முதலாவது மகளிர் இருபதுக்கு இருபது போட்டிகள் இன்று இங்கிலாந்திலுள்ள டோன்டன் மைதானத்தில் ஆரம்பமாகின்றது. முதற்சுற்றின் அனைத்துப்போட்டிகளும் இதே மைதானத்தில் தான் நடக்கவிருக்கின்றது. டோன்டன் மைதானத்தை இலங்கை இந்திய ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். 1999 உலகக்கிண்ணத்தின் போது இலங்கை அணியை கங்குலியும் ராவிட்டும் துவைத்து எடுத்த மைதானம். அந்த ஆட்டத்தின் பின்னர் இந்த மைதானத்தில் ஒரு நாள் போட்டிகள் நடைபெறவேயில்லை. காரணம் மைதானம் நம்ம ஊர் மைதானங்கள் போல் அளவில் சிறியது. பெண்கள் போட்டிகள் என்பதால் இந்த மைதானத்தில் முதல் சுற்றுப்போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியதீவுகள், இங்கிலாந்து என எட்டு அணிகள் பங்குபெறுகின்றன. இலங்கை தவிர ஏனைய அணிகள் இருபதுக்கு இருபது போட்டிகளில் ஏலவே பங்குபற்றியுள்ளன.
இந்தவருட உலககிண்ணத்தைக் கைப்பற்றிய இங்கிலாந்து தன் சொந்த மண்ணில் நடைபெறுவதால் ஏனைய அணிகளுக்கு கடும் சவலாகவே விளங்கும் கிளையர் டைலர், கேப்டன் எட்வேர்ஸ் மற்றும் விக்கட் காப்பாளர் சாரா டைலர் அசத்துவார்கள் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றாகள்.
அதேவேளை தன் சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியாவும் திறமைகாட்டலாம். அணியின் கேப்டன் கரன் ரோல்டனுக்கு இதுதான் இறுதித் தொடராகும்.
முதலாவது ஆண்கள் இருபதுக்கு இருபது கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியதுபோல் இந்திய மகளிர் அணிக்கும் கைப்பற்றும் வாய்ப்பு பலமாக இருக்கின்றது. அஞ்சும் சோப்ரா, மிதாலி ராஜ் துடுப்பாட்டத்தில் திறமைகாட்டி கேப்டன் ஜுலான் கோஸ்வாமி பந்துவீச்சில் அசத்தினால் கிண்ணம் இந்தியாவுக்கே.
ஏனைய அணிகள் பெரிதாக எதனையும் சாதிக்காது போனாலும் மற்றய அணிகளுக்கு சவாலாகவே விளங்கும். ஆண்கள் இருபதுக்கு இருபது போட்டிகள் போல் இங்கேயும் அதிர்ச்சிகள் காத்திருக்கின்றனவோ தெரியாது.
அரையிறுதிப்போட்டிகளும் இறுதிப்போட்டியும் ஆண்கள் அரையிறுதிப்போட்டிகள் இறுதிப்போட்டி நடக்கும் அதே மைதானத்தில் அதே தினத்தில் முதல் போட்டியாக நடைபெறவிருக்கின்றது. ரசிகர்களுக்கு ஒரே ரிக்கெட்டில் இரண்டு ஆட்டங்கள்.
ஆனாலும் மகளிர் டென்னிசுக்கு இருக்கும் ரசிகர்கள் போல் மகளிர் கிரிக்கெட்டுக்கு ஏனோ இல்லை.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
21 hours ago
3 கருத்துக் கூறியவர்கள்:
//ஆனாலும் மகளிர் டென்னிசுக்கு இருக்கும் ரசிகர்கள் போல் மகளிர் கிரிக்கெட்டுக்கு ஏனோ இல்லை.//
மைக்ரோ மிடி போட்டுகிட்டு ஆடாததே காரணம்...
//ராஜன் said...
மைக்ரோ மிடி போட்டுகிட்டு ஆடாததே காரணம்//
ஹிஹ்ஹி அப்படி மைக்ரோ மிடியுடன் கிரிக்கெட் ஆடமுடியாது
மகளிர், கிண்ணம் போன்ற வார்த்தைகள் நிரம்ப காணப்படுவதால் இது ஒரு அஜால் குஜால் பதிவோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது.
Post a Comment