"பிரார்த்தனைக்காக முன்வரும் இரண்டு கைகளை விடவும், உதவுவதற்காக முன்வரும் ஒரு கை மிகவும் மதிப்பு வாய்ந்தது "
- கமல்ஹாசர்
இன்று பிறந்தநாள் காணும் மனிதநேயன் கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கமலஹாசனே கலைகளின் நேசனே
ரத்தத்தில் சிலவகை A+ve, B+ve,O+ve
உனக்கு மட்டும்தான் C+ve..Cinema +ve
எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள்
உனக்கு மட்டும் நடிகர்களும் ரசிகர்களாக,
நீ பூவாக நடித்தால் வேர்களை பார்த்தபின்தான் வாசனை காட்டுவாய்
நீ தீயாக நடித்தால் வெந்து பார்த்தபின்தான் வாழ்ந்துகாட்டுவாய்
உன் இதழ்கள் முத்த பெட்டகத்தை திறக்கும் சாவிகள்
காதல் இளவரசன,எத்தனையோ நடிகர்கள் காதலித்தார்கள்,
நீ முத்தம் கொடுத்தபோதுதான் விழித்திரை வெள்ளிதிறையானது
நீ குள்ளமாக நடித்தாய், தமிழ் சினிமா உயரமானது,
நீ கிழவனாக நடித்தாய், தமிழ் சினிமா இளமையனாது,
நீ ரூபாய் நோட்டில் கம்பி, பெண்கள் பிரிவில் M.P,
நீ ஒரு கடல், உனக்குள் முக்குளிக்கவரும் ரசிகனும்
முத்தாகவே மாறிவிடுகிறான்,
எல்லா கடலுக்கும் கரையிருக்கும், நீ கரையிலாத கடல்,
அதனால்தான் காலம் உனக்கு கொடுத்தது நரையிலாத உடல். நீ ஒரு மலை,
நாயகனில் நீ அழுதாய் அழுகைக்கு இலக்கணம் பிறந்தது.
உலகம் முழுக்க விசாரித்து பார்தேன் உடல் தானம் செய்த முதல் நடிகன் நீதான்.
இன்றும் திரையாரங்குகளில் கலக்கபோவது யாரு?வேறு யாரு, நீ தான்.
நீ வாங்கிய விருதுகளை அடுக்கினால்
இமயமலை குள்ளமாகிவிடும்,
ஆழ்வார்பேட்டை ஆண்டவா,
ஆஸ்கார் விருது வாங்கிவா.
-- நா.முத்துக்குமார்--
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
12 கருத்துக் கூறியவர்கள்:
சாதனை நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!!
இன்று பிறந்தநாளா....
எனக்கு தெரியாமற் போய்விட்டது அண்ணா....
அல்லது ஏதாவதொரு பதிவிடட்டிருக்கலாம்....
சரி பராவாயில்லை....
இன்று பிறந்தநாள் கொண்டாடும் கலையுலக ஞானி பத்மஸ்ரீ கமல்ஹாசனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
பெரிதாக சினிமாவை விரும்பாத நான் இரசிக்கும் முதல் நடிகர் கமல் தான்....
கமலின் நடிப்புக்கு அண்மையில் வெளிவந்த உன்னைப் போல் ஒருவன் அற்புதமான சாட்சி...
மற்றைய படங்களில் வேடங்கள் மாற்றினாலும் உன்னைப் போல் ஒருவனில் ஓர் இடத்தில் இருந்தபடி படம் முழுதும் காட்டிய முகபாவனைகள் அற்புதம்.
தொடர்ந்தும் தமிழ்சினிமாவை உயர்ந்தநிலைக்குக் கொண்டுபோக எனது வாழ்த்துக்கள்....
//நீ குள்ளமாக நடித்தாய், தமிழ் சினிமா உயரமானது,
நீ கிழவனாக நடித்தாய், தமிழ் சினிமா இளமையனாது, //
அழகான வரிகள் அண்ணா....
வரிகளுக்காக உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.....
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கமல்ஜி :)
நம்மவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
கலைப் பயணத்தில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.
உலக நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....:)
உலக நாயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...!
அதை நினைவு படுத்தியதற்காக வந்தியண்ணாவிட்கும் நன்றிகள்
நம்மவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்பே சிவம், சிவமே அன்பு. உலக நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், உலக நாயகனின் ரசிகருக்கு முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கமல்.
நீரே உமது படத்திற்குப் பதிலாக அவருடைய படத்தைத்தானே போட்டிருக்கிறீர்!
அதனால் அவருக்கு வாழ்த்துவது உம்மை வாழ்த்துவது போலத்தான் இருக்கும் - மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
நாங்களும் உங்களுடன் இணைகிறோம்!
கமலின் அன்பே சிவம் ஒரு மிகச்சிறந்த படம்
பகிர்வுக்கு நன்றி
Post a Comment