பதிவர் சந்திப்பு
மீண்டும் இன்னொரு இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு. கடந்த ஆகஸ்ட்டில் சந்தித்த நாம் மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 13 ல் சந்திக்கவிருக்கின்றோம். முதலாவது சந்திப்பில் அறிமுகங்களும் சில கலந்துரையாடல்களும் மட்டும் இடம் பெற்றதால் இந்தமுறை மேலும் பல கலந்துரையாடல்களை ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
அடிக்கடி சந்தித்தால் சுவாரசியம் குறைந்துவிடும் என்பதால் தான் 4 மாதத்திற்க்குப் பின்னர் ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் என்பது பதிவுலகில் நீண்டகாலம் இருக்கும் பதிவர்களுக்கு புரியும்.
இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)
காலம் : மார்கழி பதின்மூன்று, மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )
ஏற்கனவே அறிமுகமான நண்பர்களை மீண்டும் சந்திக்கபோகின்றோம் என்பதனால் அந்த நாள் உடனே வராதா? என ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். சந்திப்புத் தொடர்பான மேலதிக விபரங்கள் அடுத்த பதிவில் நாளை வரும்.
மழையோ மழை
கடந்த சில நாட்களாக பெரும்பாலும் இலங்கை முழுவதும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் தலைநகர் கொழும்பில் சில இடங்களில் வெள்ளம் வழமைபோல் தேங்கி நின்றது. டெங்கு, சிக்குன் குனியா போன்றவற்றின் உரிமையாளர்களான நுளம்புகளுக்கு வாடகையற்ற குடியிருப்பாக இந்தப் பகுதிகள் மாறிவிட்டன.
குறிப்பாக கொட்டாஞ்சேனையில் புளுமென்டல் வீதி, தொடர்மாடிகள், ஹெட்டியாவத்தை சந்தியும் அதனை அண்டியபகுதியும், ஜெம்பட்டா வீதி, மோதரையில் பல வீதிகள், வெள்ளவத்தையில் சில வீதிகள் நீரினுள் மூழ்கின. ஒவ்வொரு முறை பெரு மழை பெய்யும் போது இந்த நிலமை ஏற்படுவது வழக்கம் ஆனாலும் ஒவ்வொரு தரமும் இந்தப் பகுதிகளுக்கான மாகாணசபை, மாநகர சபை அங்கத்தவர்கள் இதனைச் சீர் செய்து தருவோம் என உறுதியளிப்பார்கள் ஆனால் பின்னர் மறந்துவிடுவார்கள் (மக்களும் தான்). இம்முறை ஜெம்பட்டா வீதி மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் கூடச் செய்தார்கள். தேர்தல் நேரத்தில் தட்டிகள், சுவரொட்டிகள், வண்ணத் தோரணங்கள் அமைக்கும் பணத்தில் ஒரு தொகைப் பணத்தை வெள்ளத்தைத் தடுக்கப் பயன்படுத்தினால் மக்களுக்கு பேருதவியாக இருக்கும், செய்வார்களா?
ஈரம்
எத்தனையோ நாட்களாக பார்க்க முனைந்தும் பார்க்கமுடியாமல் போன ஈரம் திரைப்படம் ஒருமாதிரி நேற்று சிடியில் பார்த்துமுடித்துவிட்டேன். நீண்ட நாட்களின் பின்னர் நல்லதொரு திரில்லர் படம். ஆனாலும் இடையில் அமானுஷ்யத்தைப் புகுத்தி கொஞ்சம் குழப்பிவிட்டார்கள். ஆவிக்குப் பதிலாக கதாநாயகியின் சகோதரியோ அல்லது தந்தையோ கொலை செய்திருந்தால் நம்பகத் தன்மை அதிகரித்திருக்கும்.
இப்படியான நல்ல சில திரைப்படங்களை ஏன் எங்கள் தியேட்டர்களில் வெளிவிடுவதில்லை.
கோலங்கள்
நேற்றுடன் எத்தனையோ குடும்பப் பெண்கள் நீண்ட பெருமூச்சு விட்டிருப்பார்கள். காரணம் கோலங்கள் மெஹாஹாஹா தொடரின் வில்லன் ஆதியை காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டார்கள். ஆனாலும் தொடரை இன்னும் நீட்டிப்பதற்காகவோ என்னவோ ஆதி நீதிபதியை துப்பாக்கி முனையில் எத்தனையோ காவலர்கள் மத்தியில் கடத்திக்கொண்டுபோய்விட்டார்.
நீதிமன்றக் காட்சியில் அவர் அமைதியாக நிற்கவே அம்மாவிடம் சொன்னேன் "பாருங்கள் ஆதி சிலரைச் சுட்டுவிட்டு எப்படியும் தப்பிப்பான்" என, நான் சொன்னபடியே நடந்துவிட்டது. அனைவராலும் அடுத்து இதுதான் நடக்கபோகின்றது என்ற திரைக்கதை தொல்காப்பியனின் 6 வருடகால கோலங்கள் தொடரின் அனுபவத்தைக் கேள்விக்குறியாக்குகின்றது. எது எப்படியோ இன்னும் சில நாட்களில் இந்த தொடர் முடிந்துவிடும் என நினைக்கின்றேன்.
பின்குறிப்பு : சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் பார்க்கின்ற நாம் முந்தநாள் விளம்பர இடைவேளையின் போது தட்டிக்கொண்டிருக்க சன்னில் கோலங்கள் உச்ச கட்டம் நடந்தது அதனால் தான் கோலங்கள் கொடுமையை பல வருடங்களுக்குப் பின்னர் பார்த்தது.
கிரிக்கெட்
அஹமதபாத் டெஸ்ட் போட்டி சில சர்ச்சைகளுடன் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துவிட்டது. அதே நேரம் கான்பூரில் நேற்றுத் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட்டில் இலங்கை அணியை இந்திய அணி புரட்டி எடுத்துவிட்டது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக சுழல் பந்து வீச்சாளர்களை இந்திய வீரர்கள் நோகடித்துவிட்டார்கள். மிகவும் குறைந்த ஓட்டவீதத்தை கொடுத்த அஞ்சலோ மத்யூசை ஏனோ சங்ககாரா அடிக்கடி பயன்படுத்தவில்லை. மூன்று சுழல் பந்து வீச்சாளர்களுக்குப் பதிலாக 2 பேரை எடுத்திருக்கலாம். ஆனாலும் முரளில் தன் சுழல் மூலம் 2 விக்கெட்டுகளை எடுத்து இனியும் முரளி அணியில் தேவையா? என எழுதும் ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு பதிலடி கொடுத்திருக்கின்றார்.
நியூசிலாந்தில் நடைபெறும் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணித் தலைவர் டேனியல் வெட்டோரி 8 இலக்க வீரராக களம் இறங்கி அதிக ஓட்டம் பெற்ற வீரர் என்ற சாதனையை இன்று புரிந்துள்ளார். ஏற்கனவே ஷேர் வோர்னிடம் இருந்த 2005 என்ற ஓட்டங்களை இன்று தனது 95 ஆவது போட்டியில் வொட்டோரி கடந்தார். அத்துடன் வொட்டோரிக்கு இந்த மைல் கல்லைக் கடக்க வெறும் 57 இனிங்ஸ் மாத்திரமே தேவைப்பட்டது.
எட்டாம் இலக்க துடுப்பாட்டத்தில் பிரகாசித்தவர்களில் முன்வரிசையில் இருப்பவர்கள் அனைவரும் கிரிக்கெட் ஜாம்பவான்களாகும். வொட்டோரி, வோர்ன், சமிந்த வாஸ், ஷோன் போலக், கபில் தேவ், மல்கம் மார்ஷல், வாசிம் அக்ரம், அனில் கும்ளே,சேர் ரிச்சர்ட் ஹட்லி, மார்க் பவுச்சர்.
பின் குறிப்பு : கடந்த 10 நாட்களாக என்னிடம் இருந்து எந்தப் பதிவும் வராததையிட்டு மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும் என்னைத் தேடிய நண்பர்களுக்கு நன்றிகள். பல ஆணிகள், அலவாங்குகள் இருந்தபடியால் வரமுடியவில்லை. அத்துடன் ஒரு கொழும்பிலிருந்து இன்னொரு பிரதேசத்தில் சில நாட்கள் நின்றபடியால் எதுவும் எழுதமுடியவில்லை. அந்த அனுபவங்கள் விரைவில்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
19 hours ago
42 கருத்துக் கூறியவர்கள்:
நீண்ட நாளைக்கு பிறகு சூப், இரண்டாவது டெஸ்ட்டும் டிராவில்தான் முடியும் என நினைக்கிறென்
பதிவர் சந்திப்பு சந்தோஷமான விடயம்,
ஹட்டன் விசிட் ஸ்பெஷல் பதிவிலா?
சொல்ல மறந்துட்டேன், நெஞ்சில பச்சை குத்தின நீல டிரஸ் ஆண்டியின் படத்த நான் பார்க்கல, ஆமா அவங்க யாரு?
உங்கள் வலைப்பூவிற்கு வருபவர்கள் நீண்ட நேரம் உங்கள் பதிவை பார்க்க வேண்டும் என்பதறகாக இறுதியில் சூடாக ஒரு படம் போடுகிறீர்கள் போல...பதிவு வாசிக்க 2 நிமிடம் அந்த படம் பார்க்க ......ஏனண்ணே வருபவர்களை எல்லாம் இப்படி வழிய வைக்கிறீர்கள்.
நான் படத்தை மட்டுதான் பார்த்தேன் (வயசிக் கோளாறு) என்ன படத்திலே ஒரு இடத்திலே (எந்த இடம் என்று கேட்கவேண்டாம்) இருப்பது பிள்ளையாரா. (எனக்கு பிள்ளையார் போன்றுதான் தெரிகிறது) பிள்ளையாரும் அங்கே எல்லாம் இருக்க ஆரம்பித்துவிட்டாரோ?
//அடிக்கடி சந்தித்தால் சுவாரசியம் குறைந்துவிடும் என்பதால் தான் 4 மாதத்திற்க்குப் பின்னர் ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் என்பது பதிவுலகில் நீண்டகாலம் இருக்கும் பதிவர்களுக்கு புரியும்.//
நல்ல விசயம்.... எனக்கு விளங்கிற்றுது.... அப்ப நானும் நிறையக் காலம் பதிவுலகில இருக்கிறன் எண்டு அர்த்தமா?
எங்கட வீட்டுப்பக்கம் மழை பெய்தாலும் பெரிய வெள்ளம் எல்லாம் வரேல....
இந்தியா ரெஸ்ற் போட்டிகள் பார்ப்பதிலிருந்து நான் ஓய்வுபெற்றுவிட்டேன்...
இலங்கைக்கு ஆப்பு நிச்சயம்...
நாளை இலங்கை துடுப்பெடுத்தாடும்போது ஆடுகளத்தில் வெடிப்புகள் எல்லாம் வந்து பந்து அட்டகாசமாத் திரும்பும்... இப்போதே பந்துகள் ஆடுகளத்தில் பணிந்து செல்கின்றன. (keeping low)
ஆப்பு நிச்சயம்...
போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்தால் அது பெருஞ்சாதனை....
ஈரம் படம் பரவாயில்லை எண்டு தான் சொல்றாங்கள்... பாப்பம்....
அமானுசியம் எண்டது தான் என்ன அந்தப் படத்தில இருந்து கொஞ்சம் தள்ளி வச்சிருக்கு... பாப்பம்....
என்னது கோலங்களா? முடியப்போகுதா?
ஏன் உலகம் அழியப்போகுதா?
நான் நினச்சன் தேவயானி அன்ரி பொல்லுப் பிடிக்கும்வரை அது நடக்கும் எண்டு....
கீழ இருக்கிற அன்ரிய எனக்குத் தெரியாது... ஆகவே கருத்தரை ஏதும் இல்ல....
ஆம் நீண்ட நாட்களுக்கு பின்னர் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
மசாலா தகவல் சூப்பர்
யோ நீல நிற அன்ரியின் நீல நிறப் படம் பாத்தனியளோ.. ? :)
ஆ! மீண்டு வந்தமைக்கு நன்றி..
சந்ரு .. பிள்ளையார் கட்டை பிரம்மச்சாரி.. அவரை அதில ஏற்றிவிட்டால் பாவம் அந்தாள் என்ன செய்யும்..
மது மதுதான்.. ஹாஹா
அது பிள்ளையார் இல்லை. ஒரு மீன்... பெயர் மறந்து விட்டது. படமெல்லாம் நடித்திருக்கிறது அந்த மீன்.. :)
//யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:
சொல்ல மறந்துட்டேன், நெஞ்சில பச்சை குத்தின நீல டிரஸ் ஆண்டியின் படத்த நான் பார்க்கல, ஆமா அவங்க யாரு?//
ஹிஹிஹி... நானும் பார்க்கல.
வர முயல்கிறேன் நண்பரே
தூரமும் நேரமும்தான் பிரச்சினை இருப்பினும் கலந்துக் கொள்வதால் பல அனுகூலங்கள் கிட்டும் என நம்புகிறேன்
ம்ம் என்ன பிட்ச் அப்பா தயார் செய்கிறார்கள் இந்தியாவில் இந்த போட்டியும் அதோ கதிதான் போலும்
அப்புறம் அந்த த்ரிஷா படம் சூப்பர்
யோ உங்கள் பதிவு எவ்வளவு சுவாரசியமோ..அதே போல் உங்கள் ரசிகர்களின் பின்னூடமும்...
எனது பின்னூடத்தில் தவறுதலாக "யோ" என கிறுக்கிவிட்டேன், தயவு செய்து "வந்தி" என மாற்றி படிக்கவும்
இப்பயெல்லாம் இலங்கை அரசியல் போல எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு...தலைய சுற்றுது...
இல்ல மது நான் அந்த படத்தை பார்க்கல, அந்தளவுக்கு நான் பெரிய ஆளில்லை.
நான் இன்னும் பச்சிளம் பாலகன்..
நீண்ட நாள்களாக உங்களோடு விவாதிக்க வேண்டும் என் நினைத்திருந்தேன்.. இன்றுதான் அதற்கு வழிதந்ததோ..
சரி.. எதற்காக இறுதியில் ஒரு கவர்ச்சிப்படம்.. ? நல்ல வாசகனுக்கும் உங்களைப் போன்ற தரமான பதிவருக்கும் தேவையற்ற படங்கள் அவை. நன்றாக எழுதியிருக்கின்றீர்கள் என ஆர்வத்தோடு வாசித்துக் கொண்டு போய்க் கொண்டு இருக்கும் போது தேவையற்ற இடத்தில் அந்தப் படங்கள் இருந்து சிந்தனையை மாற்றுகின்றன.
நல்ல வாசகனை உங்களது எழுத்துக்கள் எப்போதும் கவரும்.. ஆனால் கவர்ச்சிப்படங்களை வைத்து வாசகனைக் கவரமுற்படுவது உங்களது சிறந்த எழுத்துத் திறனினை நீங்கள் தரம் இறக்குவதாகத் தோன்றுகின்றது.
“சூப்” என்னும் தலைப்புக்கொண்ட பதவுகளிலேயே அதிகமாக கவர்ச்சிப் படங்களை இட்டுள்ளீர்கள். ஆனால் தேவையற்றதாகத் தோன்றுகின்றது.
நீண்ட நாட்களாக இதனைப் பின்னுட்டமிடவேண்டும் என்று தோன்றியது.. உங்களின் வாசகனின் இந்தப் பின்னுட்டத்தை திறந்து மனதுடன் ஏற்றுக் கொள்ளும் நல்ல பதிவர் நீங்கள் என்று தெரியும். அதனால்தான் எனது கருத்தை உரிமையுடனும் உறுதியுடனும் சொன்னேன்.
Reputation is important. நல்ல தரமான பதிவர் ஒருவரின் Reputation தேவையற்ற விதத்தில் குறைந்து போவதை அனுமதிக்க விருப்பமில்லை..
கலக்கல் சூப்!
//நான் படத்தை மட்டுதான் பார்த்தேன் (வயசிக் கோளாறு) என்ன படத்திலே ஒரு இடத்திலே (எந்த இடம் என்று கேட்கவேண்டாம்) இருப்பது பிள்ளையாரா. (எனக்கு பிள்ளையார் போன்றுதான் தெரிகிறது) பிள்ளையாரும் அங்கே எல்லாம் இருக்க ஆரம்பித்துவிட்டாரோ?//
பக்தி முத்திப்போனா இப்படித்தானாம். பார்த்து
//யோ வொய்ஸ் (யோகா) said...
நீண்ட நாளைக்கு பிறகு சூப், இரண்டாவது டெஸ்ட்டும் டிராவில்தான் முடியும் என நினைக்கிறென் //
ஆமாம் யோகா கடந்த 2 வாரமாக சூப் கொடுக்கவில்லை. எல்லாம் ஆணிப் பிரச்சனைகள் தான். ம்ம்ம் டெஸ்ட் சிலவேளைகளில் முடிவையும் எட்டலாம்.
//பதிவர் சந்திப்பு சந்தோஷமான விடயம்,/
வருவீர்கள் தானே. மீண்டும் சந்திப்போம்.
//ஹட்டன் விசிட் ஸ்பெஷல் பதிவிலா?//
ஆமாம் சில விடயங்கள் தனிப்பதிவாக எழுதவேண்டியிருக்கின்றது.
//யோ வொய்ஸ் (யோகா) said...
சொல்ல மறந்துட்டேன், நெஞ்சில பச்சை குத்தின நீல டிரஸ் ஆண்டியின் படத்த நான் பார்க்கல, ஆமா அவங்க யாரு?//
சரி சரி உங்களைப் போன்ற பபாக்கள் ஒருநாளும் இப்படியான ஆண்டியின் படத்தைப் பார்க்கமாட்டியள் என்பது தெரியும். அவரின் பெயர் திரிஷா.
// Balavasakan said...
உங்கள் வலைப்பூவிற்கு வருபவர்கள் நீண்ட நேரம் உங்கள் பதிவை பார்க்க வேண்டும் என்பதறகாக இறுதியில் சூடாக ஒரு படம் போடுகிறீர்கள் போல...பதிவு வாசிக்க 2 நிமிடம் அந்த படம் பார்க்க ......ஏனண்ணே வருபவர்களை எல்லாம் இப்படி வழிய வைக்கிறீர்கள்.///
அப்படியில்லை ஆரம்பத்தில் அந்தப் படம் போட்டதன் அர்த்தமே வேறை காரணம் இப்படியான பல் சுவைப் பதிவுகளில் சிலர் ஜோக் எழுதியிருந்தார்கள். அதெல்லாம் எனக்கு வராது அல்லது தெரியாது என்பதால் சும்மா ஒரு கவர்ச்சிக்காக இருக்கட்டுமே என படம் போட்டேன். பின்னர் அது தொடருகின்றது. இனி அதனை நிறுத்திவிடலாம் என நினைக்கின்றேன்.
ஆனாலும் பலருக்கு படம் பிடித்துப்போகின்றது. இந்தப் படம் பார்ப்பதற்காகவே சில நண்பர்கள் ஒவ்வொரு புதனும் காத்திருகின்றார்கள்.
//சந்ரு said...
நான் படத்தை மட்டுதான் பார்த்தேன் (வயசிக் கோளாறு) //
உங்கள் நேர்மை எனக்குப் பிடித்திருக்கின்றது சந்ரு.
//என்ன படத்திலே ஒரு இடத்திலே (எந்த இடம் என்று கேட்கவேண்டாம்) இருப்பது பிள்ளையாரா. (எனக்கு பிள்ளையார் போன்றுதான் தெரிகிறது) பிள்ளையாரும் அங்கே எல்லாம் இருக்க ஆரம்பித்துவிட்டாரோ?//
அது பிள்ளையார் அல்ல மீன். எதற்க்கும் கண்ணை ஒருதரம் நல்ல கண்டொக்டரிடம் காட்டவும்.
//கனககோபி said...
நல்ல விசயம்.... எனக்கு விளங்கிற்றுது.... அப்ப நானும் நிறையக் காலம் பதிவுலகில இருக்கிறன் எண்டு அர்த்தமா?//
அப்படியா சந்தோஷம். ஆமாம் ஆமாம் நீங்களும் நிறையக் காலம் இருக்கின்றீர்கள். அந்த வரிகள் புரிபவர்களுக்குப் புரிந்தால் சரி.
//எங்கட வீட்டுப்பக்கம் மழை பெய்தாலும் பெரிய வெள்ளம் எல்லாம் வரேல....//
நீங்கள் இருக்கும் போது எப்படி வெள்ளம் வரும் வருகின்ற வெள்ளத்தில் நீங்கள் இறங்கினால் சுனாமிதான் வரும்.
//இந்தியா ரெஸ்ற் போட்டிகள் பார்ப்பதிலிருந்து நான் ஓய்வுபெற்றுவிட்டேன்...
இலங்கைக்கு ஆப்பு நிச்சயம்...//
டெஸ்ட் போட்டிகளை ஹைலைட்சில் பார்க்கும் போது போரடிக்கின்றத. இலங்கைக்கு ஆப்பு வாங்கிக்கொடுக்க சங்கா தயாராக இருக்கின்றார்.
//ஈரம் படம் பரவாயில்லை எண்டு தான் சொல்றாங்கள்... பாப்பம்....
அமானுசியம் எண்டது தான் என்ன அந்தப் படத்தில இருந்து கொஞ்சம் தள்ளி வச்சிருக்கு... பாப்பம்....//
ஆமாம் இவருக்கு அமானுஷ்யம் என்றால் பயமோ.
//என்னது கோலங்களா? முடியப்போகுதா?
ஏன் உலகம் அழியப்போகுதா?
நான் நினச்சன் தேவயானி அன்ரி பொல்லுப் பிடிக்கும்வரை அது நடக்கும் எண்டு....//
நானும் அப்படித் தான் நினைத்தேன் ஆனால் தொல்காப்பியனுக்கு இன்னொரு மெஹா தொடர் இயக்கும் வாய்ப்பு வந்ததால் கோலத்தை முடிக்கப்போகின்றாரம்.
//கீழ இருக்கிற அன்ரிய எனக்குத் தெரியாது... ஆகவே கருத்தரை ஏதும் இல்ல....//
உங்கள் பேர்சில் இந்த ஆண்டியின் படம் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்.
//ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...
ஆம் நீண்ட நாட்களுக்கு பின்னர் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி//
நன்றிகள் கீர்த்தி உங்கள் ஊருக்கும் போயிருந்தேன் அழகான ஊர்.
//மசாலா தகவல் சூப்பர்//
நன்றி நன்றி
//மதுவதனன் மௌ. / cowboymathu said...
யோ நீல நிற அன்ரியின் நீல நிறப் படம் பாத்தனியளோ.. ? :)//
அக்மார்க் மதுவின் ஸ்டைல்.
// புல்லட் said...
ஆ! மீண்டு வந்தமைக்கு நன்றி..//
நன்றிகள் உங்கள் அக்கறைக்கு,
//சந்ரு .. பிள்ளையார் கட்டை பிரம்மச்சாரி.. அவரை அதில ஏற்றிவிட்டால் பாவம் அந்தாள் என்ன செய்யும்.. //
தம்பி கடவுளுடன் சேட்டை வேண்டாம் கண்ணைக் குத்திவிடும்.
//மது மதுதான்.. ஹாஹா//
வழிமொழிகின்றேன்.
//ஊர்சுற்றி said...
ஹிஹிஹி... நானும் பார்க்கல.//
ஆமாம் நீங்கள் ஊர் சுற்றி என்பதால் இதெல்லாம் ஜூஜிப்பி
//சயந்தன் said...
அது பிள்ளையார் இல்லை. ஒரு மீன்... பெயர் மறந்து விட்டது. படமெல்லாம் நடித்திருக்கிறது அந்த மீன்.. :)//
தகவல்களுக்கு நன்றிகள் சயந்தன். அந்த மீனின் பெயர் கோல்ட் பிஸ்சோ.
//தர்ஷன் said...
வர முயல்கிறேன் நண்பரே
தூரமும் நேரமும்தான் பிரச்சினை இருப்பினும் கலந்துக் கொள்வதால் பல அனுகூலங்கள் கிட்டும் என நம்புகிறேன் //
வாருங்கள் சென்ற முறையும் உங்களால் வரமுடியவில்லை.
//ம்ம் என்ன பிட்ச் அப்பா தயார் செய்கிறார்கள் இந்தியாவில் இந்த போட்டியும் அதோ கதிதான் போலும்//
பிட்ச் எப்படியிருந்தாலும் 2 அணிகளும் அடித்து ஆடவேண்டியதுதான்.
//அப்புறம் அந்த த்ரிஷா படம் சூப்பர்//
நன்றிகள் ஆனால் எனக்கு திரிஷா பிடிக்காது.
//தர்ஷன் said...
வர முயல்கிறேன் நண்பரே
தூரமும் நேரமும்தான் பிரச்சினை இருப்பினும் கலந்துக் கொள்வதால் பல அனுகூலங்கள் கிட்டும் என நம்புகிறேன் //
வாருங்கள் சென்ற முறையும் உங்களால் வரமுடியவில்லை.
//ம்ம் என்ன பிட்ச் அப்பா தயார் செய்கிறார்கள் இந்தியாவில் இந்த போட்டியும் அதோ கதிதான் போலும்//
பிட்ச் எப்படியிருந்தாலும் 2 அணிகளும் அடித்து ஆடவேண்டியதுதான்.
//அப்புறம் அந்த த்ரிஷா படம் சூப்பர்//
நன்றிகள் ஆனால் எனக்கு திரிஷா பிடிக்காது.
// யசோ...அன்பாய் உரிமையோடு கரனிடமிருந்து... said...
யோ உங்கள் பதிவு எவ்வளவு சுவாரசியமோ..அதே போல் உங்கள் ரசிகர்களின் பின்னூடமும்...//
நானும் யோவின் பதிவுகளின் ரசிகன்
//யசோ...அன்பாய் உரிமையோடு கரனிடமிருந்து... said...
எனது பின்னூடத்தில் தவறுதலாக "யோ" என கிறுக்கிவிட்டேன், தயவு செய்து "வந்தி" என மாற்றி படிக்கவும்//
பரவாயில்லை விடுங்கள் கரன் இப்படி நீங்கள் குழம்ப திரிஷாவும் ஒரு காரணம் என நினைக்கின்றேன்.
//இப்பயெல்லாம் இலங்கை அரசியல் போல எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு...தலைய சுற்றுது...//
இலங்கை அரசியலை விட எதிர்க்கட்சி முகாமில் தான் குழப்பம் அதிகம்.
//யோ வொய்ஸ் (யோகா) said...
இல்ல மது நான் அந்த படத்தை பார்க்கல, அந்தளவுக்கு நான் பெரிய ஆளில்லை.
//
நம்பிட்டோம்.
//நான் இன்னும் பச்சிளம் பாலகன்..//
நம்பமுடியவில்லை வில்லை வில்லை
//யோ வொய்ஸ் (யோகா) said...
இல்ல மது நான் அந்த படத்தை பார்க்கல, அந்தளவுக்கு நான் பெரிய ஆளில்லை.
//
நம்பிட்டோம்.
//நான் இன்னும் பச்சிளம் பாலகன்..//
நம்பமுடியவில்லை வில்லை வில்லை
அடிக்கடி சந்தித்தால் சுவாரசியம் குறைந்துவிடும் என்பதால் தான் 4 மாதத்திற்க்குப் பின்னர் ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் என்பது பதிவுலகில் நீண்டகாலம் இருக்கும் பதிவர்களுக்கு புரியும்//
ஆகா.. :) உண்மை..
மழை கொடுமை.. எங்கள் அலுவலகப் பக்கமும் உள்ளே வரை வெள்ளம் வந்து ஹாய் சொல்லிப் போனது..
//இம்முறை ஜெம்பட்டா வீதி மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் கூடச் செய்தார்கள்.//
இப்பவாவது இறங்கினார்களே..
ஓகோ.. சோ மீண்டும் நனைந்து 'இருக்கிறீர்கள்'? ஈரம் பார்த்தது சொன்னேன்.. ;)
நீங்களும் அலங்கோலங்கள் பார்க்கிறீர்களோ? எங்கள் வீட்டில் நான் தடை போட்டுவிட்டேன்.. மனைவிக்கும் பிடிக்காது..
சயந்தன் சொன்ன அந்த மீன் நெமோ தானே?
துள்ளி விளையாடும் இடத்தைப் பாருங்களேன்.. குறும்புக்கார மீன்..
வந்தி, நான் மீன் மட்டும் தான் பார்த்தேன்..
//Subankan said...
கலக்கல் சூப்!//
நன்றிகள்
//பக்தி முத்திப்போனா இப்படித்தானாம். பார்த்து//
ஹாஹா அவர் திரிஷாவின் வடிவிலே ஆண்டவனைத் தரிசிப்பார். யார் யார் சிவம் நீ நான் திரிஷா அனைவரும் சிவம்.
// வந்தியத்தேவன் said...
அப்படியா சந்தோஷம். ஆமாம் ஆமாம் நீங்களும் நிறையக் காலம் இருக்கின்றீர்கள். அந்த வரிகள் புரிபவர்களுக்குப் புரிந்தால் சரி. //
விளங்கும் திறன் இருப்பவர்களுக்கு நாம் ஏன் அண்ணா இப்படி விளக்கம் சொல்லவேண்டும்?
//நீங்கள் இருக்கும் போது எப்படி வெள்ளம் வரும் வருகின்ற வெள்ளத்தில் நீங்கள் இறங்கினால் சுனாமிதான் வரும்.//
ஆகா...
எங்கட பக்கம் வெள்ளம் வரவே இல்ல...
அதால சுனாமி ஆபத்து இல்ல....
//டெஸ்ட் போட்டிகளை ஹைலைட்சில் பார்க்கும் போது போரடிக்கின்றத. இலங்கைக்கு ஆப்பு வாங்கிக்கொடுக்க சங்கா தயாராக இருக்கின்றார்.//
//ஆமாம் இவருக்கு அமானுஷ்யம் என்றால் பயமோ. //
அப்பிடியில்ல....
நம்பிக்கை இல்லாத ஒரு விசயத்த பாக்கிறதில்ல எண்ட ஒரு வரட்டுக் கெளரவம் தான்... :)
//உங்கள் பேர்சில் இந்த ஆண்டியின் படம் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல். //
என்ர பேர்சில் என்ர படம் கூட இல்ல... இதுக்குள்ள அன்ரிமாரின்ர, அங்கிள்மாரின்ர படங்கள் எனக்கென்னத்துக்கு,..
// சுபானு said...
எதற்காக இறுதியில் ஒரு கவர்ச்சிப்படம்.. ? நல்ல வாசகனுக்கும் உங்களைப் போன்ற தரமான பதிவருக்கும் தேவையற்ற படங்கள் அவை. நன்றாக எழுதியிருக்கின்றீர்கள் என ஆர்வத்தோடு வாசித்துக் கொண்டு போய்க் கொண்டு இருக்கும் போது தேவையற்ற இடத்தில் அந்தப் படங்கள் இருந்து சிந்தனையை மாற்றுகின்றன. //
உங்கள் நேர்மையான கருத்துக்களுக்கு நன்றிகள் சுபானு.
பாலவாசகனுக்கு இட்ட பின்னூட்டம் இது
//ஆரம்பத்தில் அந்தப் படம் போட்டதன் அர்த்தமே வேறை காரணம் இப்படியான பல் சுவைப் பதிவுகளில் சிலர் ஜோக் எழுதியிருந்தார்கள். அதெல்லாம் எனக்கு வராது அல்லது தெரியாது என்பதால் சும்மா ஒரு கவர்ச்சிக்காக இருக்கட்டுமே என படம் போட்டேன். பின்னர் அது தொடருகின்றது. இனி அதனை நிறுத்திவிடலாம் என நினைக்கின்றேன்.
ஆனாலும் பலருக்கு படம் பிடித்துப்போகின்றது. இந்தப் படம் பார்ப்பதற்காகவே சில நண்பர்கள் ஒவ்வொரு புதனும் காத்திருகின்றார்கள்.//
நிச்சயமாக நீங்கள் சொல்வது போல் இந்தப் படங்களினால் நான் சொல்லிய சில காத்திரமான விடயங்கள் அடிப்பட்டுப்போனதை நானே உணர்ந்துள்ளேன். இனி வரும் காலங்களில் படங்களை தனியாக ஒரு சும்மா சுவாரசியமான பதிவாக இட எண்ணியுள்ளேன். என்னுடைய வலை ஒரு பல்சுவைக் கதம்பமாக இருக்கவேண்டும் என்பதாலேயே பலதும் பத்தும் பெரும்பாலும் மொக்கைகளுடன் எழுதுகின்றேன். அதனால் தான் இடைக்கிடை படப் பதிவுகளும் வந்துபோகின்றன.
//நல்ல வாசகனை உங்களது எழுத்துக்கள் எப்போதும் கவரும்.. ஆனால் கவர்ச்சிப்படங்களை வைத்து வாசகனைக் கவரமுற்படுவது உங்களது சிறந்த எழுத்துத் திறனினை நீங்கள் தரம் இறக்குவதாகத் தோன்றுகின்றது. //
வாசகனைக் கவரும் ஒருவிதமான வியாபாரத் அல்லது விளம்பரத் தந்திரமாகவே இந்தப் படங்கள் இடப்பட்டன. அதே நேரம் என்னுடைய எழுத்துகளை ரசிக்கின்றவர்கள் இப்படியான சில அபத்தங்களையும் ரசிக்கின்றார்கள். காரணம் எப்போதும் பதிவுகளில் காத்திரமான விடயங்கள் இருந்தால் பொழுதுபோக்கிற்க்கு வாசிப்பவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும் அதனால் தான் என் உளறல்கள் எப்போதும் பலதும் பத்துமாக இருக்கின்றன.
//“சூப்” என்னும் தலைப்புக்கொண்ட பதவுகளிலேயே அதிகமாக கவர்ச்சிப் படங்களை இட்டுள்ளீர்கள். ஆனால் தேவையற்றதாகத் தோன்றுகின்றது.//
சூப்பில் மட்டும் தான் கவர்ச்சி அல்லது நடிகைகளின் படம். மற்றும் படி சினிமா செய்திகள் அல்லது விமர்சனங்கள் எழுதினால் படம் வரும்.
//நீண்ட நாட்களாக இதனைப் பின்னுட்டமிடவேண்டும் என்று தோன்றியது.. உங்களின் வாசகனின் இந்தப் பின்னுட்டத்தை திறந்து மனதுடன் ஏற்றுக் கொள்ளும் நல்ல பதிவர் நீங்கள் என்று தெரியும். அதனால்தான் எனது கருத்தை உரிமையுடனும் உறுதியுடனும் சொன்னேன். //
உங்கள் நேர்மைக்கு மீண்டும் நன்றிகள்.
//Reputation is important. நல்ல தரமான பதிவர் ஒருவரின் Reputation தேவையற்ற விதத்தில் குறைந்து போவதை அனுமதிக்க விருப்பமில்லை..//
உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு நன்றிகள். என்றைக்கும் என்னுடைய வாசகர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை மதிப்பவன் நான் அதனால் உங்கள் வேண்டுகோளின் படி இனி சூப்பில் படம் வராது.
// LOSHAN said...
ஆகா.. :) உண்மை.. //
நன்றி நன்றி
//மழை கொடுமை.. எங்கள் அலுவலகப் பக்கமும் உள்ளே வரை வெள்ளம் வந்து ஹாய் சொல்லிப் போனது..//
அப்படியா உங்களை வெள்ளம் அடித்துச் செல்லாது சதீஸ் தான் பாவம்.
//இப்பவாவது இறங்கினார்களே..//
ஆமாம் அவர்கள் இடைக்கிடை இறங்குவார்கள். எல்லாம் தேர்தல் காய்ச்சல்.
//ஓகோ.. சோ மீண்டும் நனைந்து 'இருக்கிறீர்கள்'? ஈரம் பார்த்தது சொன்னேன்.. ;)//
ஆமாம் ஆமாம் நீண்ட நாட்களின் பின்னர் நனைந்தேன்.
//நீங்களும் அலங்கோலங்கள் பார்க்கிறீர்களோ? எங்கள் வீட்டில் நான் தடை போட்டுவிட்டேன்.. மனைவிக்கும் பிடிக்காது.. //
நான் பார்ப்பதில்லை ஆரம்பத்தில் சும்மா பார்த்தேன் இப்போ கடைசிக்காட்சிகள் பார்கின்றேன். நான் ரசித்துப் பார்த்த மெஹா தொடர் மர்மதேசம், ருத்ரவீணை, இயந்திரப் பறவை.
//சயந்தன் சொன்ன அந்த மீன் நெமோ தானே?
துள்ளி விளையாடும் இடத்தைப் பாருங்களேன்.. குறும்புக்கார மீன்..//
ஹாஹா அந்த மீன் தான். அந்த மீன் பருத்தித்துறை மீன் என நினைக்கின்றேன் காரணம் பருத்தித்துறைக் கடலில் தான் பாறைகள் அதிகம்.
//வந்தி, நான் மீன் மட்டும் தான் பார்த்தேன்..//
நான் நம்பிட்டேன்.
எனது பின்னுடுட்டத்தை கருத்திலெடுத்து நடைமுறைப்படுத்தியதற்கு மிக்க நன்றிகளுடன் மகிழ்ச்சி...
மஜா வந்தியின் பாதையை திசை திருப்பிய 'நேர்மையான' சுபானுவுக்கு எதிராக இன்று வெள்ளவத்தையில் கோபி, கண்டியில் யோ, கொட்டாஞ்சேனையில் வந்தி (ஹீ ஹீ)தலைமையில் கடையடைப்பு +ஆர்ப்பாட்டம்..
மஜா வந்தியின் பாதையை திசை திருப்பிய 'நேர்மையான' சுபானுவுக்கு எதிராக இன்று வெள்ளவத்தையில் கோபி, கண்டியில் யோ, கொட்டாஞ்சேனையில் வந்தி (ஹீ ஹீ)தலைமையில் கடையடைப்பு +ஆர்ப்பாட்டம்..
////LOSHAN சொல்வது:
மஜா வந்தியின் பாதையை திசை திருப்பிய 'நேர்மையான' சுபானுவுக்கு எதிராக இன்று வெள்ளவத்தையில் கோபி, கண்டியில் யோ, கொட்டாஞ்சேனையில் வந்தி (ஹீ ஹீ)தலைமையில் கடையடைப்பு +ஆர்ப்பாட்டம்..////
படம் போடுவது ஒன்றும் தப்பில்லை என்கிறது என்னுடைய மனது. ஆசிரியரின் முடிவே இறுதியானது. ஹஹஹஹ
Post a Comment