கூடிப் பழகுதலும், அடிக்கடி சந்தித்தலும், ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது. கூடிப் பழகாவிட்டாலும், மனதால், உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு என்கின்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
மனித வாழ்க்கையில் காதலைவிட சிறந்தது எதுவென்றால் அம்மாவின் அன்பிற்க்கு அடுத்ததாக சிலவேளைகளில் அம்மாவின் அன்பைவிட சிறந்தது நட்பாகும்.
பாடசாலைக் காலத்தில் கிடைக்கும் நட்பு மிகவும் அலாதியானது. வாழ்க்கையின் எந்தக் கஸ்டங்களையும் அனுபவிக்காமல் அல்லது புரியாமல் அந்த பச்சிளம் வயதில் ஒருவருடன் ஒருவர் செல்லமாக சண்டைப்படுதல், கோபித்துக்கொண்டு சில நாட்கள் இருந்தாலும் அந்திம காலம் வரை பலருக்கு பாடசாலை நட்பே நீடித்திருக்கின்றது.
என் பாடசாலை நண்பர்கள் பலர் இன்றைக்கு புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வசித்தாலும் தொலைபேசி மூலமும், இணைய அரட்டைகள் மூலமும் எங்கள் நட்புத் தொடர்கின்றது. நாம் பெரும்பாலும் எங்கள் கல்லூரி வீதி இனிய வாழ்க்கையை மீட்டிப்பார்ப்போம்.
இன்னொரு நட்பு வட்டம் ஊரில் உள்ள நண்பர்கள் இவர்களின் நட்பிற்க்கு பெரும்பாலும் வயது எல்லை இல்லை. என்னுடய வயதுப் பொடியள், என்னைவிட சற்று வயது கூடியவர்கள், குறைந்தவர்கள் என இந்த வட்டம் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். ஊரில் நடக்கும் நல்லது, கெட்டதுகள், திருவிழாக்கள், கிரிக்கெட், காற்பந்து என இந்த வட்டத்துடன் அடித்த லூட்டிகள் பசுமையானவை. ஊரை விட்டு வெளியேறிய பின்னர் இவர்களின் தொடர்புகள் பெரிதாக இல்லாவிட்டாலும் மீண்டும் ஊரிற்குச் செல்லும் காலங்களில் பழையபடி சில நாட்கள் கும்மாளம் தான்.
அண்மைக் காலமாக இணையத்தினூடான நட்புகள் அதிகரித்துவந்துள்ளன. இதில் சிலரின் நட்புகள் நேரடியாகவும் சிலரின் நட்புகள் முகமறியாமலும் இருந்தாலும் நட்பு பாராட்டுவதில் எந்தக் குறைகளும் இல்லை.
பெண்களுடனான நட்பானது கொஞ்சம் வித்தியாசமானது. இது கத்தியில் நடப்பது போல் ஆபத்தானது. ஆனாலும் இலாவகமாக இந்த நட்பை நீடிப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள்.
வாழ்க்கையில் கஸ்டமான காலத்தில் கைகொடுப்பது பெரும்பாலும் நட்புத்தான். என்றைக்கும் நல்ல நண்பர்கள் கிடைத்தால் அதனைவிட பெரிய இன்பம் வேறில்லை.
வலைப்பதிய வந்தபின்னர் எல்லைகளற்ற நட்புகள் பல கிடைத்தன. அதிலும் என்னுடைய உளறல்களை வாசிக்க 99 நண்பர்கள் பிந்தொடர்பவர்களாக இருப்பது மிகவும் சந்தோஷமான விடயம். அந்த நண்பர்கள் உட்பட அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.
புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
நட்பாங் கிழமை தரும்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
21 hours ago
13 கருத்துக் கூறியவர்கள்:
//பெண்களுடனான நட்பானது கொஞ்சம் வித்தியாசமானது. இது கத்தியில் நடப்பது போல் ஆபத்தானது. ஆனாலும் இலாவகமாக இந்த நட்பை நீடிப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள். //
சொந்த அனுபவமோ?
ஹி ஹி....
//மனித வாழ்க்கையில் காதலைவிட சிறந்தது எதுவென்றால் அம்மாவின் அன்பிற்க்கு அடுத்ததாக சிலவேளைகளில் அம்மாவின் அன்பைவிட சிறந்தது நட்பாகும். //
காதலா... ம்.. ம்...
அப்பிடி எண்டா என்ன வந்தியண்ணா?
என்ன அர்த்தம்?
விளங்கப்படுத்தேலுமா?
ஆனா நட்புப் பற்றி பிறந்தநாளில் பதிவு பொட்டிருக்கிறியள், உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிச்சவைக்கு இத விட நல் நன்றியறிதல் வேற ஒண்டும் குடுக்கேலாது....
மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்தியண்ணா எனப்படுகின்ற மயூரன் அண்ணா....
இந்தியாவில் வேலை தேடுகிறீர்களா..எந்த துறையாக இருப்பினும் கட்டணமில்லாத சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
http://job2flourish.blogspot.com/
நூறாவது நண்பராக இணைவது பெருமையளிக்கிறது.
பிறந்த நாளில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்தமைக்காக மீண்டும் பதிவினூடாகவும் வாழ்த்துக்கள்!
மூத்த பதிவர் என்பதால அன்பு, காதல், பெண்களின் நட்பு போன்ற விடயங்களை அறிந்துகொள்ள முடிகின்றது. உங்கள் அனுபவங்கள் மூலம் எங்களை வழிநடத்திச் செல்வத்துக்கு நன்றிகள்.
தேடிய தேவதை கிடைத்தாளா?
“நண்பனொருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு
நட்புக்கில்லையே”
நல்ல பதிவு
மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
hi
Happy Birthday wishes....
//மனித வாழ்க்கையில் காதலைவிட சிறந்தது எதுவென்றால் அம்மாவின் அன்பிற்க்கு அடுத்ததாக சிலவேளைகளில் அம்மாவின் அன்பைவிட சிறந்தது நட்பாகும். //
ஆம் உண்மை தான் எந்த ஒரு எதிர்ப்பார்ப்புக்களும் இல்லாதது நட்பு மட்டுமே.
நட்பை பற்றிய அருமையான கருத்துக்களை தெரிவித்துள்ளீர் நன்றிகளும் வாழ்த்துக்களும்
//பெண்களுடனான நட்பானது கொஞ்சம் வித்தியாசமானது. இது கத்தியில் நடப்பது போல் ஆபத்தானது. ஆனாலும் இலாவகமாக இந்த நட்பை நீடிப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள்.//
பெண்களை பற்றிய தவறான கருத்துக்களையே நீங்கள் தெரிவித்து வருகின்றீர் வந்தி அண்ணா, ஒரு சில அனுபவங்களை வைத்து எல்லா பெண்களையும் தப்பாக சொல்வது ஏற்க முடியாதுள்ளது. உங்கள் வரிகள் வருத்தம் :(
hi
Happy Birthday Wishes.
Many Many Happy returns Of The Day.
அட 100 ஆயிடிச்சு அண்ணா
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......
உங்களுக்கு என் பிறந்த நாள் பரிசு என் வலைப்பதிவில் இருக்கின்றது வந்து பெற்றுக்கொள்ளுங்கள்
http://shanthru.blogspot.com/2009/11/blog-post_09.html#
//பெண்களுடனான நட்பானது கொஞ்சம் வித்தியாசமானது. இது கத்தியில் நடப்பது போல் ஆபத்தானது. ஆனாலும் இலாவகமாக இந்த நட்பை நீடிப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள்//
ஹஹஹஹ்
விளங்குது....
ஒரே FB இல வேற இருக்கீங்க....
public ஆஆ கிடக்குது...
நேரில சந்திச்சு கதைப்பம்.....
என்ன மதிரி britan?
இனிய பிறந்ததின வாழ்த்துக்கள் நண்பரே..
Post a Comment