தலையிடியும் காய்ச்சலும் தமிழக மீனவர்களும்

கடந்த சில நாட்களாக ட்விட்டர், பேஸ்புக், வலைகள் என எங்கு பார்த்தாலும் TNFisherman தான். தமிழக மீனவர்களின் கொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இணையம் பாவிக்கும் பெரும்பாலான அறிவுஜீவிகள் போராட்டம் நடத்ததொடங்கிவிட்டார்கள். Save TN Fisherman

ஈழப்போர் ஆரம்பித்த நாள் முதல் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் அரங்கேறியே வந்துள்ளது. இப்போது ஈழப்போருக்கு முள்ளிவாய்க்காலில் முற்றும் அல்லது கம வைத்த பின்னரும் தமிழக மீனவர்களின் கொலைகள் மட்டும் கலைஞர் தொலைக்காட்சி மானாட மயிலாட போல் சீசன் சீசனாக தொடர்கின்றது. இத்தனைக்கும் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்குமான உறவு உலகமே அறிந்தது.

சிலகாலத்துக்கு முன்னர் ரோவின் கதைக்கு கருணாநிதியின் சீரிய திரைக்கதை, வசனத்தில் தமிழக மீனவர்கள் கடத்தல் நாடகம் அரங்கேறியது, திமுக ஜால்ராக்கள் அல்லது அடிமைகள் இணையங்களில் புலிகளைத் திட்டத் தொடங்கினார்கள். தன் குடும்பத்துக்காக கருணாநிதி உலகத் தமிழர்களைப் பலி கொடுப்பது ஏனோ இன்னும் அந்த புத்திஜீவிகளுக்கு புரியவில்லை.

இந்த விடயத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் இலங்கை கடற்படையின் மீது குற்றம் சுமத்துகின்றார்கள். இந்திய அரசோ தமிழக அரசோ இதனை ஒரு சாதாரண மீனவனின் இறப்பாகவோ நினைப்பதால் சிலவேளைகளில் கடிதத்துடனும் தந்தியுடனும் முடித்துவிடும். தேர்தல் வருவதால் இம்முறை ஐந்து லட்சத்துடன்(அடித்த கோடிகளில் சில லட்சம் போவதால் குடும்பத்துக்கு நட்டமில்லைத்தானே) முடித்துக்கொண்டது. "யுத்தம் என்றால் மக்கள் கொல்லப்படுவார்கள்" என்ற தத்துவ முத்தை உதிர்த்த கொடநாடு ராணியோ ஒரு லட்சத்துடன்(இப்போ அவர் பிச்சைக்காரிதானே) நிறுத்திவிட்டார். மன்மோகன் என்ற அடிமையோ தன்னுடைய எஜமானியின் உத்தரவு கிடைக்காமல் மெளனமாகவே இருக்கின்றார் இருப்பார்.

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த திரையுலகம் பாசத்தலைவனைக் கண்டிக்கமுடியாமல் இந்த விடயத்தில் மன்மோகனைப்போலவே மெளனமாக இருக்கின்றார்கள். ஊடகங்களோ ஆடுகளமா, சிறுத்தையா டாப் டென்னில் முதலிடம் என்பதிலும் தமன்னாவின் இடுப்பா தபசியின் இடுப்பா 2011ல் தமிழகத்தை ஆட்டிப்படைக்கப்போகின்றது என்ற சீரிய விடயங்களிலும் ஈடுபட்டுள்ளது. ஆனந்தவிகடன் மட்டும் இதைனையும் ட்விட்டரில் நடக்கும் போராட்டத்தையும் கண்டுகொண்டுள்ளது.

இதே நேரம் இந்த விடயத்தில் தமிழக மீனவர்களினால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களைப் பற்றியும் பார்க்கவேண்டும். அண்மையில் வீரகேசரியில் வந்த செய்தி ஒன்றில் இந்திய மீனவர்களால் தமக்கு அதிகம் நட்டம் ஏற்படுவதாக இலங்கை வடபகுதி மீனவர்கள் குறிப்பட்டதாக செய்தி வந்தது. அந்த செய்தியின் தொடுப்பு இங்கே . யாருக்கும் கேட்காத பருத்தித்துறை மீனவர்களின் குரல்!

அதே நேரம் இலங்கைக் கடற்படையோ தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டுவதாக குற்றம் சாட்டுகின்றது. ஆனாலும் அவர்களின் கொலைக்கு தாங்கள் காரணமில்லை எனவும் கூறுகின்றது. எது எப்படியோ மீனவர்களின் கொலைகள் எவர் செய்தாலும் கண்டிக்கப்படவேண்டியதே. ஆனால் தங்கள் நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்காத இந்திய கடற்படையும் இந்திய அரசும் மிகவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவர்கள். கையாலாகாத கடற்படையை வைத்துக்கொண்டு இந்தியா 2020ல் வல்லரசாகும் என்பது பாடசாலை மாணவர்களுக்கு உரையாற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவு. அவர் வெறும் கனவு மட்டும் தான் காண்பார் ஒரு ஜனாதிபதியாகவோ இல்லை தமிழராகவோ எந்தப் படுகொலைக்கும் அவர் குரல் கொடுப்பதே இல்லை.



முத்துக்குமாரின் எழுச்சியினால் தமிழகம் உயிர்பெறும் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நல்வழி பிறக்கும் என 2009ல் பலரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் தங்கள் சுயத்தை குவாட்டருக்கும் புரியாணிக்கும் விபச்சாரம் செய்த தமிழகத் தமிழர்கள் இன்றைக்கு மரணம் தங்கள் வீட்டுக் கதவைத் தட்டியதும் ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் எழுச்சி கொண்டுள்ளமை மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இன்னும் சில நாட்களில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இன்னொரு குவாட்டருக்கும் புரியாணிப் பார்சலுக்குமாக சோரம் போகமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

ஈழத்தமிழர்களை தன் எதிரியாக நினைக்கும் ஜெயலலிதாவுடன் ஆனாப்பட்ட சீமானே ஓட்டு அரசியல் நடத்தும்போது மற்றவர்கள் நிலையும் அதேதான்.

தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போது கடிதத்துடன் நிறுத்துகின்ற உலகத் தமிழினத் தலைவன் எனத் தன்னை தானே சொல்லிக்கொள்ளும் கோபாலபுரத்து குடும்பத் தலைவர் இப்போ தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக்கு தன்னுடைய தள்ளாத வயதிலும் விமானத்தில் பறந்து டெல்லி செல்கின்றார். வரும் தேர்தலிலும் யாருக்கு எந்த தொகுதி என்பதை நீரா ராடியா பிரைவேட் கம்பனிதான் தீர்மானிக்கும் போல் தெரிகின்றது.

எது எப்படியோ தமிழக தேர்தல் முடியும் வரை தமிழக மீனவர்கள் தற்காலிகமாக கொல்லப்படுவது நிறுத்தப்படலாம். இல்லையென்றால் இலவச டிவி கொடுக்கும் திமுக அரசு இராமேஸ்வரம் மீனவர்களுக்கு மட்டும் இலவசமாக பாடையும் கொடுக்கும். கொலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களுக்கு இலவசமாக மரணச் செலவுகளும் செய்துகொடுக்கும். தலைவர் வழக்கம்போல் கடிதம் தந்தி எழுதுவார். தேர்தல் சமயத்திலும் இந்தக் கொலைகள் தொடர்ந்தால் மீண்டும் தாத்தா இரண்டு உணவு இடைவேளைகளுக்கிடையில் மனைவி துணைவி புடைசூழ உண்ணாவிரதம் இருப்பார் ஆனால் ராஜினாமா மட்டும் செய்யமாட்டார் செய்தால் முழுக்குடும்பமும் ஆ.ராசாவின் பின்னாள் இருந்து சுருட்டிய கோடிகளுக்காக இத்தாலி மஹாராணியால் கைது செய்யப்படுவார்கள்.

நம்ம உடன்பிறப்புகளோ உலகக்கிண்ணப்போட்டியில் சச்சின் சதமடித்தாரா? ஹர்பஜன் விக்கெட் எடுத்தாரா? மானாட மயிலாடவில் கலா மாஸ்டரின் எனர்ஜியையும் பார்த்து ரசிப்பார்கள். தேர்தல் முடிந்தபின்னர் மீண்டும் தாத்தா வருவார்( 1.76 லட்சம் கோடி பணம் இருக்கு ஒவ்வொரு வாக்களருக்கும் ஒரு லட்சம் கொடுத்தாலே பல லட்சம் கனிமொழியின் சுவிஸ் வங்கியில் மீதமிருக்கும்) கொலைகள் நடக்கும்.

இரண்டு நாட்டும் அரசும் முழுஈடுபாட்டுடன் இருபக்க மீனவர்களின் பிரச்சனைகளையும் பேசித்தீர்க்கவேண்டும் இல்லையென்றால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடலில் செய்யும் அத்துமீறல்களும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

இதே நேரம் தங்கள் மீனவர்களின் பிரச்சனையை உலகறிய சமூக இணையத் தளங்களிலும் வலைகளிலும் புரட்சி செய்யும் முதுகெலும்புள்ள என் தமிழக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் (தொப்புள்கொடி உறவு என அழைக்கத்தான் ஆசை ஆனால் அது அறுந்து பல காலமாகிவிட்டது).

அரசன் அன்றுகொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது தமிழ்ப் பழமொழில் அரசன் கொல்கின்றானோ இல்லையோ இப்போ தெய்வம் நாடு கடந்தும் கொல்லும்.

19 கருத்துக் கூறியவர்கள்:

maadhumai சொல்வது:

There is no fanaticism. no sentiment. It is a practical and perfect post and expressess an opinion of a common man. Well said...

Unknown சொல்வது:

அன்பின் வந்தி...
இந்தப் பிரச்சினைக்கு வேறொரு கோணம் இருப்பதாகவே எனக்குத்தெரிகிறது. பருத்தித்துறை ஏழை மீனவர்களின் வயிற்றிலடிப்பது வசதியான நவீன இயந்திரப்படகுகளில் வருகிறவர்கள்.(ஆயுதங்களோடும் வருவதாகக் கேள்வி) இலங்கைக் கடற்படையால் வேட்டையாடப்படுவது அதே பருத்தித்துறை மீனவர்கள் போன்ற ஏழை அன்றாடம்காய்ச்சிகள். இருபக்கத்து ஏழை மீனவர்களும் எல்லை தாண்டுகிறார்கள், தாண்டுவது தெரியாமலே. ஆனால் ஒரு பக்கத்து மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள். 500 பேர்வரை பறிகொடுத்தும் எந்த அன்றாடம்காய்ச்சியும் வேண்டுமென்றே எல்லைகடந்துவந்து செத்துப்போகமாட்டான், அராஜகம் செய்யமாட்டான். தவறுதலாகக் கடந்து சாகிறவர்களும் இயந்திரப்படகுகளில் வந்து அட்டகாசம் செய்பவர்களும் வேறு வேறு என்பது திண்ணம். இலங்கையின் கடல்வளம்/ பாக்குநீரிணையின் கடல்வளம் யாருக்கோ போய்ச் சேர்கிறது. அதில் உரிமையுள்ள இலங்கை மீனவனுக்குக் கிட்டுவதில்லை. எல்லை கடக்கிற இந்திய மீனவனுக்கும் கிட்டுவதில்லை. இந்த துணுக்குகளை இணைக்க கிட்டுவது பெருமுதலாளிகளால் நடத்தப்படும் ஜனநாயகம் பற்றிய உண்மைகளாகவே இருக்கும். ஆனால் அவை மூடிமறைக்கப்படும்.

என்னைப் பொறுத்தவரை இதில் டெல்லியை நியாயப்படுத்தவே முடியாது. கொழும்பை நியாயப்படுத்துவது அயோக்கியத்தனம்.

Anonymous சொல்வது:

shut ur mouth mr refugee , go and first reform your country. bullshit nonsense

வந்தியத்தேவன் சொல்வது:

பெங்களூரில் இருந்து வந்த அனானி நண்பா நீ இன்னும் திருந்தவில்லையா?

கன்கொன் || Kangon சொல்வது:

:-)

அத்திரி சொல்வது:

குஜராத் மீனவர்கள் அடிக்கடி எல்லைதாண்டி பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்படுகிறார்களே ஒழிய சுட்டு வீழ்த்தப்படுவதில்லை..........சிங்கள மீனவர்கள் எல்லை தாண்டும் போது இந்திய அரசால் கைது செய்யப்படுகிறார்கள்...............உங்கள் கோணத்தில் பார்த்தால் இலங்கை அரசு அல்லது அரசின் கைக்கூலிகள் செய்யும் இத்தகைய செயலை நியாயப்படுத்துவது போல உள்ளது...உங்கள் பதிவு. கலைஞரையும் ,இந்திய மத்திய அரசையும் குறை சொல்வது போல் இருந்தாலும் இந்த பதிவு கடைசியில் எல்லை தாண்டினால் மீனவன் சுடப்படுவான் என்கிற ரீதியில்தான் இருக்கிறது உங்களின் பதிவு........................................................................................................

இக்பால் செல்வன் சொல்வது:

சொறி நாய்க்குப் பாவம் பார்த்தால், கடிக்காமல் விடாது, இந்த அரசியல் சொறி நாய்க்களுக்கு பாவம் பார்த்தால் நம்மை சும்மா விடாது !!! உண்மையில் சோற்றில் உப்புப் போட்டு தின்பவன் !! உண்மையான பத்தினிக்கு பிறந்தவன் ! ஒரு பெண்டாட்டிக்கு ஒரு புருஷானாய் இருப்பவன் ! உண்மையான ஆண்மகன் எவனும் இம்முறை இந்த நாய்களுக்கு ஓட்டுக் குத்தக் கூடாது ! விழுந்தால் போட்டவன் எல்லாம் பொட்டைப் பயலுக தான் !!! கிரிக்கெட் மானாட மயிலாடா பார்த்துக் கொண்டு தமிழ் உரிமையை விட்டுக் கொடுக்கும் ஆண் பெண் எல்லாம் கையடித்துக் கொண்டிருங்கள் !!!

இதை விடவும் கேவலாமாய் திட்ட வார்த்தை இல்லை . என் வன்பதிவுக்கு மன்னிக்க !

Chitra சொல்வது:

இரண்டு நாட்டும் அரசும் முழுஈடுபாட்டுடன் இருபக்க மீனவர்களின் பிரச்சனைகளையும் பேசித்தீர்க்கவேண்டும்


....... விரைவில், மக்கள் நலன் கருதி செய்ய வேண்டும்.

Vathees Varunan சொல்வது:

உண்மைகளை யாருமே அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்

Jana சொல்வது:

அருமையான அதேநேரம் ஆணித்தரமான எழுத்தாடல். தங்களுடன் முழுமையாக உடன்படுகின்றேன்.

கிருத்திகன் சொல்வதிலும் நியாயமான உண்மைகள் உள்ளன. அவற்றையும் நாம் கவனமாக கையாளவேண்டிய நிலை உள்ளது என்பதை தெளிவாக அவர் புரியவைத்துள்ளார்.

ஆனால் இங்கே இன்னும் சிலர்.. எம் அருகிலே எம் உடன்பிறப்புக்களின் பலி கண்டு நாம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதுகூட பிடிக்காமல் பிதற்றுவது வேதனை.
எங்கேயோ இருக்கும் காஸா, ஈராக் மக்களுக்காகவும், போராட்டங்கள் நடத்தி காரசாரமாக அமெரிக்காவை விமர்சிக்க அவர்களுக்கு எவ்வளவு உரிமைகள் உள்ளனவோ அதை விட மிக அதிகமான உரிமைகளும், கடமைகளும் எம் சகோதரர்கள் விடையத்தில் எமக்கு உண்டு என்று அவர்கள் புரிந்துகொண்டால் சரி.

ARV Loshan சொல்வது:

சொல்லவேண்டிய விஷயங்கள் வந்தி.
காரமாக சொல்லி இருக்கிறீர்கள்.

பலருக்கு இது ஜீரணிக்கக் கஷ்டமாக இருக்கும். ஆனால் உண்மை இது தான்.

எனது மனதிலும் இது பற்றி எழுந்த விஷயங்களைப் பதிவாகப் போட எண்ணியுள்ளேன்.

Anonymous சொல்வது:

தொப்புள் கொடி அறுந்தாலும் தாய், பிள்ளை, சகோதர உறவுகள் பிரிவதில்லை
தம்பியோ அண்ணனோ கோவப்பட்டால் அடுத்தவர் பொறுத்தே செல்வர்
நாம் பொறுத்துக்கொள்கிறோம்

Anonymous சொல்வது:

தொப்புள் கொடி அறுந்தாலும் தாய், பிள்ளை, சகோதர உறவுகள் பிரிவதில்லை
தம்பியோ அண்ணனோ கோவப்பட்டால் அடுத்தவர் பொறுத்தே செல்வர்
நாம் பொறுத்துக்கொள்கிறோம்

Anonymous சொல்வது:

தொப்புள் கொடி அறுந்தாலும் தாய், பிள்ளை, சகோதர உறவுகள் பிரிவதில்லை
தம்பியோ அண்ணனோ கோவப்பட்டால் அடுத்தவர் பொறுத்தே செல்வர்
நாம் பொறுத்துக்கொள்கிறோம்

இலங்கையன் சொல்வது:

ஒவ்வொறு நாட்டுக்கும் தனக்கு சொந்தமான் எல்லையை காக்கும் உரிமை உண்டு. எல்லை தாண்டாமல் இலங்கை அரசாங்கம் சுட்டால் அது இந்தியாவின் இறமையை பாதித்த செயல். இதை இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது. எனவே மீனவர்கள் தவறு செய்வதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மீனவர்கள் புரிந்து நடந்து கொண்டால் பிரச்சினை இல்லை. இலங்கையை அடக்கி ஆள தென் இந்தியா முயற்சித்தால் விளைவு இதுதான். இலங்கை ஒன்றும் இந்திய மாநிலம் அல்ல.டெல்லி சொன்னவுடன் கைகட்டி நிற்க.

கார்த்தி சொல்வது:

உண்மைகளை கடுமையாக சொல்லியிருக்கிறீாகள். பல இந்திய நண்பர்களை கொண்டிருந்தும் உண்மைகளை பயப்படாது கூறியது பராட்டுதற்குரியது.

maadhumai சொல்வது:

As vanthiyaththaevan said, there is no more thoppulkody uravu (if I could be able to write in tamil, its better. but bear me for this).

Once upon a time, we relied in Tamil nadu, can say in India. In one face, blaming India for batraying us(suitable word?)or Tamil Nadu people for not suppoting us in Eelam problem is acceptable. But I am not sure, how many of us willing to stepdown to to help them, if they face any difificult situation. I have the right to say this, because I am also an Eelam Tamil, and I know the practical issues of Indian Vamsaavali people in Sri Lanka and how we treated them for years.

We were emotionally connected with Tamil nadu people; thats true. But now the situation is different. There are no MORE thevethoothar to bring us rights from India. Just beleve in us. Support them as human being during this time, as some of the societies like fisheries communities expect a helping hand from us. This is my humble opinon.

Anonymous சொல்வது:

தமிழக தொப்புள் கொடி உறவுகள் விருப்பபடி இலங்கையின் கடல்வளம் முழுவதையும் தமிழக மீனவர்களுக்கே கொடுப்போம் எங்கள் இலங்கை மீனவன் பிச்சை எடுக்கட்டும்

குடுகுடுப்பை சொல்வது:

முத்துக்குமார் உட்பட டிவிட்டரில் இன்றைக்கு குரல் கொடுப்பவர்கள் அனைவரும் தமிழன் சாகிறானே என்று மனதார பதட்டப்படுபவர்கள், அதனை நீங்கள் கிஞ்சித்தும் புரிந்துகொண்டதாக கடைசி வரி இல்லை. எல்லை தாண்டியதால் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவது போல் உள்ளது. என் புரிதல் தவறாக இருக்கலாம.இலங்கைத்தமிழ் மீனவன் இந்திய கடற்படையால் சுடப்பட்டிருந்தாலும் இவர்கள் எதிர்ப்பை தெரிவித்திருப்பார்கள்.பொருளாதாரப்பிரச்சினை இரண்டு பகுதி தமிழ் மீனவர்களாலும் தீர்க்கப்படவேண்டியது. தொப்புள் கொடி உறவு கருணாவை வைத்து தீர்மானிக்கக்கூடியதல்ல, முத்துக்குமார் போன்ற முட்டாளை வைத்து.(அறிவுஜீவி அல்ல)