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரை ஆஸி 4க்கு 2 என்ற விதத்தில் வெற்றி பெற்றிருக்கின்றது. ஆஸி இந்தியாவிற்க்கு விஜயம் செய்தபோது சிறுவர்களின் அணி எனப் பலரால் கிண்டல் செய்யப்பட்டது காரணம் மூத்த அனுபவ வீரர்கள் காயம் காரணமாக விளையாடமுடியாத நிலையில் பல புதிய வீரர்களுடன் களமிறங்கிய ஆஸி இந்திய அணியைச் சுருட்டி எடுத்துவிட்டது.
இந்திய அணியின் சச்சின், டோணி, ரெய்னா மட்டும் சிறப்பாக ஆடுகின்றாகள். ஏனையவர்கள் ஏனோதானோ என ஆடியதால் வந்த வினை இது, அதிலும் குறிப்பாக சேவாக், கம்பீர், யுவராஜ் ஆஸியை அச்சுறுத்தவில்லை. இன்றைய இறுதிப்போட்டியை வெற்றி பெற்று ஆஸி 5 க்கும் 2 என்ற கணக்கில் தொடரை வெல்லுமா? இல்லை இந்தியாவிற்க்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?
இந்தியாவின் அடுத்த போட்டித் தொடர் இலங்கை அணியுடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியாவி இந்த தோல்விகள் இந்திய அணியைப் பாதிக்குமா? இல்லை புதிய உத்வேகத்துடன் இலங்கையைச் சுருட்டுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
பிற்குறிப்பு : இலங்கையினுடனான போட்டிக்கு ஸ்ரீசாந்த் மீள அழைக்கப்பட்டிருக்கின்றார், ஆகவே போட்டிகளில் நிச்சயமாக சர்ச்சைகள் ஏற்படும் வாய்ப்புண்டு.
அணுவளவும் பயமில்லை
அனுஹாசன் தொகுத்தளித்த அணுவளவும் பயமில்லை சீசன் 1 நிறைவு பெற்று தற்போது லஸ்மிராய் தொகுத்தளிக்க சீசன் 2 ஆரம்பமாகியுள்ளது விஜய் தொலைகாட்சியில். லஸ்மிராய்க்கு தமிழும் ஒழுங்காக வரவில்லை ஆங்கிலமும் வரவில்லை இரண்டு மொழிகளையும் கொல்கின்றார். ஒரு எபிசோட்டிற்க்கு இவரிற்க்கு பல ஆயிரம் என கழுகார் தெரிவித்திருந்தார். விஜய் தொலைக்காட்சி ஏன் ஒரு நிகழ்ச்சியை ஒழுங்காக் செய்யத் தெரியாதவர்களுக்கு பணம் செலவளிக்கின்றது என்பது புரியாத புதிர்,
அத்துடன் இதனை மிகவும் மெதுவான சலனப் படத்தின் மூலம் காட்டுவதால் பார்ப்பவர்களுக்கு வெறுக்கின்றது. புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் விஜய் தொலைக்காட்சிக்கு நிகர் அவர்களே அதே நேரம் அந்த நிகழ்ச்சியை பின்னர் சொதப்புவதும் அவர்கள் தான்.
தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? (புருஜோத்தமன் தங்கமயில்)
-
பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது மூன்று நாட்கள் மட்டுமே.
இன்று நள்ளிரவோடு பிரச்சாரப் பணிகள் நிறைவுக்கு வருகின்றன. அடுத்த இரண்டு
நாட்கள் அ...
4 days ago
22 கருத்துக் கூறியவர்கள்:
//"துஷ்டனைக் கண்டால் தூர விலகு"///
சேம் பிளட்
//"எதையும் பிளான் பண்ணிப் பண்ணனும் சரியோ".//
ஆமாம்,
”எதை செய்தாலும்
அதை செய்வாம்
எதிலும் அழகாக”.
எங்களது கணிதபாடத்தில் படித்த ஞாபகம்.
//ஒருவரோ அல்லது ஒரு குழுவோ ல் வந்து போலிப் பின்னூட்டங்கள் இடுகின்றார்கள். //
ஒருவரோ அல்லது இருவரோ தான் செய்கிறார்கள் அண்ணா...
பதிவர்கள் இன்னும் சுறுசுறுப்பாக ஈடுபடவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு...
இப்போதே திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்..
வாருங்கள் நண்பர்களே....
இன்று அவுஸ்ரேலியா வெல்ல வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு...
பார்ப்பபோம்...
வந்தியதேவன் அங்கயும் இந்த பிரச்சனை இருக்கா? அட கொடுமையே... உனது கருத்துதான் எனது கருத்தும்...புறக்கனித்துவிடுங்கள்
கலப்பை அடிக்க வெளிக்கிட்ட சேறு பிரளத்தான் செய்யும். அதப்பற்றி கவனிக்காம் கலப்பை அடி்ச்சு முடிக்கிறதுதான் சரி..:))
பகிர்வுக்கு நன்றி
இலங்கையில் அதுவும் கொழும்பில் தானே இருக்கீங்க? ;)
(இல்லை அரசியல் எல்லாம் அலசுறீங்களே.. அதான் கேட்டேன்..)
// பதிவர் சந்திப்பானது 3 அல்லது 4 மாதத்திற்க்கு ஒருமுறை நடத்துவதுதான் சிறந்தது என எம்மால் முதலாவது சந்திப்பில் தீர்மானித்திருந்தோம். அடிக்கடி சந்தித்தால் சந்திப்பில் எந்த சுவாரசியமும் இருக்காது.
//
உண்மை..
இம்முறை நண்பர்கள் மேலும் அதிக உற்சாகம்,உத்வேகத்தோடு இருப்பதனால் மேலும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
இந்தப் பின்னூட்ட சண்டைகள் மிகக் கேவலமாயிருக்கின்றன. அந்தக் குறிப்பிட்ட வலைத்தளக்காரரும் வேண்டுமென்ற தூசன பின்னூட்டங்களை அங்கீகரித்து மறைமுகமாக ஊக்குவிகின்றார்களோ என சந்தேகம்.
மிக கீழ்த்தரமான பிழைப்பு..
//"துஷ்டனைக் கண்டால் தூர விலகு"//
ரிப்பீட்டு..
அணுவளவும் பயமில்லை.. அய்யோ வேணாம் கொடுமை..
எங்க அசின் அழகு.. ;) ஆனா மெலிஞ்சு போனாவே..
கனக கோபிக்கு குறும்போ குறும்பு.. ;)
இலங்கை அரசியல்?????????????........................
இரண்டாவது பதிவர் சந்திப்பை எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். விரைவில் சந்திப்போம்.
//பதிவர் சர்ச்சைகள்//
திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது.
அரசியலா? சாரி ராங் நம்பர்
இரண்டாவது பதிவர் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
சர்ச்சைகள்தான் எம்முடன் கூடவே பிறந்தவைகளோ?
அசின் - அசத்துகிறார்
அய்யா.... எங்கட அசினெல்லே உது. உவ இந்திக்குப் போனாப்பிறகு படங்களும் குறைஞ்சு,அதே விகிதத்திலை உடுப்பும் குறையுது.
//யோ வாய்ஸ் (யோகா) said...
சேம் பிளட்//
ஹாஹா
//எங்களது கணிதபாடத்தில் படித்த ஞாபகம்.//
கணிதமே ஒரு அழகான பாடம் எனக்கு மிகவும் பிடித்த பாடம்
//கனககோபி said...
ஒருவரோ அல்லது இருவரோ தான் செய்கிறார்கள் அண்ணா...//
என்ன ரங்கராஜன் நம்பி பாணியில் பதில் அளிக்கின்றீர்கள்.
//பதிவர்கள் இன்னும் சுறுசுறுப்பாக ஈடுபடவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு...
இப்போதே திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்..
வாருங்கள் நண்பர்களே....//
அவர்கள் இம்முறை இன்னும் சிறப்பாக செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பவும் சில துடிப்பான இளைஞர்கள் களம் இறங்கியிருக்கின்றார்கள் என அறிந்தேன்.
//இன்று அவுஸ்ரேலியா வெல்ல வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு...
பார்ப்பபோம்...//
வருணபகவான் வென்றுவிட்டார் இனி இலங்கைத் தொடர்தான்.
// jackiesekar said...
வந்தியதேவன் அங்கயும் இந்த பிரச்சனை இருக்கா? அட கொடுமையே... உனது கருத்துதான் எனது கருத்தும்...புறக்கனித்துவிடுங்கள்//
ஆமாம் அண்ணாச்சி புறக்கணித்துவிடுவதுதான் சாலச் சிறந்தது.
//மதுவதனன் மௌ. / cowboymathu said...
கலப்பை அடிக்க வெளிக்கிட்ட சேறு பிரளத்தான் செய்யும். அதப்பற்றி கவனிக்காம் கலப்பை அடி்ச்சு முடிக்கிறதுதான் சரி..:))//
நல்லதொரு அழகான உதாரணம் மது. இம்முறை நீங்கள் தானே கலப்பை அடிக்கப்போறீர்கள்.
// sanjeevan said...
பகிர்வுக்கு நன்றி//
வருகைக்கு நன்றிகள் சஞ்சீசன்
// LOSHAN said...
இலங்கையில் அதுவும் கொழும்பில் தானே இருக்கீங்க? ;)
(இல்லை அரசியல் எல்லாம் அலசுறீங்களே.. அதான் கேட்டேன்..)//
உங்களைப்போன்ற அனுபவஸ்தர்கள் இருக்கும் வரை நான் கொழும்பில் தான் இருப்பேன். இது அரசியல் அல்ல வந்த செய்தியை என் பாணியில் எழுதியிருக்கின்றேன்
//இம்முறை நண்பர்கள் மேலும் அதிக உற்சாகம்,உத்வேகத்தோடு இருப்பதனால் மேலும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.//
அதே தான் இம்முறை எம்மை விட கொஞ்சம் அனுபவம் கூடிய இளைஞர்கள் இருக்கின்றார்கள் ஆகவே அவர்கள் சிறப்பாக செய்வார்கள்.
///இந்தப் பின்னூட்ட சண்டைகள் மிகக் கேவலமாயிருக்கின்றன. அந்தக் குறிப்பிட்ட வலைத்தளக்காரரும் வேண்டுமென்ற தூசன பின்னூட்டங்களை அங்கீகரித்து மறைமுகமாக ஊக்குவிகின்றார்களோ என சந்தேகம்.
மிக கீழ்த்தரமான பிழைப்பு..//
ம்ம்ம் அதே தான் ஒரு பொல்லாப்பும் இல்லை
//அணுவளவும் பயமில்லை.. அய்யோ வேணாம் கொடுமை..//
இதனைவிட மானாட மயிலாட நல்லாயிருக்கு.
//எங்க அசின் அழகு.. ;) ஆனா மெலிஞ்சு போனாவே.. //
ஆமாம் என்ன செய்வது ஹிந்தியில் நல்ல சாப்பாடு கிடைக்கவில்லையோ
//கனக கோபிக்கு குறும்போ குறும்பு.. ;)//
ஆமாம் ரொம்ப குறும்பு
//சந்ரு said...
இலங்கை அரசியல்?????????????........................ //
???????????????
//இரண்டாவது பதிவர் சந்திப்பை எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். விரைவில் சந்திப்போம். //
நீங்களும் அமைப்பாளர்களில் ஒருவர் என அறிந்தேன் சிறப்பாகச் செய்ய வாழ்த்துக்கள்
//திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது.//
அதே தான்
//Subankan said...
அரசியலா? சாரி ராங் நம்பர்//
அது ரெக்கோர்டிங் வொய்ஸ்
//இரண்டாவது பதிவர் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்//
நீங்களும் ஒரு அமைப்பாளர் என அறிந்தேன் வாழ்த்துகள்
//சர்ச்சைகள்தான் எம்முடன் கூடவே பிறந்தவைகளோ?//
அதுதான் யாமார்க்கும் குடியல்லோம்
//அசின் - அசத்துகிறார்//
அசின் என்றைக்கும் அசத்துகின்றவர் தான்
// Kiruthikan Kumarasamy said...
அய்யா.... எங்கட அசினெல்லே உது. உவ இந்திக்குப் போனாப்பிறகு படங்களும் குறைஞ்சு,அதே விகிதத்திலை உடுப்பும் குறையுது.//
ஓம் கீத் விரைவில் அசினைப் பற்றி ஒரு பதிவு போட்டு அவரை மீண்டும் தமிழ்நாட்டுக்கு வர கோரிக்கை விடுக்கவேண்டும்
//அதே தான் இம்முறை எம்மை விட கொஞ்சம் அனுபவம் கூடிய இளைஞர்கள் இருக்கின்றார்கள் ஆகவே அவர்கள் சிறப்பாக செய்வார்கள்.//
என்னது அனுபவம் வாய்ந்தவர்களா?
லோஷன் அண்ணா...! என்ன நடந்தது?
//வந்தியத்தேவன் சொல்வது:
சூடு கண்ட பூனை. தவறுகளைச் சுட்டிக் காட்டுவதில் தவறில்லை.
நான் சூடுவாங்கியதால் அச்சப்படவில்லை.
ஆனால் சூடுவைப்பவர்கள் அதற்குத் தகுதியில்லாதவர்களாக இருப்பதால் தான் கொஞ்சம் தயக்கம்.
ஆசிரியரிடம் அடிவாங்குவதற்கும் வீதியில் செல்பவனிடம் அடிவாங்குவதற்கும் வித்தியாசம் உள்ளதல்லவா....
//வந்தியத்தேவன் சொல்வது:
// sanjeevan said...
நன்றி கோபி :)
கதைக்கும் போது தமிழை பிழையாக உச்சரித்தால் தாங்க முடியாது தான்.
ஆனால் அவர் பாடும் பாடல்களில் அது இசையுடன் கலந்துவரும் வரும் போது கேட்க இனிமையாக இருக்கிறது.
எனக்கு அவரது உச்சரிப்புக்களில் பருவாயில்லை ரொம்ப பிடிக்கும்.//
அப்பாடா ஒருமாதிரி கோபியும் சஞ்ஜீவனும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் //
முடிவுக்கு வரவில்லை அண்ணா...
ஆனால் என் விருப்பங்களை மற்றவர்களுடன் எனது கருத்தைத் திணிக்கவிரும்பவில்லை.
நீ அதைச் செய்யாதே என்று சொல்ல எனக்கு எந்த உரிமையும் கிடையாது.
சக பதிவர் என்ற ரீதியில் அவரிடம் தோழமையில் கோரிக்கை விடுத்தேன்.
அதை ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அவர் விருப்பம்.
அதற்காக அவரை நான் எதிரியாகப் பார்க்கப்போவதும் இல்லை.
Intellectuals solve problems, Geniuses prevent them- Albert Einstein.
I'm trying to be a genius.
http://the-nutty-s.blogspot.com/2009/11/blog-post_16.html
Post a Comment