இலங்கைப் பதிவர் சந்திப்பு 2

நீண்ட நாட்களின் பின்னர் அடுத்த சந்திப்பு மீண்டும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. முதலாவது சந்திப்பின் இனிமையான நினைவுகள் மறையும் முன்னர் அடுத்த சந்திப்பு நடைபெறவிருப்பதால் நண்பர்களை மீண்டும் காணும் ஆவலில் பலர் இருக்கின்றார்கள்.

வித்தியாசமான நிகழ்ச்சி நிரல், சில போட்டிகள், சில சுவாரசியங்கள் என இம்முறை ஏற்பாட்டுக்குழுவினர் தயாராகவுள்ளனர். இந்தமுறை அதிக பதிவர்களை ஏற்பாட்டுக்குழுவினர் எதிர்பார்க்கின்றார்கள்.



இச்சந்திப்பின் நிகழ்ச்சி நிரல்

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு

இடம் : கைலாசபதி அரங்கு, தேசிய கலை இலக்கியப் பேரவை, காலி வீதி, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)
காலம் : டிசம்பர் 13, 2009 (ஞாயிற்றுக்கிழமை)- பி.ப. 2.00 மணி

அறிமுகவுரை
புதிய பதிவர்கள் அறிமுகம்
கலந்துரையாடல் ஒன்று :

பயனுறப் பதிவெழுதல், பதிவுகளின் தன்மை, எவ்வாறு அது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறு அதனை மேம்படுத்துவது போன்றன.

கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை
காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன

சிற்றுண்டியும் சில பாடல்களும்

கலந்துரையாடல் மூன்று :
இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?

கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
பதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் இருந்தால் தீர்வுகளும், குறிப்பாக இது இலங்கைத் தமிழ்ப் பெண்பதிவர்களைப் பற்றியதாக இருக்கும்

பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி :
கலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள் அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும்.

உங்களுக்குள் உரையாடுங்கள்

கடந்த தடவை போன்று இச்சந்திப்பும் http://livestream.com/srilankatamilbloggers எனும் சுட்டியில் நிகழ்வு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.

சில ஏற்பாட்டுக்களுக்காக தங்கள் வருகையை இலங்கைத் தமிழ்ப் பதிவர் வலைத் தளத்தில் உறுதிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இலங்கைப் பதிவர் சந்திப்பு

மீண்டும் சந்திப்போம் சிந்திப்போம்.

2 கருத்துக் கூறியவர்கள்:

Unknown சொல்வது:

நண்பர்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்/இருக்கிறோம்....

சந்திப்போம், மகிழ்வோம்...

Admin சொல்வது:

சந்திப்போம்