இலங்கை
கிழக்கு மாகாணம் வரலாறு காணாத மழையும் வெள்ளமுமாக கடந்த சிலநாட்களாக அல்லோல கல்லோலப்படுகின்றது. தொடர்ந்துபெய்துவரும் அடைமழையினால் வீடுகளும் வீதிகளும் வெள்ளத்தினால் மூடப்பட்டு மூன்று பேர் உயிரிழந்தும் பல லட்சம் மக்கள் தங்கள் வீடுவாசல்களை விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்திருக்கின்றார்கள்.
அரச. அரசார்பற்ற நிறுவனங்கள் உடனடியாக நிவாரணப் பணிகளை தொடங்கியதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன, மத, கட்சி பேதமின்றி உதவி வழங்குவது அனைவரின் தார்மீகக் கடமையாகும்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளை வழங்க இலங்கைப் பதிவர்கள் முன்வந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய அறிவித்தல் இலங்கைப் பதிவர்கள் குழுமத்தில் நிரூஜாவினால் வெளியிடப்பட்டுள்ளது. வலையுலகிற்க்கு அப்பால் பதிவர்கள் செய்யும் இந்த உதவிக்கு ஏனையவர்களினது ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றார்கள்.
மேலதிக தகவல்களுக்கு நிரூசா, வதீஸ், சிதறல்கள் ரமேஸ், சந்ரு ஆகியோரையும் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் கூல் போய் கிருத்திகன், மதிசுதா ஆகியோரையும் தொடர்புகொள்ளவும்.
இந்தியா
தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இதனால் ஆ,ராசாவின் ஊழல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து மக்களும் இலவசங்களுக்காக தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்கவிருக்கின்றார்கள். சீமானால் ஆரம்பிக்கப்பட்ட நாம் தமிழர் இயக்கம் இம்முறையும் காங்கிரசை தோற்கடிப்பதே தமது நோக்கம் என ஆரம்பத்திலிருந்தே கூறியிருந்தாலும் சீமானின் விடுதலையும் அதன் பின்னரான சில நிகழ்வுகளுடம் சீமான் எண்ணைய் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாக ஜெயலலிதாவிடம் சரணடைந்துவிட்டார்.
ஈழத்தமிழர்களை அல்லது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்த தேர்தலினால் மட்டுமல்ல எந்த இந்தியத் தேர்தல்களினாலும் அவர்களுக்கு பிரயோசனமில்லை என்பது தெரிந்தவிடயம், ஆனாலுன் இந்த தேர்தலிலும் மீண்டும் ஈழம், ஈழத்தாய், 3 மணி நேர மனைவி, துணைவி சமேத உண்ணாவிரதம் போன்ற நாடகங்கள் பலரின் திரைக்கதை வசனத்தில் நடத்தப்படலாம்.
சீமான் கருணாநிதியை எதிர்க்கின்றேன் என ஜெயலலிதாவிடம் சோரம் போனது கண்டிக்கத்தக்கதே. எப்படி வைகோ தன்னைச் சிறைவைத்த ஜெயலலிதாவிடம் மண்டியிட்டாரோ அதேபோல் சீமானும் மண்டியிட்டுவிட்டார். கருணாநிதியின் ஈழவேசம் அண்மைக்காலத்தில் அம்பலத்துக்கு வந்தாலும் ஜெயலலிதாவின் ஈழஎதிர்ப்பு அவரின் கருவிலையே இருக்கின்றது(எந்தப் பார்ப்பனர் ஈழத்துக்கு ஆதரவு). தன்னைப் பெரியாரின் பேரன் என்கின்ற சீமானும் கடைசியாக கூழ்பானைக்குள் தான் போய்விழுந்துவிட்டார்.
இதே நேரம் சீமான் தனித்தோ அல்லது வேறு எதாவது கட்சிகளின் கூட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்திருந்தால் இத்தாலிக்காரியின் சொல் கேட்டு மீண்டும் கருணாநிதி அரசால் கைது செய்யப்பட்டோ அல்லது வேறு வழிகளில் பழிவாங்கப்பட்டோ அல்லது தா,.கிருஷ்ணனுக்கு நடந்தது போல சீமானுக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கும். சீமான் எவரை ஆதரித்தால் என்ன எதிர்த்தால் என்ன இலங்கை தமிழ் மக்களுக்கு இதனால் எந்த லாபமும் இல்லை. சீமானின் இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவரும் தேர்ந்தெடுத்த அரசியல்வியாதி ஆகிவிட்டார். நம்ம தலை கவுண்டரின் பாசையில் சொன்னால் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா".
இந்த வருட நகைச்சுவை
வைகோவை 40 கோடி என நக்கலடிக்கும் திமுக அடிப்பொடிகள் 1.76 லட்சம் கோடி திருடிய ஆ.ராசாவை உத்தமன் என்கின்றார்கள்
வைரமுத்து
அண்மையில் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் புத்தகவெளியீட்டுவிழா நடைபெற்றது. கருணாநிதி புத்தகத்தை வெளியிட கமலும் ரஜனியும் பெற்றுக்கொண்டார்கள். வைரமுத்துவை திரையுலகத்திற்க்கு அழைத்துவந்த பாரதிராஜா, இளையராஜா இருவருக்கும் அழைப்பில்லை. இவர்களுக்கிடையில் என்னதான் பிரச்சனை என்றாலும் தன்னை அறிமுகப்படுத்திய இருவரையும் இன்னாத செய்தாரை ஒறுத்தல் போல் செய்திருக்கவேண்டும் ஆனால் வைரமுத்து ஏனோ செய்யவில்லை. வைரமுத்து சிறந்த கவிஞர் ஆனால் சிறந்த மனிதரோ என்றால் இல்லை அவரும் மிகச் சாதாரண அற்ப மனிதர் என இந்த செயலின் மூலம் காட்டிவிட்டார். அவர் அழைத்திருந்து பாரதிராஜாவும் இளையராஜாவும் வரவில்லை என்றால் அது அவர்கள் இருவருக்கும் தான் அவமானம் என்பதை ஏனோ இந்தக் கவிபேரரசு உணர்ந்துகொள்ளவில்லை, சிலவேளை தன்னை சோழமன்னனின் கவிஞன் என்ற இறுமாப்போ தெரியவில்லை.
ஆனந்தவிகடனில் வாசகர் ஒருவர் இந்த நிகழ்வு பற்றிய கட்டுரைக்கு கொடுத்த பின்னூட்டம் "அந்த நாட்களில் சாணிக் கலர் பேப்பரில் விற்பனையாகும் படங்களின் பாட்டுப் புத்தகத்துக்கும் இந்தப் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?"
இதுவும் வைரமுத்து சம்பந்தப்பட்ட விடயம் தான். அண்மையில் வாலி எழுதிய பாடல்கள் 1000 புத்தகவிழாவில் வைரமுத்து பேசும் போது தான் ஒருமுறை கமலைக் கேட்டாராம் நீங்கள் ஏன் அரசியலுக்கு வரமுயலவில்லை என்று அதற்க்கு கமல் சொன்னாரம் நான் ஒரு சுமாரான நடிகன் என்னால் அரசியலில் நடிக்கமுடியாது. மேடையில் நடுநாயகமாக வீற்றிருந்தவர் சாட்சாத் தமிழக முதல்வர்.
கமல்
மன்மதன் அம்பு படம் சிலநாட்களுக்கு முன்னர் பார்க்கனேர்ந்தது. ஒளியமைப்பு கொடுத்த இதத்தை ஏனோ படம் கொடுக்கவில்லை. பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி போல எதிர்பார்த்துப்போன எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. கமலின் அதிமேதாவித்தனம் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இந்தப் படத்திலும் வசனம் எழுதுகின்றேன் என பல இடங்களில் ஆங்கிலம். அத்துடன் தெனாலி படத்தின் பின்னர் மீண்டும் ஈழத்தமிழர்களை கேலி செய்திருக்கின்றார். அவர்களைச் சினிமா வெறியர்களாகக் காட்டியமை கண்டிக்கத்தக்கது. அதிலும் அந்தக் காட்சிகள் படத்துக்கு தேவையற்றமை என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலட்சுமிக்கு காமத்துப்பால் எழுதிய கமலைக் கண்டித்த இந்து அமைப்புகள் போல் ஈழத்தமிழர்களின் ஆபத்பாந்தவர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளூம் அரசியல் கட்சிகளோ அல்லது சினிமாக்காரர்களோ இதற்க்கு வாயும் திறக்கவில்லை. தயாரிப்பாளர் உதயநிதி என்ற காரணமோ யாம் அறியோம் அரங்கநாதன் தான் இதற்கும் பதில் கூறவேண்டும்.
பார்த்ததில் அதிர்ச்சி
கடந்த வருடம் வெளியான படங்களில் நூறு நாட்கள் ஓடிய படங்களின் பட்டியல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பெண் சிங்கம் படமும் நூறு நாட்கள் ஓடியது எனக் கூசாமல் பொய் சொன்னார்கள். இதனை நான் என் பேஸ்புக்கில் போட்டபோது நண்பி ஒருவர் பெண் சிங்கம் ஓடிய படம் அல்ல ஓட்டிய படம் என்றார், நண்பர் ஒருவர் அப்படி ஓடியிருந்தால் அது அசிங்கம் என்றார். சன் குழுமத்தின் ஓடிய அல்லது ஓட்டிய படங்களின் பட்டியல் கலைஞரில் காண்பிக்கப்படவில்லை. வெகுவிரைவில் தமிழ் சினிமாவும் தமிழர்கள் கட்சி பேறுபாட்டால் பிரிந்து இருப்பதுபோல சன் குழுமப் படம் கலைஞர் பேரன்களின் படம் என இரண்டாகப் பிரியும் சாத்தியம் இருக்கின்றது.
விளையாட்டு
இலங்கை அனைத்து உதைபந்தாட்ட லீக்குகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் சிவில் பாதுகாப்புப் படை லீக்கை எதிர்கொண்ட பருத்தித்துறை லீக் அணி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வரலாற்றுச் சாதனை படைத்தது. பருத்தித்துறை லீக் சார்பில் பிறேம் குமார் இரண்டு கோல்களையும், சாரங்கன் ஒரு கோலையும் அடித்து வெற்றிக்கு வழிகோலினார்கள்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தினால் இலங்கையிலுள்ள அனைத்து உதைபந்தாட்ட லீக்குகளுக்குமிடையில் நடத்தப்பட்ட இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சிட்டி லீக் மைதானத்தில் நடைபெற்றது, பருத்தித்துறை லீக் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி கிண்ணத்தைத் தனாதாக்கி வரலாற்றுச் சாதனை படைத்தது. வதிரி டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த பிரேம்குமார் இலங்கைத் தேசிய அணிக்கு தெரிவான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. என் மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்.
சின்ன சந்தேகம்
பேஸ்புக்கில் இருக்கும் என் நண்பர்களின் அழகான நண்பிகள் எல்லாம் திருமணமானவர்களாக இருக்கும் மர்மம் எனக்கு புரியவில்லை.
ஜொள்ளும் லொள்ளும்
உலகநாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களை ஏன் நான் என் மாமாவாக மாற்றக்கூடாது #ஸ்ருதி
இந்தப் படம் மூலம் தான் ஸ்ருதி என்னைக் கவர்ந்தார். பட உதவி சுபாங்கன்.
பின்குறிப்பு
நீண்ட நாட்களின் பின்னர் சூப். கடந்த ஆண்டு கவர்ந்த பதிவுகளின் அடுத்த பகுதி ஓரிரு நாட்களில் வெளியாகும்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
13 கருத்துக் கூறியவர்கள்:
ஃஃஃஃஃஃஈழத்தமிழர்களை அல்லது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்த தேர்தலினால் மட்டுமல்ல எந்த இந்தியத் தேர்தல்களினாலும் அவர்களுக்கு பிரயோசனமில்லைஃஃஃஃ
ஆனால் எங்களால் அவர்களுக்கு பல பிரயோசனம் இருக்கிறது..
கமல் விடயத்தில் உங்கள் நடுநிலமையான எழுத்து மிகவும் பிடித்திருக்கிறது...
.
நீங்க எல்லாம் நம்மட அயிட்டங்கள எடுத்தக்கிட்டா நாம வடலி நட்டா கள்ளு குடிக்கிறது.. ஹ...ஹ...ஹ..
நண்பரே உங்கள் வேகம் என்னைப் புல்லரிக்க வைக்கின்றது. நித்திரையே கொள்ளாமல் பின்னூட்டம் இடுகின்றீர்கள். விரைவில் கலைஞர் தலைமையில் உங்களுக்கு பாராட்டுவிழா வைக்கவேண்டும்,
வந்தி அண்ணா இப்படி கண்ணு வைக்கக் கூடாது எனக்கு 3 தொடக்கம் 4 மணித்தியால நித்திரை தான் வரும் அதிகாலையில் இணைய இணைப்பு மிக வேகமாக இருப்பதால் வேளைக்கே படுத்து வேளைக்கே எழும்புகிறேன்...
நல்லாருக்கு
கேபிள் சஙக்ர்
சர்வதேசப்பதிவர் ஆகிவிட்டீர்கள் என்றபடியால் இலங்கை, இந்தியா, இலண்டன் என்று பிரித்துப் போட வேண்டிய அவசியம் உங்களுக்கு. ஹிம்...
இலங்கை: ஆமாம். மிகக்கவலை. :-(
தகவலைப் பதிவாக இட்டமைக்கு நன்றி.
இந்தியா: சீமான் ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதி. எனக்கு எப்போதுமே சீமான் போன்ற வியாதிகளில் நம்பிக்கை இருந்ததில்லை.
எங்களை நாங்கள் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
மற்றவர்க்ள காப்பாற்றுவார்கள் என்று எப்போதுமே எதிர்பார்த்திருப்பது நோய்க்கூறு மனநிலை.
// சீமானின் இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவரும் தேர்ந்தெடுத்த அரசியல்வியாதி ஆகிவிட்டார். //
ஏன் இதற்கு முன்னர் ஒழுங்காக இருந்தாரா?
இ.வ.நகைச்சுவை: ;-))))
வைரமுத்து: கருத்து இல்லை. :-(
கமல்: மமஅ பார்க்கவில்லை இன்னும்.
ஆனால்,
// அத்துடன் தெனாலி படத்தின் பின்னர் மீண்டும் ஈழத்தமிழர்களை கேலி செய்திருக்கின்றார். //
நான் தெனாலி படம் ஆகக்குறைந்தது 20 தரமாவது பார்த்திருப்பேன். நானும் ஈழத்தமிழன் தான். நான் அங்கே அவமானப்படுத்துவது போல எப்போதும் உணர்ந்ததில்லை.
எனக்கு பொங்கும் தமிழுணர்வுகள் இல்லையோ தெரியாது, ஆனால் தெனாலி மீது எந்தப் பிரச்சினைகளும் இருந்ததில்லை.
// அவர்களைச் சினிமா வெறியர்களாகக் காட்டியமை கண்டிக்கத்தக்கது. //
நாங்கள்/நீங்கள் அப்படியில்லையா?
ஈழத்தில் சினிமா வெறியில்லாத நபர்களை விரல்விட்டு எண்ணலாம்.
ஈழத்தவர்களை சினிமா வெறியர்களாகக் காட்டி கமல் அவமானப்படுத்திவிட்டார் என்று சொல்கிற உங்கள் அதே பதிவில் சினிமா பற்றியும் நிறையவே கதைக்கிறீர்கள், ஸ்ருதியின் படமும் இருக்கிறது.
யதார்த்தம் அதுவே, ஈழத்தமிழர்கள் சினிமா வெறியர்களே.
// வரலட்சுமிக்கு காமத்துப்பால் எழுதிய கமலைக் கண்டித்த இந்து அமைப்புகள் போல் //
இந்து வெறியர்கள் என்ற சொல் பொருத்தமானது.
பார்த்ததில் அதிர்ச்சி: ;-)))
// இதனை நான் என் பேஸ்புக்கில் போட்டபோது நண்பி ஒருவர் //
ஐயோ பாவம். ;-))))
விளையாட்டு: உதைபந்தாட்டம்?
அந்தக் கையால பந்தத் தட்டிக்கொண்டுபோய் வளையத்துக்குள்ள போடுற விளையாட்டுத்தானே?
வாழ்த்துக்கள்.
சந்தேகம்: அதிக கேள்வியுடைய பொருட்கள், விரைவில் விற்பனையாகும்.
லொள்ளு: அம்மா, அப்பா இந்தக் காதலுக்கு எதிர்ப்பாமே உங்களுக்கு? ;-)))
ஜொள்ளு: நான் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை.
காற்பந்தாட்ட லீக்குகளுக்கிடையான போட்டியில் யாழ் அணி வெற்றி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. யாழ்ப்பாணத்தில் காற்பந்தாட்டம் மிகப் பிரசித்தம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் - நிரூபித்துவிட்டார்கள். அந்தத் திறமையான வீரர்களுக்கு இலங்கைத் தேசிய அணியில் இடம் கிடைக்க வேண்டும்! இலங்கைத் தேசிய கால்பந்தாட்ட அணி தற்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. மணிலால் பெணாணண்டோ என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்!
சூப் - சூடு அதிகம். இம்முறை சுவை கொஞ்சம் கம்மிதான் :)
ம்ம் இயற்கையின் சீற்றம் கவலைக்கொல்லச் செய்கிறது
சீமான் எதிர்பார்த்ததுதான் அதனால் ஆச்சரியமில்லை
ஆனால் வைரமுத்து தொடர்பான ரசிகரின் பின்னூட்டம் நிச்சயம் ஏற்க முடியாதது. சிருங்காரத்தில் இருக்கும் அழகியலைக் கண்டுணராத விக்டோரியன் பண்பாட்டை பேணும் ஒருவராய் இருக்கலாம்.
திருப்பி பாருங்க பாஸ் வசனங்கள் உண்மையிலேயே நல்லாத்தான் இருக்கு, ஆனால் படம் ஏன் கமல் இப்படி செய்தார்? முட்டுச் சந்து,நடு ரோடு போன்ற சிம்பாலிக் ஷோட்டுகளெல்லாம் எம்கேடி, பியுஎஸ் காலத்திலேயே வழக்கொழிந்து போய் விட்டன. ஆனால் கமல் ஒன்றும் விஜய் அல்ல என்பதால் சுதாகரித்து மீண்டு விடுவார்
அப்பா ரொம்ப நாளைக்கப்புறம் சூப் மற்றும் அந்தக் கடைசிப் படம் அருமை என்பதை "ஜொள்ளி" முடிக்கிறேன்
மன்மதன் அம்பில் கமலிடம் தங்களுக்கு திருப்தி ஏற்படாமை என்னை ஆச்சரியப்படவைத்துவிட்டது நண்பா.
யாழ்ப்பாண உதைபந்தாட்ட களகங்கள் இப்போதைய நிலையைவிட 1992-1995வரையான காலங்களில் இன்னும் திறமையாக இருந்தது என நினைக்கின்றேன்.
இப்போதாவது அவர்கள் தறமைகளை ஏற்றுக்கொண்டுள்ளமை சந்தோசமே.
பெண்சிங்கம்...ஐயோ..ஐயோ..(ஆனால் இன்றும் கலைஞரின் அன்றைய எழுத்துக்களை நான் இப்போதும் இரசிக்கின்றேன். இளைஞன் எப்படியோ???
அப்ஷராவின் மணாளன் ஆகப்போறவர் ஈழத்தவர் என்று ஒரு கதை அடிபடுது.
இந்தவருடத்தின் முதல் சூப்... அருமை
சூப்பர்....
இலங்கை...-வேதனை வடு
இந்தியா.....-என்ன சொல்ல
கமல்...-நடுநிலை
விளையாட்டு...-வாழ்த்துகள்...பிரேம் தனிப்பட்ட முறையிலும் கழகங்கள் ரீதியாகவும் பழக்கப்பட்டவர்...வாழ்த்துகள்
சந்தேகம்...- ம்ம்ம்ம் நான் சின்னப்பையன்......ஆனால் ஃஃஃஅதிக கேள்வியுடைய பொருட்கள், விரைவில் விற்பனையாகும்ஃஃஃஃசரி போலத்தான் இருக்கு...
ஸ்ருதி...-அவள் வருவாளா.....??? திருமணம் மதமுறைப்படி நடக்காது போல.......!!
:)
சீமான் செய்தது சரியோ பிழையோ என்று சொல்ல எனக்கு தெரியவில்லை. இவர் கருணாயிடம் சேர்ந்திருந்தாலும் கோஷங்கள் வந்திருக்கும். பலம் பொருந்திய முன்றாம் அணியாக இருப்பதும் முடியாத காரியம். சோ இரண்டில் ஒன்று.
அதேபோல் கமல் செய்த அறபத்தனமான காரியம் அருவருக்கத்தக்கது. நானும் கமலின் ரசிகனாக இருந்தும் கடுமையாக நொந்து கொண்டேன். மன்மதன்அம்பும் மகா சொதப்பல்.
ஸ்ருதின்ர இன்னும் கிளாமரான படத்தை எதிர்பார்த்தோம்.
Post a Comment