தமிழ்மணம் மனுத் தாக்கல்
தமிழ்மணத்தின் இந்தவருடத்திற்கான தமிழ்மணம் விருதுகள் அறிவிக்கப்பட்டு நானும் என்னுடைய 2 இடுகைகளை பரிந்துரைத்திருக்கின்றேன். சென்ற ஆண்டு விருதுக்கு அனுப்பிய என்னுடைய இரண்டு பதிவுகளும் முதல் 10 இடங்களுக்குள் வந்தபடியால் இந்த ஆண்டும் என்னுடைய பதிவுகள் இரண்டினை அனுப்பியுள்ளேன்.
விருது கிடைக்குதோ இல்லையோ நானும் போட்டியில் பங்குபற்றினான் என்ற ஆத்ம திருப்திக்காகவே இம்முறையும் பழம் தின்று கொட்டை போட்ட பிரபல, மூத்த பதிவர்களுடன் போட்டிக்கு வந்துள்ளேன். சினிமா, விளையாட்டு, நகைச்சுவை என இந்த வருடம் பல பதிவுகள் எழுதினாலும் போட்டிக்கு அனுப்பும் தரத்தில் உள்ள இரண்டு பதிவுகளை செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் மற்றும் அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவுகளில் போட்டிக்கு அனுப்பியிருக்கின்றேன்.
செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் பிரிவில் வெடித்து கிளம்பிய புவனேஸ்வரியும், அடக்கி வாசித்த ஊடகங்களும் என்ற பதிவையும் அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவில் மாற்றான் மனை கவர்தல் - தகாமுறைத் துணைகவரல் என்ற பதிவினையும் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். பதிவுகள் உங்களைக் கவர்ந்தால் ஓட்டளியுங்கள். சிறப்பான படைப்புகளுக்கு ஓட்டளியுங்கள்.
தவறான விளம்பரம்
சில நாட்களுக்கு முன்னர் ஒரு பிளேட்டிற்கான விளம்பரத்தைத் தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ந்துபோனேன். இரண்டு அழகான இளம் பெண்கள் தமக்குள் பேசிக்கொள்கின்றார்கள். ஒருவர் சொல்கின்றார் தன்னுடைய காதலன் தாடியுடன் சவரம் செய்யாமல் வந்தால் தான் அவருடன் வெளியில் செல்லமாட்டேன் எனக்குச் செல்ல வெட்கமாக இருக்கின்றது, மற்றொருவரோ அவர் என்னுடைய வீட்டிற்க்கு வருவதாகச் சொல்லியுள்ளார் தாடி மீசையுடன் வந்தால் உள்ளே அனுமதிக்க மாட்டேன் இப்படி அந்த இரண்டு பெண்களும் தாடி, மீசையுடன் இருக்கும் ஆண்களை விரும்பவில்லை என்கின்றார்கள்.
அடுத்த காட்சியில் அவர்களின் காதலர்கள் மூன்று நாள் தாடி மீசையுடன் தங்களுக்குள் தொலைபேசியில் பேசிக்கொள்கின்றார்கள். தங்கள் காதலிகள் தங்களை இந்தக் கோலத்தில் விரும்பவில்லை எனவும் ஆகவே தாம் சவரம் செய்துகொண்டு செல்லவேண்டும் எனவும் அதற்க்குச் சிறந்த பிளேடு இதுதான் என ஒரு குறிப்பிட்ட பிளேடை விளம்பரப்படுத்துகின்றார்கள். அவர்கள் கிளீஸ் சேவ் செய்து காதலிகளைச் சந்திக்கும் போது இவர்களின் காதலிகள் மிகவும் உற்சாகம் அடைகின்றார்கள். இதுதான் அந்த விளம்பரம்.
இந்த விளம்பரத்தின் மூலம் தாடி, மீசையுடன் இருக்கும் ஆண்களை கேவலப்படுத்துவதுடன் சவரம் செய்தால் தான் காதலியுடன் உல்லாசமாக இருக்கலாம் என்ற தவறனா கருத்தையும் விளம்பரமூடு பரப்புகின்றார்கள். இந்த விளம்பரத்தை யூடூயூப்பில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.
கிரிக்கெட்
நேற்றைய ராஜ்கொட் போட்டியானது ரன் மழையில் மூழ்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்பமே அதிரடியாக இருக்க சேவாக் அன்வரின் சாதனையை முறியடித்து 200 ஓட்டங்களைக் கடப்பாரா எனப் பலரும் எதிர்பார்க்க டெஸ்ட் போட்டியில் எப்படி 300 ஓட்டங்களைக் கடக்கமுடியாமல் அவட்டாகினாரோ அப்படியே நேற்றும் நடந்தது.
அதேபோல் இரண்டாம் இனிங்கிசில் இலங்கை அணியும் அதே அதிரடியுடன் ஆடியது, சேவாக்கைப் போல் டில்ஷான் அன்வரின் சாதனையை முறியடிப்பார் என நம்பிக்கொண்டிருக்க அன்வரின் சாதனை மீண்டும் தப்பியது. இறுதியில் இந்திய அணி இலங்கைப் பின்வரிசை வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தினால் வென்றுவிட்டது. இரண்டு அணியின் பந்துவீச்சாளர்களும் வள்ளல்களாக மாறியிருந்தார்கள். நல்லகாலம் இந்திய அணி வெறும் 3 ஓட்டங்களினால் தான் வென்றது இல்லையென்றால் இந்தப் பிட்ச் போட்டிக்கு சரியில்லை,பிட்சை வைத்துதான் இந்திய அணி வென்றது எனப் பொருள் பட விமர்சனம் பலரால் எழுப்பப்பட்டிருக்கும்.
ஒரு குட்டிக் கதை
அண்மையில் சந்தித்த என்னுடைய நண்பர் ஒருவர் கொஞ்சம் சோகமாக இருந்தார் ஏனென்று கேட்க தன் சோகக் கதையைச் சொன்னார். அண்மையில் அவரின் காதலியின் பிறந்தநாள் வந்தது. இருவரும் ஒரிடத்தில் சந்தித்தார்கள், என் நண்பன் தன் கையில் இருந்த அன்புப் பரிசை கொடுத்து வீடு சென்றுதான் பிரிக்கவேண்டும் என்ற அன்புக் கட்டளையும் இட்டான். அவனின் செல்லச் சிரிப்பில் மயங்கிய நண்பனின் காதலியும் தன்னுடைய பரிசாக ஒரு பறக்கும் முத்தத்தை நண்பனுக்கு வழங்கிவிட்டு அதே இடத்தில் பிரிக்க முயற்சிக்க நண்பனோ விடாப்பிடியாக இங்கே பிரிக்கவேண்டாம் வீட்டில் பிரிக்கவேண்டும் என மீண்டும் வற்புறுத்த அவனின் காதலியோ அவனின் அன்புக்காக வீட்டில் சென்று ஏதோ மோதிரமோ அல்லது மொபைல் போனோ உள்ளே இருக்கும் என்ற ஆவலில் பிரிக்க உள்ளே இருந்ததோ இரண்டே இரண்டே இஞ்சி பிஸ்கட் மாத்திரம் இருந்தது. அடுத்த நாளே என் நண்பனை அவள் கேட்டாளாம் "ஏன்டா பரதேசி உனக்கு இஞ்சி பிஸ்கட் தான் கிடைத்ததா? அட்லீஸ்ட் ஒரு லெமன் பப்பாவது கிடைக்கவில்லையா?". சாடிக்கு ஏற்ற மூடி ஹிஹிஹி. (உண்மைக் கதை )
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
19 கருத்துக் கூறியவர்கள்:
தமிழ்மணம் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா...
பதிவுகளின் தரத்திற்கு ஏற்ப வாக்குகள் அளிக்கப்படும் என்று நம்புகிறேன்....
பார்ப்போம்...
தாடியா? ஐயோ கொடுமை...
எனக்கு உந்தப் பிரச்சினை எல்லாம் இல்ல எண்டாலும் பிரென்ச் கட் வைத்துக் கொண்டு திரிகின்ற இளமையான மனிதர்களுக்கு கோபம் வருமே?
இலங்கை விளம்பரமா?
ராஜ்கோட் போட்டியை முழுமையாகப் பார்க்க முடியாவிட்டாலும் போட்டி எரிச்சலாக இருந்தது,
இப்படியே ஆடுகளங்களைத் தொடர்ந்து தயாரித்து கிறிக்கெற்றை சவக்குழிக்குள் புதைத்துவிடுங்கள் இந்திய கிறிக்கெற் சபையினரே....
வெறும் இஞ்சி பிஸ்கற்றா?
சிலவேளை இஞ்சி பிஸ்கற் தின்றதால் இஞ்சி தின்ற மங்கி போல் ஆகிவிட்டாரோ என்வோ?
உங்கள் நண்பர்கள் எல்லோரும் உங்களைப் போலவே இருக்கிறார்களே...
சாடிக்கு ஏற்ற மூடிகள்...
பொண்டிங் கட் கைத்துக்கொண்டு திரிபவர்களுக்கு உந்தத் தாடி விளம்பரம் எரிச்சல் ஊட்டுவதில் ஆச்சரியம் இல்லைதான்.
//ராஜ்கோட் போட்டியை முழுமையாகப் பார்க்க முடியாவிட்டாலும் போட்டி எரிச்சலாக இருந்தது,
இப்படியே ஆடுகளங்களைத் தொடர்ந்து தயாரித்து கிறிக்கெற்றை சவக்குழிக்குள் புதைத்துவிடுங்கள் இந்திய கிறிக்கெற் சபையினரே.//
அப்படியெல்லாம் கூறிவிட்டு தப்ப முயலவில்லை. இறுதிவரை போட்டி விறுவிறுப்பாக இருந்தது. இறுதி ஓவரில் நகத்தைக் கடிக்காத குறைதான். இப்பபடி ஒரு போட்டி பார்க்க சந்தர்ப்பம் வாய்ப்பது அரிது. எனக்கு வெற்றி, தோல்வி, சவக்குளி எல்லாம் தெரியாது. விறுவிறுப்பாக இருந்தாலே போதும்.
வேட்டைக்காரி என்ன புலித்தொல்லை ஆடை போட்டிருக்காவோ? உவ ட்றஸ் போட்டிருக்கிற படத்தைக் கண்டுபிடிக்க கஸ்டப்பட்டிருப்பீங்களே?
//அப்படியெல்லாம் கூறிவிட்டு தப்ப முயலவில்லை. இறுதிவரை போட்டி விறுவிறுப்பாக இருந்தது. இறுதி ஓவரில் நகத்தைக் கடிக்காத குறைதான். இப்பபடி ஒரு போட்டி பார்க்க சந்தர்ப்பம் வாய்ப்பது அரிது. எனக்கு வெற்றி, தோல்வி, சவக்குளி எல்லாம் தெரியாது. விறுவிறுப்பாக இருந்தாலே போதும்.//
இலங்கை வெற்றி பெற்றிருந்தாலும் உதைத் தான் சொல்லியிருப்பேன்...
400 ஓட்டங்கள் என்பது மிக மிக அதிகம்....
அதுவும் 2 அணிகளும் 400 ஓட்டங்களைப் பெறுவதென்பது மோசமானது...
ஒரு 300 ஓட்டங்கள் என்றால் பரவாயில்லை...
பந்துவீச்சாளர்கள் கோணத்தில் யோசித்துப் பாருங்கள்...
எப்படிப் போட்டாலும் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்திருக்கும்....
//ஒரு 300 ஓட்டங்கள் என்றால் பரவாயில்லை...
பந்துவீச்சாளர்கள் கோணத்தில் யோசித்துப் பாருங்கள்...
எப்படிப் போட்டாலும் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்திருக்கும்..//
நாங்கள் ஊமல் கொட்டையில பந்தடிச்ச கூட்டமப்பன். உதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குத் தேவை விறுவிறுப்பா இருக்கோணும். அவ்வளவுதான்.
தமிழ்மணம் - வெற்றி பெற வாழ்த்துக்கள் !
வேட்டைக்காரி அனுஷ்கா படம் பார்க்கவில்லை என்று கூறிக்கொள்கிறேன் !
// "ஏன்டா பரதேசி உனக்கு இஞ்சி பிஸ்கட் தான் கிடைத்ததா? அட்லீஸ்ட் ஒரு லெமன் பப்பாவது கிடைக்கவில்லையா?". சாடிக்கு ஏற்ற மூடி ஹிஹிஹி.//
ஹிஹிஹி.........
வேட்டைக்காரி அசத்தல்… படத்திலயும் இது வருமோ வாத்தியாரே.
//இந்த விளம்பரத்தின் மூலம் தாடி, மீசையுடன் இருக்கும் ஆண்களை கேவலப்படுத்துவதுடன்//
வந்தி அண்ணா french beard' [குறுந்தாடி] வைத்துக் கொண்ட ஆண்கள் அழகில்லையா?
ஹி...ஹி...ஹி...
தமிழ்மணத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா...:)
தாடி, மீசையா என்ன கொடுமை அது..
நானும் கஸ்ட்டப்பட்டு 2 மாதமாக வளர்க்கும் ஆட்டுத்தாடியை என்ன செய்வது..?
அந்தக்கதை ஹிஹிஹி...
மனதில் நினைத்துப்பார்த்தேன் சிப்பு..சிப்பாக வருகிறது...ஹிஹிஹி
இவர்தானா அனுஸ்கா ஆண்ட்டி?....:p
வாழத்துக்கள் தங்கள் பதிவு வெற்றி பெற.
"நீட்டலும் வழித்தலும் கூடாதென்பர்" பெரியோர்.
தாடி வைத்தோர் சங்கம் சார்பாக என்னுடைய வன்மையான கண்டனங்கள்.
ம் அனுஸ்காவின் படம் போட்டிருக்கிறீர்கள்.. இங்கே தொடங்குகிறது வழக்கு..
அனுஸ்கா நடிகர் விஜய் உடன் நடித்திருக்கிறார். நடிகர் விஜய் இசையமைப்பாளர் விஜய் அன்ரனி இசையமைத்த படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் அன்ரனி சிங்கள பாடகர் ராஜ் உடன் சேர்ந்து பாடியிருக்கிறார். ராஜ் சிங்கள இராணுவத்திற்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். சிங்கள இராணுவம் தமிழர்களை கொலை செய்திருக்கிறது.
A=B
B=C
C=D
A=C=D
ஆகவே யுவர் ஆனர்..
அனுஸ்காவை புறக்கணிப்போம்
தமிழ்மண போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள். நானும் இம்முறை 2 ஆக்கங்களுடன் போட்டியில் கலந்து கொண்டுள்ளேன்.
தமிழ்மணம் - வாழ்த்துக்கள் வந்தி,.. ரெண்டும் நல்ல தெரிவு..
கடந்த முறை எனக்கும் அதே பெறுபேறு.. நானும் இம்முறை ரெண்டு அனுப்பியுள்ளேன்.. பார்க்கலாம்..
ப்ளேட் விளம்பரத்தில் தப்பேதும் இல்லையே.. அந்தப் பெண்களுக்கு தாடி வைத்தால் பிடிக்காதாம்.. 'உங்கள்' ஆட்டு தாடி பிடித்த அங்கவை-சங்கவை யாராவது இருக்கலாம்.. ;)
அன்வரின் சாதனை அல்ல.. இப்போது அது சார்ல்ஸ் கோவேன்றியின் சாதனை.. காரணம் கோவேன்றி ஆட்டமிழக்கவில்லை..
http://stats.cricinfo.com/ci/content/records/216972.html
அந்த ரன் குவிப்பு போட்டி பற்றி நானும் சொல்லி உள்ளேன்.
ஆனால் நெஞ்சு பதைபதைக்க வைத்தது உண்மை தான்.
குட்டிக் கதை நான் இன்று வானொலியில் சொன்னது.. ஹீ ஹீ.. எனக்கு சொன்னவர் ஒரு பிரபல பதிவர்.. மூன்றெழுத்து.. முதல் எழுத்து வ.. கடைசி எழுத்து தி..
வேட்டைக்காரி என்று காட்டுறா.. ஆடையை சொன்னேன்.
இவவை மட்டும் தனியப் பார்க்கிற மாதிரி படம் பார்க்க முடியாதோ?
தமிழ் மண விருது கிடைக்க வாழ்த்துக்கள், நானும் எனது தண்ணீர் பற்றிய பதிவை போட்டிக்கு பரிந்துரைத்துள்ளேன்.
நேற்றைய போட்டி விறுவிறுப்பாக இருந்தது உண்மைதான், ஆனால் இப்படி பட்ட போட்டிகளை ஊக்குவித்தால் பந்துவீச்சாளர்கள் என்னும் ஆட்கள் இல்லாமலே போய்விடுவார்கள், அந்த பிட்ச் செய்தவர் பற்றி ரவி சாஷ்திரி நகைச்சுவையாக குறிப்பிட்டது நன்றாக இருந்தது, மேலும் கிரிக்கட் பந்து வீச்சாளர்களதும் போட்டி என்பதால் அவர்களுக்கும் கொஞ்சமாவது சாதகமளிக்கும் ஆடுகளம் தயாரித்தல் நலம்.
இந்த குட்டிக்கதையை விடியலில் லோஷன் உங்களுக்கு ஏற்பட்ட சம்பவமாகதானே கூறினார்? எது உண்மை..
வேட்டைக்காரி படம் சூப்பர், இதற்காகவாவது முதல் நாள் படம் பார்க்க வேண்டும்.
குட்டிக்கதை சூப்பர்.. எங்கேயோ கேள்விப்பட்டது பொலயும் இரக்கு.. தமிழ்மணத்தில் மணத்திட வாழ்த்துக்கள்..
தேர்தலிலை நிக்க ஆயத்தமாகிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்
அன்புடன்
வர்மா
//குட்டிக் கதை நான் இன்று வானொலியில் சொன்னது.. ஹீ ஹீ.. எனக்கு சொன்னவர் ஒரு பிரபல பதிவர்.. மூன்றெழுத்து.. முதல் எழுத்து வ.. கடைசி எழுத்து தி..//
உதையெல்லாம் சொல்லுவீங்களா லோஷன் அண்ணா?
பாவம்.. யாரோ அப்பாவின்ர கதை....
தமிழ் மண விருது பெற வாழ்த்துக்கள்,
ம்ம் நீங்கள் சொன்ன அந்த விளம்பரம் வயிற்றெரிச்சலாய்த்தான் இருக்கிறது.
கிரிக்கெட் மாட்சை ஞாபகப்படுத்தாதீர்கள்
உங்கள் பாலச்சந்தர் பாணியில் ஏதோ சிம்பாலிக்காக சொல்ல முயன்றிருக்கிறார் என நினைக்கிறேன்.
தமிழ்மணம் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கதை சுப்பர்.. :))
அனுஷ்கா இது பழைய படம் ஆனா.. சரி படம்!
:)
Post a Comment