இங்கிலாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐசிசி இருபதுக்கு இருபது போட்டிகள் தொடங்கிய நாள் முதலே பல அதிர்ச்சிகளை ரசிகர்களுக்கு தந்துகொண்டிருக்கிறது. போட்டியின் முதல் ஆட்டத்தில் போட்டிகளை நடத்தும் இங்கிலாந்து கிரிக்கெட்டின் மக்கா எனப்படும் லோர்ட்ஸில் கத்துக்குட்டி அணியான நெதர்லாந்திடம் படுதோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்தின் சூப்பர் எட்டு கனவு தகர்ந்துவிட்டது என்றே கூறலாம். இன்று நெதர்லாந்து பாகிஸ்தானை வென்றால் இங்கிலாந்தும் நெதர்லாந்தும் தங்கள் குழுவில் சூப்பர் எட்டிற்க்கு தெரிவாகிடும். எது எப்படியோ பாகிஸ்தானினது தலைவிதி இன்றைக்கு நெதர்லாந்தால் எழுதப்படும்.
(கிரிக்கெட்டிலும் வைல்ட் கார்ட் ரவுண்ட் வைக்கவேண்டும் என்று ஐசிசிக்கு தந்தி அடிக்கப்போறேன் - பொண்டிங்)
நேற்றைய முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை அயர்லாந்து வீழ்த்தி சூப்பர் எட்டுக்குள் நுழைந்தது. டெஸ்ட் அந்தஸ்துள்ள வங்கதேசத்தை இன்னொரு கத்துக்குட்டி அணியான அயர்லாந்து வீழ்த்தியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையளித்தது.
வங்கதேசத்திற்க்கு அயர்லாந்துகொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீளமுன்னர் அடுத்த ஆட்டத்தில் ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை இலங்கை அணி புரட்டியெடுத்தது. ஏற்கனவே மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில் கிடைத்த ரணம் ஆறமுன்னர் இலங்கையும் பொண்டிங்கின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது.
கிறிஸ் கெய்ல் அடித்த ஆப்பை சங்ககாரா, டில்ஷான், மெண்டிஸ் போன்றோர்கள் சற்று இறுக்கி அடித்து ஆஸியின் இருபதுக்கு இருபது சம்பியன் கனவைத் தகர்த்தார்கள்.
இந்த இருபதுக்கு இருபது போட்டிகளையும் வரப்போகும் ஆஷஸ் தொடரையும் மனதில் வைத்து பல ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்குபெற்றவில்லை. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் வெளியேற்றத்தால் நியூசிலாந்து, இலங்கை அணிகள் அரையிறுதிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம்.
இதுவரை அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறிய அணிகள் ஸ்கொட்லாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நான்கவது அணி பாகிஸ்தானா இல்லை நெதர்லாந்தா? இன்றிரவு விடைகிடைக்கும்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
21 hours ago
மறுமொழி கருத்துக் கூறியவர்கள்:
//கிறிஸ் கெய்ல் அடித்த ஆப்பை சங்ககாரா, டில்ஷான், மெண்டிஸ் போன்றோர்கள் சற்று இறுக்கி அடித்து ஆஸியின் இருபதுக்கு இருபது சம்பியன் கனவைத் தகர்த்தார்கள்.
//
:)
இந்த இருபதுக்கு இருபது போட்டிகளையும் வரப்போகும் ஆஷஸ் தொடரையும் மனதில் வைத்து பல ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்குபெற்றவில்லை. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள். //
உண்மையிலும் உண்மை.. பாகிஸ்தான், வங்கதேசத்துக்கும் இதுவே ஆபத்தாக அமைந்தது..
ஆனால் பாகிஸ்தான் தப்பிக் கொண்டது.
சுருக்கமாக முக்கியமான விடயங்களை சொல்லி இருக்கிறீர்கள்.
Post a Comment