கொலைக் காற்று - இறுதிப்பாகம்

நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.

இதற்கு முன்னைய பகுதிகளை,
தரங்கத்திலும்,
எரியாத சுவடிகளிலும்,
சதீஷ் இன் பார்வையிலும்,
நா இலும்,
லோஷனின் களத்திலும்,
என் பார்வையிலும்
கன்கோனிலும்

படித்திருந்தால் தொடர்ந்து வாசியுங்கள் இல்லையென்றால் அவற்றைப் படித்தபின்னர் வாசியுங்கள்.

"ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா" என சிஜடி அதிகாரி ராஜாவின் மொபைல் சிணுங்கியது.

"ஹலோ ராஜா ஹியர்"

மறுபக்கம் ஏதோ முக்கியமான‌ செய்தி என்பதை ராஜாவின் முகம் அப்பட்டமாக காட்டியது "ஒன் மினிட்" என அழைப்பில் இருந்தபடியே மீண்டும் தன் லப்டாப்பில் சூரியபிரகாசின் ஜீமெயிலை சேர்ச்சினார்.

"யுரேகா" என பலமாக சத்தமிட்ட ராஜாவை சூரியபிரகாஷ் உட்பட அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

"ஹரி அப் கைஸ் குற்றவாளி அரஸ்டாகிவிட்டான், நாம இப்போ குற்றத்தின் சூத்திரதாரியை அரஸ்ட் செய்யவேண்டும்" என்றபடியே தன்னுடைய மகேந்திராவில் ஏறினார் இல்லை பாய்ந்தார்.

ராஜாவின் ஜீப் மீண்டும் கெளதமின் அபார்ட்மெண்டில் நுழைந்தது. இம்முறை பாதுகாப்பு உத்தியோகத்தர் தானே கேட்டைத் திறந்ததுடன் ஐசி கேட்காமாலே அவர்களை பவ்வியமாக உள்ளே விட்டார்.

கெளதமின் வீட்டு அழைப்பு மணியை அழுத்த முன்னர் புன்முறுவலுடன் கதவைத் திறந்தான் கெளதம்.

"வர்ஷா எங்கே" என்றபடி உள்ளே நுழைந்தனர் ராஜாவும் அவரது சகாக்களும்.

"வாங்கோ மிஸ்டர் ராஜா குற்றவாளி பிடிபட்டுவிட்டானா?" என அவரைப் பார்த்து கேட்ட வர்ஷாவை

"ஆமாம் நான் அவளுடன் தான் பேசிக்கொண்டிருக்கின்றேன்" என பலத்த சிரிப்புடன் ராஜா.

முகத்தில் ஏகப்பட்ட அதிர்ச்சியுடன் வர்ஷா "வாட் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை இது பொய்" எனக் கத்தினாள்.

"இதப்பாருங்க வர்ஷா நீங்களாக குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனை குறையும் இல்லை என்றால் கஸ்டம் தான் உங்கள் கூட்டாளிகள் எல்லோரையும் அரஸ்ட் பண்ணியாச்சு இனியும் உண்மையை மறைச்சு வேலையில்லை ஸ்பிக் அவுட்" ராஜா.

கொஞ்சம் பதட்டத்துடன் வர்ஷா பிளாஷ் பேக்கைச் சொல்லத் தொடங்கினாள்.

"என்னை பார்க்கின்ற எல்லோருக்கும் நான் நல்ல அழகி அறிவானவள் சகஜமாகப் பழகுகின்றவள் எனத் தான் தெரியும், ஆனாலும் என் மனசுக்குள் ஒரு சாத்தான் சின்ன வயதில் இருந்தே குடி இருக்கின்றது. நான் பணக்காரவீட்டின் ஒரே செல்லப்பிள்ளை என்பதால் சிறுவயசில் இருந்தே நான் கேட்பது எல்லாம் கிடைக்கும், அதிலும் எனக்கு புதிசுதான் வேண்டும். இப்படியான ஒரு பொசசிவ் கரேக்டர்".

"எனக்கு பெரிதாக நண்பர்கள் வட்டமில்லை. விதுரன், சூர்யபிரகாஸ், இருவரும் என் நெருங்கிய நண்பர்கள், சூர்யபிரகாசுடனான நட்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறியது. இந்நிலையில் தான் எனக்கும் கெளதமுக்கு திருமணம் செய்ய என் பெற்றோர்கள் முடிவு செய்தனர். எனக்கு இந்ததிருமணத்தில் விருப்பமில்லை."

இடையில் குறுக்கிட்ட கெளதம் "அடிப்பாவி இதை முதலிலையே சொல்லி இருந்தால் நானும் ஜெனியுடன் சந்தோஷமாக இருந்திருப்பேனே" என கோபப்பட்டான்.

"கெளதம் கூல் அவளைப் பேசவிடுங்கள்" ராஜா

கம்மிப்போன தொண்டையைச் செருமிக்கொண்டு மீண்டும் வர்ஷா.

"அப்போதுதான் என் பெற்றோருக்கு என் காதலைச் சொன்னேன் அவர்களோ ஒரு போலீஸ்காரனை உனக்கு கட்டித் தரமுடியாது கெளதத்தைக் கட்டினால் தான் உனக்கு சொத்துக் கிடைக்கும் என என்னை மிரட்டினார்கள். இதனால் நான் அவர்களின் இஸ்டத்துக்கு உடன்பட்டேன்."

"பின்னர் கெளதமும் சேகரும் என்னைப் பெண் பார்க்க வந்தார்கள். அடுத்தநாள் சேகர் என்னைத் தொடர்பு கொண்டு கெளதம் ஜெனி காதலைச் சொல்லி இந்த திருமணத்தில் இருந்து என்னை விலகச் சொன்னான். இந்த விஷயம் எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது, எல்லாவற்றிலும் புதுசு கேட்கும் எனக்கு கணவன் மட்டும் செகண்ட் ஹாண்டா என்ற அதிர்ச்சியும் இந்த விஷயம் என் நண்பர்கள் நண்பிகளுக்குத் தெரிந்தால் பெரிய அவமானமும் நேரும் என்ற குழப்பத்தில் விதுரன், சூர்யபிரகாஷ் இருவரையும் வெளியில் சந்திக்க விரும்பினேன். அடுத்த நாளே நான் சூர்யபிரகாஷ், விதுரன், இந்தக் கதையில் முதன்முதலாக அறிமுகமாகும் தாஸ் என்ற சூர்யபிரகாசின் நண்பர் நால்வரும் கொள்பிட்டியிலுள்ள ஒரு ரெஸ்டோரண்டில் சந்தித்தோம். அங்கே... "

"இதைப் பார் ஹனி நீ ஒண்டுக்கும் கவலைப் படாதே, நான் எல்லாத்தையும் பார்த்துகொள்கின்றேன்" சூர்யபிரகாஷ்.

"கொய்யாலே இவ்வளவு நாளும் நீ கிழிச்சாய் " விதுரன்

"உங்கடை சண்டையை நிப்பாட்டுங்கோ, நானே குழம்பிப்போய் இருக்கிறன், இப்ப என்ன செய்யலாம்" வர்ஷா.

"ஓகே எல்லோரும் கவனமாக கேளுங்கோ" எனச் சொல்லிய சூர்யபிரகாஷ் சுற்று முற்றும் பார்த்தபடி தன் கையில் இருந்த வொட்காவை ஒரு உறிஞ்சு உறிஞ்சுபோட்டு தன் திட்டத்தை சொல்லத் தொடங்கினான்.

"வர்ஷா நாம எல்லோரும் பக்கா பிளானாக இரண்டு கொலைகள் செய்யவேண்டும், அந்த கொலைகளை செய்தது கெளதம் என அவனை மாட்டிவிட்டால் போதும் உனக்கும் உன் திருமணத்தில் இருந்து விடுதலை, எனக்கும் நீ கிடைப்பாய் விளங்குதோ."

"ஓம் விளங்குது ஆனால் யார் அந்த கொலைகளைச் செய்வது? எப்படிச் செய்வது? " வர்ஷா

"என் நண்பன் தாஸ் தான் எல்லாவற்றையும் செய்யப்போகின்றான், இவன் ஒரு ஹைடெக் கிரிமினல் " சூர்யாபிரகாஸ்.

"அப்போ நான் எப்படியும் கெளதத்தை திருமணம் செய்யத்தான் வேண்டுமா?" தன் சந்தேகத்தை வர்ஷா கேட்டாள்.

"இந்தப் பிளானுக்கே அதுதான் முக்கியம் இல்லையென்றால் கெளதத்தை மாட்டிவிடமுடியாது அத்துடன் நீ விவாகரத்து பெறும் போது கெளதத்திடம் இருந்து ஒரு தொகைப் பணத்தை ஜீவனாம்சமாகப் பெறலாம் இல்லையா you know matrimony may not be good but alimony is good" சூர்யபிரகாஷ்.

"திருமணம் முடிந்தபின்னர் நீயும் கெளதமும் கண்டி, காலி என கொழும்புக்கு வெளியில் ஹனிமூன் போங்கோ, நாங்கள் இங்கே எல்லாவற்றையும் கச்சிதமாக முடிக்கின்றோம்" விதுரன்.


"ம்ம்ம் நீங்கள் சொல்கின்றபடியே நான் செய்கின்றேன், ஆனாலும் இன்னொருத்தியுடன் லிவிங் டுகெதரில் இருந்தவனுடன் சில நாட்களாவது வாழவேண்டும் என்பது எனக்குப் பிடிக்கவில்லை." வர்ஷா

"இன்னொரு முக்கிய விஷயம் ஹனி நீ கெளதமுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவனுடன் அன்னியோன்யமாகத் தான் இருக்கவேண்டும், கொஞ்சம் பிசகினாலும் அவனுக்கு சந்தேகம் வந்திடும். More Over அவனுக்கு நீயும் செகண்ட் ஹாண்ட் தானே " மெல்லிய நக்கலுடன் சூர்யபிரகாஷ்.


"எல்லாம் எங்கடை பிளானின் படி ஒழுங்காக நடந்தது. எங்கடை ஹனிமூன் நேரத்தில் வர்ஷாவை தாஸ் கொலை செய்துவிட்டான். அடுத்தநாளே சேகரையும் போட்டாச்சு, சேகர் ஜெனி இருவரையும் யாழ் சேவகன் என்றவன் தான் கொலை செய்தான் என்ற அலிபியை ஏற்படுத்தவே அந்த பேக் புரொபைலை அவன் உருவாக்கினான். ஆனாலும் அந்த முட்டாள் ஸ்கிறின் ஷொட் எடுக்கும் போது மாட்டிக்கிட்டான்".

"அப்போ விதுரனை ஏன் கொன்றீர்கள்?" சிஜடி ராஜா

"அது அவன் செய்த துரோகத்திற்க்கு பரிசு விதுரன் ஒருமுறை நான் ட்ரிப் போனபோது பாத்ரூமுக்குள் எடுத்த படங்கள் அவை அதை வைத்து என்னை மிரட்டத் தொடங்கினான், அதைவிட அவனுக்கு இந்தக் கொலைகளால் தனக்கும் ஆபத்து எனத் தெரிந்து எம்மைவிட்டு விலகவும் முயன்றான்"

"ஏன் அவனை உங்கடை காசாலை சமாளிக்கமுடியவில்லையோ" சிஜடிராஜா

"அவனுக்கு காசைவிட என் உடம்பைப் பார்த்தபின்னர் என் உடம்பின் மீதுதான் ஆசை, தன்ரை சபலத்தினால் தனக்கு தானே ஆப்படித்துவிட்டான்"

"இதுதான் சொந்த செலவில் சூனியம் "

ஜோக்கடித்த கெளதத்தை முறைத்துப் பார்த்த ராஜா வர்ஷாவை தன் கண்களாலேயே மேலே சொல்லவும் என்றார்.

"விதுரனை சூர்யபிரகாஷ் கொன்றுவிட்டார் அத்துடன் அவனின் லப்டாபில் என்னுடைய படங்களும் சூர்யபிரகாசின் படங்களும் இருந்தன அதனால் அவனுடைய லப்டாப்பையும் உடைக்கவேண்டி வந்தது. எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தபோது சூர்யபிரகாஷ் எப்படி அரெஸ்ட்டானான் என்பதுதான் எனக்கு புரியவில்லை" என முடித்தாள் வர்ஷா.

"இனி நான் சொல்கின்றேன்" என்ற ராஜாவை

"ஒரு நிமிடம் மிஸ்டர் ராஜா இப்போ மை டேர்ன்" என்றான் கெளதம்.

"வர்ஷா உன்னை உன் பணத்திற்காகவும் அதைவிட உன் அழகிற்காகவும் ஜெனியை கைவிட்டுவிட்டு கட்டியது என் தப்புத்தான். ஆனாலும் திருமணத்தின் பின் நான் உனக்கு விசுவாசமாகத்தான் இருந்தேன் ஹனிமூனிலும் ஓய்வு கிடைத்த சில நிமிடங்களுக்கு நீ உடனடியாக உன் லாப்டாப்பைத் திறப்பதும் பேஸ்புக்கையும் உன் மெயிலையும் செக் பண்ணுவது எனக்கு எரிச்சலைத் தந்தாலும் நான் சந்தேகப்படவில்லை"

"எஸ்க்யூஸ் மீ" என்றபடி பிரிட்ஜில் இருந்து ஜில்லென்று ஒரு கிளாஸ் தண்ணி குடித்தபின்னர் கெளதம் தொடர்ந்தான்.

"நாங்கள் கொழும்பு வந்தபின்னரும் வீட்டில் தங்காமல் ஹோட்டலின் இன்னும் கொஞ்ச நாள் என்ஜோய் பண்ணுவம் என்றபோது எனக்கு உன் மேல் மெல்லிய சந்தேகம் வந்தது, விதுரன் உன்னைச் சந்தித்த இரவில் நான் நித்திரைபோல் நடித்தேன், ஆனாலும் வெளியில் வந்து நீங்கள் கதைத்ததை கேட்கவில்லை. அதே நேரம் அடுத்த நாள் நீ உன் லாப்டாப்பில் பேஸ்புக்கில் ஆதவன் என்றவனுடைய வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்ற பாடலின் லிங்குக்கு லைக் பண்ணுவதைப் பார்த்துவிட்டேன்,அத்துடன் ஆதவனின் காதல் பாடல்களுக்கு நீ அடித்த கொமெண்டுகளும் லைக்குகளும் எனக்கு கொஞ்சம் சந்தேகம் தந்தன. அதே நேரம் அந்தப் பெயரில் இருப்பர் யார் எனப் பார்த்தால் அவரின் புரொபைல் படம் நடிகர் கமலஹாசன் ஈமெயில் ஐடியும் athavansp@yahoo.com என இருந்தது இருவருக்கும் பொதுவான நண்பராக‌ விதுரன். அடுத்தநாள் விதுரன் கொலை செய்யப்பட்டதை அறிந்த நான் இந்த விடயத்தை சிஜடி ராஜாவிடம் ரகசியமாகத் தெரிவித்தேன். "

"ஓக்கே கெளதம் இனி என் டேர்ன்" என சிஜடி ராஜா தொடங்கினார்.

"கெளதம் ஆதவன் பற்றிச் சொன்னதும் அவரின் புரொபைலை கொஞ்சம் நோண்டினேன் அதில் சூர்யபிரகாசும் யாழ் சேவகனும் ஆதவனின் நண்பன் என இருந்தது. அப்போதுதான் என் சந்தேகம் சூர்யபிரகாசின் மேல் வரத்தொடங்கியது. இடையில் யாழ் சேவகன் போலி என்பதும் தெரிய வந்தது, சூர்யபிரகாசின் மேல் சரியான ஆதாரம் கிடைக்காமல் அரெஸ்ட் செய்யமுடியாது என்பதால் ஆதாரம் கிடைக்கும் வரை காத்திருந்தேன். அந்த ஆதாரமும் உடனேயே கிடைத்தது விதுரனின் பேர்சில் கிடைத்த போட்டோவில் வர்ஷாவின் தோளின் மேல் சூர்யபிரகாஷ் கைபோட்டபடி அருகே விதுரன் நிற்கும் படம் தான் அது"

"வர்ஷா, விதுரன், சூர்யபிரகாஷ் என எல்லோரும் ஒரே நேர்கோட்டில் வந்ததும் உடனடியாகவே சூர்யபிரகாசை கைது செய்யும் படி ஆணையிட்டேன், ஆனாலும் அவன் எங்கள் எந்த ட்ரீட்மெண்டுக்கும் அசையவில்லை. சூர்யபிரகாஷ் தான் கொலையாளி என நிரூபிக்க எம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பது அவனுக்குத் தெரியும் அவனின் போலி புரொபைல்கள் கோர்ட்டில் எடுபடாது. அதே நேரம் சூர்யபிரகாசின் வீட்டைச் சோதனைப் போட்ட எமக்கு வர்ஷா வைத்திருக்கும் துப்பாக்கி போன்ற இன்னொரு துப்பாக்கியும் சில தோட்டாக்கள் சுடப்பட்ட நிலையில் கிடைத்தது."

"இவ் யூ டோண்ட் மைன்ட்" என்ற படி ஒரு கோல்ட் லீவை பத்த வைத்தபடி தொடர்ந்தார் ராஜா.

"விதுரனை தன்னுடைய இன்னொரு துப்பாக்கியால் கொன்றுவிட்டு வர்ஷாவின் துப்பாக்கி போன்ற துப்பாக்கியால் அவனின் உடமைகளைச் சேதப்படுத்தினான் சூர்யபிரகாஷ், இதுவும் கெளதமை மாட்டவைக்கும் சதிதான். இங்கே தான் சூர்யபிரகாசுக்கு எதிராக விதி விளையாடியது கெளதம் வடிவில். கெளதம் என்னுடன் கதைத்திருக்காவிட்டால் நாங்களும் கேஸ் முடியவேண்டும் என்ற எரிச்சலில் கெளதத்தை கைது செய்து கேசை மூடியிருப்போம்."

"எல்லாம் சரி மிஸ்டர் ராஜா நேற்று இங்கே எம்மைச் சுட்டவர்கள் யார்?" கெளதம்.

"அதுவும் வர்ஷா அண்ட் கோவின் நாடகம் தான் தாஸும் அவனது கூட்டாளிகள் சிலரும் தான், வர்ஷாவிற்க்கு மெல்லிய காயத்தை ஏற்படுத்துகின்றது போல் சுடுவதுடன் முடிந்தால் என்னை போடுவதும் அவர்களின் திட்டம். சகல மாஸ்டர் பிளானும் சூர்யபிரகாசின் மெயிலில் இருக்கின்றது. குற்றவாளிகள் எவ்வளவு பெரிய மூளைசாலிகள் என்றாலும் ஒரு இடத்தில் எப்படியோ தடுமாறுவார்கள். சூர்யபிரகாசும் அப்படித் தடுமாறிய இடம் தான் அந்த ஈமெயில். தாஸ் குழுவின் போலீசிடம் அகப்பட்டால் கெளதம் தான் இதன் மாஸ்டர் மைன்ட் எனச் சொல்லி மாட்டிவிடுவது என சகல திட்டமும் அதில் இருந்தது, அவர்களின் திட்டத்திற்க்கு அப்பால் பட்ட கொலைதான் விதுரனின் கொலை ஆனாலும் அந்தக் கொலையால் தான் குற்றவாளிகள் அகப்பட்டும் கொண்டார்கள்." என தன்னுடைய பேச்சை முடித்துக்கொள்ள இருந்த ராஜா

"ஓஓ மறந்துபோனேன் அந்த ஈமெயிலை மடையன் சூர்யபிரகாஷ், விதுரன், தாஸ், வர்ஷா என அனைவரிடைய பெயரையும் போட்டிருந்தது தான் எல்லோரையும் சிக்கவைத்தது" என்றபடி அந்த ஈமெயிலின் பிரிண்டை கெளதத்துக்கு காட்டினார்.



"Subject KK எனப்போட்டிருக்கே KK என்றால் என்ன?" கெளதம்.

"கொலைக்காற்று" வர்ஷா

"மிஸ்டர் ராஜா கிரேட் இன்வெஸ்டிகேசன்" என்ற கெளதம் கண்கலங்கியபடி ஆனாலும் என் லைவ்தான் இப்படிப்போய்விட்டது என விம்மினான்.

"டோண்ட் வொறி கெளதம் திருமணம் மட்டும் தான் வாழ்க்கை இல்லை, இந்த பிரச்சனைகளை மறந்துவிட்டு சில நாட்களில் நீங்கள் விரும்பினால் இன்னொரு வாழ்க்கையை தேடுங்கள், அதுவும் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் பேச்சிலார் லைவ்வை என்ஜோய் பண்ணுங்கள், எனிவே கேஸ் முடியும் வரை என்னுடன் தொடர்பில் இருங்கள்"

"வர்ஷா லெட்ஸ் கோ" என்றபடி அருகே இருந்த பெண் கான்ஸ்டபிளிடம் வர்ஷாவை அழைத்துவரும் படி கண்காட்டினார் ராஜா.

தன்னுடைய வரட்டுக்கெளரவத்தாலும் பிடிவாதத்தாலும் வாழ்க்கையை ஜெயிலில் கழிக்க‌ முகத்தை தொங்கபோட்டுக்கொண்டு போகும் வர்ஷாவை அந்த அப்பார்மெண்ட் மக்கள் பரிதாபம் கோபம் அனுதாபம் கலந்த பார்வை பார்த்தார்கள்.

சில நாட்களில் நீதிமன்றமும் நேரடிக்குற்றவாளிகளான சூர்யபிரகாஷ், தாஸ் இருவருக்கும் தூக்குத் தண்டனையும் குற்றத்துக்கு உடந்தையான வர்ஷாவுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்ததுடன், சிறப்பாக துப்புத் துலக்கிய சிஜடி ராஜாவுக்கு பாராட்டையும் அள்ளிவழங்கியது.

நீதிமன்றத்தைவிட்டு மகிழ்ச்சியுடன் வெளியில் வந்த ராஜாவின் மொபைலில் மும்மொழிகளிலும் பாராட்டுச் செய்தி இருந்தது அனுப்பியவரின் பெயரைப் பார்த்த ராஜாவிற்க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

முற்றும்.

பின்குறிப்பு : ஒரு கதையின் முடிவை அதுவும் ஏற்கனவே பலரால் எழுதப்பட்ட பகுதிகளின் முடிவை எழுதுவது எவ்வளவு கஸ்டம். முன்னைய பதிவுகளை பல தடவை படித்துப்பார்த்து முடிச்சுகளை ஒருமாதிரி அவிழ்த்துவிட்டேன். இனிமேல் தொடர்கதை எழுதினால் கடைசியாக எழுத எவனாவது என்னைத் தெரிவு செய்தால் அவர்களுக்கு KK தான்.

26 கருத்துக் கூறியவர்கள்:

SShathiesh-சதீஷ். சொல்வது:

அப்பாடா முடிஞ்சுதா?

தேரை எந்த சிக்கலும் இன்றி சுவாரஸ்யமாக அதேநேரம் உங்கள் குசும்பு மற்றும் சொந்த வாழ்க்கை(லொள்) அனுபவங்களின் இரண்டடி அர்த்தத்தோடு முடித்ததுக்கு நன்றி.

உங்களுக்கு மூன்று மொழியில் குறுஞ்செய்தி வருவதில் என்ன ஒரு ப்ரியம் ம்ம்ம்ம்

ம.தி.சுதா சொல்வது:

ஒரு மாதிரி முடிச்சிட்டாங்களா... முதல்ல பொய் தோய்ஞ்சிட்டு வாறன் உடம்பெல்லாம் ரத்த வெடுக்கு...

ஹ..ஹ..ஹ..

அருமையாயிருந்தது வந்தி அண்ணரே..


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

ஷஹன்ஷா சொல்வது:

இறுதிப்பகுதி சூப்பர்...நகரவே விடல......

மும் மொழி பாராட்டு ராஜா கூட ராஜாதானே.....!

Subankan சொல்வது:

//இதுதான் சொந்த செலவில் சூனியம் //

ஹா ஹா ஹா

//நீதிமன்றத்தைவிட்டு மகிழ்ச்சியுடன் வெளியில் வந்த ராஜாவின் மொபைலில் மும்மொழிகளிலும் பாராட்டுச் செய்தி இருந்தது//

ரசித்தேன் ;-)

//ஒரு கதையின் முடிவை அதுவும் ஏற்கனவே பலரால் எழுதப்பட்ட பகுதிகளின் முடிவை எழுதுவது எவ்வளவு கஸ்டம்//

உண்மைதான்

எதிர்பாராத திருப்பங்களுடன் இறுதிப்பகுதி, ரசித்தேன். வெற்றிகரமாக எல்லா முடிச்சுக்களையுமே அவிழ்த்துவிட்டீர்கள். ஆனால் ஏழு பாகங்களிலும் பொத்திவைத்த வர்ஷாவை கடைசியில் இப்படிக் கொலைகாரியாக்கியதை நினைத்தால்தான் ஒரே அழுவாச்சியா வருது

anuthinan சொல்வது:

அண்ணா ஒரு மாதிரி கிளைமாக்ஸ்க்கு வந்து படத்தை முடிசிட்டிங்க போல!!!!

வாழ்த்துக்கள்!!

//ஒரு கதையின் முடிவை அதுவும் ஏற்கனவே பலரால் எழுதப்பட்ட பகுதிகளின் முடிவை எழுதுவது எவ்வளவு கஸ்டம். முன்னைய பதிவுகளை பல தடவை படித்துப்பார்த்து முடிச்சுகளை ஒருமாதிரி அவிழ்த்துவிட்டேன். இனிமேல் தொடர்கதை எழுதினால் கடைசியாக எழுத எவனாவது என்னைத் தெரிவு செய்தால் அவர்களுக்கு K//

இப்படி சொன்ன தொடர்கதை எழுதுறவங்க நிலை என்ன ஆகிறது

எல் கே சொல்வது:

அற்புதமான கதை. முடிவில் ஒரு கேள்வியோட நிறுத்தி இருக்கீங்க

கன்கொன் || Kangon சொல்வது:

அடப்பாவி குரு....
நான் கஷ்ரப்பட்டு வர்ஷாவக் காப்பாத்துவம் எண்டு எல்லாம் செய்ய கடைசி நேரத்தில இப்பிடி ஒரு திருப்பு திருப்பிவிட்டீர்கள்.

எதிர்பாராத திருப்பம்.

நிறைய இடங்களில் நீங்கள் அப்படியே தெரிகிறீர்கள்.
*சொந்த செலவில் சூனியம்,
*அடிப்பாவி
*// டோண்ட் வொறி கெளதம் திருமணம் மட்டும் தான் வாழ்க்கை இல்லை //
:-))))

Bavan சொல்வது:

வாவ் ஒருமாதிரி கொலைகாற்றை முடிவுக்குக்கு கொண்டு வந்திட்டீங்கள்.

அசத்தல் கடைசிப்பாகம்..:)

சிஷ்யனை மிஞ்சிவிட்டீர்கள் வந்தியண்ணா..:P

வெற்றிகரமாக ஓடிமுடிந்த அஞ்லோட்டத்தில் பங்கெடுத்தது மகிழ்ச்சி..:D

கடைசி SMSசில் ஒருவரை போட்டுத்தள்ளியிருக்கலாம்..ஹிஹி

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

கலக்கலாய் முடித்திருக்கிறீர்கள் வந்தி...

தர்ஷன் சொல்வது:

ஏதாவது சுபமா செஞ்சிருக்கலாமே வர்ஷாவையும் மாட்டி விட்டு கௌதமையும் தனிமரமாக்கி விட்டீர்கள். anyway ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறீர்கள் எனத் தெரிகிறது.

ARV Loshan சொல்வது:

அட பாவி வந்தி.. எங்கள் வர்ஷாவை கொலைகாரியாக்கி விட்டீர்களே...
எரிச்சலாக இருக்கிறது..

சூரியப் பிரகாஷ் இல்லாவிட்டால் என்ன.. சதீஷை வைத்தாவது இதற்காக லண்டனில் உங்களைப் போட்டுத்தள்ளி இன்னொரு கொலைக்காற்றை ஆரம்பிக்கத் தான் வேண்டும்..

பல இடங்களை ரசித்தேன்.
குறிப்பாக கடைசி மும்மொழி எஸ் எம் எஸ் & பிற் குறிப்பு :)

SShathiesh-சதீஷ். சொல்வது:

//சூரியப் பிரகாஷ் இல்லாவிட்டால் என்ன.. சதீஷை வைத்தாவது இதற்காக லண்டனில் உங்களைப் போட்டுத்தள்ளி இன்னொரு கொலைக்காற்றை ஆரம்பிக்கத் தான் வேண்டும்..
//

@ லோஷன் அண்ணா.....
இத்தால் சகலருக்கும் அரிய தருவது என்னவென்றால் என் மாமாவுக்கு என்ன நடந்தாலும் அதற்க்கு லோஷன் அண்ணாவே பொறுப்பு. கொலை செய்ய தூண்டியவ்ருக்கே தண்டனை அதிகம்.

அடுத்த கொலை காற்று எழுத தயாராகுங்கள். லொள்

Shafna சொல்வது:

ரொம்ப ரசித்தேன்.நன்றாகவே முடித்திருக்கிறீர்கள் ஆனால் மும்மொழி sms ஐப் பார்த்தால் "முற்றும்" அல்ல "தொடரும்" என்று போட்டு மீண்டும் உங்கள் சிஷ்யனை வைத்து வர்ஷாவை காப்பாற்றி, லோஷன் அண்ணாட உதவியோட, KK யை ஆரம்பித்த புண்ணியவானின் தலையிலே கட்டியிருக்கலாம்? கொஞ்சம் அதிகமாவே உங்கள் மூளைக்கு வேலை கொடுத்து ரசிக்க வைத்ததற்கு நன்றிகள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//SShathiesh-சதீஷ். said...
அப்பாடா முடிஞ்சுதா?//
ஓம் ஒருமாதிரி முடிச்சாச்சு...

//தேரை எந்த சிக்கலும் இன்றி சுவாரஸ்யமாக அதேநேரம் உங்கள் குசும்பு மற்றும் சொந்த வாழ்க்கை(லொள்) அனுபவங்களின் இரண்டடி அர்த்தத்தோடு முடித்ததுக்கு நன்றி.//

சொந்த வாழ்க்கையா? ஓஓ நான் காவல்துறையில் வேலை செய்தனானா?

//உங்களுக்கு மூன்று மொழியில் குறுஞ்செய்தி வருவதில் என்ன ஒரு ப்ரியம் ம்ம்ம்ம்//

மன்னவன் வந்தானடி....

வந்தியத்தேவன் சொல்வது:

//ம.தி.சுதா said...
ஒரு மாதிரி முடிச்சிட்டாங்களா... முதல்ல பொய் தோய்ஞ்சிட்டு வாறன் உடம்பெல்லாம் ரத்த வெடுக்கு...//

ஹாஹா ஆனால் நான் ஒருதரையும் கொல்லவில்லை அதெல்லாம் முதல் எழுதியவர்கள் தான் கொன்றது. ஆகவே இந்த பகுதியில் துடக்கு இல்லை.

//அருமையாயிருந்தது வந்தி அண்ணரே..//

நன்றிகள் சகோதரா...

வந்தியத்தேவன் சொல்வது:

//“நிலவின்” ஜனகன் said...
இறுதிப்பகுதி சூப்பர்...நகரவே விடல......//
உங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள்

//மும் மொழி பாராட்டு ராஜா கூட ராஜாதானே...//
இருக்கலாம் ஹிஹிஹி.

வந்தியத்தேவன் சொல்வது:

//Subankan said...

ரசித்தேன் ;‍)//
நன்றி

//எதிர்பாராத திருப்பங்களுடன் இறுதிப்பகுதி, ரசித்தேன். வெற்றிகரமாக எல்லா முடிச்சுக்களையுமே அவிழ்த்துவிபட்டீர்கள். ஆனால் ஏழு பாகங்களிலும் பொத்திவைத்த வர்ஷாவை கடைசியில் இப்படிக் கொலைகாரியாக்கியதை நினைத்தால்தான் ஒரே அழுவாச்சியா வருது//

எல்லாப் பெண்களும் நல்ல பெண்கள் அல்ல என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தவே வர்ஷாவைக் கொலைகாரி ஆக்கினேன். வர்ஷாவை கொல்லாமல் இன்னொருவரை கொலையாளி ஆக்கியிருக்கலாம் ஆனால் பலர் எதிர்பார்த்ததை எழுதாமல் விடுவதுதான் நல்ல எழுத்தாளனுக்கு அழகெனப் படித்திருந்தேன் அதுதான் அப்படிச் செய்தேன்.(கதை தானே அடுத்த கதையில் வர்ஷாவை நல்லவள் ஆக்கவேண்டியதுதான்).

வந்தியத்தேவன் சொல்வது:

//Anuthinan S said...
அண்ணா ஒரு மாதிரி கிளைமாக்ஸ்க்கு வந்து படத்தை முடிசிட்டிங்க போல!!!!

வாழ்த்துக்கள்!!//

நன்றிகள் அனு.

//இப்படி சொன்ன தொடர்கதை எழுதுறவங்க நிலை என்ன ஆகிறது//

அவர்கள் எப்படியும் எழுதுவார்கள் அடுத்தது பேய்க்கதை எழுதினால் நல்லா இருக்கும்

வந்தியத்தேவன் சொல்வது:

//எல் கே said...
அற்புதமான கதை. முடிவில் ஒரு கேள்வியோட நிறுத்தி இருக்கீங்க//

நன்றிகள் எல் கே அந்தக் கேள்விக்குறியின் விடை பெரும்பாலான
இலங்கையர்களுக்குத் தெரியும்

வந்தியத்தேவன் சொல்வது:

//கன்கொன் || Kangon said...
அடப்பாவி குரு....
நான் கஷ்ரப்பட்டு வர்ஷாவக் காப்பாத்துவம் எண்டு எல்லாம் செய்ய கடைசி நேரத்தில இப்பிடி ஒரு திருப்பு திருப்பிவிட்டீர்கள்.//

சுபாங்கனுக்கு கூறியதுதான் தங்களுக்கும் வர்ஷா போன்ற பொசசிவ், ஈகோ, பிடிவாதம் பிடிக்கின்ற பெண்களுடன் நான் பழகி இருக்கின்றேன் சந்தித்திருக்கின்றேன் அதுதான் அப்படி ஒரு பெண்ணாக உங்கள் கனவுக் கன்னி வர்ஷாவை நான் குற்றவாளியாக்கியது அழகான ஆபத்து வர்ஷா,

//நிறைய இடங்களில் நீங்கள் அப்படியே தெரிகிறீர்கள்.//

கதை என்றாலே பெரும்பாலும் எழுத்தாளனின் பார்த்த கேட்ட அனுபவித்த அனுபவங்கள் தான்.

வந்தியத்தேவன் சொல்வது:

//Bavan said...
வாவ் ஒருமாதிரி கொலைகாற்றை முடிவுக்குக்கு கொண்டு வந்திட்டீங்கள்.//
இல்லை நான் இன்னொரு சுற்றுக்கு விட்டிருப்பேன் ஆனால் வாசிப்பவர்களுக்கு அலுப்படிக்கும் என்பதால் முடித்துவிட்டேன்.

//அசத்தல் கடைசிப்பாகம்..:)//
நன்றிகள்

//சிஷ்யனை மிஞ்சிவிட்டீர்கள் வந்தியண்ணா..:ப்//
இதெல்லாம் ரொம்ப ஓவர் குருவை மிஞ்சிய சிஷ்யன் அவர்(சில விடயங்களில்)

//வெற்றிகரமாக ஓடிமுடிந்த அஞ்லோட்டத்தில் பங்கெடுத்தது மகிழ்ச்சி..:ட்//

எனக்கும் இப்படியான அஞ்சலோட்டங்கள் பிடிக்கும், உண்மையான அஞ்சலோட்டம் பிடிக்காது.

//கடைசி SMSசில் ஒருவரை போட்டுத்தள்ளியிருக்கலாம்..ஹி//
அடப்பாவி குஞ்சு நான் நல்லா இருப்பது பிடிக்கவில்லையா.

வந்தியத்தேவன் சொல்வது:

//யோ வொய்ஸ் (யோகா) said...
கலக்கலாய் முடித்திருக்கிறீர்கள் வந்தி...//

நன்றிகள் யோகா உங்கள் தொடர் ஒன்றும் என் கணக்கில் இருக்கு விரைவில் எழுதுகின்றேன்

வந்தியத்தேவன் சொல்வது:

//தர்ஷன் said...
ஏதாவது சுபமா செஞ்சிருக்கலாமே வர்ஷாவையும் மாட்டி விட்டு கௌதமையும் தனிமரமாக்கி விட்டீர்கள். anyway ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறீர்கள் எனத் தெரிகிறது.//

சுபமாக்கினால் அது தமிழ்ப் படம் போல் வந்துவிடும் ஆனாலும் உங்கள் வர்ஷாமேல் உள்ள அக்கறைக்கு நன்றிகள். வர்ஷா ஒரு பத்து வருடத்தின் பின்னர் வெளியே வந்துவிடுவார் யாராவது உங்களைப்போன்ற அபிமானிகள் வாழ்க்கை கொடுக்கலாம். கெளதம் தனிமரமாக மாட்டார் லண்டன் ரிட்டேர்ன் என்றபடியால் ஒரு இன்னொரு திருமணத்துக்கு வாய்ப்பிருக்கு,,

உண்மைதான் ரொம்பவே சிரமப்பட்டுப்போனேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

////LOSHAN said...
அட பாவி வந்தி.. எங்கள் வர்ஷாவை கொலைகாரியாக்கி விட்டீர்களே...
எரிச்சலாக இருக்கிறது..//

அடப்பாவிகள் விட்டால் வர்ஷாவுக்கு ரசிகர் மன்றமே வைப்பீர்கள் போல் இருக்கின்றது, கங்கோன், சுபாங்கு இருவருக்கும் கொடுத்த விளக்கம் தான் உங்களுக்கும்.

//சூரியப் பிரகாஷ் இல்லாவிட்டால் என்ன.. சதீஷை வைத்தாவது இதற்காக லண்டனில் உங்களைப் போட்டுத்தள்ளி இன்னொரு கொலைக்காற்றை ஆரம்பிக்கத் தான் வேண்டும்..//
லண்டன் போலீசார் பயங்கர உசார் போடுவது கஸ்டம். சதீசை வைத்தா அண்ணே நீங்கள் கொமடீ கீமடி பண்ணவில்லைத்தானே.

//பல இடங்களை ரசித்தேன்.
குறிப்பாக கடைசி மும்மொழி எஸ் எம் எஸ் & பிற் குறிப்பு//

நன்றிகள் அதுதான் இந்தக் கதையின் வெற்றி என நினைக்கின்றேன்

வந்தியத்தேவன் சொல்வது:

//SShathiesh-சதீஷ். said...
@ லோஷன் அண்ணா.....
இத்தால் சகலருக்கும் அரிய தருவது என்னவென்றால் என் மாமாவுக்கு என்ன நடந்தாலும் அதற்க்கு லோஷன் அண்ணாவே பொறுப்பு. கொலை செய்ய தூண்டியவ்ருக்கே தண்டனை அதிகம். //

அடப்பாவி சதீஸ் எனக்கு நல்லது நடந்தாலும் லோஷனே பொறுப்பு எனவும் இதனை அர்த்தப் படுத்தாலும் ஹிஹிஹி

//அடுத்த கொலை காற்று எழுத தயாராகுங்கள். லொள்//
அடுத்த கொலைக் காற்றா எஸ்கேப்

வந்தியத்தேவன் சொல்வது:

//Shafna said...
ரொம்ப ரசித்தேன்.நன்றாகவே முடித்திருக்கிறீர்கள் ஆனால் மும்மொழி sms ஐப் பார்த்தால் "முற்றும்" அல்ல "தொடரும்" என்று போட்டு மீண்டும் உங்கள் சிஷ்யனை வைத்து வர்ஷாவை காப்பாற்றி, லோஷன் அண்ணாட உதவியோட, KK யை ஆரம்பித்த புண்ணியவானின் தலையிலே கட்டியிருக்கலாம்? கொஞ்சம் அதிகமாவே உங்கள் மூளைக்கு வேலை கொடுத்து ரசிக்க வைத்ததற்கு நன்றி//

உங்கள் கருத்துகளுக்கு நன்றிகள்.
வர்ஷா அறையினுள் சென்றவுடன் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது என்ற வரிகளை எழுதி மீண்டும் சிஷ்யனிடம் கொடுக்கத்தான் எண்ணி இருந்தேன் ஆனாலும் என் பதிவில் கொலை வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில் முடிவை எழுதிவிட்டேன். உங்கள் கருத்துகளை லோசன் அண்ணா ஏற்று அடுத்த தொடர்கதையை ஒரு அந்தாதியாகவே எழுதுவார் எனத் தெரிவித்துக்கொள்கின்றேன்.