ஒருவர் ஊராரின் காதல்களைப் பிரிப்பவர் இன்னொருவரே ஊராரின் காதல்களை ஊட்டி வளர்ப்பவர் இவர்கள் இருவருக்கும் காதல் பத்தினால் என்னவாகும் என்பதை கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் சொன்ன படம் கந்தகோட்டை.
கதை :
நகுலன் ஊராரின் காதல்களை பிரிப்பவர் இதற்க்கு இவர் சொல்லும் காரணம் தனது பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தும் சின்னச் சின்ன விடயங்களுக்கு சண்டை பிடிக்கின்றார்கள் இதனால் இவருக்கு காதலின் மேல் வெறுப்பு. பூர்ணா ஊரார் காதல்களைச் சேர்த்து வைக்கும் ஷாஜகான் விஜயின் பாத்திரம் போன்றவர். நகுலனின் காலணியான கந்தகோட்டைக்கு ஒரு காதலைச் சேர்த்து வைக்க வரும் பூர்ணா அங்கே நகுலனைச் சந்திக்கின்றார். இன்னொரு காதலர்களின் காதலைப் பிரிக்க ஏற்படும் சந்தர்ப்பத்தில் அந்த காதல் உண்மையான காதல் என்பதை அறிந்த நகுலன் காதலையும் பூர்ணாவையும் ஒரே நேரத்தில் விரும்புகின்றார். இடைவேளையின் பின்னர் காதலுக்கு ஒரு புதிய வில்லன் அந்த வில்லனக்கு எப்படி நகுலன் திட்டமிட்டு ஆப்படிக்கின்றார் என்பதுதான் கதை.
திரைக்கதை :
முதல் பாதி சந்தானத்தினால் கலகலப்பாகவும் இரண்டாவது பாதி நகுலன் சம்பத் மோதல்களில் விறுப்பாகவும் போகும் திரைக்கதை. சில காட்சிகள் சில படங்களில் பார்த்த ஞாபகம் வந்தாலும் கொஞ்சம் விறுப்பான திரைக்கதை என்பதால் உடனே மறைந்துவிடுகின்றது. அத்துடன் அடுத்து என்ன நடக்கும் என்பதை பல இடங்களில் ஊகிக்க முடிகின்றது. அதிலும் இந்தக் காட்சி முடியப் பாடல் என்பதை திரையரங்கில் இருப்பவர்கள் சத்தம் போட்டே உணர்த்துகின்றார்கள். நல்ல காலம் கடைசிக் காட்சிக்கு முன்னால் பாடல் வைக்கவில்லை.
வசனம் :
முதல் பாதியில் சந்தானம் அடிக்கும் லூட்டிகளில் வசனங்கள் கலக்கல் நகைச்சுவை. காதலித்த பெற்றோர்கள் சின்னச் சின்ன விடயங்களுக்குச் சண்டை போடுவது குற்றமில்லை எனச் சொல்லும் இடங்களிலும் வசனங்களில் சக்திவேல் விளையாடியிருக்கின்றார்.
இயக்கம் :
ஏற்கனவே அறிந்ததிரைக்கதையாக இருந்தாலும் இயக்குனர் சக்திவேல் இதனைச் சொன்னவிதம் ரசிக்கும் வண்ணம் இருக்கின்றது. இயக்குனர்கள் ராதாமோகன், ப்ரியா.வி போன்றவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த சக்திவேலுக்கு முதல் படம் எனச் சொல்லமுடியாதபடி நேர்த்தியான இயக்கம்.
சந்தானம் :
படத்தின் உண்மையான கதாநாயகன் சந்தானம் தான். சின்னக் கவுண்டர் அடிக்கும் லூட்டிகள் நிலை மறந்து ரசித்துச் சிரிக்கும் படி இருக்கின்றது. அதிலும் இவர் ஒவ்வொரு பெண்ணாக காதலிக்கும் போது "அசிலி பிசிலி", கண்கள் இரண்டால் என பின்னணியில் ஒலிக்கும் பாடல்களால் தியேட்டரே அதிர்கின்றது. இவரது கனவுக் காதலும் கலக்கல். வழக்கமாக இரட்டை அர்த்தம் மூன்று அர்த்தம் பேசுபவர் இந்தப் படத்தில் அவற்றை குறைத்தே இருக்கின்றார் அல்லது இல்லை.
நகுலன் :
நகுலன் இன்னமும் நடிக்கத் தொடங்கவில்லை என்றே சொல்லலாம். மாசிலாமணியில் நடித்த அதே நடிப்புத்தான். நடனக் காட்சிகளில் நன்றாக ஆடுகின்றார். சண்டைக்காட்சிகளில் ஆக்ரோசமாக அடித்தாலும் முகத்தில் புன்னகை இருப்பது போல் தெரிகின்றது. வில்லனுடன் மல்லுக் கட்டும் இடங்களில் ரசிக்கவைக்கின்றார்.
பூர்ணா :
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டில் நடித்தவராம். மலிவு விலை ஸ்ரேயா போல் இடைக்கிடை தெரிந்தாலும் தன் பங்கு நடித்திருக்கின்றார். பாடல் காட்சிகளில் கூட கவர்ச்சி இல்லாமல் கொஞ்சம் குத்துவிளக்காகவே வந்து போயுள்ளார். இவரை விட சுனைனாவையே இந்தப் படத்திலும் கதாநாயகி ஆக்கியிருக்கலாம் என்பது என் கருத்து.
சம்பத் :
வில்லனாக வரும் சரோஜா புகழ் சம்பத் தன் மகனுக்காக வேதனைப் படும் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கின்றார். ஆனால் வயது போன தோற்றம் அவருக்குப் பொருத்தமாகவே இல்லை. பாலாசிங் கூட அதே அரசியல்வாதி பச்சைத் துண்டுடன் வந்துபோகின்றார். வில்லனை இன்னும் கொஞ்சம் வில்லத்தனமாக காட்டியிருக்கலாம்.
இசை :
நீண்ட நாட்களின் பின்னர் தினா. மனிசன் இன்னமும் மன்மதராசாவில் இருந்து விடுபடவில்லைப் போல் தெரிகின்றது. அதே பாணியில் அதே போன்ற ஆடைகளுடன் ஒரு பாடல். "காதல் பாம்பும்",எப்படி என்னுள் காதல் வந்ததுதும்" ரசிக்கவைக்கின்றது. ஆனால் ஏனைய பாடல்கள் இம்சை. பின்னணி இசை அதிலும் சண்டைக்காட்சிகளில் இரட்டிப்பு இம்சை. படத்தின் பெரிய பலவீனமே இசைதான்.
ஒளிப்பதிவு :
இ.கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் வெளிநாடுகளின் அழகை அழகாக படம் பிடித்திருக்கின்றது. ஆனால் சென்னை நாகர்கோவில் காட்சிகளில் ஏதோ ஒன்று குறைந்தது போல் தெரிகின்றது.
மொத்தததில் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாகப் பார்க்ககூடிய படம்.
கந்தகோட்டை - காதல் அதிரடி
Box Off Aug7th
-
இந்த வாரமும் ஏகப்பட்ட தமிழ் படங்கள்.
1 காத்துவாக்குல ஒரு காதல்
2. பாய்
3. ரெட் ப்ளவர்
4. வானரன்
5. மாமரம்
6. நாளை நமதே
7. உழவன் மகன்
8. தங்கக்கோட்டை
9. ரா...
8 hours ago
6 கருத்துக் கூறியவர்கள்:
அப்ப பாத்திருவம்....
நகுல் எண்டபடியாத் தான் யோசிச்சன்... சந்தானம் இரணட்டை அர்த்த வசனமில்லாம கதைச்சிருக்கிறார் எண்டா அதுக்காகப் பாக்கோணும்....
so வேட்டைகாரனுக்கு சரியான போட்டி என்கிறீர்கள் இந்த நகுல் பாய்ஸில் கொஞ்சம் நன்றாகத்தானே நடித்தார். இப்போது ஏன் இப்படி? சந்தானத்துக்கு "சின்னக்கவுண்டர்" என நீங்கள் வழங்கியப் பட்டம் பொருத்தமானதே
//மொத்தததில் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாகப் பார்க்ககூடிய படம்//
ராதாமோகனின் உதவி இயக்குனராக இருந்தவர் என்பதால் நிச்சயமாக கவர்ச்சிக்கு அதிகம் இடம் இராது.
அப்ப பாத்துட வேண்டியதுதான் ;)
Good review. Thank you.
நான் நீங்க இந்த விமர்சனம் எழுதிய அன்று அதாவது கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்தப் படத்தை பார்த்தேன்.. நகுலின் நடிப்பில் ஒரு மாற்றம் வேண்டும்...இல்லையேல் இனி வரும் படங்கள் எல்லாம் கந்தல்தான்.. அவர் மாசிலாமணியின் பாதிப்பிலிருந்து இன்னும் வெளிவரவில்லையோ என்றது எண்ணத் தோன்றுகிறது... மற்றப்படி திரைப்படம் பார்க்கலாம்...
Post a Comment