2010ல் ரசித்த பதிவுகள் - பகுதி 1

வணக்கம் நண்பர்களே

சென்ற ஆண்டில் நான் படித்து ரசித்த பதிவுகளின் பட்டியலை இட்டிருந்தேன். அதனைப்போலவே இந்த முறையும் டிசம்பர் கடைசியில் இடலாம் என நினைத்திருந்தால் வேலை, படிப்பு, குளிர், ஸ்னோ, சோம்பேறித்தனம், எனப் பல காரணங்களினால் தள்ளிப்போனது. இன்றைக்கு கிடைத்திருக்கும் நேரத்தில் முதல் பகுதியை எழுதினால் எப்படியும் அடுத்தபகுதி நாளையோ அல்லது சில நாட்களிலோ எழுதப்படும் என நினைத்து எழுதியதுதான் இந்தப் பதிவு,



இவை நான் ரசித்துப் படித்தவையே தவிர அந்தப் பதிவரின் முத்திரைப் பதிவோ அல்லது சிறப்புப் பதிவோ அல்ல. நான் குறிப்பிடுகின்ற பதிவைவிட அவர்கள் மிகவும் சிறந்தவற்றை எழுதியிருக்கலாம் ஆனால் எனக்கு அந்தப் பதிவர்களின் பெயர் நினைவில் வந்தால் இந்தவருடம் அவர்க:ள் எழுதிய இந்தப் பதிவுதான் ஏனோ ஞாபகத்தில் வருகின்றது.

இவ்வளவு முன்னுரை போதும் இனி நான் ரசித்தவை உங்களுக்காகவும்....

அசோக்பரன்

அண்மையில் இலங்கைத் தேசியகீதம் தமிழ்மொழியில் இசைக்ககூடாது என அரசாங்கம் கொண்டுவந்த சட்டமூலத்திற்கு எதிராக தனது உள்ளக்குமறல்களை அசோக் இதில் கொட்டித் தீர்த்துள்ளார். அசோக்கின் பதிவுகள் பெரும்பாலும் அரசியல் சார்ந்ததாகவே இருக்கின்றன. இளம் கன்று பயமறியாது என்பதுபோல் அசோக்கின் இந்தப்பதிவும் சில அரசியல்வாதிகளை சாடுகின்றது.

நீக்கப்படவிருக்கும் இலங்கையின் தமிழ்த்தேசிய கீதமும், அமைச்சரவையின் அப்பட்டமான பொய்களும்.


அச்சுதன்

செல்லமாக பங்குச் சந்தை என எம்மால் அழைக்கப்படும் அச்சுவால் சென்ற வருடம் எழுதப்பட்ட கட்டுரைகளில் பங்குச் சந்தையுடன் பொதுவான நாணயம் பற்றிய விடயங்களும் வந்தமை, என்னைப்போன்ற சாதாரண வாசகனைக் கூட ஈர்த்துவிட்டது. உலகில் சீனாவின் வல்லாதிக்கத்தையும் இந்தக் கட்டுரை மூலம் தெரிந்துகொள்ளகூடியதாக இருந்தது.

உலக வல்லரசுகளின் நாணயப் போர்


ஆதிரை

செம்மொழி மாநாட்டின் மறுபக்கத்தை அலசிய இந்தப் பதிவில் ஆதிரை சொன்ன பாட்டி பற்றிய உருவக கதை பலருக்கு புரிந்திருக்கும். கருணாநிதியின் புகழ் பாட நடத்திய இந்தமாநாட்டைப் பற்றியும் பேராசிரியர் சிவத்தம்பியின் பல்டி பற்றியும் பாட்டியின் கதையூடாக ஆதிரை கொண்டு சென்ற பாங்கு சிறப்பானது.

செம்மொழி மாநாடும் சில அலட்டல்களும்


பாலவாசகன்

நகைச்சுவை, கிரிக்கெட் போன்றவை அதிகம் பிடித்த எனக்கு இவர் கிரிக்கெட்டை நகைச்சுவையாக்கி எழுதியது மட்டும் பிடிக்காமலா போகும். அதிலும் காதல் கவிதைகளை கிரிக்கெட் பாசையில் சொன்ன பாணியில் இவரது திறமையைப் பார்த்து நான் கிளீன்போல்ட் ஆகிவிட்டேன். மருத்துவரின் இந்தக் கவிதையைப் பார்த்து யார் யார் கிளீன்போல்ட்டானார்களோ சுபாங்கனுக்குத் தான் வெளிச்சம்.

கிரிக்கெட் பதிவு இப்படியும் எழுதலாம் !!


பவன்

மொக்கை என்றால் பவன் தான். எத்தனையோ மொக்கைகள் போட்டிருந்தாலும் சிலவற்றை நினைச்சு நினைச்சு சிரிக்கலாம். அதிலும் மன்மதன் அம்பு பாடலையும் தற்போதைய ஆஸி அணியின் நிலையையும் வைத்து பவன் செய்த சித்து விளையாட்டு அதிலும் திருகோணமலை வேகாத வெயிலில் உஷா ஃபேனுக்கடியில் இருந்து எழுதிய இந்தக் கவிதை பவனுக்கு ஒரு மைல் கல்தான்.

பொன்டிங்கின் சொம்பு..:P


புல்லட்

ஓய்வுபெற்ற அல்லது ஓய்வுக்கு வற்புறுத்தப்பட்ட முன்னாள் பதிவர் புல்லட்டின் பெண்கள் பற்றிய பதிவுகள் எனக்கு எப்பவும் பிடித்தவை.(சிலவேளைகளில் இருவரும் ஒரே அலைவரிசையில் இருப்பதோ தெரியவில்லை). இந்தப் பதிவும் சில பெண்களுக்கு கடுப்பை கிளப்பி புல்லட்டினை அடக்கியதோ யாம் அறியோம். புல்லட்டின் மீள் வருகையை அவரின் கோடிக்கணக்கான(?) வாசகர்கள் சார்பில் நானும் எதிர்பார்க்கின்றேன்.

கடுப்பைக்கிளப்பும் பெண்கள்- பார்ட் 3


கேபிள் சங்கர்

வலையுலக சூப்பர் ஸ்டார் கேபிளாரின் சினிமா விமர்சனத்தை பார்த்துவிட்டு படம் பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். (எந்த மொக்கைப் படத்தையும் முதல் நாள் பார்க்கும் தைரியம் இவருக்கு மட்டும் தான் உண்டு). சினிமாவில் இருப்பதாலோ என்னவோ பல பதிவுகள் சினிமாவைச் சார்ந்தவைதான். இடைக்கிடை எண்டர் கவிதை எழுதி அசரவைக்கின்றார். சன் டிவி விஜய் டிவி போட்டி பற்றியும் சூப்பர் சிங்கர் பற்றியும் எழுதிய இந்தப் பதிவில் நடுநிலையாக எழுதிய பதிவு இது.

சூப்பர் சிங்கர் ஜுனியர்2 V/S சன் டி.ஆர்.பி


சேரன் கிரிஷ்

காத்திரமான எழுத்துக்கு சொந்தக்காரர். இடைக்கிடையே எழுதினாலும் அந்த எழுத்துக்களில் ஒரு அனல் அடிக்கும். சேரனிடம் இருந்து இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கும் வாசகர்களில் நானும் ஒருவன். இலங்கையின் பொற்சிறையில் வாடும் பிராமணர்களைப் பற்றிய ஒரு பதிவு தான் இது.

பிராமணன்

சித்ரா

அமெரிக்காவில் இருந்து எழுதும் பெண் பதிவர். வெட்டி பேச்சு என வலை இருந்தாலும் சிரிப்பினூடாக பல சிந்தனைகளையும் எழுதுகின்றவர். பெண் பார்க்கும் படலத்தை தனக்கே உரிய படங்கள் போடும் பாணி நகைச்சுவை என அழகாக எழுதியிருக்கின்றார். இந்த வடைபோச்சே பலருக்கு பலவிதமாக ஏற்பட்ட அனுபவமாக இருக்கும்.

ஒரு வினாடியில் "வடை" போச்சே!


கெளபாய் மது

மதுயிசம் என்ற புதுவிடயத்தை என்னைப்போன்ற பச்சிளன் பாலகன்களுக்கு பரப்பியவர் நம்ம கெளபாய். இடையிடையே எழுதும் வேலைப்பளு கூடிய பதிவர். இவரின் பெரும்பாலான கதைகள் ரியலாகவே இருக்கும் அல்லது உண்மைக்கதைகளுக்கு கொஞ்சம் கற்பனை சாயம் பூசியிருப்பார். இந்தக் கதையும் பலரின் வாழ்க்கையில் நிச்சயம் நடந்திருக்கும்.

நீ ஒரு ரிச்சு கேள், நான் ஒரு பிச்சை போய்


டயானா

தன்னுடைய பாடசாலை அனுபவங்களை துறு துறு திருதிரு என எழுதியவர் ஏ.ஆர்.ரகுமானின் கொள்கைபரப்பாளராக (சும்மா தான் எந்த உள்குத்தும் இல்லை) ட்விட்டர் பேஸ்புக்கில் மாறியபின்னர் தன் வலைப்பக்கம் எட்டிக்கூடப் பார்க்கின்றாரில்லை. அவரின் பாடசாலை அனுபவங்கள் போல் பல்கலைக்கழக வானொலி அனுபவங்களை எழுதினால் நன்றாக இருக்கும்.

துறு துறு டயானா... திரு திரு முழியுடன்!


ஈழத்துமுற்றம்

ஈழத்துமுற்றம் நான் புகுந்த வீடுகளில் ஒன்று. எத்தனையோ ஈழத்து வட்டார வழக்கு பதிவுகள் வந்தாலும், ஒரு காலத்தில் நாம் அனுபவித்த விடியோ படம் போடுகின்ற நிகழ்வை தம்பி வடலியூரான் அழகாக வர்ணித்திருப்பார். இதனை வாசித்தபோது அட இது நான் அனுபவித்த விடயம் என்ற எண்ணமே வந்தது.

இண்டைக்கு எங்கன்ரை வீட்டை படம் போடுறம்


ஜாக்கி சேகர்

இவரின் சாண்ட்விஜ் நாண்ட்வெஜ் எப்படி காரமோ அதுபோல் இடையிடயே எழுதும் சில பதிவுகளிலும் அனலடிக்கும். தமிழக அரசைச் சாடி எழுதிய இந்தப் பதிவு அவரின் சமூக அக்கறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அடுத்தமாதம் எப்படியும் சிங்கள ராணுவத்தால் சாக போகும் இந்திய(தமிழக) மீனவனுக்கு ஒரு கடிதம்...


ஜனா

காத்திரமான பதிவுகள், மொழிபெயர்ப்புக் கதைகள், இந்தவாரப் பதிவர் அறிமுகம் என எழுதியவர், பதிவர்களை வைத்து நடக்கும் மொக்கைகளில் பெரும்பாலும் சிக்குபவர்களில் நானும் கங்கோனும் சதமடிக்கும் நிலையில் இருக்கும் போது மன்மதன் அம்பு கமல் கவிதையில் ஈர்க்கப்பட்டு நம்ம மருத்துவர் பாலவாசகனை பாட்டுடைத் தலைவனாக்கி எழுதிய மெஹா மொக்கைக் கவிதை இது. அந்தக் கவிதையின் மெட்டில் ஜனாவின் வார்த்தைகள் அமர்ந்தமை ஜனாவிற்க்கே கைவந்த வார்த்தை ஜாலம்.

வாசகன் வம்பு!!


கானா பிரபா

என் பதிவுலக அண்ணா. எந்த விடயத்தையும் அநாயசமாக எழுதுவது இவருக்கு கைவந்த கலை. நாம் எல்லாம் ஒரு வலையை வைத்துக்கொண்டே கஸ்டப்படும்போது பலவிதமான வலைகளை வைத்திருக்கும் வலைஞன். உலகம் சுற்றும் வாலிபன் இவர். அண்மையில் யாழ் சென்றுவந்தபோது அங்கேயுள்ள தியேட்டரில் படம் பார்த்த கதையை தனக்கே உரியபாணியில் எழுதியிருந்தார். ஆனாலும் சூப்பர் பல்கனியில் எவருடனோ இருந்துபார்த்ததை மட்டும் என்னைப்போன்ற பாலகர்கள் மனம் நோகக்கூடாது என மறைத்தமை அவரின் நல்ல மனசுக்கு எடுத்துக்காட்டு.

யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் படம் பார்க்கப் போன கதை


கரவைக்குரல்

லண்டனில் நான் சந்தித்த முதல்ப் பதிவர். நம்ம மண் மணம் கமிழ எழுதும் இன்னொரு ஊடகவியளாளர். விரைவில் ஒரு குறும்படத்திலும் கதாநாயகனாக வலம்வரவிருக்கின்றார். பலரின் நன்மை கருதி இவர் வெளிநாட்டு வாழ்க்கையை எழுதவில்லை என அண்மையில் சந்தித்தபோது சொன்னார். ஆனாலும் இந்த பதிவில் அவர் எழுதியிருக்கும் அனுபவம் கொஞ்சம் வித்தியாசமானது.

பட்ட பாடு பெரும்பாடு


கங்கோன்

என்னைக் குரு எனச் சொல்லி என்னைக் கலாய்க்கும் பெரிய்ய மனதுக்காரர். நித்திரையால் எழுப்பி 1986ல் மெல்பேர்ன் டெஸ்ட்டில் ஆஸி சார்பில் யார் சதமடித்தது என்றால் உடனே சரியான பதில் கொடுக்கும் கிரிக்கெட் அகராதி. இவரின் தேடுதல் பாராட்டுக்கு அப்பால்பட்டது. கிரிக்கெட் மட்டுமல்ல நல்லசமூக, மொக்கை, கதை கூட எழுதும் ஆற்றல் கொண்டவர் ஆனாலும் சில நாட்களாக முகனூலிலும் ட்விட்டரிலும் பொழுதைப்போக்குகின்றார். இந்தப் பதிவு விளையாட்டுப் பதிவு ஒன்று எப்படி இருக்கவேண்டும் என்பதற்க்கு ஒரு சான்று.

பேர்த் போட்டி பற்றிய ஆய்வு.


கீர்த்தி

தன் கவிதைகளால் பலரைக் கவர்ந்தவர். அதனால் தானோ என்னவோ இந்தவருடம் பெரும்பாலும் கவிதைகளாகவே எழுதி இருக்கின்றார். எனக்கு கவிதை என்றால் கொஞ்சம் அலர்ஜி. அதனால் கீர்த்தி தன் மொக்கைத் திறமையைக் காட்டிய இந்தப் பதிவு ஏனோ பிடித்துவிட்டது. ஸ்ரேயா என்ற மாட்டை வைத்து நம்ம பதிவர்கள் சிலர் மாட்டுப்பொங்கல் செய்கின்றார்கள் என தன் கற்பனையில் சிறப்பாகவே எழுதியிருந்தார்.

பதிவர்களின் திறமையும் பொங்கல் கொண்டாட்டமும்


கீத்

கிருத்திகனின் பதிவுகள் அண்மைக்காலமாக பெரும்பாலும் சமூகம் சார்ந்தே காணப்படுகின்றது. சில இடங்களில் பேசாப் பொருளைக்கூட துணிச்சலாக பேசியிருந்தார். அண்மையில் இவர் எழுதிய ஒரு பதிவு இன்னொரு இணையத்தில் கூட உசாத்துணையாகச் சேர்த்திருந்தார்கள். இந்தப் பதிவில் சமூகவலைப்பின்னல்களின் பிரச்சனைகளையும் வெளிநாட்டு மோகத் திருமணங்கள் பற்றியும் அலசியிருக்கின்றார்.

சில சமபவங்கள், வருத்தங்கள்


லோஷன்

அதிகார மையத்தின் முன்னாள்த் தலைவர். சகலவிதமான பதிவுகளையும் தனக்கே உரிய பாணியில் எழுதுகின்றவர். நண்பர்களைக் கிண்டலடித்து பதிவு எழுதுவது என்பது இவருக்கு தனி இன்பம். யாழ் சென்றுவந்தபோது அந்த பயணத்தை படங்களுடன் இட்டிருந்தார். இவரின் எழுத்துக்கள் சொல்லாத பல விடயங்களை இவரின் கமேரா சொன்னது.

A 9 வழியாக யாழ்ப்பாணம் - ஒரு படப் பதிவு


மருதமூரான்

இவரின் பதிவுகள் மட்டும் தான் சீரியசானவை,ஆனால் இவரோ பழகுவதற்க்கு இனிமையானவர். தனக்குப் பட்டதை எந்தவித பூசிமொழுகலும் இல்லாமல் சொல்லும் தைரியம் தான் இவரிடம் எனக்கு பிடித்தது. இந்தப்பதிவிலும் சொந்த ஊருக்கு சென்ற வலிகளைச் சொல்கின்றார்.

இடம்பெயர்வது மட்டுமல்ல, சிதைந்த தேசத்தில் மீண்டும் கால் வைப்பதும் வேதனையானது.


மு.மயூரன்

கட்டற்ற கணணிக்காதலன் இவர், சர்ச்சைகளில் சிக்கும் பதிவுகள் எழுதுவது இவருக்கு மட்டுமே கைவந்த கலை. இவரின் சில வரிகளே பல கதைகளைச் சொல்லும். இந்தப் பதிவின் தலைப்பே பல விடயங்களைப் பற்றிக் கதைக்கின்றது. அதையே மு,மயூரனும் முதல் வரியில் குறிப்பிடுகின்றார். "ஏ ஆர் ரஹ்மான் இந்த சிகப்பழகு முகப்பூச்சு இசையின் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரியானார்". இந்த வரிகளை இப்போதைய காலநிலையில் சிந்தித்தால் பலவிடயங்கள் புரியும்.

செம்மொழி மாநாட்டுப் பாடல் எல்லாவற்றைப்பற்றியும் கதைக்கிறது


மயூரேசன்

இன்னொரு கணணிக் காதலன். கணணி தொழில்நுட்ப பதிவுகள், இடையிடையே சினிமா விமர்சனம் என எழுதுகின்றவர் எழுதிய வித்தியாசமான ஒரு வரலாற்றுப் பதிவு இது. இரண்டாம் உலகயுத்தம் பற்றிய இந்தப் பதிவு மயூரேசனின் தேடலை பறைசாற்றுகின்றது.

இலங்கையில் ஜப்பானியத் தாக்குதல்


மதிசுதா

குறுகிய காலத்தில் பதிவுலகம் முழுவது பிரபலமடைந்த பெருமை நம்ம சுடு சோற்றுப் புகழ் மதி சுதாவிற்கே சாரும். பதிவு எழுதி பிரசுரித்த கையுடன் இவரின் முதல் பின்னூட்டம் வந்துவிடும். பிரபல இயக்குனர் ஒருவரின் கதைத் திருட்டை அம்பலப்படுத்திய பதிவு இது.

இலங்கை கதை திருடிய பிரபல இயக்குனர்..


டொக்டர் எம்,கே.முருகானந்தன்

மருத்துவக் குறிப்புகளுடன் நல்ல நகைச்சுவைகள் சினிமா நூல் விமர்சனம் எனச் எழுதும் எங்கள் மருத்துவர். அண்மைக்காலமாக தன்னுடைய கமேராவினால் சுட்ட சில விடயங்களையும் பதிவாக்கியிருக்கின்றார். யாழ் மண்ணுக்கே உரிய தோட்டக்காணிகளை அழகாக படம் பிடித்ததுடன் மட்டுமல்லாமல் சின்னச் சின்ன குறிப்புகளுடன் அவற்றைத் தந்திருப்பது ரசனை.

யாழ்ப்பாணத் தோட்டங்கள்


பின்குறிப்பு : எங்கே என்னுடைய பெயர் என இதில் பெயரில்லாத நண்பர்கள் தேடாதீர்கள். இது முதலாம் பகுதி தான் அனைவரின் பதிவுகளையும் எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இரண்டாம் பகுதியில் ஏனைய நண்பர்களின் ரசித்த பதிவுகள் வரும். அப்படி அதிலும் இல்லையென்றால் நான் உங்கள் பதிவுகளை ரசிக்கவில்லை என்று அர்த்தமில்லை. சிலவேளைகளில் என் ஞாபகத்துக்கு உங்கள் பதிவுகள் வரவில்லை என்பதுதான் நிஜம்.

24 கருத்துக் கூறியவர்கள்:

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

அநேகமானவை வாசித்ததுதான் என்றாலும் மீள வாசிக்க தூண்டியமைக்கு நன்றிகள்

கன்கொன் || Kangon சொல்வது:

Thanks Guru..

Will comment this night in details...

Subankan சொல்வது:

எல்லாமே அருமையான பதிவுகள் வந்தியாரே :)

Chitra சொல்வது:

ஒவ்வொன்றும் அபார தேர்வு. அந்த லிஸ்ட்ல் போய் ....... அய்..... என் பதிவும் இருக்குதே.... ரொம்ப சந்தோஷமாக இருக்குதுங்க.... தேங்க்ஸ்ங்க. அப்போ அப்போ, என்னையும் அறியாமல் நானும் ஏதோ நல்லா எழுதிடுறேன் போல. எல்லா புகழும் இறைவனுக்கே! :-)

Unknown சொல்வது:

அருமையான தொகுப்பு. நிறைய நல்ல பதிவுகளின் நிறைவான பதிவு, வந்தனங்கள் வந்திய தேவரே...

sinmajan சொல்வது:

தவற விட்ட சில நல்ல பதிவுகள் வாசிக்கக் கிடைத்தது..நன்றி

சமுத்ரா சொல்வது:

நல்ல திரட்டு

Jana சொல்வது:

சீரியஸாக பல எழுதினாலும், நகைச்சுவையான (மொக்கை) பதிவுதான் பிடிச்சுரக்கா????
ஊர்ர்ர்ர்ர்....
எனக்கும் அதுதான் பிடிக்கும். ஹி..ஹி..ஹி..

வடலியூரான் சொல்வது:

வந்தியண்ணா எத்தினையோ ஈழத்துமுற்றப் பதிவுகள் வந்தாலும் அதைவிடவெல்லாம் நான் அழகா ஈழத்து நடையிலே எழுதியிருக்கிறேன் எண்டதெல்லாம் ஓவர்.நானும் சும்மா எழுதினன்.. ம்ம்ம் எண்டாலும் அதையும் ஞாபகம் வைச்சுப் போட்டதுக்கு பெரியதொரு நன்றி

balavasakan சொல்வது:

அட உங்களுக்கு பிடிச்சிருந்ததா..! நன்றி வந்தியண்ணா !!

என்ட மொக்கைய எல்லா இடமும் திருப்பி திருப்பி போட்டு ஏன்யா என்னை செம மொக்கையாக்குறீங்கோ..!!!


###சீரியஸாக பல எழுதினாலும், நகைச்சுவையான (மொக்கை) பதிவுதான் பிடிச்சுரக்கா????
ஊர்ர்ர்ர்ர்....
எனக்கும் அதுதான் பிடிக்கும். ஹி..ஹி..ஹி..###

உர்ர்ர்ர்ரர்ரர்ர்ர்ர்ர்ர்ர்ர
கர்ர்ர்ர்ர்ர்ரகர்ர்ர்ர்ர்ர்ர
உங்கட கற்பனைக்கு இடி விழ ஜனா அண்ணா!!

கார்த்தி சொல்வது:

நல்ல பதிவுகளின் ஒரு திரட்டு!

கன்கொன் || Kangon சொல்வது:

என்னுடைய பதிவையும் குறிப்பிட்டமைக்கு நன்றி வந்தியண்ணா.

பொதுவாகவே ஏற்கனவே படித்த பதிவுகள் என்றாலும் திரும்பப் படிக்க ஆவலைத் தூண்டிவிட்டீர்கள், இங்கிருப்பவற்றை திரும்பப் படிக்கலாம் என்று யோசிக்கிறேன்.

அடுத்த பாகத்திற்கும் எதிர்பார்க்கின்றேன்.

தர்ஷன் சொல்வது:

தவற விட்டுருக்க கூடிய நல்ல பதிவர்களையும் நல்லப் பதிவுகளையும் இனங்காட்டியமைக்கு நன்றி ஒவ்வொன்றாய் வாசிக்க ஆரம்பிக்கிறேன்

Muruganandan M.K. சொல்வது:

நன்றி வந்தி, எனது பதிவைப் பற்றியும் பகிர்ந்ததற்கு.

Cable சங்கர் சொல்வது:

நன்றி வந்தியத்தேவன்.

Unknown சொல்வது:

Book Mark பண்ணி வைக்கிறனியளா???

நன்றி வந்தியண்ணா :))

Unknown சொல்வது:

Dr. Muruganantham தோட்டக்காணிகள் பதிவு அருமை... அதைப் பகிர்ந்தமைக்கு இன்னொரு நன்றி வந்தியண்ணா

ம.தி.சுதா சொல்வது:

என் பதிவும் பிடிச்சுருக்கா நன்றி வந்தி அண்ணா... முக்கியமாக இன்னொரு விடயம்.. நிங்கள் குறிப்பிட்ட அத்தனை பதிவிலும் எனது கருத்துரை இருக்குமே...

ARV Loshan சொல்வது:

ஆகா,, நம்ம படப் பதிவு? நன்றி வந்தி மாம்ஸ்.. :)
கிருத்திகன் கேட்ட அதே கேள்வி..

anuthinan சொல்வது:

அனைத்து தெரிவுகளும் சூப்பர் அண்ணா!!!

கானா பிரபா சொல்வது:

என் பதிவை இணைத்தமைக்கும் நன்றிகள் வந்தி. என்னை போய் பெரிய மனுசனா சொல்லிக்கிட்டு.

கானா பிரபா சொல்வது:

வணக்கம் வந்தி

இதில் நீங்கள் குறிப்பிட்ட பல பதிவர்களின் பதிவுகளைத் தொடர்ந்து வாசிப்பவன் ஆனால் நீங்கள் இப்படிக் கொடுத்திருப்பது புதுமை. மிக்க நன்றி தல,நீங்கள் தானாமே அந்த சூப்பர் பல்கனியின் முன்னோடி ;-)

Bavan சொல்வது:

பதிவிட்ட உடனயே வாசிச்சிட்டன், ஆனா இங்க அடிக்கிற குளிர், மழைக்கு டைப்பண்ணிப் பஞ்சியாக் கிடந்திச்சு..ஹிஹி

எனது பதிவையும் ரசி்ச்சிருக்கீங்க அண்ணா, நன்றி நன்றி நன்றி..:)

மற்றைய எல்லாரின் பதிவுகளும் படித்தேன்
எனக்கும் மது அண்ணா, கன்கொன், அஷோக், டாக்டர் பாலாண்ணே, புல்லட் அண்ணே, ஜனா அண்ணா, ஆகியோரின் மிகப்பிடித்த பதிவு நீங்கள் குறிப்பிட்டவைதான்..:D

Jackiesekar சொல்வது:

மிக்க நன்றி வந்திய தேவன்.