அரசியல்
இலங்கை
இலங்கை அதிபர் மஹிந்தராஜபக்சேயின் அமெரிக்க விஜயம் பலரிடம் பலவிதமான சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. ஒரு சாரார் அவர் தனது தனிப்பட்ட சொந்தப் பயணமாகச் சென்றிருக்கின்றார் எனவும் இன்னொரு சாராரோ அவர் யாழில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்கச் சென்றபோது அவரின் தலைப்பாகை பொங்கல் பானைக்குள் விழுந்தது அபசகுனம் என்பதால் சோதிடர்களின் ஆலோசனைப் படி சில நாட்கள் சொந்த நாட்டில் நிற்ககூடாது என்ற ஆலோசனையின் பெயரில் சில நாட்கள் அமெரிக்காவில் நிற்பதாகவும் இன்னொரு பக்கம் அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு அமைய யுத்தகுற்றங்களை விசாரிக்க அவர் சென்றதாகவும் கூறுகின்றனர். எது எப்படியோ இலங்கை சுதந்திரதினமான பெப்ரவரி 4ந்திகதி அவர் இலங்கைக்கு வந்து ஆற்றும் உரையில் தான் உண்மைகள் தெரியவரலாம் அதாவது அவரின் அமெரிக்க விஜய உண்மைகள்.
இந்தியா
தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது மானாட மயிலாட போல வாரம் தோறும் நடக்கின்றது. கருணாநிதியும் தன்னுடைய டெம்லேட் கடிதத்தை வழக்கம்போல் மன்மோகனுக்கு அனுப்பிவிடுவார். தமிழக மக்களும் இதனைவிட தலையாய விடயங்களான இம்முறை எந்தக் கட்சி என்ன இலவசம் தரும், ஸ்பெக்ட்ரத்தில் அடித்த கோடிகளில் எமக்கு தேர்தல் பணமாக எவ்வளவு தருவார்கள் போன்றவற்றை மட்டும் சிந்திப்பார்கள். ஒரு சில வலைப்பதிவர்கள் மட்டும் ஆவேசமாக பதிவு எழுதுவார்கள் ஆனாலும் தேர்தல் வந்தால் கருணாநிதிக்கு ஓட்டுப்போடுவார்கள் காரணம் கேட்டால் ஜெயலலிதாவைவிட கருணாநிதி ஊழல் செய்தது குறைவு எனச் சொல்வார்கள். அரசியல்வாதிகளைச் சொல்லிக் குற்றமில்லை, மக்கள் மாக்காளக இருக்கும் வரை அவர்கள் தங்கள் குடும்ப சுயநல அரசியலை நடத்தியே தீருவார்கள்.
சினிமா
மீண்டும் ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் 2010 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் பரிந்துரைகளில் வந்துள்ளது. 127 Hours என்ற ஆங்கிலப்படத்தின் பின்னணி இசைக்கும் பாடலுக்கும் இம்முறை ஏ.ஆர். ரகுமானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முறையும் சென்ற முறைபோல் இசைப்புயல் தன்னுடைய இரு கைகளிலும் விருதை உயர்த்திப்பிடிப்பாரா இறைவனுக்குத் தான் தெரியும்.
பாடும்நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இந்திய அரசின் பத்மபூசண் விருது இம்முறை கிடைத்திருக்கின்றது, ஏற்கனவே அவருக்கு பத்மஸ்ரீ கொடுத்து கெளரவித்த இந்திய அரசு இம்முறை பத்மபூசணையும் அவரது மகுடத்தில் இட்டிருக்கின்றது. இவருடன் நடிகர்கள் சசி கபூர் வகீதா ரகுமான் இருவரும் திரைத்துறையில் பத்மபூசண் விருதுபெறுகின்றார்கள். கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ் லக்ஸ்மன் நடிகைகள் தபு, கஜோல், நடிகர் இர்பான்கான், பாடகி உஷா உதூப் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுகள் பெறுகின்றார்கள்.
சிறுத்தை
சிறுத்தை படத்தை பார்க்க நேரம் கிடைத்தது. தனிப்பட்ட எல்லாம் விமர்சனம் எழுதனேரமில்லை ஆக்வே ஒரு சின்ன விமர்சனம். படம் பார்க்கின்றவர்கள் காதுகளில் மட்டுமல்ல உடல் முழுக்க பூப்பூவாக வைக்கின்றார்கள். தனிமனிதனாக சகல தாதாக்களையும் கார்த்தி ஒருவரே நின்று அடித்துதுவைக்கின்றார். கார்த்தி சந்தாணம் நகைச்சுவைகள் படத்தின் பலம், வித்தியாசாகர் இசையில் பாடல்கள் பரவாயில்லை. போலிஸ் வேடம் கார்த்திக்கும் பொருந்துகின்றது. தமன்னாவிற்க்காக படம் பல தடவை பார்க்கலாம். ஜிந்தக்கா ஜீந்தாக்கா. இதுபோல் ஒரு கதையுடன் அல்லது சில காட்சிகளுடன் விஜயகாந்த் படமோ அர்ஜூன் படமோ வந்ததாக ஞாபகம், கமல் படங்களை மட்டும் பிறமொழிக் காப்பி என விழித்திருந்து பார்க்கும் அறிவுஜீவிகளின் கண்ணில் இந்தப் படங்கள் படவே படாது. மொத்தத்தில் சிறுத்தை நல்லதொரு பொழுதுபோக்குப் படம்.
தமிழக அரசின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், கோலங்கள் மற்றும் ஆனந்தம் ஆகியவை சிறந்த நெடுந்தொடராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இரண்டும் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் நடந்தது என நினைக்கின்றேன். கோலங்களின் போது தேவயாணிக்கு இரண்டுதடவை குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது. ராதிகாவுக்கும் ஏதோ ஒரு விருது கிடைத்திருக்கின்றது, அனைத்துவிருதுகளும் சன், கலைஞர் தொலைக்காட்சி தொடர்களுக்கும் மட்டும் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து தானே விஜய், ஜெயா, மக்கள், தமிழன், மெஹா, வசந்த், கேப்டன், பொதிகை போன்ற தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இல்லை சின்னத்திரை என்றாலே அரச குடும்பத்தினருக்கு மட்டும் சொந்தமானதா?
விளையாட்டு
தென்னாபிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரை இந்தியா 3க்கு 2 என்ற கணக்கில் தோற்றுவிட்டது. உலகக்கோப்பைகளுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்திய கேப்டன் டோணி உட்பட யுவராஜ் சிங், ரெய்னா, போன்றவர்களின் ஃபார்ம் கேள்விக்குறியாகி நிற்கின்றது. அதிலும் அண்மைக்காலமாக டோணி சோபிக்கவேயில்லை. யூசுப் பதான் என்ற தனிமனிதனையும் சச்சின் என்ற இமயத்தையும் மட்டும் நம்பி இந்திய அணி உலகக்கோப்பையில் களமிறங்கினால் 96ல் ஈடன்கார்டனில் நிகழ்ந்த நிகழ்ச்சி ரிப்பீட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மறுபக்கம் ஆஷாஸை வென்ற இங்கிலாந்து தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் ஆஸியிடம் தடுமாறுகின்றது. இன்றைய போட்டியிலும் ஆஸி வென்றால் தொடர் அவர்களுக்குத் தான்.
சந்தேகம்"நடுநிலையாளர்கள் எல்லோரும் நல்லவர்கள் என சொல்ல முடிவதில்லை..#பட்டறிவு,"
என லோஷன் தனது பேஸ்புக்கில் ஒரு மெசேஜ் இட்டிருந்தார். அதற்க்கு பலரும் பலவிதமான கருத்துக்கள் சொன்னாலும் மருதமூரான் என்கின்ற புருசோத்தமன் தங்கமயில் "உண்மை. நடுநிலையாளர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. இதுவும் பட்டறிவு"
என ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருந்தார் அதற்க்கு என் பெயரை மையப்படுத்தி அண்ணன் கானாபிரபா "வந்தியைச் சொன்னாரோ இவர்? வந்தி தான் தமனாவும் அழகு அமலா பால் உம் அழகு என்று நடு நிலையாக இருக்கிறார்"
என்றார். அதற்க்கு என் பதில் "பக்கத்தில் ஐஸ்வர்யா ராய் இருந்தாலும் தமன்னாவின் இடுப்புத்தான் அழகு என்பேன் #நடுநிலை "
அது சரி உண்மையான நடுநிலை என்றால் என்ன?
ஒருமுறை மிஸ்டர் ஜீக்கு (மிஸ்டர் எக்ஸின் உரிமை ஆனந்தவிகடனுக்குத் தான்)இடுப்பு பிடித்துவிட்டது. அதனால் தன்னுடைய நண்பனை அழைத்து மருத்துவரிடம் செல்ல உதவி செய்யுமாறு கேட்டார். மிஸ்டர் ஜீயின் நண்பரோ இதற்கெல்லாம் மருத்துவர் தேவையில்லை ஹாஸ்பிட்டலில் புதிதாக இருக்கும் மிசினில் உன் சிறுநீரின் மாதிரியை செலுத்தினால் அந்த மிசின் உனக்கு ஆலோசனை சொல்லும் என்றார். உடனடியாக மிஸ்டர் ஜீயும் நண்பரும் ஹாஸ்பிட்டல் சென்று மிஸ்டர் ஜீயின் கொண்டுபோன சிறுநீரை அந்த மிசினில் அதற்குரிய குழாயினுள் செலுத்தினார்கள். ஒரு நிமிடத்தில் மிசின் தனது வாயிசில் "உனக்கு சாதாரண இடுப்பு நோ, சுடுநீர் ஒத்தடம் கொடுக்கவும்" என்றது.
அடுத்தநாள் அந்த மிசினைச் செக்பண்ண மிஸ்டர் ஜீ தன்னுடைய சிறுநீருடன் தனது வீட்டு நாயின் மலம், தனது மனைவியின் சிறுநீர், மகளின் உமிழ்நீர், மற்றும் தன்னுடைய வீட்டுக் கிணற்று நீர் என அனைத்தையும் கலந்து கொண்டுபோனார்.
கொண்டுபோன கலவையை அந்த மிசினில் செலுத்தியபோது மிசின் கூறியது "உன் வீட்டுக் கிணற்றில் சுண்ணாம்பின் அளவு கூடிவிட்டது, உன் நாய்க்கு ஒழுங்காக குளிக்கவார்க்கவும் அதற்க்கு தோல் வியாதி, உன் மகள் கஞ்சாவிற்க்கு அடிமையாகியுள்ளாள் உரிய நடவடிக்கை எடுக்கவும், உன் மனைவி கர்ப்பம் ஆனால் காரணம் நீ அல்ல, இனிமேல் என்னைப் பரிசோதிக்க முயன்றால் உன் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்".
பாடும்நிலா பத்மபூசண் எஸ்பிபிக்காக
சாகர சங்கமத்துக்காக இசைஞானி இளையராஜா இசையில் பத்மபூசணை எஸ்.பி.பிக்கு கிடைத்த இன்னொரு தேசிய விருதுப்பாடல். இசைஞானி, கலைஞானி, பாடுநிலா என எனக்குப் பிடித்தவர்கள் இருப்பதால் இந்தப் பாடலை பத்மபூசண் எஸ்.பி.பி க்கு சமர்ப்பிக்கின்றேன்.
12 கருத்துக் கூறியவர்கள்:
சுடுபிட்ஸா...
இலங்கை: இப்படித் "தெரிவிக்கப்படும்" கருத்துக்களைச் சொல்பவர்கள் ஏதாவது ஆதாரத்துடன் சொல்கிறார்களா?
வெறுமனே speculate செய்து தெரிவிக்கப்படும் கருத்துக்களில் எரிச்சல் தான் வரும்.
அவங்கள் என்ன செய்தா நமக்கென்ன... ;-)
இந்தியா: அரசியல் எல்லாவற்றையும் தாண்டி உயிர்கள் கொல்லப்படுவது கண்டிக்கத்தக்கது.
கொலை என்பது எப்போதுமே சரியான தீர்வாகாது, எங்குமே.
சினிமா: // இறைவனுக்குத் தான் தெரியும். //
ஏன் ஒஸ்கார் விருதைத் தெரிவுசெய்யும் நடுவர் குழுவுக்கும் தெரியும்தானே? ;-)
சிறுத்தை: பார்க்கவில்லை, பெரிதாகத் திட்டமும் இல்லை.
// தமிழ்நாட்டில் இருந்து தானே விஜய், ஜெயா, மக்கள், தமிழன், மெஹா, வசந்த், கேப்டன், பொதிகை போன்ற தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. //
2007, 2008 இல கப்டன் தொலைக்காட்சி வரேல குருவே. :P
விளையாட்டு: இந்தியாவுக்கு கூகூகூகூகூ...
இந்திய அணிக்கு ஆதரவளித்த குருவுக்கும் கூகூகூகூ....
அவுஸ்ரேலியா நல்லா விளையாடுது கொஞ்சம், இப்ப. ;-)
நடுநிலை என்றால்,
நடுநிலை வகிக்கும் ஒருவிடயத்தில் இருதரப்பும் எதிரியாய் இருப்பது. ;-)
நகைச்சுவை: :-)))))))
கடைசிப்படம் : யோவ், திருந்தமாட்டீர்களா? ;-)
அரசியல் - பார்க்கலாம்
சினிமா - இசை சம்பந்தப்பட்ட இரு மகிழ்ச்சியான செய்திகள். இசைப்புயல் மீண்டும் வருதைத் தூக்குவார் என நம்பலாம்.
சிறுத்தை - நேற்றுத்தான் பார்த்தேன். நல்ல பொழுதுபோக்குப் படம்.
ஜோக் - ஹையோ ஹையோ
தமன்னா - இடுப்புக்கு மட்டும் ;-)
ஆகா நிறைய நாட்களுக்குப் பிறகு சுவையான, கார சூப்..
கலக்கல்..
மஹிந்தராஜபக்சேயின் அமெரிக்க விஜயம் - பெரிய விசயங்கள்/விஷயங்கள் எமக்கு எதுக்கு ??
தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது - இந்தியாவுக்கு தடுக்க முடியாத போது.. :(
ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் - முற்கூட்டிய வாழ்த்துகள்
சிறுத்தை - :) நான் சொல்லிட்டேன்.. ஏற்கெனெவே..
கமல் படங்களை மட்டும் பிறமொழிக் காப்பி என விழித்திருந்து பார்க்கும் அறிவுஜீவிகளின் கண்ணில் இந்தப் படங்கள் படவே படாது//அதான் இது தெலுங்குப்படத்தின் நேரடிப் பதிப்பு என்று எல்லாருக்கும் தெரியுமே..
தமன்னாவிற்க்காக படம் பல தடவை பார்க்கலாம்// இது எப்ப இருந்து? யாரோ வெள்ளைக் கரப்பான் என்று அடிக்கடி எங்கள் தமன்னாவை வைததாக ஞாபகம். ஆதாரமாக ஸ்க்ரீன் சொட்டும் இருக்கு..
அது சரி உண்மையான நடுநிலை என்றால் என்ன?
//
ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டோம் என்று ஆகப் போறீங்க?
இதோ வாசியுங்கள்....
http://loshan-loshan.blogspot.com/2009/03/blog-post.html
மிஸ்டர் ஜீ// சிரித்தேன்.. முன்பொரு தடவை சில மாற்றங்களோடு விடியலில் சொன்னேன்..
அந்த ஜீ - நம்ம G இல்லைத் தானே? ;)
தமன்னா படம் - யப்பா.. ;)
mm
nice. :-)
கலக்கல்ஸ்.. ரஹ்மான் வென்றுவரவேண்டும் என்ற பிரார்த்தனைகள். அப்புறம் சச்சின் பாராதரட்னா விருதுபற்றி எதிர்பார்த்தேன்.
:))
சூப்பர் பதிவு....
அரசியல்- நடக்கிறது நடக்கட்டும்....(சில நாட்களுக்கு இதுதான் என் முடிவு..)
சினிமா- முற்கூட்டிய வாழ்த்துகள் எங்கள் oscAR.Rahman க்கு...
வாழ்த்துகள் பாடும் நிலா...!
பாடல்-ரசனை..
தமன்னா..-என்னை கவராத நடிகை
இடுப்பு ஸ்பெசல் சூப்....
தலைவருக்கு ஆஸ்கார் கிடைக்க வாழத்துக்கள்.
பாடும் நிலா எஸ்.பீ.பீக்கு இன்னும் பல விருதுகள் கிடைக்க வேண்டும்...
தமன்னா இடுப்பை காட்டும் கடைசி படத்தை நான் பார்க்கவில்லை
மாம்ஸ், தமன்னாவை பிடித்து தொங்கி கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். வெள்ளாவி புகழ் தப்சி உங்க கண்ணுக்கு தெரியேல்லையா?
இந்த நடுநிலைமை பிரச்சினை பெரிய பிரச்சினைதான்:lol
நடுநிலையாக எழுதப்பட்ட பதிவு ;)
Post a Comment