இன்றைய டயல் ஜெயா டிவி நிகழ்ச்சியில் பிரபல வலைப்பதிவர் திரு. கேபிள் சங்கர் அவர்களின் நேர்காணல் இடம்பெற்றது. தனது சிறப்பான திரை விமர்சனங்கள் மூலம் பலரை ஈர்த்த பெருமை திரு கேபிள் சங்கரையே சாரும்.
இந்த நிகழ்ச்சியில் ஜாக்கிசேகர், சஞ்சய்காந்தி, சுகுமார், போன்ற சில வலைப்பதிவாளார்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டார்கள்.
மிகவும் அழகாகவும் தெளிவாகவும் சங்கர் அவர்கள் வலைப்பதிவு பற்றிய விளக்கங்களை வழங்கினார். எப்படி வலைப்பதிவு ஆரம்பிப்பது, திரட்டிகள், பின்னூட்டங்கள், அட்சென்ஸ் , பிரபல வலைப்பதிவுகள் என இவரின் விளக்கங்கள் பலரையும் சென்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதே நேரம் சில தொலைபேசியில் விளக்கம் கேட்ட நேயர்கள் வலைப்பதிவையும் இணையத்தையும் போட்டுக்குழப்பிவிட்டார்கள். கேபிள் சங்கரைக் கேள்விகள் கேட்ட அம்மணியும் சில கேள்விகளைத் திரும்ப திரும்பகேட்டார். இவருக்கு வலைப்பதிவுகள் பற்றிய தெளிவின்மை இருப்பது தெளிவாகத் தெரிந்தது. பொதுவாக கேள்வி கேட்பவர்கள் அந்த துறைபற்றி ஓரளவேணும் ஹோம் வேர்க் செய்திருக்கவேண்டும். இதற்க்கு சிறந்த உதாரணமாக ரமேஸ் பிரபா அவர்களைக் குறிப்பிடலாம்.
புதிதாக வலைப்பதிவுகள் ஆரம்பிக்க இருப்பவர்களுக்கு இவரது பேட்டி நிச்சயம் பிரயோசனமாக இருக்கும். சஞ்சேய் காந்தி கேட்ட கேள்வி போல் யாராவது ஒருவர் எப்படி வலைப்பதிவு ஆரம்பிப்பது? திரட்டியில் இணைப்பது? போன்ற டெக்னிகள் விடயங்களை தனிப்பதிவாக இட்டு புதியவர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்கலாம்.
இறுதியாக வலைப்பதிவுகளில் நடுநிலைமை பற்றிய கேள்விக்கு கேபிளாரின் பதில் அவரது வலைப்பதிவு முதிர்ச்சியை வெளிக்காட்டியது.
வாழ்த்துக்கள் திரு. கேபிள் சங்கர்
இந்த நிகழ்ச்சி பற்றிய கேபிளாரின் விரிவான கட்டுரையை விரைவில் எதிர்பார்க்கின்றேன்.
டிஸ்கி : இன்றைக்கு ஒரு திருமணவீட்டிற்க்குச் செல்லவிருப்பதால் இந்த நிகழ்ச்சி பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
21 hours ago
7 கருத்துக் கூறியவர்கள்:
annan kebil vaalga.
அருமையா விமர்சனம் செஞ்சிருக்கீங்க.
நானும் நிகழ்ச்சியை பார்த்தேன்
People get confused with blog and web. I gave an example to my mom. Website for a company and blog for individual! ;-)
நன்றி வந்தியத்தேவன்.
நையாண்டி நைனா புதுகைத் தென்றல் வருகைக்கு நன்றிகள்.
// Raju said...
People get confused with blog and web. I gave an example to my mom. Website for a company and blog for individual!//
ஆமாம் ராஜூ நானும் பலரை அவதானித்துள்ளேன் அவர்கள் இணையத்தளத்துக்கும் வலைக்கும் வித்தியாசம் தெரியாமல் தெளிவற்று இருக்கின்றார்கள்
// Cable Sankar said...
நன்றி வந்தியத்தேவன்//
என்ன தலை இதற்க்கெல்லாம் நன்றிகள் தெரிவித்துக்கொண்டு, நீங்கள் எழுதுகின்ற எழுத்துக்கும் தோற்றத்திற்க்கும் பெருத்த வித்தியாசங்கள்.
congrats cable shankar.
Post a Comment