இருக்கிறத்தில் நின்ற கதை

கடந்த திங்கட்கிழமை இருக்கிறம் சஞ்சிகை அச்சு ஊடக இலத்திரனியல் ஊடக மற்றும் வலைப்பதிவர்களைச் ஒன்றுகூட‌ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அந்த ஒன்று கூடலும் அங்கே நடந்தவையும் நேற்று முதல் இலங்கைப் பதிவர்களிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான் கடந்த வார எனது ஹாட் அண்ட் சவர் சூப்பில் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன் இது வலைப்பதிவர் சந்திப்பு அல்ல என. ஆனால் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் இதனை ஒரு வலைப்பதிவர் சந்திப்பாகவும் அதிலும் ஒரு படி மேல் சீசன் 2 எனவும் எடுத்து தவறாக விளங்கி சண்டைப்படுகின்றார்கள். சென்ற வாரம் நான் எழுதியது அப்படியே உங்கள் பார்வைக்காக மீண்டும்.


இருக்கிறம் ஒன்று கூடல்

இருக்கிறம் சஞ்சிகை எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வலைப்பதிவர்கள், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடான ஒன்றுகூடல் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளமை தெரிந்ததே. சிலர் இந்த ஒன்றுகூடலை வலைப்பதிவர் சந்திப்பு என தவறாக புரிந்துகொண்டுள்ளனர். வலைப்பதிவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தாலும் அவர்கள் தங்களுக்குள் கலந்துரையாடினாலும் பொதுவான விவாதங்களோ கலந்துரையாடல்களோ நடக்கும் சாத்தியங்கள் இல்லையென்றே இருக்கிறம் நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த ஒன்றுகூடலானது பாடசாலை, கல்லூரி நாட்கள் ஒன்றுகூடல் போல் சுவாரசியமாகவே இருக்கப்போகின்றது. சென்ற சந்திப்பில் பலர் எமக்குள் சந்தித்து பேசமுடியவில்லை எனக் குறைப்பட்டார்கள். ஆனால் இந்தச் சந்திப்பில் உங்கள் நண்பர்களை நீங்கள் சந்தித்து அளவளாவ முடியும். அத்துடன் சில ஆச்ச‌ரியங்களும் காத்திருக்கின்றன என இருக்கிறம் நிர்வாகிகள் அறிவித்திருக்கின்றார்கள்.

ஹாட் அண்ட் சவர் சூப் 28-10-09

வலைப்பதிவர்களின் இந்த தவறான எண்ணக்கருத்தால் ஏற்கனவே வலைப்பதிவர்களின் மேல் குறைபிடிக்க அலையும் கூட்டத்திற்க்கு பெரும் வாய்ப்பாக போய் சிலர் தங்கள் காழ்ப்புணர்சிகளை எம்மேல் காட்டத் தொடங்கியிருக்கின்றார்கள். என்ன கொடும சார் இது!!!!!! எய்தவர்கள் இருக்க ஏன் அம்புகளை நோகின்றீர்கள்...

இந்தக் காழ்ப்புணர்ச்சிகளின் விமர்சனத்தை பெரிதாக எடுக்காமல் அடுத்த சந்திப்பை மீண்டும் வெற்றிகரமாக நடத்தி முடிப்பது அடுத்த சந்திப்பின் பொறுப்பாளர்களிலையே தங்கியுள்ளது. முதல் சந்திப்பை ஒழுங்கமைத்த குழுவினர் சார்பில் உங்களுக்கு சகலவிதமான உதவிகளும் செய்யப்படும். அடுத்த சந்திப்பை ஆக்கபூர்வமாக ஏற்பாடு செய்வதற்க்கு முன் வந்துள்ள நண்பர்களான யோ வாய்ஸ் யோகா, சிந்தனைச் சிறகினிலே கீர்த்தி, சுபாங்கன், சந்ரு, கனக‌கோபி, மன்னார் அமுதன் போன்றவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுடன் கை கோர்க்க பலர் தயாராக இருக்கின்றார்கள்.

இந்த சந்திப்பு பற்றிய என் கருத்துகள் விரைவில்....

22 கருத்துக் கூறியவர்கள்:

Mathuvathanan Mounasamy / cowboymathu சொல்வது:

நல்லது எங்கள் அடுத்த சந்திப்பு சிறப்புற நடக்கட்டும்..

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

//மதுவதனன் மௌ. / cowboymathu said...

நல்லது எங்கள் அடுத்த சந்திப்பு சிறப்புற நடக்கட்டும்.//

ரிப்பீட்டு

sanjeevan சொல்வது:

எமது முதலாவது சந்திப்பில் ஒரு டெக்னிக்கல் வேக்சொப் நடாத்தப்போகிறோம் என்று கூறி விட்டு மறந்துவிட்டீர்களா.

எம்மைப்போல புதிதாய் வந்தவர்களுக்காக எப்ப பதிவர் சந்திப்பு சீசன் 2 வரும் வந்தியண்ணா.

balavasakan சொல்வது:

அடுத்த பதிவர் சந்திப்பு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

Unknown சொல்வது:

//அடுத்த சந்திப்பை ஆக்கபூர்வமாக ஏற்பாடு செய்வதற்க்கு முன் வந்துள்ள நண்பர்களான யோ வாய்ஸ் யோகா, சிந்தனைச் சிறகினிலே கீர்த்தி, சுபாங்கன், சந்ரு,க‌னககோபி, மன்னார் அமுதன் போன்றவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுடன் கை கோர்க்க பலர் தயாராக இருக்கின்றார்கள். //

ஹலோ...
இதெப்ப நடந்தது???

இது பதிவர் சந்திப்பு இல்லை என்றும் இது இருக்கிறம் ஏற்பாடு செய்த சும்மா ஒரு கலந்துரையாடல் என்றும் எனக்கத் தெரியும் வந்தியண்ணா...

ஆனால் எனக்கு ஏமாற்றம் தான்...

பதிவர்கள் சார்பாக கதைக்குமாறு எவருக்கும் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை.

வலைப்பதிவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமான இனிய சந்திப்பு என்றுவிட்டு வலைப்பதிவர்களுக்கு என்ன செய்தார்கள்?

அவர்களது முயற்சியை நான் குறைகூறவில்லை.
ஆனால் வலைப்பதிவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமான சந்திப்பு எனப்பெயரிட்டுவிட்டு இருக்கிறமின் கொள்கைவிளக்க சந்திப்பாக மாற்றியதே எனது வருத்தம்.

ARV Loshan சொல்வது:

அதே அதே அதே.. நானும் இதையே வேறு விதமா சொல்லி இருக்கிறேன்.. :)

Paheerathan சொல்வது:

வந்தி, டிசம்பரில் சந்திப்பை ஏற்ப்பாடு செய்யலாம், அதற்காக கொழும்பில் இருக்கும் பதிவர்கள் வார இறுதிநாட்களில் எங்காவது கடற்கரையிலோ, அலது பூங்காக்களிலோ சந்தித்து கலந்துரையாடி ஏதும் ஒழுங்குசெய்யலாமே, இதனை சந்திப்புக்கான ஒழுங்குபடுத்தலாக இல்லாமல் சும்மா குட்டி சந்திப்பாக இருக்கலாம் விரும்பியவர்கள் இணைந்துகொள்ளலாம். வேறு நாடுகளிலும் அப்படித்தானே செய்கிறார்கள், தொலைபேசி ட்விட்டரிலும் பார்க்க நேரிலே இனும் நன்றாக கதைக்க முடியுமல்லவா ? சும்மா ஒரு ஐடியா சொன்னேன், எல்லோரும் சேர்ந்து குமுறிவிடாதீர்கள் :)

கரன் சொல்வது:

ஏன் நீங்கள் "இருக்கிறம்" ற்காக வக்காளத்து வாங்குகிறீர்களோ தெரியவில்லை. அவர்களுக்கு நல்ல விளம்பரம். இனிவரும் காலங்களில் ஒரு நட்புரிமையுடன் வலைப்பதிவர்களின் ஆக்கங்களைச் சுட்டுப் போடுவார்கள். ஒருவரும் குறைசொல்லமுடியாது. "அச்சுவலை"ச் சந்திப்பு என்றுதானே கூப்பிட்டிருந்தார்கள். "அச்சு" நிறைய உரைகள் நிகழ்த்த, "வலை" தனியாகக் கலந்துரையாடிக்கொண்டிருந்தது. "அச்சு" சொல்வது வலைக்குக் கேட்கவில்லை. ஆனால் "அச்சு" சுயவிளம்பரம் தான் செய்துகொண்டிருந்தது என்பது வேறு விடயம். வலை ஏமாற்றத்துடனேயே திரும்பியது. வேண்டுமானால் உங்களையும் லோஷன் அண்ணாவையும் தவிர ஏனைய பதிவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//மதுவதனன் மௌ. / cowboymathu said...
நல்லது எங்கள் அடுத்த சந்திப்பு சிறப்புற நடக்கட்டும்..//

ஆமாம் மது அடுத்த சந்திப்பில் கலக்குவோம்.

வந்தியத்தேவன் சொல்வது:

// யோ வாய்ஸ் (யோகா) said...

ரிப்பீட்டு//

என்ன ரிப்பீட்டா அடுத்த சந்திப்பை ஒழுங்கமைக்க நீங்களும் தயாராகுங்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

// sanjeevan said...
எமது முதலாவது சந்திப்பில் ஒரு டெக்னிக்கல் வேக்சொப் நடாத்தப்போகிறோம் என்று கூறி விட்டு மறந்துவிட்டீர்களா.//

இல்லை மறக்கவில்லை, இருக்கிறம் ஒன்றுகூடலில் கூட பலரிடம் இது பற்றிப் பேசினேன் பெரும்பாலானவர்கள் இரண்டையும் ஒன்றாகச் செய்வோம் என்றார்கள். ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பித்தாயிற்று விரைவில் நல்ல செய்தி வரும் காத்திருங்கள்.

//எம்மைப்போல புதிதாய் வந்தவர்களுக்காக எப்ப பதிவர் சந்திப்பு சீசன் 2 வரும் வந்தியண்ணா.//

நீங்கள் அனைவரும் தயார் என்றால் வெகுவிரைவில் சந்திக்கலாம். என்னிடம் கேட்பதுபோல் ஏனையர்களிடமும் இதே கேள்வியைக் கேளுங்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//Balavasakan said...
அடுத்த பதிவர் சந்திப்பு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்//

வெறும் வாழ்த்துக்கள் தானா? வரமாட்டீர்களா?

வந்தியத்தேவன் சொல்வது:

// கனககோபி said...
ஹலோ...
இதெப்ப நடந்தது???//

முதல் சந்திப்பு முடிந்ததுமே இது நடந்துவிட்டது.

//இது பதிவர் சந்திப்பு இல்லை என்றும் இது இருக்கிறம் ஏற்பாடு செய்த சும்மா ஒரு கலந்துரையாடல் என்றும் எனக்கத் தெரியும் வந்தியண்ணா...//

ஆமாம் என்னுடம் போனில் பேசியபோது பாட்டுப்பாடப்போகின்றேன் என்பது எனக்கு இன்னும் ஞாபகம்.

//ஆனால் எனக்கு ஏமாற்றம் தான்...//

உங்களுக்கு மட்டுமல்ல அனைத்துப் பதிவர்களுக்கும் ஏமாற்றம் தான் காரணம் அவர்கள் எம்மை அழைத்துவிட்டு எங்களின் பிரதிநிதியாக எவரையும் உரையாற்ற அழைக்கவில்லை.

//பதிவர்கள் சார்பாக கதைக்குமாறு எவருக்கும் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை.//

அதே அதே சந்திப்பு முன்னரே இருக்கிறம் நிர்வாகத்திடம் நான், லோஷன், மருதமூரான் வலைப்ப்திவர்கள் சார்பில் இருவரைப் பேச அழைக்கவேண்டும் என கட்டளை இட்டோம்(கவனிக்க கோரிக்கை அல்ல) ஆனால் நடந்ததோ வேறு.

//வலைப்பதிவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமான இனிய சந்திப்பு என்றுவிட்டு வலைப்பதிவர்களுக்கு என்ன செய்தார்கள்?//

வாசிக்க புத்தகமும் உண்ண சிற்றுண்டிகளும் தந்தார்கள்.

//அவர்களது முயற்சியை நான் குறைகூறவில்லை.//

எனக்குத் தெரிந்தவரை இருக்கிறம் செய்யவிருந்த சில விடயங்களை ஒருத்தர் குழப்பிவிட்டார் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கியது. இது பற்றி இருக்கிறம் தன்னிலை விளக்கம் கொடுக்கும் என நினைக்கின்றேன்.

//ஆனால் வலைப்பதிவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமான சந்திப்பு எனப்பெயரிட்டுவிட்டு இருக்கிறமின் கொள்கைவிளக்க சந்திப்பாக மாற்றியதே எனது வருத்தம்.//

உங்களுக்கு மட்டுமல்ல அனைத்துப் பதிவர்களின் வருத்தமும் இதுதான்.

வந்தியத்தேவன் சொல்வது:

// LOSHAN said...
அதே அதே அதே.. நானும் இதையே வேறு விதமா சொல்லி இருக்கிறேன்.. :)//

உங்கள் பதிவு வாசித்தேன், இருக்கிறம் தன்னிலை விளக்கம் கொடுக்கின்றதா எனப் பொறுத்திருந்துபார்ப்போம்.

வந்தியத்தேவன் சொல்வது:

//Paheerathan said...
வந்தி, டிசம்பரில் சந்திப்பை ஏற்ப்பாடு செய்யலாம், அதற்காக கொழும்பில் இருக்கும் பதிவர்கள் வார இறுதிநாட்களில் எங்காவது கடற்கரையிலோ, அலது பூங்காக்களிலோ சந்தித்து கலந்துரையாடி ஏதும் ஒழுங்குசெய்யலாமே, இதனை சந்திப்புக்கான ஒழுங்குபடுத்தலாக இல்லாமல் சும்மா குட்டி சந்திப்பாக இருக்கலாம் விரும்பியவர்கள் இணைந்துகொள்ளலாம். வேறு நாடுகளிலும் அப்படித்தானே செய்கிறார்கள், தொலைபேசி ட்விட்டரிலும் பார்க்க நேரிலே இனும் நன்றாக கதைக்க முடியுமல்லவா ? சும்மா ஒரு ஐடியா சொன்னேன், எல்லோரும் சேர்ந்து குமுறிவிடாதீர்கள் :)//

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி பகீரதன். நாம் முதல் சந்திப்பின் போது பல குட்டிக் குட்டிச் சந்திப்புகள் நடத்தித்தான் அதனை வெற்றிகரமாக செய்துமுடித்தோம். இவை பற்றியே பல பதிவுகள் வந்தன. அதுபோல் இம்முறை ஒழுங்கமைப்பவர்களும் செய்தால் நானும் பங்குகொண்டு என் ஆலோசனைகளைத் தருவேன்.

பதிவுலகில் உள்ள உங்கள் நண்பர்களுடன் முதலில் தொடர்பு கொண்டு ஆராயுங்கள் மீண்டும் கைகோர்ப்போம்.

வந்தியத்தேவன் சொல்வது:

//கரன் said...
ஏன் நீங்கள் "இருக்கிறம்" ற்காக வக்காளத்து வாங்குகிறீர்களோ தெரியவில்லை. //

நான் எங்கே வக்காலத்து வாங்கினேன். நான் ஏற்கனவே கூறியதைப் பதிவர்கள் தவறாகப் புரிந்துகொண்டார்கள் என எழுதினேனே ஒழிய இருக்கிறத்துக்கு வக்காலத்து வாங்கும் ஒரு வரியைக் காட்டுங்கள்.

//வேண்டுமானால் உங்களையும் லோஷன் அண்ணாவையும் தவிர ஏனைய பதிவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.//

இல்லையே நாமும் எங்கள் அதிருப்தியைத் அவர்களிடம் நேரடியாகவே தெரிவித்தோம். இது ஏனைய பதிவர்களுக்கும் தெரியும்.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

//////வந்தியத்தேவன் said...
// யோ வாய்ஸ் (யோகா) said...

ரிப்பீட்டு//

என்ன ரிப்பீட்டா அடுத்த சந்திப்பை ஒழுங்கமைக்க நீங்களும் தயாராகுங்கள்//////////

அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கட்டாயம் செய்வோம்....

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வாய்ஸ் (யோகா) said...

அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கட்டாயம் செய்வோம்....//

ஏனைய நண்பர்களுடன்(நான் உட்பட) ஆலோசித்து காலம், இடம் என்பவற்றை முதலில் ஆராயுங்கள். பின்னர் மற்றவை தானாகவே நடக்கும்.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

////வந்தியத்தேவன் said...

ஏனைய நண்பர்களுடன்(நான் உட்பட) ஆலோசித்து காலம், இடம் என்பவற்றை முதலில் ஆராயுங்கள். பின்னர் மற்றவை தானாகவே நடக்கும்.////

அதை நீங்கள் தான் செய்ய வேண்டும். காரணம் நான் இருப்பது சற்று தூரத்தில்

KANA VARO சொல்வது:

//எனக்குத் தெரிந்தவரை இருக்கிறம் செய்யவிருந்த சில விடயங்களை ஒருத்தர் குழப்பிவிட்டார் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கியது.//

நானும் கேள்விப்பட்டேன். ஆரம்ப ஏற்பாடுகளில் தெளிவின்மை இருக்கிறது... அது தான் குழப்பத்துக்கு காரணம். இளைஞர்கள் ஆரம்பிக்கும் போது பெரியவர்கள் அதற்குள் கைவைத்தால் இப்படி ஆவது வழமை... ஆனாலும் பல பதிவர்கள் முன்னணி பதிவர்களின் "அச்சுவலை சந்திப்பு" பதிவுகளை வாசித்த பின்னும் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று இருக்கிறம் மீது பழி போடுவது நல்லதாக எனக்கு படவில்லை...

Subankan சொல்வது:

அடுத்த சந்திப்புக்களிற்கான ஆயத்தங்கள் செய்ய தயார். உங்கள் ஆலோசனைகள் வேண்டும்.

Unknown சொல்வது:

// Subankan said...
அடுத்த சந்திப்புக்களிற்கான ஆயத்தங்கள் செய்ய தயார். உங்கள் ஆலோசனைகள் வேண்டும். //

அண்ணாவுக்கு ஆதரவு வழங்க, தொள் வழங்க நான் தயார்...